iDNS and Tamil Glossary

22 views
Skip to first unread message

Avarangal

unread,
Apr 4, 2010, 6:51:07 AM4/4/10
to விக்சனரி
Please translate the followings

References


Domain Name System
திரளம் Domain
iDomain
iDNS
DNS
international DNS
international
int (as in international)
International Domain Name System
reference
comment
note

Vocabulary
Glossary

See:
http://www.araichchi.net/kanini/IDNS/Tamil_IDNS.html

Thanks
Sinnathurai

இராமகி

unread,
Apr 5, 2010, 11:04:33 AM4/5/10
to விக்சனரி
Domain Name System கொற்றப் பெயர்க் கட்டகம்
Domain = கொற்றம்
iDomain = வலைக்கொற்றம்
iDNS = வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
DNS = கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
international DNS = பன்னாட்டுக் கொப்பெகம்
international = பன்னாட்டு
int (as in international) = பன்னாட்டு
International Domain Name System = பன்னாட்டுக் கொற்றப் பெயர்க்
கட்டகம்
reference = எடுகோள்
comment = முன்னிகை
note = குறிப்பு
Vocabulary = சொற்றொகுதி
Glossary = சொல்லடைவு

அன்புடன்,
இராம.கி.

த*உழவன்

unread,
Apr 5, 2010, 11:37:21 AM4/5/10
to tamil_wi...@googlegroups.com
 reference (= எடுகோள்) என்பது மேற்கோள் என்று அதிகமாகத் தமிழகத்தில் கையாளப்படுகிறதே? எடுகோள் எதிர் மேற்கோள் என்பதைப் பற்றி அறிய ஆவல்

2010/4/5 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary



--
(.!.) த*உழவன்
-------* தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை

Sinnathurai Srivas

unread,
Apr 5, 2010, 2:04:17 PM4/5/10
to tamil_wi...@googlegroups.com
translate this too please.


network
internet
intranet
dns
கொற்றம்/திரளம்      Domain (which is correct)


!!!!!!!!! there is a confusion here. both are used.
Internationalized domain name
Internet  domain name

is it IDN
is it IDN

is it also IDNS

i see "pynycode", yes "PUNYCODE" used !!!
http://en.wikipedia.org/wiki/Internationalized_domain_name

http://en.wikipedia.org/wiki/Internationalized_domain_name


--- On Mon, 5/4/10, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:

இராமகி

unread,
Apr 5, 2010, 7:34:56 PM4/5/10
to விக்சனரி
”மேற்கோள்” என்பது நெடுநாளாய் இருப்பது தான். அதையும் பலகாலம்
பயன்படுத்தியிருக்கிறேன். மேற்கொள்ளுதல் என்னும் போது கடைப்பிடித்தல்
என்ற பொருட்பாடு தானாக வந்துவிடுகிறது. reference என்பது அப்படியில்லை.
ஒரு குறிப்பிட்ட செய்திக்கு “இன்னாரும் இப்படிச் சொல்லியிருக்கிறார்”
என்று உரைப்பது reference ஆகும். ”மேல்”, ”கீழ்” என்ற முன்னொட்டுகளைத்
தவிர்க்குமாப் போல், "இதை இங்கு எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லும்
வகையில் ”எடுகோள்” வந்தது. சற்று தெளிவு காட்டலாமே என்று தான் எடுகோள்
என்று சொன்னேன்.

ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் உங்கள் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.


On Apr 5, 8:37 pm, த*உழவன் <tha.uzha...@gmail.com> wrote:
>  reference (= எடுகோள்) என்பது மேற்கோள் என்று அதிகமாகத் தமிழகத்தில்
> கையாளப்படுகிறதே? எடுகோள் எதிர் மேற்கோள் என்பதைப் பற்றி அறிய ஆவல்

> reference

> -------* தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை- Hide quoted text -
>
> - Show quoted text -

த*உழவன்

unread,
Apr 6, 2010, 12:53:11 AM4/6/10
to tamil_wi...@googlegroups.com
தவறோ,சரியோ சில குறிப்பிட்டச் சொற்களை மட்டும், திரும்ப திரும்ப வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதை நானும் வெறுக்கிறேன். நீங்கள் தரும் விளக்கத்தை இரசிக்கவே கேட்டேன். உங்கள் கருத்து, எனக்கு உகந்ததாகவே இருக்கிறது. ஏற்பேன்.காப்பேன். ஓங்குக தமிழ் வளம்.



