1. கணியம் - computer
2. வல்லியம் - Hardware
3. மெல்லியம் - Software
4. நிரலியம் - Program
5. பொதியம் - Package
6. வலையம் - Network
7. எலியம் - mouse
8. முன்னழி(க்க) - Delete
9. பின்னழி(க்க) - Backspace
10. முழுதழி(க்க) - Clear (all)
11. செய்யகம் - Window
12. செயலம் - Functional Unit
13. செயற்பாடு - Function
14. செயற்பாட்டியம் - Application
15. செயற்படுத்தலியம் - Utility
16. எழுத்துரு - Font
17. மூலவுரு - Source Font
18. இலக்குரு - Target Font
19. சீருரு - Unicode Font
20. சேமிக்க - Save
21. சேமிப்பு வகை - save as
22. நிகழ் - Processing
23. சொன்னிகழ் - Word Processor
24. எண்மின் - Digital
25. காணுலா - Browser
அன்புடன்
சி.கபிலன்
1. கணியம் - computer
2. வல்லியம் - Hardware
3. மெல்லியம் - Software
4. நிரலியம் - Program
5. பொதியம் - Package
6. வலையம் - Network
7. எலியம் - mouse
8. முன்னழி(க்க) - Delete
9. பின்னழி(க்க) - Backspace
10. முழுதழி(க்க) - Clear (all)
11. செய்யகம் - Window
12. செயலம் - Functional Unit
13. செயற்பாடு - Function
14. செயற்பாட்டியம் - Application
15. செயற்படுத்தலியம் - Utility
17. மூலவுரு - Source Font
18. இலக்குரு - Target Font
19. சீருரு - Unicode Font
22. நிகழ் - Processing
23. சொன்னிகழ் - Word Processor
24. எண்மின் - Digital
25. காணுலா - Browser
முதலில் எலியம் என்ற
சொல்லைப் பார்த்ததும்
"சுட்டி" இருக்கும் போது இது
எதற்கு எனத்தான் எனக்கும்
தோன்றியது.
பின்னர் Mouse ஐ சுட்டி
என்றால் Mouse pointer ஐ என்ன வென்று
சொல்வது...
சற்று யோசித்தப் போது
இலக்கண புத்தகத்தை
புரட்டிய போது,
"குன்றெழுந்து சென்றதெனக்
குளிர்கங்கைக் கரையணுகி"
என்ற வாசகம் இல்பொருளுவமை
அணிக்கு உதாரணமாக
கூறப்பட்டிருந்தது.
குன்றெழுந்து நடந்ததைப்
போல் பரதன் கங்கைக் கரையை
அடைந்தான் என்பது
இதன்பொருள். உலகில்
குன்றானது எழுந்து நடப்பது
இயலாதக் காரியம். ஆனால்
கம்பர் அதனை உதாரணமாகக்
காட்டியுள்ளார்.
நடக்காத ஒன்றை உதாரணமாகக்
காட்டுவது இல்பொருளுவமை
அணி. எலி போலவே இருக்கும் Mouse
ஐ எலியம் என்று இங்கே
கபிலர் கூறுகிறார்.
உவமைதான். ஏற்புடைய
ஒன்றுதான். Pointer என்பதற்கு
சுட்டி சாலப் பொருந்தும்.
எலியத்தின் சுட்டி - Mouse Pointer.
பத்துப்பாட்டில் ஒன்றானக்
குறிஞ்சிப் பாட்டெழுதி
தமிழுக்குப் பெருமை
சேர்த்தார் அன்றைய கபிலர்.
நமக்கு கிடைத்திருக்கும்
கபிலர் தமிழை நவீனப்
படுத்த உதவட்டும்..
வாழ்த்துக்கள்.
புழக்கத்திலுள்ள சொல்லை
மாற்ற வலிந்து, முயற்சி
செய்து வேண்டாம் என்பதே
எனது பரிந்துரையும். ஆனால்
எலியம் போன்ற சொற்களை
ஏற்கலாம். ஆரோக்கியமானதாக
இருக்கும்.