தமிழுக்கென்று ஓர் ஓசை உண்டு

669 views
Skip to first unread message

Kaniya...@gmail.com

unread,
Nov 14, 2006, 5:37:29 AM11/14/06
to விக்சனரி
Proper Noun (ஊர்ப்பெயர், ஆட்பெயர்)
என்பதை மாற்றுப் பெயரால்
குறிப்பிடுவது தவறு. Common Noun
என்பதை மட்டுமே தமிழாக்கம்
செய்கிறோம்.
தமிழாக்கும்போது ஆங்கிலச்
சொல்லை அவ்வாறே
பயன்படுத்தினாலும் அதைத்
தமிழோசைக்கேற்ப
கண்டிப்பாக மாற்றவேண்டும்.
ஜப்பானிய மொழியில் Nipon
எனும் பெயரையே ஆங்கிலேயர்
Japan என்றழைத்தன. யாழ்ப்பாணம்
சிங்கள 'யாப்பனே'
என்பதிலிருந்து Jaffna
ஆயிற்று. இதேபோல் நாமும் Mouse
என்பதை அப்படியே
எடுப்பினும் மவுசு என்றே
உச்சரிக்க வேண்டும்.

ஏனெனில் ஒரு மொழிக்கு
ஓசையே மிகமிக
முக்கியமானது. நமக்குப்
புரியாத மொழிகளைப் பிறர்
பேசும்போது அந்த ஓசை
ஒழுங்கை வைத்தே நாம் இது
மலையாளம், இது தெலுங்கு, இது
இந்தி, இது ஆங்கிலம் என
இனங்காண முடிகிறது. எனவே
ஆங்கில உச்சரிப்புக்காக sh, s,
h, f எனத் தமிழை மாற்றினால்
தமிழ் மொழியின் ஓசை
ஒழுங்கு கெட்டுப்போகும்.
இது தமிழ் என்று அறியும்
தனித்தன்மை இல்லாமல் போய்
விடும். ஆதலால் சரியான
உச்சரிப்பு (Correct Pronounciation) எனும்
கருத்துக்குத் தரும்
முக்கியத்துவம் கற்பனையான
அடிமைத்தனம் என்பதைத்
தெளிவாக உணரவேண்டும்.

ஆங்கிலம் பேசுவோரில்
அமெரிக்கா, ஐரிஷ் மக்கள்
எனப் பலறும் பலவாறு
உச்சரிப்புத் தமிழையும்
திருநெல்வேலி, திருச்சி,
யாழ்ப்பாணம் எனப் பல
மக்களும் மாறுபட்டு
உச்சரிப்பர். இந்த
உச்சரிப்பு மாறுபட்டால்
எந்த தீங்கும் வந்து
விடாது.

சரியான உச்சரிப்பு எனப்
பொதுவாக ஓர் உச்சரிப்பு
முறை எல்லா மொழிகளுக்கும்
உண்டு. நடைமுறையில் கிளை
மொழி (Dialect) விலகல்களும்
உண்டு.

இதை உணர்ந்து தமிழைத்
தமிழாகப் பேணும் ஓசை
சிதறாத்தன்மையோடு
தமிழாக்கம் செய்ய
வேண்டும்.

சி.கபிலன்

Ravishankar

unread,
Nov 14, 2006, 5:41:42 AM11/14/06
to tamil_wi...@googlegroups.com
கபிலன்,
உங்கள் கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
ரவி

Kalaivani Kailanathan

unread,
Nov 14, 2006, 6:00:44 AM11/14/06
to tamil_wi...@googlegroups.com
மன்னிக்க வேண்டும்.

Shakespeare என்ற பெயரை செகப்பியர் என்று எழுதும், உச்சரிக்கும் தமிழர்கள்  இருக்கின்றனர்.  உங்கள்  கூற்றுப்படி இதுவும்  சரியாக  வேண்டும்.

ஆனால்  இது  சரியா?

என்  கருத்துபடி யாழ்ப்பாணம் என்பது ஒரு  பெயர்  அதை  வெவ்வேறு  மொழிகளின்   ஓசைக்கேற்ப  மாற்றுவது  அதன்  தோற்றத்தை,  வரலாறை  திரிபு படுத்த  வழிவகுக்கும்.

உதாரணமாக,

இன்று  கதிர்காமத்தை  கதரகம என்று  குறிப்பிட்டால் தான்  சில  தமிழைகளுக்கே  புரிகிறது.

எனவே  மொழியோடு  இசையும்  ஒசைகள்  இடுகுறிப் பெயர்களுக்குப்  பொருத்தமற்றது.

கலைவாணி

amachu

unread,
Nov 14, 2006, 10:29:23 AM11/14/06
to விக்சனரி
Kalaivani akka,

Hope u have heard this....

Bharathi vaazntha Thiruvallikeni is now Triplicane...

Thamizh Kadavul Muruganin Senkundran is Red Hills...

Tiruchirapally is Trichy....

Uthagamandalam is now Ooty...

Adayaaru is now Adyar....

Thamizh vilaintha Thanjavur is now Tanjore...

Enna seiyalam sollunga! Have you heard Cricket Commentaries....
Sadagopan Ramesh is spelt by most Commentators as Sadgopan Ramesh...
:-( Lot of names get virtually killed there...

I have seen Tamil people finding fault with me when I speak English
wrongly... I always tell them.. Look how we are speaking our own
Language.. Lets first correct that... Let us not bother too much about
English... Its the primary duty of a English person and not us... :-)
Do not reply to this statement. Just a random expression of thought ;-)

I think, What Kapilan is telling is this,

English in Tamil becomes Aaangilam.... No controversy..

Jesus in Tamil becomes Yesu... Agreed...

and so on.............................

Ravishankar

unread,
Nov 14, 2006, 11:04:37 AM11/14/06
to tamil_wi...@googlegroups.com
//

English in Tamil becomes Aaangilam.... No controversy..

Jesus in Tamil becomes Yesu... Agreed....//

இந்தக் கருத்தை தான் கபிலரும் வலியுறுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன். இத்தோடு கலைவாணியும் ஒத்துப் போவார் என்று நம்புகிறேன். (இன்னொன்று, இந்தக் குழுமத்தின் உறுப்பினர்கள் பலரின் வயது எனக்குத் தெரியாது..எல்லாரையும் பெயர் சொல்லியே அழைத்து வருகிறேன்..பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்  !)

//Shakespeare என்ற பெயரை செகப்பியர் என்று எழுதும், உச்சரிக்கும் தமிழர்கள்  இருக்கின்றனர்.//

இப்படி எழுதினால் தப்பு தான். கபிலரின் கருத்துப்படி சேக்சுபியரு என்று எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

இன்னொரு சரியான முறை, பெயர்களின் மூல உச்சரிப்பை அறிவது. ஆங்கிலத்தில் mathew, paul என்பதன் உச்சரிப்பு நாம் அறிவோம். ஆனால், இப்பெயர்கள் தோன்றிய நாடுகளில் மத்தேயு, பவுல் என்று தான் அழைப்பார்கள். இதே முறை தமிழ் விவிலியத்திலும் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தின் கொடுமை என்னவென்றால் தமிழ் பெயரை ஆங்கிலமாக்கி பின் அதையே தமிழ்ப் பெயராகத் திணித்து தமிழ் வழக்கை மறையச் செய்வது.. ராமதாஸ் சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுகள் இந்த வகை. இந்த மாதிரி பிழைகளை செய்யாமல் இருக்கலாம். .நான் ரொம்ப நாளாக jaffna, batticola, trincomale என்றால் என்னடா என்று குழம்பி இருந்திருக்கிறேன். யாழ்ப்பாணம் என்ற அழகுத் தமிழ் பேர் எப்படி இப்படி ஆனது என்று வருந்தியதுண்டு. இலங்கை தமிழர்களே கூட இப்படி அழைப்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு வரக்கூடிய வாதம் என்னவென்றால் தமிழ் பெயரை ஆங்கிலேயர்கள் சிதைத்தார்கள் என்று நாம் புலம்புவது போல ஆங்கிலேயர் பெயர்களை நாம் தமிழாக்கி சிதைப்பது தகுமா என்பது. இங்கு கருதத்தக்கது என்னவென்றால் தத்தம் மொழி ஓசைகளுக்கு ஏற்ப பிற மொழி ஓசைகளை வளைப்பது பல மொழிகளிலும் உள்ள வழக்கம் தான். தமிழை ஆங்கிலப்படுத்துவதால் தமிழுக்கு விளையும் கேடு கண்கூடு. ஆனால், ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்தினால் அதற்கு ஒன்றும் ஆகப்போவதில்லை தானே ;) உச்சரிப்புத் துல்லியம் என்று கருதி நம் மொழியை வளைக்கத் தேவையில்லை. எனக்குத் தெரிந்து ஜெர்மன் மொழியில் இது போன்று அவர்கள் உச்சரிப்புக்கு ஏற்ப வழங்கிப் பார்த்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சி காரணமாக j ஜ ஆகிறது. அதுவே இலங்கையில் ய ஆகிறது. ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளிலும் j ய தான்.

உண்மையில் ஒரு பிற மொழிப் பெயரை, சொல்லை உச்சரிக்க சரியான வழி அம்மொழியைக் கற்று அம்மொழி எழுத்துகளிலேயே எழுதுவது தான். டச்சு மொழியில் உள்ள ஒரு எழுத்தை எப்படி உச்சரிப்பது என்று எனக்கு எட்டு மாதமாக விளங்க வில்லை ;) அதை தமிழில் எழுதிக்காட்டுவது அதை விட இயலாத காரியம். இது போல சீனம் போன்ற மொழிகளில் உள்ள நுணுக்கமான உச்சரிப்புகளை தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் எழுத்திக்காட்டுவது தலைகீழாக நின்றாலும் முடியாது. என் சீன நண்பர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் பெயருக்கும் அவர்கள் அதை உச்சரிப்பதற்கும் தொடர்பே இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

இன்னொன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழார்வம் உடையவர்கள் என்ற முறையில் உறுப்பினர்கள் தாராளமாக இங்கு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். மாற்றுச் சிந்தனைப் போக்குகளை அறிந்து கொள்ள உதவும் . ஆனால், எது சரி எது பிழை என்று இறுதி செய்யும் விவாதத்துக்குள் எந்த விதயத்திலும் நாம் இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தத்தம் கருத்துக்களை பதிவு செய்வதோடு விட்டு விடலாம். எப்பொருள் யார் யார் வாய் கேட்டாலும் அப்பொருளின் மெயப்பொருள் என்ன என்று அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
ரவி

Kalaivani Kailanathan

unread,
Nov 14, 2006, 11:20:11 PM11/14/06
to tamil_wi...@googlegroups.com
No I am not convinced yet.


கபிலன் என்ற  பெயரை  சிங்களவர்கள்  தங்கள்  மொழி  ஓசைக் கேற்ப  கபில என்றோ அல்லது  கபில் என்றோ  அழைத்தால்  அவை  அதை ஏற்றுக்கொள்வாரா?

அதே  போன்று  ரவி என்ற  பெயரும்  தமிழ்  அல்ல , இந்தப் பெயரை  தமிழில் எழுதுவது என்றால்  இரவி என்று  தான் எழுதப்பட வேண்டும். அத்துடன்  உங்கள்  பெயரை  சூரியன் என்றோ  அல்லது  கதிரவன் என்றோ  தமிழில்  மாற்றி  அழைத்தால்  நீங்கள்  ஒப்புக் கொள்வீர்களா?

என்  பெயரை என்  சிங்கள நண்பர்கள் களவாணி என்றோ  கலேவானி என்றோ (இன்னும் பல கொலைகள்) அழைத்தால் எனக்கு  கோபமும்  வருத்தமும்  தான் வருகிறது.

இப்படி  இருக்க  Shakespeare இன்  பெயரை  மட்டும்  நீங்கள்  செகப்பியரு என  மாற்றி  அழைக்கலாம் என்று  கூறுவது எனக்கு வேடிக்கையாக  இருக்கிறது.

என்னுடைய  வாதம் இதுதான்,
Proper Nouns இற்கு  மொழிமாற்றம்  தேவை இல்லை.  இதை பலர் ஏற்றுக் கொள்வது  போல்  தெரிகிறது.  அதேவெளை  ஓசையிலும்  மாற்றம்  தேவை இல்லை.

இப்படியான  ஓசை  மாற்றங்கள் ஏற்படுத்தியதும், ஏற்படுத்த  அநுமத்தித்ததும்  நம்  முன்னோர்கள்  விட்ட  தவறுகளில்  ஒன்று எனவே  கருதுகிறேன்.

---- செகப்பியர் என்று ஷேக்ஸ்பியரை  அழைத்தவர்  விவேகானந்தர் என்று  அறிகிறேன்.

நிற்க.


நம்முடைய  இந்த  முயற்சி  பயனளிக்க  வேண்டுமெனில்  அதில்  தரம்  இருக்கவேண்டும்.  தரம் என்பது  மிகச் சரியான, கொள்கை முரண்பாடற்ற அணுகுமுறையில் தங்கியிருக்கிறது. இதற்கு நாம்  நம் முயற்சிகளுக்கு ஒரு  நியமத்தை (Standard)  வகுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான  விவாதங்களுக்கு  ஒரு முடிவு  கிடைக்கும்  போதுதான்,  நம்  கொள்கை  முரண்பாடுகள்  நீங்கும்.
அதற்கு,

1. தீர்மானிக்கும்  அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது  ஒரு  குழு  வேண்டும்.

2. அந்த  நபருக்கு  அல்லது  குழுவுக்கு  இருக்க வேண்டிய  தகுதிகள் பற்றிய  விளக்கம்  வேண்டும்.

( உதாரணம் :
அவர்  தமிழறிவு  மிக்கவராகவும் , அதில் கல்வித் தகைமை  உடையவராகவும், அத்துடன்  நவீன  உலகத்தின் மாற்றங்களை  அறிந்து  வைத்திருப்பவராகவும்  இருக்க  வேண்டும். மிக  முக்கியமாக எங்கள்  உறுப்பினர்கள் அனைவரும்  அவரது  தீர்மானங்களுக்கு  கட்டுப்படச்  சம்மதிக்க  வேண்டும்)

பேராசிரியர். தில்லைநாதன் ???

3.  இவ்வாறான்  தகுதி  உடையவர்கள்  இந்தக் குழுவில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை  இல்லை எனில் அவ்வாறானவர்களை  நம்  குழுவில்  இணைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக  இந்தியாவில்  மாலன், சுஜாதா  போன்ற எழுத்தாளர்கள் இத்தகைய  முயற்சிகளில்  ஈடுபடுகின்றனர்.


கலைவாணி.கை


On 11/14/06, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:

Kalaivani Kailanathan

unread,
Nov 14, 2006, 11:49:17 PM11/14/06
to tamil_wi...@googlegroups.com
---  தவறான  தகவல் - மன்னிக்கவும்  ---
செகப்பியர் என்று ஷேக்ஸ்பியரை  அழைத்தவர்  விவேகானந்தர்   --  அல்ல  விபுலாநந்தர்  என்று  அறிகிறேன்.

கலைவாணி.கை

amachu

unread,
Nov 15, 2006, 3:34:33 AM11/15/06
to விக்சனரி
Look the logic is simple..

As I said in case of Jesus and English..

There are always exception... May be Sekappiyar is one among them...

What determines the way one spell is un avoidable.... Am working for a
Software Company.. And we interact with clients... The way they
pronounce my name is definitely not right.. Similarly the way I
pronounce their names may also be not the correct.. They can't help it
and I can't help it... I understand them.. and their difficulty and
they understand my difficulty...:-) We never had issues... May be at
times I will teach them pronouncing my name... other than that
everything is understandable...

Thats why in BPO call centres instead of having Indian/ Tamil names
they adopt the Western name... Some one who supports a Western Client
will be renamed as Philip, Sam, John etc., Hope all of us know these
practises...These happen simply for pronounciation reasons... Tomorrow
if our respective nations grow and start outsourcing our jobs we will
definitely ask them have nick names to choose our phonetic style..

Here we are speaking about pronounciation.. Though Ravi might have to
written as Iravi... It is always pronounced as Ravi...

And Ravi is another word used just like the Mangalam I had already
referred... Sethu, Mauran, suffix of my name Thaasan, suffix of
Mukunth's name Rajan, suffix of Vasunna's name Thevan, ur name's suffix
Vaani, all are of such kind.. they are found almost in most of the
Bharathiya Languages.. Lets not worry about it...

amachu

unread,
Nov 15, 2006, 3:42:00 AM11/15/06
to விக்சனரி
Let me add Kapilan's name too.. Kapilar is ancient Tamil Saint and Poet
we all know.. its a Tamil Name..

But have you heard Kapil Dev.. India's premier fast bowler.. How did he
living in Haryana of India got this name..??

I have heard in Ganesh's Temple when they do the Archana,

Om Kapilaaya Namaha...

Got how Kapil Dev was named? We can't help it other than wasting our
time...

Got it.. So lets not bother about it...

Kalaivani Kailanathan

unread,
Nov 15, 2006, 3:48:52 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
Look I dont care about where you work or what you do.

I have listed my arguments there and if you have something really meaningful to state in order to convince me, please list them down.

and please make sure to mind your language.

I dont see a point in your argument and you are getting annoyed with me just because of that, as far as I can understand.

In order to get a fruitful result we have to set some standards and all our thinkings should fall in line, otherwise there will be inaccuracies amd inconsistancies.

Also, there should be an accountable person who has the caliber to analyse and make a decision about these arguments.

Being tachnically sound does not make you anyone a Tamil guru.

K.Kalaivani

Kalaivani Kailanathan

unread,
Nov 15, 2006, 3:50:41 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
I am talking about names whice given by the creator, you cannot change it.



On 11/15/06, Kalaivani Kailanathan < kkv...@gmail.com> wrote:

Kalaivani Kailanathan

unread,
Nov 15, 2006, 3:54:52 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
I am talking about names whice given by the creator to a particular object, you cannot change it Kapilar as  Kapilan or Kapilan as Kapilar.

I dont see any meaning in discovering new Tamil terms which will be weird, difficult to pronounce and above all nobody will understand or use.

Kalaivani.K

Ravishankar

unread,
Nov 15, 2006, 4:17:17 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள்,

தயவு செய்து இயன்றவரை தமிழில் எழுத முயலுங்கள். ஆங்கிலத்தில் எழுதும்போது நட்புணர்வு குறைந்து காணப்படுவது போல் எனக்குத் தோன்றுகிறது. கருத்துக்களை பிழையாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. உடனடி மறுமொழி அளிக்கும் விழைவு, அலுவலகத்தில் தமிழ் தட்டச்சு வசதி இல்லாதது ஆகியவை புரிந்து கொள்ளத் தக்கது என்றாலும், முடிந்தவரை தமிழில் எழுதுங்களேன். firefox - tamilkey நீட்சி தமிழில் எழுத உதவும்.

கலைவாணி,

ஆழமான தமிழறிவுள்ளவர்களின் கீழ் செயல்படுவது என்பதைக் காட்டிலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவது என்று கொள்ளலாமா? இந்த குழு தொடங்கியபோது எனக்குத் தெரிந்த தமிழறிஞரான செல்வகுமாரை அழைத்தேன். அவரால் நேரத்தட்டுப்பாட்டால் பங்கு கொள்ள இயலவில்லை. இராம. கி அவர்களை விக்சனரி தளத்துக்கு அழைத்தேன். அவரும் இன்னும் வரவில்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் இக்குழுமத்துக்கு அழைத்து வாருங்களேன்.

http://thamizhthendral.blogspot.com/2006/11/blog-post.html என்ற முகவரியில் உள்ள என் வலைப்பதிவு இடுகையைப் படித்தால் ஏன் ஒரு தலைமையின் கீழ் செயல்படுவது பலன் தராமல் போகலாம் என்பதும் ஏன் கட்டற்ற முறையில் நாம் இங்கு கலந்துரையாட வேண்டும் என்பதும் தெளிவாகலாம். ஒருவரின் கீழ் செயல்படுவது என்று வந்துவிட்டால், முதற்கண் அவரைப் பிடிக்காதவர்கள் குழுவுக்கு வர மாட்டார்கள். இருப்பவர்கள் பாதி வெளி ஏறி விடுவார்கள். இந்தக் குழு இவருடையது என்ற அடையாளம் பட்டுப் போகும். சரி சமமான இருவர் இணைந்து செயல்படத் தடை வரும். குழு தொடங்கியபோதே ராமதாசும் இப்படி இறுதி செய்யும் குழுக்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால், இறுதி முடிவு என்று ஒன்று எடுத்தாலே, பிறகு அதற்கு மேலும் சிறப்பாக நமக்கு கிடைக்கும் சொற்கள் கிடைக்காமல் போகலாம். ஒருவர் எவ்வளவு மெத்தப் படித்த அறிஞராக இருந்தாலும் அவர் இறுதி செய்யும் சொல்லை மக்கள் பின்பற்றுவார்கள் அவசியமில்லை. அதே வேளை சக உறுப்பினராக அவர் இங்கு கருத்துக்களை எடுத்து வைத்தால் அதில் நியாயம் இருந்தால் நிச்சயம் பிற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்தக் குழுவுடைய நோக்கம் எதையும் இறுதி செய்வது இல்லை. ஏற்கனவே நல்ல சொல் இருந்தால் அதை தெரிந்து கொள்வது. சொல் இல்லாவிட்டால் சொற் பரிந்துரைகளைத் தெரிவிப்பது. அனைவருக்கும் ஏற்புடையசொற்களை சொற்பரிந்துரைகளாகத் தெரிவிக்கிறோம். கருத்து வேறுபாடு உள்ள சொற்களில் இருந்து அவரவர் சிந்தனைக்கு சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் வலைப்பதிவுகளில், கட்டுரைகளில் எழுதலாம். நடைமுறைக்கு ஒத்து வருவதும் குழுவை முன்னெடுத்துச் செல்வதாகவும் நட்புணர்வுடன் தொடர்ந்து செயல்படுவதாகவும் இருக்கும்.

 ஒலிபெயர்ப்பு முறைகளுக்கான கருத்து வேறுபாடுகள் பல தமிழ்க் குழுக்களிலும் உள்ளன. தத்தம்  கருத்துக்களை முன்வைப்போம். இது சிந்தனைகளாக  பரிமாறிக் கொள்வதற்கான களமாக இருக்கட்டும். எது சரி என்று தீர்மானிப்பது இக்குழுவின் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாகும்.

என் கருத்தில் பெயர்களை எப்படி எழுதுவது என்ற விவாதத்தை ஒத்தி வைக்கலாம். கலைச்சொற்களை எப்படி உருவாக்குவது என்பது குறித்த சிந்தனைகளை கபிலர் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார். அது போல் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம். நம் கவனம் கலைச்சொற்களில் உருவாக்குவதில் இருக்கலாம் என்று விரும்புகிறேன்.

நன்றி,
ரவி.

Kaniya...@gmail.com

unread,
Nov 15, 2006, 4:46:19 AM11/15/06
to விக்சனரி
கலைவாணியின் கோபத்தைச்
செல்லமாக அரவணைத்துக்
கொள்கிறேன்.

அவசரமாகக் குழு ஏதும்
அமைத்துக் கட்டுப்பாடுகளை
விதிக்க வேண்டாம். நல்ல
கருத்து வளர்ச்சிக்கு
இங்கு ஒரு சுதந்திரம் வழி
ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறது.

சரியான முடிவுக்கு
எல்லோரும் வரத் தேவையான
விழிப்பூட்டும்
சிந்தனைகளையே நான்
பரிமாறிக்
கொண்டிருக்கிறேன்.
கற்றோரைவிடக் கல்லாத
தமிழர் பலர் நல்ல தமிழ்ச்
சொற்களை இன்றும்
பயன்படுத்தியவாறு கிராமப்
புறங்களில் வாழ்கின்றனர்.
அவர்களையும் மின் உலகிற்கு
அழைத்துவர முயல்வோம்.

இதற்கென
'மின்தமிழ்த்தாயகம்' என்ற
கருத்தையும் உருவாக்கி
வளர்க்க உள்ளோம்.

முடிந்தவரை Proper Nonn என்பதை
மொழி மூல ஒலிப்புச்
சிதறாமல் கூறுவதில்
தவறில்லை. இதனால் தான்
சீனாவில் ஒரு புதிய
பிரதமர் பதவி ஏற்றால் அவர்
பெயரை எப்படி உச்சரிப்பது
எனச் சீனத் தூதரகத்தில்
கேட்டே வானொலியில்
உச்சரிக்கும் வழக்கம்


இருக்கிறது.

இதற்காக நம் தமிழில்
இல்லாத ஒலிகளையும்,இலக்கண
மரபுகளையும் நாம்
ஏற்படுத்திக் கொள்வது
சரிதானா? என்பதே என்னுடைய
வினா.

'இரவி' எனக் குறிப்பிடாமல்
'ரவி' எனக்
குறிப்பிடுவதற்காக நாம்
ர(ர) எனும் எழுத்து மொழி
முதல் எழுத்தாக வரலாம் என
இலக்கண விதியை மாற்றலாமா?
இது தவறில்லை மாற்றலாம் என
எத்தனை பேர்
கருதுகிறீர்கள்?

இலக்கண விதிகள் காலத்தின்
தேவைக்கேற்ப மாறியே
வந்திருக்கின்றன. நாமும்
மாற்றலாம். ஆனால் அன்னிய
மொழி உச்சரிப்பை அப்படியே
நிகழ்த்த வேண்டும் என்ற
காரணத்துக்காக மாற்றலாமா?
இவ்வாறு மாற்றினால் நமது
மொழி அதே அன்னிய மொழி போல்
ஆகிவிடாதா?

அனைவரும் சிந்தித்து நல்ல
முடிவுக்கு வர
வேண்டுகிறேன். எதற்காக?
என்ற காரணம் நமக்காக
(தமிழர்க்காக) என்ற பதிலில்
உறுதியாக வேரூன்றி
இருந்தால் எதையும்
மாற்றலாம்; என்பது
என்னுடைய கருத்து.

கபிலன்


On Nov 15, 2:17 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:


> அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள்,
>
> தயவு செய்து இயன்றவரை தமிழில் எழுத முயலுங்கள். ஆங்கிலத்தில் எழுதும்போது
> நட்புணர்வு குறைந்து காணப்படுவது போல் எனக்குத் தோன்றுகிறது. கருத்துக்களை
> பிழையாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. உடனடி மறுமொழி அளிக்கும் விழைவு,
> அலுவலகத்தில் தமிழ் தட்டச்சு வசதி இல்லாதது ஆகியவை புரிந்து கொள்ளத் தக்கது
> என்றாலும், முடிந்தவரை தமிழில் எழுதுங்களேன். firefox - tamilkey நீட்சி
> தமிழில் எழுத உதவும்.
>
> கலைவாணி,
>
> ஆழமான தமிழறிவுள்ளவர்களின் கீழ் செயல்படுவது என்பதைக் காட்டிலும் அவர்களுடன்
> இணைந்து செயல்படுவது என்று கொள்ளலாமா? இந்த குழு தொடங்கியபோது எனக்குத் தெரிந்த
> தமிழறிஞரான செல்வகுமாரை அழைத்தேன். அவரால் நேரத்தட்டுப்பாட்டால் பங்கு கொள்ள
> இயலவில்லை. இராம. கி அவர்களை விக்சனரி தளத்துக்கு அழைத்தேன். அவரும் இன்னும்
> வரவில்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் இக்குழுமத்துக்கு அழைத்து
> வாருங்களேன்.
>

> http://thamizhthendral.blogspot.com/2006/11/blog-post.htmlஎன்ற முகவரியில்

Ravishankar

unread,
Nov 15, 2006, 4:58:03 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
ஆஹா..எல்லாரும் கடைசியில் என் பேரை அக்குவேர் ஆணிவேராக அலசி விடுவீர்கள் போல இருக்கே.. இலக்கணப்படி இரவி என்று எழுத வேண்டும் என்று அறிவேன். தெரிந்தே தான் பிழையாக ரவி என்று எழுதுகிறேன். இரவி என்று எழுதாமல் இருக்க சோம்பல் ஒரு காரணம். ரவி என்று எழுதுவது பரவலாக தமிழ்நாட்டில் கண்டு கொள்ளப்படாத பிழையாக இருப்பதும் ஒரு காரணம். இலங்கையில் இரவி என்று எழுதுவதோடு அதை இரவி என்று வாசிக்கும் வழக்கம் இருப்பதையும் அறிகிறேன்.

ஒரு தகவலுக்கு, சட்டப்படியான ஒப்பங்களில் கையெழுத்து இடும் போது அ.இரவிசங்கர் என்றே கையெழுத்திடுகிறேன்.

கலைவாணி, செகப்பியர் என்று எழுதப்பட்டது என் கருத்தில் மிகவும் பிழையானது. ஆனால், இது ஒரு விதிவிலக்காகச் செய்யப்பட்ட தவறாகத் தான் தெரிகிறது. தமிழ்நாட்டில் இது போல் முற்றிலும் சிதைக்கப்பட்ட  பெயர்களை நான் காணவில்லை. இதை தவறு என்று கருதும் நாம் shakespeare (எழுத்துக்கூட்டல் சரியா?), ஷேக்ஸ்பியர், சேக்சுபியரு என்று மூன்று மாற்று முறைகளில் எழுத முடியும் என்பதையும் அறிகிறோம். இந்த மூன்றில் எது சரி என்று படுகிறதோ அதை அவரவர் கருத்துக்கு ஏற்ப எழுதிக்கொள்ள வேண்டியது தான். இது தான் சரி என்று முடிவெடுப்பது நம் குழுவின் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது என்று தான் நினைக்கிறேன். அதை செய்ய அரசாலும் பள்ளிக்கூட்டங்களாலும் மட்டுமே முடியும்.

amachu

unread,
Nov 15, 2006, 5:12:18 AM11/15/06
to விக்சனரி
> and please make sure to mind your language.

Am terribly sorry and humbly apologise had any of my words created some
kind of uneasiness with u.. I would like to clearly state that that was
not at all my intention..

Sorry for that again... :-) Lets continue our constructive dialogue...

amachu

unread,
Nov 15, 2006, 5:46:43 AM11/15/06
to விக்சனரி
> குழு தொடங்கியபோதே ராமதாசும் இப்படி இறுதி செய்யும் குழுக்களை உருவாக்கலாம் என்று
> பரிந்துரைத்தார். ஆனால், இறுதி முடிவு என்று ஒன்று எடுத்தாலே, பிறகு அதற்கு
> மேலும் சிறப்பாக நமக்கு கிடைக்கும் சொற்கள் கிடைக்காமல் போகலாம்.

I indeed suggested and expressed that view... Keeping in view the
Ubuntu Tamilization.. Where we have to take decisions... Because one
translator using one word for an equivalent english word and other
transalator some other doesn't make a feel good factor among users of
Ubuntu.. I hold that view with regard to Ubuntu.

But here as i had expressed once, it has been so far the random
expression of thoughts.. Some time it happens to be funny.. naughty..
and most of the time really creative...

Ravi, i beleive is adding words discussed here to the Wicktionary
project.. on which mutual consenses are there...

Ravishankar

unread,
Nov 15, 2006, 5:52:35 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
போன மாதம் வெளியிட்ட சொற்பட்டியல் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்புடையதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் உள்ள சொற்களை ஒவ்வொன்றாக விக்சனரியில் ஏற்றி வருகிறேன். விரும்பியவர்கள் இந்தப் பணியில் உதவலாம்.

உபுண்டு போன்ற தனிப்பட்ட குழுக்களுக்கு முடிவெடுக்கும் குழு அவசியம் தான். இல்லாவிட்டால் குழப்பம் வரும். ஆனால், இது தனிப்பட்ட குழுக்களுக்கு அப்பாற்பட்டு பொதுவாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் இடம். நமக்கு சரியென்று தோன்றியதை சொல்லவும், பிறர் எதை சரியென்று கருதுகிறார் என்று அறியவும் ஒரு வாய்ப்பு. நம் அறிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும், இற்றைப்படுத்திக் கொள்ளவும், இன்னும் சரியானவற்றை அறிந்து கொள்ளவும் ஒரு களம்.

ரவி

Sethu

unread,
Nov 15, 2006, 5:56:39 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
ரவி:
//கலைவாணி, செகப்பியர் என்று எழுதப்பட்டது என் கருத்தில் மிகவும் பிழையானது.

> ஆனால், இது ஒரு விதிவிலக்காகச் செய்யப்பட்ட தவறாகத் தான் தெரிகிறது.
> தமிழ்நாட்டில் இது போல் முற்றிலும் சிதைக்கப்பட்ட பெயர்களை நான் காணவில்லை.
> இதை தவறு என்று கருதும் நாம் shakespeare (எழுத்துக்கூட்டல் சரியா?),
> ஷேக்ஸ்பியர், சேக்சுபியரு என்று மூன்று மாற்று முறைகளில் எழுத முடியும்
> என்பதையும் அறிகிறோம். இந்த மூன்றில் எது சரி என்று படுகிறதோ அதை அவரவர்
> கருத்துக்கு ஏற்ப எழுதிக்கொள்ள வேண்டியது தான்//

"சேக்சுபியர்" என்ற நான்காவது முறையில் தப்புள்ளதா?

நச்சினார்க்கினியர் தானே? நச்சினார்க்கினி"யரு" அல்லவே?

இரவிசங்கர் ஆகவே இருக்கலாம் இரவிசங்கரு அவசியமில்லை என நினைக்கிறேன்.

அல்லது வேறு ஏதாவது இலக்கண சட்டங்கள் உள்ளனவா?

பெங்களூர்காரர்கள் "பெங்களூரூ" என கன்னட மூலப்பெயருக்கு மாற்றி விட்ட
செய்தி கண்டேன்.

~சேது

drtv

unread,
Nov 15, 2006, 6:08:06 AM11/15/06
to விக்சனரி

ம்ம்ம்...
இதைப் பற்றி எழுதலாமா என
கொஞ்சம் யோசித்தேன்.
கருத்தை சொல்லிவிடுவோம்.
ஏற்பது ஏற்காதது அவரவர்
உரிமை என தோன்றியது.

இல்லாத ஒலி என ஒன்று உண்டா
என்ன?
ஒலிக்கு சில சமயம் சில
மொழிகளில் தகுந்த எழுத்து
வடிவம் இல்லாமல் போகலாம்.
அந்த சமயத்தில் வேறு
ஏதாவது பயன் படுத்தியே ஆக


வேண்டும்.

ஆனால் ஒலிக்கு எழுத்து
வடிவம் உள்ள போது அதை பயன்
படுத்துதலே சரி.
நாம் கருத்தில் கொள்ளும்
பல சொற்கள் திசை சொற்களாக
உள்ளன.
முடிந்தவரை அவற்றின்
உச்சரிப்பை தெரிந்து
அப்படி எழுதுவதே சரியாக
இருக்கும் என எண்ணுகிறேன்.
மொழியின் முக்கிய முதல்
பயன் ஒருவர் நினைப்பதை
மற்றவர் புரிந்து
கொள்ளுதல்தானே?
அதற்கு மற்ற விஷயங்கள்
தடையாகக் கூடாது.
அன்புடன்
திவா

Ravishankar

unread,
Nov 15, 2006, 6:10:06 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
ஆஆ...

சேக்சுபியர் என்று எழுதலாம் என்பது என் நினைவில் இல்லாமல் போய்விட்டது. மன்னிக்கவும் ;(

இது இலக்கணப்படி சரியா என்று அறிந்தவர் தான் சொல்ல வேண்டும். மற்றபடி செகப்பியர் தவிர, ஆங்கிலப் பெயர் ஒலிக்கு ஒத்தோ நெருங்கியோ எழுதப்படும் எழுத்துக்கூட்டல்கள் எனக்கு ஏற்புடையவை தான். இவற்றில் இலக்கணப்பிழை இருக்கிறது என்றாலும் பெரிதும் பொருட்படுத்த மாட்டேன். தமிழ்ப் பெயர்களுக்குத் தான் இறுதியான ஒரே சரியான எழுத்துக்கூட்டல் இருக்க முடியும். மற்ற பெயர்களை எழுதுவதில் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும். செகப்பியர் போன்று முற்றிலும் ஊகிக்க முடியாத எழுத்துக்கூட்டல்கள் தவிர்த்து பிறவற்றை நான் ஏற்றுக் கொள்வேன். கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பதும் அவரவர் விருப்பமே.

ரவி

மு.மயூரன் | M.Mauran

unread,
Nov 15, 2006, 6:55:35 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
இந்த உரையாடலுக்கு வெளியேயானதாய் இருந்தாலும்,

//இதற்கென

'மின்தமிழ்த்தாயகம்' என்ற
கருத்தையும் உருவாக்கி
வளர்க்க உள்ளோம்.//

கபிலன், இதுபற்றிய சிந்தனைகள், தேடல்களுடன் நானும் நீண்டகாலமாக "மெய்நிகர் தமிழ் தேசம்" தொடர்பான எண்ணங்களுடன் இருக்கிறேன்.

அவ்வாறானதொரு தேசம் உருவாகிவருகிறது.

இதுபற்றி தனிப்பட பின்னர் உரையாடுகிறேன்.
மு.மயூரன்

Ravishankar

unread,
Nov 15, 2006, 7:44:08 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
virtual tamil nation கருத்துருவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஒரு சின்ன பின்னூட்டம். மெய்நிகர் தமிழ்த் தாயகம் என்று வழங்கலாமே? தேசம் வட சொல். மெய்நிகர் தமிழ்நாடு என்றால் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டோடு குழப்பிக் கொள்ள நேரிடும்.

ரவி

Kaniya...@gmail.com

unread,
Nov 16, 2006, 2:42:04 AM11/16/06
to விக்சனரி

எல்லா மொழிகளிலும்
வழங்கும் ஒலிகளைப்
பகுத்தளித்து IPA எனும் International
Phonetic Alphabets குறியீடுகளில்
மொழியியலார்
குறிப்பிடுவர்.

ஒவ்வொரு மொழிகளிலும்
பொதுவான ஒலிகளும்
அம்மொழிக்கு மட்டுமே உரிய
சிறப்பான ஒலிகளும் உள்ளன.

இதில் புதிதாக ஒலிகளைச்
சேர்ப்பது அவசியமில்லாத
செயல். இதற்காக ஏற்கனவே ஸ, ஜ
போன்ற எழுத்து வடிவங்கள்
சில தமிழில் உள்ளன. இந்த
வரிசையை
அதிகப்படுத்தினால் தமிழ்
மொழியே வேறொரு மொழியாக
மாறி விடும்.

தமிழும், வடமொழியும் கலந்த
வழக்கினால் பிறந்ததே
மலையாளம். ஒரு மலையாள
அறிஞர் வடமொழிக்
கலப்பில்லாத மலையாளச்
சொற்களை உருவாக்க
முயன்றாராம், முடிவில்
பார்த்தால் அவை எல்லாம்
தூய தமிழ்ச் சொற்களாக
அமைந்தன என்றார்.

இதுபோன்று தேவயற்ற
ஒலிகலப்பால் தமிழைப்
பாரம்பரிய மரபுத்
தொடர்ச்சியை இழந்த ஒரு
புதிய மொழியாக மாற்ற
வேண்டாம். இதனால் உலகமே ஒரு
தொன்மையான மொழியை இழந்து
விடும்.

தமிழின் தொன்மையை
முன்னிட்டு அதைக் காக்கும்
பணியை ஐ.நா சபை முன்னெடுக்க
வழிகோல முடியுமா?

சி.கபிலன்
On Nov 15, 5:44 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages