format, webcam, remote control, subtitle, dvd, drive, USB, URL, cache, tab, online, offline, plugin, cable, mother board,

96 views
Skip to first unread message

ravishankar...@gmail.com

unread,
Oct 12, 2006, 5:19:29 AM10/12/06
to விக்சனரி
பின்வரும் சொற்களுக்கு
இணையான தமிழ்ச்சொற்கள்
தேவை. ஆங்கிலச்
சொற்களுக்கு இணையாகவும்
சுருக்கமாகவும் இருந்தால்
நன்று.

1. format - as in format the hard disk?
2. format - as in text formatting?
3. webcam - இணையப்படக் கருவி? (இதை
விடச் சுருக்கமாக ஏதேனும்
சொல் உண்டா?)
4. remote control - தொலை இயக்கி?
5. subtitle - துணையெழுத்து?
6. dvd - ?
7. drive - as in hard drive, CD drive, floppy drive.
8. USB - ?
9. URL - ? (உரல் என்பது வழக்கில்
இருந்தாலும் அது எந்தளவு
பொருத்தம் எனத்
தெரியவில்லை).
10. cache - ?
11. tab -?
12. online - ?
13. offline - ?
14. plugin - ?
15. theme - as in firefox theme?
16. screensaver - திரைநிரப்பி?
17. wallpaper - திரையொட்டி?
18. skin - ? (தோல் literal translation போல்
உள்ளது)
19. portal - வலைவாசல்?

ஓரளவுக்கு கருத்தொத்த
மறுமொழிகள் வந்தால் அவற்றை
விக்சனரியில்
சேர்க்கிறேன். இனிவரும்
மடல்களிலும் இது போல்
குறிச் சொற்களை மடல்
பொருளில் தந்தால்
குழுமத்தில் தொகுப்புகளாக
மடல்களைப்
படிப்பவர்களுக்கு எளிதில்
மடல்களை இனங்காண உதவும்.

ரவி

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 12, 2006, 6:26:58 AM10/12/06
to tamil_wi...@googlegroups.com
1. format - as in format the hard disk?

வடிவூட்டம்  (வன்தட்டிலிருக்கும் கந்தசமிக்ஞைகளை வடிவூட்டுகிறோம் அல்லவா?)

2. format - as in text formatting?

ஆஹ்...  வடிவூட்டம் என்பதையே இதற்கும் பயன்படுத்தலாம் போலிருக்கே?

3. webcam - இணையப்படக் கருவி? (இதை
விடச் சுருக்கமாக ஏதேனும்
சொல் உண்டா?)

வலைப்படக்கருவி எனலாம். ஆனால் நல்ல சொல்லொன்று தேவை. இது நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கு

4. remote control - தொலை இயக்கி?

ம்ம்  தொலை இயக்கி

5. subtitle - துணையெழுத்து?

துணை உரை

தேவையான இடங்களில் "உரைத்துணை" என பயன்படுத்தும்போது அழகாக இருக்கும்.
(எடுத்துக்காட்டாக,  புகழ்பெற்ற இந்த ஈரானிய திரைப்படம், ஆங்கில உரைத்துணையோடு இறுவட்டாக்கப்பட்டிருக்கிறது)

6. dvd - ?

DVD

7. drive - as in hard drive, CD drive, floppy drive.

இயக்கி

8. USB - ?

?

9. URL - ? (உரல் என்பது வழக்கில்
இருந்தாலும் அது எந்தளவு
பொருத்தம் எனத்
தெரியவில்லை).

உரலாவது உலக்கையாவது
சுட்டி என்பது நன்றாக இருக்கில்லையா?

10. cache - ?

 
இலங்கை அரசின் கலைச்சொல் அகரமுதலி , cache memmory என்பதற்கு பதுக்கு நினைவகம் என்கிறது.
சிவத்தம்பி போன்றவர்களின் மொழிபெயர்ப்பு.

11. tab -?

தத்தல்


12. online - ?

இணைப்பில்

13. offline - ?

இணைப்பிலில்லை

14. plugin - ?

பொருத்து 

15. theme - as in firefox theme?

?

16. screensaver - திரைநிரப்பி?

திரைக்காப்பு

17. wallpaper - திரையொட்டி?

பின்னணி / திரைப்பின்னணி

18. skin - ? (தோல் literal translation போல்
உள்ளது)

ha ha ha கட்டாயம் வேறு நல்ல சொல் தேட வேண்டும்

19. portal - வலைவாசல்?

ம்ம்..  !  விக்கிபீடியாவில் அழகாக பயன்படுத்துகிறோமே. நல்ல சொல்.

ஓரளவுக்கு கருத்தொத்த
மறுமொழிகள் வந்தால் அவற்றை
விக்சனரியில்
சேர்க்கிறேன். இனிவரும்
மடல்களிலும் இது போல்
குறிச் சொற்களை மடல்
பொருளில் தந்தால்
குழுமத்தில் தொகுப்புகளாக
மடல்களைப்
படிப்பவர்களுக்கு எளிதில்
மடல்களை இனங்காண உதவும்.

புரியவில்லை எனக்கு.

ரவி


தோழமையுடன்

மு..மயூரன்
 

http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com

amachu

unread,
Oct 12, 2006, 1:38:43 PM10/12/06
to விக்சனரி
screensaver - இச்சொல் பயனர்(user)
ஒருவர் தமது
மேசைத்தளத்தை(Desktop)
கவனக்குறைவால்
பாதுகாக்காமல் விட்டு
விடக்கூடாது என்பதற்காக
உருவாக்கப் பட்டுகின்ற
மென்பொருளைக்(software) குறிக்க
உதவுகிறது.

"திரை"யிடுதல் எனும் சொல்லே
ஒன்றை மறைக்க குறிக்கிறது.
உ.ம்: "சன்னலுக்கு திரையிடு"
மேலும் நாடகக் காட்சிகள்
மாறும்போது "திரையிடுவது"
மேடையை மறைக்க உதவுகிறது.
மார்கழி மாதம், பனியால்
காலை வேலையில் எதும்
சரியாக தெரியாத போது
"மூடுபனி", "பனித்திரை" போன்ற
பதங்கள் பிரயோகப் படுத்தப்
படுகின்றன.

ஒரு பொருளை மற்றவரின்
பார்வையிலிருந்து மறைக்க/
பாதுகாக்க "திரை" பயன்
படுத்தப் படுகிறது. இங்கே
நாம் பயனரின் மேசையை
மற்றவரிடமிருந்து மறைக்க/
பாதுகாக்க முற்படுகிறோம்.

இங்கே நாம்
மேசைத்தளத்திற்கு
திரையிடப் போகிறோம். "திரை"
என்கிற வார்த்தையே
போதுமானதாய்த்
தோன்றுகிறது.

கமல் ரசிகரொருவருக்காக
உருவாக்கப் பட்ட "திரை" -
கமல் திரை. அத்திரையை
விலக்கினால் பயனரின் மேசை
தெரிகிறது. கேட்கவும்
எளிமையாக உள்ளதன்றோ!

Screensaver - திரை
-------------------------------------------------------------------

amachu

unread,
Oct 12, 2006, 1:52:11 PM10/12/06
to விக்சனரி
பயனரின் மேசையை
அலங்கரிக்கும் படம் Wallpaper.

Wallpaper - மேசைப் படம்
------------------------------------------------------------------

amachu

unread,
Oct 12, 2006, 2:19:12 PM10/12/06
to விக்சனரி
URL - Universal Resource Locater. உலக
இணையத்தில் (Network) தளங்களை (Site)
கண்டுபிடிக்க/ சுட்ட
உதவுவது..

URL - இணையுலக சுட்டி (இஉசு)

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 12, 2006, 2:29:27 PM10/12/06
to tamil_wi...@googlegroups.com

Before the proliferation of LCD screens, most computer screens depended on cathode ray tubes (CRTs). Images on a CRT monitor are generated using electron beams which are emitted from electron guns at the back of the tube, and manipulated by electromagnetic fields to form images line-by-line on the phosphorescent screen many times per second. In some situations the images displayed on the screen constantly change, but in other cases some areas of the screen, or the screen as a whole, change very little (the taskbar in Microsoft Windows , for example). When the same image is displayed on a CRT screen for long periods of time, the properties of the exposed areas of phosphor coating on the inside of the screen gradually and permanently change, eventually leading to a darkened shadow or "ghost" image on the screen. Televisions, oscilloscopes and other devices that use CRTs are all susceptible to phosphor burn-in, as are plasma displays to some extent.

Screensaver programs were originally designed to help avoid these effects by automatically changing the images on the screen when the computer was not in use (thus "saving" the screen). They can be usually set up to launch automatically, waiting a specified amount of time after the last keystroke or the last mouse movement made by a user. The screensaver then blanks the screen, or more commonly produces animation effects, thus avoiding any "fixed" images. The screensaver remains active until a user presses a key or makes a mouse movement. At that moment, the screensaver closes and the former screen contents are restored, allowing the user to work again.

- http://en.wikipedia.org/wiki/Screen_saver

திரை என்ற சொல் screen என்பதற்கும் வருகிறது.
screening - திரையிடல்
screen capture - திரையை படம்பிடித்தல்

screen saver, அன்று கணினித்திரையை காப்பதற்காக பயன்பட்டது. இன்று lcd யுகத்திலும் அது பயனர் திரையை காக்க பயன்படுகிறது.

"திரைக்காப்பு"  இதற்கு பொருத்தமான நல்ல சொல்.

திரை எனும்போது அர்த்தமே மாறுபட்டு விடுகிறது.



wallpaper ஐ பொறுத்தவரை, முன்பு சுவர்க்காகிதம் என்று பயன்படுத்தினர். தவறென்றில்லை.  முன்னோடிகள் அக்காலத்தில் உருவாக்கிய சொ ல் அது. ஆனால் நேரடி மொழிபெயர்ப்பாகி விளக்கப்போதாமையையும் கொண்டிருக்கிறது.

உண்மையில் அது படம் அல்ல. முழு படமாக அதனை பயன்படுத்துவதில்லை. மேசையின் படம் என்ற அர்த்தமும் வந்துவிடக்கூடாது.  wallpaper இற்கு தெர்வுசெய்யப்படும் காட்சிகள், தனித்துவமானவையாக, பெரிய வெளியை கொண்டவையாக தெரிவுசெய்யப்படுகின்றன. உண்மையில் கொழுவி வைக்கப்படும் படம்போலவோ அல்லது மேசையில் நிமிர்த்தி வைக்கப்படும் படம் போலவோ அல்லாது, இதன் தொழிற்பாடு "பின்னணியாக" இயங்குவதே.

இதனாலேயே "மேசைப்பின்னணி" என்ற சொல்லை பரிந்துரைத்திருந்தேன்.


-மு.மயூரன்
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com

Ravishankar

unread,
Oct 12, 2006, 3:48:31 PM10/12/06
to tamil_wi...@googlegroups.com
6. dvd என்பது file format என்று ஆங்கில விக்கிபீடியாவில் இருக்கிறது. அப்படியென்றால், தமிழிலும் டிவிடி என்றே கொள்ளலாம். தமிழாக்கத் தேவையில்லை.
 
9. சுட்டி, இணைப்பு, தொடுப்பு ஆகிய அனைத்தும் link என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், URLக்கும் அதைப் பயன்படுத்துவதால் குழப்பம் வரலாம். இணைய உலக சுட்டி அல்லது இஉசு என்பதும் நீட்டி முழக்குவதோவோ எளிதில் வாயில் நுழையாததாகவோ உள்ளது. மாற்றுச் சொல்லை யோசிக்கலாம். http அல்லாத முகவரிகளும் url எனக் குறிப்பிடப்படுமானால், இணைய உலக சுட்டி பொருந்தாது. தற்போதைக்கு, முகவரி என்றே urlஐ சுருக்கமாக அழைக்கலாமே. web address = வலை / இணைய முகவரி
 
13.offline message என்பதற்கு இணையாக தமிழில் ஒரு பெயர்ச்சொல் வேண்டும். எப்படி சொல்வது?
 
14.plugin என்ற பெயர்ச்சொல்லுக்கு தமிழ்ச்சொல் என்ன? பொருதி???
 
16. screensaver - மயூரன் உங்கள் விளக்கமும் பரிந்துரையும் நன்று.  அமாச்சு, திரை என்பது பல இடங்களிலும் பயன்படும் சொல்லாக இருக்கிறது. இந்த இடத்திலும் பயன்படுத்தினால் குழப்பம் வரலாம்.
 
17. wallpaper - wallposter சுவரொட்டி என்றால் கணினித் திரையில் உள்ள wallpaper திரையொட்டி என்று பரிந்துரைத்தேன். திரைப்பின்னணிகளை பதிவிறக்கவும் என்று சொல்வதை விட திரையொட்டிகளை பதிவிறக்கவும் என்று சொல்ல நன்றாக இருப்பது போல் இருக்கிறது..இருந்தாலும் பிறர் கருத்துகளையும் அறிய விரும்புகிறேன்.
 
18. skin - விரிப்பு? மேசை விரிப்பு போல், ஒரு மென்பொருள் இடைமுகப்பின் தோற்றத்தை மாற்ற உதவுவதால் இதை விரிப்பு எனக் கூறலாமா?
 
மயூரன், பொருள் அறிய விரும்பும் சொற்களை post / mail subject lineல் குறிப்பிடலாம் என்று தான் போன மடலின் இறுதியில் சொல்லி இருந்தேன்.
 
பிற நண்பர்களுக்கு,
நீங்கள் அறிந்த பிற இணையக்குழுக்களிலும் இக்கலைச்சொல்லாக்க குழு குறித்து அறிவித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்த சொற்பட்டியல்கள், கோப்புகளை எனக்கு அனுப்பி வைத்தால், விக்சனரியில் ஏற்ற உதவியாக இருக்கும்.
 
நன்றி,
ரவி

 
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com


Ravishankar,
Ph.D Researcher,
CML-IE
P.O.Box 9518
2300 RA Leiden
The Netherlands

Contact number: +31 71 5275557 (Lab) or +31 630 888998 (mobile) or +31 71 8909129 (home)

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 12, 2006, 4:08:14 PM10/12/06
to tamil_wi...@googlegroups.com
9. சுட்டி, இணைப்பு, தொடுப்பு ஆகிய அனைத்தும் link என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், URLக்கும் அதைப் பயன்படுத்துவதால் குழப்பம் வரலாம். இணைய உலக சுட்டி அல்லது இஉசு என்பதும் நீட்டி முழக்குவதோவோ எளிதில் வாயில் நுழையாததாகவோ உள்ளது. மாற்றுச் சொல்லை யோசிக்கலாம். http அல்லாத முகவரிகளும் url எனக் குறிப்பிடப்படுமானால், இணைய உலக சுட்டி பொருந்தாது. தற்போதைக்கு, முகவரி என்றே urlஐ சுருக்கமாக அழைக்கலாமே. web address = வலை / இணைய முகவரி


முகவரி என்ற சொல் தன்னகத்தே இந்ந்த எல்லா அர்த்தத்தையும் கொண்டிருக்கிறது. முகவரி என்றே பயன்படுத்தலாம்.

link இற்கு இணைப்பு என்று பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  அது தொடுப்பு தான். இணைப்பு என்றால் joint என்பதுபோன்று அர்த்தப்படும்.

13.offline message என்பதற்கு இணையாக தமிழில் ஒரு பெயர்ச்சொல் வேண்டும். எப்படி சொல்வது?

யோசிக்கவேண்டிய விடயம்

14.plugin என்ற பெயர்ச்சொல்லுக்கு தமிழ்ச்சொல் என்ன? பொருதி???

பொருத்து!  (பெயர்ச்சொல்)

பொருத்துறுப்பு என்றும் சொல்லலாமா?

 

17. wallpaper - wallposter சுவரொட்டி என்றால் கணினித் திரையில் உள்ள wallpaper திரையொட்டி என்று பரிந்துரைத்தேன். திரைப்பின்னணிகளை பதிவிறக்கவும் என்று சொல்வதை விட திரையொட்டிகளை பதிவிறக்கவும் என்று சொல்ல நன்றாக இருப்பது போல் இருக்கிறது..இருந்தாலும் பிறர் கருத்துகளையும் அறிய விரும்புகிறேன்.

 நான்  மேசைப்பின்னணி என்ற சொல்லையே பரிந்ந்துரைக்கிறேன்.

மேசைப்பின்னணிகளை தரவிறக்குக. மேசைப்பின்னணியை மாற்றுக. புதிய மேசைப்பின்னணிகள் கிடைப்பிலுள்ளன.
திரை என்றாலே screen என்பதாகிவிடுகிறது.

18. skin - விரிப்பு? மேசை விரிப்பு போல், ஒரு மென்பொருள் இடைமுகப்பின் தோற்றத்தை மாற்ற உதவுவதால் இதை விரிப்பு எனக் கூறலாமா?

நல்லதொரு சிந்ந்தனை. புதிய கோணத்தில் பார்க்கிறீர்கள்.
விரிப்பு என்ற சொல்லில் தகவல் போதாமலிருப்பதாய் படுகிறது. ஆனால் இந்ந்த கோணத்தில் சிந்ந்தித்தல் நல்லது.


மயூரன், பொருள் அறிய விரும்பும் சொற்களை post / mail subject lineல் குறிப்பிடலாம் என்று தான் போன மடலின் இறுதியில் சொல்லி இருந்தேன்.

ம்ம்.. ஆகட்டும் சார்.

பிற நண்பர்களுக்கு,
நீங்கள் அறிந்த பிற இணையக்குழுக்களிலும் இக்கலைச்சொல்லாக்க குழு குறித்து அறிவித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்த சொற்பட்டியல்கள், கோப்புகளை எனக்கு அனுப்பி வைத்தால், விக்சனரியில் ஏற்ற உதவியாக இருக்கும்.

முகுந்த் இங்கே இருக்கிறாரா?

நான் நூலகம் குழுவுக்கு அறிவித்துவிட்டேன்.
ரவி நீங்கள் தமிழ் மணத்திற்கு ஒரு அழைப்பு பதிவு போடுங்கள்.


தோழமையுடன்
மு.மயூரன்

Ravishankar

unread,
Oct 12, 2006, 6:17:23 PM10/12/06
to tamil_wi...@googlegroups.com
9. //link இற்கு இணைப்பு என்று பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  அது தொடுப்பு தான். இணைப்பு என்றால் joint என்பதுபோன்று அர்த்தப்படும்//
 
மீயிணைப்புகளால் (hyperlinks) ஆனது இணையம் என்ற பொருளில் இணைப்புகள் என்னும் சொல் links என்பதற்கு இணையாக ஆளப்படுகிறது. விக்கிபீடியாவிலும் வலைப்பதிவுகளிலும் இந்த பயன்பாடு உள்ளது.  இது சரியான சொல் இல்லை என்னும் பட்சத்தில் சுட்டி என்னும் சொல்லை பிரபலப்படுத்தலாம்.
 
14. பொருத்து என்பதை பெயர்ச்சொல்லாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இதுவரை நான் இதை பெயர்ச்சொல்லாக அறிந்ததில்லை. பொருத்துறுப்பு என்பது நீளமான பெயராக இருக்கிறது. அன்றாட வாழ்வில் புழங்க வல்ல நுட்பச் சொற்களை இயன்ற அளவு சுருக்கமாக கொள்வது அவற்றை பிரபலப்படுத்த உதவும்.
 
17. மேசைப்பின்னணி என்று கொண்டால் மடிக்கணினியின் wallpaperக்கு என்ன சொல்வது? மடிக்கணினியில் மேசை வராது அல்லவா? வெறும் பின்னணி என்று கொண்டாலும், பின்னணியை பதிவிறக்கு என்று சொன்னால் தெளிவற்று இருக்கும்..???
 
முகுந்த இந்தக் குழுவில் இருக்கிறார்..விக்சனரியின் தேவையை பல காலமாக வலியுறுத்தி வருபவர்.. இது குறித்து தமிழா வலைப்பதிவில் முன்னரே எழுதி இருக்கிறார்..அண்மையில் ராமதாசிடம் இத்தேவையை வலியுறுத்திச் சொன்னவரும் அவரே..அவருடைய தொடர்புகளுக்கு நிச்சயம் இம்மடலாடற்குழு குறித்து அறியத்தருவார் என நினைக்கிறேன்..
 
இந்த முயற்சியின் வெற்றி, இதன் துவக்கத்தில் இல்லை..தொடர்ச்சியில் தான் இருக்கிறது. தற்போது உள்ள பயனர் பின்னணியை கருத்தில் கொண்டு கணினி, தொலைத்தொடர்பு நுட்பம் குறித்த கலைச்சொல் உரையாடல்களை மட்டும் மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். வேறு துறைகளிலும் உரையாட உங்களுக்கு ஆர்வமும் பின்புலமும் இருந்தாலும் அறியத்தாருங்கள். சுற்றுச்சூழல், உயிரியல் ஆகிய துறைகளில் உரையாட எனக்கு விருப்பமும் தேவையும் உள்ளது. எனினும், இத்துறையில் ஆர்வமுள்ள குறைந்தபட்ச பயனர்களாவது உள்ள வரை இது குறித்து உரையாட விரும்பவில்லை. துறை சார் பயனர்கள் அதிகரிக்கும்போது, tamil_wiktionary_biology tamil_wiktionary_geography என்பது போல் துணை மடலாடற்குழுக்களை தொடங்கலாம் என நினைக்கிறேன்..ஆனால், அதற்கு நிறைய காலம் உள்ளது.
 
இக்குழுவில் சேரும் நண்பர்கள், இம்மடல்களை அவ்வப்போது இம்மடலாடற்குழுவுக்கான இணையத்தளத்தில் வந்து படித்துச் செல்வது கூடப் பயன் விளைவிப்பதாய் இருக்கும். எனவே, பங்களிப்பு விருப்பம் இல்லாத உங்கள் நண்பர்களை கூட இக்குழுவில் சேருமாறு அழைக்கலாம் என வேண்டுகிறேன்.

ஸ்ரீ ராமதாஸ்

unread,
Oct 12, 2006, 10:21:14 PM10/12/06
to tamil_wi...@googlegroups.com
பயனரொருவர் தானாக முன்வந்து மேசையை  மூடுங்கால்/ காக்குங்கால் மேசையை  அவர் பூட்டுகிறார் அல்லது காக்கின்றார்.

இதனை Lock என அழைக்கிறோம். பின்னர் பூட்டிய/ திரையிடப்பட்ட/ காக்கப்பட்ட (either through screen saver or by Lock mechanism) மேசையை கடவுச் சொல்/ நுழைவுச் சொல் (password) கொண்டு திறக்கிறார்/ விலக்குகிறார். lock என்பதற்கு பூட்டு/ காப்பு போன்ற பதங்கள் பயன்படுத்தப் படலாமா? Unlock என்பதற்கு திறக்க/ விலக்க முதலிய பதங்கள் பயன்படுத்தப்படலாமா?

Background எனும் சொல் Open office போன்ற applications (தமிழ் சொல் என்ன?) ல் பயன் படுத்தப் படுகின்றது.

Background க்கு பின்னணி என்ற சொல்லே உசிதம். ஒரு சொல் வழக்கத்திற்கு தகுந்தாற் போல் தமது பொருளை மாற்றிக் கொள்வது இயல்பாக காணக் கூடிய ஒன்றே.

மேசை தளம் என்கிற சொல் Desktop/Laptop என்பதை மறந்து காணும் கணினித் திரையைக் குறிக்க உதவட்டும். பழக்கத்தில் சரி யாகி விடும்.

"மேசைப்பின்னணி" யும் பயன்படுத்தலாம்.
--
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be downloaded from here.

ஸ்ரீ ராமதாஸ்

unread,
Oct 12, 2006, 11:52:41 PM10/12/06
to tamil_wi...@googlegroups.com
Dr Venkat ஐத் தெரியுமா?

அவர் தற்சமயம் எங்கிருக்கிறார்?

அவரது பங்களிப்பு அளப்பரியதாய்த் தெரிகிறது...

அதேப் போல் ஜயராதா!

அவரை, ஜயராதாவை இக்குழுவில் இணைக்க முடியுமா?

Muguntharaj Subramanian

unread,
Oct 13, 2006, 12:40:05 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com
அன்பின் ராமதாஸ்,
இரண்டு பேரும் தமிழ்லினக்ஸ் குழுவிலி இருக்கிறார்கள். அன்மையில் கூட ஜெயராதாவின் மடல் ஒன்றை தமிழ்லினக்ஸ் குழுவில் பார்த்தேன்.
அனேகமாக அவர்களுக்கு இக் குழு இருப்பது தெரிந்திருக்கலாம்.

-முகுந்த்
--
Mugunth

http://mugunth.blogspot.com
http://thamizha.com
http://tamilblogs.com


--
http://webspace2host.com
"Your friendly hosting provider"

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 13, 2006, 2:59:47 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com
தனியாக உபுண்டுவுக்கென்று நாம் இயங்குவதால் அவர்கள் இணைந்ந்துகொள்ள விரும்புவார்களோ தெரியவில்லை.
அவர்கள் தமிழினிக்சில் இருக்கிறார்கள்.

எமது உரையாடல்களின் நாளாந்ந்த தொகுப்பினை தமிழினிக்சுக்கு அனுப்பிவைக்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா?


அவ்வாறு செய்வது மிகவும் நல்லது. தமிழ் லினக்ஸ் நடவடிக்கைகளை கலந்ந்துரையாடுவதற்கு மையப்படுத்தப்பட்ட குழு அது தானே?


-மு.மயூரன்

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 13, 2006, 3:02:32 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com

மன்னிக்கவும்.
இது உபுண்டு தமிழ் குழு என்று நினைத்து பதில் அனுப்பிவிட்டேன்.
விக்சனரி குழுவில் அவர்களை இணைப்பது சாத்தியம்.

வெங்கட் இப்போது வலைப்பதிவுகளிலும் காணக்கிடைப்பதில்லை, நேரமின்மை அவருக்கு பிரச்சனையாக இருக்கக்கூடும்.
ஜெயராதாவை கேட்டுப்பார்க்கலாம்.

க்னோம் மொழிபெயர்ப்பு வேலைகளில் இன்னும் சிலரும் தீவிரமாக இயங்குகிறார்கள். அவர்களையும் கேட்டுப்பார்க்கலாம்.

ரவி தமிழ்லினிக்சுக்கு அழைப்பு அனுப்பியதாக சொன்னார்.

-மு.மயூரன்

ம.ராமதாஸ்

unread,
Oct 13, 2006, 3:10:06 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com
I am thinking this is for Tamil wikitionary.
 
and to create common words. Tamil Wikitionary is common right?
 
And Mauran, based on the discussions here, u/ ravi can decide words every Sunday and update the Ubuntu mailing list about the words and their equivalent Tamil words.
 
And to wikitionary also these words will be added and hence forth be used in common.
 
Ubuntu Translators will follow that words in Translating work.
 
Likwise persons in this group contributing to other versions of GNU/ Linux like Mandriva, Fedora etc., will update their respective groups about your/ ravi's Sunday update.
 
This will help achieving common goals.
 
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be downloaded from http://www.tamilnation.org/fonts/latha.ttf

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 13, 2006, 8:48:21 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com
//and to create common words. Tamil Wikitionary is common right?//

நிச்சயமாக.  நான்தான் மாறி விளங்கிக்கொண்டு பதில் அனுப்பி குழப்பினேன். ;-)

உங்கள் பரிந்ந்துரை பிரயோசனமானது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும். அந்ந்த வாரம் தொகுக்கப்பட்ட சொற்களை ஒரு மடலாக தொகுத்து அனுப்பலாம். பிரயோசனமானதே.

வாராந்ந்த சொற் தொகுப்பை இந்ந்த மடற்குழுவிலேயே தனி மடலாக இடலாம்.
இந்ந்த குழுவிலுள்ள ஏனைய குழுக்களை சேர்ந்ந்தவர்கள் அந்ந்த மடலை தத்தமது குழுக்களுக்கு முன்செலுத்திவிடலாமில்லையா/

நான் உபுண்டு தமிழ் குழுவில் இருப்பதால் உபுண்டு தமிழ் குழுவிற்கு அதனை முன்செலுத்திவிடுகிறேன்.



நன்றி.

-மு.மயூரன்

Ravishankar

unread,
Oct 13, 2006, 9:18:57 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com
மயூரன், ராமதாஸ்,
 
சொற் பட்டியல்களை நாம் சார்ந்துள்ள குழுக்களுக்கு அனுப்பி வைப்பது நல்ல யோசனை. ஒருவரே எல்லா குழுக்களுக்கும் அனுப்பாமல் அவரவர் சார்ந்துள்ள குழுக்களுக்கு அனுப்புவது சிறந்தது. அதனால், உங்கள் மடலுக்கு அதிக மதிப்பும் வாசிப்பும் கிடைக்கும். அறிமுகமில்லாதவர் அனுப்பினால், எரிதமாகி விடவும் வாய்ப்புண்டு. சொற்பட்டியல்களை தொகுத்து இங்கும், விக்சனரியிலும் விக்கிபீடியாவிலும் தருவது என் பொறுப்பு.
 
கிழமை தோறும் அனுப்பாமல் மாதந்தோறும் சொற்பட்டியல்களை தொகுப்பது என வைத்துக்கொள்ளலாம். இங்கு உள்ள பலரும் தொழில்முறையிலும் பிற குழுக்களிலும் முனைப்பாக உள்ளவர்கள். கிழமை தோறும் அனுப்புவது வசதிக்குறைவாக இருக்கும். மாதந்தோறும் என்றால் நிறைய சொற்களை ஒரே பட்டியலில் அனுப்பலாம்.
 
தவிர, தனிச் சொற்பட்டியல்களை உருவாக்ககுவதுடன் நம் பணி முடிந்துவிடுவதில்லை. விக்கிபீடியா, வலைப்பதிவுகள் போன்ற பல தமிழ் ஊடகங்களிலும் இச்சொற்களை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுதல் நன்று. தனிச்சொற்களாக யாரும் இவற்றை கற்று நினைவில் வைக்க முடியாது. சொற்புழக்கம் அதிகரிக்கும்போது தான் சொற்கள் நினைவில் நிற்கும்.
 
நன்றி,
ரவி

Ravishankar

unread,
Oct 13, 2006, 9:27:11 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com
ராமதாஸ்,
 
* பூட்டு x திற  = lock x unlock என்று வைத்துக்கொள்ளலாம். பொதுமக்கள் வழக்கில் எளிய சொல்லாகவும் இருக்கும். காப்பு என்பதும் பொருந்தும் என்றாலும் எளிய சொற்களை முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தலாம். இது நுட்பச் சொற்களை பிரபலப்படுத்த உதவும்.
 
* applications = செயலிகள்
 
15. theme - as in firefox theme - என்பதற்கு காட்சியுரு என்று சொல்லலாமா? எழுத்துரு, வார்ப்புரு வரிசையில் இதுவும் புரிந்துகொள்ளவும் பயன்பாட்டுக்கும் எளிமையாய் இருக்கும். themeகளை கொண்டு காட்சியமைப்புகளை தான் மாற்றுகிறோம் என்பதால் இப்படி சொல்கிறோம். ubuntuவில் ocean theme என்று ஒன்று உள்ளதாக நினைவு..அதை கடற்கரை காட்சியுரு என்று சொல்லிப் பார்த்தால் நன்றாக இருக்கிறது
 
18. skin - skinகள் இடைமுகப்பின் தோற்றம்,அளவு ஆகியவற்றை மாற்றுகின்றன. அது போல் விரிப்புகளும் வெவ்வேறு தோற்றங்களில், அளவுகளில் (மடித்தோ விரித்தோ) கிடைக்கும். இதனால் விரிப்புகள் என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. தவிர, இது புரிந்து கொள்ள எளிமையான பயன்பாட்டில் உள்ள சொல்.
 
ரவி
 

ஸ்ரீ ராமதாஸ்

unread,
Oct 13, 2006, 10:14:09 AM10/13/06
to tamil_wi...@googlegroups.com
சமீபத்தில் அலுவகத்தில் நடந்த சுவையான சம்பவத்தோடு துவங்குகிறேன். அமேரிக்க நிறுவனத்திற்கு Outsourcing செய்வதால் அமேரிக்கர்களுடன் பணி குறித்த தகவல் பரிமாற்ற சந்திப்புகள் அடிக்கடி நடப்பது உண்டு.

அப்படி ஒருமுறை எமது அணியில் (Team) உள்ள நண்பர், Client(?) டம்  பேசும்போது "இது குறித்து பின்னர் தெரியப் படுத்துகிறோம்" என்று சொல்வதற்கு "We will intimate you later" என சொன்னார். அமேரிக்கருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஆங்கிலம் தெரிந்தவருக்கு ஏன் இந்த கதி என்று நாங்கள் வியந்திருந்த சமயம்,  எங்கள் Onsite ப்ரதிநிதி messenger ல், "intimate" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அது அமேரிக்கர்கள் மத்தியில் "அந்தரங்கத்தை" குறிக்கப் பயன் படுத்தப் படுகின்றது எனவும் குறிப்பிட்டார். அடடா! இப்படிக் கூட இதற்கு பொருள் உண்டா என வியந்து "We will let you know later" எனக் கூறிய பின்னர் Clientம் நாங்களும் சேர்ந்து பெருமூச்சு விட்டோம். ;-)

மற்றுமொரு சம்பவம், நிறுவனத்தில் பயிற்சி காலத்தில் ஆங்கிலப் பயிற்சி அளிக்க ஒரு பெண் வந்தார். இவர் அமேரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற்சமயம் இந்தியாவில் Corporatesகளில் ஆங்கிலப் பயிற்சி அளித்து வருகிறார். கல்லூரி நாட்களில் மிகச் சாதாரணமாக பெண் பேராசிரியைகளை Mam எனவும் Madam எனவும் அழைப்பது சகஜம்.

அதை வைத்து இப் பயிற்சியாளரை முதல் நாளிலேயே ஒரு நண்பர் Madam எனக் கூறினார். அப்பயிற்சியாளர் அதிர்ந்து போய், நான் உங்களுக்குக் கற்றுத் தரும் முதல் பாடம் இதுதான். தயவு செய்து ஒரு அமேரிக்கப் பெண்மணியை Madam என அழைக்காதீர்கள். அமேரிக்காவில் வளர்ந்தவள் எனும் முறையில் சொல்கிறேன்.

அமேரிக்காவில் Madam எனும் சொல் விலை  மாதரைக் குறிக்க சகஜமாகப் பயன்படுத்தப் படுகிறது என்றதும் வகுப்பே ஆடிப் போனது. அதன் பின்னர் இன்று வரை எந்தப் பெண்ணையும் Madam என அழைத்ததாக ஞாபகமில்லை. :-(

தொடர்கிறேன்...

amachu

unread,
Oct 13, 2006, 10:31:35 PM10/13/06
to விக்சனரி
11. tab

மயூரன் சொன்னது போல்
தத்தல் பொருத்தாமாய்
தோன்றுகிறது. ஆனால் "தத்து"
"தத்தல்" போன்றவை tabஐ விட
Spaceக்கு கச்சிதமாய்
பொருந்துவதாய் படுகிறது.

tab க்கு "தாவு" "தாவுதல்"
பயன்படுத்தலாமா... யாஹூ ID
உருவாக்கும் போது நாம்
தாவித் தாவித் தானே
ஒவ்வொரு field(?)க்கும்
போகிறோம். தாவ நாம்
பிரயோகிக்கும் key(?) Tab.

Space - தத்து/ தத்தல்
Tab - தாவு/ தாண்டு/ தாவல்

amachu

unread,
Oct 13, 2006, 10:38:57 PM10/13/06
to விக்சனரி
18. skin

வெளித்தோற்றத்தை
ப்ரதிபலிக்க உதவுகிறது.
வண்ணத்துப் பூச்சியின்
வேறுபாட்டினை அதன் வர்ணம்
ப்ரதிபலிக்கிறது.

பச்சோந்தி இடத்துக்கு
தகுந்தாற் போல் தன்
வர்ணத்தை மாற்றிக்
கொள்கிறது.

வர்ணங்கள் அழகிய
வேறுபாட்டினைக் குறிக்க
உதவலாமா..

skin - வர்ணம் , color - நிறம்

amachu

unread,
Oct 13, 2006, 10:46:44 PM10/13/06
to விக்சனரி
5. Sub Title

பள்ளி நாட்களில் தலைப்பு,
துணைத் தலைப்பு இரண்டும்
தான் தமிழ் கட்டுரைகளில்
பார்த்துள்ளேன்.

ஆனால் தொழில் நுட்பக்
கையேடுகளில் Heading, Title, Sub-Title
போன்றவை பயன் படுத்தப்
படுகிறது.

"வாசகம்" என்கிற சொல்
வாக்கியம் என்ற பொருள்
பட்டாலும் அங்ஙனம்
அதிகமாய் பயன் படுத்தப்
படவில்லை.

Heading - தலைப்பு

சொற்றொடர் - Sentence
Statement - வாக்கியம்

Title - வாசகம்
Sub-Title - இணைவாசகம் அல்லது
துணைவாசகம்

amachu

unread,
Oct 14, 2006, 4:35:18 AM10/14/06
to விக்சனரி
link - சேர்க்க, இணைக்க
உதவுவதைக் குறிக்கிறது.

தொடர்பு என்று கூட
அர்த்தம் கொள்ளப்
படுகிறது.

பல லட்சம் வருடங்களுக்கு
ராமேஸ்வரத்துக்கும்
இலங்கைக்கும் இடையே
போடப்பட்ட "பாலம்" NASA
செயற்கைகோள்களால் படம்
பிடிக்கப் பட்டுள்ளது.

சென்னையில், நேப்பியர்
பாலம், அண்ணா மேம்பாலம்
பிரபலம். ஆற்றின் இரு
கரைகளை இணைக்க குறுக்கே
பாலம் போடப் படுகிறது.

"பாலம்" எனும் சொல் இணைப்பை
உள்வாங்கி நிற்கிறது.

link - பாலம்

hyper-link, hyper-threading, hyper-physics, hyper-tension
இப்படி hyper எனும் சொல் பல
இடங்களில் கையாளப்
படுகிறது. இந்த வார்த்தையை
தமிழுக்கு வரவேற்றால்
பயனுடையதாய் இருக்கும்.
மேலும் உச்சரிப்பதில்
வழக்கதில் உள்ள "சைபர்" போல்
உள்ளதால் விகாரமாய்த்
தோன்றாது. பழக்கப்
பட்டுவிடும்.

hyperlink - ஹைபர்பாலம்/
ஹைபர்இணைப்பு

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 14, 2006, 9:19:07 AM10/14/06
to tamil_wi...@googlegroups.com
பாலம் -bridge.

bridge என்பது பரவலாக பயன்படுத்தப்படும் ஆங்கில நுட்பியல் பதம்.
எனவே link இனை பாலம் என்பதில் குழப்பங்கள் எழும்.

hyper ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு புழக்கத்திலுள்ளது.

மீயிணைப்பு - hyperlink
மீத்தொழிநுட்பம் - hyper tech
மீயுரை -hypertext
மீயியற்பியல் - hyper-phy
மீயழுத்தம் -hyper - tension


-மு.மயூரன்


drtv

unread,
Oct 17, 2006, 5:47:23 AM10/17/06
to விக்சனரி

ravishankar...@gmail.com wrote:

>
> 1. format - ஒழுங்கு படுத்தல்
> 2. format - வகை படுத்தல்
> 3. webcam - வலை காமிரா (எல்லாருக்கும் புரியும்)


> 4. remote control - தொலை இயக்கி

> 5. subtitle - துணையெழுத்து?

> 6. dvd - டிவிடி
> 7. drive - as in hard drive,வன் வட்டு CD drive,குறுந் தட்டு இயக்கி floppy drive நெகிழ் தட்டு இயக்கி
> 8. USB - யுஎஸ்பி
> 9. URL - யுஆர்எல்
> 10. cache - இடையகம்
> 11. tab - in browser கீற்று in others தத்தல்


> 12. online - ?
> 13. offline - ?

> 14. plugin - சொருகி


> 15. theme - as in firefox theme?

> 16. screensaver - திரைகாப்பி
> 17. wallpaper - திரைச் சித்திரம்
> 18. skin - ஆடை


> 19. portal - வலைவாசல்

திவா

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 17, 2006, 6:02:21 AM10/17/06
to tamil_wi...@googlegroups.com
On 10/17/06, drtv <agni...@gmail.com> wrote:

ravishankar...@gmail.com wrote:

>
> 1. format - ஒழுங்கு படுத்தல்
> 2. format - வகை படுத்தல்

வடிவூட்டம் என்றசொல் பொருத்தமானதாக எனக்கு படுகிறது

> 3. webcam - வலை காமிரா (எல்லாருக்கும் புரியும்)

வலைப்படக்கருவி  தமிழாக இருக்கிறது

> 4. remote control - தொலை இயக்கி

சரி

> 5. subtitle - துணையெழுத்து?

எழுத்து? இல்லையே? ராமதாச் சொன்னதுமாதிரி துணைவாசகம் நன்றாக இருக்கிறது. நான் துணை உரை என பரிந்துரைத்தேன். இரண்டையும் சூழலை பொறுத்து பயன்படுத்தலாம்

> 6. dvd - டிவிடி

ம்ம்.. வேறு வழியில்லை

> 7. drive - as in hard drive,வன் வட்டு CD drive,குறுந் தட்டு இயக்கி floppy drive நெகிழ் தட்டு இயக்கி

ஆம். இயக்கி

> 8. USB - யுஎஸ்பி

இப்போதைக்கு

> 9. URL - யுஆர்எல்

சுட்டி அல்லது வலைச்சுட்டி

> 10. cache - இடையகம்

இடையகம் என்றால்?
விரைவகம், பதுக்ககம் இரண்டு சொற்கள் உண்டு. இரண்டும் சில சில இடங்களில் பொருந்திவருகிறது. விரைவகம் எனது பரிந்துரை.  தொழிநுட்ப தேவைகருதி பதுக்ககம் என்ற சொல்லை பயன்படுத்தலாம்.

> 11. tab -  in browser கீற்று in others தத்தல்

நல்லது

> 12. online - ?

இணைப்பில்

> 13. offline - ?

இணைப்பறு நிலை, இணைப்பிலில்லை

> 14. plugin - சொருகி

பொருத்து / பொருத்துறுப்பு (பெயர்ச்சொற்கள்)
வன்பொருளாக இருந்தால் செருகுறுப்பு/சொருகுறுப்பு எனலாம்

> 15. theme - as in firefox theme?

தோற்றக்கரு/ கருத்தோற்றம்

> 16. screensaver - திரைகாப்பி

ha ha ha
திரைக்காப்பு

> 17. wallpaper - திரைச் சித்திரம்

எனது ஓட்டு மேசைப்பின்னணிக்கே.

> 18. skin - ஆடை

ம்ம்ம்ம்ம்... நல்ல பரிந்துரை (மேலும் விவாதிக்கலாம்)

> 19. portal - வலைவாசல்

சரி



-மு.மயூரன்


திவா

amachu

unread,
Oct 18, 2006, 5:33:28 PM10/18/06
to விக்சனரி
14. plugin -

இடையில் / அதித வசதிகள்
வேண்டி சேர்க்கப் படுகின்ற
பொதிகள் இவ்வாறு அழைக்கப்
படுகிறது. Real Player Ogg Vorbis Plugin, Rythmbox
gstreamer plugin etc.,

சாதாரணமாக
இலக்கியங்கிகளில் "இடைச்
செருகள்கள்" பற்றி
கேட்டிருப்போம்.
திருமந்திரத்தில் இடைச்
செருகள்கள் இருப்பதாய்
படித்ததுண்டு.

Plugin - செருகு, Plugins - செருகள்கள்

12. Online - நிஜத்தில்

13. Offline - நிழலில்

njaanavettiyaan

unread,
Oct 18, 2006, 9:24:27 PM10/18/06
to tamil_wi...@googlegroups.com
"செருகள்" இல்லை. அது "செருகல்"
ஞானவெட்டியான்

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 18, 2006, 10:17:41 PM10/18/06
to tamil_wi...@googlegroups.com
On 10/19/06, amachu <shrira...@gmail.com> wrote:
14. plugin -

இடையில் / அதித வசதிகள்
வேண்டி சேர்க்கப் படுகின்ற
பொதிகள் இவ்வாறு அழைக்கப்
படுகிறது. Real Player Ogg Vorbis Plugin, Rythmbox
gstreamer plugin etc.,

சாதாரணமாக
இலக்கியங்கிகளில் "இடைச்
செருகள்கள்" பற்றி
கேட்டிருப்போம்.
திருமந்திரத்தில் இடைச்
செருகள்கள் இருப்பதாய்
படித்ததுண்டு.

Plugin - செருகு, Plugins - செருகள்கள்

இதனை நீங்கள் சொல்லும் போதுதான் ஒரு விடயம் சிந்தித்தேன். patch என்பதற்கு நாம் பொருத்து என்று பயன்படுத்தலாம். plugin இற்கு செருகு அல்லது சொருகு எனலாம்.

12. Online - நிஜத்தில்

13. Offline - நிழலில்

சற்றே கவித்துவமாக இருக்கிறது. ஆனால் தொழிநுட்பரீதியாக தவறு.
எவ்வாறாயினும் "நிஜத்தில்" என்பதுபோன்ற சமஸ்கிருத அடிச்சொற்களை தவிர்க்கலாம். தமிழ் மிகவும் வளமானது.


-மு.மயூரன்

Ravishankar

unread,
Oct 19, 2006, 6:00:47 AM10/19/06
to tamil_wi...@googlegroups.com

1, 2 - format -

இது வரை வந்ததில் வடிவூட்டு என்பது பொருத்தமான பரிந்துரையாக இருக்கிறது. ஒழுங்குபடுத்து என்றால் organise, வகைப்படுத்து என்றால் categorise. எனவே இவை பொருந்தாது ..தவிர, வடிவூட்டு என்பது format text, format disk இரண்டுக்கும் பொருந்தி வருவது சிறப்பு .

8. URL, 9.USB -

இது போன்ற சொற்களுக்கு உடனடியாக தமிழ்ச் சொற்கள் ஆளாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், யுஆர்எல், யுஎஸ்பி என்று எழுதும் வழக்கத்தை நிறுத்தலாம். இப்படி எழுதுவதால் இதுவே தமிழ்ச்சொல்லாக காலத்துக்கும் நிலைக்கும் அபாயம் உண்டு. தமிழாக்கப்படுவதற்கான தேவையையும் இது இடித்துரைக்காது. மாறாக, தமிழ்ச்சொல் உருவாக்கும் வரை USB, URL என்று ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதி விட்டுப் போகலாம் . யுஆர்எல், யுஎஸ்பி என்று எழுதுவதால் நிச்சயம் தமிழ் வளரப்போவதில்லை. இப்போதைக்கு URLக்கு முகவரி என்ற சொற் பரிந்துரைப ஓரளவு கருத்தொருமித்ததாய் இருக்கிறது.

10. cache -

இதை இடைமாற்று என்று விக்கிபீடியாவில் பார்த்த நினைவு.

11. tab

கீற்றானால், tabbed browsing என்பதை எப்படிச் சொல்வது?

12, 13 - online, offline -

இயன்ற வரையில் நுட்ப வழியில் சொற்பரிந்துரைகளை சிந்திக்கலாம். நிஜம், நிழல் போன்ற சொற்கள் குழப்பும்.

14.plugin -

இலக்கிய இடைச்செருகல் வேறு..நம் plugin வேறு ..எனினும் செருகல், சொருகல் போன்ற வழிகளில் சிந்திக்கலாம். plug என்பதற்கு தமிழ்ச்சொல் அறிந்தால், pluginக்கு தமிழ்ச்சொல் காண்பதும் எளிது. இந்த இடத்தில் என் நீண்ட நாள் ஐயம் - swicthக்குத் தமிழ் சொல் என்ன? switch on, switch off - என்பதை எப்படி சொல்வது? இயந்திரங்கள், விளக்குகளை swicth off செய்வதை அணை என்று சொல்லலாம். swicth on என்பதை எப்படி சொல்வது? இயந்திரங்களுக்கு முடுக்கு? விளக்குகளுக்கு ஏற்று ?

16. screensaver -

திரைக்காப்பு பொருந்துகிறது. திரைக்காப்பி என்று சொல்வது இலக்கணப் பிழையாக இருக்கலாம் .

17. wallpaper, desktop background -

இதுவரை மேசைப் பின்னணி என்ற பரிந்துரை பொருத்தமாக இருக்கிறது. உபுண்டு குழுமத்தில் ஒருவர் ஏன் மேசை என்று சொல்ல வேண்டும் ; பலகை என்று தமிழில் சொல்லலாமே என்றார்..desk என்பதற்கு மேசை என்பதை விட பலகை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் . இது குறித்தும் சிந்திக்கலாம்.

18. skin -

ஆடை என்பது நல்ல சிந்தனை..ஆடையின் தோற்றம், வடிவம் இரண்டுமே மாற்றத் தக்கது . skin போல் மாற்றத்தக்கது. தொடர்ந்து இது போன்று சிந்திக்கலாம்..

22. firewall -

அரணின் பணியே காப்பது தானே? காப்பரண் என்று சொல்வது அவசியமா? அரண் மட்டும் போதுமே?

24. mother board -

தாய்நாடு, தாய்மொழி என்பது போல் தாய்த்தட்டு என்றே சொல்லலாம். பிழையில்லை. கருத்தட்டும் பொருந்தலாம். ஆனால், கரு அட்டை என்று சொல்ல வேண்டாம். இந்த இடத்தில் அட்டை என்பதை விட தட்டு என்பது பொருத்தமாக இருக்கிறது.

42. mms -

செழுஞ்செய்தி, செஞ்செய்தியை விட பொருள் பொதிந்ததாக இருக்கிறது.

43. gallery -

காட்சியகம் - நல்ல பரிந்துரை. நன்றி .

47.alpha, beta, gamma -

நிறைய சிந்திக்க வேண்டிய விதயம் இது. மென்பொருள் உருவாக்கத்தில் இது போன்று பல நிலைகள் உள்ளன (pre-alpha, delta, omega என்று..பார்க்க http://en.wikipedia.org/wiki/ Development stage ). இவை எல்லாவற்றுக்கும் பொருந்தும் தொடர்புடைய சொற்களை உருவாக்க வேண்டும். இது போன்ற சொற்களை தனித்தனியாக மொழிபெயர்ப்பது கடினம். பிழையாகவும் முடியும். இவற்றை தனித்தனிச் சொற்களாகப் பார்க்காமல் மென்பொருள் உருவாக்கப் பணி நிலைகள் முழுவதையும் தமிழ் மூலமாகச் சிந்திக்கத் தொடங்கினால் வழி கிடைக்கும் . தமிழ் மரபில் தேர்களை வெள்ளோட்டம் இடும் வசதி உண்டு. அதை முன்னிட்டு பீட்டா நிலையை வெள்ளோட்ட நிலை என்று அழைக்கலாம் சில காலம் நினைத்ததுண்டு . ஆனால், பீட்டா போன்று உள்ள பல படி நிலைகளையும் குறிக்க படி நிலைகள் தமிழ் மரபில் இல்லையோ என்று வருந்த வேண்டி இருக்கிறது . alpha, beta, gamma கிரேக்க எழுத்துக்களில் முறையே முதல் மூன்று எழுத்தக்கள் என்பதை கருதி அகரம், ஆகாரம் , இகரம் என்றும் சொல்லலாமா என்று சிந்திக்கலாம். ஆனால், கணிதத்தில் x,y,z ஆகியவற்றை தமிழாக்காமல் அப்படியே பயன்படுத்துவது போல் இதையும் பயன்படுத்தலாம். தனிமக் குறிகள் போன்ற சில குறிமுறைகள் உலக மொழிகள் பலவற்றுக்கும் பொதுவாக ஆவது போல் இதையும் கருதலாம். பிற பயனர் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் .

48. RAM -

நினைவகம் நல்ல பரிந்துரை. ரேம் என்று எழுதுவதை தவிர்க்கலாம். பார்க்க USB, URLக்கான விளக்கம்.

52. DNS -

டிஎன்எஸ் வேண்டாம். பார்க்க USB, URLக்கான விளக்கம்.

53. Profile -

வடி உருவம் பொருத்தமாகத் தோன்றவில்லை. :(

பிற கருத்துக்கள்

library -

மிகவும் சிக்கலான சொல்லாக கேட்டிருக்கிறீர்கள் மயூரன் :( பொத்தாம் பொதுவாக இதற்கும் களஞ்சியம் என்று சொல்லி விட்டுப் போகலாம் . ஆனால், இப்படி ஒரே சொல்லை வைத்துப் பல இடங்களிலும் இட்டுக்கட்டுவதை விரும்பவில்லை. இது போன்று பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் இன்னும் சில சொற்கள் தொகுப்பு, கருவி முதலியன. இப்படி ஒரே சொல்லை பொருள் செறிவு குறைந்து பல இடங்களிலும் பயன்படுத்துவதை இராம. கி போன்றோர் இடித்துரைப்பர் . ஆனால், மாற்று வழிகளில் சிந்திக்கும் அளவுக்கு இன்னும் என் மொழியாளுமை வளரவில்லை. அவரைப் போன்ற அறிஞர்களை யாராவது இந்தக் குழுவுக்கு அழைத்து வந்தால் நன்றாக இருக்கும். வெறும் 50 சொற்களையே பத்து நாட்களாக மாற்றி மாற்றி உரையாடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் தமிழ்ச் சிந்தனைக்கு வர வேண்டிய கருத்துருக்கள். சிந்தனைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. !!!

archive -

தொகுப்பு என்பதை விட பெட்டகம் பொருந்தலாம். ஆனால், பிபிசி தமிழ் வானொலியில் பெட்டக நிகழ்ச்சி என்று ஒன்று வரும்..அந்தப் பெட்டகத்தின் பொருள் என்ன?

கால்வாய்

, வாய்க்கால்
முன்பின் தொக்கப்போலி என்றாலும் நடப்பில் மாறுபட்ட பொருள் தர வல்லது . வாய்க்கால்கள் அளவில் சிறியவை. இவை வயலுக்கு நீர் கொண்டு வரும் சிறிய நீர்வழிகளைக் குறிக்கும் . கால்வாய்கள் பெரியவை.கடல், ஆறு போன்றவற்றில் இருந்து பிரிந்து வரும் நீர்வழிகளைக் குறிக்கும். அதே போல், வடிவமைப்பு, அமைவடிவம் ஆகியவை முன்பின் தொக்கப்போலியாகத் தோன்றினாலும் அப்படி இல்லை என்று தான் நினைக்கிறேன் . அமைப்பின் வடிவம் , வடிவத்தின் அமைப்பு என்று பிரித்துப் பார்த்தால் வேறுபாடுகள் புலப்படலாம் .

மூன்று மூன்று பேருக்கு பத்துப் பத்துச் சொற்களாகப் பிரித்து தமிழாக்கங்களை இறுதி செய்யலாம் என்று ராமதாஸ் கூறியிருந்தார்

. உபுண்டு தமிழாக்கம் போன்ற தனிப்பட்ட திட்டங்களில் இது போன்ற செயல்முறைகள் அவசியமானதும் சரியானதும் ஆகும். ஆனால், விக்சனரி திட்டத்துக்கு இவை பொருந்தா. விக்கிமீடியா திட்டங்களில் யாரும் எதையும் இறுதி செய்வதில்லை . அது நம் நோக்கத்துக்கு வெற்றியும் தராது. இதுவரை தமிழில் சிந்திக்கப்படாத கருத்துக்களுக்கு தமிழ்ச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கலந்துரையாடுவதே நம் முதன்மை நோக்கம் . இதில் சாலச் சிறந்ததாக வரும் பரிந்துரைகள் தானாகவே நிலைக்கும். பயன்பாட்டுக்கு வரும். விக்சனரியிலும் சேர்க்கப்படும். இது போன்ற உரையாடல்களை மேற்கொள்வதற்கு இது வரை ஒரு களம் இல்லாமல் இருந்தது . அத்தகைய களமாக செயல்பட இக்குழுமம் உதவும். சொற்களுக்குப் பரிந்துரைகள் இல்லாவிட்டாலோ பரிந்துரைகளில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலோ அவற்றை குறித்து வருந்த வேண்டியது இல்லை . அவசர அவசரமாக சொற்களை இறுதி செய்ய வேண்டியதுமில்லை. கருத்தொத்த பரிந்துரைகள் இல்லாத பட்சத்தில் அவற்றை அப்படியை ஊறப்போடலாம் . நாளை வரும் பயனர்கள் இன்னும் சிறப்பான பரிந்துரைகளை தரலாம்.

ஒரு சொல்லை இறுதி செய்து விக்சனரியில் ஏற்றுவதால் மட்டும் அச்சொல் பயன்பாட்டுக்கு வந்து விடாது என்ற உண்மை நிலையை கவனிக்க வேண்டும்

. தமிழில் உருவாக்கப்பட்டுள்ள பல கலைச்சொல் அகராதிகளுக்கும் இந்த நிலை தான் . வெறும் சொற் தொகுப்புகளால் பயன் ஏதும் இல்லை. கடந்த பத்தாண்டுகளாக , மணவை முஸ்தபா போன்றோர் சொற்பட்டியல்களை உருவாக்கியும் அவை ஏன் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது சிந்திக்கத் தக்கது . இது போன்ற சொற்பட்டியல்கள் என்றுமே ஒரு வழிகாட்டியாகத் தான் விளங்க முடியும். தமிழில் அறிவியல் கட்டுரைகள் , சிந்தனைகள், மென்பொருட்கள் வரும்போது பொருத்தமான சொற்கள் தானே பயன்பாட்டுக்கு வரும் . இது குறித்து சிந்தனையைத் தூண்டும் வலைப்பதிவு ஒன்றை படித்த நினைவு. பின்னர் தேடிப் பார்த்து இணைப்பு தருகிறேன். இப்படி பயன்பாட்டுக்கு வரும் சொற்கள் அரசு பாடநூல் குழுவினரால் கவனிக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்போது நிலைபெறுகிறது .

மயூரன் சொன்னபடி

, மணவை முஸ்தபாவின் கலைச்சொல் அகராதிகள் நம் சிந்தனைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும் . ராமதாஸ், நீங்களோ இந்தியாவில் உள்ள பிறரோ அவற்றைப் பெற்றுக் கொண்டால் நம் குழுமத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

நன்றி

,

ரவி

 

 

 

மு.மயூரன் | M.Mauran

unread,
Oct 19, 2006, 6:48:32 AM10/19/06
to tamil_wi...@googlegroups.com

8. URL, 9.USB -

இது போன்ற சொற்களுக்கு உடனடியாக தமிழ்ச் சொற்கள் ஆளாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், யுஆர்எல், யுஎஸ்பி என்று எழுதும் வழக்கத்தை நிறுத்தலாம். இப்படி எழுதுவதால் இதுவே தமிழ்ச்சொல்லாக காலத்துக்கும் நிலைக்கும் அபாயம் உண்டு. தமிழாக்கப்படுவதற்கான தேவையையும் இது இடித்துரைக்காது. மாறாக, தமிழ்ச்சொல் உருவாக்கும் வரை USB, URL என்று ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதி விட்டுப் போகலாம் . யுஆர்எல், யுஎஸ்பி என்று எழுதுவதால் நிச்சயம் தமிழ்
வளரப்போவதில்லை. இப்போதைக்கு URLக்கு முகவரி என்ற சொற் பரிந்துரைப ஓரளவு கருத்தொருமித்ததாய் இருக்கிறது

இந்த கருத்தோடு நூறுவீதம் எனக்கு உடன்பாடு

.

10. cache -

இதை இடைமாற்று என்று விக்கிபீடியாவில் பார்த்த நினைவு

ம்ம்.. நல்லசொல்தான்.  interchange?
இச்சொல்லை இன்னும் விவாதத்துக்குள்ளாக்குவோம்.

.

11. tab

கீற்றானால், tabbed browsing என்பதை எப்படிச் சொல்வது

முகுந்த் உடன்பட்டால் தத்தல் என்பதையே பொதுவாக பயன்படுத்தலாம் போலிருக்கிறது.

14.plugin -

இலக்கிய இடைச்செருகல் வேறு..நம் plugin வேறு ..எனினும் செருகல், சொருகல் போன்ற வழிகளில் சிந்திக்கலாம். plug என்பதற்கு தமிழ்ச்சொல் அறிந்தால், pluginக்கு தமிழ்ச்சொல் காண்பதும் எளிது

plug இற்கு இலங்கை பாடப்புத்தகங்களில் "சொருகி" என்றே பயன்படுத்துவோம்.

. இந்த இடத்தில் என் நீண்ட நாள் ஐயம் - swicthக்குத் தமிழ் சொல் என்ன? switch on, switch off - என்பதை எப்படி சொல்வது? இயந்திரங்கள், விளக்குகளை swicth off செய்வதை அணை என்று சொல்லலாம். swicth on என்பதை எப்படி சொல்வது? இயந்திரங்களுக்கு முடுக்கு? விளக்குகளுக்கு ஏற்று

ஆளி என்று ஒரு நல்ல சொல் இருக்கிறது switch இற்கு

17. wallpaper, desktop background -

இதுவரை மேசைப் பின்னணி என்ற பரிந்துரை பொருத்தமாக இருக்கிறது. உபுண்டு குழுமத்தில் ஒருவர் ஏன் மேசை என்று சொல்ல வேண்டும் ; பலகை என்று தமிழில் சொல்லலாமே என்றார்..desk என்பதற்கு மேசை என்பதை விட பலகை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் . இது குறித்தும் சிந்திக்கலாம்

நன்றி.
ஆனால் பலகை என்பது குழப்பம் தராதா?  வடசொல் தவிர்ப்பு தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகளை வரவேற்கிறேன்.

.

18. skin -

ஆடை என்பது நல்ல சிந்தனை..ஆடையின் தோற்றம், வடிவம் இரண்டுமே மாற்றத் தக்கது . skin போல் மாற்றத்தக்கது. தொடர்ந்து இது போன்று சிந்திக்கலாம்..

ஆம் நல்ல பரிந்துரை

22. firewall -

அரணின் பணியே காப்பது தானே? காப்பரண் என்று சொல்வது அவசியமா? அரண் மட்டும் போதுமே?

யோசிக்கிறேன் ;-)

42. mms -

செழுஞ்செய்தி, செஞ்செய்தியை விட பொருள் பொதிந்ததாக இருக்கிறது

நன்றி

archive -

தொகுப்பு என்பதை விட பெட்டகம் பொருந்தலாம். ஆனால் , பிபிசி தமிழ் வானொலியில் பெட்டக நிகழ்ச்சி என்று ஒன்று வரும்..அந்தப் பெட்டகத்தின் பொருள் என்ன

அவர்கள் ஆவணம் என்ற அர்த்தத்தில் பெட்டகத்தை பார்க்கிறார்கள் (documentry)

?

கால்வாய்

, வாய்க்கால்
முன்பின் தொக்கப்போலி என்றாலும் நடப்பில் மாறுபட்ட பொருள் தர வல்லது . வாய்க்கால்கள் அளவில் சிறியவை. இவை வயலுக்கு நீர் கொண்டு வரும் சிறிய நீர்வழிகளைக் குறிக்கும் . கால்வாய்கள் பெரியவை.கடல், ஆறு போன்றவற்றில் இருந்து பிரிந்து வரும் நீர்வழிகளைக் குறிக்கும். அதே போல், வடிவமைப்பு, அமைவடிவம் ஆகியவை முன்பின் தொக்கப்போலியாகத் தோன்றினாலும் அப்படி இல்லை என்று தான் நினைக்கிறேன் . அமைப்பின் வடிவம் , வடிவத்தின் அமைப்பு என்று பிரித்துப் பார்த்தால் வேறுபாடுகள் புலப்படலாம்

சரி.


-மு.மயூரன்


--

njaanavettiyaan

unread,
Oct 19, 2006, 7:19:11 AM10/19/06
to tamil_wi...@googlegroups.com
tab - சட்டம்

plugin - சொருகி
archive - கருவூலம்

ஞானவெட்டியான்

மு.மயூரன் | M.Mauran wrote:
>
>
> 8. URL, 9.USB -
>
> இது போன்ற சொற்களுக்கு உடனடியாக தமிழ்ச் சொற்கள் ஆளாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால்,

> /யுஆர்எல், யுஎஸ்பி /என்று எழுதும் வழக்கத்தை நிறுத்தலாம். இப்படி எழுதுவதால்


> இதுவே தமிழ்ச்சொல்லாக காலத்துக்கும் நிலைக்கும் அபாயம் உண்டு. தமிழாக்கப்படுவதற்கான

> தேவையையும் இது இடித்துரைக்காது. மாறாக, தமிழ்ச்சொல் உருவாக்கும் வரை /USB, URL
> /என்று ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதி விட்டுப் போகலாம் . /யுஆர்எல், யுஎஸ்பி
> /என்று எழுதுவதால் நிச்சயம் தமிழ்
>
> வளரப்போவதில்லை. இப்போதைக்கு URLக்கு /முகவரி/ என்ற சொற் பரிந்துரைப ஓரளவு


> கருத்தொருமித்ததாய் இருக்கிறது
>
>
> இந்த கருத்தோடு நூறுவீதம் எனக்கு உடன்பாடு
>
> .
>
> 10. cache -
>

> இதை /இடைமாற்று /என்று விக்கிபீடியாவில் பார்த்த நினைவு


>
>
> ம்ம்.. நல்லசொல்தான். interchange?
> இச்சொல்லை இன்னும் விவாதத்துக்குள்ளாக்குவோம்.
>
> .
>
> 11. tab
>

> /கீற்றானால்/,/ tabbed browsing /என்பதை எப்படிச் சொல்வது


>
>
> முகுந்த் உடன்பட்டால் தத்தல் என்பதையே பொதுவாக பயன்படுத்தலாம் போலிருக்கிறது.
>
> 14.plugin -
>

> இலக்கிய / இடைச்செருகல் /வேறு..நம் plugin வேறு ..எனினும்/ செருகல்/, சொருகல்


> போன்ற வழிகளில் சிந்திக்கலாம். plug என்பதற்கு தமிழ்ச்சொல் அறிந்தால், pluginக்கு
> தமிழ்ச்சொல் காண்பதும் எளிது
>
>
> plug இற்கு இலங்கை பாடப்புத்தகங்களில் "சொருகி" என்றே பயன்படுத்துவோம்.
>
> . இந்த இடத்தில் என் நீண்ட நாள் ஐயம் - swicthக்குத் தமிழ் சொல் என்ன? switch on,
> switch off - என்பதை எப்படி சொல்வது? இயந்திரங்கள், விளக்குகளை swicth off

> செய்வதை/ அணை /என்று சொல்லலாம். swicth on என்பதை எப்படி சொல்வது?
> இயந்திரங்களுக்கு /முடுக்கு/? விளக்குகளுக்கு /ஏற்று /


>
>
> ஆளி என்று ஒரு நல்ல சொல் இருக்கிறது switch இற்கு
>
> 17. wallpaper, desktop background -
>
> இதுவரை மேசைப் பின்னணி என்ற பரிந்துரை பொருத்தமாக இருக்கிறது. உபுண்டு
> குழுமத்தில் ஒருவர் ஏன் மேசை என்று சொல்ல வேண்டும் ; பலகை என்று தமிழில் சொல்லலாமே
> என்றார்..desk என்பதற்கு மேசை என்பதை விட பலகை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக
> இருக்கும் . இது குறித்தும் சிந்திக்கலாம்
>
>
> நன்றி.
> ஆனால் பலகை என்பது குழப்பம் தராதா? வடசொல் தவிர்ப்பு தொடர்பாக எடுக்கப்படும்
> முயற்சிகளை வரவேற்கிறேன்.
>
> .
>
> 18. skin -
>

> /ஆடை/ என்பது நல்ல சிந்தனை..ஆடையின் தோற்றம், வடிவம் இரண்டுமே மாற்றத் தக்கது .


> skin போல் மாற்றத்தக்கது. தொடர்ந்து இது போன்று சிந்திக்கலாம்..
>
>
> ஆம் நல்ல பரிந்துரை
>
> 22. firewall -
>

> அரணின் பணியே காப்பது தானே? /காப்பரண்/ என்று சொல்வது அவசியமா?/ / அரண் மட்டும்


> போதுமே?
>
>
> யோசிக்கிறேன் ;-)
>
> 42. mms -
>

> /செழுஞ்செய்தி, செஞ்செய்தியை /விட பொருள் பொதிந்ததாக இருக்கிறது
>
>
> நன்றி
>
> archive -/ /
>
> தொகுப்பு என்பதை விட /பெட்டகம்/ பொருந்தலாம். ஆனால் , பிபிசி தமிழ் வானொலியில்


> பெட்டக நிகழ்ச்சி என்று ஒன்று வரும்..அந்தப் பெட்டகத்தின் பொருள் என்ன
>
>
> அவர்கள் ஆவணம் என்ற அர்த்தத்தில் பெட்டகத்தை பார்க்கிறார்கள் (documentry)
>

> ?/
>
> கால்வாய்
>
> , வாய்க்கால் /முன்பின் தொக்கப்போலி என்றாலும் நடப்பில் மாறுபட்ட பொருள் தர வல்லது .


> வாய்க்கால்கள் அளவில் சிறியவை. இவை வயலுக்கு நீர் கொண்டு வரும் சிறிய நீர்வழிகளைக்
> குறிக்கும் . கால்வாய்கள் பெரியவை.கடல், ஆறு போன்றவற்றில் இருந்து பிரிந்து வரும்

> நீர்வழிகளைக் குறிக்கும். அதே போல், / வடிவமைப்பு, அமைவடிவம் /ஆகியவை முன்பின்
> தொக்கப்போலியாகத் தோன்றினாலும் அப்படி இல்லை என்று தான் நினைக்கிறேன் . /அமைப்பின்
> வடிவம் , வடிவத்தின் அமைப்பு /என்று பிரித்துப் பார்த்தால் வேறுபாடுகள் புலப்படலாம்

Reply all
Reply to author
Forward
0 new messages