Take Care இற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை

32 views
Skip to first unread message

MAthuvathanan Mou.

unread,
Nov 23, 2009, 2:55:54 AM11/23/09
to Tamil Wiki
வணக்கம்,

இணைய உரையாடல்களின் போது இறுதியாக சொல்லக்கூடியவாறான "Take Care" என்பதற்குப் பொருத்தமான தமிழ் வார்த்த என்னவாக இருக்கலாம்?

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

M.Mauran

unread,
Nov 23, 2009, 3:08:42 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
"நல்லது, மீண்டும் சந்திப்போம்"

என்றவறாக நான் சொல்லி முடிப்பதுண்டு.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/11/23 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>

MAthuvathanan Mou.

unread,
Nov 23, 2009, 3:09:58 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
நானும் அவ்வாறு முடிப்பதுண்டு.. ஆனால் அது "See you latter" என்பதற்குப் பதிலாக.

2009/11/23 M.Mauran <mma...@gmail.com>



--
Mathuvathanan Mou.

YOGA CHAN

unread,
Nov 23, 2009, 3:12:02 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
“உங்களில் கவனம் செலுத்துங்கள்” என சொல்லலாமா?

2009/11/23 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>

Kalaiarasy

unread,
Nov 23, 2009, 5:19:58 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
நேரடியான தமிழாக்கம் தேவையில்லையெனில், ‘மகிழ்வாக இருங்கள்' என்று சொல்லலாம். நேரடியாக தமிழாக்கம் வேண்டுமெனில், 'உங்கள்மேல் அக்கறையுடன் இருங்கள்' என்றோ, “உங்களில் கவனம் செலுத்துங்கள்” என்றோ, ‘பாதுகாப்பாக இருங்கள் என்றோ கூறலாமா?

நட்புடன் கலை

2009/11/23 YOGA CHAN <yogh...@gmail.com>

Ravishankar

unread,
Nov 23, 2009, 5:30:04 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
இது போன்ற விசயங்களுக்கு நேரடியாகத் தமிழில் பொருள் வர வேண்டும் என்று எண்ணினால் வேடிக்கையாக முடியும். தமிழ்ப் பண்பாட்டில் சில விசயங்களைச் சொல்வதேயில்லை. அல்லது, குறிப்பால் உணர்த்துகிறோம். எனவே, நேரடியான சொற்றொடர்கள் கிடைக்கா.

miss u

நேரடித் தமிழாக்கம் - நீ இல்லாமல் தவிக்கிறேன் :)

தமிழ் மரபு - உன்னைப் பார்க்கணும் போல இருக்கு (அல்லது) நீ பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்..


love u

நேரடித் தமிழாக்கம் - நான் உன்னைக் காதலிக்கிறேன் / நான் உன் மேல் பாசமாக இருக்கிறேன் :)

தமிழ் மரபில் இந்த விசயத்தைப் பெரும்பாலும் சொல்லிக் காட்டுவதில்லை.


**

take care என்பதற்கு ஈடு இணையாக "உடம்பைப் பார்த்துக்கோ, கவனமா இரு, சூதானமா இரு" என்று தமிழ் மரபில் சொல்லுவதைச் சுட்டலாம்.

ஆனால், ஆங்கிலத்தில் ஒவ்வொரு உரையாடலின் இறுதியிலும் கடமைக்குச் சொல்வது போல் மேற்கண்ட தமிழ் மரபுச் சொற்றொடரைச் சொல்வது இயலாது.

மேலும் அறிய பார்க்க:

http://blog.ravidreams.net/2008/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

ரவி

M.Mauran

unread,
Nov 23, 2009, 5:33:30 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
ஆங்கிலத்தில் Take Care என்று சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. அதற்காக மற்றைய பண்பாட்டுச்சூழல்களில் அது இருக்கவேண்டுமென்றில்லை.

"அப்ப நான் வாறன்"  என்றொரு வார்த்தை இங்கே இலங்கையின் வடக்குக்கிழக்குப் பகுதிகளில் உண்டு. சிங்களத்திலும் இதற்குச்சமமான பயன்பாடு உண்டு. இதனை அப்படியே மொழிபெயர்த்து நாம் ஆங்கிலத்தில் சொல்வதில்லை.


எமது பண்பாட்டுச்சூழலைப் பொறுத்துச் சில வார்த்தைகளை சில இடங்களில் பயன்படுத்துகிறோம்.

நடை முறை வாழ்க்கையில் நாம் பண்பாட்டை மொழிபெயர்க்க, இறக்குமதி செய்ய வெளிக்கிடுவதால் பிரச்சினை வருகிறது.


Take Care என்பது ஆங்கிலப் பண்பாட்டிலிருந்து வந்த பயன்பாடு.  நாம் அதை அவர்கள் பண்பாட்டிலிருந்தே பெற்றோம்.

அவர்களது பண்பாட்டை அவர்களது மொழியில் நாம் பேசும்போது கடைப்பிடிக்கப்பார்க்கிறோம்.

பின்னர் திடீரென அதை எங்க மொழியிலும் கோருகிறோம்.

நாம் நேரடியாக ஒரு பண்பாடு சார்ந்த சொல்லை இறக்குமதி செய்யும் போது அது மிகவும் செயற்கையாகவே இருக்கும்.


Take Care என்பதை மொழிபெயர்ப்புத்தேவைகளுக்காக மொழிபெயர்த்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது முயற்சித்து அதற்கு அண்மைய அர்த்தம் தரக்கூடிய வார்த்தையைத் தேடலாம்.

ஆனால் அன்றாடப்பயன்பாட்டுக்கு வார்த்தை கேட்டால் அப்படி ஒரு மொழிபெயர்ப்பை செய்ய இயலாது என்றுதான் கூற வேண்டியிருக்கும்.


என்ன செய்யலாம் என்றால், எமது மக்களின் வாழ்க்கைச்சூழலில் அவர்கள் பயன்படுத்தும் உரையாடல் முடிப்பு வழக்கங்களைப் பின்பற்றிக்கொள்ளலாம்.



--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/11/23 Kalaiarasy <kalai...@gmail.com>

M.Mauran

unread,
Nov 23, 2009, 5:34:25 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
நான் மடலெழுதி முடிக்க முதலே ரவி அதே விசயத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்.

நன்றி ரவி.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/11/23 Ravishankar <ravid...@gmail.com>

MAthuvathanan Mou.

unread,
Nov 23, 2009, 6:01:51 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
அப்ப எல்லாரும் சந்தோசமா இருங்கோ... சந்திப்பம்.

:-)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

2009/11/23 M.Mauran <mma...@gmail.com>



--
Mathuvathanan Mou.

Malavan B

unread,
Nov 23, 2009, 4:19:55 AM11/23/09
to tamil_wi...@googlegroups.com
'கவனம்' என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப் படுவதை நான் பார்த்திருக்கின்றேன்.

-Thanks & Regards,
Malavan.B


Marie von Ebner-Eschenbach  - "Even a stopped clock is right twice a day."

2009/11/23 YOGA CHAN <yogh...@gmail.com>

Mathuvarman

unread,
Dec 3, 2009, 3:46:07 AM12/3/09
to tamil_wi...@googlegroups.com
கவனம், கவனமா போய்ட்டு வாங்கோ என்ற வார்த்தைப்பாவைனைகளை கண்டிருக்கின்றேன்.

கவனம் என்று சொல்லும்போது அதற்கேயுரிய தொனியில் சொல்லப்படவேண்டும், அல்லாவிட்டால் Caution என்று பொருள்பட்டுவிடும்.

2009/11/23 Malavan B <bmal...@gmail.com>



--
"It takes 20 years to build a reputation and five minutes to ruin it. If you think about that, you'll do things differently."
- Warren Buffet

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Dec 3, 2009, 11:07:08 PM12/3/09
to tamil_wi...@googlegroups.com
2009/11/23 M.Mauran <mma...@gmail.com>:

> ஆங்கிலத்தில் Take Care என்று சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. அதற்காக மற்றைய
> பண்பாட்டுச்சூழல்களில் அது இருக்கவேண்டுமென்றில்லை.
>
> "அப்ப நான் வாறன்"  என்றொரு வார்த்தை இங்கே இலங்கையின் வடக்குக்கிழக்குப்
> பகுதிகளில் உண்டு. சிங்களத்திலும் இதற்குச்சமமான பயன்பாடு உண்டு. இதனை அப்படியே
> மொழிபெயர்த்து நாம் ஆங்கிலத்தில் சொல்வதில்லை.
>
>

தாம் தமிழ் / சிங்களத்தில் எண்ணுவதை "I will go and come" , "I will
come" என ஆங்கிலப்படுத்தி சொல்வோர்களும் இலங்கையில் உண்டு. அத்தகையோரை
எனது சிறு வயதில் கூடுதலாகக் கண்டிருக்கிறேன்.

~சேது

Ashwinji

unread,
Dec 20, 2009, 9:33:11 AM12/20/09
to விக்சனரி
''பத்திரமா இருங்க'', எனலாமே!

On Dec 4, 9:07 am, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
wrote:
> 2009/11/23 M.Mauran <mmau...@gmail.com>:

vatsan34

unread,
Dec 27, 2009, 10:33:01 AM12/27/09
to விக்சனரி
"அப்ப நான் போயிட்டு வரேன்" என்ற வழக்கம் இங்கு தமிழ்நாட்டிலும் உண்டு,
"போறேன்" என்று சொன்னால் அபசகுனமாக நினைப்பார்கள். இதை
"போயாறேன்","வர்றேன்","வர்ட்டா" போன்ற பல வடிவங்களில் சொல்வதுண்டு.
Take Care-க்கு "உடம்ப பத்திரமா பார்த்துகோங்க" சொல்லாம்.

அன்புடன்,
ஸ்ரீவத்சன்(vatsan34)

> 2009/11/23 Kalaiarasy <kalaiar...@gmail.com>


>
> > நேரடியான தமிழாக்கம் தேவையில்லையெனில், ‘மகிழ்வாக இருங்கள்' என்று சொல்லலாம்.
> > நேரடியாக தமிழாக்கம் வேண்டுமெனில், 'உங்கள்மேல் அக்கறையுடன் இருங்கள்' என்றோ,
> > “உங்களில் கவனம் செலுத்துங்கள்” என்றோ, ‘பாதுகாப்பாக இருங்கள் என்றோ கூறலாமா?
>
> > நட்புடன் கலை
>

> > 2009/11/23 YOGA CHAN <yoghs...@gmail.com>


>
> > “உங்களில் கவனம் செலுத்துங்கள்” என சொல்லலாமா?
>

> >> 2009/11/23 MAthuvathanan Mou. <cowboyma...@gmail.com>


>
> >>> நானும் அவ்வாறு முடிப்பதுண்டு.. ஆனால் அது "See you latter" என்பதற்குப்
> >>> பதிலாக.
>

> >>> 2009/11/23 M.Mauran <mmau...@gmail.com>


>
> >>> "நல்லது, மீண்டும் சந்திப்போம்"
>
> >>>> என்றவறாக நான் சொல்லி முடிப்பதுண்டு.
>
> >>>> --
> >>>> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
> >>>> [http://www.google.com/profiles/mmauran]
>

> >>>> 2009/11/23 MAthuvathanan Mou. <cowboyma...@gmail.com>

Reply all
Reply to author
Forward
0 new messages