2007 இறுதியில் புயல் வேகத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாக WordPress
தமிழாக்கத்தை முடித்தோம்.
தற்போது தமிழ் வலைப்பதிவுகள் பெருகி வரும் நிலையில், WordPressல்
வந்துள்ள மாற்றங்களை அடுத்து, அதே போன்ற இன்னொரு சுற்று தமிழாக்கத்துக்கு
அழைப்பு விடுக்கிறோம்.
நோக்கம்:
1. ஏற்கனவே உள்ள தமிழாக்கத்தில் உள்ள பிழைகளைக் களைவது.
2. 7461 சரங்களில் 4082 சரங்களே தமிழில் உள்ளன. கிட்டதட்ட 54 %.
மொழிபெயர்ப்பு வரிசையில் தமிழ் உலக அளவில் 26ஆவது இடத்தில் இருக்கிறது.
இயன்ற அளவு தமிழாக்கி தமிழின் வரிசையை உயர்த்துவது.
மேலும் விவரங்களுக்கு http://translate.wordpress.com/rankings.php
பார்க்கவும்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் / 100 சரங்கள் என்ற அளவில் இதில் ஈடுபட
எண்ணியுள்ளேன். இதே போல் பலரும் ஈடுபட்டால் 2010 ஆண்டுப் பிறப்புக்கு
புத்தம் புதிய தமிழ் வேர்டுப்பிரெசுடன் வரலாம்.
தமிழாக்க முயற்சியில் ஈடுபட மேலும் பல புதிய நண்பர்களும் தேவை. தயவு
செய்து இது குறித்து வலைப்பதிவு, டுவிட்டர், orkut, facebook, கூகுள்
குழுமங்கள் போன்றவற்றில் அறிவித்து உதவுங்கள். அனைவரையும் இந்தக்
குழுமத்தில் இணையச் சொன்னால் ஒருங்கிணைக்க உதவும்.
அன்புடன்,
ரவி, மயூரேசன் மற்றும் பலர் :)