தமிழ் விக்சனரி - ஒரு வேண்டுகோள்

244 views
Skip to first unread message

Mayooranathan

unread,
Sep 24, 2011, 2:30:39 AM9/24/11
to விக்சனரி
ஒரு குறிப்பிட்ட மொழியில் உள்ள விக்சனரியின் அடிப்படை நோக்கம் அம்
மொழியில் உள்ள சொற்களுக்கான பொருளைத் தமிழிலும் பிற மொழிகளில் தருவது
ஆகும். எடுத்துக் காட்டாக "எழுத்து" என்னும் தமிழ்ச் சொல்லின் பொருளைத்
தமிழிலும் விளக்கி, மலையாளம், இந்தி, சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு,
செருமன் போன்ற பிற மொழிகளிலும் அதற்குப் பொருள் கொடுக்க முயல வேண்டும்.
இப்படித்தான் முக்கியமான எல்லா மொழி விக்சனரிகளும் இயங்குகின்றன.
உண்மையில் ஆங்கிலச் சொல் ஒன்றுக்குப் பொருள் தேவை என்றால் ஆங்கில
விக்சனரிக்குச் சென்றால் ஆங்கே ஆங்கிலத்திலும் வேறு மொழிகளிலும் அதற்கான
பொருளை அறிந்து கொள்ள முடியும் அங்கே தமிழிலும் கூடச் அச் சொல்லுக்கான
பொருளைச் சேர்க்க முடியும். ஆங்கில விக்சனரியில் "Tamil" என்பதற்கான
பதிவை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். ஆனால் சில நடை முறைக்
காரணங்களுக்காக தமிழ் விக்சனரியில் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில்
பொருள் தருவதற்கு முக்கியத்துவம் தந்து வருகிறோம்போல் தெரிகிறது. தமிழ் -
தமிழ் - பிறமொழி (பெரும்பாலும் ஆங்கிலம்) பகுதியிலும் பல சொற்கள் உள்ளன
எனினும் ஒரு தமிழ் - தமிழ் - பிறமொழி விக்சனரியில் இருக்கக்கூடிய அல்லது
இருக்கவேண்டிய பல தகவல்கள் இல்லை. இத்தகைய ஒரு அகர முதலியில்
சொற்களுக்கான வேர்கள், சொற்பிறப்பு, உருபேற்ற முறைகள் முதலிய தமிழுக்கே
உரித்தான இலக்கண இயல்புகள் போன்ற பல விடயங்கள் இடம்பெறுவது நல்லது. இது
இலகுவான விடயம் அல்ல என்பதையும் நான் அறிவேன். ஆனாலும், தமிழ் விக்சனரி
உலகின் முக்கியமான விக்சனரிகளுள் ஒன்றாக வளர்ந்திருக்கும் வேளையில்
முறையான "தமிழ் - தமிழ் - பிறமொழி அகரமுதலி"யாகத் தமிழ் விக்சனரியை
உருவாக்குவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என்பது எனது
கருத்து.

Prasath Babu

unread,
Sep 26, 2011, 4:44:16 AM9/26/11
to tamil_wi...@googlegroups.com
அய்யா மயூரநாதனின் கருத்தை நானும் வழி மொழிகிறேன். தமிழ் சொற்களின் அடிப்படையில் விக்ஷனரியில் சொல் சேர்ப்பு நடைபெற வேண்டும். வெறும் ஆங்கிலம் --> தமிழ் ஆக இருக்கக் கூடாது. அது மொழிக்கு வளம் சேர்க்காது.

நன்றி.
அருள்.

2011/9/24 Mayooranathan <rmayoor...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary

Raj

unread,
Sep 26, 2011, 5:30:28 AM9/26/11
to tamil_wi...@googlegroups.com
இதை தான் நானும் சொல்கிறேன். ஏதேனும் ஒரு சொல் என்பதனை சொடுக்கினால் பத்து ஆங்கிலசொர்களுக்கு ஒரு தமிழ் சொல் தான் வருகிறது.

2011/9/26 Prasath Babu <venu...@gmail.com>

த*உழவன்

unread,
Sep 26, 2011, 2:23:30 PM9/26/11
to tamil_wi...@googlegroups.com
இரவி, சுந்தர், செல்வா ஆகிய வெகுசிலரின் முயற்சிகளினாலேயே தான் தமிழ் விக்சனரியில் இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆங்கில விக்கிப்பீடியக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்வோருக்கு இச்சொற்கள் உதவிகரமாக இருக்கின்றன. கூகுள் மொழிபெயர்ப்புக் கருவிகளிலும் இவை எடுத்தாளப்படுகின்றன.

தமிழ் சொற்களின் எண்ணிக்கையை,  முன்பு உரையாடிய  விவரங்கள் அடிப்படையில்  அதிகரிக்க பலரும் கருத்தளவில் தான் உடன்படுகின்றனர். செயல்வடிவில் நாம் ஒன்று பட,  என்ன செய்யவேண்டும்?

நான் அறிந்தவரை பின்வரும்   செயற்பாடுகள் அவசியம்.
தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் வளத்தை, ஆங்கிலச்சொற்களின் வளங்களைக் கூட்ட பயன்படுத்தியது போல, தமிழ்சொற்களின் வளங்களைக் கூட்ட,  நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

*தமிழ்-தமிழ்-அகரமுதலியின் தரவுகளை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
http://www.tamilvu.org/library/dicIndex.htm

*அதன் சொற்களை, சென்னைப் பேரகரமுதலியின் துணைக் கொண்டு விரிவாக்க வேண்டும்.
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&matchtype=exact&display=utf8

*மதுரைநூலகத்திட்டத்தின் தேடுபொறியைப் பயன்படுத்தி , இலக்கிய மேற்கோள்களை ஒருங்குறிக்கு மாற்றி இணைத்துக் கொள்ள வேண்டும்.
http://tamilelibrary.org/tamiltext/

இது ஒருங்குறியில் தேடாது. எனவே, திசுகி எழுத்து முறைக்கு மாற்ற பின்வரும்  இணையம் உதவும்.
http://www.suratha.com/uni2tsc.htm

அங்ஙனம் மாற்றி, அச்சொல்லை மேற்கூறிய தேடுபொறியில் இட்டு, வரும் முடிவுகளை மீண்டும் ஒருங்குறிக்கு மாற்ற பின்வரும் சுரதா இணையம் உதவும்.
http://www.suratha.com/reader.htm

வரும் முடிவுகளைப் படித்து உகந்ததைச் சொற்களில் இணைக்க வேண்டும்.

*அண்ணாப்பல்கலைக் கழகத்தின் அகராதி இணையத்தினைப் போல,  பாரதி, வள்ளுவம், ஔவையார் இலக்கிய மேற்கோள்களைக் கையாள வேண்டும்.
(எ.கா)
http://www.agaraadhi.com/dict/OD.jsp?info.x=0&info.y=0&w=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&ln=ta

இவ்வாறு தேடி தமிழ் சொற்களின் வளத்தைக் கூட்ட  நான்மேற்கண்ட முயற்சிகள் கீழ்கண்டத் தொடுப்பில் காணலாம்.தலைப்புச்சொல் தெளிவாகத் தெரியும் பொருட்டு, தடிமனான எழுத்தமைவு தலைப்புச்சொல்லுக்கு மட்டுமே தந்துள்ளேன். ஆனால், பெரும்பான்மையான சொற்களில் உட்தலைப்புகளும் தடிமனாகக் காட்டப்படுகின்றன. அதனைத் தவிர்த்து, உட்தலைப்புகளுக்கு, சிறிய அடிக்கோட்டினை பயன்படுத்தியுள்ளேன்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88


http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


அப்பொழுது தேவைப்பட்ட  தொழில் நுட்பங்களை முழுமையாக அடையமுடியவில்லையென்றாலும், ஓரளவு அச்சொற்களில் காணலாம். இந்நுட்பங்களை  போர்த்துகீசியவிக்கியரும், மலையாள விக்கியரும், தமிழ் விக்கிப்பீடியரும் படிப்படியாக உதவினர்.மேலும் சில தொழில்நுட்பங்களை கொண்டுவருதல் அவசியம்.
அதில் முதன்மையானது, ஆங்கிலவிக்சனரியில் மேற்கோள்களை மறைத்துக் கொள்ள இயலும். இங்கும் அத்தகைய தொழில் நுட்பங்கள் அவசியமே.

இல்லையெனில், பெரும்பான்மையோர் ஒரு சொல்லுக்கு ஒருசில சொற்களை நாடியே விக்சனரிக்கு வருகின்றனர். அவர்களுக்கு அயர்வைத் தரும் வகையில், நமது தகவல்கள் அமைந்து விடும்.

தமிழ் சொற்களை பல முன்னோடிகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் முதலில் வளர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

1. ஒரே பொருளுடைய, பல சொற்கள்.  (எ.கா) அம்மா, யானை

2. ஒரே சொல், பல பொருள் (எ.கா) அரி, அரசர்சின்னம்.

3.ஒரே சொல், சில பொருள் (ஐம்பெருங்காப்பியங்கள்)
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

4.இணைச்சொற்கள்(இரட்டைச்சொற்கள்)
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

5துறைவாரியான சொற்கள். இதனை கலைச்சொற்கள் என்றும் அழைப்பர்.கீழ்கண்டத்தொடுப்பில் தமிழ்துறையின் இலக்கணப் பதங்கள் சில தொகுக்கப்பட்டுள்ளன.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

6.பிறமொழியில் இருந்து தமிழில், குடியேறியச் சொற்கள். இதனைத் திசைச்சொற்கள் என்றும் அழைப்பர்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D

எனது கல்வி கணினியியல் அல்ல. நான் முறைப்படி மொழியியலைக் கற்றவனும் அல்ல. இருப்பினும், எனது ஆர்வம் பலரது ஆலோசனைகள் மேற்கண்ட முயற்சிகளை எடுக்க வைத்தது. நீங்களும் உங்களின் வழிகாட்டலை தர வேண்டுகிறேன்.

உங்களின் சிறுபங்கு தமிழ்விக்சனரியின் பெரும் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடும்.வாருங்கள். வளம் சேர்ப்போம். உயர்வானவை உயர்வான இடத்திலேயே இருக்கிறது. அதனை அவ்விடத்திலிருந்து, பிறருக்கு எளிமையாகக் கிடைக்க வகைசெய்தலில் தான் சிக்கல் உள்ளது என்பதே என் கருத்து.

ஒரு சொல்லினை ஆய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முன்னுரிமையையும், முக்கியத்துவமும் அடங்கியது, தமிழ்விக்சனரியின் வடிவமைப்பும், தொழில்நுட்பமும் ஆகும். எனவே, அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்போமே.

ஆங்கில விக்சனரியின், பல தொழில்நுட்பங்களை கொண்டுவந்தவர் மாகிர் ஆவார். இருப்பினும், ஆங்கில விக்சனரியின் தொழில் நுட்பங்கள் பல நம்மிடம் இல்லாதது ஒரு குறையே. அவற்றைக் கொண்டுவர,மாகிருடன் கைக்கொடுப்பீர். அத்தகைய தொழில்நுட்பங்களை இங்கும் கொணர வேண்டுகிறேன். இங்குள்ள தொழில்நுட்பக் குறைகளையும் கவனத்தில் கொள்ளக்கோருகிறேன்.

 வணக்கம்.





2011/9/26 Raj <inbam...@gmail.com>



--
--*உழவன்
           * மிழ்; ரம்; கவல்; ன்னம்பிக்கை.
Reply all
Reply to author
Forward
0 new messages