ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கி இருக்கிறோம் :)
தற்போதைய தமிழாக்க நிலவரம் 4739 / 7462. உலக அளவில் 14வது இடத்துக்கு
முன்னேறி உள்ளோம். நேற்று 26வது இடத்தில் இருந்தோம் !
தமிழாக்கத்தில் ஈடுபடும் நண்பர்கள் முதலில் தாங்கள் பயன்படுத்தும்
சொற்களை
http://spreadsheets.google.com/ccc?key=0AtamQol3ByIjdFRYcnVXdXVpM1M1QmFOM0FfZUc2SXc&hl=en
பக்கத்தில் இட்டு ஒரு புரிந்துணர்வுக்கு வந்தால் தளம் முழுதும்
தமிழாக்கம் ஒரே சீராக இருக்கும். இறுதியில் தேவைப்படும் திருத்த
வேலைகளும் குறையும்.
நன்றி,
ரவி
எல்லா சரங்களையும் தமிழாக்கிய பிறகு சரி பார்த்து, வேண்டிய மேம்பாடுகளைச்
செய்து திருத்தியே வெளியிடப்போகிறோம். எனவே, தவறுகளைப் பற்றி தயங்க
வேண்டாம். தங்களால் இயன்ற வரை பங்களியுங்கள்.
உங்களுக்கு ஏதாவது ஒரு ஆங்கிலச் சொல் பற்றி உதவி வேண்டுமானால்
http://translate.wordpress.com/projects/wpcom/ta/default
பக்கத்தில் filter என்ற குறியை அழுத்தி அந்த ஆங்கிலச் சொல்லை இட்டுத்
தேடினால் பிறர் எப்படி தமிழாக்கி இருக்கிறார்கள் என்று அறியலாம். இந்தக்
குழுமத்திலும் கேட்கலாம்.
ரவி