தவறின்றித் தமிழ் எழுதுவோமே! பகுதி 10-ஈ : அதுவா? இதுவா - ஐயா? அய்யா? ஔவை? அவ்வை?

409 views
Skip to first unread message

Benjamin LE BEAU

unread,
Nov 22, 2011, 3:28:27 AM11/22/11
to tamil_...@googlegroups.com
தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி 10-ஈ       : அதுவா? இதுவா - ஐயா? அய்யா? ஔவை? அவ்வை?
பேரா. பெஞ்சமின் லெபோ.
பகுதி 10-ஈ : அதுவா? இதுவா – ஐயா? அய்யா? ஔவை? அவ்வை?

சென்ற பகுதியில்,தொல்காப்பியர் கருத்துப்படி, ‘ஐ’ என்பது ‘அய்’ ஆகலாம் என்று’ எழுதி  இருந்தேன். தொல்காப்பியர் ‘அய்’ என்ற வடிவத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் பழந்தமிழ் இலக்கியத்தில், ‘ஐ’வடிவே புழங்கி  வந்திருப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

அகநானூறு 143,  ஆலம்பேறிச் சாத்தனார், பாலைத் திணை – தோழி கூற்றாக வரும் பாடலில்,
வெம்மலை அருஞ்சுரம் நீந்திஐய!
சேறும்என்ற சிறுசொற்குஇவட்கே,’
என வருவதைக் காண்க.

சிலப்பதிகாரத்தில் ‘ஐயை’  என்றே ஒரு பாத்திரம் வருவதை அனைவரும் அறிவர்.

‘என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின்  றவர் ‘ குறள்-771.
இக்குறளைப்  பிரித்து  எழுதும்போது ‘ஐ’ வடிவே கையாளப்படுகிறது. இது  தவிர  குறள்கள் நான்கினுள் (25, 353, 354, 702 ) ‘ஐ’  பயின்று வந்துள்ளதைக்  காணலாம்.

நாளும் தமிழ்  வளர்த்த (திரு)ஞானசம்பந்தர் பாடிய முதல் திருமுறை-39. நாள் எண்ணி வருந்தல் -பாடல் 423 -இல்
ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே
என்கிறார்.

இதில் வரும் ‘துய்ய’, ‘வெய்ய’ , ‘செய்ய’ என வரும்  எதுகைகளை நோக்கி, முதல் சீர் ‘அய்ய’ என எழுதப்படவில்லை என்பதைக்  கவனிக்கவும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் இன்னொரு வேடிக்கை உண்டு.’அவ்’எனும் வரி வடிவைத் தொல்காப்பியர் பரிந்துரைக்கவில்லை என்றாலும், பழந்தமிழ் இலக்கியத்தில் இவ்வடிவம் பல இடங்களில் வருகிறது. நற்றிணை கடவுள் வாழ்த்து இயற்றிய பாரதம் பாடிய பெருந்தேவனார்,

‘மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக’ என்று ‘பௌ’   வரி வடிவைப் பயன்படுத்தினாலும்,  ’பௌ’,  ‘கௌ’ வடிவை  விட, ‘பவ் , ‘கவ்’ வடிவே மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது.

‘ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும் இந்நோய்
(குறள் 1147) – என எழுதும் வள்ளுவர்,

‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையை காட்டி விடும் –  167- என்கிறார் ;

முதலாம் திருமுறையில் திருஞானசம்பந்தர், திருப்பாற்றுறை பதிகத்தில்

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்

எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்

பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை

மவ்வல் சூடிய மைந்தரே‘. எனப் பாடுகிறார்.

முன்பு குறிப்பிட்ட  பாடலில்,’துய்ய’,'வெய்ய’,'செய்ய’ என வரும் எதுகைகளை நோக்கி, முதல் சீரில்  ‘அய்ய’ என எழுதாத சம்பந்தர், இங்கு  எதுகை நோக்கியே பவ்வம்என்ற சொல்லைப் பெய்கிறார்.

இப்போது இவ்விரண்டு எழுத்துகள் பற்றிப் பார்க்கும் முன்,’ஔ’ -வின் இக்கால வரிவடிவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். ‘ளகரம்’ ஓர் எழுத்து; அதுவே (நெடில்)குறியீடாகவும் பயன்படுத்தப் பட்டது. உகரத்துக்கு உள்ள நெடில் வடிவைப்  பாருங்கள்: ‘‘; உகரத்துக்கு மேலே உள்ளது ளகரஎழுத்து அன்று. நெடிலைக் குறிப்பதற்காக உள்ள குறியீடே. ‘ளகர’ எழுத்துக்கும் குறியீட்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதற்காகக்  குறியீட்டைச் சிறிய எழுத்தில் எழுத வேண்டும்; எழுதினார்கள். இப்படித்தான் அக்காலத்தில் தமிழ் எழுத்து சொல்லிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் உகரமும் குறியீடு ‘ள’-வும் சம அளவில் எழுதப்பட்டு விட்டன.

அதைப்  போலவே ‘ஔ’ என்பதான் சரியான வரி வடிவம், ஒ’எழுத்துக்குப் பின் வரும் ‘ஈருயிர்க்’ குறியீடான (diphthong) சிறியதாக எழுதப்பட வேண்டும்.(ஒள). ஆனால், அதுவும் இப்போது சம அளவிலேயே எழுதப்படுவதால், சிறுவர்கள், தமிழ் கற்போர்… அச் சொல்லை ‘ஒ ள  வை’ எனத் தவறாகப் பலுக்கும் வாய்ப்பு உண்டு.

இனி ‘ஐ’, ‘ஔ’ பற்றிக் காண்போம்:தமிழ் நெடுங்கணக்கில் ஐந்து நெடில்கள் அவறுக்கு இணையான ஐந்து குறில்கள். இவற்றோடு கூட இரண்டு நெடில்கள்.- ‘ஐ’, ‘ஔ’.முதலில் குறிப்பிட்ட 10 -உம் முழுமையான உயிரெழுத்துகள்.

பின்னவை  அ+இ> ‘ஐ’ ; அ+உ>’ஔ’. இவற்றுக்குக் குறில் இல்லை என்பர்.
அதனால் இவற்றை நீக்கி விட்டுப் பகரமாகஅய்‘,’அவ்பயன்படுத்தலாம்;
அப்படிச் செய்தால் 12 உயிர்களைப் பத்தாகக் குறைக்கலாம்
என்பது பெரியார் வாதம்.

பொதுவாக, உயிர் தனித்து வரும் அல்லது மெய்யோடு இணைந்து உலவும்; ஈருயிர்கள்  இணைந்து வருவதில்லை.ஆனாலும்  ஏறக்குறையப் பல மொழிகளில் இப்படி வருவது உண்டுதான்.இப்படி இணையாமல் தனியாக வரும் உயிர்களை ‘monothong’ என்றும், ஈருயிர்கள் இணைந்து வருவதை ‘diphthong’ எனவும்  மூவுயிர்கள் இணைந்து வருவதை ‘tripthong’ எனவும் மொழியியலார் அழைப்பர்.(‘tripthong’ ஸ்வீடிஷ் கிளைமொழிகளில் உண்டாம் : http://www.proz.com/forum/linguistics/209686-french_diphthongs.html)

ஈருயிரொலிகள் ‘diphthong’,  ஆங்கிலத்தில் எட்டு, பிரஞ்சில் பத்து, பின்னிஷ் மொழியில் இருபத்திரண்டு  எனப் பலவேறு  மொழிகளில் பல வேறு எண்ணிக்கையில் உள்ளன. தமிழில்  ‘ஐ’, ‘ஔ’என இரண்டே. இவை தனியாக வரும்போது எல்லா உயிர் எழுத்துகளையும் போல் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.

‘ஐ’மொழிக்கு (சொல்லுக்கு)முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரையும் இடை, கடையில் ஒரு மாத்திரையும் பெறும். இப்படித்  தன் மாத்திரையில் (ஒலிப்பில்) குறுகி வருவதைக் (ஐகாரக்)குறுக்கம் என்பர். ஒரு மாத்திரை என்பது குறிலுக்கு உரிய அளவு.

கடை, இடையில் வரும் ‘ஐ’காரம் ஒரு மாத்திரை அளவு பெறுவதால், இங்கே ‘ஐ’ குறிலாகிறது. யாப்பிலக்கணத்தில் அலகிடும்போது ‘ஐ’ நெடிலாயினும், சீரின் நடுவிலும், ஈற்றிலும் குறில் போல் இருக்கும். (http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/776846a91bfcaedf?pli=1).

‘ஔ’காரமும் இதுபோலவே நெடில் என்பதால் இரண்டு மாத்திரை பெறும். இது மொழிக்கு முதலாக மட்டுமே வரும்.அதாவது இடையிலும் கடையிலும் வராது.

‘ஐ’, ஔ’ பற்றிப் பார்த்தோம். இனி மறுபடி தொல்காப்பியர் கருத்துக்கு வருவோம்:

அதாவது ‘ஐ’ என்பது ‘அய்’ ஆகலாம்’.. இதில் கூட, அவர்,

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.
(தொல். எழுத்து, 56). என மிக விழிப்பாகத் ‘தோன்றும்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

இப்படிப் பயன்படுத்துவதை நன்னூலார் இலக்கணப் போலியுள் அடக்குவர். எனவே, ‘ஐ’என்பதற்குப் பகரமாக ‘அய்’ இட்டு எழுதுவது தவறில்லை என இலக்கணம் உரைக்கிறது. ஆகவே ‘ஐயா’ என்பதை ‘அய்யா’ என்று எழுதுவது இலக்கணப்படித் தவறில்லைதான்.

ஆனால், மரபு ஒன்று இருக்கிறதே! இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டபடிப் பழந்தமிழ் இலக்கியங்கள் ‘அய்யை’ ஆதரிக்கவில்லை’. இந்த மரபுப்படி நாமும் ‘அய்யாவை’ப் புறம் தள்ளி ‘ஐயா’வுக்கே ஆதரவு தரலாம்.

மேலே  குறிப்பிட்ட  பெரியார்  வாதத்துக்கு  வருவோம்: அதாவது ‘ஐ’ என்ற உயிரோலியையே தூக்கி எறிந்து விடுவது. (நல்ல வேளை தமிழறிஞர்கள் எதிர்ப்பால் ‘ஐ’ தப்பியது!).அப்படி ஏன் செய்யக் கூடாது என்பதற்கு நண்பர் நாக.இளங்கோவன் மிகச் சிறப்பான வாதங்களைத் தம் கட்டுரையில், 2008 – ஆம்  ஆண்டே  வைத்துள்ளார். அந்தக் கட்டுரையில் உள்ளவற்றை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். அதனால் அதனை இங்கு நான் எடுத்தாளவில்லை. இந்தச் சுட்டியைச் சொடுக்கி அக்கட்டுரையைப் படித்துப் பயன் பெறுக.
http://nayanam.blogspot.com/2008/05/blog-post.html

‘ஐ’ என்ற ஒரேழுத்து ஒரு மொழிக்கு,

  1. தலைவன்
  2. அழகு
  3. ஐந்து
  4. ஐயம்
  5. வியப்பு, (“ஐ வியப்பு ஆகும்” – தொல்காப்பியம் 2-8-88 ) ; “ஐதே காமம்” – நற்றிணை 143
  6. மெல்லபைய என ஆறு பொருள் உள்ளன (http://ta.wiktionary.org/wiki/%E0%AE%90).

ஆனால் ‘அய்’ என்ற  சொல்லுக்குப்  பொருள்  ஒன்றும்  இல்லை. இரண்டாம் வேற்றுமை உருபாக ‘ஐ’ பயன்படுகிறது. இங்கே அதற்குப் பதிலாக ‘அய்’ போட்டால் சரிப்பட்டு வருமா!

ஆகவே   இவற்றின் அடிப்படையில்   ‘ஐ’ எழுத்தை நாம் பாதுகாத்தே தீரவேண்டும். ஆகவே ‘அய்’யை நீக்கி,‘-யைப் பயன்படுத்திஐயாஎன எழுதுவதே முறை.

அடுத்து, நம் முன்னோர் ‘ஔ’ வை விட ‘அவ்’ ஐப் பயன்படுத்தி இருக்கிறார்கள் :
நிலம்புடை பெயரினும் நீர்தீப் பிறழினும்

இலங்கு திரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்

வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை அஞ்சிக்

கேடுஎவன் உடைத்தோ, தோழி! …

ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே! (குறுந்தொகை: 373-1-4, 8)

ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே
.(3366 )

நாலாயிர திவ்ய பிரபந்தம்-(திருவாய்மொழி. 5.3.4)

மூவாதியார் இயற்றிய ஐந்திணை எழுபது
சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை

ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்

தேரொடு கானம், தெருள் இலார் செல்வார்கொல்,

ஊர் இடு கவ்வை ஒழித்து?’35

முத்தொள்ளாயிரம்
அல்லற் பழனத் தரக்காம்பல் வாயவிழ

வெள்ளந்தீப் பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்

கைச்சிறகார் பார்ப்பொடுக்கும் கவ்வை யுடைத்தரோ

நச்சிலை வேற் கோக்கோதை நாடு
என வருவன காண்க.

எனவே ‘ஔவை’ என எழுதினும் ‘அவ்வை’ என எழுதினும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே! ஏறக்குறையத் தமிழறிஞர்கள் அனைவர் முடிவும் இதுவே!

நன்றி : 'வல்லமை' http://www.vallamai.com/archives/10830/



Elangovan N

unread,
Nov 22, 2011, 4:30:07 AM11/22/11
to tamil_...@googlegroups.com
அன்பின் பேரா.பெஞ்சமின்,

அருமையான ஆழமான கட்டுரையையும் நல்ல தீர்ப்பையும் வழங்கியிருக்கிறீர்கள்.
மனமார்ந்த பாராட்டுகள். நமக்கு இருக்கும் 247 எழுத்துக்களின் வடிவத்தையும் பயன்பாட்டையும்
காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு. மேலோட்டமான கருத்தியல்களை, ஆராய்ச்சி இன்றி
அரசியல் வழி நடத்தி விடுகின்ற தந்திரத்தைக் கடந்த 50 ஆண்டுகால அரசியல் உருவாக்கியிருக்கிறது. தமிழ் நல்லார் கருத்துக்களை முடக்கவும் இந்த அரசியல் கற்று வைத்திருக்கிறது. ஏதாவது மாற்றம் என்றால் அது நல்லதோ, அதைப் பயன்படுத்தாவிடில்
நாம்தான் சரியில்லையோ என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி விடுகிறார்கள்.

