தமிழில் பிறமொழிச் சொற்கள்

17,138 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Sep 29, 2009, 10:19:22 PM9/29/09
to tamil_wiktionary

தெலுங்கு              தமிழ்
ஆஸ்தி-   செல்வம்
எக்கச்சக்கம்-     மிகுதி
கெட்டியாக- உறுதியாக
சந்தடி- இரைச்சல்
சாகுபடி- பயிரிடுதல்
சொகுசு-நேர்த்தி
சொந்தம்- உரிமை
தாராளம்- மிகுதி
நிம்மதி- கவலையின்மை
பண்டிகை- பெருநாள்
 
அரபு- தமிழ்
அசல்- முதல்
கஜானா- கருவூலம்
இனாம்- நன்கொடை
சவால்- அறைகூவல்
சாமான் -பண்டம்
ஜாஸ்தி-  மிகுதி
நகல்- போலி
பதில்- மறுமொழி
பாக்கி- நிலுவை
மாமூல்- வழக்கம்
 
பாரசீகம்-தமிழ்
அலாதி- தனி
கம்மி- குறைவு
சர்க்கார்- அரசு,அரசாங்கம்
சந்தா- கட்டணம்.
தயார்- ஆயத்தம்
கிஸ்தி-வரி, நிலவரி
குமாஸ்தா- எழுத்தர்
புகார்- குறை
ரஸ்தா- சாலை
வாபஸ்- திரும்பப் பெறுதல்
 
பிரெஞ்சு- தமிழ்
 
பீரோ- அலுவலகம்
ஒப்பித்தால்- மருத்துவமனை
எகோல்- பள்ளிக்கூடம்
கம்ராத்- தோழன்
கிஸ்தியோன் - கேள்வி
திரக்தர்- இயக்குநர்
கப்பிதோன் - தளபதி
சொல்தா- இராணுவ வீரர்
கொலேழ்- கல்லூரி
முசியே- அய்யா
 
ஆங்கிலம் - -தமிழ்
 
சினிமா - திரைப்படம்
பஸ் -பேருந்து
டிபன் -சிற்றுண்டி
டாக்டர்-மருத்துவர்
ஃபேன்- மின் விசிறி
ரேடியோ- வானொலி
வாட்ச் - கடிகாரம்
சோப்- வழலைக் கட்டி
லைட்- விளக்கு
டிக்கெட்- சீட்டு
 
வடசொல் -- தமிழ்ச்சொல்
அகம்பாவம்- தற்பெருமை.
அக்கிரமம்-முறைகேடு
அசுத்தம்- துப்புரவின்மை
அதிகம்- மிகுதி
அனுக்கிரகம்- அருள்
அபிவிருத்தி- வளர்ச்சி
அவசரம்- விரைவு
ஆகாரம் -உணவு
ஆசை- விருப்பம்
ஆதாரம்- அடிப்படை
ஆரம்பம்- தொடக்கம்
இந்திரியங்கள்-ஐம்பொறிகள்
இரசிகன் - சுவைஞன்
இருதயம்- உள்ளம்
இலட்சியம்- குறிக்கோள்
உஷ்ணம்- வெப்பம்
உதாரணம்- எடுத்துக்காட்டு
உபயோகம்- பயன்
ஏகாந்தம்- தனிமை
கருணை- இரக்கம்
கல்யாணம்- திருமணம்
கிரயம்- விலை
கும்பம்- குடம்
சகோதரன் - உடன்             பிறந்தான்
சங்கீதம்-இசை
சமாதானம் - அமைதி
சர்வகலாசாலை- பல்கலைக் கழகம்
சீக்கிரம்-விரைவு
சீலம்- ஒழுக்கம்
சுகந்தம்- நறுமணம்
சொப்பனம்- கனவு
ஞாபகம்- நினைவு
தருமம்- அறம்
தூரம்- தொலைவு
தேசம்--நாடு
நவீனம்.புதுமை/புதினம்
நாமம்- பெயர்
நிபந்தனை- கட்டுப்பாடு
பயம்- அச்சம்
பரம்பரை- தலைமுறை
பிரசுரம்- வெளியீடு
பிரபஞ்சம்- உலகம்
பிரயாணம்- பயணம்
பேதம்- வேற்றுமை
மகிமை- பெருமை
முத்தி/முக்தி- வீடுபேறு
வயோதிகம்- முதுமை வாலிபம்- இளமை
விவசாயம்- வேளாண்மை
 வேதம்-மறை
 
 
 
(¨`•.•´¨) Always
  `•.¸(¨`•.•´¨) Keep

HK Arun

unread,
Oct 6, 2009, 6:05:45 AM10/6/09
to tamil_wi...@googlegroups.com

//அசல்- முதல்//

“அசல்” அரபு சொல் என்று எவ்வாறு திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள்? (அசல் - நகல் என்று தான் இதுவரை பயன்படுத்தி வருகின்றேன்.)

Original?

First?

இச்சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன?






Venkatachalam Subramanian

unread,
Oct 6, 2009, 6:55:53 AM10/6/09
to tamil_wi...@googlegroups.com
ஓம்.
அன்புடையீர்! வணக்கம்.
சாவி என நாம் பயன்படுத்தும் சொல் போத்துகீஸ் மொழியிலிருந்து வந்தது. தமிழில் திறவு கோல் என்று , காரணப்பெயரால் கூறப்பட்டது.

அருவி -தமிழ்ச் சொல்.
நீர்வீழ்ச்சி ஆங்கிலத்திலிருந்து waterfalls.இலிருந்து வந்தது.

மொழி இயல் வல்லுனர்கள் சொல்வதிலிருந்துதான் ’அசல்’ அரபு மொழியிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது.

அசல்-முதல்
நகல்- போலி

போலி என்பது தவறான பொருள் தருமா?
இலக்கணம் போன்று அமைந்த சொல் சற்று மாறியமைந்த போது இலக்கணப் போலி என்று அழைக்கப்படுகிறது.

வாய்க்கால்
கால்வாய்

original. சரியான பயன்பாடு ’முதன்மை’ எனக்கொள்ளலாம்.
first-  ’முதல்படி’ எனக் கொள்ளலாம்.

நீலம்- என்ற வண்ணத்தைக் குறிக்கும் சொல் வடமொழி என்பர்.
தமிழில் நீல வண்ணத்தை புகைமம் என்று கூறப்படுகிறது.

எந்தச் சொல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதை ஆய்ந்து முடிவுக்கு வரவேண்டும்.

கலெக்டர் என்பதற்கு -மாவட்டத் தண்டல் நாயகம் என்று சொல்வதால் எந்த புரிதலும் இல்லை.

கலை சொற்கள் உருவாவதில் பலவித கோட்பாடுகள் பேசப்படுகின்றன.
உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
2009/10/6 HK Arun <hkt...@gmail.com>

Sri Sritharan

unread,
Oct 6, 2009, 7:34:04 AM10/6/09
to tamil_wi...@googlegroups.com
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்பினால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளன. அவை அரபுச் சொற்கள் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளன. அவற்றில் சில:

அசல், அத்தர், அண்டா, அமல், அல்வா, அமினா, அயன், அனாமத்து, அக்கப்போர், ஆசாரி, இனாம், இலாகா, ஊதுபத்தி, கசாப்பு, கச்சா, கஜானா, கம்மி, கிராக்கி, கெடுபிடி, கிஸ்தி, குமாஸ்தா, கைதி, குத்தகை, சர்க்கார், சர்பத், சலாம், சிப்பந்தி, டபேதார், தரகர், தண்டோரா, தராசு, நகல், நமூனா, பட்டுவாடா, பந்தோபஸ்து, பலே, பூந்தி, பைசல், பேஷ், மசோதா, மராமத்து, ,மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து, வஜா, வாபஸ், வாய்தா, ஜாமீன், ஜாஸ்தி, ஜோர், ஜில்லா, ஜமீன், மைதானம் ஆகியன.

ஆதாரம்: http://bharathiassociation.blogspot.com/2008/11/blog-post.html

அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 6, 2009, 7:47:46 AM10/6/09
to tamil_wi...@googlegroups.com
2009/10/6 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

ஓம்.
அன்புடையீர்! வணக்கம்.
சாவி என நாம் பயன்படுத்தும் சொல் போத்துகீஸ் மொழியிலிருந்து வந்தது. தமிழில் திறவு கோல் என்று , காரணப்பெயரால் கூறப்பட்டது.


சுருக்கமாக "திறப்பு" என்போம் இலங்கையில்.

 [..]


மொழி இயல் வல்லுனர்கள் சொல்வதிலிருந்துதான் ’அசல்’ அரபு மொழியிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது.

அசல்-முதல்
நகல்- போலி

போலி என்பது தவறான பொருள் தருமா?
இலக்கணம் போன்று அமைந்த சொல் சற்று மாறியமைந்த போது இலக்கணப் போலி என்று அழைக்கப்படுகிறது.


"copy" எடுத்தலை போலி எடுத்தல் என்றா சொல்வது ? பிரதி என்பதும் தமிழ் அல்ல எனக் கருதுகிறேன்.
 
வாய்க்கால்
கால்வாய்

original. சரியான பயன்பாடு ’முதன்மை’ எனக்கொள்ளலாம்.
first-  ’முதல்படி’ எனக் கொள்ளலாம்.


original - மூலம் ?

தமிழ்நாட்டில் "அசால்ட்" என ஒரு சொல் நிதானம் அல்லது மெத்தனம் அல்லது கவனயீனத் தனமைக்குப் பயன்படுத்தப்படுவதாகக் தெரிகிறது. அது தமிழ் சொல்லா? தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில்தான் அது புழக்கத்தில் உளதா? அதன் சரியான பொருள் என்ன? (கமலஹாசன் இரு தினங்கள் முன்னர் ஒரு தொலைக்காட்சி செவ்வியல் "அசால்ட்டாக" என இடையில் குறிப்பிட்டார்)

~சேது

ரவி

unread,
Oct 6, 2009, 9:40:27 AM10/6/09
to விக்சனரி
தமிழக ஊர்ப்புறங்களில் சாவிக்குப் பதிலாக திறவச்சி (திறக்கும் குச்சி
என்பதன் திரிபு என நினைக்கிறேன்) என்று சொல்லும் வழக்கம் இன்றும் உண்டு.

**
copy - படி.

எ-கா: எனக்கு The alchemist புத்தகம் 5 படிகள் வேண்டும்; அதைப் படி எடு.

**
அசால்ட் தமிழ் இல்லை. ஆங்கிலத்தில் (assault? அகரமுதலியில் உள்ள பொருள்
பொருந்தவில்லை) இருந்தோ வேறு மொழியில் இருந்தோ வந்த சொல் பொருள் திரிந்து
பயன்படலாம்.

அசால்ட் = casual என்ற பொருளில் வருகிறது.

தென்மாவட்டங்கள் இல்லை, தமிழகம் முழுதும் இந்தப் பயன்பாடு உண்டு.

**

ரவி

Reply all
Reply to author
Forward
0 new messages