பேசாத பொருளில்லை அவனியிலே, அவ்வாறிருந்தால் அங்கே தேவனுக்கு இடமில்லை.
Regards,

தனக்குப் பிடித்த தலைவர் தேவர் என்றும், அவர் அரசியலில் எவ்வாறு இறங்கினார், அவர் அரசியலில் என்னென்ன சவால்களை சந்தித்தார், அவரது செல்வாக்கு, அவரது சமகால தலைவர்களைப் பற்றியும் பேசும் வரலாற்று ஆய்வாளர் மருது மோகனின் பேட்டியை காண்பீர்.
இம்மானுவேல் கொலை வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி
விடுவிக்கப்பட்ட பின்னர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்,
காங்கிரஸின் அரசியல் பிறழ்வு பற்றிப் பேசும் தேவரின் உரையை
கேட்பீர்.
துரதிர்ஷ்டவசமாக இதில் முதல் பாகம் மட்டுமே கிடைத்துள்ளது.
நண்பர்களே,
தேவர் குருபூஜை விழாவை ஆய்வு செய்வதற்காக அக்டோபர் 27 முதல் 30 வரை
பசும்பொன்னில் தங்கி இருக்கிறேன்.
31ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை மதுரையில் இருக்கிறேன். 1ம் தேதி
மதுரையில் நண்பர்களை சந்திக்கிறேன்.
3ம் தேதி காலை 11 மணி முதல் 4ம் தேதி மதியம் 1 மணி வரை தஞ்சையில் இருக்கிறேன்.
5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் தங்குகிறேன். நவம்பர் 11ம் தேதி
சென்னையில் நண்பர்களை சந்திக்கிறேன்.
நவம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை எனது சொந்த ஊரான தேனி மாவட்டம்
தேவதானப்பட்டியில் தங்குகிறேன்.
சந்திக்க விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்.
நன்றி
09833753808
பசும்பொன் தேவர் நினைவு மண்டபத்தின் முகப்புத் தோற்றம்.
உள்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தேவர் சிலை மற்றும் சமாதி.
புதிதாக திறக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தின் வெளித்தோற்றம்.
தியான மண்டபத்தின் உட்புறத் தோற்றம்.
இரண்டு தினங்களில் வெளிநாடு செல்ல இருப்பதால் இன்றே தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்த பாமக தலைவர் ஜி.கே. மணி. நிருபர்களிடம் பேசிய அவர், தேவர்கள் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன. எனவே அவர்களுக்கு விசேஷ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முகநூல் நண்பர் திரு. மூர்த்தி மற்றும் எஸ். மரியூர் நகர தேவர் இளைஞர் அணியினர் விருப்பத்திற்கேற்ப நான் ஜோதியை திரு. பசும்பொன் அவர்களின் கையில் கொடுத்து தொடரோட்டத்தைத் துவக்கி வைத்தேன்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
28 அக்டோபர், 2012 9:49 pm-ல், Thevan <apth...@gmail.com> எழுதியது:
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
பசும்பொன் தேவரின் பொன்மொழிகள்
☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.
☼ தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.
☼ உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.
☼ ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.
☼ பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.
☼ ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக எல்லாரும் இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.
☼ அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
☼ வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.
☼ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.
☼ நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.
☼ ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.
☼ தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.
☼ உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
☼ யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்…? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.
☼ எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.
வியாசர் விருந்து
வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது.
அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அப்போது ராஜாஜி பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜி பேசிக் கொண்டிருந்த கருத்து கை தட்ட வேண்டிய கருத்தல்ல. சாதாரண பேச்சின் ஓட்டமாகத்தான் இருந்தது.
ஆனால் கைதட்டல் பலமாக இருந்தது. காரணம் என்னவென்று தெரியாமல் ராஜாஜி திகைத்து திரும்பிப் பார்த்தபோது தேவர் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் மக்கள் கைதட்டினர் என்பதை ராஜாஜி புரிந்துகொண்டார்.
“இப்போதுதான் நீங்கள் எதற்காக கைதட்டினீர்கள் என்று புரிந்தது” என்று சொன்ன ராஜாஜி தொடர்ந்து பேசி முடித்தார்.
ராஜாஜி பேசி முடிப்பதற்குள் தேவர் மேடையில் வந்து அமர்ந்தார். ராஜாஜி பேசி முடித்தததும் தேவரைப் பேசச் சொன்னார். புத்தகத்தில் கை வைத்து புத்தகத்தை பற்றி மட்டும் பேசுமாறு சைகை மூலம் தெரிவித்தார். அதைப் புரிந்துகொண்ட தேவர் பேச ஆரம்பித்தார். பேச்சின் தொடக்கத்திலேயே ராஜாஜி காட்டிய சைகை பற்றி பேசும் தோரணையில், “அடியேன் எப்போதும் எடுத்துக் கொண்ட பொருள் மீது எல்லை மீறாமல் பேசுகிற பழக்கம் உள்ளவன்” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார். அந்த சொற்பொழிவின் சாரம்.
தெய்வீகத்தை பெறுவதற்கு தடையாக இருப்பவை மூன்று ஆசைகள். அதில் ஒன்றைக் குறைத்து இரண்டாக்கினார்கள் ஞானிகள். மண், பொன், பெண் என்று மூன்று ஆசையாக இருந்ததை மண்ணாசையும், பொன்னாசையும் பொருள் ஒன்றுதான். மண் இருந்தாலும் பொன் கிடைக்கும், பொன் இருந்தாலும் மண் கிடைக்கும். ஆகையால் இந்த இரண்டையும் சேர்த்து ‘காஞ்சனம்’ என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம் என்று கருதினார்கள்.
பெண் என்ற ஒன்றைக் காமம் என்று வைத்தார்கள். ஆக, மூவாசை என்று வைத்த மண், பொன், பெண் என்ற மூன்றையும், ‘காம-காஞ்சனம்’ என்ற இரண்டாகக் குறைத்தார்கள். இந்த காம-காஞ்சனம் மூலம் வருகிற அழிவு என்ன? என்பதை, அகில இந்தியாவுக்கும் காட்டுவதற்காக, தமிழ் மூலம், நாட்டில் சிறப்பாக இலக்கியம் மூலம் காட்டுவதற்காகத்தான் இரண்டு நூல்கள் வந்தன.
“காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் துரியோதனன்
காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன்”
காமத்தின் மூலம் உலகம் எந்நிலை பெறும்? எந்நிலையில் உள்ளவனும் எவ்வாறு கெடுவான் என்பதை காட்டுவதற்காக ‘ராமாயனம்’ ஒரு நூலாக வந்தது.
காஞ்சம் என்ற மண்ணாசையையும், பொன்னாசையையும் வைத்து, பங்காளிக்கு உரியதைக் கொடுக்க மறுக்கும் காஞ்சனம் எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதைக் காட்டுவதற்காகவே ‘பாரதம்’ வந்தது.
அந்த இரண்டு முறையில், சாதாரணமாக வருகின்றவர்கள் நூலை ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் பொறுப்பு வாய்ந்த மேதைகள் அந்த நூலுக்கு ஆதாரமான குறிக்கோளை கவனிப்பார்கள். ஒரு கட்டடத்தை பார்க்கும் இருசாரரைப் போல. சாதாரணமாக ஒரு கட்டடத்தை அலங்காரத்திற்காக பார்க்கிற நபர்கள் மேலேயுள்ள சித்திரங்கள், சிற்பங்களை பார்ப்பார்கள். ஆனால் கட்டடம் எந்நிலையில் எவ்வளவு காலத்திற்கு உறுதியாக இருக்கும் என்பதை பார்க்கிற என்ஜினீயரிங் தொழிலில் இருப்பவர்கள் அதைப் பார்க்க மாட்டார்கள்.
புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை. புறத்தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம். அப்படியுள்ள நிலையில் இந்த இரண்டு நூல்களும் இரண்டு புதையுண்ட பொருட்களை வைத்துள்ளன. ராமாயணம் வைத்திருக்கின்ற புதைபட்ட பொருள்தான் வாதிஷ்டம் என்கின்ற ஞான நூலாகும். அதுபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைபட்ட பொருள்தான் ‘பகவத் கீதை’ அதிஞான நூலாகும்.
பாரதம், ராமாயணம் ஆகிய இரண்டில் ஞானிகள் எடுத்துக் கொள்வது வாதிஷ்டம், பகவத் கீதை என்ற இரண்டைத்தான். சாதாரண மனிதர்கள் எடுத்துக்கொள்வது நடந்த முறைகளைத்தான் என்பது பெரியோர் அறியோர் அறிந்ததே. அம்மாதிரியாக நின்ற இரண்டில், இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் பல விபரீத எண்ணங்கள் எழுந்துள்ளன. இப்படி விபரீத எண்ணங்கள் பல வரும் என்று கருதியே தமிழ் முன்னோடிகள் என்ன சொன்னார்கள்?
“முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”
என்று குறிப்பிட்டார்கள். முகத்தின் கண்கொண்டு புறத்தோற்றத்தை பார்க்கின்ற நபர்கள், அகத் தோற்றமாக இருக்கின்ற ஒன்றை காணச் சக்தியற்று, காணுவதற்கு முயற்சி செய்யாது, முயற்சி செய்பவனை வீணாக முயற்சி செய்பவன் என்று இகழ்ந்து, நல்ல காரியங்கள் அனைத்தையும் அவைகள் எல்லாம் கையாளுவதற்கு அனுபவத்திற்கு வராதவை, வர முடியாதவை, வரவேண்டாதவை என்று பலவீனத்தினால் மூன்றாக பிரித்துப் பேசி விடுகிறார்கள்.
இதை ஆங்கிலம் படித்தவன், அதெல்லாம் நடைமுறைக்கு உதவாத வெறும் தத்துவங்கள் என்று பிதற்றி, இப்படிப் பிதற்றுபவன் பெரிய மனிதனாகி, அவன் மூலம் ஞானம் பாழான காலம்தான் இந்தக் காலம். ஏனென்றால் நம்முடைய தாய்மொழித் தமிழிலேயே தகராறு ஏற்பட்டிருக்கும் காலம் இது. வடமொழி-தென்மொழி ஆகிய இரண்டும் நமது சொந்த மொழிகள்தான். இது அடியேன் சாகசத்திற்காகச் சொல்லுவதல்ல, சமாதானத்திற்காக சொல்வதல்ல, ஒப்புக்காகச் சொல்லுவதல்ல. இப்படிச் சொன்னால் கிடைக்கும் பலன் கருதி ‘பாப்புலாரிட்டிக்காகவும் சொல்லுவதல்ல. அந்த முறைக்குப் போவதும் எனக்குப் பழக்கமும் அல்ல. என் பிறவிக் குணமும் அதுவல்ல. நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்பர் சுவாமிகளை உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு தெய்வீகத் தமிழர். அவரைப் பற்றி இங்கு யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர் நமது மொழி பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?
சிவ பெருமானுக்கு லட்சணம் சொல்கின்ற பொழுது,
“வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் – தென் தமிழும் ஆணவன் காண்’’
என்று குறிப்பிடுகிறார். இது தெரிந்தால் சைவ சித்தாந்தியாக இருக்கின்ற எவரும் அப்பரை விட பெரிய சைவ சித்தாந்தியாக இருக்க முடியாது. வட மொழி நமக்கு உரியதல்ல என்று சொல்லும் பாவத்தை உடனே கைகழுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கடுத்தாற்போல் வடமொழி என்ற சமஸ்கிருதம் வருகின்ற காலத்தில் வட மொழிக்கு முக்கிய கர்த்தாவாக இருந்தவர்கள் பலர். இருப்பினும் வடமொழியை நன்றாக பயின்று தெய்வ கிருபையாலே 16 வயதிலேயே சர்வகாரியங்களையும் விரிவாக எழுதத் தெரிந்த நிலையில் இருந்தவர் ஆதிசங்கராச்சாரியார் ஆவார். அவர் பராசக்திக்கு மீனாட்சிக்கு லட்சணம் கூற வருகின்ற காலத்தில், மீனாட்சியின் முலைப்பாலுக்கு லட்சணம் கொடுக்கிறார்.
நாம் ஏன் மீனாட்சி என்று பெயர் கொடுத்தோம் என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும். நம்முடைய முன்னோர்கள் விஞ்ஞானம் தெரிந்தவர்கள் அல்ல. மெய்ஞானத்தை குருட்டு நம்பிக்கை கொண்டவர்கள் என்று நினைக்கின்ற ஆங்கிலப் படிப்பு இன்றைக்கு இருக்கின்றது. ஆகையால் நான் இதனை உங்களுக்கு வெளியிட ஆசைப்படுகிறேன்.
மீன்ட்சி என்பது வடமொழி. அங்கயற் கண்ணி என்பது தென்மொழி. இந்த இரண்டையும் தெரிவிக்க வேண்டிய இடம் மதுரை. அங்கயற் கண்ணி என்ற பெயரையும் மீனாட்சி என்ற பெயரையும் ஏன் பராசக்திக்குக் கொடுத்தார்கள்? என்று நாம் கருதுவோமானால், உலகிலேயே நித்திரையற்ற ஒரு ஜென்மம் இருக்கிறதென்றால், அது மீன்தான். நித்திரையற்ற நிலையில் இருக்கின்றதெல்லாம் யோகாரூடமான நிலையில் வசிக்கிறது என்பதுதான் சித்தாந்தம். அந்த முறைக்கு வருவதைத்தான்,
“நித்திரை கெட்டு நினைவோடு இருப்போருக்கு
முத்திரை ஏதுக்கடி குதம்பாய்?”
என்று குறித்து, ஆசனங்கள், முத்திரைகள் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களின் உடல் என்றைக்கும் நல்ல நிலையில் இருக்கும் என்று கண்டார்கள். அவ்வாறு நின்றதால்தான் உலக லௌகீக தோரணையில் அந்த மீனினம் உற்பத்தியாவதில்லை. ஆண் மீன் பெண் மீனை நோக்க – பெண் மீன் ஆண் மீனை நோக்க கருக்கொள்ளும், பார்வையால் கருக்கொண்டு, அது சினப்படைந்து முட்டைகளை ஈனும். அந்த முட்டைகள் தண்ணீரில் மிதந்து நிற்கும். அதற்கு ஒரு காலம் வருகின்ற காலத்தில் மீண்டும் அந்த இரு மீனும் அவற்றை நோக்க அவை குஞ்சுகளாக மாறும்.
நோக்கால் கர்ப்பம், நோக்க உற்பத்தி மீனினம் ஒன்றுக்கேதான். அவைகள் அப்படியானதன் பிறகு மிகச்சிறிய ரத்த அணுக்களாக மிதந்து கொண்டு நிற்கும் காலத்தில், விரால் போன்ற பெருத்த மீன்கள் பாய்ந்து சென்று இரையெடுக்கச் போகுமானால், அவை சின்னாபின்னமாக சிதைந்து அழிந்து போகும்.
இதற்காக அந்த ரத்தமாக நிற்கின்ற கொடி போன்ற இளம் மீன் குஞ்சுகள் கெட்டிபடும் வரை மீண்டும் பார்த்துப் பார்த்து பசியமர்த்தும் அந்த மீன் வர்க்கம். இதைத் தெரிந்துதான் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற பெரும்பாடலை மீனாட்சி குறித்துப் பாடினான் நமது தமிழன்.
இது பெருமைக்காகப் பாடியதல்ல. லௌகீகமாக, காம ரீதியாக வாழ்கின்ற வாழ்க்கையில் முலைப்பாலைத் தந்து பசியமர்த்த வேண்டும். தாய் பராசக்தி பார்வையாலேயே பசியமர்த்துவாள். அந்தப் பெருமைக்குரிய பராசக்தியை வணங்குபவர்கள் தமிழர்கள். இதை நாகரீகப் பெயரால் நமது விஞ்ஞானிகள் மீனினம் இப்படி வாழ்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இதைத் தெரிந்து பெயர் வைத்திருக்கிற நமது முன்னோர்கள்?
“எங்கள் தத்துவ ஞானிகள் எல்லாரும் சாதாரண விஞ்ஞானிகள் மட்டுமல்ல. அவர்கள் அனைவரும் அதிமேதையான விஞ்ஞானிகள்” என்று அன்றே குறிப்பிட்டார்கள். ஆகையால் ஒன்றும் தெரியாதிருந்த காலத்தில், மூடபக்தியை உண்டாக்கி தெய்வம் என்று மக்களை பாழ்படுத்தி விட்டார்கள் என்று கூறுபவர்களுடைய சித்தாந்தம், விவரமற்றவர்களின் சித்தாந்தமாகும். அப்படிப்பட்ட மீனாம்பிகைக்கு முலைப்பால் எப்படிப்பட்டது என்பதை அவர் குறிக்கின்ற நிலைமை வரும்பொழுதுதான் அந்த முலை உன்னாமுலை குறிக்கின்றார்கள். ஏன் அதை அப்படிக் குறிக்கின்றார்கள் என்று நீங்கள் கேட்பீர்களோயானால், அது சாதாரணமாக இயங்குவது அல்ல என்பதற்காகத்தான். சிவசக்திக் கூறையும் இரண்டாகப் பிரித்தது போன்றும் அவை ஒன்றே என்று குறிக்கின்றார்கள். அப்படி குறிக்கின்ற பொழுதுதான்,
“சிவம் சக்தி தன்னை ஈன்றும்
சக்தி சிவம் தன்னை ஈன்றும்
உவந்து இருவரும் புணர்ந்து உலகு உயிர்
எல்லாம் என்றும் பவன் பிரம்மச்சாரியாகும்
பான் மொழி கன்னியாகும்
தவம் தரும் ஞானத்தோருக்கு
இத்தன்மைதான் தெரியும் அன்றோ.”
என்று குறித்தது தமிழ் நாகரீகம். இந்த தன்மையில் நிற்கின்ற பொழுதுதான், அந்த பராசக்தியின் முலைப்பால் எத்தன்மையுடையது என்று சொல்லும் பொழுது, அது திருஞான சம்பந்த குழந்தைக்கு தரப்பட்ட காலத்தில், அதைப் பெறுவதற்காக நின்ற குழந்தையை யார் என்று ஆதிசங்கரர் குறிக்கிறார் என்று கேட்டால், ‘திராவிட சிசு’ என்று குறிக்கின்றார். எப்படி?
“வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் – தென் தமிழும் ஆணவன் காண்’’
என்று அப்பர் குறித்தாரே அதுபோல. இப்படி அம்பிகையின் திருமுலைப்பாலை வாங்குவதற்காக நின்ற குழந்தையை அவர் ‘திராவிட சிசு’ என்று குறிக்கின்றார். இதை ஆதிசங்கரரே குறிப்பாரேயானால், திராவிட என்ற ஒரு நாகரீகமே கிடையாது. தமிழ் என்ற ஒரு மொழியே கிடையாது. அதற்கு ஒரு அறிவு கிடையாது. எல்லாம் சமஸ்கிருதத்தினின்று மொழி பெயர்க்கப்பட்டவை என்று பேசும் பிராமணர்கள் அத்தனை பேரும் சங்கரருக்குப் பாவம் செய்தவர்கள் ஆவர். துரோகம் செய்தவராவார்கள்.
ஆகையால் இங்கே வடமொழி, தென்மொழி என்பவை இரண்டு பிளவை. இரண்டு சாரரும் உண்டு பண்ணினார்கள். ஒரு சாரர் மட்டுமல்ல இந்த இருசாரரும் பண்ணின பாவம்தான் இந்த இருசாரரையும் அழித்த, தனித்த நாஸ்தீகத்தில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறது.
இந்த வீண் சண்டை இல்லாதிருக்குமேயானால், இந்த விரயமான புத்தி தமிழ்நாட்டிற்கு வந்திருக்க மாட்டாது. அது தீர வேண்டும் என்பதுதான் இன்றைக்கு நாம் அடைய வேண்டிய விருந்தாகும். அந்த நிலைமைக்கு நாம் வருவோமேயானால், வாதிஷ்டத்தில் இருக்கின்ற ஞானத்தையும் நம்முடைய சிவஞானபோதத்திலும் திருக்குறளிலும் இருக்கின்ற ஞானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல. ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து நின்றதல்ல. ஒன்றை விட்டு ஒன்று இயங்க முடியாது என்பதை உத்தம இந்தியன் உணர்வான். இந்த நிலைக்கு வருகின்றபொழுது இது மற்றொன்றைக் காட்டுகின்றது,
“முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”
என்று மகான்கள் சொன்னார்களே, அவர்கள் எதன் மூலம் சொன்னார்கள் என்று கேட்டால், பகவான் இந்த பகவத் கீதையைச் சொல்கின்ற காலத்தில் “அர்ஜுனா, என்னுடைய விஸ்வரூபத்தை நான் உனக்குக் காட்டுகின்றேன். நீ அதை இந்தக் கண்கொண்டு பார்க்க முடியாது. அதைப் பார்ப்பதற்கு ஒரு கண் தருகிறேன்” என்று சொல்கிறார். அதே நேரத்தில் தான் குருடாக உள்ள அந்த அரச பரம்பரையில் உள்ள ஒருவருக்கு, “உனக்குத் கண்ணைத் தருகிறேன் நடக்கின்ற பாரதத்தை பார்க்கிறாயா?” என்று வியாசர் கேட்கிறார். அவர், “இந்தக் கொடுமையைப் பார்க்க எனக்கு கண் வேண்டாம்” என்று சொல்கிறார்.
ஆனால் தூரத்தில் இருக்கின்ற ஒன்றை, என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டே, அந்த முறையிலே வியாசர் அதைக் குறிக்கின்றார். கிருஷ்ண பரமாத்மா சொல்லுகின்ற இடத்திலிருந்து குறித்ததல்ல இது. நீண்ட தூரத்திற்கப்பாலிருந்து, “ஆத்ம சக்தியால் காதின்றி கேட்கலாம், கண்ணின்றி பார்க்கலாம், மூக்கின்றி முகரலாம், முடவனும் மலையேறலாம்” என்று சொல்லுகின்ற உபநிஷத்தின் லட்சணங்களுக்கிணங்க, தூரத்திலிருந்து கிருஷ்ண பரமாத்மா போதித்த ஒன்றை, இன்னதை போதித்தார் என்று எழுதியவர் வியாசர்.
அந்த நிலைக்கு வருகின்றபொழுது நெற்றிக் கண் என்ற ஞானக் கண் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே உலகிற்கு வந்த நூல் பாரதமாகும். ஆனால் இது இருக்க முடியுமா? அப்படி மூன்றாவது கண்ணைப் பார்த்தவர்கள் யார்? அப்பொழுது ஒற்றைக் கண் ஞானி என்று புத்தகத்தில் எழுதி இருக்கின்றார்களே அப்படி கேலிக் கூத்தாக இருப்பதா? என்று கேட்கின்ற காலம் இந்தக் காலம். நம்பு என்று சொல்லுகின்ற மாடல் 57 அல்ல.
உதாரணமாக காட்டவேண்டுவது கடமையாகும். இதிலே இரண்டு பேர் பிரசாங்கிகள், இரண்டு தன்மையில் தவறிழைக்கிறார்கள். பண்டிதர்கள் என்பவர்கள் பேசுகின்ற பொழுது தங்கள் பாண்டிதத்தை காட்டவேண்டியதற்காக பாமரனுக்குப் புரியாத நிலைமையில் பேசிப் பாழாக்குகின்றார்கள். அதேபோல பாமரனுக்குப் புரிகின்ற நிலையில் இலக்கியம் பேசுகிறேனென்று சொல்லி பண்டிதத் தன்மையிலுள்ள லட்சணம் தெரியாதவர்கள் வீணாக வார்த்தைக்கு மேல் வார்த்தைகளைக் கொட்டி மக்களைப் பாழாக்குகின்றார்கள்.
உத்தமப் பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற பொழுதுதான், பண்டிதனுக்கும் ரசிக்க வேண்டும், பாமரனுக்கும் புரியவேண்டும் என்று சொன்ன நாடு இந்த நாடு. அதுதான் பிரசங்கியின் கடமையாகும். அப்படி பிரசங்கத்திற்கு வருகின்ற பொழுது, மூன்றாவது கண் எத்தன்மையது என்பதை உங்களுக்கு உதாரணமாக அடியேன் காட்ட வேண்டும்.
மனிதனுக்குச் சும்மா இருக்கின்ற காலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சாக்கிராவஸ்தைக் காலம். இதே நபர்களுக்கு நித்திரையவஸ்தை என்ற ஒன்று உண்டு. அதுதான் சொப்பன அவஸ்தை என்று சொல்லப்படுகின்ற காலம். சொப்பனத்திலே, தூக்கத்திலே இருக்கின்ற காலத்திலே கண்ணைத் திறந்து கொண்டு தூங்குகின்றவர்களும் உண்டு. சிறுபான்மையினோர் பாதிக் கண்ணை திறந்துகொண்டு தூங்குகின்றவர்களும் உண்டு. பூராக் கண்ணையும் மூடிக் கொண்டு தூங்குகின்றவர்கள்தான் பெரும்பான்மையோர் ஆவார்கள். பூராவும் திறந்து தூங்கினாலும், சரிபாதி திறந்து தூங்கினாலும் சரி.
நித்திரை காலத்தில் பார்வை கிடையாது போனதன் காரணம் என்ன? அடியேன் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற காலத்திலேயே உங்களுக்கு ஞாபகம் பசி அதிகமாகிவிட்டது என்று வந்தாலோ, நேரமாகிவிட்டது என்று வந்தாலோ, வீட்டை நினைத்தாலோ என்ன ஆகும்? நான் பேசுகின்ற வார்த்தைகள் அலைகள் ரூபமாக வந்து உங்கள் காதுகளில் விழுந்தாலும் உள்ளே இருக்கின்ற சுலோதாம் என்கின்ற இயந்திரம் அதை வாங்கி ஒழுங்காக உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தாலும் ஞாபகம் ஆகிய மனம் வேறிடத்திற்குச் சென்றுவிட்டதால், நான் பேசியது உங்களுக்குக் கேட்காது. “என்ன சொல்லுகின்றீர்கள்? ஐயா, என்ன சொல்லுகின்றீர்கள்? ஒரு ஞாபகமாகவல்லவா இருந்தேன்” என்று சொல்வீர்கள். இது மனிதப் பழக்கம்.
அப்படியானால் மனிதன் உடம்போடு எங்கு இருந்தானோ, இந்த இடத்தில் ஐம்புலனும் இருந்தாலும் மனம் அதனோடு ஒன்றியில்லாதபோது அது மனம் இருக்கின்ற இடத்திற்குப் போகுமே தவிர, உடல் இருந்த இடத்திற்குப் போகாது என்பது சித்தாந்தம். ஆகையால்தான்,
“எத்தொழிலைச் செய்தாலும் ஏதவஸ்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே”
என்று குறித்தார்கள். அந்த நிலையைப் பெற்ற பெரியோர்தான் பூலோகத்தில் வாழ்ந்தாலும் வானுலகில் வாழ்ந்தார்கள் என்று குறித்தார்கள். அவர்கள் எழுதிய நூல்தான் பாரதமே தவிர, பூலோகத்தில் தன்னைப் பெரிய மனிதனாக்கிக் கொள்ள வேண்டுமென்று, அரசியல்வாதியைப் பின்பற்றி, பத்திரிகைக்காரனைப் பின்பற்றி வாழ்க்கையைப் பெரிது படுத்துவதற்காக இன்றைக்கு நூல் எழுதுகின்றார்களே நபர்கள், அப்படி எழுதிய நூல் அல்ல இந்த வியாசர் விருந்து. அந்த நிலைக்கு வருகின்றபொழுது மனம் ஒன்றிப்போனதால் நம்முடைய ஐம்புலனாகிய கண்ணுக்குப் பார்வை கிடையாது. அப்படி இருக்கின்ற பொழுது சொப்பனம் என்ற ஒன்று வருகின்றது.
சொப்பனம் வருகின்ற காலத்திலே அழகாக வருகின்ற உருவத்தைக் கண்டு நாம் சந்தோஷிக்கின்றோம். அருவருப்பான உருவத்தைக் கண்டும் நாம் அருவருப்படைகின்றோம். பயங்கரமான உருவத்தைக் கண்டு நாம் பயபீதியடைகின்றோம். இதைப் பார்ப்பது எந்தக் கண்? இதுதான் இந்த சபைக்கு நான் கொடுக்கக் கூடிய கேள்வியாகும். இந்தக் கண்ணுக்குப் பார்வை கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது சொப்பனத்தில் பார்வைகள் நடைபெறுகின்றன என்றால் அதைப் பார்ப்பதுதான் அகக்கண். அதைப் பார்ப்பதுதான் மனக்கண் என்பதை யோகிகளும் ஞானிகளும் கண்டார்கள். இதைக் கருமிகள் நித்திரையிலே அனுபவிக்கிறார்கள். அந்தக் கண் கிடைத்தது வியாசருக்கு. அதைக் கொண்டு எழுதினார் இந்த புத்தகத்தை என்பதுதான் அடியேன் இன்றைக்குச் சொல்ல வேண்டுவதாகும்.
அந்த நிலைமையில் அந்தத் தன்மையில் உயர்ந்து நின்றதுதான் இந்த பாரதம். அப்பாரதத்துக்குள்ளே பெருமணியாகக் கிடைத்ததுதான் இந்த பகவத் கீதை. எனவே வியாசர் முனிவர் எழுதிய மகாபாரதம் என்பதை ‘வியாசர் விருந்து’ என்பதன் பெயரால் ராஜாஜி அவர்கள் எழுதி வழங்கி உள்ளார்கள். அதனை வாங்கிப் படித்து பயனடைவது நமது கடமை”
இவ்வாறு தேவர் அந்த விழாவில் பேசினார்.
- முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
---------------------------------
தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும்
ஆன்மீக நடைபயணம்
பாசத்திற்குரிய உறவினர்களே, அன்புக்குரிய நண்பர்களே, மரியாதைக்குரிய பெரியோர்களே!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அண்மைக் காலமாக இந்த குருபூஜையின்போது விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
எனவே இந்த குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டுகோள் விடுத்து, அந்த தேவர் பெருமகனார் மற்றும் பெரியோர்களின் நல்லாசியுடன் ஆன்மீக நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஆகஸ்டு 15ம் தேதி பசும்பொன்னில் ஆரம்பிக்கும் இந்த பயணம் தென் மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியில் பசும்பொன்னில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு, பேறையூர், திருமங்கலம், மதுரை, உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், பழனி, கரூர், திருச்சி, கும்பகோணம், நாகபட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்திற்கான வழித்தடங்களை தீர்மானிக்க அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தோர் ஆலோசனை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பயணத்தில் தேவர் குருபூஜைக்கு வருவோருக்கு தேவரைப் பற்றிய விழிப்புணர்வும், பூஜைக்கு அமைதியாக வந்து செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படும். இந்த பயணத்திற்கு அனைவரும் நல்லாதரவு தருமாறு கோருகிறேன். இந்தப் பயணம் பற்றி அதிகம் அறிய விரும்புவோர் 9047440542 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம்.
இப்படிக்கு
உங்கள் அன்பன்
அ. பெருமாள் தேவன்
அன்பு நண்பர்களே,
தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரி ஆன்மீக நடைபயணம் நடத்த இருப்பதை அறிவித்ததும் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எப்போது வருவீர்கள், நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும், நாங்கள் எப்படி கலந்துகொள்வது என்று விசாரித்து தங்களின் பேராதரவை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இந்த தகவலுடன் ஆன்மீக நடைபயணத்திற்கான தோராயமான வரை படத்தை இணைத்திருக்கிறேன். இன்னமும் இந்தப் பாதை இறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு வட்டம், மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் எந்தப் பாதையில் செல்வது இந்தப் பயணம் பயன் மிக்கதாக இருக்கும் என்பதை தெரிவித்தால் அதற்கேற்ப இந்தப் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, தோராயமாக 2000 கி.மீ. நீளமுள்ள இப்பாதையை 75 நாட்களில் கடக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக இதில் யார் கலந்துகொள்ளலாம்? எவ்வாறு கலந்துகொள்ளலாம்? எவ்வாறு உதவலாம்? என்பதை விவரிக்க விரும்புகிறேன்.
யார் - எவ்வாறு கலந்துகொள்ளலாம்?
1. இந்தப் பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக 18 வயது நிறைவடைந்தவர்களாக, 45 வயதுக்கும் அதிகமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.
2. பங்குபெறுபவர்கள் தன்னிச்சையாகவே பங்கேற்க வேண்டும், யாரையும் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.
3. மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
4. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும்.
5. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
6. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்னதாக ஒரு படிவம் அளிக்கப்படும் அதில் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பித் தரவேண்டும்.
7. வேலை பாதிக்கப்படுவது, சம்பள இழப்பு ஏற்படும் நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது.
8. தான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும் என்ற நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
9. இந்தப் பயணத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் ஒருநாள் முழுவதுமாக பங்கேற்க வேண்டும். அதாவது 30 கி.மீ. தூரம் வரை பயணத்தில் கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்துகொள்பவர்கள் மட்டுமே இந்த பயணத்தில் கலந்துகொள்பவர்களாக கருதப்படுவர். அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு இறுதியில் ஆன்மீக நடைபயணத்தில் பங்கேற்றதற்கானச் சான்றிதழ் வழங்கப்படும்.
10. அதற்கும் மேலாக, 3, 7, 11, 15 நாட்கள், ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை என்ற கால அளவிலும் கலந்து கொள்ளலாம்.
11. இதில் ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக பயணத் துவக்கத்தில் நடைபெறும் திருப்பணி அர்ப்பணிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். அதாவது அவர்கள் துறவு மேற்கொள்வது போல தலையை மொட்டையடித்து, மஞ்சள் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். பயணம் நிறைவடையும் வரை சவரம் செய்ய அனுமதிக்கப்படாது.
12. நடை பயணத்தில் ஒரு நாள் பங்கேற்பவராக இருந்தாலும் அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்து வரவேண்டும்.
13. மஞ்சள் நிற ஆடையில் எந்தவித எழுத்துக்களோ, அடையாளங்களோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஜிப்பா, சட்டை, வேட்டி, பேன்ட் அனிந்துகொள்ளலாம்.
14. அதேபோல நடைபயணத்தின்போது புகைப்பிடித்தல், மது அருந்துதல், வேறு எந்த வகையிலான போதைப் பழக்கங்களிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
15. முக்கியமாக நடை பயணத் திட்டக் குழுவின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும்.
மேலும் ஏதாவது விவரம் தேவைப்படுபவர்கள் 9047440542-ல் என்னைத் தொடர்புகொள்ளலாம்.
நன்றி.
அன்புள்ள நண்பர்களே, சொந்தங்களே,
தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும் ஆன்மீக நடை பயணத்திற்கான அனுமதி கோரும் விண்ணப்பத்தை நேற்று மாலை 4 மணியளவில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான திரு கதிரவன் உடன் சென்று தமிழக காவல்துறை தலைவரான (டிஜிபி) ராமானுஜத்தைச் சந்தித்துக் கொடுத்தேன்.
அவர், சிபிஐ போலீசாருடன் கலந்தாலோசனை செய்துவிட்டு பதில் சொல்வதாக தெரிவித்துள்ளார். எனவே ஆகஸ்டு 15ம் தேதி துவங்க இருந்த இந்தப் பயணம் மேலும் ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்குத் தள்ளிப் போடப்படுகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவேளை இந்தப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி தராவிட்டால் பசும்பொன்னை சுற்றிலும் 50 கிமீ தூரம் வரையுள்ள கிராமங்களுக்குச் சென்று குருபூஜைக்கு வருபவர்களை அமைதியாக வந்துசெல்லுமாறு வேண்டுகோள் விடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
முன்னதாக நேற்று முன்தினம் (ஆகஸ்டு 11ம் தேதி) தி.நகரில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் பார்வேர்டு பிளாக் கட்சியின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த பல்வேறு தேவர் அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களின் மத்தியில் நடைபயணம் குறித்து அறிவித்தேன். பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதுவரை இந்தப் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதம் இல்லாமல் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லையேல் ஆட்சியில்லை. இன்றைய நிலைமை எப்படி வந்திருக்கிறது என்றால், ஆங்கிலப் படிப்பினால் ஒழுக்கத்தையே மறந்து சமுதாய, திறமை என்பதை மாத்திரம் பிரதானமாகக் கொண்டு வயிறு பிழைப்பதற்கு என்னென்ன முறைகளைக் கையாள வேண்டுமோ அவைதாம் அறிவாளிகளின் முறைகள் என்று கொண்டு, ஆத்மீக வளர்ச்சி, பழமை கர்நாடகமென்று ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.
- 29.5.1956 அன்று தேவர் மதுரை (தற்போது தேனி) மாவட்டம் பெரியகுளம் அர்ச்சகர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் ‘ஆகமம்’ என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றியபோது பேசியது.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ulagam...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.