இணைய தமிழ் பேரகராதி( online tamil lexicon) --->உசா--> (திவா)?????

54 views
Skip to first unread message

தகவலுழவன்

unread,
Apr 6, 2008, 12:51:52 AM4/6/08
to விக்சனரி
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:2577.tamillex
இத்தொடுப்பில் வரும் [Spy; ஒற்றன். (திவா.)]....
திவா. என்பது எதனைக் குறிக்கிறது.?

இராமகி

unread,
Apr 6, 2008, 1:22:41 AM4/6/08
to விக்சனரி


On Apr 6, 9:51 am, தகவலுழவன் <tha.uzha...@gmail.com> wrote:
> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:2577.t...
> இத்தொடுப்பில் வரும்  [Spy; ஒற்றன். (திவா.)]....
>  திவா. என்பது எதனைக் குறிக்கிறது.?

அது திவாகரம் என்னும் நிகண்டில் வரும் பொருட்பாட்டைக் குறிக்கிறது.
நிகண்டு என்பது thesaurus. தமிழரிடம் நிகண்டுகளே முற்காலத்தில் பழக்கமாய்
இருந்தன. அகரமுதலி என்ற வரிசை முறையை தமிழுக்கு முதலில் அறிமுகப்
படுத்தியவர் சதுர் அகராதி படைத்த வீரமா முனிவர். இப்பொழுது நம்மில்
பலரும் அகரமுதலிகளையே நாடுகிறோம்; நிகண்டுகள் பார்ப்பது மிகமிக அரிதே.
தமிழ்நடையில் நேர்த்தி வேண்டுபவர்கள் நிகண்டுகளைத் தேடிப் பார்ப்பது
நல்லது.

இதுவரை கிடைத்துள்ள நிகண்டுகளில் பழமையானது. திவாகரம் (இது சேந்தன்
திவாகரம் என்றும் சொல்லப் பெறும்.) இதன் பழமையை 7ஆம் நூற்றாண்டில்
இருந்து 9ஆம் நூற்றாண்டு வரை சொல்லுவார்கள். இதற்கு அடுத்து வந்த பிங்கல
நிகண்டின் தோற்றத்தை 8-10 நூற்றாண்டுகள் என்று சொல்லுவார்கள்.

திவாகரத்தை (2 தொகுதிகள்) சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை
1990 பதிப்பித்திருக்கிறது. குறைந்த செலவில் (ரூ 75+ரூ110) வாங்கலாம்.
திவாகரம், பிங்கலம் என்ற இரண்டையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும்
பதித்திருக்கிறது. இவை போக, ஆறுமுக நாவலரால் எடுவிக்கப் (edit) பெற்ற, 14
ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூடாமணி நிகண்டையும் சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டிருக்கிறது.

இந்த மூன்று நிகண்டுகளுமே தமிழறிந்தோர் நாடிப் பார்க்கும்
நிகண்டுகள்.

அன்புடன்,
இராம.கி.

செல்வா

unread,
Apr 7, 2008, 10:13:20 AM4/7/08
to விக்சனரி
இராம.கி அவர்களே,

வணக்கம்.
நீங்கள் சொல்வதில் ஒரு சிறு திருத்தம் தெரிவிக்க விழைகிறேன்.
இரேவண சித்தர் என்பவர் வீரமாமுனிவருக்கு
200 ஆண்டுகளுக்கு முன்னரே அகராதி நிகண்டு என்று
ஒன்றை ஆக்கி, அதில் அகர வரிசையில்
12,000 சொற்களுக்கு பொருள் தரும் நூல் ஒன்று ஆக்கியுள்ளார்.
தமிழ் விக்கிப்பீடியாவில் கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கிப்
பாருங்கள்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF

இராம.கி நீங்கள் இயன்றபொழுது தமிழ் விக்கியில் அரு வாரத்திற்கு ஒரு 4
வரியாவது எழுதி
ஆக்கம் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
தங்களைப்போன்ற நல்லறிஞர்கள், நீங்கள் மற்ற நற்பணிகளுடன், தமிழ்
விக்கியாகிய அறிவுக்கோயிலுக்கு சிறிதளவாயினும் அறிவுக்கொடை நல்க வேண்டும்
என்பது
என் அவா.

அன்புடன்
செல்வா

இராமகி

unread,
Apr 7, 2008, 8:18:09 PM4/7/08
to விக்சனரி

நன்றி செல்வா,

இரேவணச் சித்தர் பற்றிய செய்தி எனக்குப் புதியது.

என் வலைப்பதிவிலேயே முடிக்காமல் விட்டிருக்கும் கட்டுரைத் தொடர்கள்
மிகுதியாய்க் கிடக்கின்றன. அதோடு, என் மனத்துள் எழுத நினைத்துள்ள
தலைப்புகளும் இருக்கின்றன. உத்தமம் செயற்குழு உறுப்பினருக்கு என்று
எடுத்துக் கொண்ட பணிகளும் இருக்கின்றன. அதையெல்லாம் முடிக்காமல், வேறு
எங்கும் நுழைவதை மனம் ஒப்பாமல் இருக்கிறது. எவ்வளவு நாள் தான் திருப்பதி
வேலை போல் தொட்டுத் தொட்டுக் கொண்டே போவது?......

எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.தமிழ் விக்கியில் பின்னொரு நாள் நுழைய
முயல்வேன்.

அன்புடன்,
இராம.கி.
On Apr 7, 7:13 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> இராம.கி அவர்களே,
>
> வணக்கம்.
> நீங்கள் சொல்வதில் ஒரு சிறு திருத்தம் தெரிவிக்க விழைகிறேன்.
> இரேவண சித்தர் என்பவர் வீரமாமுனிவருக்கு
> 200 ஆண்டுகளுக்கு முன்னரே அகராதி நிகண்டு என்று
> ஒன்றை ஆக்கி, அதில் அகர வரிசையில்
> 12,000 சொற்களுக்கு பொருள் தரும் நூல் ஒன்று ஆக்கியுள்ளார்.
>
> இராம.கி நீங்கள் இயன்றபொழுது தமிழ் விக்கியில் அரு வாரத்திற்கு ஒரு 4
> வரியாவது எழுதி
> ஆக்கம் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

K. Sethu

unread,
Apr 8, 2008, 1:28:49 AM4/8/08
to tamil_wi...@googlegroups.com
அன்புடையீர்

இது அகரமுதலிகளில் மெய்யெழுதின் அகர வரிசையைப் பற்றிய வினா.

என்னிடம் உள்ள AES பதிப்பகத்தின் விசுவநாத பிள்ளையின்
தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி மற்றும் சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி
ஆகிய இரண்டிலும் மெய் எழுத்து அதன் எல்லா உயிர்மெய்களுக்கும் பின்னராக
கடைசியில் வரும்மாறு வரிசைப்படுத்தல் அமைந்துள்ளன. காட்டாக அக்கம் என்பது
அ வின் பின் முதலில் க தொடங்கலாக அதன் பின் க வின் ஏனைய உயிர்மெய்கள்
வரிசைப்படி (அகக்கண்,...அகிலம்...அகோரம்) வரும் சொற்களைக் கடந்து பின்
வரும் அக்.. வரிசையில் இருக்கும்.

விசுவநாத பிள்ளை அகரமுதலி சென்ற நூற்றாண்டில் 1920 களில் எழுதப்பட்டது என
நினைக்கிறேன் ( இதை இடுகையில் அது கைவசம் இல்லையாதலால் நினைவின்
அடிப்படையிலான ஊகம்). சுராவின் அகரமுதலி 4-5 வருடங்கள் முன்னர்
பதிக்கப்பட்டது.

சென்னைப் பல்கலைகழக இணைய தமிழ் பேரகராதி( online tamil lexicon) இல்
முதலில் மெய் அதன் பின் அம்மெய்யின் உயிர்மெய்கள் என்ற வரிசையில் உள்ளன.

ஆனால் http://dsal.uchicago.edu/dictionaries/ வழியே பார்க்ககூடிய ஏனைய
இணைய அகரமுதலிகளான வப்பிரிசியசு, கதிரவேலுப்பிள்ளை, வின்சுலோ, மக்அல்பின்
ஆகியனவற்றில் மெய் அதன் எல்லா உயிர்மெய்கள் கடந்த பின்னரே வருகிற
வரிசையாக்கம் தான்.

சென்னைப் பல்கலைகழக இணைய தமிழ் பேரகராதியில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள
வரிசையாக்கம் தானே சரியானது?

சென்ற 2-3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பழைய அகரமுதலிகளில் மெய் அதன்
எல்லா உயிர் மெய்களினதும் பின் வரிசையாக்கப்பட்டது இலக்கணக்
காரணங்களுக்காகவா அல்லது ஏதாவது தொழிநுட்ப அவசியங்களினாலா?

~சேது

2008/4/8 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:

இராமகி

unread,
Apr 8, 2008, 2:57:50 AM4/8/08
to விக்சனரி
அது வடமொழித் தாக்கம். வடமொழி அகரமுதலிகளில் உயிர், உயிர்மெய், அப்புறமே
மெய் என்று வரும் காட்டாக அ, அகல்...அகுதை...அக்கரம் என்று வரும்.

ஆனால், தொல்காப்பியத்தின் வழியான தமிழ் நடைமுறையோ, அ, அக்கரம் ......
அகல் ....அகுதை...... என்று வரும்.

[இந்தச் சிக்கலுக்குள் தான் இன்றைக்கு நாம் பயிலும் முட்டாள்தனமான
ஒருங்குறிக் குறியேற்றமும் இருக்கிறது. இந்தக் குறியேற்றம் ஒரு தவறான
அடித்தளத்தில் கட்டப்பட்டது. அதாவது வடபுல முறையில் வைத்துக் கொண்டு
அபுகிடா என்று இல்லாத முறையை இனம் காட்டிக் கொண்டு இருக்கிறது. இது
பற்றிப் பல இடங்களில் சொல்லிவிட்டேன். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று
எல்லோரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவரும் இதைத் தூக்கியெறிய
முன்வரக் காணோம்.]

வட புலத்து வழக்கத்தின் படி அடிப்படையான எழுத்துக்கள் உயிரும், அகரமேறிய
உயிர்மெய்களும் மட்டுமே. மற்ற உயிர்மெய்களும், மெய்யும், அகரமேறிய
உயிர்மெய்யில் இருந்து பெறப்பட்ட வழி எழுத்துக்கள். (உங்கள் மெய்களைத்
தூக்கி இந்துமாக் கடலிற் போடுங்கள். அதற்குப் பெயர் dead consonant ஆம்.
ஏற்கனவே உயிர் உள்ள ககரத்திற்குள் இன்னொரு உயிரை ஏற்றினால், சூ
மந்திரக்காளி என்று ககரம் போய்விடுமாம், இன்னொரு உயிர் மெய்
வந்துவிடுமாம். ஒரு மெய்க்குள் இரண்டு உயிர் எப்படி ஐயா இருக்க முடியும்?
இது என்ன பேயா, பிசாசா? ஒரு மெய்க்குள் ஒரு உயிர் என்பதுதானே இயற்கை?
என்ன செய்வது? தமிழை இவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று
ஓய்ந்துவிட்டேன்.)

