credits, emoticons

22 views
Skip to first unread message

Ravishankar

unread,
Nov 29, 2007, 7:19:49 PM11/29/07
to tamil_wi...@googlegroups.com
1. வலைத்தளங்களில் கட்டும் காசுக்கு ஏற்ப creditகள் கொடுக்கிறார்கள். எடுதுக்காட்டுக்கு wordpress.com upgrade பகுதியில் இந்தச் சொல்லைக் காணலாம். இதை எப்படி மொழிபெயர்ப்பது?
 
2. smileysஐ சிரிப்பான்கள் பல இடங்களில் சொல்கிறார்கள். smileysஐயும் உள்ளடக்கி emoticonகள் என்றழைக்கிறார்கள். emoticonளை உணர்வுருக்கள் என்று அழைக்கலாமா?
 
ரவி

இராமகி

unread,
Nov 30, 2007, 3:01:32 PM11/30/07
to விக்சனரி


On Nov 30, 5:19 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
நீங்கள் கேட்டிருக்கும் emoticon என்பது emoting icon என்று விரிவு
காட்டும். இதற்கான சொல்லாக்கத்திற்கு முன் icon, emotion என்ற இரண்டையும்
தனித் தனியே பார்ப்போம்.

முன்பு ஒருமுறை iconoclast பற்றி திரு. ரோசா வசந்த் கேட்டிருந்தார்.
அதற்காக icon என்பது பற்றி ஓர் இடுகை என் வலைப்பதிவில் எழுத
வேண்டியிருந்தது. இப்பொழுதும் என் வலைப்பதிவில் அந்த இடுகை இருக்கிறது
என்று எண்ணுகிறேன். அதில் கூறிய சில செய்திகளை இங்கு வெட்டி ஒட்டித்
தருகிறேன்.
-------------------------------------

icon என்ற சொல் வெறுமே உயர்திணையை மட்டும் குறிப்பதாய் இல்லாமல்,
கணித்திரையில் இருக்கும் குட்டி, குட்டி உருவங்களையும் கூட குறிக்கிறது
என்று நாம் அறிவோம். திணை பார்க்காத மேலை மொழிகள் போல் இல்லாமல், தமிழில்
Icon என்று சொல்லுவதற்கு, உயர்திணை, அஃறிணை என இரண்டு திணை ஒட்டிய
சொற்களைக் காண வேண்டி இருக்கிறது.

ஒவ்வுதல் என்ற வினை ஒப்புதல் என்ற பொருளையே கொடுக்கும். ஒவ்வுதல் ஓவுதல்
என்றும் நீளும். ஓவுதல் என்பது ஒப்பிட்டுக் காட்டல் என்ற பொருள்
கொள்ளும். ஓவிக் காட்டுவது ஓவம். ஓவம் ஓவியம் என்றும் நீளும். ஓவியம்
வரைபவர் ஓவியர். ஒரு காட்சியை அப்படியே ஒப்பிட்டு ஒரு விரிந்த பரப்பில்
காட்டும் கலைக்கு ஓவியக் கலை என்று பெயர். ஓவம் என்பதைச் சிறியதற்கும்,
ஓவியம் என்பது பெரியதற்குமாய்ச் சொல்லலாம். ஒவ்வொரு Icon-ம் ஓர் ஓவம்
தான். கணித்திரையில் கிடக்கும் ஓவங்களின் (Icons) மீது குறிசி (cursor)
யை கொண்டுவரும் வகையில் மூசி(mouse)யைத் தொட்டு நகர்த்தினால் அது ஏதோ ஒரு
கோப்பு அல்லது இழையை (file)க் கணித்திரையில் திறக்கிறது.

இனி உயர்திணை Icon களுக்கு வருவோம். இந்த icon கள் ஒரு உயர்நிலை
அடையாளத்திற்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறார்கள். ஓ என்ற ஓரெழுத்து
ஒருமொழிக்கு உயர்ந்த என்ற பொருளும் தமிழில் உண்டு. ஓவம் என்ற சொல்லை ஓவர்
என்று சொன்னால் உயர்திணையைக் குறித்துவிடும்.

இனி ஓவக்குலைப்பாளர்கள் iconoclast என்று ஆவார்கள். குலைப்பாளர் என்று
சொல்லத் தயங்கினால் மறுப்பாளர் என்று சொல்லலாம்.

என் பரிந்துரை:

ஓவம்/ஓவர் = icon
ஓவக் குலைப்பாளர் = iconoclast
---------------------------------
அடுத்தது emotion

1579, "a (physical) moving, stirring, agitation," from M.Fr. emotion,
from O.Fr. emouvoir "stir up," from L. emovere "move out, remove,
agitate," from ex- "out" + movere "to move" (see move). Sense of
"strong feeling" is first recorded 1660; extended to "any feeling"
1808. Emote is a 1917 back-formation. Emotional "liable to emotion" is
from 1857.

இதை உணர்வு என்று தான் இக்காலத்தில் சொல்லுகிறோம்; தொல்காப்பியர்
மெய்ப்பாடு என்று சொல்லுவார். அவருடைய மெய்ப்பாட்டியலை இங்கு எண்ணிப்
பார்க்கலாம். உணர்வின் வினைச்சொல் உணருதல். உணர்வு என்பது தன்மயமான சொல்.
உணர்ப்பு என்பது இன்னொருவரை உணரவைக்கும் செயல்.

நம்மை ஏதோ ஒருவகையில் உணரவைக்கும் ஓவம் உணர்ப்போவம் = emoticon என்று
ஆகும்.

நீங்கள் கேட்டிருந்த credit என்பதற்கு எல்லா இடத்தும் ஒரே பொருள்
வரவேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதப்புச் சொல் உருவாக்குவதில்
எனக்கு உடன்பாடு இல்லை. முன்பு தமிழுலகம் மடற்குழுவில் பண அட்டைகள் பற்றி
எழுதியதை மீண்டும் ஓர் இடுகையாக என் "வளவு" வலைப்பதிவில்
போட்டிருக்கிறேன். அங்கு வந்து படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Ravishankar

unread,
Dec 1, 2007, 11:52:38 AM12/1/07
to tamil_wi...@googlegroups.com
இராம.கி,

ஓவியம், ஓவம் குறித்த உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. சென்னைப் பல்கலைக்கழக அகராதியிலும் ஓவம் = சித்திரம் என்று தந்திருக்கிறார்கள். கணினி iconக்கு ஓவம் என்ற சொல் பயன்படுத்துவது நல்ல யோசனை.

உயிர் - உயிர்ப்பு ஆகிய சொற்களையும் உணர்-உணர்ப்பு ஒப்பு நோக்கி புரிந்து கொள்ள முடிகிறது.

buying credits, credit card, creation credits, donation credits என்று பல இடங்களில் credit என்ற சொல் வருகிறது. youth icon, desktop icon, emoticon என்று பல இடங்களில் icon என்ற சொல் வருகிறது. இப்படி, ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத்தான் வேண்டும் என்ற உங்கள் அணுகுமுறையில் இருந்து பெரிதும் வேறுபட விரும்புகிறேன்.

ஒரு பேச்சுக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம்..கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்..பிறகு ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல contextகளில் இருக்கும்  ஒரு சொல்லின் மூலத்தை ஏன் ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சுப் பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு susbstitute போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் independent thinkingக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர, தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது ஏற்கத்தக்கதா என்று தெரியவில்லை. உலகின் எல்லா மொழிகளும் credit என்ற சொல்லின் அடிப்படையிலேயே credit cardஐத் தங்கள் மொழிகளில் அழைக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே credit card என்று நாம் அழைத்தாலும், credit என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழாக்கினாலும், மக்களின் புரிதலில் இது கடன் கொடுக்கும் அட்டை. அவ்வளவு தான். credit card company காரர்கள் அடாவடி எல்லாம் பார்த்தால், அவர்கள் "நம்பிக் கொடுத்த நண்பன்" போல் யாரும் நினைக்க மாட்டார்கள் :)

இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி என்றெல்லாம் பலவாறாக மொழிபெயர்த்தாலும் மிதிவண்டி என்ற சொல் நிலைத்ததை கவனிக்க வேண்டும். மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். சில சமயம் நாம் பரிந்துரைக்கும் சொற்களை நாம் புரிந்து கொள்ளவே பல அகராதிகளைப் புரட்ட வேண்டி இருக்கையில், பாமர மக்களிடம் இச்சொற்களை எப்படி கொண்டு சேர்ப்பது என்று கவலையாக இருக்கிறது. மக்கள் புழங்கத் தானே சொற்கள்?

சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்குவதே நல்ல தமிழாக்கமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆங்கில மொழியே இல்லாவிட்டாலும், அந்தச் சொல்லே அறியாவிட்டாலும், நம்முடைய தமிழ்ச் சிந்தனையில் நம்முடைய பார்வையில் நம்முடைய புரிதலுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படித் தான் சொல் ஆக்க வேண்டும்..அது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு. ஆங்கிலச் சொற்களை அச்சுப் பிசகாமல் மொழிபெயர்த்தால் தமிழில் ஒரு வித செயற்கைத் தனம் வந்து விடுவதாகத் தோன்றுகிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? வானத்தின் வில் ஆங்கிலேயேனுக்கு rainன் வில்லாகிறது..இரண்டுமே ஏற்புடையது தான்..வானவில் என்பது நம் சிந்தனை, மழைவில் என்பது அவனது சிந்தனை - ஆனால், இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். அது போல் அறிவியல், அன்றாடத் தமிழ் நுட்பச் சொற்களும் வெளிநாட்டவரின் சொற்களை localise செய்வதாக இல்லாமல் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே, ஆங்கிலச் சொற்களைப் பற்றி அதிகம் அலட்டாமல் சாதாரண பாமரர் பார்வையில் அது எப்படி பார்க்கப்படும் என்று யோசிக்க வேண்டும். ஆங்கிலச் சொற்களை ஒதுக்கி வைத்து விட்டு, இந்தச் சூழலில் இதை எப்படி சொல்லலாம் என்று தமிழ் வழி சிந்திப்பதே பல எளிமையான சொற்களைத் தரும் என்று நம்புகிறேன்.

அஞ்சலி, condolence meeting போன்ற வேற்றுச் சொற்கள் எல்லாம் இருக்க, இரங்கல் கூட்டம் என்ற வழமையான தமிழ்ச் சொற்கள் இருக்க, அழகாக அக வணக்கம், வீர வணக்கம் போன்ற சொற்களை ஈழத்தவர்கள் ஆக்கிப் பயன்படுத்துவதைக் கவனிக்கலாம்..இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாடு அம்மக்களுக்கும் மொழிக்குமே உரித்தானது..இதை தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. இது போல் நாம் பயன்படுத்தும் பிற சொற்களும் நம் சமூகத்தைப், பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

ஒரு பேச்சுக்கு icon, creditக்கு ஒரே சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக் கொண்டாலும், எல்லா இடங்களிலும் எல்லா சொற்களுக்கும் இதை போல் ஒற்றைச் சொல்லப் பயன்படுத்தத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

அன்புடன்
ரவி

Ravishankar

unread,
Dec 1, 2007, 11:54:10 AM12/1/07
to tamil_wi...@googlegroups.com
முந்தைய மடலில் சில சொற்றொடர்கள் மறைந்திருக்க வாய்ப்புண்டு. show quoted text இருந்தால் அதைச் சொடுக்கிப் பாருங்கள்.

நன்றி
ரவி

M.Mauran | மு.மயூரன்

unread,
Dec 3, 2007, 9:31:38 AM12/3/07
to tamil_wi...@googlegroups.com
ரவி,

உங்களது கருத்தோடு எனக்கு பெரிதும் உடன்பாடே.

இதே விமர்சனத்தை இராம. கி ஐயா மீது இக்குழுவில் முன்னரும் நான் முன்வைத்திருந்தேன். அதற்குப் பதிலெதுவும் அளிகப்பட்டிருக்கவில்லை.

-மு.மயூரன்
--
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com | http://www.noolaham.net

amachu

unread,
Dec 5, 2007, 9:34:46 AM12/5/07
to விக்சனரி
On Nov 30, 5:19 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
>
> 2. smileysஐ சிரிப்பான்கள் பல இடங்களில் சொல்கிறார்கள். smileysஐயும் உள்ளடக்கி
> emoticonகள் என்றழைக்கிறார்கள். emoticonளை உணர்வுருக்கள் என்று அழைக்கலாமா?
>

சொப்பு வச்சு விளையாடியிருக்கீங்களா? மரப்பாச்சி பொம்மை?

இதுல ஏதாச்சும் வச்சுக்கலாம்!

அன்புடன்
ஆமாச்சு
Reply all
Reply to author
Forward
0 new messages