இணைச்சொற்கள் உருவாக்க அமைப்பு குறித்த கருத்தோட்டம்

125 views
Skip to first unread message

thagaval uzhavan

unread,
May 16, 2009, 3:58:44 AM5/16/09
to tamil_wi...@googlegroups.com
ஓங்குக தமிழ் வளம்!

இதனூடே அனைவரையும் சந்திப்பதிலே மகிழ்ச்சி. தமிழின் சிறப்புகளுள் இணைச்சொல் பயன்பாடு, தனித்துவம் கொண்டது.

இணைச்சொல் என்று  இங்கு நான் குறிப்பிடுவது, ஒரு சொல்லுக்குச் சமமான மற்றொரு சொல் என்பதல்ல.எப்பொழுதும் இணைத்தேப் பயன்படுத்தப்படும் இரட்டைச் சொற்களை தான்.

http://ta.wiktionary.org/wiki/இணைச்சொல்

நாம் அதுப்பற்றி சரிவர உணராதிருந்த போதும், அப்பயன்பாடு நம்மிடையே இன்றளவும் வாழ்கிறது.

http://ta.wikipedia.org/wiki/இணைச்சொல்_அகராதி.

இணைச்சொற்கள் பல இருப்பினும், 

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கே ஒரேஒரு சொல்லைப்பற்றி ஆய்வோம்.
அக்கம்பக்கம் என்பது ஒரு இணைச்சொல்.
பல திரையிசைப் பாடல்களில், அது பயன்படுத்தப்படுகிறது.
(எ.கா)
அக்கம்பக்கம் பார்க்காதே;ஆளைக்கண்டு மிரளாதே..
அக்கம்பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்..(கிரீடம்)
அக்கம்பக்கம் பாருடா சின்னராசா..(உன்னால் முடியும் தம்பி)
 
அக்கம், ஆக்கம் என்ற அடுத்தடுத்துள்ள இரண்டுச் சொற்களை,  'அக்கம்ஆக்கம்' என இணைச்சொற்களாகப்  பயன் படுத்துவதில்லை.
அக்கம், பக்கம்  என்ற இரு வேறுபட்ட இரண்டுச் சொற்களை,  'அக்கம்பக்கம்' என இணைச்சொற்களாக, ஒருங்கேப் பயன்படுத்துவதே சிறப்பு.
அக்கம்பக்கம் என்ற சொல் எத்தகைய பொருட்களைத் தன்னகத்தே உடையது என்பதனை, இத்தொடுப்பின் மூலம் அறியலாம்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


தங்களின் கருத்துக்களை அறிய அச்சொல்லின் மூலத்தையும், மற்ற குறிப்பிட தகுந்த மூலப்பக்கங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன்.

இவைகளை ஒப்பிட்டறிந்து, தகுந்த கருத்தாக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

 

உங்கள் செவ்வியக் கருத்துக்கள், இணைச்சொற்களை உருவாக்கும் என்பங்களிப்பினை மேம்படுத்துமென நம்புகிறேன்.

 

இவண்,

தகவலுழவன்.
pair word 1.JPG
pair word 2.jpg
pair word 3.JPG

ravid...@googlemail.com

unread,
Jun 9, 2009, 11:13:46 PM6/9/09
to tamil_wi...@googlegroups.com
தகவல் உழவன்.

நல்ல முயற்சி. தொடருங்கள். தமிழ் விக்சனரியில் தொடர்ந்து நீங்கள் ஆற்றி வரும் சீரிய பங்களிப்புக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரவி
Reply all
Reply to author
Forward
0 new messages