உலகளந்த பெருமாள் கோயில் –திருக்கோவிலூர் 3

74 views
Skip to first unread message

Krishnan S

unread,
Mar 12, 2013, 2:22:14 AM3/12/13
to tamil_ulagam, mint...@googlegroups.com
  உலகளந்த பெருமாள் கோயில் –திருக்கோவிலூர் 3   
 
வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் என்று மாறுபட்ட கோலத்தில் ஞானம் போதிக்கிறார், பெருமாள் வழக்கமாக                                                                 வலது கையில் சக்கரமும்,இடது கையில் சங்கும் ஏந்தியவாறு தான், மாறுபட்ட கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு                                                                    ஞானம் அருள்கிறார். பெருமாள் ஒரு அடியை விண்ணிலும் அளந்து
மூன்றாவது அடி எங்கே?” என்று மகாபலியைக் கேட்பதாக மற்றொரு வலது கையை காட்டுவதாக உள்ளார்.
வலது காலை பிரம்மா ஆராதனம் செய்கிறார்.மகாபலி ஆகியோருடன், மகாபலியின் மகன் நமச்சுமகாராஜா பூசை
செய்வதாகவும் அமர்ந்துள்ளார்கள். தானம் தரவேண்டாம் என்று தடுத்த சுக்கிராச்சாரியார், மிருகண்டு

மகரிஷி, அவர் பத்தினி மித்ரவதி, முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார்,கருடன்

ஆகியோர் பெருமாளுக்கு இருபுறம் இருக்கிறார்கள். திரிவிக்கிர சுவாமிக்கு ஆயனார், இடைகழி ஆயன்,என்ற

திருப்பெயர்களும் உண்டு. பெருமாள் 108 சாலிக்கிராம மாலையுடன் தசாவதார ஒட்டியாணத்துடன் காட்சி தந்து அருள்கிறார்.

  மாகபலி சக்ரவர்த்திக்கும், மிருகண்டு முனிவர்க்கும், முதலாழ்வார்கள் மூவருக்கும் காட்சி தந்தபடி, உலக

ளந்த பெருமான் அனைவருடனும் நமக்கு காட்சி தந்து அருள்புரிகிறார். பெருமாளும் மற்ற எல்லோரும் மரத்தால்                                                                                        (தாரு) ஆனவர்கள். 108 திவ்விய தேசத்திரு தலங்களிலே திருக்கோவலூர் சிறப்பானது.

 

விஷ்ணு துர்க்கைக்கு சன்னதி இருக்கிறது. காவலாக பெருமாளுக்குப் பக்கதிலேயே இருந்து அருள் புரிகிறாள்.

தேவகி பிறக்கும் எட்டாவது பிறக்கும் கிருஷ்ணனால் உனக்கு மரணம்என்று எச்சரிக்கும் மாயாதான் இந்த

துர்க்கை.திருமங்கையாழ்வார் தம்முடைய பாசுரத்தில்  கற்புடைய மடக்கன்னி காவல் பூண்டஎன்று போற்றி பாடுகிறார்.

                    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

திருக்கோவலூர் பெருமாள் கோயில் சுவர்களில் சுமார் 45 கல்வெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

10 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டுக்களில் இராஜராஜ சோழன் கோவிலுக்கு நந்தா விளக்குகள், நிலதானம் கொடுக்கபட்டுள்ளது.

முதலாம் இராஜராஜ சோழன் ஐப்பசி திருவிழாவில் 9 நாட்கள் உணவு படைப்பதற்கு, திருக்கோவனூர் சபை,                                                                           வைணவர்களுக்கு நிலம் வழங்கி செய்தி.

 இரண்டாம் இராஜேந்திர சோழன் 6 வது ஆட்சியாண்டில் மூலக்கருவறை முழுவதையும் கருங்கற்களால்

கட்டி புதுப்பித்தது.

மூன்றாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டில்,  திருநெடுந்தாண்கம் ஓதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட

செய்தி.

மற்றொரு மூன்றாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டில் கோயிலில் உத்தராயணம் தட்சிணாயணம் ஆகிய நாட்களில்                                                                திரு மஞ்சன விழா நடைபெற வரிவிலக்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தி.

சாளுவதேவ நரசிங்க மகாராஜன் மன்னன் பெண்ணையாற்றுப் பகுதியுள்ள தங்களுக்குச் சொந்தமான நிலங்களை                                                                              கோயிலுக்கு தானம் வழங்கிய செய்தி.

 ……. இப்படி இன்னும் பல கல்வெட்டிகள் காணக்கிடக்கிறது.

 =======================================================================

தாயார் சன்னதி 5 நிலைகள் உள்ள அழகான கோபுரம். கிளிகள் நிறைந்த வாசம் செய்த்தால், இதற்கு கிளி கோபுரம்                                                                                     என்று பெயர் வழங்கிறது. கிழக்கு முகமாக உள்ளது. பூங்கோவல் தாயார் என்றும் பூங்கோவில் நாச்சியார் என்றும் இரு                                                             திருப்பெயர்களால் அழைக்கிறார்கள். மிகப்பெரிய சன்னதியாக அமைந்துள்ளது.

தாயார் சன்னதிக்கு பக்கத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியாக இருக்கிறது.16 கைகள் கொண்ட சக்கரத்தாழ்வாராக இருக்கிறார்.

தல விருட்சம் புன்னைமரம்,

                 ,.,.,
{ நன்றி :-- செய்தி குறிப்பு, அறங்கண்டான் – அர,கோ, குப்புசாமி }
 
அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Karuannam Annam

unread,
Mar 12, 2013, 3:57:53 AM3/12/13
to mint...@googlegroups.com, tamil_ulagam
பகிர்வுக்கு நன்றி.
1.திருக்கோவிலூர் பெருமாள் மூர்த்தம் மரத்தால் ஆனது என்று கூறினார்கள்.
2. திருக்கோவலூர் இரகோத்தமர் ஜீவ சமாதி, ஞானானந்தா சமாதி என்று பல பெரியவர்கள் வாழ்ந்த நதிக்கரை.
3. கபிலர் குன்று அமந்துள்ள கபிலர் விழா ஆண்டுதோறும் நடைபெறுகிற ஊர்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


Krishnan S

unread,
Mar 12, 2013, 4:59:18 AM3/12/13
to tamil_...@googlegroups.com
அன்பு திரு, சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு,
வணக்கம்.
அய்யா, தங்களின் பின்னூட்டுக்கு மிக்க நன்றி
அன்புடன்
கிருஷ்ணன்

2013/3/12 Karuannam Annam <karu...@gmail.com>

--
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ulagam...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Reply all
Reply to author
Forward
0 new messages