காட்டுப் பாதை,
வீட்டுத் தோட்டம்,
பட்டுச் சேலை
இதுப்போன்று வரும் இரண்டுச்சொற்களுக்கு இடையில் ஓர் இடைப்பாலமாகவே (தொடர்பு படுத்தும் எழுத்து) "ப், த், ச்" போன்றன வருகின்றது.
அவ்வாறு இடையில் "ப், த்,ச்" வருமாயின் அவற்றை காட்டுப்பாதை, வீட்டுத்தோட்டம், பட்டுச்சேலை என்று இணைப்புச்சொற்களாக பயன்படுத்த வேண்டும் என்றே கற்றோம்.
இருப்பினும் சில சொற்றொடர்கள் நீண்டு வருவதால் நானும் நீங்கள் கூறுவதுப்போன்று "காட்டுப் பாதை, வீட்டுத் தோட்டம், பட்டுச் சேலை" போல் பிரித்து எழுதுவது வழமை. இவ்வாறே பலரும் எழுதிவருவதால் எழுந்த சந்தேகமே இது.
அதாவது இரண்டுச்சொற்களுக்கு இடையில் வரும் இடைப்பாலமாக "ப், த், ச்" போன்றன வரும்போது இணைத்துத்தான் (கட்டாயமாக) எழுதவேண்டுமா? பிரித்து எழுதுவதில் பிளையில்லையா? என்பதுதான்.
//இரண்டுமே சரி. இணைப்புச் சொற்கள் என்று எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.//
இலகுவாக இருக்கும் என்பதற்கு இவ்வாறு பயன்படுத்தலாம் என்பது ஏற்புடையதாக இருக்கின்றது.
நன்றி ரவி
-அருண்