அறிவோம் அரிச்சுவடி- ஓ,ஓள, ஃ

1,083 views
Skip to first unread message

Engr.Sulthan

unread,
Apr 27, 2012, 8:52:36 PM4/27/12
to Global...@yahoogroups.com, che...@googlegroups.com, tamilnad...@yahoogroups.com, Tamil2...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamila...@googlegroups.com, nadp...@googlegroups.com, anbudan
அறிவோம் அரிச்சுவடி- ஓ,ஓள,
 
  தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பதினோராவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஓகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஓவன்னா" என்பது வழக்கம்.
 
"ஓ" யின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

 இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், என்பது க்கு இன எழுத்தாக அமையும்[2].

சொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்

'ஓ' எழுதும் முறை
தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோ, ஞோ, டோ, ணோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ றோ, னோ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டோ, யோ, ரோ, லோ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டோக்கியோ, யோவான், ரோடு, லோரன்ஸ் (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது[4]. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.

"ஓ" வும் மெய்யெழுத்துக்களும்

வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஓகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [5]. இதனால், ஓகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு குறியீட்டையும் கால் குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.

18 மெய்யெழுத்துக்களோடும் ஓகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள்சேர்க்கைஉயிர்மெய்கள்
வரிவடிவம்பெயர்வரிவடிவம்பெயர்
க்இக்கன்னாக் + ஓகோகோவன்னா
ங்இங்ஙன்னாங் + ஓஙோஙோவன்னா
ச்இச்சன்னாச் + ஓசோசோவன்னா
ஞ்இஞ்ஞன்னாஞ் + ஓஞோஞோவன்னா
ட்இட்டன்னாட் + ஓடோடோவன்னா
ண்இண்ணன்னாண் + ஓணோணோவன்னா
த்இத்தன்னாத் + ஓதோதோவன்னா
ந்இந்தன்னாந் + ஓநோநோவயன்னா
ப்இப்பன்னாப் + ஓபோபோவன்னா
ம்இம்மன்னாம் + ஓமோமோவன்னா
ய்இய்யன்னாய் + ஓயோயோவன்னா
ர்இர்ரன்னார் + ஓரோரோவன்னா
ல்இல்லன்னால் + ஓலோலோவன்னா
வ்இவ்வன்னாவ் + ஓவோவோவன்னா
ழ்இழ்ழன்னாழ் + ஓழோழோவன்னா
ள்இள்ளன்னாள் + ஓளோளோவன்னா
ற்இற்றன்னாற் + ஓறோறோவன்னா
ன்இன்னன்னான் + ஓனோனோவன்னா

வரிவடிவம்

தமிழில் ஓகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஓகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.
Development Tamil Letter OOkaaram.jpg
தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஓகாரமே புள்ளியில்லாத அடிப்படைக் குறியீடாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடுகளைக் கல்வெட்டு எழுத்துக்களில் காணமுடியவில்லை. பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஓகாரத்தைக் குறிக்க அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

ஓகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஓகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஓகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.
Other
 Languages-OO.jpg

பிரெய்லியில் ஓகாரம்

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது, மூன்றாவது வரிசைகளில் இடது பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது வைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.
பாரதி பிரெய்லியில் ஏகாரம்
 
தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பன்னிரண்டாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஔகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஔவன்னா" என்பது வழக்கம்.
"ஔ" வின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஔ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

 இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், ஔ என்பது உ க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்[2].
சொல்லில் ஔகாரம் வரும் இடங்கள்
'ஔ' எழுதும் முறை
தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, யௌ, ரௌ, லௌ, ழௌ, ளௌ றௌ, னௌ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும், யகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ரௌ, லௌ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ரௌத்திரம், லௌகீகம் என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
ஔகாரம் தனித்தோ, மெய்களோடு சேர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. ககர மெய்யுடனும், வகர மெய்யுடனும் மட்டுமே ஔகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஔகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
 
ஆய்த எழுத்து
 
ஆய்த எழுத்து  என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் ~ 500 B.C.)
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
எ.கா:
  • அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
  • இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
வரலாறும் இலக்கணமும்
உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது.
"அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. "அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.
காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.
உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது.
இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.
ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.
வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு.
பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது.
ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும்.
கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.
ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது.
போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.
போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

 ஆயுதம்

ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன. (சங்கநூல் சொல்லடைவு 1967) சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது சாலாது.

ஆய்த எழுத்து - விளக்கம்

(ஃ) – அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த எழுத்தை ஆய்தம் என்னும் பெயரால் குறிப்பிடுவது வழக்கம்.
தொல்காப்பியர் இந்த ஆய்த எழுத்து சார்பெழுத்தின்பாற்பட்டது எனக் குறிப்பிடுகிறார்.
அஃகான் என்னும் பெயரிட்டு இதனை முன்னோர் வழங்கிவந்தனர். தொல்காப்பியரும் அவ்வாறே இதனை வழங்குகிறார். நன்னூல் அஃகேனம் என்னும் பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. தனிநிலை என்னும் சொல்லாலும் இதனைக் குறிப்பிடுகிறது.
தமிழ் எழுத்துக்களை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர்.

ஆய்தம் = ஒலி நுணுக்கம்

தமிழில் ஆய்த எழுத்து வல்லெழுத்து ஒலியை நுணுக்கம் செய்யப் பயன்படுத்தப்படும்.
“ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம் (உரியியல்) ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராச்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துக்களை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துக்களை நுண்மையாக்கிக் காட்ட இந்த ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண்கிறோம்.

 முற்றாய்தம்

எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது.

ஆய்தக் குறுக்கம்

(கல்+தீது) கஃறீது, (முள்+தீது) முஃடீது, (அவ்+கடிய) அஃகடிய –எனப் புணர்ச்சியில் வரும் ஆய்தவெழுத்து ஆய்தக் குறுக்கம்.

 வடமொழி ஒலி ஒப்பீடு

சமற்கிருதத்தில் (வடமொழியில்) இந்த ஒலியெழுத்தை அஹ என ஒலிப்பர். இந்த மொழியில் இந்த ஒலி மொழியின் இறுதி ஒலியாக வரும். தமிழில் இந்த ஒலி இறுதி ஒலியாக வராது. வல்லின எழுத்துக்கள் ஆறும் ஊர்ந்துவரும் நுண்ணொலி எழுத்தாக இடையில் மட்டுமே வரும்.

திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம்

திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எனவே அதனைத் தனியே குறிப்பிடவேண்டியுள்ளது.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49)
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476)
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014)
இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக்கொள்கிறோம்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (226)
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் (363)
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414)
இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுகொள்கிறோம்.
இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர்.

[தொகு] இக்கால நிலை

இக்காலத்தில் பிறமொழி (திசை)ச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃ, புரூஃ என்றெல்லாம் எழுதிவருகிறோம்.

மாற்றுக் கருத்து

முனைவர் தமிழப்பன் எழுதிய "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்" என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார். [1] ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார் [2]. எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம்.
எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கிழூம் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது. [3]
ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்ற் கொள்வதும் தவறாகாது அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றோ அவை ஒவ்வொரு புள்ளி (நாகியாது, காடு) மட்டுமே பெற்று எழுதப்பட்டன என்றோ கருதலாம். "ஒற்றெழுத்தியற்றே குற்றியலுகரம்" என்ற செய்யுளில் நூற்பாவும் இங்கு நினைக்கத் தக்கது. யாப்பருங்க ல இரண்டாம் நூற்பாவின் மேற்கோளாக வரும் "சங்கயாப்பின்"
"குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும்
மற்றவை தாமே புள்ளி பெறுமே"
என்பதும் இங்கு சுட்டத்தக்கது.
முப்பாற்புள்ளியே ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய மூன்றற்கும் பொது எழுத்தாய் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது [4] என்ற கருத்து குழப்பத்தை விளைவிக்குமாதலின் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

மேற்கோள்கள்

  1. இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-53, 1982, முதற்பதிப்பு
  2. இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-52, 1982, முதற்பதிப்பு
  3. மு.இராகவையங்கார், ஆராய்ச்சித்தொகுதி, ப-130, 1964, பாரிநிலையம், இரண்டாம் பதிப்பு
  4. சு.இரத்தினசாமி, தமிழ் எழுத்து வரிவடிவ வரலாறு, ப-64, 1988, முதற்பதிப்பு
 
Engr.Sulthan
Reply all
Reply to author
Forward
0 new messages