// அடுத்து, நம் முன்னோர் ‘ஔ’ வை விட ‘அவ்’ ஐப் பயன்படுத்தி இருக்கிறார்கள் :
//

ஒள பற்றிய அருமையான கட்டுரையை இராம.கி ஐயாவின் வளவில் காணலாம்.
கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

ஒள, ஊ விற்கு வரும் "குட்டி ள" போன்ற குறியை சிறகு என்று அழைத்திருக்கின்றனர். 
ள வேறு சிறகு வேறு.  நம்மாளுகள், அதிஅறிவாளிகள் அல்லவா? ளவையும் சிறகையும் ஒன்றாக்கிவிட்டார்கள். இந்தப் புண்ணியத்தை முதலில் செய்தவர்கள் தினமணி என்று கேள்வி.

ஆக, ஒரு எழுத்தின் வடிவத்தை முற்றிலுமாக இழந்தாயிற்று. இப்படியே நமது குமுகம் கவனமில்லாமல் போவதைத்தான் அறிஞர் குணா, "தமிழன் கஞ்சம் புல் போதையில் தூங்குகிறான்" என்கிறார்.

நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்






2011/11/22 Benjamin LE BEAU <benjami...@gmail.com>



--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

Benjamin LE BEAU

unread,
Nov 22, 2011, 5:42:39 AM11/22/11
to tamil_...@googlegroups.com
அன்பிற்கினிய நண்பர் இளங்கோவனுக்கு
வணக்கம்.
இனிய நல் வாழ்த்துகள்.
தங்கள் பாராட்டுகளுக்குத்  தாங்களும் உரியவரே.
2008 - இல் தாங்கள் எழுதிய  ஐ' கட்டுரை வெகு அருமை.
'ஐ' -யின் தேவையை மிக நுணுக்கமாக எழுதி  இருந்தீர்கள்.
அறிஞர், பொறிஞர் இராம. கி  ஐயாவின் கட்டுரையை அகத்தியம் படிப்பேன்.
எவ்வளவு அரிய மொழி நம் மொழி ; எத்துணை பெரிய மொழி நம் மொழி.
இவற்றை இன்னும் உணரா நம் மக்களை நினைத்தால் உள்ளமெல்லாம் பற்றி எரிகிறது.
நாம் அனைவரும் சேர்ந்து தமிழின் அருமை பெருமைகளைத் தரணிக்கு உணர்த்துவோம்.

பல நாள்கள கேட்க நினைத்துத் தள்ளிப்போட்ட செய்தி :
செம்மொழி மாநாட்டில் நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய இணையதளம் என்ன ஆயிற்று?

பிற பின்னர் 
நனி நன்றியன்
பெஞ்சமின்







Sivam Amuthasivam

unread,
Nov 22, 2011, 6:15:05 AM11/22/11
to tamil_...@googlegroups.com
\\\எனவே ‘ஔவை’ என எழுதினும் ‘அவ்வை’ என எழுதினும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே! ஏறக்குறையத் தமிழறிஞர்கள் அனைவர் முடிவும் இதுவே!\\

இதில் எனது தனிப்பட்ட கருத்து : ‘ அனைவர் முடிவும்... ‘ என்று சகட்டுமேனிக்குச் சொல்லிவிடமுடியாது. 
அங்கு எதிர்ப்புகளும் நிச்சயமாக இருந்திருக்கும். அந்த எதிர்ப்புக்குரல்கள் வெளிவரமுடியாதபடி அமுங்கிப்போயிருக்கவும் வாய்ப்புண்டல்லவா?

உதாரணமாக, இதோ நான் எனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன் ஆதாரத்துடன். ஆனால், இது எடுபடுமா?
ஆனாலும், எனது மனதில் உதித்ததை மறைக்காமல், பதிவுசெய்கிறேன்.

‘அவ்’ என்பதை உச்சரிக்கும்போது, உதடுகள் இருபுறமும் காதை நோக்கி விரியும்; ஆனால், ‘ ஔ ‘ இற்கு அப்படியல்ல.
மூக்கை நோக்கிக் குவியும்.
மேலும், ‘ ஔ ‘ என்பது உயிரெழுத்து. அதை உச்சரிக்கும்போது , ‘ வ் ‘ இன் வாடையே வராது.
உதடுகள் ஒட்டாமலும், நாவின் அல்லது தொண்டையின் குறுக்கீடு இல்லாமலும் உச்சரிப்பதே உயிரெழுத்து.
 ‘ வ் ‘ என்பதோ மெய்யெழுத்து.அதாவது, நமது உடலின் பாகங்களிலொன்றினதேனும் உதவியின்றி இதை உச்சரிக்கமுடியாது.

அதற்கு இது எப்படிச் சரியாகும்?

உயிர் வேறு ; உடல் வேறு . இதை யாராவது மறுக்கமுடியுமா?

இது வேறொன்றுமில்லை....
தமிழ் அரிச்சுவடியில் 247 எனும் எண்ணைக்கண்டு கதிகலங்கி, இதை முடிந்தவரை குறைத்தே தீருவது என்று சபதமெடுத்த 
யாரோ ஒரு மாவீரன், செய்த சாகசமாகவே இதைக் கருதலாம.

ஆங்கிலமொழியை எடுத்துப்பார்த்தால், ´ W ´  உம் ´ V ´  உம் இன்னும் தனித்தனியாகத்தான் உள்ளன.
 ´ W ´  ஐ உச்சரிக்கும்போது, ‘ உஅ ‘ என்ற ரீதியிற்றான் உச்சரிப்பார்கள்.

மேலும்,   ´ X ´ இற்குப் பதிலாக,  ´KS ´ என்றும் எழுதலாம்.. ஆனால் அவர்கள்,  ´X ´ ஐயும் இன்னும் பாதுகாக்கிறார்கள்.
உதாரணமாக,   ´BOX ´ இற்குப் பதிலாக, ஏன் ´ BOKS ´ என்று எழுத்க்கூடாது?
இன்னும்,  ´CUP ´  - இதை ‘ கப் ‘ என்கிறான். ஆனால்,   ´PUT ´  என்றதும் ‘ புற் ‘ என்கிறான். 
இதுவும் ஏன் ‘ கப் ‘ என்பது போல ‘ பற் ‘ என்று வரவில்லை?
ஏனெனில், அங்கு அதி மேதாவிகள் - சுயநலவாதிகள் இல்லை.
இதைத்தவிர வேறென்ன காரணம் சொல்லமுடியும்?
ஆனால், தமிழுக்கு மட்டும் இந்தக்கதி. 
தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகிவிடுகிறான்.
அடுத்து, 
\\\நம் முன்னோர் ‘ஔ’ வை விட ‘அவ்’ ஐப் பயன்படுத்தி இருக்கிறார்கள்\\\

இக்கூற்றை ஆராய்ந்தால் : 
கவிதைகளில் - பாடல்களில் , ஓசை நயத்துக்காக ஒருசில விதிவிலக்குகளை
ஏற்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர். அதையெல்லாம் உதாரணமாகக்கொள்ளமுடியுமா?
அப்படிப்பார்த்தால், வள்ளுவப்பெருந்தகை ஆங்காங்கே ஏராளமான அளபெடைகளையும்தான் 
பயன்படுத்தியிருக்கிறார். அவை சாதாரண நடைமுறையில் எங்காவது பயன்பாட்டில் இருக்கிறதா?

எனவே, ‘ இலக்கணப்போலிகள் ‘ எனும் புற்றுநோயை வளரவிட்டு, இலக்கணமே இல்லை என்ற நிலையை அடையாமல், 
ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளலே, தமிழுக்கு நன்மை பயக்கும்.



-- 
நட்புடன்
சிவம் அமுதசிவம்

------------------------------------------------------------------------------------------------------------------------------



2011/11/22 Elangovan N <nela...@gmail.com>

Gopalakrishnan (Gopi)

unread,
Nov 22, 2011, 8:04:49 AM11/22/11
to tamil_...@googlegroups.com
ஐயா,

//உதடுகள் ஒட்டாமலும், நாவின் அல்லது தொண்டையின் குறுக்கீடு இல்லாமலும் உச்சரிப்பதே உயிரெழுத்து.//

அருமை.... (இதை அனைத்து உயிரெழுத்துக்களுக்கும் சோதித்து பார்த்த பின் வியப்பில் வார்த்தை வரவில்லை. ஆனால் அதை வெளிப்படுத்தவே "அருமை" என்ற ஒற்றை சொல். :-)  )

இனிமையுடன்,

கோபி

2011/11/22 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Benjamin LE BEAU

unread,
Nov 23, 2011, 12:56:18 AM11/23/11
to tamil_...@googlegroups.com

நாடிய  நட்புடன்  நீடிய  பின்னூட்டம்  இட்ட
நட்பினர் அமுதம் சிவம் அவர்களுக்கு
அன்பு வணக்கம்
பின்னூட்டம் இட்டமைக்கு  நன்றி.
தங்கள்  எதிர்ப்பை (கருத்தை)ப்  பதிவு செய்திருக்கிறீர்கள். நல்லது.
தங்கள் பின்னூட்டத்தைக்  கடைசியில் இருந்து பார்க்கலாமா?

1
'‘ இலக்கணப்போலிகள் ‘ எனும் புற்றுநோயை வளரவிட்டு, இலக்கணமே இல்லை என்ற நிலையை அடையாமல், 
ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளலே, தமிழுக்கு நன்மை பயக்கும்.''

தமிழுக்கு நன்மை பயப்பதையே தாங்களும் நாடுவதில் மகிழ்ச்சி.
தொடக்கத்திலேயே விழித்துகொள்ளல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை
ஆனால் ,.
'‘ இலக்கணப்போலிகள் ‘ எனும் புற்றுநோயை வளரவிட்டு, இலக்கணமே இல்லை என்ற நிலையை "அடைய வேண்டும் என நீங்கள் விருமபுவது?.....

இருக்கும் இலக்கணத்தைச் செம்மைப்படுத்தலாம் ; இல்லாத இலக்கணத்தைப் புதிதாக உருவாக்கலாம்.
இலக்கணத்தையே இல்லாமல் செய்யவேண்டும் என்றால்.
...!
அது சரியா?  முறையா? தகுமா? தமிழுக்கது  நன்மை தருமா? சிந்திக்க வேண்டுகிறேன்.
முகத்துக்கு இரு கண் போல, ஆற்றுக்கு இருகரை போல இலக்கணமும் இலக்கியமும் மொழிக்குத்தேவை.
மேலே விளக்கத் தனிக் கட்டுரையே எழுதவேண்டி இருக்கும்.

ஒருகால், இலக்கணம்  முழுமையும் குறிப்பிடாமல், '
‘ இலக்கணப்போலிகள் ‘ எனும் புற்றுநோயை'   மட்டும் குறிப்பிடுவதாக இருந்தால்...
 'இலக்கணப் போலி' என்பது தாங்கள் எழுதியது  போல் 'புற்று நோய்' அன்று!
இலக்கணத்தில்  இடம்  பெரும  நாணயமான பகுதி.
நீங்கள் நினைப்பதைப் போல் 
'போலி' என்ற சொல்லுக்கு 'counterfeit' 'fraud' போன்ற
'pejorative' பொருள் இல்லை.
போல இருப்பது போலி. ஆனால் அசலும் போலியும் ஒன்றல்ல. அசலுக்குப் பகரமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சொல்.
தமிழுக்கே சிறப்பெழுத்தான   
'ழகர'த்தை
(தமிழைப் போலவே  மலையாளத்திலும்,  சற்றே வேறுபட்ட ஒலிப்போடு - 'ழ', 'ழி'  - பிரஞ்சு மொழியலும் - 'இவ்வெழுத்து உண்டு)
ஒழுங்காகப் பலுக்க இயலாதவர்கள் 'பவளம்' எனப் 'பவழத்தை' ஒலிக்கிறார்களே...
அதனைத்தான் போலி என்கிறது தமிழ் இலக்கணம்.
'பவழம் என்னும் சொல்லை ஒலிக்க இயலாதவர்கள் 'பவளம்' என ஒலிக்கட்டும், எழுதட்டும் எனப் பெருந்தன்மையாக வழி விடுகிறது தமிழ் இலக்கணம் -
இலக்கணப் போலி என்னும் பகுதியை அமைத்து.

நண்டு- ஞண்டு, கால்வாய்-வாய்க்கால், சதை-தசை, இல்முன்-முன்றில், நகர்ப்புறம்-puranakar ... போலிகளுக்கு இவை எடுத்துக் காட்டுகள். 
மொழி இறுதிப் போலி, முதற் போலி, இடைப் போலி எனப் போலியை மூவகைப்படுத்திக் காட்டுவார் பவணந்தி முனிவர்.
(நன்னூலாசிரியர்  - எழுத்ததிகாரம் நூற்பாக்கள் :122 முதல் 124 வரை).
'போலி எழுத்தைப் போற்றுதல் கடனே' என்று இலக்கணக்கொத்து  கூறும்.
'விற்கும் பண்டங்களில்தான் போலிகளைத் தள்ளவேண்டும். ஆனால் எழுதுதுப்  போலிகளைப் போற்றிக்கொள்ளவேண்டும்'
என்கிறார் 'இலக்கணம் இனிக்கிறது' ஆசிரியர் முனைவர் இரா.திருமுருகனார். இவர் புதுச்சேரியின்  தலை சிறந்த  இலக்கண அறிஞர்.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமரர் ஆனார்.
எனவே தமிழிலக்கணம் அறியாதார்தாம் இலக்கணப் போலிகளைப் புறந்தள்ளுவர்.
தமிழ் இலக்கணமும் தமிழ் அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும் 'இலக்கணப் போலியை'ப் புற்று நோய் என்று சொல்வது தமிழ்ப் பற்றுடையார்க்கு அழகன்று.

2
'
வள்ளுவப்பெருந்தகை ஆங்காங்கே ஏராளமான அளபெடைகளையும்தான் 
பயன்படுத்தியிருக்கிறார். அவை சாதாரண நடைமுறையில் எங்காவது பயன்பாட்டில் இருக்கிறதா?
உண்மைதான்.
பல புலவர்கள் அளபெடையைப் பயபடுத்தி இருக்கிறார்கள்.
தமிழ் இலக்கணத்தில் ஐவகை உண்டு : 'எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி' என.
என் கட்டுரை  முதலிரண்டு இலக்கணங்களைப் பற்றியது மட்டுமே.
இவ்விரண்டும் அதன் விதிகளும் ஏனையவற்றுக்கும் இக்கால உரை நடைக்கும் செல்லும், பொருந்தும்.
தாங்கள் சொல்லும் அளபெடை யாப்பில் வருவது. அப்படி இருக்க அதனை எப்படி உரைநடையில் நுழைக்க முடியும்?
நுழைக்க முடியாதபோது எப்படி '
சாதாரண நடைமுறையில் எங்காவது பயன்பாட்டில் இருக்க ' இயலும்?
சிந்திக்க வேண்டுகிறேன்.

3
'அடுத்து, 
\\\நம் முன்னோர் ‘ஔ’ வை விட ‘அவ்’ ஐப் பயன்படுத்தி இருக்கிறார்கள்\\\
இக்கூற்றை ஆராய்ந்தால் : 
கவிதைகளில் - பாடல்களில் , ஓசை நயத்துக்காக ஒருசில விதிவிலக்குகளை
ஏற்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர். அதையெல்லாம் உதாரணமாகக்கொள்ளமுடியுமா?'

தமிழ்  இலக்கணத்தில், '
விதிவிலக்கு' என்பதைப் 'புறநடை' என்றே  அழைப்பர்.
இதனை ஐந்திலக்கணங்களிலும்   காணலாம் .
தாங்கள் குறிப்பிடுவது யாப்புகே உரிய ஒன்று.
மேலே சொன்னபடி அதனை இக்கால உரைநடைக்குப் பொருத்த முடியாது.
4
'அதற்கு இது எப்படிச் சரியாகும்?
உயிர் வேறு ; உடல் வேறு . இதை யாராவது மறுக்கமுடியுமா?'
'ஔ ' , 'அவ்' இரண்டும் ஒன்று என்று எங்குமே கூறவில்லை.
அது சரியாகும் என்றும் கூறவில்லை.
அதற்கு இது போலி - 'ஔ' -உக்கு 'அவ்' போலி என்றுதான் நன்னூலார்  கூறுகிறார்.
காண்க : நன்னூல் - யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர் உரை பக்கம் 14 : 37  போலி எழுத்துகள் என்னும் தலைப்பில் 
'அகரத்தோடு யகர  மெய் சேர்ந்து ஐகாரம் போன்றும்
அகரத்தோடு வகர மெய்  சேர்ந்து ஔகாரம் போன்றும் ஒலிக்கும்' 
  'உயிர் வேறு ; உடல் வேறு' எனபது எவருமே மறுக்க முடியாத  கூற்று.

5
' ‘ வ் ‘ என்பதோ மெய்யெழுத்து.அதாவது, நமது உடலின் பாகங்களிலொன்றினதேனும் உதவியின்றி இதை உச்சரிக்கமுடியாது.
 வகர ஒலிப்புக்கு  மேற்பல்லும் இதழும் தவிர வேறெதுவும் தேவை இல்லை.
இதனைப் பவணந்தி முனிவர் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறார் :
'மேற்பால் இதழுற மேவிடும் வவ்வே' -நன். பிறப்பியல் நூற்பா 85.

6
'உதடுகள் ஒட்டாமலும், நாவின் அல்லது தொண்டையின் குறுக்கீடு இல்லாமலும் உச்சரிப்பதே உயிரெழுத்து'.
நன்னூலார் கருத்து வேறாக உள்ளது :காண்க நன். எழுத்ததிகாரம் பிறப்பியல் நூற்பாக்கள் : 76 முதல் 78.
'முயற்சியுள்  அ  ஆ  அங்காப்புடைய
இ ஈ எ ஏ ஐ அங்கப்போ
டண்பல் முதல்நா விளிம்புற வருமே.
உ ஊ ஒ ஒ ஔ  இதழ் குவிவே.'

தாங்கள் எழுதியதைப்  போல,
'உதடுகள் இருபுறமும் காதை நோக்கி விரியும்...மூக்கை நோக்கிக் குவியும்'
எனத்  தொல்காப்பியமோ நன்னூலோ கூறவில்லை.
உயிர் எழுத்து பற்றிய இக்கால மொழி இயலார் கருத்துகளை எடுத்துக் கூறி விளக்க இங்கு இடமும் இல்லை, காலமும் இல்லை .
அதற்கெனத் தனிக்கட்டுரையே எழுதவேண்டி வரும்.


 
7
'இதோ நான் எனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன் ஆதாரத்துடன்'.

இந்த  வாக்கியத்தின்  இறுதிச்  சொல்லை அருத்தாபத்தியாகப் பார்த்தால்
என் கட்டுரைகள் ஆதாரம் இல்லாமல் மேம்போக்காக உள்ளன என்ற பொருள் வருகிறது (அல்லது  தருகிறது )
என் கட்டுரைகள் அனைத்துமே இலக்கண, இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையே.
அந்த ஆதாரங்களையும்   
மேம்போக்காக  அள்ளித்தெளிப்பவன் அல்லன் யான்.
ஒவ்வொரு ஆதாரமும் எந்த நூலில் எந்த இடத்தில் எந்த இணைய   தளத்தில் உள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாகவே
குறிப்பிடுவதை என் கட்டுரையைப் படிப்போர் நன்கு உணர்வர்.
வேண்டுவோர் அங்கே சென்று என் கூற்றைச்  சரி பார்த்துக்கொள்ளலாம் ;   மேற்கொண்டு தகவல் பெறலாம்.

8
'
\\\எனவே ‘ஔவை’ என எழுதினும் ‘அவ்வை’ என எழுதினும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே! ஏறக்குறையத் தமிழறிஞர்கள் அனைவர் முடிவும் இதுவே!\\
இதில் எனது தனிப்பட்ட கருத்து : ‘ அனைவர் முடிவும்... ‘ என்று சகட்டுமேனிக்குச் சொல்லிவிடமுடியாது'
தெருவிலே போவோர் வருவோர் என அனைவர் முடிவும் என்றோ 'சகட்டுமேனிக்கோ யான் கூறவில்லை.
கற்றுத் துறை போகிய தமிழறிஞர்களையே குறிப்பிட்டேன். எடுத்துக் காட்டாகச்  சொன்னால்,
அமரர் உரையரசர் துரைசாமிப்  பிள்ளை அவர்கள் முதலெழுத்தான ஔவை என்பதை ஔவை என்றே
சேர்த்து ஔவை துரைசாமிப்   பிள்ளை என்றே எழுதினார்.
அவர்தம் திருமகனார் பேரா. முனைவர் தாமரைத் திரு D நடராசன் அவர்களோ
அவ்வை து நடராசன் என்றே எழுதுகிறார். இவர் தமிழகத்தின் தலை சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவர் , தமிழ்ப் பல்கலைகழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியவர். இவரைப் போன்ற தமிழறிஞர்கள் 'அவ்வையை' ஏற்றுக்கொண்டனர். அதனால்தான் 'தமிழறிஞர்கள் அனைவர்  முடிவு' எனக் குறிப்பிட்டேன்.
அதற்கும்  முனனால் ஒரு சொல் சேர்த்திருக்கிறேனே 'ஏறக்குறைய' என்று.  இங்கும் அருத்தாபத்தியாகப்  பார்த்தால், ஏற்றுக்கொள்ளாத தமிழறிஞர்களும் உளர் ; அவர்கள் 'ஔவை' யையே   பயன்படுத்துகிறார்கள் என்பது புலப்படுமே.
.
9
\\\நம் முன்னோர் ‘ஔ’ வை விட ‘அவ்’ ஐப் பயன்படுத்தி இருக்கிறார்கள்\\\
இதனைத் தக்க ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறேன்.
என் தனிப்பட்ட கருத்துப்படி  'ஔவைக்கே ' என் வாக்கு.
ஆனால், 
நடுநிலையில் இருந்து காய்தல் உவத்தல் இன்றி ஆய்வதே உண்மையான ஆய்வு.
அந்த ஆய்வின் அடிப்படையில், ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததுதான்  என் தீர்ப்பே தவிர
என் உணர்ச்சிக்கு  ஆட்பட்டோ என் விருப்பத்துக்கு உட்பட்டோ எழுதப்பட்டது அல்ல.

இறுதியாக
ஒரு சொல் கேளிர்!
தாங்கள் பொறுமையாகக் கட்டுரையைப் படித்து முடித்துத் தங்கள் கருத்தை ('எதிர்ப்பை' என நீங்கள் குறிப்பிட்டு இருந்தாலும்)
பதிவு செய்ததை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன்.
'இடிப்பாரை இல்லாத  ஏமரா மன்னன்
கெடுப்பா ரில்லானுங்  கெடும்'
'அன்புடன்
பெஞ்சமின்

2011/11/22 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Sivam Amuthasivam

unread,
Nov 23, 2011, 6:09:34 AM11/23/11
to tamil_...@googlegroups.com
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

ஒவ்வொன்றாக - விளக்கமாகப் பதிலளித்தமைக்கு நன்றி!
ஏற்கெனவே, பழைய மடலொன்றில் நீங்கள் தெளிவாகக் 
குறிப்பிட்டிருக்கிறீர்கள் : -
‘ சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லியை - என்
  இனமாக என்றும் யான் கருதியதில்லை‘   .....  என்று.

எனவே. இதில் சினம் இல்லையென்றே கொள்ளலாம்.
எனினும், ஆங்காங்கே ஒருவிதமான தவறான புரிதல்
உங்கள் பதிலில் இழையோடுகிறதோ என்று தோன்றுகிறது.

இவ்வுணர்வுடன், எனது முந்தைய மடலைப் பார்க்கும்போதுதான் 
எனக்கே புரிகிறது - 
கொஞ்சம் அதிகமான கடுஞ்சொறகளை உபயோகித்துவிட்டேன் என்பது.
எனவே, இதற்கான தன்னிலை விளக்கத்துடன் ஆரம்பிப்பதே பொருத்தம் 
என்றெண்ணுகிறேன்.
’ எதிர்ப்பை ‘ என்ற சொல்லை யான் தவிர்த்திருக்கலாம்தான். 
ஆனாலும், அதை யான் , உங்களுக்கான எதிப்பாகக்கருதியிருக்கவில்லை என்பதே உண்மை.
 அது ‘ அவ் ‘ இற்கான எதிர்ப்பு மட்டும்தான்..
அதுமட்டுமல்லாது, இதற்கு முந்தைய வசனத்தின் பிரதிபலிப்பு.
அதாவது, 
\\\அந்த எதிர்ப்புக்குரல்கள் வெளிவரமுடியாதபடி அமுங்கிப்போயிருக்கவும் வாய்ப்புண்டல்லவா?\\\\
இதிலுள்ள ‘ எதிர்ப்புக்குரல் ‘ எனும் சொல்லே, அடுத்த வசனத்தில், ‘ எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்’ என்றாகிவிட்டது.
\\\இதோ நான் எனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன் ஆதாரத்துடன்'\\\

இஃதும் அவ்வகையைச் சேர்ந்ததுதான்.

அந்நேரம் எழுந்திருக்கக்கூடிய ‘ எதிர்ப்புக்குரல்கள் ‘ ஒருவேளை ஆதாரமில்லாமையால் அமுங்கியிருந்தாலும்,
இப்போது ஆதாரத்துடன் யான் பதிவுசெய்கிறேன்.... என்றுதான் அமையுமே தவிர, 
உங்கள் கட்டுரைகள் மேம்போக்கானவை என்பதல்ல அர்த்தம்.

அதுமட்டுமன்றி, வகுப்பில் ஒரு மாணவன் ‘ தெரியும் ‘ என்று சொன்னால், அது ஏனைய மாணவர்களுக்கோ அன்றி ஆசிரியருக்கோ 
தெரியாது என்று சொல்வதாக் எடுத்துக்கொள்ள முடியாதுதானே!
இதை ஏன் இப்படிக் கருதினீர்கள் என்பதுதான் புரியவில்லை.
அப்படிப்பார்த்தால்,
\\\தெருவிலே போவோர் வருவோர் என அனைவர் முடிவும்....\\\



2011/11/23 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

Sivam Amuthasivam

unread,
Nov 23, 2011, 6:14:14 AM11/23/11
to tamil_...@googlegroups.com
மன்னிக்கவும்...  save    இற்குப்பதிலாக send  தவறுதலாக அழுத்தப்பட்டுவிட்டது.
வேலைக்குச்செல்லும் அவசரம்... 
மிகுதி இரவு வேலைமுடிந்து வந்து தொடர்ந்து எழுதி அனுப்புகிறேன்.

2011/11/23 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Benjamin LE BEAU

unread,
Nov 23, 2011, 6:35:38 AM11/23/11
to tamil_...@googlegroups.com
நண்பர் அமுதம் சிவம் அவர்களுக்கு
வணக்கம்
பணிக்குச் செல்லும் நேரத்திலும்
கணி பக்கம் கவனம் வைத்திருகிறீர்கள்.

தங்கள் மீது சினமேதும்  இல்லை.
தங்கள் கருத்தைச் சொன்னீர்கள்
என் கருத்தைத் தெரிவித்தேன்.
அவ்வளவே.
கருத்துப் பரிமாற்றம் தேவை.
மறுபடி வலியுறுத்துகிறேன் :
உங்களுக்கு பாடம்  நடத்துவது  யான்  இல்லை.
நீங்கள் அனைவரும் என் நண்பர்கள்.
நமக்குள் அளவளாவுகிறோம்.
ஆங்காங்கே கருத்து வேறுபாடுகள் வரும், வரலாம்.
எதிர்  கருத்து கூறுபவர்களை எதிரிகளாகவே கருதும் வழக்கம் தமிழ் நாட்டுடன் நிற்கட்டும்.
எனவே, இது பற்றி அதிகம் கலங்க வேண்டா.
பொறுமையாக, நேரம் கிடைக்கும் போது மடல் இடுங்கள்.
அது போதும்
நாடும் நட்புடன்
பெஞ்சமின்   

2011/11/23 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Albert Fernando

unread,
Nov 23, 2011, 10:37:47 AM11/23/11
to tamil_...@googlegroups.com
ஆகா...ஆகாகா...

தமிழ் உலக அரசவையோரே!

இதுவல்லவோ தமிழர் பண்பாடு! நயத்தகு நாகரிகம்!!

கருத்து மாறுபாடுகள் அந்தக்கருத்தைஒட்டியதாகவே 
கருதிக் கொள்ளக்கூடிய பண்பு இருவர் மடல்களிலும் 
சுடர்விடுகிறது.  

தனிப்பட்ட பேதம் தலை தூக்கவிடாமல்
இருவருமே உள்ளார்ந்த கருத்துப்பரிமாற்றத்துக்கு வழி
வகுக்கும் பாங்கிற்கு என் சிரம்தாழ்த்து;கனிவான கரம்
குவிப்புகள்! 

தொடரட்டும் உங்கள் கருத்துப்பரிமாற்றம்.
எங்கள் சிந்தைக்கு விருந்தாகட்டும்....யாரங்கே.....தமிழ் உலகம்
வியக்கும் இவ்விருவருக்கும் பொற்கிளிகள் அளித்து
பாராட்ட உத்தரவிடுகிறேன் :-))))
பேரன்புடன்,
ஆல்பர்ட்.


2011/11/23 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்,



--
“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” - பாரதிதாசன்
"Value has a value only if its value is valued"

Benjamin LE BEAU

unread,
Nov 23, 2011, 10:46:37 AM11/23/11
to tamil_...@googlegroups.com
அன்புடையீர்
வணக்கம்
மட்டுறுத்துநர்  இட்டிருக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி.
பறந்துவரும்  'பொற்கிளிகள்' எனக் காத்திருக்கிறேன்.

பண்புடன்
பெஞ்சமின்


2011/11/23 Albert Fernando <albe...@gmail.com>

Selva Murali

unread,
Nov 23, 2011, 10:51:27 AM11/23/11
to tamil_...@googlegroups.com
























பொற்கிழி எல்லாம் பத்தாது. பொற்குவியலையே கொடுக்கலாமே :)
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

Govindan R

unread,
Nov 23, 2011, 10:54:12 AM11/23/11
to tamil_...@googlegroups.com
ஐயா ஔவை ஆகிய சொற்கள் பற்றிய ஆய்வை 

மிகத் திறம்பட செய்துள்ள பேராசிரியர் பெஞ்சமின் 

அவர்கள் நீடூழி வாழ வேண்டும்.

கொடைவள்ளல் திரு ஆல்பர்ட்டு அவர்கள் பொற்கிழி (பொற்கிளி அன்று) க்கு ஏற்பாடுகள் செய்தால் எல்லாரும் அணியமாக 
இருக்கிறோம் என்று கழிபேருவகையுடன் (களி பேருவகை அன்று?)
தெரிவித்துக் கொள்கிறேன் 

தொடர்வோம் நம் பணியை.

அன்புடன் 
செம்மல்.



2011/11/23 Albert Fernando <albe...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Nov 23, 2011, 11:12:07 AM11/23/11
to tamil_...@googlegroups.com
பாராட்டு வழங்கிய நண்பர் செம்மலுக்கும் முரளிக்கும் நன்றிகள்.
"அவரும், வரும் என மாதிரம்  அனைத்தையும் அளக்கின்ற   கண்ணளாக" அமர்ந்திருந்த சீதையைப் போல்
காத்திருக்கிறேன். 
பொற்கிழி / பொற்கிளிகளுக்கும்  (எது  வந்தாலும் சம்மதமே!) முன்னதாகவே  நன்றிகள்.
நண்பர் செல்வ முரளி வேறு தங்கப் படம் காட்டி ஆசையைக் கிளப்பிவிட்டார்.
இன்று இரவெல்லாம் 'தங்கம்' 'தங்கம்' என்று ஒரே கனவு மயமாகத்தான் இருக்கும் போங்கள்.


அன்புடன்
பெஞ்சமின்
பி.கு :
1 பின்னூட்டத்தை என் இல்லத்தரசியிடம் காட்டவில்லை-  தகத்தகக்கும் தங்கப் படம்  உள்ளதே!
2 நல்ல வேளை, அக்கம்பக்கத்தில் 'தங்கம்' என்ற பெயரில் யாரும் இல்லை ; தாங்கள் அனுப்ப இருக்கும்
'தங்கத்தை'க் கனவில் கண்டுநான் ஏதோ உளறப் போக அப்புறம், எப்புறமும் 'மண்டகப்படிதான்'



2011/11/23 Govindan R <govind...@gmail.com>

Sivam Amuthasivam

unread,
Nov 24, 2011, 6:24:14 AM11/24/11
to tamil_...@googlegroups.com
’ பொற்கிளி ‘ கிடைத்து மூன்று தசாப்தங்களே ஓடி மறைந்துவிட்டது. இப்போது எனது ‘ பொற்கிளி’ க்கும் 
’ பொற்கிழி ‘ தான் வேண்டுமாம்.
ஆயிரம் பொன் - ஒரு பொற்கிழி.
ஆனால், எனது பொற்கிளிக்கு , ஆயிரம் பொற்கிழி கொடுத்தாலும் நிறைவு வராது.

Benjamin LE BEAU

unread,
Nov 24, 2011, 7:02:50 AM11/24/11
to tamil_...@googlegroups.com
அதெப்படி ஐயா,  'பொற்கிளிகள்' எல்லாம் (எல்லாரும்) ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்.!
வீட்டுக்கு வீடு வாசற்படிதான். என் வீடு மட்டும் என்ன விதிவிலக்கா!


அன்புடன்
பெஞ்சமின்
 

2011/11/24 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

பழமைபேசி

unread,
Nov 26, 2011, 10:28:28 AM11/26/11
to tamil_ulagam
வல்லமையில், கட்டுரையின் தொடர்ச்சியை வாசித்துப் பயனுற்றேன். நன்றி!!

On Nov 24, 6:02 am, Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com> wrote:
> அதெப்படி ஐயா,  'பொற்கிளிகள்' எல்லாம் (எல்லாரும்) ஒரே மாதிரி
> சிந்திக்கிறார்கள்.!
> வீட்டுக்கு வீடு வாசற்படிதான். என் வீடு மட்டும் என்ன விதிவிலக்கா!
>
> அன்புடன்
> பெஞ்சமின்
>

> 2011/11/24 Sivam Amuthasivam <amutham2...@googlemail.com>


>
>
>
>
>
>
>
> > ’ பொற்கிளி ‘ கிடைத்து மூன்று தசாப்தங்களே ஓடி மறைந்துவிட்டது. இப்போது எனது
> > ‘ பொற்கிளி’ க்கும்
> > ’ பொற்கிழி ‘ தான் வேண்டுமாம்.
> > ஆயிரம் பொன் - ஒரு பொற்கிழி.
> > ஆனால், எனது பொற்கிளிக்கு , ஆயிரம் பொற்கிழி கொடுத்தாலும் நிறைவு வராது.
>

> > 2011/11/23 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com>


>
> >> பாராட்டு வழங்கிய நண்பர் செம்மலுக்கும் முரளிக்கும் நன்றிகள்.
> >> "அவரும், வரும் என மாதிரம்  அனைத்தையும் அளக்கின்ற   கண்ணளாக" அமர்ந்திருந்த
> >> சீதையைப் போல்
> >> காத்திருக்கிறேன்.
> >> பொற்கிழி / பொற்கிளிகளுக்கும்  (எது  வந்தாலும் சம்மதமே!) முன்னதாகவே
> >> நன்றிகள்.
> >> நண்பர் செல்வ முரளி வேறு தங்கப் படம் காட்டி ஆசையைக் கிளப்பிவிட்டார்.
> >> இன்று இரவெல்லாம் 'தங்கம்' 'தங்கம்' என்று ஒரே கனவு மயமாகத்தான் இருக்கும்
> >> போங்கள்.
>
> >> அன்புடன்
> >> பெஞ்சமின்
> >> பி.கு :
> >> 1 பின்னூட்டத்தை என் இல்லத்தரசியிடம் காட்டவில்லை-  தகத்தகக்கும் தங்கப்
> >> படம்  உள்ளதே!
> >> 2 நல்ல வேளை, அக்கம்பக்கத்தில் 'தங்கம்' என்ற பெயரில் யாரும் இல்லை ;
> >> தாங்கள் அனுப்ப இருக்கும்
> >> 'தங்கத்தை'க் கனவில் கண்டுநான் ஏதோ உளறப் போக அப்புறம், எப்புறமும்
> >> 'மண்டகப்படிதான்'
>

> >> 2011/11/23 Govindan R <govindanr...@gmail.com>


>
> >>> ஐயா ஔவை ஆகிய சொற்கள் பற்றிய ஆய்வை
>
> >>> மிகத் திறம்பட செய்துள்ள பேராசிரியர் பெஞ்சமின்
>
> >>> அவர்கள் நீடூழி வாழ வேண்டும்.
>
> >>> கொடைவள்ளல் திரு ஆல்பர்ட்டு அவர்கள் பொற்கிழி (பொற்கிளி அன்று) க்கு
> >>> ஏற்பாடுகள் செய்தால் எல்லாரும் அணியமாக
> >>> இருக்கிறோம் என்று கழிபேருவகையுடன் (களி பேருவகை அன்று?)
> >>> தெரிவித்துக் கொள்கிறேன்
>
> >>> தொடர்வோம் நம் பணியை.
>
> >>> அன்புடன்
> >>> செம்மல்.
>

> >>> 2011/11/23 Albert Fernando <alber...@gmail.com>
>
> >>>> *ஆகா...ஆகாகா...*


>
> >>>> தமிழ் உலக அரசவையோரே!
>

> >>>> *இதுவல்லவோ தமிழர் பண்பாடு! நயத்தகு நாகரிகம்!!*
> >>>> *
> >>>> *
> >>>> *கருத்து மாறுபாடுகள் அந்தக்கருத்தைஒட்டியதாகவே *
> >>>> *கருதிக் கொள்ளக்கூடிய பண்பு இருவர் மடல்களிலும் *
> >>>> *சுடர்விடுகிறது. *
>
> >>>> *தனிப்பட்ட பேதம் தலை தூக்கவிடாமல்*
> >>>> *இருவருமே உள்ளார்ந்த கருத்துப்பரிமாற்றத்துக்கு வழி*
> >>>> *வகுக்கும் பாங்கிற்கு என் சிரம்தாழ்த்து;கனிவான கரம்*
> >>>> *குவிப்புகள்! *
>
> >>>> *தொடரட்டும் உங்கள் கருத்துப்பரிமாற்றம்.*
> >>>> *எங்கள் சிந்தைக்கு விருந்தாகட்டும்....யாரங்கே.....தமிழ் உலகம்*
> >>>> *வியக்கும் இவ்விருவருக்கும் பொற்கிளிகள் அளித்து*
> >>>> *பாராட்ட உத்தரவிடுகிறேன் :-))))*


> >>>> பேரன்புடன்,
> >>>> ஆல்பர்ட்.
>

> >>>> 2011/11/23 Sivam Amuthasivam <amutham2...@googlemail.com>


>
> >>>>> பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
>
> >>>>> ஒவ்வொன்றாக - விளக்கமாகப் பதிலளித்தமைக்கு நன்றி!
> >>>>> ஏற்கெனவே, பழைய மடலொன்றில் நீங்கள் தெளிவாகக்
> >>>>> குறிப்பிட்டிருக்கிறீர்கள் : -
> >>>>> ‘ சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லியை - என்
> >>>>>   இனமாக என்றும் யான் கருதியதில்லை‘   .....  என்று.
>
> >>>>> எனவே. இதில் சினம் இல்லையென்றே கொள்ளலாம்.
> >>>>> எனினும், ஆங்காங்கே ஒருவிதமான தவறான புரிதல்
> >>>>> உங்கள் பதிலில் இழையோடுகிறதோ என்று தோன்றுகிறது.
>
> >>>>> இவ்வுணர்வுடன், எனது முந்தைய மடலைப் பார்க்கும்போதுதான்
> >>>>> எனக்கே புரிகிறது -
> >>>>> கொஞ்சம் அதிகமான கடுஞ்சொறகளை உபயோகித்துவிட்டேன் என்பது.
> >>>>> எனவே, இதற்கான தன்னிலை விளக்கத்துடன் ஆரம்பிப்பதே பொருத்தம்
> >>>>> என்றெண்ணுகிறேன்.
> >>>>> ’ எதிர்ப்பை ‘ என்ற சொல்லை யான் தவிர்த்திருக்கலாம்தான்.
> >>>>> ஆனாலும், அதை யான் , உங்களுக்கான எதிப்பாகக்கருதியிருக்கவில்லை என்பதே
> >>>>> உண்மை.
> >>>>>  அது ‘ அவ் ‘ இற்கான எதிர்ப்பு மட்டும்தான்..
> >>>>> அதுமட்டுமல்லாது, இதற்கு முந்தைய வசனத்தின் பிரதிபலிப்பு.
> >>>>> அதாவது,
> >>>>> \\\அந்த எதிர்ப்புக்குரல்கள் வெளிவரமுடியாதபடி அமுங்கிப்போயிருக்கவும்
> >>>>> வாய்ப்புண்டல்லவா?\\\\
> >>>>> இதிலுள்ள ‘ எதிர்ப்புக்குரல் ‘ எனும் சொல்லே, அடுத்த வசனத்தில், ‘
> >>>>> எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்’ என்றாகிவிட்டது.

> >>>>> \\\*இதோ நான் எனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன் ஆதாரத்துடன்'. *\\\


>
> >>>>> இஃதும் அவ்வகையைச் சேர்ந்ததுதான்.
>
> >>>>> அந்நேரம் எழுந்திருக்கக்கூடிய ‘ எதிர்ப்புக்குரல்கள் ‘ ஒருவேளை
> >>>>> ஆதாரமில்லாமையால் அமுங்கியிருந்தாலும்,
> >>>>> இப்போது ஆதாரத்துடன் யான் பதிவுசெய்கிறேன்.... என்றுதான் அமையுமே தவிர,
> >>>>> உங்கள் கட்டுரைகள் மேம்போக்கானவை என்பதல்ல அர்த்தம்.
>
> >>>>> அதுமட்டுமன்றி, வகுப்பில் ஒரு மாணவன் ‘ தெரியும் ‘ என்று சொன்னால், அது
> >>>>> ஏனைய மாணவர்களுக்கோ அன்றி ஆசிரியருக்கோ
> >>>>> தெரியாது என்று சொல்வதாக் எடுத்துக்கொள்ள
>

> ...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages