தமிழ் மொழியாக்கம்

185 views
Skip to first unread message

Nirshan

unread,
Sep 7, 2011, 5:34:10 AM9/7/11
to விக்சனரி, tamil_wi...@googlegroups.com
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

கீழுள்ள ஆங்கிலப் பதங்களுக்கான தமிழ் மொழியாக்கம் அவசியப்படுகிறது.
உதவுவீர்கள் என நம்புகிறேன்.

Phishing
email harvesting
keylogger
Cyber terrorism
Cyberstalking

-இவ்வண்ணம்
ஆர்.நிர்ஷன்

M.Mauran

unread,
Sep 7, 2011, 5:59:38 AM9/7/11
to tamil_wi...@googlegroups.com
Phishing

இது மீன்பிடியைக்குறிக்கும் Fishing என்ற சொல்லின் நேரடி அர்த்தத்தையே கொண்டிருக்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்துக்கூட்டல் மூலம் வேறுபடுத்தப்படுகிறது.

தூண்டில் என்று தமிழில் சொல்லலாம்.

"மின்னஞ்சல் வழியாகப் போடப்பட்ட தூண்டிலில் அவர் தன் கடவுச்சொல்லை இழந்தார்"
"இந்த உலாவி மற்றவர் உங்களுக்குத் தூண்டில் போடுவதிலிருந்து பாதுகாப்பளிக்கிறது"

இச்சொல் நாளடைவில் வளர்ச்சியடைந்து, தனி நபரைக்குறி வைத்துத் தாக்குவதற்கு " spear phishing" என்றும் பெருந்தலைகளைக் குறிவைத்துத்தாக்குவதை "whaling" என்றும் குறிப்பிடும் அளவுக்கு வந்துள்ளது.

"மின்பிடி" என்று பயன்படுத்தலாமா என்றும் யோசிக்கிறேன்.

 
email harvesting

மின்னஞ்சல் முகவரி திரட்டுதல்
மின்னஞ்சல் முகவரிக்கொள்ளை


keylogger

என்னிடம் பரிந்துரைகள் இல்லை


Cyber terrorism

மின்வெளிப் பயங்கரவாதம்

என நேரடியாக மொழிபெயர்க்கமுடியும் எனின்னும்

மின்வெளி வன்முறை / மின்வெளி வன்செயல் / மின்வெளித் தாக்குதல் (Cyber Attack)

என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாயுள்ளது.


Cyberstalking

மின்வெளித் தொந்தரவு


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran




2011/9/7 Nirshan <ramni...@gmail.com>
Cyber

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 7, 2011, 6:28:37 AM9/7/11
to tamil_wi...@googlegroups.com
2011/9/7 M.Mauran <mma...@gmail.com>:

>
> keylogger
>
> என்னிடம் பரிந்துரைகள் இல்லை

விசைப்பதிவாக்கி, விசைப்பதிப்பு நிரல், விசைப்பதிப்பான் ??

ஆங்கிலத்தில் பொருள் : http://en.wiktionary.org/wiki/key_logger

~சேது

Prasath Babu

unread,
Sep 7, 2011, 7:00:29 AM9/7/11
to tamil_wi...@googlegroups.com
Cyber terrorism
இணைய வன்முறை

keylogger
விசைப்பதிவி

Cyberstalking
இணைய சீண்டல் / தொந்தரவு

Phishing
மின்வலைதல் / மின்தூண்டிலிடல்

email harvesting
மின்முகவரிக் கொள்ளை

நன்றி...
அருள்.

2011/9/7 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary

தவா

unread,
Sep 8, 2011, 2:12:38 AM9/8/11
to விக்சனரி
Phishing

மின்தூண்டில் / இணைய தூண்டில்

email harvesting
மின்னஞ்சல் - email
மின்னஞ்சல் முகவரி- email address
சேகரிப்பு- harvesting
" மின்னஞ்சல் சேகரிப்பு " நேரடியாகவும் கருத்தியல்ரிதியாகவும்
பொருந்துகிறது

keylogger
விசைத்திருடல்

Cyber terrorism
மின்வெளிப் பயங்கரவாதம் இதுவும் சரியாகப்படுகிறது
எனது பரிந்துரை இணையப் பயங்கரவாதம்

