| ஆங்கிலச் சொல் | நிகரான தமிழ்ச் சொல் |
| album | தொகுப்பு |
| algorithm | வழிமுறை |
| alphanumeric | எண்ணெழுத்து |
| animation | அசைவூட்டம் |
| anti virus | நச்சு நிரற் கொல்லி |
| application | செயலி |
| architecture | கட்டமைப்பு |
| archive | பெட்டகம் |
| audio | ஒலி |
| backspace | பின்னழிக்க, பின்வெளி |
| blog | வலைப்பதிவு |
| boot | தொடக்கு |
| browser | உலாவி |
| cache memory | பதுக்கு நினைவகம் |
| compact disc (CD) | இறுவட்டு |
| CD player | குறுவட்டு இயக்கி |
| character | வரியுரு |
| clear | துடை |
| click | சொடுக்கு |
| client | வாங்கி |
| code | நிரற்தொடர் |
| column | நிரல், நெடுவரிசை |
| configuration | அமைவடிவம் |
| console | முனையம் |
| cookie | நினைவி |
| copy | படி எடுக்க, படி (பெயர்ச்சொல்) |
| cordless | தொடுப்பில்லா |
| cut | வெட்டுக |
| cyber | மின்வெளி |
| data | தரவு |
| delete | அழிக்க |
| design | வடிவமைப்பு |
| digital | எண்முறை |
| discovery | கண்டறிதல் |
| driver | இயக்கி |
| edit | தொகுக்க |
| firewall | அரண் |
| floppy | நெகிழ்வட்டு |
| folder | உறை |
| format | வடிவூட்டம், வடிவூட்டு |
| function | செயற்பாடு |
| gallery | காட்சியகம் |
| graphics | வரைகலை |
| guest | வருனர் |
| home | முகப்பு, அகம் |
| homepage | வலையகம், வலைமனை |
| icon | படவுரு |
| information | தகவல் |
| interface | இடைமுகப்பு |
| interpreter | வரிமொழிமாற்றி |
| invention | கண்டுபிடிப்பு |
| IRC | இணையத் தொடர் அரட்டை |
| LAN | உள்ளகப் பிணையம் |
| license | உரிமம் |
| link | இணைப்பு, தொடுப்பு, சுட்டி |
| live cd | நிகழ் வட்டு |
| log in | புகுபதிகை, புகுபதி |
| log off | விடுபதிகை, விடுபதி |
| media player | ஊடக இயக்கி |
| menu | பட்டியல் |
| microphone | ஒலிவாங்கி |
| network | பிணையம், வலையம் |
| object | பொருள் |
| offline | இணைப்பறு |
| online | இணைப்பில் |
| package | பொதி |
| password | கடவுச்சொல் |
| paste | ஒட்டுக |
| patch | பொருத்து |
| plugin | சொருகு, சொருகி |
| pointer | சுட்டி |
| portal | வலை வாசல் |
| preferences | விருப்பத்தேர்வுகள் |
| preview | முன்தோற்றம் |
| processor | முறைவழியாக்கி |
| program | நிரல் |
| proprietary | தனியுரிம |
| RAM | நினைவகம் |
| refresh | மீளேற்று |
| redo | திரும்பச்செய்க |
| release | வெளியீடு |
| repository | களஞ்சியம் |
| row | நிரை, குறுக்குவரிசை |
| screensaver | திரைக்காப்பு |
| server | வழங்கி |
| shortcut | குறுக்குவழி |
| settings | அமைப்பு |
| shutdown | அணை |
| sign in | புகுபதிகை, புகுபதி |
| sign off | விடுபதிகை, விடுபதி |
| skin | ஆடை |
| space | வெளி, இடைவெளி |
| speaker | ஒலிபெருக்கி |
| spreadsheet | விரி தாள் |
| subtitle | உரைத்துணை, துணையுரை |
| system | கணினி |
| tab | தத்தல் |
| table | அட்டவணை |
| terminal | முனையம் |
| theme | கருத்தோற்றம், தோற்றக்கரு |
| thumbnail | சிறுபடம் |
| undo | திரும்பப்பெறுக |
| update | இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து |
| upgrade | மேம்படுத்து, மேம்படுத்தல் |
| URL | முகவரி |
| version | பதிப்பு |
| video | நிகழ் படம் |
| view | பார்க்க |
| virus | நச்சு நிரல் |
| volume | ஒலியளவு |
| wallpaper | மேசைப்பின்னணி |
| window | சாளரம் |
| wireless | கம்பியில்லா |
| wizard | வழிகாட்டி |
| worksheet | பணித் தாள் |
| குழுமத்தில் குறிப்பிடப்பட்ட ஆனால் மேலே உள்ள சொற்தொகுப்பில் வராத சொற்களுக்கு மேலதிகக் கலந்துரையாடல்கள் தேவைப்படுவதாக கருதலாம். | |
| குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary | |
| இணையத்தளம் : http://ta.wiktionary.org |
என்ன கேள்வி இது?
எவ்வளவு அழகான சொற்கள்!
;-)