2010/4/6 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
To unsubscribe, reply using "remove me" as the subject.

சுந்தர்

unread,
Apr 6, 2010, 3:07:33 AM4/6/10
to விக்சனரி
> reference (= எடுகோள்) என்பது மேற்கோள் என்று அதிகமாகத் தமிழகத்தில்
> கையாளப்படுகிறதே? எடுகோள் எதிர் மேற்கோள் என்பதைப் பற்றி அறிய ஆவல்

ஆம், இராமகி ஐயா விளக்கவும். hypothesis என்பதையும் எடுகோள் எனக்
குறிக்கக் கண்டுள்ளேன்.

- சுந்தர்

On Apr 5, 8:37 pm, த*உழவன் <tha.uzha...@gmail.com> wrote:

M.Mauran

unread,
Apr 6, 2010, 5:17:01 AM4/6/10
to tamil_wi...@googlegroups.com
Domain என்பதற்கு கொற்றம் என்பது நன்றாக இருக்கிறது.

இராம. கி ஐயா தன்னுடைய நடையில் இச்சொல் எப்படி இதற்கு அமைந்தது என்பதை விளக்கி சிறு குறிப்பொன்று தந்தால் நண்பர்களுடன் இந்தச் சொற்காரணத்தை பகிர்ந்துகொள்ள உதவியாயிருக்கும்.

நன்றி.

மு. மயூரன்


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2010/4/6 சுந்தர் <balas...@gmail.com>

Ravi

unread,
Apr 6, 2010, 6:11:41 AM4/6/10
to tamil_wiktionary
domain என்பதற்கு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று பொருள் வரும். இதனை ஒட்டி domain name = ஆட்களப் பெயர் என்று சில இடங்களில் பயன்படுத்தி இருக்கிறேன்.


தற்காலத்தில் domain என்ற சொல் உயிர்வேதியியல் போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுகிறது. இதனையும் கருத்தில் கொண்டு சொல் வேண்டும்.

கொற்றம் என்பதற்கு

http://dsal1.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:7069.tamillex

பக்கத்தில் காணப்படும் 4வது பொருள் பொருந்தி வருகிறதோ

2010/4/6 M.Mauran <mma...@gmail.com>



--
1 GB @ 10 USD per year web hosting.

http://milkhost.com/

இராமகி

unread,
Apr 6, 2010, 7:05:30 AM4/6/10
to விக்சனரி
அது குவிதற் பொருளில் தொடங்கியது. பின் பொருள் வளர்ச்சி பெற்று வீடு
என்னும் பொருள் தருமாறு குடில், குடிசை என்ற சொற்கள் எழுந்து சிறு
வாழிடங்களைக் குறிக்கும். குடு>குடி, கூடு, கொட்டு* என்பவையும் இதே
பொருளில் வந்தவை. [குவிதற் பொருளில் இருந்து இன்னும் நகர்ந்து
கோளப்பொருள் தோன்றும். (கொட்டை = உருண்டை விதை, பஞ்சுக் கொட்டை இன்று
மேலை நாடுகளில் cotton என்று பரவியிருக்கிறதில்லையா? கோளப் பொருட்
சொற்களை இங்கு நான் கூறவில்லை. அவை ஏராளம்.)

கூடு பெரிதாகிக் கூடம் ஆகியது. பெரும் மாளிகைகளில் கூடம் இருக்கும்.
கொட்டு* பெரிதாகிக் கொட்டம் என்றாகியது. கொட்டம் = பெரிய
வீடு.கொட்டத்தில் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதால், அதிகாரம் செய்வதால்
கொட்டம் அடிக்கிறான் என்ற தொடர் புழங்கும். கொட்டம் = பெருந்தனக்காரரின்
தன்மை. பண்ணையார் வீட்டில் மாட்டுத் தொழுவம் மாட்டுக் கொட்டம் எனப்படும்.
கொட்டில் என்றாலும் அதே பொருள்தான். கொட்டிலுக்குக் குடில் என்றும்
பொருள் உண்டு.

கொட்டத்திலும் பெரியது கொட்டகாரம்>கொட்டாரம் = அரச மாளிகை. நாஞ்சில்
நாட்டிலும், மலையாளத்திலும் அரண்மனை அப்படித்தான் அழைக்கப் படும்.
சிவகங்கைப் பக்கம், வளவிற்கு நடுவில் இடப்படும் கூரை கொட்டகை எனப்படும்.
ஏன் பந்தல் கூடக் கொட்டகை என்று சொல்லப்படும். [திருமணங்களுக்குக்
கொட்டகை போடுவார்கள் (கூரை கூம்பு வடிவத்திலே அரை உருளை - half
cylindrical - குவிந்து இருக்கும்.) [வீடு, மாளிகை, அரண்மனை தொடர்பான
சொற்களும் நிறையவே இருக்கின்றன.]

ஒரு பெரும் பண்ணையின் நடுவில் பண்ணையாரின் கொட்டாரம் இருக்கும்.
கொட்டாரத்தின் ஆட்சி அதனைச் சுற்றிலும் நிலவும். பண்ணையாரை/நிலக்கிழாரை
கொட்டாரம் என்றே நாட்டுப் புறத்திற் சொல்லுவார்கள். [வீட்டில் இருந்து
பண்ணையாருக்கும். பின் அவர் ஆளும் நிலத்திற்கும், ஆட்சிக்கும் பொருள்
விரியும்.) கொட்டாரத்தைச் சுற்றி வட்டமாய் இருப்பது கோட்டை.

டகர, றகரப் போலியில் கொற்றம் என்ற சொல் எழும். அது இதே போல் அரசனுக்கும்,
அரசன் வீட்டிற்கும், அரசனின் ஆட்சிக்கும், அவன் பரப்பிற்குமாய் விரியும்.

ஆங்கிலத்திலும் domain என்பது இதே பொருளைக் காண்பிக்கும். Online
etymological dictionary யைப் பாருங்கள். domus என்பது வீட்டைக்
குறிக்கும். பின் விரிந்து பண்ணையார்/நிலக்கிழார்/ஆட்சியாளர் வீட்டைக்
குறிக்கும்.

கொற்றம் = ஆட்சிப் பரப்பு. அங்கு அரசனின் அதிகாரமும் ஆணையும் விரியும்.
கொற்றங் கொள்ளுதல்/கொற்றமேவுதல் = to dominate.
கொற்றவன் = ஆட்சியாளன்.

ஓரளவு விளக்கியுள்ளேன் என்று எண்ணுகிறேன். இன்னும் விரிவான விளக்கம்
வேண்டுமென்றால் தனிப் பதிவு தான் போடவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.


On Apr 6, 2:17 pm, "M.Mauran" <mmau...@gmail.com> wrote:
> Domain என்பதற்கு கொற்றம் என்பது நன்றாக இருக்கிறது.
>
> இராம. கி ஐயா தன்னுடைய நடையில் இச்சொல் எப்படி இதற்கு அமைந்தது என்பதை விளக்கி
> சிறு குறிப்பொன்று தந்தால் நண்பர்களுடன் இந்தச் சொற்காரணத்தை பகிர்ந்துகொள்ள
> உதவியாயிருக்கும்.
>
> நன்றி.
>
> மு. மயூரன்
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
> [http://www.google.com/profiles/mmauran]
>

> 2010/4/6 சுந்தர் <balasun...@gmail.com>

> > To unsubscribe, reply using "remove me" as the subject.- Hide quoted text -

Prasath Babu

unread,
Apr 6, 2010, 7:41:47 AM4/6/10
to tamil_wi...@googlegroups.com

இது மிக அருமையாக புரிகிறது ஐயா. 
மிக்க நன்றி.

பணிவுடன்,
பிரசாத் 

2010/4/6 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Apr 6, 2010, 7:54:51 AM4/6/10
to tamil_wi...@googlegroups.com
2010/4/6 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:

> ஏன் பந்தல் கூடக் கொட்டகை என்று சொல்லப்படும். [திருமணங்களுக்குக்
> கொட்டகை போடுவார்கள் (கூரை கூம்பு வடிவத்திலே அரை உருளை - half
> cylindrical - குவிந்து இருக்கும்.) [வீடு, மாளிகை, அரண்மனை தொடர்பான
> சொற்களும் நிறையவே இருக்கின்றன.]
>

திருமணம் நடைபெறும் பெண் வீட்டில் "கொட்டகைக்கால்" என்ற வைபவமும் உண்டு
நெல்லைப் பக்கங்களில். எனது சிறு வயதில் சாத்தான்குளத்தில் எனது அத்தை
அவர்கள் திருமணத்தில் நடந்தது எனது நினைவில் தற்போதும் உள்ளது. திருமணம்
நடைபெறுவதற்குச் சில நாட்கள் முன் பூசை ஒன்று நடத்தியபின் கொட்டகை
போடுபவர்கள் ஒரு கம்பத்தை நிறுத்தி அதன் பின் பணிகளைத் தொடங்குவார்கள்.
அரை உருளை வடிவம் அங்கு இருந்ததாக நினைவில் இல்லை. கிடையான கூரைதான் என
நினைவு. "கொட்டகைக்கால்" வைபவம் நடைபெறும் நாளன்றே மணமகன் இல்லத்தில்
"பொன்னுருக்கல்" வைபவம் நடைபெறுவதும் வழக்கம். அது ஆசாரியார் தாலியைச்
செவ்வதற்காக பொன்னை உருக்குவது.

~சேது

இராமகி

unread,
Apr 6, 2010, 9:20:20 AM4/6/10
to விக்சனரி
இதற்கு விடையெழுதினேன். எப்படியோ வராது போயிற்று. என்ன தப்புச் செய்தேன்
என்று விளங்கவில்லை. என் கணியிலும் சேமிக்காத காரணத்தால் மீண்டும்
எழுதுகிறேன்.

hypothesis = கருதுகோள். இது முடிந்த முடிவல்ல. நாம் கருதுவதை முதலிற்
சொல்லி அதன் மூலம் பல்வேறு தேற்றுக்கள்/தேற்றங்களை நிருவி, அதன் மூலம்
கருது கோளை ஏற்றுக் கொள்ளுவோம். குறைந்த அளவு கருதுகோள்களைக் கொள்ளுவது
கருதுகோட் சிக்கனம் (parsimony of hypotheses) என்பார்கள். ஐந்தே ஐந்து
கருதுகோள்களைக் கொண்டு யூக்லிட் வடிவியல் (Euclid geometry) எழும்பும்.
அதில் ஒரு கருதுகோளை அசைத்து மற்ற யூக்லிட் தாரா வடிவியல்கள் (Non-
Euclidean Geometries)
அமைக்கப்படும்.

thesis என்பதற்கு முந்தியது hypothesis. தமிழில் கருதுதல் என்பது பல்வேறு
உகப்புக்களை எண்ணிப் பார்ப்பது. அதன் வழி செயலாக்கத்தின் பின் தெளிவை
அடைவது. தேற்று (thesis) என்பது தெளிவே. தேற்றம் = theorem.
தேற்றை = theory.


அன்புடன்,
இராம.கி.

n Apr 6, 12:07 pm, சுந்தர் <balasun...@gmail.com> wrote:
> >  reference (= எடுகோள்) என்பது மேற்கோள் என்று அதிகமாகத் தமிழகத்தில்hypothesis


ளப்படுகிறதே? எடுகோள் எதிர் மேற்கோள் என்பதைப் பற்றி அறிய ஆவல்
>
> ஆம், இராமகி ஐயா விளக்கவும். hypothesis என்பதையும் எடுகோள் எனக்
> குறிக்கக் கண்டுள்ளேன்.

> hypothesis

> > -------* தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை- Hide quoted text -

Selva Murali

unread,
Aug 13, 2010, 10:47:55 PM8/13/10
to tamil...@googlegroups.com, tamil_wiktionary

நண்பர் செல்வமுரளி  Selva Murali <murali1...@gmail.com> wrote:

> அடியேனுக்கு ஒரு விசயம் புரியவில்லை
>
> கொற்றப் பெயர் என்பது புரிகிற மாதிரி இல்லையே.....
>
> டொமைன் என்பதை களம் என்று சிலர் கூறுகிறார்கள். அடியேனும் களப்பெயர்
> என்றே எழுதிவருகிறேன்.
> அப்படியிருக்க கொற்றம், முற்றம் என்றால் புரியவில்லை?
>
> தவறாக நினைக்கவேண்டாம்.
 
என்று குழம்பியிருந்தார்.  அதற்கு என் மறுமொழி:
 
 
அடடா!
 
“குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே!” என்ற வசனத்தைக் கேள்விப்படாமலேயே ஒரு
தலைமுறை வளர்ந்திருக்கிறதா!
 
மனோகரா படம் பார்த்திருக்கிறீர்களா?
 


மிக்க நன்றி! மணிவண்ணன் சார்.
என்ன செய்ய,
நாங்கள் இருந்ததெல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குக்கிராமம். இன்று அதன் நிலை அப்படித்தான்.
எங்கள் ஊரில் இணையம் பயன்படுத்ததொடங்கிய முதல் ஆள் அடியேன்தான்.

நாங்களாவது மனோகரா என்றால் சிவாஜி நடித்தபடம் என்று தெரியும். அடுத்த தலைமுறைக்கு ? தான்.
நிறைய தமிழ்புத்தகங்களை படிக்கவேண்டும் போல....
படிப்போம் :)

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudlayer.in
----------------------------------------------------------

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Aug 14, 2010, 12:50:13 AM8/14/10
to tamil_wi...@googlegroups.com
2010/4/6 Ravi <ravishankar...@gmail.com>:

> domain என்பதற்கு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று பொருள் வரும். இதனை
> ஒட்டி domain name = ஆட்களப் பெயர் என்று சில இடங்களில் பயன்படுத்தி
> இருக்கிறேன்.
>
>
> தற்காலத்தில் domain என்ற சொல் உயிர்வேதியியல் போன்ற பல்வேறு இடங்களில்
> பயன்படுகிறது. இதனையும் கருத்தில் கொண்டு சொல் வேண்டும்.
>
> கொற்றம் என்பதற்கு
>
> http://dsal1.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:7069.tamillex
>
> பக்கத்தில் காணப்படும் 4வது பொருள் பொருந்தி வருகிறதோ
>
> 2010/4/6 M.Mauran <mma...@gmail.com>
>>
>> Domain என்பதற்கு கொற்றம் என்பது நன்றாக இருக்கிறது.
>>
[..]

Domain க்கு "ஆள்களமையம்" எனும் சொல் பாவித்தல் இலங்கையில் நிலைத்துள்ளது.

சர்வேஸ்வரனின் வலைப்பதிவு பார்க்கவும் :
http://l10n-tamil.blogspot.com/2010/08/blog-post.html [Monday, August
9, 2010
தமிழில் இணைய முகவரிகள்!]

அவர் சுட்டும் முதல் தளம்
http://தளம்.ஆள்களமையம்.இலங்கை

அவர் சுட்டிய வேறு இரு தமிழ் முகவரிகள் :

http://தளம்.பாராளுமன்றம்.இலங்கை
http://தளம்.அரசு.இலங்கை

அவற்றில் முதலாவது சரியாக இயங்குகிறது. இரண்டாவது தவறாக ஒரு cgi bin கு
செல்லுகிறது. [அது போக வேண்டிய தளம்
http://www.gov.lk/gov/index.php?option=com_cat&Itemid=63&lang=ta என
நினைக்கிறேன்]

~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages