இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.
http://thulaa.net/blog/?p=9
தமிழ்மொழியில் இருந்த பல கூறுகள் காலத்துடன் மாறியுள்ளன. சில கைவிடப்பட்டுள்ளன. புதியன சில வந்து மொழியின் இன்றியமையாத பகுதிகளாகி விட்டன. நாங்கள் இப்போது தமிழ் எழுத்துக்கள் என அறிவன கிரந்த எழுத்துக்கள் என வடமொழிச் சொற்களைச் செம்மையாக எழுதுவதற்காக வகுக்கப்பட்ட எழுத்து முறையின் அடிப்படையிலானவை. ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகள் இது தொடர்பான தெளிவான விளக்கங்களைத் தருகின்றன. கிரந்த எழுத்து முறைக்கு முன்னோடியான எழுத்து முறை மேற்காசியாவிலிருந்து
சிறப்பான சிந்தனை. தமிழர் சிந்திக்க வேண்டிய திசைகளைச் சுட்டினீர். நன்றி.
1) குறில், நெடில் எழிமையாக்கம்:
தமிழ் மொழியில் கு,கூ வேறுபாட்டை, கி, கீ எழுதுவது போல எழுமையாக்கலாம். (அதே போல இ, ஈ) ஒரு சுழி சுழித்து எழுதுவதால், நாளைய சமுதாயத்திற்கான எழுமையாக்கமாகக் கொள்ளலாம். இது போல, பல குறில், நெடிலுக்குரிய வேறுபாடுகளை எழுமையாக்க தற்போதுள்ள எழுத்து முறைமைகளிலே உள்ளது.
2)தமிழ் கற்பவருக்கான, அடிப்படைச் சொற்களைத் தொகுக்கலாம்.ஏனெனில், இணையத்தில் பன்னாட்டு தமிழரும், பயன் படுத்தும் சொற்களைக் கவனித்து உள்ளேன். மேலுள்ள கட்டுரையில், நீங்கள் பயன்படுத்திய சொற்களை, நான் பின்வருமாறு பயன் படுத்துகிறேன். சில எனக்கு நுண்ணிய வேறுபாட்டினைத் தந்தது. சில சொற்கள், முதலில் புரியவில்லை.
நாங்கள் = நாம்,
பேர் சொல் = பெயர் சொல்
விடயம் = விசயம்3) இந்திய மொழிகளில் ஏற்பட வேண்டிய ஒருமைக்கு முன், தமிழ் பயன்படுத்துவோரிடையே எளிமையாக்கமும், தற்போது தமிழர் பயன்படுத்தும் குறியீடுகளும், சொற்களும் எளிமைப் படுத்தினால், அது எதிர் காலத்திலும், கணினிக்குள்ளும் பல சாதனைகளைச் சாதிக்கும் என்பது என் எண்ணம்.
4)தட்டச்சுப் பலகைகள் பல இருப்பது போல, சில புதிய தமிழ்குறியீடுகளின் எளிமையாக்கம் பல காலம் இருக்கட்டுமே. பொருள் மாற்றம், புதிய எழுத்துக்குறிகளால் பெரும்பாலும் ஏற்படாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.
இக் கருத்துப்பரிமாற்றம் ஆய்த எழுத்திப்பற்றி எழுப்பப்பட்ட
கேள்வியிலிருந்து தொடங்கியது.
ஓரிடத்திலே தாங்கள் ” பங்கு என்ற சொல்லில் ”கு”வுக்கு முன்னால் ங் என்ற
ஒலி வருவதால், கு என்பது gu என்ற அதிரொலியாக (voiced k) மாறும்” என்று
கூறியுள்ளீர். பேச்சு வழக்கிலுள்ள இதனை எல்லோரும் அறிவர். ஆயினும்
வேறொரு இணய தளத்தில் தமிழில் உள்ள ஒலி வடிவங்களை மற்ற இந்திய மொழிகளின்
வரிவடிவங்களோடு ஒப்பிட்டு ஒரு கருத்துப் பறிமாற்றம் நிகழ்ந்தது.
அப்பொழுது ஒரு அன்பர் தொல்காப்பியக் காலத்தில் தமிழில் ka,kha,ga,gha
போன்ற ஒலிகள் இருக்கவில்லை என்றும், முதல் ஒலியாகிய (ka) மாத்திரம்
இருந்தது என்று மிகவும் அழுத்தமாகக் கூறினார். எனக்கும் பிற சில
அன்பர்களுக்கும் இது ஏற்புடைத்தாக இல்லை. இவர் கூற்றை ஏற்றுக்கொண்டால்
முதல் திருக்குறளை akara mutala ezuththellAm Ati pakavan mutaRRE ulku.
என்று படிக்க/பேச (பலுக்க என்னும் தெலுங்குச் சொல்லை நீர்
கையாண்டுள்ளீர்) வேண்டுமா.
எல்லா தென் இந்திய மொழிகளையும் இரண்டு வட இந்திய மொழிகளையும் நான்
அறிவேன். வட இந்தியாவில் இருந்த காலத்தே சிலருக்குத் தமிழைக்
கற்றுக்கொடுத்துள்ளேன். வல்லின எழுத்துக்கள் மொழியிலே இடத்தைப் பொறுத்து
மூன்று ஒலிகள் பெறுகின்றன என்பதனை அவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும்
கடினமாக இருந்தது. எல்லா இந்திய மொழிகளிலும் இவற்றிற்கு நான்கு
வரிவடிவங்களும் ஒலி வடிவங்களும் உள்ளன. தமிழில் ஒரே எழுத்து மூன்று
ஒலிகளைப் பெறுகிறது. நான் அறிந்தவரை க என்னும் எழுத்து மொழிக்கு முதலில்
ka என்றும், மொழிக்கு இடையிலும், ’ங்’ கை அடுத்து ga (soft sound)
என்று ஒலிக்கும். பக்கம் என்று வரும்போது மற்றமொழிகளில் உள்ள இரண்டாவது
ஒலியை (kha) ஓரளவு ஒத்து ஒலிக்கும். மற்ற வல்லின எழுத்துக்களும்
இவ்வாறே. இதே காரணத்தால் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் மற்றும்
வெளிநாடுகளிலும் உள்ள பெயர்களைத் தமிழில் சரியாக எழுதவும் பேசவும்
முடிவதில்லை.
இன்று என்ற சொல்லிலே இது inDru என்றும் நேற்று என்ற சொல்லிலே nETRu
என்றும் ஒலிக்கிறதே. இவற்றிற்கு இலக்கணச் சான்றுகள் யாவை.
வல்லின எழுத்துக்களின் ஒலிகளைப் பற்றி தொல்காப்பியத்திலோ பின்னால்
எழுதப்பட்ட இலக்கண நூல்களிலோ கூறப்பட்டுள்ளதா?
அன்புடன்
கோவிந்தசாமி
On Nov 13, 5:01 am, Sinnathurai Srivas <avaran...@googlemail.com>
wrote:
> திரு சிவசேகரம் அவர்களும் இரவதம் அவர்களும் தமிழ் எழுத்துக்கள் பற்றிய
> அடிப்படை, அதன் விஞ்ஞானத் தன்மை என்பவற்றை புரியாது எழுதுவோர்.
>
> பிறப்பிடம் தொடர்பான விஞ்ஞான கருத்துக்கள் புரியாதவர்கள்.
>
> இவர்களின் கருத்துக்கள் பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் ஓடங்கள்
> போன்றவை. கணக்கில் எடுத்தால் மொழியை குதப்பிவிடுவார்கள்.
>
> இப்படிக்கு
> ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ்
>
> 2009/11/12 த*உழவன் <tha.uzha...@gmail.com>
>
>
>
>
>
> > 2009/11/12 M.Mauran <mmau...@gmail.com>
"பலு" என்பது தெலுங்கா? இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இதைத் தெலுங்கில்
நானே பலமுறை பயன்படுத்தியும் இருக்கிறேன்; தமிழில் பல இடங்களில்
பார்த்திருக்கிறேன். இப்போதுதான் இந்த இரு சொற்களுக்குமான தொடர்பை
அறிந்து கொண்டேன்.
இச்சொல் "பல்" என்ற சொல்லிலிருந்து வந்திருக்கக் கூடும். "நாக்கு" என்ற
சொல்லிலிருந்து "நவில்" இருப்பதைப் போல. தமிழ் பேச்சு வழக்கில் நானும்
பார்த்ததில்லை, வலைத் தளங்களில் பார்த்திருக்கிறேன்.
On Dec 16, 6:20 am, "Govindaswamy" <govindaswamy....@gmail.com> wrote:
> பலுகு என்ற சொல் தெலுங்கில்.. (பேசு) என்ற பொருள்களைக் கொண்டது. நான் அறிந்தவரை தமிழில் இச்சொல் இல்லை.
> ஏதாவது வட்டார வழக்கா?