netizen, ,customize, buddy, catalog, default, spam, trash, status, busy

3 views
Skip to first unread message

Ravishankar

unread,
Nov 15, 2006, 6:19:47 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
1. netizen - வலைமகன் / வலைமகள்?

2. customize - as in customize toolbar?

3. buddy - as in yahoo messenger buddy list - தோழன், நண்பன், தோழி?

4. catalog - பட்டியல்?

5. default - முன்னிருப்பு?

6. spam - எரிதம்?

7. trash - குப்பை?

8. status - as in yahoo chat status - இருப்பு?

9. busy - as in yahoo chat status - busy - மும்முரம்?

கொஞ்சம் சொற்கள் குறித்தும் உரையாடுவோமே ;)!!

ரவி

மு.மயூரன் | M.Mauran

unread,
Nov 15, 2006, 7:03:55 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com

1. netizen - வலைமகன் / வலைமகள்?

வலைப்பிரசை? வலைக்குடிமகர்? வலைக்குடிமக்கள் (பன்மை)

2. customize - as in customize toolbar?

தனிப்பயனாக்கம்? (பாவனையில் உள்ள சொல்)

3. buddy - as in yahoo messenger buddy list - தோழன், நண்பன், தோழி?

நண்பர்

4. catalog - பட்டியல்?

பட்டியல் இல்லை. என்னிடம் பரிந்துரைகளும் இல்லை

5. default - முன்னிருப்பு?

இந்த சொல்லில் முன்னே இருந்தது என்ற அர்த்தம் தொனிக்கிறது என்பதற்காக, "இயல்பிருப்பு" என்று நான் பயன்படுத்தி வருகிறேன். "கொடாநிலை" என்றொரு சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது.

6. spam - எரிதம்?

ஆம்

7. trash - குப்பை?

ஆம்

8. status - as in yahoo chat status - இருப்பு?

நிலை?

9. busy - as in yahoo chat status - busy - மும்முரம்?

இதற்கான தமிழ் சொல் சவாலாகத்தான் இருக்கிறது. எவ்வளவு பொதுவான சொல்? எம்மிடம் தமிழ் சொல் இல்லாமலிருக்கிறதே?

பொதுப்பயன்பாட்டில் எப்படி?
"அப்பா அலுவலாக இருக்கிறார்"
"அம்மா வேலையாய் இருக்கிறார் தொந்தரவு செய்யாதே"
"கொஞ்சம் வேலையாய் இருக்கிறேன் அப்புறம் பேசலாமா"

என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை

கொஞ்சம் சொற்கள் குறித்தும் உரையாடுவோமே ;)!!

மற்றைய உரையாடல்களும் மிக முக்கியமானவை. அவற்றை இரண்டாம் நிலைக்கு கொண்டுபோக தேவையில்லை ரவி.
சொற்கள் உரையாடல் ஒரு பக்கமாக நடக்கட்டும். மற்றைய கருத்து மோதல்களும் அடக்கட்டும். இப்போது நிகழும் கருத்துமோதல் பயனுள்ளதுதான்.

இந்த கருத்தாடல் எமக்கென ஒரு கலைச்சொல்லாக்க கொள்கையினை, கோட்பாட்டினை வகுக்க உதவும்.

-மு.மயூரன்

Ravishankar

unread,
Nov 15, 2006, 7:41:36 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
On 11/15/06, மு.மயூரன் | M.Mauran <mma...@gmail.com> wrote:

1. netizen - வலைமகன் / வலைமகள்?

வலைப்பிரசை? வலைக்குடிமகர்? வலைக்குடிமக்கள் (பன்மை)

பிரஜை வட சொல். தமிழ்நாட்டில் சுத்தமாகப் புழக்கத்தில் இல்லை.  குடிமகன், குடிமகள் , குடிமக்கள் என்பது போல் வலைமகன் வலைமகள் , வலைமக்கள் எனலாம். வலைமகர் இலக்கணப் பிழை என்று நினைக்கிறேன்.

2. customize - as in customize toolbar?

தனிப்பயனாக்கம்? (பாவனையில் உள்ள சொல்)

எங்கு இது பாவனையில் உள்ளது  என அறிய ஆவல்.  தனிப்பயனாக்கம் என்பதை விட துல்லியமான சொல் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். இப்போதைக்கு ஆலோசனை இல்லை.

3. buddy - as in yahoo messenger buddy list - தோழன், நண்பன், தோழி?

நண்பர்

சரி.

4. catalog - பட்டியல்?

பட்டியல் இல்லை. என்னிடம் பரிந்துரைகளும் இல்லை

:(

5. default - முன்னிருப்பு?

இந்த சொல்லில் முன்னே இருந்தது என்ற அர்த்தம் தொனிக்கிறது என்பதற்காக, "இயல்பிருப்பு" என்று நான் பயன்படுத்தி வருகிறேன். "கொடாநிலை" என்றொரு சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது.

இயல்பிருப்பு நன்று. கொடாநிலையை எங்கு பார்த்தீர்கள்?

8. status - as in yahoo chat status - இருப்பு?

நிலை?

இருப்பு நிலை?

9. busy - as in yahoo chat status - busy - மும்முரம்?

இதற்கான தமிழ் சொல் சவாலாகத்தான் இருக்கிறது. எவ்வளவு பொதுவான சொல்? எம்மிடம் தமிழ் சொல் இல்லாமலிருக்கிறதே?

பொதுப்பயன்பாட்டில் எப்படி?
"அப்பா அலுவலாக இருக்கிறார்"
"அம்மா வேலையாய் இருக்கிறார் தொந்தரவு செய்யாதே"
"கொஞ்சம் வேலையாய் இருக்கிறேன் அப்புறம் பேசலாமா"

என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை

mauran, வேலையில் மும்முரமா இருக்கேன்னு இலங்கையில் சொல்ல மாட்டாங்களா? எங்க  ஊருல இப்படி தான் சொல்வாங்க? எனக்கென்னவோ இது மிகவும் பொருத்தமான சொல்லாகத் தெரிகிறது.

கொஞ்சம் சொற்கள் குறித்தும் உரையாடுவோமே ;)!!

மற்றைய உரையாடல்களும் மிக முக்கியமானவை. அவற்றை இரண்டாம் நிலைக்கு கொண்டுபோக தேவையில்லை ரவி.
சொற்கள் உரையாடல் ஒரு பக்கமாக நடக்கட்டும். மற்றைய கருத்து மோதல்களும் அடக்கட்டும். இப்போது நிகழும் கருத்துமோதல் பயனுள்ளதுதான்.

இந்த கருத்தாடல் எமக்கென ஒரு கலைச்சொல்லாக்க கொள்கையினை, கோட்பாட்டினை வகுக்க உதவும்.

சரி mauran (உங்கள் பெயரை தமிழில் எழுத முடியவில்லை. வழு tamilkeyயிலா firefoxலா தெரியல !)..கொள்கைகளுடன் சேர்த்து சொற்களையும் பார்ப்போம் என்று தான் நினைத்தேன். சில சமயம் சொற்களை உருவாக்குவதில் உள்ள புரிந்துணர்வு காரணமாக கொள்கைகள் தாமாகவே உருப்பெறத் துவங்கும் என்பது என் நம்பிக்கை. தவிர, case by caseஆக உரையாடுவது இன்னும் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.

ரவி

மு.மயூரன் | M.Mauran

unread,
Nov 15, 2006, 8:31:32 AM11/15/06
to tamil_wi...@googlegroups.com
1. netizen - வலைமகன் / வலைமகள்?

வலைப்பிரசை? வலைக்குடிமகர்? வலைக்குடிமக்கள் (பன்மை)

பிரஜை வட சொல். தமிழ்நாட்டில் சுத்தமாகப் புழக்கத்தில் இல்லை.  குடிமகன், குடிமகள் , குடிமக்கள் என்பது போல் வலைமகன் வலைமகள் , வலைமக்கள் எனலாம். வலைமகர் இலக்கணப் பிழை என்று நினைக்கிறேன்.

வலைமக்கள் நல்ல சொல். இதை பயன்படுத்தலாம்

2. customize - as in customize toolbar?

தனிப்பயனாக்கம்? (பாவனையில் உள்ள சொல்)

எங்கு இது பாவனையில் உள்ளது  என அறிய ஆவல்.  தனிப்பயனாக்கம் என்பதை விட துல்லியமான சொல் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். இப்போதைக்கு ஆலோசனை இல்லை.

லினக்சில் தான் எங்கோ பார்த்ததாய் (அடிக்கடி) நினைவு

5. default - முன்னிருப்பு?

இந்த சொல்லில் முன்னே இருந்தது என்ற அர்த்தம் தொனிக்கிறது என்பதற்காக, "இயல்பிருப்பு" என்று நான் பயன்படுத்தி வருகிறேன். "கொடாநிலை" என்றொரு சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது.

இயல்பிருப்பு நன்று. கொடாநிலையை எங்கு பார்த்தீர்கள்?

அதுவும் லினக்சில் தான் கே டீ ஈ ஆக இருக்கலாம்.
கொடாநிலை என்றால் எந்த மாற்றங்களையும் கொடுக்காத நிலை என்றதாய் அர்த்தப்படுத்திக்கொண்டேன்.

mauran, வேலையில் மும்முரமா இருக்கேன்னு இலங்கையில் சொல்ல மாட்டாங்களா? எங்க  ஊருல இப்படி தான் சொல்வாங்க? எனக்கென்னவோ இது மிகவும் பொருத்தமான சொல்லாகத் தெரிகிறது.

வேலையில் மும்முரம் எனும்போது அர்த்தம் ஏறத்தாழ சரியாகிறது. தனியே மும்முரம் எனும்போது அவ்வளவு துல்லியமாய் இல்லை.
"வேறு வேலையில்" என்று சொன்னால் என்ன?

மு.மயூரன்

Ravishankar

unread,
Nov 15, 2006, 12:29:54 PM11/15/06
to tamil_wi...@googlegroups.com
chat statusல் தனியே மும்முரம் என்று சொல்வது முழுக்கப் பொருந்தவில்லை என்பதை உணர்கிறேன். ஆனால், வேலையில் busyஆக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் வேலையில் மும்முரமாக இருக்கிறேன் என்று தாராளமாகச் சொல்லலாம். chat status - busy என்பதற்கு வேறு வேலையில் என்று சொல்வது பொருந்துகிறது.
 
ரவி
Reply all
Reply to author
Forward
0 new messages