> எனக்குத் தெரிந்து பல மொழிகள் ஏற்கனவே கூடுதலாய் இருந்த தேவையற்ற எழுத்துக்களை
> களைந்திருக்கின்றன. தெலுங்கில் இப்படி சில எழுத்துக்களை சில பத்தாண்டுகள்
> முன்பு ஒழித்ததாய் நண்பர் சொன்னார். டாய்ட்ச் மொழியில் எனக்குத் தெரிந்தே ஓரிரு
> ஆண்டுகள் முன்னர் சில எழுத்துக்களை ஒழித்தனர்.
ரவி, கன்னடத்திலும் 1980களில் கூட இரண்டு சுழி னகரத்திற்கு இணையான
எழுத்தை
நீக்கினர். அதற்கு முன்னர் ழகரத்தை நீக்கினர். றகரத்தை நீக்கினர்.
ஆங்கிலேயர்கள்
தகரத்திற்கான ஓரெழுத்தாகிய "தார்ன்" [thorn or þorn (Þ, þ) ] என்னும்
எழுத்தை நீக்கிவிட்டு
ஈரெழுத்துக் கூட்டாக "th" என்பதனை வைத்துக்கொண்டனர். இந்த ஈரெழுத்து
முறையை
digraph என்கின்றனர். இத்தனைக்கும்
இந்த தார்ன் என்னும் எழுத்து, பழைய ஆங்கில மொழியாகிய
ஆங்கிலோ-சாக்சன் மொழியில் இருந்த ஒன்று.
பார்க்கவும்:
http://en.wikipedia.org/wiki/Thorn_%28letter%29
தமிழில் புதிய எழுத்துக்களை பலரும் நுழைத்து வருகின்றனர்.
இன்னும் குறைந்தது மூன்று எழுத்துக்களையும் (ba, ga, da)
(அதற்கான உயிர்மெய் வடிவங்களையும்) நுழைக்க ஏற்பாடுகள்
நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் சமசுகிருதத்தில் உள்ள
51 எழுத்துக்களையும் தமிழில் வடித்து, தமிழ் சமசுகிருதத்தின் ஓரு
வழிமொழிதான் தமிழ் என்று ஆக்கும் வரை ஓய மாட்டார்கள்.
இவர்களுக்குத் துணை போவோர் பலர் உள்ளனர்.
தமிழின் பேரைச் சொல்லியே தமிழை வளர்க்கிறோம்
என்று கூறிக்கொண்டு, தாங்களும் தமிழர்கள்தாம் என்று
கூறிக்கொண்டு தமிழைக் கெடுக்கின்றார்கள்.
உலகத்தில் உள்ள மொழிகளில் உள்ள மிக அதிகமாக
ஆய்ந்து அவ்வவ் மொழிகளில் உள்ள இலக்கியங்களை
மிக விரிவாக அலசும் ஆங்கிலம், மற்றும் ஐரோப்பிய
மொழிகள் எதுவும், அவ்வவ் மொழிகளில் உள்ள எழுத்துக்களை
தங்கள் அகரவரிசையில் சேர்த்துக்கொண்டு திரிவதில்லை.
ஒலிப்புகளை, *சில* இடங்களில் சற்றேனும் துல்லியமாய்க் காட்டுதல்
வேண்டும் எனில் ஒலித்திரிபுக் குறிகளைப் பயன்படுத்தலாம்
(ஆங்கிலம் ஆள்வது போல்). ஒலித்திரிபுக்குறிகள் கொண்ட
எழுத்துக்களை மொழியின்
அடிப்படை அகரவரிசையிலேயே கொண்டு
உள்ள மொழிகள் உலகில் எத்தனையோ
உண்டு (எ.கா: எசுப்பானியம் (ஸ்பானிஷ்), பிரான்சிய (பிரெஞ்ச்சு) மொழி,
போலந்து மொழி என்று பல).
அதுவும் உயிர்மெய் வடிவங்கள் கொண்ட தமிழ் மொழியில்
புதிய எழுத்துக்களை நுழைப்பது என்பது நல்வழி அறியாமை ஆகும்.
தமிழைக் கெடுக்கும் முயற்சி என்பது உணர வேண்டியது.
செல்வா
On Mar 13, 10:05 am, Ravishankar <
ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> ஆமாச்சு,
>
> புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வது தான் காலத்துக்கேற்ற மாற்றமா? *இப்படி
> காலத்துக்கு ஏற்ப புதிய சொற்களைச் சேர்த்துக் கொண்ட தமிழுக்கு ஒப்பான தொன்மை
> உடைய மொழிகள் விவரங்கள் தாருங்களேன்??*