வணக்கம்,
மதியம் நான் கண்ட போது 4900 சரங்களைத் தாண்டித் தமிழாக்கி 12ஆம் இடத்தில் இருந்தோம். அதற்குப் பிறகு WordPressன் புதிய மொழிமாற்ற மென்பொருளான GlotPress வந்திருப்பதால் நிலவரத்தைக் கணிக்க இயலவில்லை.
எனினும், இந்த புதிய மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைப் பயன்படுத்துவதில் யாருக்கேனும் ஐயம் இருக்குமெனில் தயக்கமின்றி கேளுங்கள்.
என்ற முகவரியில் இருந்து முக்கியமான சரங்களை முன்னுரிமை கொடுத்துத் தமிழாக்கலாம். இன்னும் பல வகையிலும் சரங்களை வரிசைப்படுத்தித் தமிழாக்க இயல்வது, filter கொண்டு பிழைகளைக் கண்டு கொள்ள இயல்வது அருமை.
ரவி