Fwd: தொடக்கம் துவக்கம் என்ன வேறுபாடு ?

167 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 4, 2013, 7:34:00 AM11/4/13
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com
தொடையை துட என்பர் மலையாளியர். அதே ஒலித் திரிபைத் தான் தொடங்கு > துடங்கு என்பதிலும்  காணவியல்கின்றது.  இதில் பார்க்கப் படவேண்டியது என்னவென்றால் எது முதலில் தோன்றிய சொல் என்பது தான். தமிழில் உகரம் தான் ஒகரமாக மாறும். காட்டாக, உட்கார் .> ஒக்கார்; உடம்பு > ஒடம்பு; உடைந்து > ஒடஞ்சி.  எனவே துடங்கு தான் தொடங்கு என்று ஆகி இருக்க வேண்டும். துல் > துள் > துள்ளு என்பது முனைப்புக் கருத்து. ஆதலால் துல் > துள் > துட்  + அங்கு = துடங்கு என முனைப்புக் கருத்துடையது தொடங்கு என்பது - சேசாத்திரி


>இது கணேசருக்கு

>துட் = உ = துடு + கு = துடு(க்)கு என்றால் அதிக முனைப்பு. துடக்குத்தனமாக பேசு என்றால் அதிக முனைப்புடன் பேசு.

> துட் + இ = துடி.  துடி துடிப்பு என்றால் அதிக முனைப்பு, இயக்கம் என்று பொருள்.


-------------

சேசாத்திரி,

துவக்கு/துவங்கு என்பதற்கு துடக்கு(/தொடக்கு) என்பதுடன் பொருத்துகிறது சென்னைப் பேரகராதி.
ஆனால், துட- வேறு. துவ- வேறு.

தோக்கு > துவக்கு. (எ-கா: ஓச்சு- > உவச்சர் ...) என்பது பொருந்துகிறது.
தோக்கை - சீலையின் முற்பகுதி

நா. கணேசன்

பிரகாசு சுகுமாரன்:
>முதல்வர் கொடியசைத்து தொடக்கி வைத்தார் : பேருந்து இயக்கம் துவங்கியது.
> முனைந்து தூண்டுதல்; செய்தல் - இயல்பாக நிகழ்தல்.


ஆம், பிரகாசு. தொடக்கம், துவக்கம் இரண்டுமே தமிழ்தான்.
துவக்கு/துவங்கு < தோக்கு- என்னும் பழைய வினைச்சொல்.

சிலர் துவக்கு தமிழன்று எழுதுவது பிழை. தேவு ஐயா போன்றோர்
துவக்கம் என்று பயன்படுத்துதல் தவிர்க்கலாம் என்று எழுதுகின்றனர்.
தேவையில்லை என்பது என் கருத்து. துவக்கு/துவங்கு நீக்கம் தமிழ்ச் 
சொல்வளத்தைக் குறைப்பதாக முடியும்.

நா. கணேசன்

On Wednesday, August 8, 2012 3:05:35 AM UTC-7, Niranjan Bharathi wrote:
அனைவர்க்கும் வணக்கம்,

ஒரு சிறிய சந்தேகம்.

தொடக்கம், துவக்கம் இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?

இந்தச் சொற்களை எப்படி, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் ? 

இவற்றை உதாரணங்களோடு விளக்க முடியுமா ?



விளக்கமுடியும் என நினைக்கிறேன். மதறாஸ் லெக்ஸிகான்
துவக்கு என்னும் வினைச்சொல்லை துடக்கு/தொடக்கு என்னும்
சொல்லுடன் தொடர்பு இருக்கலாம் என்கிறது. அவ்வாறு
ஏதும் இல்லை என்கிறனர் மொழியியல் பேராசிரியர்கள்.

மேலும், மலைவாழ் ஆதிவாசிகளிடம் இச்சொல் இருக்கிறது:
Dravidian Etymological Dictionary:
DEDR 3350 Ta. tuvaṅku (tuvaṅki-), tuvakku (tuvakki-)

3350 Ta. tuvaṅku (tuvaṅki-), tuvakku (tuvakki-) to begin, enter upon; tuvakkam beginning, commencement. Ko. tovk- (tovky-) to begin. ? To. twïQx- (twïQxy-) to be at the point of, be ready to; twïQk- (twïQky-)to start, begin. DED 2754.


தோக்குதல் என்னும் பழைய வினைச்சொல் ஆதிகாலத்தில் தமிழில் இருந்திருக்க வேண்டும்.
இந்த வினைச்சொல் தோக்கு- துவக்கு என்று ஆகும். ஒப்புமை: கோடு - குவடு,  சூறு- : சுவறு, etc.,

தோக்கு- வினைச்சொல் தரும் பெயர்ச்சொல் தோக்கை - சீலையின் முந்தானை.
அடலெடுத்த வேற்கணார் தோக்கை பற்றி (திவ். பெரியதி. 4, 4, 3
தோக்கையந் துகிலினாடன் (சீவக. 2477)

துவக்கு என்னும் பொருள்கொண்ட தோக்கு என்னும் பழமையான வினைச்சொல்லைத் தமிழ்
இன்று இழந்திருந்தாலும், துவக்கு என்னும் வினையிலும், தோக்கை - சீலைத் துவக்கம் -
இன்னும் இருந்துகொண்டுதான் உளது.

நா. கணேசன்
 

த்ராவிட பாஷைகளின் மிகப் பழைய சொற்களில் ஒன்றாக துவக்கு/துவங்கு இருக்கிறது. இதற்கும்

வடமொழிச் சொற்களுக்கும் தொடர்பில்லை. Refer Madras Lexicon and DED.

கோதர்கள், தொதுவர், இருளர், மலசர், ... பண்பாடுகளை ஆராய்வதால் துவக்கம் போன்ற சொற்களின் தொடக்கம் தெரிந்துகொள்கிறோம். மேலும், சங்க இலக்கியச் செய்திகளை - உ-ம்: கலந்தொடா மகளிர் (புறநானூறு 299) - அறிந்துகொள்ளவும் உதவும். இவ்வாய்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு: காட்டாக, ஆணி (< ஆழ்தல்) என்பது ரிக்வேதத்தில் எப்படி தமிழில் இருந்து செல்கிறது என்பதற்கு Pangolin என்னும் விலங்கின் தமிழ்ப் பெயர்கள் உதவுகின்றன. https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2013-10/msg00051.html

நா. கணேசன்

 
அன்புடன்,
நிரஞ்சன் 


N. Ganesan

unread,
Nov 5, 2013, 8:04:27 AM11/5/13
to vall...@googlegroups.com, தமிழாயம், tamil_ulagam, Santhavasantham


On Monday, November 4, 2013 4:42:30 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
தொடங்கு என்பது ஏற்கனவே நடைபெறுவதை நின்று போனால் மீண்டும் செய்வது.
தொடர் என்பது ஏற்கனவே நடைபெறுவதை தொடர்ந்து செய்வது.
துவங்கு என்பது முதன் முதல் செய்வது.



தொடங்கு - சாதாரணமான to begin, start என்ற பொருளும்,

துவங்கு/துவக்கு - to commence (to make a beginning) என்று
முதன்முதல் துவங்குவது என்னும் சிறப்புப் பொருளில் வருகிறது.
உ-ம்: College Commencement in USA. வாழ்க்கையை கல்லூரி
பட்டத்துடன் துவக்கும் மாணவர்க்கான விழா.


தோக்கு- என்னும் வினைச்சொல் பிறப்பிக்கும் துவக்கு- to commence.

--------

தோய்த்தல் என்னும் வினைச்சொல் தரும் தோமரம், துகைத்தல்/துவையல்
என்பதற்கும், துவக்குதலுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.

நா. கணேசன்
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages