சொற்பிழைகளும் திருத்தங்களும்

244 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Sep 27, 2009, 12:27:16 PM9/27/09
to tamil_wiktionary


சொற்பிழைகளும் திருத்தங்களும்

ஓம்.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
சொற்பிழைகளும் திருத்தங்களும்
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
நமது பேச்சு வழக்கில் பல சொற்கள் பிழைபட்டனவாகப் பேசப்படுகின்றன. அச் சொற்களின் உருவங்களும் சிதைந்து காணப்படுகின்றன. பேச்சு வழக்கிலுள்ள பிழைபட்ட சொற்களை எழுத்து வழக்கிற்கு அப்படியே கொண்டு வருதல் முறையன்று.
                               
                        திருத்தமும் பொருத்தமும்

    திருத்தம                           பொருத்தம்

அக்கிள்                            அக்குள்
அகண்ட                            அகன்ற
அடமழை                        அடைமழை
அண்ணாக்கயிறு     அரைஞாண் கயிறு
அதுகள்                            அவை
அருவாமணை            அரிவாள் மணை
அருகாமை                    அருகில்
அவைகள்                        அவை
அவைகளை                    அவற்றை
ஆத்துக்கு                        அகத்துக்கு
இடைபோடு                    எடைபோடு
இத்துப் போதல்            இற்றுப் போதல்
இரும்பல்                        இருமல்
உசிர்                                    உயிர்
உடமை                               உடைமை
உடம்படிக்கை                உடன்படிக்கை
உத்திரவு                            உத்தரவு
ஊரணி                               ஊருணி
எழவு                                    இழவு
எண்ணை                        எண்ணெய்
ஒட்டறை                        ஒட்டடை
ஒண்ணு                            ஒன்று
ஒருவள்                        ஒருத்தி
கண்ணாலம்                கல்யாணம்
கயறு                            கயிறு
கத்திரிக் கோல்        கத்தரிக்கோல்
கட்டிடம்                        கட்டடம்
கம்பிளி                            கம்பளி
கம்மனாட்டி                கைம்பெண்டாட்டி
கருவேப்பிலை            கறிவேப்பிலை
காத்து                                காற்று
கிடா                                    கடா
குடுத்து                            கொடுத்து
குதவளை                    குரல்வளை
கெடிகாரம்                    கடிகாரம்
கேழ்வி                        கேள்வி
கோடாலி                    கோடரி
கோர்த்து                    கோத்து
சக்காளத்தி                சக்களத்தி
சமயல்                        சமையல்
சிகப்பு                            சிவப்பு
சிலவு                            செலவு
சுவற்றில்                    சுவரில்
செரங்கு                    சிரங்கு
தடுமாட்டம்            தடுமாற்றம்
தீவாளி                    தீபாவளி
துகையல்                துவையல்
துகை                        தொகை
துடங்குதல்            தொடங்குதல்
துடை                        தொடை
துறவுகோல்            திறவுகோல்
தெண்டம்                தண்டம்
தொந்திரவு            தொந்தரவு
தொப்புள்                கொப்பூழ்
நஞ்சை                    நன்செய்
நாத்தம்                    நாற்றம்
நாகரீகம்                நாகரிகம்
நிலமை                    நிலைமை
நோம்பு                    நோன்பு
பட்னி                        பட்டினி
புடவை                    புடைவை
புட்டு                         பிட்டு
புஞ்செய்                   புன்செய்
பாவக்காய்            பாகற்கய்
பொம்பிளை            பெண்பிள்ளை
மனவி                    மனைவி
மானம்                    வானம்
முந்தாணி            முந்தானை
முழுங்கு                விழுங்கு
மெனக்கிட்டு        வினைகெட்டு
நொம்ப                    நிரம்ப
வலது கை            வலக்கை
விரை                        விதை
விக்கும்                    விற்கும்
வெண்ணை            வெண்ணெய்
வெய்யில்                வெயில்
வேணும்                    வேண்டும்
விடியகாலம்        விடியற்காலம்.
வைக்கல்                வைக்கோல்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
நன்றி: பேராசிரியர்  மரைக்காயர்
கட்டுரையிலிருந்து.
வெ.சுப்பிரமணியன் ஓம்.
<-\-\-\-\-\-\-\-\-\-\--\-\-\-\-\-\-\-\-\-\-\-\-\-\>




 
  .

MAthuvathanan Mou.

unread,
Sep 29, 2009, 2:06:50 AM9/29/09
to tamil_wi...@googlegroups.com
கட்டிடம் என்பதே சரி எனப் படித்திருக்கிறேன். கட்டடம் என்பது தவறானது.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

2009/9/27 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>



--
Mathuvathanan Mou.

Venkatachalam Subramanian

unread,
Sep 29, 2009, 2:22:25 AM9/29/09
to tamil_wi...@googlegroups.com
ஓம்.
அன்புடன் மதுவதனன், வணக்கம்.
கட்டு என்பது வேர்ச் சொல். கட்டியது கட்டடம். கட்டிடம் என்றால்  வேர்ச்சொல் கட்டி என்றிருக்கவேண்டும்.
 பெரியோர் பயன் பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைச் சரிபார்த்தால் நன்று. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி. ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்
2009/9/29 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages