இனி என்ன செய்யபோகிறோம்......தமிழக மக்களே!!!

12 views
Skip to first unread message

KAVIMATHY

unread,
Mar 9, 2009, 9:24:00 AM3/9/09
to tamil_...@googlegroups.com, albe...@gmail.com, chemb...@gmail.hom, eswa...@yahoo.com, mansal...@yahoo.co.in, mha...@yahoo.com, mohamed...@yahoo.com, msale...@yahoo.com, sat...@gmail.com, seduk...@hotmail.com, seduk...@yahoo.com, sheik_...@rediffmail.com, sultans...@yahoo.com, syed...@gmail.com, tamil...@gmail.com, whit...@gmail.com, aasifmeeran, Abdul Katheem, abuaadhil azad, abul hasan, adhikaalaitamilanna, ali kovalam, amee...@gmail.com, Ameeraga Thamiz Mandram, Amina Idrees, Amutha Arasan, Anandbarathy, athiraifarook, barathi friends, Bharath, bharathi friendship, BSQ (Mustafa Abdul Aleem), click kavitha, dharumi -, Dr.Raja Rathinam, Dr.Shahul hameed, Editor, era_era...@sify.com, fakrudeen (kader ali), fakrudeen ali ahamed, fardeen ali ahamed, Fast courrier, ghouse mohamed, gochu tambi, hajafakrudeen, haji mansoor, hameed faizel, Hasan Ali, Hasan Basar, hasanali mohamed usman, IBNU HAMDUN, Iniyavan Haji, jafer sadiq pakkavi, JaghirH Hussain, jainubfathima, jazeela dubai, kabeer ahamed, kadai solli, kadar karai, kadarkarai tamil, kaderali Travels, kamal hasan, kamalsha, Kavikknal Madhiyazhakan, khathir avan, kulederan london, mkghouse, mohamed saleem, mohamedali haji, mozhi net, murali puduvai, Muruga poopathi, murugan artist, Mustafa kamal, mustafa kamal france, mustafa muthu, mustaq, muzhakkam, nalaini, Nanban, nmdmusthafa, pandi durai, Paransothi, prabha karan, pumadavi, rafeeq bmts, Ragurai, Ramesh visai, ravi, rawoof tamil, Riswana france, sadayan amanulla, sahul hameed, saleem, sangamam rafi, Sathaq Mohideen, sehab honeywell, Sethukkarasi, shehab, sikkander usa, siva kumar, srini vasu, tha mu mu ka, thamizhalai velieedu, thamizhmann, The Lemuriya Publications, thinnai, thuvakku ilakkiya amaippu, udaiyan ilangai uthayakaran, vaarppu kavithai, Vithiyananthan N, yaathra ialnkai, || editor || sangamam ||, அசன் bmts, அன்புடன், அன்புடன் புகாரி, ஆசிப் மீரான், ஜெயக்குமார் தம்பி, தோழர்.அசோக் துபாய், தோழர்.அப்துல் கதீம் துபாய், தோழர்.இசாக் துபாய், தோழர்.கவிமதி, தோழர்.கவிமதி, தோழர்.நண்பன் துபாய், தோழர்.முத்தமிழ்வளவன் துபாய், தோழர்.முத்துகுமரன், தோழர்.முத்துகுமரன் துபாய், தோழர்.மூர்த்தி சிங்கை, நிலவு நண்பன், நீதிபதி பாண்டித்துரை, பொள்ளாச்சி நசன் - www.thamizham.net பேச:(04259)221278 அலைபேசி : 9788552061, 9842002957, வானவில், வே.மதிமாறன்
"புதைந்து கிடக்கும்
கோடானுகோடி
எலும்புக் கூடுகள் மீது
அமைதியாக
உறங்கி எழும்
நாம் யார்?" - என்று ஒரு கவிஞர்
 
நம்மை நோக்கி எழுப்பும் கேள்விக்கு நாம் தலையை குனிந்துகொள்வதை தவிர எதும் செய்ய இயலாத நிலையில் இருப்பதுதான் மனிதயினத்தின் உட்சநிலை ஒதுங்குதல் எனலாம். ஒரு குண்டூசி குத்தினாலே பத்துநாளைக்கு வலியிருக்கும், குண்டுகள் தலையில் நேரடியாக விழுந்தாலும் கூட வலி தெரியாது உயிர் பிரிந்துவிடும். ஆனால் நகம் தொடங்கி உடல் உறுப்புகளை இழந்து தானும் வாழ முடியாமல் அடுத்தவருக்கும் பாரமாக அமைந்துவிடுகிற நிலை கொடூரமானது.
 
மனிதனின் உறவு படிநிலையானது சக மனிதன் என்கிற செயல்பாட்டில் தொடங்கி தன் குடும்பம் என்று சுருங்கிவிடுவது அறிந்த ஒன்றே. இருப்பினும் தன் இனம் சார்ந்த, தன் மொழி சார்ந்த தன் குருதி உறவு என்கிற மிக அருகாமை உயிர்கள் பாதிக்கப்படுகிறபோது நமக்கும் அதே வலிமிகுந்த வாழ்க்கை தான் என்பதால் ஈழத்தமிழர் என்றில்லை உலகில் எந்த மனிதன் பாதிக்கப்படாலும் அந்த வலி நேரடியாக நம் உணர்வில் கலந்துவிடுகிறது.
 
போர் நடக்கும் இடங்களில் எல்லாம் உயிரிழப்பு தவிர்க்க இயலாததுதான் ஆனால் யாருடைய உயிர் யாருக்காக எதற்காக இழக்கப்படுகிறது அல்லது இழக்கவைக்கப்படுகிறது என பல துணைக்கேள்விகள் நம்முள் எழுகிறது. சுற்றி வலைத்து பார்த்தால் பேரினவாத்தின் கொடும்பசிக்கு பொதுமக்களின் உயிர் மட்டுமின்றி இராணுவ வீரர்களின் உயிர்களூம் பலியிடப்படுகின்றன. நமக்கு உயிர் என்கிற போது இரண்டு உயிர்களும் ஒன்றுதான். இதில் பேரினவாதம் தன்னை தற்காத்து கொள்வதற்கு பணம் கொடுத்து சில பாதுகாவலர்களை  ஏற்படுத்தி தன்னை சுற்றி நிறுத்திக்கொள்கிறது.
 
பணத்திற்காகவே கொலைசெய்யும் கொலை வியாபாரிகளையும் அதே பணத்திற்காக இராணுவ நடவடிக்கை என்கிற பெயரில் கண்களை கட்டிக்கொண்டு களத்தில் நிற்கும் இயந்திர மனிதர்களையும் நாம் ஒரே தட்டில்வைத்துதான் பார்க்க முடிகிறது. பேரினவாதம் எப்போதும் தனக்கு தன் அடிமைகள் பலி தந்துக்கொண்டே இருக்கவேண்டும், இல்லாவிடில்   தன் அடிமைகள் தனக்கு பலி தரும் செயலை மறந்துவிடக்கூடும் என்கிற சந்தேகத்திலேயே அடிக்கடி அடிமைகளை ஏவிவிட்டு அவர்களின் பணியை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. அடிமைகளும் தன் எசமானர்களுக்கு  பலி கொடுத்து  கொடுத்தே  தங்களின்  கூலியை உயர்த்திக்கொள்கின்றன.
 
இனி இந்த பேரினவாததால் பாதிக்கப்படும் உயிரினங்களை பார்போம்.
 
ஒரு மண் புழுவாக இருந்தால்கூட அதை நாம் மிதிக்கும்போது நம்மை தாகுவதெற்கென தன் தலையை வேகமாக நம்மை நோக்கி திருப்பும். அதனால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது என்று பேசாமல் இருப்பதைவிட எதிர்த்து சாகும் போது மிதிப்பவனுக்கு எதிர்ப்பு என்கிற சித்தாந்தத்தை உணரவைத்துவிட்டுதான் சாகிறது. மண் புழுவுக்கே அப்படியெனில் நாம் மனிதர்கள். நசுக்கப்படும்போது நற நறத்துக்கொண்டு திமிரி எழுவோம், அந்த எழுச்சி என்பது பேரினவாதத்திற்கு செரிமானம் ஆகாத செயல் என்பதை தன் அடிமைகளை ஏவிவிட்டு கொலைசெய்ய சொல்லுகிறது, அடிமைகளும் தன் எசமானின் காலடியை சக மனித குருதியால் குளிப்பாட்டி தன் விசுவாச நிலையை தக்கவைத்துக்கொள்ளும்.
 
பேரினவாதத்திற்கும், அடிமைகளுக்கும், நசுக்கப்படுவோருக்கும் இடையே நடக்கும் இந்த விளையாட்டில் நாம் பார்வையாளர்களாய் நம்மையறியாமலேயே நுழைகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் பார்வையாளர்களில் ஒரு பெரும்பகுதி பேரினவாதத்தை எதிர்க்கும் அதேவேலையில், பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் பேரினவாதத்தின் அடிமைகளில் ஒரு பகுதி பேரினவாதத்தை ஆதரித்து நம்மை குரள்வலை பிடிக்கவும் தவறுவதில்லை.
 
இதில் பெரும் ஒற்றுமை என்னவெனில் நம்மை நசுக்கும் இங்குள்ள பேரினவாதத்தின் பிற முகங்கள் அதே ஆளுமையில் ஆட்சி அதிகாரத்துடன் இருப்பதுதான்..............(உங்களின் விமர்சனங்களுடன் தொடரும்)
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தில் மக்கள் படும் அவலங்களை  காணொளிகளால் பாருங்கள்.........
 
கவிமதி
துபாயிலிருந்து
==============================
வெட்டியெறிய ஆடுகள் அல்ல
நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள்
-----------------------------------------------------------
www.kavimathy.blogspot.com
www.kavimathy.wordpress.com
kolainjar.pdf

marai...@yahoo.com

unread,
Mar 9, 2009, 11:22:12 AM3/9/09
to tamil_Ulagam


வணக்கம்.
இன்று செயா தொலைக்காட்சியில் முழுமையும் நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள்,செயலலிதாவின் உண்ணாநிலைப்போராட்டத்தை.
பெரும்பானமைப் பேச்சாளர்கள் தி.மு.க.வைப் பழித்துரைப்பதையும் தலைவர்களைத் தாக்குதலையும்
நிகழ்த்தினர்.
எனினும் வை.கோ.அவர்கள், மிக விரிவாக, ஈழத்தமிழர் படும்
இன்னலையும் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையையும் விளக்கிப்பேசினார்.
இந்திய அரசுதான் இந்தப் படுகொலைக்குக் காரணம் எனவும்
தமிழ்நாட்டு அரசு அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் சான்றுகளுடன் பேசினார்.
அங்கே நிகழும் அவலங்களை உள்ளம் உருக்கும் வகையில்
பேசியதுடன் இதனைத் தடுத்து நிறுத்த விரும்பும் ஒவ்வொரு தமிழரும் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வார்க்கும் வாக்களிக்கக்கூடாது எனவும் வேண்டிக்கொண்டார்.
ஒரு பெரிய மாற்றம் இந்திய அரசியலில் நிகழலாம்.
அன்புடன்,
மறை.
 

 


--- On Mon, 3/9/09, KAVIMATHY <kavi...@gmail.com> wrote:

Albert Fernando

unread,
Mar 9, 2009, 11:42:41 AM3/9/09
to tamil_...@googlegroups.com

அன்பினிய முனைவரவர்கட்கு,

வணக்கம்.
கடல்கடந்து வாழும் எங்களுக்கு தமிழக நடப்பை
சுருக்கமாகச் சொன்னாலும் தெளிவாகச்
சொல்லிய தங்களின் வைர வரிகளுக்கு
எமது நன்றிகள்.
ஆல்பர்ட்,
அமெரிக்கா.

2009/3/9 <marai...@yahoo.com>


வணக்கம்.
இன்று செயா தொலைக்காட்சியில் முழுமையும் நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள்,செயலலிதாவின் உண்ணாநிலைப்போராட்டத்தை.
 வை.கோ.அவர்கள், மிக விரிவாக, ஈழத்தமிழர் படும்
இன்னலையும் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையையும் விளக்கிப்பேசினார்.
இந்திய அரசுதான் இந்தப் படுகொலைக்குக் காரணம் எனவும்
தமிழ்நாட்டு அரசு அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் சான்றுகளுடன் பேசினார்.
அங்கே நிகழும் அவலங்களை உள்ளம் உருக்கும் வகையில்
பேசியதுடன் இதனைத் தடுத்து நிறுத்த விரும்பும் ஒவ்வொரு தமிழரும் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வார்க்கும் வாக்களிக்கக்கூடாது எனவும் வேண்டிக்கொண்டார்.
ஒரு பெரிய மாற்றம் இந்திய அரசியலில் நிகழலாம்.
அன்புடன்,
மறை.
 

 


--- On Mon, 3/9/09, KAVIMATHY <kavi...@gmail.com> wrote:
கோடானுகோடி
எலும்புக் கூடுகள் மீது
அமைதியாக
உறங்கி எழும்
நாம் யார்?" - என்று ஒரு கவிஞர்
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages