த*உழவன்
unread,Apr 26, 2013, 2:57:35 AM4/26/13Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to tamil_wi...@googlegroups.com
விக்கித்திட்டங்களில்(விக்சனரி, விக்கிசெய்திகள், விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கிபொதுவகம்) sysop, Bureaucrat என்ற சொற்கள் முறையாக மொழியாக்கம் செய்யப்பட வில்லை என்றே எண்ணுகிறேன். இச்சொற்களை இணையான நல்ல தமிழ் சொற்களை பெறவே, இதனைத் தொடங்குகிறேன்.
sysop என்பதற்கு நிருவாகி என்றும், Bureaucrat என்பதற்கு அதிகாரி எனவும் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சொற்கள் ஒரு பதவி என்ற எண்ணத்தையே பலரிடம் ஏற்படுத்துகிறது. இத்திட்டங்களின் வளர்ச்சியை, நெருக்கத்தைக் குறைக்கிறது. எனவே, இந்நிலையை மாற்ற, வேறு சொற்கள் இருப்பின் தெரிவிக்கவும்.
என்னைப்பொறுத்த வரை, விக்கித்திட்டங்களில் பங்களிக்க விரும்புவோர், அனுபவம் வாய்ந்த இவர்களை அணுகினால், தங்களது அனுபவத்தின் மூலம், இவர்கள் எளிமையாக பிறருக்கும் கற்றுக் கொடுப்பர். அவர்கள் செய்யும் அனுபவமற்ற அணுகுமுறைகளை மாற்ற ஆலோசனை தருவர். இந்நிலையை தொடர்ந்து ஈடுபடும் ஒவ்வொருவரும் அடைய முடியும் என்பதே அடிப்படைத் தத்துவம்.
sysop, Bureaucrat என்பவை தொடர் பங்களிப்பாளருக்குத் தரப்படும் அணுக்க நிலைகள் ஆகும். எனவே முறையே அணுக்கர், உயரணுக்கர்/மீயணுக்கர் என மொழியாக்கங்களை முன்மொழிகிறேன்.
இங்கு sysop என்பவருக்கு பக்கத்தை நீக்குவதற்கான அணுக்கம் தரப்படுகிறது.அதேபோல, Bureaucrat என்பவருக்கு அந்த நீக்கல் அணுகலும், sysop நிலைக்கு ஒரு தொடர்பயனரை முன்மொழியும் அணுகலும், தானியங்கி முறையான பக்கத்தில் இயங்குவதற்கான அணுகலும் வழங்குவதற்கான பொறுப்பும் தரப்படுகின்றன என்பதனையும் நினைவில் கொள்க.