தமிழாக்குவது எப்படி?

25 views
Skip to first unread message

ravid...@googlemail.com

unread,
Nov 17, 2009, 6:12:30 PM11/17/09
to tamil_wordpre...@googlegroups.com
http://translate.wordpress.com போய் உங்கள் வேர்டுப்பிரெசு கணக்கு கொண்டு நுழையுங்கள். 

set language என்பதில் தமிழைத் தேர்ந்தெடுக்கவும். 

http://translate.wordpress.com/list.php போனால் தமிழாக்க வேண்டிய சரங்கள்.

add என்ற தொடுப்பு உள்ளவை இது வரை தமிழாக்கப்படாதவை. இவற்றுக்கு முன்னுரிமை தந்து தமிழாக்கலாம்.

இறுதியாக, அனைத்துத் தமிழாக்கங்களையும் சரி பார்க்கலாம். 

கலைச்சொல் உதவி வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள். 

நன்றி, 

ரவி

Balaji A

unread,
Nov 18, 2009, 1:33:48 AM11/18/09
to tamil_wordpre...@googlegroups.com
என் வேலையை ஆரம்பித்து விட்டேன்.  ஒரு வாரத்திற்குள் என் மொத்த பங்களிப்பு 1000 ஆக இருக்கும்.
 
நன்றி.
ஜிலாபா

Uma Kanthan

unread,
Nov 18, 2009, 6:34:49 AM11/18/09
to tamil_wordpre...@googlegroups.com
Dear mr. Ravi.
 
Thanks for your time in taking the effect to exp;ain.. I am looking for .mo and .po file in tamil (which are working good)
 
Thanks again
 
Reguards,
Uma

Ravishankar

unread,
Nov 18, 2009, 11:33:12 AM11/18/09
to tamil_wordpress_translation
வணக்கம் உமா காந்தன்,

இப்ப இருக்கிற தமிழ் wordpress .po , .mo கோப்புகள்ல ஏகப்பட்ட வழு, பிழை இருக்கு. முழுமையான தமிழாக்கமும் இல்ல. இந்தச் சுற்று தமிழாக்கம் முடிந்த பிறகு நல்ல கோப்புகள் கிடைக்கலாம்.

ரவி

ravid...@googlemail.com

unread,
Nov 19, 2009, 5:00:18 PM11/19/09
to wordpress தமிழாக்கம்
%s, raquo போன்ற சரங்கள் நிரலாக்கக் கட்டளைகள். அவற்றை அப்படியே விட்டு
விடுங்கள்.

வேர்ட்ப்ரெஸ் காரர்கள் ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாக சில இடங்களில்
எழுதி இருப்பார்கள். அந்தத் தொனியையும் இளக்கத்தன்மையையும் நாமும்
பின்பற்றுவது நலம்..இறுக்கமான தமிழாக்கமாக இல்லாமல் கலகலப்பான நட்புணர்வு
கூடிய தமிழாக்கமாக இருப்பது நலம்.

சொல்லுக்குச் சொல், ஆங்கில இலக்கண அடிப்படையில் தமிழாக்கினால் தமிழ்
நடையில் செயற்கையான நடை வந்துவிடும். ஆங்கிலச் சொற்றொடரைப் படித்துப்
புரிந்து கருத்தை மனதில் இருத்தித் தமிழாக்கினால் போதுமானது. dubbing
திரைப்படம் போல் ஆகி விடக்கூடாது.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் செயப்பாட்டு வினை (passive voice) பயன்படும்.
தமிழில் செய்வினை தான் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு இயன்றவரை
செய்வினை அடிப்படையில் எழுதலாம்.

நம் பண்பாட்டுக்கு ஏற்ப வினைச்சொற்களை மரியாதை விகுதிகளுடன் எழுதலாம்.
எடுத்துக்காட்டுக்கு, தேடு என்பதற்குப் பதில் தேடுக என்று தமிழாக்கலாம்.
இன்னொன்று நேர்மறையாக தமிழாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, delete userஐ
பயனரை அழிக்கவும் என்று சொல்லாமல் பயனரை நீக்கவும் என்று
தமிழாக்குவது..அழிப்பது என்பது நமது பண்பாட்டில் கடுமையான சொல்லாடல்
தானே..

நீங்கள் குறைந்தது இவ்வளவு சரங்கள் தமிழாக்க வேண்டும் என்று ஒரு
கட்டாயமும் இல்லை. உங்களால் இயன்றைச் செய்யலாம். ஒரு நிமிடத்துக்கு
இரண்டு சரங்கள் என்ற வேகத்தில் தமிழாக்குவது பெரும்பாலும் சாத்தியமே..

எவ்வளவே பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டமா :)

அன்புடன்
ரவி

Uma Kanthan

unread,
Nov 19, 2009, 10:15:13 PM11/19/09
to tamil_wordpre...@googlegroups.com
Hello Mr.Ravi,

Thanks for all your mail and noted contains. I know there are few guys who have done this butthey dont like to share the information with otheres. fFor example you could check  the following web site http://www.paristamil.com/tamilnews/
This is a wordoress design with a news theme and it is working very good. This is for your information.

Best regards,
UmaGilbert Raja

unread,
Nov 20, 2009, 4:35:27 AM11/20/09
to tamil_wordpre...@googlegroups.com
ஹலோ,

இத பாத்தா வேர்ட் ப்ரஸ் தளம் மாதிரியே தெரியல. ஜூம்லா மாதிரி இருக்கு. ஏம்ப்பா எவ்ளோ தமிழாக்கம் பண்றீங்க, வேர்ட் ப்ரஸ்க்கு என்ன தமிழாக்கம்? அதை இன்னும் மாத்தலையே?

2009/11/20 Uma Kanthan <theb...@gmail.com>--

"கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். " - குறள் எண் : 393

Skandhakumar Nimalaprakasan

unread,
Nov 20, 2009, 5:41:40 AM11/20/09
to tamil_wordpre...@googlegroups.com
வணக்கம் கில்பர்ட் ராஜா,

அந்த தளம் வேர்ட்பிரஸ் தளம் தான். (பார்க்க http://www.paristamil.com/tamilnews/wp-login.php). மற்றும் வேர்ட்பிரஸ் என்பதை தமிழாக்குவது பொருத்தமானதாக இருக்காது, ஒரு வர்த்தக குறியீடு என்ற அடிப்படையில் அதை ஒலிபெயர்ப்பதே பொருத்தமானது.

நன்றி,
நிமல்

2009/11/20 Gilbert Raja <gilbe...@gmail.com>

ravid...@googlemail.com

unread,
Nov 22, 2009, 5:42:24 AM11/22/09
to wordpress தமிழாக்கம்
உமா,

நீங்கள் சுட்டிக் காட்டிய paristamil தளம் நன்றாக உள்ளது. அதன்
வார்ப்புரு (theme) மட்டுமே தமிழாக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
அதாவது, நாம் வெளியில் பார்ப்பது மட்டும் தமிழில் இருக்கும். அவர்களின்
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போனால் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும். இது
போல் தமிழாக்கப்பட்ட ஒரு சில வார்ப்புருக்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு
ஏதாவது ஒரு வார்ப்புருவைத் தமிழாக்க உதவி வேண்டும் என்றால் சொல்லுங்கள்.

நாம் முழு வேர்டுப்பிரசு மென்பொருளையே தமிழாக்கும் பணியில் இருக்கிறோம்.

ரவி

Reply all
Reply to author
Forward
0 new messages