தமிழ் முறைப்படி அடிப்படை எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், மெய்
எழுத்துக்கள், அப்புறமே உயிர்மெய் எழுத்துக்கள். எல்லா எழுத்துக்களையும்
மதித்து, உயிர்மெய் எழுத்துக்களுக்கு உள்ள சரியான இடத்தையும் விளக்கித்
தெளிவாகவே தொல்காப்பியரும், அவருக்கு உரை செய்த இளம்பூரணரும்
தெரிவிக்கிறார்கள். இளம்பூரணர் உரை பெரிதும் படிக்கவேண்டிய ஒன்று. என்ன
ஒரு தெளிவான சிந்தனை? இன்றையக் குறியேற்றக்காரர்களுக்குமாகச் சேர்த்து
அவர் எழுத்ததிகார உரை எழுதியிருக்கிறார். இதுபற்றி, "தொல்காப்பியமும்,
குறியேற்றங்களும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். என்
வலைப்பதிவில் அந்தத் தொடர் இருக்கிறது.

நம் மரபை ஒதுக்கி, வடமொழி மரபை 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பேணியதால்
தான் மணிப்பவள நடையே பெருகியது. அகராதிகளும் அப்படியே எழுந்தன. இந்தத்
தமிழ் மரபு என்னும் விழிப்பே இருபதாம் நூற்றாண்டில், மறைமலை அடிகளார்க்கு
அப்புறம் தான் எழுந்தது. ஒரு 60, 70 ஆண்டுகளில் தமிழ்நடையும், மரபுகளும்
பெரிதும் மீட்கப் பட்டன. இப்பொழுது மீண்டும் ஆங்கிலத் தாக்கத்தில் அதைத்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தமிங்கிலம் வெள்ளமாய்ப் பெருகிக்
கொண்டிருக்கிறது. ஜோதிர்லதா கிரிஜா என்ற எழுத்தாளியம்மா, g, s, d, dh, b
என்ற எழுத்தெல்லாம் அகரவரிசைக்குள் கொண்டுவாருங்கள் என்று திண்ணையில்
சொல்லிவிட்டார். 22 ஆம் நூற்றாண்டு அகரமுதலிகளில் அதுவும் சேர்ந்து
வரக்கூடுமோ, என்னவோ?.

வேறு வழியில்லை; ,இன்னொரு மறைமலை அடிகளார் வரவேண்டும் :-)

நான் அரசியலைப் பேசவில்லை.

அன்புடன்,
இராம.கி.

On Apr 8, 10:28 am, "K. Sethu" <skh...@gmail.com> wrote:
> அன்புடையீர்
>
> இது அகரமுதலிகளில் மெய்யெழுதின் அகர வரிசையைப் பற்றிய வினா.
>
> என்னிடம் உள்ள AES பதிப்பகத்தின் விசுவநாத பிள்ளையின்
> தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி மற்றும் சுராவின்  தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி
> ஆகிய இரண்டிலும் மெய் எழுத்து அதன் எல்லா உயிர்மெய்களுக்கும் பின்னராக
> கடைசியில் வரும்மாறு வரிசைப்படுத்தல் அமைந்துள்ளன. காட்டாக அக்கம் என்பது
> அ வின் பின் முதலில் க தொடங்கலாக அதன் பின் க வின் ஏனைய  உயிர்மெய்கள்
> வரிசைப்படி (அகக்கண்,...அகிலம்...அகோரம்) வரும் சொற்களைக் கடந்து பின்
> வரும் அக்.. வரிசையில் இருக்கும்.
>
> விசுவநாத பிள்ளை அகரமுதலி சென்ற நூற்றாண்டில் 1920 களில் எழுதப்பட்டது என
> நினைக்கிறேன் ( இதை இடுகையில் அது கைவசம் இல்லையாதலால் நினைவின்
> அடிப்படையிலான ஊகம்). சுராவின் அகரமுதலி 4-5 வருடங்கள் முன்னர்
> பதிக்கப்பட்டது.
>
> சென்னைப் பல்கலைகழக இணைய தமிழ் பேரகராதி( online tamil lexicon) இல்
> முதலில் மெய் அதன் பின் அம்மெய்யின் உயிர்மெய்கள் என்ற வரிசையில் உள்ளன.
>
> ஆனால்http://dsal.uchicago.edu/dictionaries/வழியே பார்க்ககூடிய ஏனைய

K. Sethu

unread,
Apr 8, 2008, 5:58:23 AM4/8/08
to tamil_wi...@googlegroups.com
அன்புள்ள இராமகி

தங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி. தங்கள் கருத்துக்கள் பலவற்றுடன்
உடன்படுகிறேன். சிலவற்றில் (ஒருங்குறி தொடர்பாக) சற்று வேறுபாடுகளும்
உண்டு. அவற்றைப்பற்றி விரைவில் இங்கு எழுதுவேன். தற்போது மேலதிகமாக ஒரு
வினா.

//


அது வடமொழித் தாக்கம். வடமொழி அகரமுதலிகளில் உயிர், உயிர்மெய், அப்புறமே
மெய் என்று வரும் காட்டாக அ, அகல்...அகுதை...அக்கரம் என்று வரும்.
ஆனால், தொல்காப்பியத்தின் வழியான தமிழ் நடைமுறையோ, அ, அக்கரம் ......அகல்
....அகுதை...... என்று வரும்.

//

உயிரும் அற்ற மெய்யும் அற்ற ஆய்த எழுத்து உயிர், மெய், உயிர்மெய் என்ற
வரிசையில் எங்கிருக்க வேண்டும்?

~சேது

இராமகி

unread,
Apr 8, 2008, 6:20:29 AM4/8/08
to விக்சனரி
உயிருக்கு அடுத்து மெய்க்கு முன்னால் ஆய்தம் வரவேண்டும். அப்படித்தான்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
இருக்கிறது.

காட்டாக

அ....அஃகம்...... அக்கரம்...அகல்......அகுதை....

அன்புடன்,
இராம.கி..

On Apr 8, 2:58 pm, "K. Sethu" <skh...@gmail.com> wrote:
> அன்புள்ள இராமகி
>
> தங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி. தங்கள் கருத்துக்கள் பலவற்றுடன்
> உடன்படுகிறேன். சிலவற்றில் (ஒருங்குறி தொடர்பாக) சற்று வேறுபாடுகளும்
> உண்டு. அவற்றைப்பற்றி விரைவில் இங்கு எழுதுவேன். தற்போது மேலதிகமாக ஒரு
> வினா.

Ravishankar

unread,
Apr 8, 2008, 7:10:55 AM4/8/08
to tamil_wi...@googlegroups.com
இராம. கி சுட்டிய கிரிசாவின் கட்டுரை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20804032&format=html

இதைத் தினமணியில் வேறு வெளியிட்டு இருக்கிறார்கள். புல்லரிக்கிறது !!!

ரவி

செல்வா

unread,
Apr 8, 2008, 11:09:33 AM4/8/08
to விக்சனரி
அன்புள்ள இராம.கி.

நீங்கள் அரும்பணி ஆற்றி வருகின்றீர்கள்.
நேரம் இருக்காது, வகுத்து நிற்கும் பல பணிகள்
முன்மை பெற்று இருக்கும் என்பதை நன்கு அறிவேன்.
நீங்கள் மேலே இட்ட இரு மறுமொழிகள் அளவு,
ஒரு மாதத்தில் இரண்டே இரண்டு முறை ஐந்தே
ஐந்து வரிகளாவது எழுத வேண்டும் என்பதை
நான் அன்புடன் உங்கள் முன் வைக்கின்றேன்.

அதிகம் எழுத வேண்டாம். ஒரு மாதத்திற்கு இரண்டு
அல்லது ஒரு சிறு 5-வரிக் கட்டுரையாவது எழுதுங்கள்.
சிறுதுளி பெருவெள்ளம். உங்களைப்போலும்,
கணேசன், குமார் குமரப்பன், இளங்கோவன்,
என்று இன்னும் பலரும் வந்து ஆளுக்கு
ஒரு 5-வரிக் கட்டுரை எழுதினாலும் நல்லாக்கம்
பெறுமே. வரலாற்றில் நற்பதிவாய் நிற்குமே
என்று நினைக்கின்றேன். உங்கள் முடிவு எதுவாயினும்
நான் மதிப்பேன்.

அன்புடன்
செல்வா

செல்வா

unread,
Apr 8, 2008, 11:18:38 AM4/8/08
to விக்சனரி

வேறு வழியில்லை; ,இன்னொரு மறைமலை அடிகளார் வரவேண்டும் :-)

ஆம். மறைமலை அடிகளும், தேவநேயப்பாவாணர்களும் வரத்தான் வேண்டும்.
அவர்களும் தங்களின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான
உயிர்ப்படியெடுத்து வருதல் வேண்டும்!

தமிழில் இப்படி அவ்வப்பொழுது பல நல்லறிஞர்கள் தோன்றி
தமிழ்மொழியின் உள்ளார்ந்த, ஆழ் உண்மைகளை
வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள்! வழிவழியாய்
இந்த நல்லறிவு வளர்ச்சி நடக்கும் எனத் திண்ணமாய்
நம்புகின்றேன். தமிழைச் சீரழிக்க ஆயிரம் பேர்
தோன்றினாலும், கூடவே தமிழின் உள்நேர்த்தியால்
உள்ளுணர்ந்தவர்கள் தோன்றி சிதைவைத்
தடுத்து மேலும் மேலும் வளர்த்தெடுப்பர். அது நல்ல
தமிழர்களின் கடமை. இது உண்மைக்கு உழைப்பதாகும்.

அன்புடன்
செல்வா



> ...
>
> read more »

செல்வா

unread,
Apr 8, 2008, 11:34:45 AM4/8/08
to விக்சனரி


On Apr 8, 7:10 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> இராம. கி சுட்டிய கிரிசாவின் கட்டுரை
>
> http://www.thinnai.com/?module=displaystory&story_id=20804032&format=...
>
> இதைத் தினமணியில் வேறு வெளியிட்டு இருக்கிறார்கள். புல்லரிக்கிறது !!!
>
> ரவி

ரவி, நம்புவீர்களோ, மாட்டீர்களோ, 'கிரி'சா அவர்கள் சொன்ன
அதே கருத்தை, இப்படிச் சொல்வார்கள் தமிழர்களில் சிலர் என்று
முன்பு பேராசிரியர் 'சார்'ச் 'ஆர்ட் அவர்களுடன் தமிழ் நெட்டில்
உரையாடிய காலத்தில் கூறியிருந்தேன்.

சரியான இணைப்பைக் கிடைத்தவுடன் தருகின்றேன்.

கீழ்க்காணும் இணைப்புகளை ஒட்டித்தான் அந்த உரையாடலும் நிகழ்ந்தது.
'ஆர்ட் அவர்கள் எழுதியதையும் இதனுடன் இணைக்கிறேன்.

என் பரிந்துரை (அந்நாளில்):
http://www.infitt.org/tscii/archives/msg00187.html

பேரா 'ஆர்ட்டின் மறுமொழி:
http://www.infitt.org/tscii/archives/msg00199.html

என் மறுமொழி:
http://www.infitt.org/tscii/archives/msg00188.html

அக்காலத்திய உரையாடல்களைப் பார்க்க
(அக்காலத்தில் சு'சாத்தா ("சுஜாதா")வும் சிறிதளவு
பங்கு கொண்டார்):
http://www.infitt.org/tscii/archives/maillist.html

வி. சு.

unread,
Apr 11, 2008, 11:25:49 AM4/11/08
to விக்சனரி
On Apr 8, 4:10 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> இராம. கி சுட்டிய கிரிசாவின் கட்டுரை
>
> http://www.thinnai.com/?module=displaystory&story_id=20804032&format=...

வேண்டுமளவு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இவ்வாறு
உருவாக்கும் மொழியைத் "தமிழ்" என்று சொல்லிக் கொள்ள வேண்டாம்.

:)

Reply all
Reply to author
Forward
0 new messages