volume - கனவளவு

68 views
Skip to first unread message

Raj

unread,
Sep 18, 2011, 4:00:19 AM9/18/11
to tamil_wi...@googlegroups.com
விக்சனரியில் volume -கனவளவு என்றிருப்பதைக் கண்டேன். இது இலங்கை ஒலிப்பு முறை என்று கூறுகின்றனர். ஒலிப்பு முறை என்பது பேச்சு வழக்கல்லவா? 
கனவளவு = கனவு + அளவு .
கனவளவு = கனம் + வளவு. 

கனம் + அளவு = கனஅளவு என்று தானே வரும்.\\ ஒரு வேலை 'வ்' மிகுவதற்கு ஏதேனும் இலக்கண விதி உள்ளதா ?
----
இராஜ்குமார்.

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 18, 2011, 11:53:28 AM9/18/11
to tamil_wi...@googlegroups.com
2011/9/18 Raj <inbam...@gmail.com>:

தற்கால புணர்ச்சியின்றி எழுதும் வழக்கங்கள் படி "கன அளவு" எனவிருக்க
வேண்டும், இடைவெளியுடன்.

புணர்ச்சி விதிகள் படி நிலைமொழியின் ஈற்று மகரவொற்று கெட்டு வருமொழியின்
உயிர் முதல் உடம்படுமெய் "வ்" பெறுவதால் "கனவளவு" சரியே.

பார்க்க :
http://tamilvu.org/courses/degree/c021/c0214/html/c0214221.htm

<மேற்கோள்>
//2.1.1 மகர ஈற்றுப் புணர்ச்சி - பொதுவிதி

மகர மெய் ஈற்றுப் புணர்ச்சிக்குரிய பொது விதியாக நன்னூலார் இரண்டனைக்
குறிப்பிடுகிறார். அவை வருமாறு:

1. நிலைமொழியில் உள்ள மகர மெய் ஈற்றுச் சொற்கள், வருமொழியின் முதலில்
வரும் உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் நாற்கணங்களோடு
புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு (நீங்கி), உயிர் ஈறாய்
நிற்கும். அவ்வாறு நிற்கும் உயிர் ஈற்றின் முன்னர், வருமொழி முதலில்
உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும்; வல்லினம் வந்தால் வருகின்ற
அவ்வல்லின எழுத்து மிகும்; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை
இயல்பாகும்.

சான்று:

அல்வழி

இச்சான்றில் நிலைமொழியாக உள்ள பவளம் என்பது மகர மெய் ஈற்றுச்சொல்.
இச்சொல் வருமொழியில் இகர உயிரை முதலாகக் கொண்டு வரும் இதழ் என்ற சொல்லோடு
புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டுப் பவள என அகர உயிர் ஈறாக
நின்றது. இவ்வாறு நிற்கும் அகர உயிர் ஈற்றின் முன்னர், இதழ் என்னும்
வருமொழி முதலில் வந்த இகர உயிர் வகர உடம்படுமெய் பெற்றுப் பவளவிதழ்
என்றாயிற்று. //
</மேற்கோள்-முடிவு>

அச் சான்றில் வ்+இ->வி போல கனவளவில் வ்+அ->வ

உடம்படுமெய் பற்றி அறிய:

http://www.tamilvu.org/courses/degree/a051/a0511/html/a05115l3.htm வாசிக்கவும்.

(ஆங்கிலத்திலும் இந்தியிலும் Goa எனவுள்ளதை தமிழில் நாம் கோஆ
என்றில்லாமல் "கோவா" எனவே எழுதுகிறோம்)

~சேது

> ----
> இராஜ்குமார்.
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "விக்சனரி" group.
> To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> tamil_wiktiona...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups-beta.google.com/group/tamil_wiktionary

Mani Manivannan

unread,
Sep 18, 2011, 12:08:09 PM9/18/11
to tamil_wi...@googlegroups.com


2011/9/18 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

2011/9/18 Raj <inbam...@gmail.com>:
> விக்சனரியில் volume -கனவளவு என்றிருப்பதைக் கண்டேன். இது இலங்கை ஒலிப்பு முறை
> என்று கூறுகின்றனர். ஒலிப்பு முறை என்பது பேச்சு வழக்கல்லவா?
> கனவளவு = கனவு + அளவு .
> கனவளவு = கனம் + வளவு.
> கனம் + அளவு = கனஅளவு என்று தானே வரும்.\\ ஒரு வேலை 'வ்' மிகுவதற்கு ஏதேனும்
> இலக்கண விதி உள்ளதா ?

தற்கால புணர்ச்சியின்றி எழுதும் வழக்கங்கள் படி "கன அளவு" எனவிருக்க
வேண்டும், இடைவெளியுடன்.

புணர்ச்சி விதிகள் படி நிலைமொழியின் ஈற்று மகரவொற்று கெட்டு வருமொழியின்
உயிர் முதல் உடம்படுமெய் "வ்" பெறுவதால் "கனவளவு" சரியே.

இந்த இலக்கணக் குறிப்பு சரியென்றாலும், கனவளவு என்ற கலைச்சொல்லைத் தமிழகத்தில் பார்த்ததில்லை.  முகத்தலளவு அல்லது கொள்ளளவு என்ற சொற்களே வால்யூம் என்பதற்கு இணையாகப் புழக்கத்தில் உள்ளன.

தமிழ்நாடு அரசு பாடநூல்களைப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு 

M.Mauran

unread,
Sep 18, 2011, 12:29:13 PM9/18/11
to tamil_wi...@googlegroups.com
கனவளவு என்பது, கனம் என்ற சொல்லை அடியாகக்கொண்டது. கனம் என்றால் ஓ எண்ணின் மூன்றாமடுக்கு என்று பொருள்படும்.

ஒரு மீற்றர் கனம் என்றால் ஒன்றின் மூன்றாமடுக்கு மீற்றர்கள். இதுவே Volume இற்கான சூத்திரம்.
மூன்றாமடுக்கைக் குறிக்கும் "கனம்" என்ற சொல்லில் இருந்தே கனவளவு என்ற சொல் பிறந்தது. (இரண்டாமடுக்கை வர்க்கம் என்பர்)

இலங்கையில் இச்சொல் மிகச்சாதாரணமாகப் புழங்குகிறது. பாடப்புத்தகங்களில் இச்சொல்லே பயன்பாட்டில் உள்ளது.



--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran




2011/9/18 Mani Manivannan <mmani...@gmail.com>
--

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 18, 2011, 12:52:08 PM9/18/11
to tamil_wi...@googlegroups.com
2011/9/18 M.Mauran <mma...@gmail.com>:

> கனவளவு என்பது, கனம் என்ற சொல்லை அடியாகக்கொண்டது. கனம் என்றால் ஓ எண்ணின்
> மூன்றாமடுக்கு என்று பொருள்படும்.
>
> ஒரு மீற்றர் கனம் என்றால் ஒன்றின் மூன்றாமடுக்கு மீற்றர்கள். இதுவே Volume
> இற்கான சூத்திரம்.
> மூன்றாமடுக்கைக் குறிக்கும் "கனம்" என்ற சொல்லில் இருந்தே கனவளவு என்ற சொல்
> பிறந்தது. (இரண்டாமடுக்கை வர்க்கம் என்பர்)
>
> இலங்கையில் இச்சொல் மிகச்சாதாரணமாகப் புழங்குகிறது. பாடப்புத்தகங்களில்
> இச்சொல்லே பயன்பாட்டில் உள்ளது.
>
>
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>

அடிப்படையில் கனம் எனப்படுவதன் பொருள் நிறை அல்லது பாரம். ஒரு
முப்பரிமாணப் பொருளை கனமாக உளதாகக் கொண்ட பொருளில் cube க்கு கனம் அல்லது
கனச்சதுரம் என தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதிலிருந்தே
மூன்றாம் அடுக்குக்கும் அதன் பயன்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

இராம.கி volume க்கு கனம் பொருத்தமற்றது என விளக்கும் பதிவு :
http://valavu.blogspot.com/2006_10_01_archive.html

அவர் மாற்றாக வெள்ளம், கொள்ளளவு ஆகிய சொற்களை பயன்படுத்துகிறார்.

"கொள்ளளவு" capacity க்கும் பயன்பாடுகளில் உண்டு. அதுபோல முகத்தலளவை
தானியங்களை முகந்தளக்கும் அளவை எனபதாகும் (பிடி, கொத்து போன்றவை.

~சேது

Mani Manivannan

unread,
Sep 18, 2011, 1:18:03 PM9/18/11
to tamil_wi...@googlegroups.com
வர்க்கம் (varga) , கனம் (gana) என்ற இரண்டும் வடமொழிச் சொற்கள் எனக் கருதுகிறேன்  அவற்றின் பலுக்கல்களில் வர்க்க ஒலிகள் உள்ளன.

இவை இரண்டும் நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே (தி.மு.க. ஆட்சி வந்த பின்) மாறத் தொடங்கி விட்டன.  லிட்டர், படி என்பவை எல்லாம் முகத்தல் அளவு என்றே கற்பித்தார்கள். கூலங்களுகுக் (தானியம் என்பது வடசொல்) மட்டுமல்ல நீரியங்களுக்கும் (திரவம்) அதே அளவைகளே.  ஒரு படி அரிசி என்றாலும் சரி, ஒரு லிட்டர் பால் என்றாலும் சரி, முகத்தலளவை பொருந்தும்.  இன்றைய தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும் முகத்தலளவை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

கழகக் கையகராதியில் கன அளவு என்று பிரித்துதான் கொடுத்திருக்கிறார்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு.

2011/9/18 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
2011/9/18 M.Mauran <mma...@gmail.com>:

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 18, 2011, 1:52:07 PM9/18/11
to tamil_wi...@googlegroups.com
2011/9/18 Mani Manivannan <mmani...@gmail.com>:

> வர்க்கம் (varga) , கனம் (gana) என்ற இரண்டும் வடமொழிச் சொற்கள் எனக்
> கருதுகிறேன்  அவற்றின் பலுக்கல்களில் வர்க்க ஒலிகள் உள்ளன.

வர்க்கம் (varga) > தமிழாக்கம் வருக்கம் எனவல்லவா இருக்க வேண்டும்?

> இவை இரண்டும் நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே (தி.மு.க. ஆட்சி வந்த பின்)
> மாறத் தொடங்கி விட்டன.  லிட்டர், படி என்பவை எல்லாம் முகத்தல் அளவு என்றே
> கற்பித்தார்கள். கூலங்களுகுக் (தானியம் என்பது வடசொல்) மட்டுமல்ல
> நீரியங்களுக்கும் (திரவம்) அதே அளவைகளே.  ஒரு படி அரிசி என்றாலும் சரி, ஒரு
> லிட்டர் பால் என்றாலும் சரி, முகத்தலளவை பொருந்தும்.  இன்றைய தமிழ்நாட்டுப்
> பாடநூல்களிலும் முகத்தலளவை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
>
> கழகக் கையகராதியில் கன அளவு என்று பிரித்துதான் கொடுத்திருக்கிறார்.

கணிதத்தில் square (ஓர் எண்ணை அதைக் கொண்டே பெருக்கல்) மற்றும் அது போல
square root, cube, cube root ஆகியன எவ்வாறு தறகாலத் தமிழகத்தில்
தமிழில் குறிப்பிடப்படுகின்றன ?

~சேது

Mani Manivannan

unread,
Sep 18, 2011, 2:11:51 PM9/18/11
to tamil_wi...@googlegroups.com
கொள்ளளவு என்ற சொல் நானகாம் வகுப்பு நூலில் ஆளப் பட்டுள்ளது.

2011/9/18 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
2011/9/18 Mani Manivannan <mmani...@gmail.com>:

> வர்க்கம் (varga) , கனம் (gana) என்ற இரண்டும் வடமொழிச் சொற்கள் எனக்
> கருதுகிறேன்  அவற்றின் பலுக்கல்களில் வர்க்க ஒலிகள் உள்ளன.

வர்க்கம் (varga) > தமிழாக்கம் வருக்கம் எனவல்லவா இருக்க வேண்டும்?

ஆமாம்.  ஆனால், வர்க்கம் என்றுதான் கற்பித்தார்கள்.  தமிழ் இலக்கணத்தைப் பற்றி அன்றைய கணித உபாத்தியாயர்களுக்கு அக்கறை இல்லை.  அவர்கள் கணக்காசிரியகளான பின்னால்தான் தமிழிலக்கணத்தைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டியிருந்தது.  அப்போது ஆங்கில நூல்களை இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக சமஸ்கிருதக் கலைச்சொற்களைப் படைத்துக் கற்பிக்க வேண்டும் என்ற கொள்கை நிலவியது.
 

கணிதத்தில் square (ஓர் எண்ணை அதைக் கொண்டே பெருக்கல்) மற்றும் அது போல
square root, cube, cube root ஆகியன எவ்வாறு  தறகாலத் தமிழகத்தில்
தமிழில் குறிப்பிடப்படுகின்றன ?

தேடிக் கொண்டிருக்கிறேன்.

Mani Manivannan

unread,
Sep 18, 2011, 3:49:03 PM9/18/11
to tamil_wi...@googlegroups.com


2011/9/18 Mani Manivannan <mmani...@gmail.com>


2011/9/18 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
 
கணிதத்தில் square (ஓர் எண்ணை அதைக் கொண்டே பெருக்கல்) மற்றும் அது போல
square root, cube, cube root ஆகியன எவ்வாறு  தறகாலத் தமிழகத்தில்
தமிழில் குறிப்பிடப்படுகின்றன ?
தேடிக் கொண்டிருக்கிறேன்.

எட்டாம் வகுப்புப் பாடநூலில் base என்பதை அடி என்றும் power என்பதை அடுக்கு அல்லது படி என்றும் சொல்லியிருக்கிறார்கள். (பகுதி 1.5, பக்கம் 19)


7^3 என்பதை ஏழின் படி மூன்று அல்லது ஏழின் முப்படி எனச் சொல்ல வேண்டும்.  7^2 என்பதை ஏழின் இருபடி என்று சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால், பகுதி 1.7ல் (பக்கம் 26 )  வர்க்கங்கள், வர்க்க மூலங்கள், கனங்கள், கன மூலங்கள் என்று squares, square-roots, cubes, cube-roots என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  இருபடி என்றும் சொல்லலாம் என்றும் குறித்திருக்கிறார்கள்.

ஆகக்கூடி, தமிழ்நாட்டில் இன்னும் வர்க்கங்கள் வருக்கங்கள் ஆகவில்லை!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

M.Mauran

unread,
Sep 19, 2011, 12:37:36 AM9/19/11
to tamil_wi...@googlegroups.com
இலங்கையில் பாடப்புத்தகங்களில் Power என்பதை வலு என்றும் அடுக்கு என்றும் பயன்படுத்துகிறார்கள்.

"இருபடி" என்ற சொல் வேறு பொருளைக்குறிக்கும் கலைச்சொல்லாகப் பயன்படுகிறது. "இருபடிச் சமன்பாடுகள்" என்று ஒரு கலைச்சொல் உண்டு.

வர்க்கம், வர்க்கமூலம், கனமூலம் என்ற சொற்கள் தான் இலங்கைப் பாடப்புத்தகங்களிலும் புழங்குகின்றன. (இலங்கையில் பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசினால் மட்டுமே வெளியிடப்படுகின்றன)



--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran




2011/9/19 Mani Manivannan <mmani...@gmail.com>
--

Raj

unread,
Sep 19, 2011, 1:55:37 AM9/19/11
to tamil_wi...@googlegroups.com
தமிழ் நாட்டு கலைச்சொல்லாக்குழுவின் கலைச்சொல் பேரகராதியில், volume - பருமன். என்று மொழிபெயர்க்கபட்டுள்ளது. எவ்வளவு பருமனாக உள்ளது. குண்டாக இருபதை பருமனாக இருக்கிறார் என்ற கூறப்படுகிறது. இது வழக்கில் உள்ள சொல் தானே. இதை பயன் படுத்தலாமா ?

2011/9/18 Mani Manivannan <mmani...@gmail.com>
--
Reply all
Reply to author
Forward
0 new messages