ஐகாரம் மற்றும் ஔகார உயிர்கள் மற்றும் உயிர்மெய்களுக்கு உயிரளபெடை எவ்வாறு ?

49 views
Skip to first unread message

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Nov 1, 2010, 2:26:55 AM11/1/10
to tamil_wi...@googlegroups.com
பார்க்க

http://ta.wikipedia.org/wiki/உயிரளபெடை

அதிலிருந்து :
//
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு
மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
உயிர் + அளபெடை = உயிரளபெடை
மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ
-நன்னூல்
எ.கா:
1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை
//

நெட்டெழுத்துகள் ஏழும் எனக் கூறப்படுவதால் ஐகாரம் மற்றும் ஔகாரம் உயிர்
எழுத்துக்களுக்கும் உயிரளபெடைகள் உள்ளனவா? எவ்வாறு?

"ஐஐ" அல்லது "ஐஇ" ?

"ஔஔ" அல்லது "ஔஉ" ?

மேலும் ஐகாரம் அல்லது ஔகாரம் ஏறிய உயிர்மெய்களுக்கு உயிரளபெடைகள் இருக்க
இயலுமா? உயிர்மெய்களில் அவை குறுக்கம் அடைந்த குற்றெழுத்துக்கள்தானே?

மேற்குறிப்பிட்டவைக்கு (உயிர் மற்றும் உயிர்மெய் ஆக வருகையில்) காட்டுகள் உள்ளனவா?

இதுவரை ஆக்கியுள்ள எ-கலப்பை-3.0 இன் phonetic (தமிங்கிலம்) விசைமாற்றி
பயன்படுத்துகையில் தொடர்ச்சியாக தட்டச்சிட்டு அத்தகைய ஐகார, ஔகார
உயிரளபெடைகளை ஆக்க இயலாது (நெடிலுக்குப் பின் இடைவெளி இட்டு குறில் இட்டு
இடைவெளியை அகற்ற வேண்டியுள்ளது) - தேவைகளைப் பொருத்து பின்னர் வரும்
மேம்பாட்டில் வசதியாக இடுவதற்கு வழியை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் இவ்
வினாக்கள்.

~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages