எழுதியப் படி உச்சரிப்பது எப்படி?

73 views
Skip to first unread message

amachu

unread,
Sep 5, 2007, 7:49:45 AM9/5/07
to விக்சனரி
வணக்கம்,

காகம், கருமை, தாகம், தாவணி, தாழ், கணிதம் முதலிய சொற்களை கருத்தில்
நிறுத்துங்கள். இவற்றுள் க வும், த வும் உச்சரிக்கப்படும் விதத்தை
கவனிக்கவும்.

ஓசையிலுள்ள வேறுபாட்டைக் கருதவும். வேறுபடுத்திக் காட்ட நம் முன்னோர்கள்
கையாண்ட விதிகள் ஏதேனும் உள்ளதா?

அல்லது இது பழக்கத்தால் விளையும் பாடமா? தங்கள் கருத்துக்கள்?

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

Sathia Narayanan

unread,
Sep 5, 2007, 9:57:33 AM9/5/07
to tamil_wi...@googlegroups.com
காகத்தை காக்கையென்றும் படித்திருக்கிறேன். மறுவி காகமாகிவிட்டிருக்கலாம்.
தாழ் - இதை எழுதியபடிதானே படிக்கிறோம்?
தாவணி, கணிதம் - தமிழச்சொல்லா?

-சத்தியா.

amachu

unread,
Sep 5, 2007, 10:58:07 AM9/5/07
to விக்சனரி
On Sep 5, 6:57 pm, "Sathia Narayanan" <msat...@gmail.com> wrote:
> தாழ் - இதை எழுதியபடிதானே படிக்கிறோம்?

தாழில் வரும் த வுக்கும் தாவணி, தாகத்தில் உள்ள த வுக்கும் உச்சரிப்பு
அழுத்தம் மாறுபடுகிறதே!

M.Mauran | மு.மயூரன்

unread,
Sep 5, 2007, 11:27:19 AM9/5/07
to tamil_wi...@googlegroups.com
தமிழ்நாட்டில் தாவணியை Dhaavani என்று உச்சரிப்பீர்களா? நாங்கள் thaavani என்றே உச்சரிக்கிறோம்.

அதுசரி ஆமாச்சு, ஏன் திடீரென இந்த கேள்வி?  நோக்கத்தை தெரிந்துகொண்டால் கேள்வியப் புரிந்துகொள்வது இலகுவாகிவிடும்.

-மு.மயூரன்

On 9/5/07, amachu <shrira...@gmail.com> wrote:

amachu

unread,
Sep 5, 2007, 12:16:38 PM9/5/07
to விக்சனரி
On Sep 5, 8:27 pm, "M.Mauran | மு.மயூரன்" <mmau...@gmail.com> wrote:
> தமிழ்நாட்டில் தாவணியை Dhaavani என்று உச்சரிப்பீர்களா? நாங்கள் thaavani என்றே
> உச்சரிக்கிறோம்.
>

உடன் பணிபுரிபவரொருவருடன் text-to-speech மாற்றி குறித்து விவாதிக்கையில்
இது குறித்து அலச நேரிட்டது. "சொல்லுங்க" வை நெல்லைக் காரர்கள் ச
மாதிரியும், தஞ்சைக் காரர்கள் ஸ மாதிரியும் உச்சரிப்பது.. முதலிய
விடயங்களும்..

"அன்பு" வில் ப உச்சரிக்கப் படும் விதம், "பழத்தில்" ப வின்
உச்சரிப்பு.. எங்கே தடித்தும் எங்கே மெலித்தும் உச்சரிக்க வேண்டும்
எனவும் இலக்கண விதிகள் உள்ளனவா?

இவற்றால் இம்மாற்றிகள் உருவாக்குவதில் சிக்கல்கள் முதலியன...

---

அன்புடன்,
ஆமாச்சு

http://amachu.net

Sathia Narayanan

unread,
Sep 5, 2007, 12:24:30 PM9/5/07
to tamil_wi...@googlegroups.com
பிற்காலத்தில் ஏற்பட்ட வடமொழி பாதிப்பினால் பல சத்தங்களும் சேர்ந்திருக்கும். பழைய பாடல்களில் எழுத்தைப்போலவே தான் பலுக்குவதாக என் தமிழாசிரியர் கூறிய நினைவு. செல்வா அல்லது இராமகி போன்ற பெரியோர் வந்து இதைப்பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.

நானறிந்து தாவணியை வடதமிழகத்தார் 'Dha'வணி என்றும் தென்தமிழகத்தார் 'tha'வணி என்றும் பலுக்க கேட்டு இருக்கிறேன். வடக்கே போகப்போக வடமொழி பாதிப்பு அதிகமிருக்குமோ ?

On 9/5/07, amachu <shrira...@gmail.com> wrote:

M.Mauran | மு.மயூரன்

unread,
Sep 5, 2007, 1:16:19 PM9/5/07
to tamil_wi...@googlegroups.com
//நானறிந்து தாவணியை வடதமிழகத்தார் 'Dha'வணி என்றும் தென்தமிழகத்தார் 'tha'வணி என்றும் பலுக்க கேட்டு இருக்கிறேன். வடக்கே போகப்போக வடமொழி பாதிப்பு அதிகமிருக்குமோ ?//

நல்ல அவதானம்.

தொல்காப்பியம் சில பலுக்கல் முறைகளை விளக்குகிறது.

நா , ச போன்ற உச்சரிப்புக்களை முற்றாக நாம் மாற்றிக்கொண்டுள்ளோம் போல் தெரிகிறது.
இன்னும் பீபீசீ தமிழோசயில் cheythi என்று சரியாக  செய்தியை சொல்கிறார்கள்.

ஆமாச்சு,

நான் தற்போது ஈடுபட்டிருக்கும் மென்பொருள் ஒன்றின் உருவாக்கத்திலும் மேற்கண்ட விடயங்கள் பங்குபற்றுகின்றன.
இது புலம்பெயர்ந்து போயிருக்கும் ஈழத்தமிழ் குழந்தைகளுக்கான மென்பொருள்.
ஒலிபெயர்ப்பைச் சரியாக செய்யவேண்டியதன் தேவையினை அடிப்படையாகக்கொடது.
இந்த மென்பொருளுக்காக சில ஆய்வுகளை செய்துள்ளேன்.

இதுகுறித்த விக்கிபீடியா கட்டுரை ஒன்றை ஆரம்பித்து வைத்தேன். இன்னும் முழுமைப்படுத்தவில்லை.
முழுமைப்படுத்தியவுடன் அறியத்தருகிறேன்.


முழுமையானதாக இல்லாவிட்டாலும் tamilnet.com இல் சில பயனுள்ள ஆவணங்கள் இருக்கின்றன. பார்வையிடுங்கள்.

-மு.மயூரன்


ரவிசங்கர்

unread,
Sep 5, 2007, 6:43:32 PM9/5/07
to விக்சனரி
ka, ga, tha, dha, pa, ba, cha, sa வேறுபாடுகளுக்குத் தெளிவான இலக்கண
விதிகள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இது குறித்து செல்வா பல முறை
தமிழ் விக்கிபீடியாவில் குறிப்பிட்டுள்ளார்.

//ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த
வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும்.
எனவே இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க
வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலிந்தே ஒலிக்கும்.//

என்று http://waterlooselva.blogspot.com/ பதிவில் குறிப்பிட்டு
இருக்கிறார்.

http://tamilwikipedia.blogspot.com/2007/07/blog-post_17.html இடுகையின்
மறுமொழிகளிலும் இதை ஒட்டிய உரையாடல் இருக்கிறது.

உரை-பேச்சு மாற்றி செயலிக்கான தெளிவான விதிகளை இலக்கணத்தைத் தெளிவாகக்
கற்றுணர்ந்தவர்கள் வரையறுக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு
ஊருக்கும் பலுக்கல் மாறுபாடுகள் உள்ளதால் இந்தச் செயலிகளை இலக்கணப்படி
அமைப்பதே நல்லது.

ரவி

amachu

unread,
Sep 5, 2007, 9:15:42 PM9/5/07
to விக்சனரி

On Sep 6, 3:43 am, "ரவிசங்கர்" <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:

>
> //ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த
> வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும்.
> எனவே இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க
> வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலிந்தே ஒலிக்கும்.//
>

இதை எழுதுகிற போது சிறப்பித்துக் குறிக்க முற்காலத்தில் குறியீடுகள்
பயன்படுத்தப் பட்டனவா? இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம்
உள்ளிட்ட மொழிகள் அனைத்திலும் மூன்று க, ச, த, ட இருப்பதும் தமிழில்
இல்லாததும் க x y z ங, ச x y z ஞ வரிசைப் படியே மற்ற மொழிகள் கையாளப்
படுவதும் இவ்விடத்தே நோக்கத் தக்கது. எங்கோ இடையில் விடுபட்டிருக்க
வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தாலோ அல்லது மெய்யெழுத்தை தொடர்ந்து
வந்தாலோ வலித்து ஒலிக்க வேண்டுமென்பதை சுட்ட க வின் வேறு வடிவங்கள்
தமிழில் இருந்தனவா? இதை 1, 2, 3 போட்டு சுட்டுவதை
பார்த்திருக்கின்றேன்.

http://www.thefreedictionary.com/simple பாருங்கள்... simple இப்படி
உச்சரிக்கப் பட வேண்டும் என எழுதியிருக்கிறார்கள். தமிழோசை விதிகள்
அவசியம்.

Sathia Narayanan

unread,
Sep 6, 2007, 7:46:18 AM9/6/07
to tamil_wi...@googlegroups.com
மேற்குறிப்பிட்ட சுட்டிகளை முழுதும் படிக்கவில்லை. இங்கு குறிப்பிட்ட விதியியை மட்டும் பார்த்தால் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு வார்த்தை 'உபயோகம்'.
இதில் வல்லின எழுத்து க முதலெழெத்தும் அல்ல மெய்யொட்டியும வரவில்லை. இருந்தாலும் வலித்து ஒலிக்கிறது. :-)
இதில் குறிப்பிடப்பட வேண்டிய சங்கதி என்னவெனில் உபயோகம் தமிழ்ச்சொல்லா எனும் கேள்வி. நான் என்ன நினைக்கிறேனென்றால் பல வார்த்தைகளில் நாம் இந்த வலித்து ஒலிப்பவை வடமொழி கலந்த சொற்களாக இருக்கலாம். மேற்குறிப்பிட்ட விதியைப்பயன்படுத்தி அவ்வார்த்தைகளை அடையாளம் காணமுடியுமோ?

\\  இலக்கணப்படி அமைப்பதே நல்லது\\.
இதை வழிமொழிகிறேன்.

Sundar

unread,
Sep 7, 2007, 3:40:56 AM9/7/07
to விக்சனரி
"பயன்" என்ற தமிழ்ச்சொல்லிற்கு இணையான வடமொழிச் சொல் "உபயோகம்". மேலும்,
இங்கு "க" வலித்து ஒலிப்பதுபோல் தோன்றவில்லையே? என் புரிதலில் தவறா?

மற்றபடி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள சில
ஒலிப்புமுறைகள் சில எழுத்துக்களுக்கான "சரியானவை" (தொல்காப்பியத்தின்படி)
என்று கேட்டிருக்கிறேன்.

- சுந்தர்

On Sep 6, 4:46 pm, "Sathia Narayanan" <msat...@gmail.com> wrote:
> மேற்குறிப்பிட்ட சுட்டிகளை முழுதும் படிக்கவில்லை. இங்கு குறிப்பிட்ட விதியியை
> மட்டும் பார்த்தால் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு வார்த்தை 'உபயோகம்'.
> இதில் வல்லின எழுத்து க முதலெழெத்தும் அல்ல மெய்யொட்டியும வரவில்லை.
> இருந்தாலும் வலித்து ஒலிக்கிறது. :-)
> இதில் குறிப்பிடப்பட வேண்டிய சங்கதி என்னவெனில் உபயோகம் தமிழ்ச்சொல்லா எனும்
> கேள்வி. நான் என்ன நினைக்கிறேனென்றால் பல வார்த்தைகளில் நாம் இந்த வலித்து
> ஒலிப்பவை வடமொழி கலந்த சொற்களாக இருக்கலாம். மேற்குறிப்பிட்ட
> விதியைப்பயன்படுத்தி அவ்வார்த்தைகளை அடையாளம் காணமுடியுமோ?
>
> \\ இலக்கணப்படி அமைப்பதே நல்லது\\.
> இதை வழிமொழிகிறேன்.
>

> On 9/5/07, ரவிசங்கர் <ravishankar.ayyakka...@gmail.com> wrote:
>
>
>
> > ka, ga, tha, dha, pa, ba, cha, sa வேறுபாடுகளுக்குத் தெளிவான இலக்கண
> > விதிகள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இது குறித்து செல்வா பல முறை
> > தமிழ் விக்கிபீடியாவில் குறிப்பிட்டுள்ளார்.
>
> > //ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த
> > வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும்.
> > எனவே இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க
> > வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலிந்தே ஒலிக்கும்.//
>

> > என்றுhttp://waterlooselva.blogspot.com/பதிவில் குறிப்பிட்டு


> > இருக்கிறார்.
>

> >http://tamilwikipedia.blogspot.com/2007/07/blog-post_17.htmlஇடுகையின்

செல்வா

unread,
Sep 21, 2007, 7:02:45 PM9/21/07
to விக்சனரி
நண்பர்களே,

தமிழின் ஒலிப்பு முறை மிகவும் சீரானது. தமிழ் ஒலிப்பாங்குடைய மொழி
(ஒலிப்பு முறை ஒழுக்கம்
நிறைந்த மொழி phonetic language). ரவி எடுத்துக்கூறியமைக்கு நன்றிகள்.
வல்லின ஒலிப்புகளை மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளனர் (2000
ஆண்டுகளுக்கும் முன்னால்!)
தாழ் என்பதில் வரும் தகரத்தைப் போலவே தாவணி என்பதையும் thaavaNi
என்றுதான் ஒலிக்க வேண்டும்.
காலப்போக்கில் ஒரே ஒரு வல்லினம் மட்டும் இம்முறையில் இருந்து திரிந்து
உள்ளது. அதுதான் சகரம்.
முதல் எழுத்தாக வரும் எல்லா இடங்களிலும், சகரம் ch என்றுதான் ஒலிக்க
வேண்டும். செல்வம், செல்வன், செல்வா, சட்டி, சொல், செப்பு என்று எல்லா
இடங்களிலும் chelvam, chelvan, chelvaa... என்றுதான் ஒலிக்க வேண்டும்.
ஆனால் இவற்றுள் சில காற்றொலி கலந்து Selvam, Selvan, Selvaa என்று
ஒலிக்கின்றனர். இது திரிபு.
எச் செல்வம், அச் செல்வம், அச் சொல், அழகுச் செல்வன், புதுச் சட்டி என்று
கூறும் பொழுது சரியான இயல்பான வல்லின முதல் சகரம் (chagaram) வருவதைப்
பார்க்கலாம். எனவே இது ஒரு திரிபு (இது இன்னும் சிலர் ஷொன்னான் என்று
இன்னும் திரிக்கின்றார்கள்). இப்படி முதல் வல்லின சகரம் திரிவது மட்டும்
அல்லாமல், மிகப் பழங்காலத்தேயே
பசி, கசி, முதலான சொற்களில் மெல்லின மெய்யெழுத்து (ஞ் ) முன்னே வராத
இடங்களில் சகரம் காற்றொலி கலந்த சகரம் வருவது விதிவிலக்காக இருந்திருக்க
வேண்டும். அல்லது மிகப்பழங்காலத்திலேயே திரிந்திருக்க வேண்டும். பஞ்சு,
கெஞ்சு, குஞ்சு முதலான சொற்களில் வரும் "சு" ஜு என்று ஒலிப்பது
முறையானது, அதே போல் பசி, கசி என்பது, விதிப்படி பஜி , கஜி என்றுதான்
இருத்தல் வேண்டும். ஆனால் மெல்லின மெய் இல்லாது இடையே வரும் சகரம்
காற்றொலியாய் இருப்பது விதிவிலக்காக உள்ளது. குழந்தைகள் பசிக்கும் பொழுது
"அம்மா ரொம்ப பஜிக்குது" என்று கூறுவது தொல் இயல்பாய் இருக்கலாம்.
கஞ்சியை காஜி என்று கூறுவது இவ்வகையாய் இருக்கலாம். எப்படியாயினும்,
(மெல்லின ஒற்று (ஞ்) இல்லாமல்) இடையே வரும் சகரம் மட்டுமே விதி விலக்கு.
இதுவும் இன்று ஒரே சீராக ஒரு புது விதிப்படி வருவதே. முதலொலி சகரம்
காற்றொலியுடன் கூறுவது திரிபு அது விதியில் அடங்காதது (தமிழின் ஒலிப்புச்
சீர்மையைக் குலைப்பது).

செல்வா

On Sep 5, 9:15 pm, amachu <shriramad...@gmail.com> wrote:
> On Sep 6, 3:43 am, "ரவிசங்கர்" <ravishankar.ayyakka...@gmail.com>
> wrote:
>
>
>
> > //ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த
> > வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும்.
> > எனவே இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க
> > வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலிந்தே ஒலிக்கும்.//
>
> இதை எழுதுகிற போது சிறப்பித்துக் குறிக்க முற்காலத்தில் குறியீடுகள்
> பயன்படுத்தப் பட்டனவா? இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம்
> உள்ளிட்ட மொழிகள் அனைத்திலும் மூன்று க, ச, த, ட இருப்பதும் தமிழில்
> இல்லாததும் க x y z ங, ச x y z ஞ வரிசைப் படியே மற்ற மொழிகள் கையாளப்
> படுவதும் இவ்விடத்தே நோக்கத் தக்கது. எங்கோ இடையில் விடுபட்டிருக்க
> வேண்டும் என்றே தோன்றுகிறது.
>
> ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தாலோ அல்லது மெய்யெழுத்தை தொடர்ந்து
> வந்தாலோ வலித்து ஒலிக்க வேண்டுமென்பதை சுட்ட க வின் வேறு வடிவங்கள்
> தமிழில் இருந்தனவா? இதை 1, 2, 3 போட்டு சுட்டுவதை
> பார்த்திருக்கின்றேன்.
>

> http://www.thefreedictionary.com/simpleபாருங்கள்... simple இப்படி

செல்வா

unread,
Sep 21, 2007, 7:25:37 PM9/21/07
to விக்சனரி

> இதை எழுதுகிற போது சிறப்பித்துக் குறிக்க முற்காலத்தில் குறியீடுகள்
> பயன்படுத்தப் பட்டனவா? இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம்
> உள்ளிட்ட மொழிகள் அனைத்திலும் மூன்று க, ச, த, ட இருப்பதும் தமிழில்

> இல்லாததும் ..

தமிழில் இல்லை. தமிழ் முறையைப் பின்பற்றித்தான், _பின்னர்_
விரிவாக்கி பிற இந்திய மொழிகள் (சமசுகிருதம் உள்பட - ஆனால்
சமசுகிருதத்திற்கு என்று எந்த எழுத்து உருவும் கிடையாது) 4 ககர, சகர
என்று
ஆக்கினர். (1) சமசுகிருதம் தவிர்த்த இந்தோ ஐரோப்பிய மொழிகள்
எல்லாவற்றிலும்
சற்றேறக்குறைய a,b,c,d, e,f என்னும் முறையில் தான் அகரவரிசை அமைந்து
இருப்பதும்,
(2) உயரெழுத்துக்கள் தனியாக முதலில் வரிசைப்படுத்தப்படாமலும், (3)
உயிரெழுத்துகளில்,
குறில் நெடில் என்னும் வேறு பாடு இல்லமல் இருப்பது, (4) உயிர்மெய்
வடிவங்கள் (the so called
abugida) இல்லாமல் இருப்பதும், (5) க,ச,ட,த,ப, என்று பிறப்பியல்
ஒழுக்கத்துடன் consonants
சீராக வரிசைப்படுத்தாமல் இருப்பதும், சமசுகிருதம் தமிழில் இருந்து
இம்முறைகளைப் பெற்றமை உறுதி.
அதுமட்டுமல்ல, சமசுகிருதத்திற்கு இன்றளவும் தனியுரிமை கொண்ட எழுத்துரு
கிடையாது. கல்வெட்டுச்
சான்றுகளும் தமிழுக்கு முன்னர் கிடையாது. தமிழில் ககர, சகர முதலான வல்லின
எழுத்துகளில்
மிகப் பழங்காலத்திலும் வேறுபாடு குறிக்கும் வழக்கம் இல்லை (செக் நாட்டு
அறிஞர் காமில் சுவலெபில் இது பற்றி
ஆய்ந்து எழுதியுள்ளார்). தமிழின் அருமை பெருமைகளை அறியாதவர்கள் பலரும்
தாறுமாறாக எழுதி வருகின்றார்கள்.
உலகில் உள்ள பாதி மொழிகளின் எழுத்துகள் abugida முறை உள்ளது. அது தமிழ்
முறை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை.

செல்வா


On Sep 5, 9:15 pm, amachu <shriramad...@gmail.com> wrote:


> On Sep 6, 3:43 am, "ரவிசங்கர்" <ravishankar.ayyakka...@gmail.com>
> wrote:
>
>
>
> > //ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த
> > வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும்.
> > எனவே இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க
> > வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலிந்தே ஒலிக்கும்.//
>
> இதை எழுதுகிற போது சிறப்பித்துக் குறிக்க முற்காலத்தில் குறியீடுகள்
> பயன்படுத்தப் பட்டனவா? இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம்
> உள்ளிட்ட மொழிகள் அனைத்திலும் மூன்று க, ச, த, ட இருப்பதும் தமிழில்
> இல்லாததும் க x y z ங, ச x y z ஞ வரிசைப் படியே மற்ற மொழிகள் கையாளப்
> படுவதும் இவ்விடத்தே நோக்கத் தக்கது. எங்கோ இடையில் விடுபட்டிருக்க
> வேண்டும் என்றே தோன்றுகிறது.
>
> ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தாலோ அல்லது மெய்யெழுத்தை தொடர்ந்து
> வந்தாலோ வலித்து ஒலிக்க வேண்டுமென்பதை சுட்ட க வின் வேறு வடிவங்கள்
> தமிழில் இருந்தனவா? இதை 1, 2, 3 போட்டு சுட்டுவதை
> பார்த்திருக்கின்றேன்.
>

> http://www.thefreedictionary.com/simpleபாருங்கள்... simple இப்படி

Reply all
Reply to author
Forward
0 new messages