இதயம் - வேறு சொற்கள் உள்ளனவா

3,955 views
Skip to first unread message

Sivakumar

unread,
Mar 7, 2008, 8:56:28 AM3/7/08
to விக்சனரி
இதயம் - ஹ்ருதயம் என்பதன் திரிபா? இதயம் என்பதைக் குறிக்க வேறு
தமிழ்ச்சொற்கள் உள்ளனவா?

Kumaran Malli

unread,
Mar 7, 2008, 9:15:18 AM3/7/08
to tamil_wi...@googlegroups.com
நெஞ்சம் என்பது அதற்கு நேரான சொல் தானே?

M.Mauran | மு.மயூரன்

unread,
Mar 7, 2008, 10:03:12 AM3/7/08
to tamil_wi...@googlegroups.com
இதயம் என்ற சொல்லைப்பயன்படுத்த விரும்பாவிட்டால் நெஞ்சம் என்ற சொல்லைப்பயன்படுத்த முடியும். "ஈரமான இதயம்" போன்ற பாவனைகளுக்கு.
ஆனால் உயிரியல் சார்ந்த பயன்பாட்டுக்கு இந்த மாற்றுச்சொல் எவ்வளவு தூரம் பொருதமானதாக இருக்கும் என்று தெரியவில்லை.

-மு.மயூரன்

செல்வா

unread,
Mar 7, 2008, 10:27:11 AM3/7/08
to விக்சனரி


On Mar 7, 8:56 am, Sivakumar <sivakumar...@gmail.com> wrote:
> இதயம் - ஹ்ருதயம் என்பதன் திரிபா? இதயம் என்பதைக் குறிக்க வேறு
> தமிழ்ச்சொற்கள் உள்ளனவா?

தமிழில் பொதுவாக அறிந்த சொற்கள் நெஞ்சு, நெஞ்சாங்குலை, ஈரற்குலை. இது
தவிர * செப்பம் * என்றும் ஒரு சொல் உண்டு. ஈரல் என்ற சொல் பொதுவாக உடலில்
உள்ளுருப்புக்கான சொல் [கல்லீரல் = liver, மண்ணீரல் = spleen, வெள்ளீரல்
= நுரையீரல் = lung], ஆனால் ஈரற்குலை என்பது நெஞ்சாங்குலை எனப்படும்
இதயத்தைக் குறிக்கும். செப்பம் என்னும் சொல் பிங்கல நிகண்டில்
குறிபிடப்படும் சொல் (சிவப்பாக செப்பு போல் இருப்பதாலும், லப்-டப் என்று
ஒலிப்பதாலும், செப்புவதாலும், செப்பம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்).
நெஞ்சாங்குலையைப் பற்றிச் சொல்லும் பொழுது தமிழில் உள்ள கலைச்சொல்லாகிய
தேளை என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டும். தேளை என்றால் லப்-டப் என்று
ஒலிக்கும் செஞ்சாத்துடிப்பை (இதயத் துடிப்பை)க் குறிக்கும். தேளை என்பது
விட்டு விட்டு ஒலிக்கும் இதயத்துடிப்பைச் சுட்டும் அருமையான சுருக்கமான
கலைச்சொல். எடுத்தாள வேண்டியது நம்து கடமை.

செல்வா

Sivakumar

unread,
Mar 9, 2008, 1:42:42 AM3/9/08
to விக்சனரி
நெஞ்சு என்பதை நாம் chest என்பதற்கு இணையாக அல்லவா பயன்படுத்துகிறோம்.
எனவே நெஞ்சம் என்பதை இதயம் என புரிந்து கொள்தல் சற்று சிரமமே
எனக்கருதுகிறேன்.

On Mar 7, 7:15 pm, "Kumaran Malli" <kumaran.ma...@gmail.com> wrote:
> நெஞ்சம் என்பது அதற்கு நேரான சொல் தானே?
>

Sivakumar

unread,
Mar 9, 2008, 1:43:20 AM3/9/08
to விக்சனரி

விரிவான விளக்கத்திற்கு நன்றி செல்வா.

செல்வா

unread,
Mar 13, 2008, 10:25:58 AM3/13/08
to விக்சனரி
> நெஞ்சு என்பதை நாம் chest என்பதற்கு இணையாக அல்லவா பயன்படுத்துகிறோம்.
> எனவே நெஞ்சம் என்பதை இதயம் என புரிந்து கொள்தல் சற்று சிரமமே
> எனக்கருதுகிறேன்.

நெஞ்சு என்பது இதயம்தான். நெஞ்சு என்பது மார்பு (chest) என்பதனையும்
சுட்டும் என்பதும் உண்மை.
நெஞ்சாங்கூடு என்பது மார்புக்கூடு. இதயம் இருப்பதால் நெஞ்சு என்பது
chest என்பதையும்
குறிக்கும். நெஞ்சுவிடு தூது என்பது ஒரு நூல் (இங்கும் நெஞ்சு என்பது
நெஞ்சாங்குலை ஆகிய இதயத்தைக்
குறிக்கும்), நெஞ்செரிதல் என்றால் heartburn
என்று ஆங்கிலத்தில் சொல்லும் அதே பொருள்.
"நெஞ்சார வாழ்த்துகிறேன்" என்றால்
இதயம் நிறைந்து பொங்க வாழ்த்துகிறேன் என்று பொருள்.
நெஞ்சு வலி என்றால் மார்பு வலி என்றாலும், இதயத்தின் வலி
என்பதுதான் உட்பொருள். "chest pain" என்று கொள்வது உண்மை.
நெஞ்சு என்பது நெஞ்சாங்குலையையும், நெஞ்சுக்கூட்டையும்
குறிப்பதால், சற்று குழப்பம் தரவல்லது. ஆனால் நெஞ்சு என்பது
இதயம் என்பதில் ஐயம் இல்லை.

செல்வா
Reply all
Reply to author
Forward
0 new messages