Cyberstalking
இணையத்தொந்தரவு


மின்வெளித் தொந்தரவு

On Sep 7, 2:59 pm, "M.Mauran" <mmau...@gmail.com> wrote:
> Phishing
>
> இது மீன்பிடியைக்குறிக்கும் Fishing என்ற சொல்லின் நேரடி அர்த்தத்தையே
> கொண்டிருக்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்துக்கூட்டல் மூலம்
> வேறுபடுத்தப்படுகிறது.
>
> தூண்டில் என்று தமிழில் சொல்லலாம்.
>
> "மின்னஞ்சல் வழியாகப் போடப்பட்ட தூண்டிலில் அவர் தன் கடவுச்சொல்லை இழந்தார்"
> "இந்த உலாவி மற்றவர் உங்களுக்குத் தூண்டில் போடுவதிலிருந்து
> பாதுகாப்பளிக்கிறது"
>
> இச்சொல் நாளடைவில் வளர்ச்சியடைந்து, தனி நபரைக்குறி வைத்துத்

> தாக்குவதற்கு " *spear
> phishing" *என்றும் பெருந்தலைகளைக் குறிவைத்துத்தாக்குவதை "*whaling" *என்றும்


> குறிப்பிடும் அளவுக்கு வந்துள்ளது.
>
> "மின்பிடி" என்று பயன்படுத்தலாமா என்றும் யோசிக்கிறேன்.
>
> email harvesting
>
> மின்னஞ்சல் முகவரி திரட்டுதல்
> மின்னஞ்சல் முகவரிக்கொள்ளை
>
> keylogger
>
> என்னிடம் பரிந்துரைகள் இல்லை
>
> Cyber terrorism
>
> மின்வெளிப் பயங்கரவாதம்
>
> என நேரடியாக மொழிபெயர்க்கமுடியும் எனின்னும்
>
> மின்வெளி வன்முறை / மின்வெளி வன்செயல் / மின்வெளித் தாக்குதல் (Cyber Attack)
>
> என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாயுள்ளது.
>
> Cyberstalking
>
> மின்வெளித் தொந்தரவு
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>

> 2011/9/7 Nirshan <ramnirs...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > Cyber

Mani Manivannan

unread,
Sep 8, 2011, 4:06:59 PM9/8/11
to tamil_wi...@googlegroups.com
Phishing என்பது நம் பேச்சுத்தமிழில் “கொக்கி போடுவது” போல் உள்ளது.  கொளுவதல் என்றும் சொல்வோம்.  எனவே மின்கொளுவல் என்றும் சொல்லலாம்.

மின் தூண்டில் என்று பிரித்து எழுத வேண்டும்.  சேர்த்து எழுதினால் புணர்ச்சி விதிகளின்படி மிந்தூண்டில் என்றுதான் எழுத வேண்டும்.

email harvesting என்பது உண்மையில் email address harvesting என்பதன் சுருக்கம்.  மின்னஞ்சல் சேகரிப்பு என்றால் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரித்தல் என்ற பொருள் வராது.  மின்னஞ்சல்களைச் சேகரித்தது என்ற நல்ல பொருளே வரும்.  மின்னஞ்சல் அறுவடை எனலாம்.  மின்னஞ்சல் முகவரி அறுவடை என்று நீட்டி முழக்கியும் எழுதலாம்.  மின்னஞ்சல் முகவரி என்பதையே சுருக்கி மின்வரி என்றால் மின்வரித் திரட்டல் அல்லது மின்வரி அறுவடை என்றும் சொல்லலாம்.

key logger என்பதை விசைத்திருடல் என்பது திருட்டுச் செயலையும் அப்பட்டமாகவே சொல்லி விடுகிறது.  விசைப்பதிவி என்பது நேரடி மொழி பெயர்ப்பு.

Cyber என்ற சொல்லை இணையம் என்று பொருள் கொள்வது பொருந்தாது.  அது மின்வெளியும் அல்ல.  ஆங்கில மூலப் பொருள் (http://searchsoa.techtarget.com/definition/cyber):

"Cyber" is a prefix used to describe a person, thing, or idea as part of the computer and information age. Taken from kybernetes, Greek for "steersman" or "governor," it was first used in cybernetics, a word coined by Norbert Wiener and his colleagues.

அதே போல terrorism  என்பதைப் பயங்கரவாதம் என்று நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறோம்.  தமிழிலேயே அரட்டுதல் என்ற நல்ல சொல் இன்னும் புழக்கத்தில் உள்ளது.  என்னடா, அரட்டரியா? என்று திரைப்படங்களிலும் உரையாடல் வருகிறது.

Cyber terrorism என்பதற்குக் கணியரட்டு என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறேன்.

Cyber Stalking என்பதற்கு http://searchsecurity.techtarget.com/definition/cyberstalking என்ற சுட்டியில் கீழ்க்கண்ட விளக்கம் தருகிறார்கள்.

Cyberstalking is a crime in which the attacker harasses a victim using electronic communication, such as e-mail or instant messaging (IM), or messages posted to a Web site or a discussion group.


தமிழில்

மோப்பம்பிடி-த்தல் mōppam-piṭi-

, v. tr. < மோப்பம் +. 1. To scent; to discern by smell, as hounds on a track; வாசனையால் ஒன்றை யறி தல். 2. To follow a woman with improper desire; காமவிச்சையுடன் ஒருத்தியைத் தொடர்தல்.


 கணித் தொடர்தல் அல்லது கணி மோப்பம்பிடித்தல் என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு


2011/9/8 தவா <thava...@gmail.com>

Sinnathurai Srivas

unread,
Sep 8, 2011, 4:53:57 PM9/8/11
to tamil_wi...@googlegroups.com
நல்ல ஆய்வுக் கருத்துக்கள்.
மின் அஞ்சல் எனும் அஞ்சல் பதத்தினைப் பாவித்தல் பற்றியும் கருத்து சொல்லுங்கள்.

சைப, இலெக்ற்றோனிக்/மின் எனும் இரண்டு சொற்களின் பயன்பாடும் முரண்பாடுகளும் தொடர்பாகவும் எழுதுங்கள்.

சிறிவாசுˠ



--- On Thu, 8/9/11, Mani Manivannan <mmani...@gmail.com> wrote:
--

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 8, 2011, 9:46:57 PM9/8/11
to tamil_wi...@googlegroups.com
2011/9/9 Mani Manivannan <mmani...@gmail.com>:

> Phishing என்பது நம் பேச்சுத்தமிழில் “கொக்கி போடுவது” போல் உள்ளது.  கொளுவதல்
> என்றும் சொல்வோம்.  எனவே மின்கொளுவல் என்றும் சொல்லலாம்.
> மின் தூண்டில் என்று பிரித்து எழுத வேண்டும்.  சேர்த்து எழுதினால் புணர்ச்சி
> விதிகளின்படி மிந்தூண்டில் என்றுதான் எழுத வேண்டும்.

இல்லை நண்பரே. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர, லகர மெய்களுக்கு முன்,
வருமொழி முதலில் வரும் தகர மெய் றகர மெய்யாகத் திரியும்.
[http://tamilvu.org/courses/degree/c021/c0214/html/c0214332.htm] பல
இலக்கண நூல்களிலும் இதைக் கண்டிருக்கிறேன்

காட்டாக:
வன் + தட்டு = வன்றட்டு
அவன் + தான் = அவன்றான்

எனவே மின் + தூண்டில் = மின்றூண்டில்

புணர்ச்சிகளால் நிலைமொழி ஈற்று னகரம் நகரமாவதில்லை. ஆனால் அது வேறுமை
புணர்ச்சியில் றகரமாகவும் திரிபடையலாம் - பொற்குடம், பொற்றாமரை என
எழுதப்படுவைகளிளுள்ள றகரம் னகரத்தின் திரிபே.

தற்கால தமிங்கில வகை (அஞ்சல் போன்ற, நான் பங்குபற்றிம் எ-கலப்பை
திட்டத்தில் உள்ள பொனடிக் உட்பட) விசைமாற்றிகளில் ன(n) + த(t or th) -->
ந்த என வசதிக்காக உள்ளடக்கப்படும் விசைமாற்றம் தவறான இலக்கணத்தை இளைய
சந்ததியினருக்கு போதிக்கிறது என நான் அஞ்சுகிறேன்.

~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages