பச்சைக்குத்துதல்

13 views
Skip to first unread message

HK Arun

unread,
Nov 27, 2009, 4:35:17 AM11/27/09
to விக்சனரி
“பச்சைக்குத்துதல்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை விக்கியில் எழுத
முயற்சித்தேன். அதற்கு முன்னதாக பச்சைக்குத்தும் கலையின் ஆரம்பம்
எங்கிருந்து தோன்றியது என்று பார்க்கையில் ஆங்கில விக்கிப்பீடியா
வேறுவிதமான ஒரு கருத்தைக்கொண்டுள்ளது.

ஆனால் என் கருத்தின்படி பச்சைக்குத்துதல் எனும் கலை தோற்றம் பெற்றது
திராவிடர் இனத்தில் இருந்தே எனும் புரிதலே எனக்குள்ளது. (தவறாகவும்
இருக்கலாம்)

எவ்விதப்படிப்பறிவும் இல்லாமல், எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் தலைமுறைத்
தலைமுறையாக பச்சைக்குத்தும் கலை திராவிடர்களுடையது என்பதே எனது துணிபு.
பொதுவாக பச்சைக்குத்துபவர்கள் நாடோடிகளாக வெவ்வேறு தேசங்கள் செல்வதால்
அக்கலை பன்னாடுகள் எங்கும் பரவியிருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே
உணர்கின்றேன்.

அன்மையில் சந்தித்த ஒரு ஐரோப்பியர் ஒருவர் தனது கையில் பச்சைக்
குத்தியிருந்தார். நாம் அதைப்பற்றி கேட்டப்பொழுது அவர் அதனை “இந்தியன்
இன்க்” என்று குறிப்பிடுவதாகக் கூறினார்.

இதுப்பற்றி அறிந்தோர் அதற்கான தரவுகளை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Nov 27, 2009, 6:00:08 AM11/27/09
to tamil_wi...@googlegroups.com
2009/11/27 HK Arun <hkt...@gmail.com>:
[..]

>
> அன்மையில் சந்தித்த ஒரு ஐரோப்பியர் ஒருவர் தனது கையில் பச்சைக்
> குத்தியிருந்தார். நாம் அதைப்பற்றி கேட்டப்பொழுது அவர் அதனை “இந்தியன்
> இன்க்” என்று குறிப்பிடுவதாகக் கூறினார்.
>
> இதுப்பற்றி அறிந்தோர் அதற்கான தரவுகளை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
>

http://en.wikipedia.org/wiki/India_ink கட்டுரை பார்க்கவும். தமிழில்
"மசி" எனப்பட்டதாம்

~சேது

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Nov 27, 2009, 6:11:09 AM11/27/09
to tamil_wi...@googlegroups.com
மசி சொல்லுக்கு தமிழ் இணையப் பல்கலைகழக தளத்தில் காட்டப்பட்டுள்ள பொருள்
விளக்கங்கள் :

http://www.tamilvu.org/slet/lA46J/lA46Jwrd.jsp?sno=45&wrd=

அதியன் வழி TAB --> Unicode மாற்றம் செய்யதபின் :

// -->

மசி - மஷி

மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல், கடைந்து களி

அல்லது கூழாக்குதல்.

மத்தி-மதி. மதித்தல்=மத்தினாற் கடைவதுபோற் கைவிரலாற் குழைத்தல்.

குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக.

மதி - மசி.மசித்தல் = குழைத்தல். மசிதல் = குழைதல்.

மசி - மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து

மசித்த (குழைத்த) வண்டி மை.

எழுது மையும் இங்ஙனமே வேறு பொருளை மசித்து அமைக்கப்

பெறும்.

"மசித்துமையை விள்ள வெழுதி" (பதினொ.திருவாலங். மூத்.2)

மசி = எழுது மை. "மசிகலந் தெழுதப்பட்ட" (சூளா.தூது.83)

மசிக்கூடு, மசிக்குப்பி என்பன உலக வழக்கு.

மசி - மயி - மை

கருநிறத்தைக் குறிக்கும் மை என்னும் சொல் வேறு. மால்-மா-மை.

வடவர் காட்டும் மூலம் மஷ் = சிதை, சேதப்படுத்து. மா. வி.அ.

இச் சொல்லின் கீழ், ("prob. invented to serve as the source of the

words below") என்று குறித்திருப்பது கவனிக்கத்தக்கது.

மஷி என்பது, மேலையாரிய வழியாய் வடமொழி பெற்ற தென்சொல்

திரிபுகளுள் ஒன்றாகும்.

OE. masc. E. mash. mess, Dan. mask, Sw. maska, Sc. mask,

MLG. mesch. MHG. meisch, G. maisch,.

<< //

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Nov 27, 2009, 6:23:16 AM11/27/09
to tamil_wi...@googlegroups.com
மசியல் (கறி) மசி என்ற வேர்ச் சொல்லில் இருந்தே வந்திருக்கும்.

Mascara என்பது இத்தாலிய maschera (= mask) என்பதில் இருந்து
ஆக்கப்பட்டச் சொல்லாம். http://en.wikipedia.org/wiki/Mascara .

அதாவது தமிழ் மசியிலிருந்தே அவைகள் பிற்காலத்தில் வந்துள்ளன என நாம் ஊகிக்கலாம்.

~சேது

HK Arun

unread,
Nov 30, 2009, 6:05:48 AM11/30/09
to tamil_wi...@googlegroups.com


பதிலுக்கு நன்றி சேது.

ஆங்கில விக்கிப்பீடியா சொல்லும் தகவல்களில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. அதனை தெளிவாக்கிக்கொள்ளவே கேட்டேன்.

பச்சைக்குத்தும் கலை திராவிடர்களிடம் இருந்து உலகெங்கும் பரவியதா?

இதன் ஆரம்பம்?

இதன் வரலாற்றுப் பின்னனி போன்றவைகள் தேவை.



Reply all
Reply to author
Forward
0 new messages