தனிமங்கள்(Chemical Elements)

3,467 views
Skip to first unread message

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 21, 2012, 4:59:01 PM9/21/12
to thiru thoazhamai


தனிமங்கள்(Chemical Elements)
- இலக்குவனார் திருவள்ளுவன்

 அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(element) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா.  தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.

 இயல்பான நிலையில் தனிமங்கள்  திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா.  (அ.) மாழை: அதள்(பாதரசம்) ; (ஆ.) அல்மாழை: செந்நீர்மம் (புரோமின்)], சில வளிநிலையிலும் (எ.கா.  உயிர்வளி) உள்ளன.

 இயற்கையில் பல தனிமங்கள், வேறு சில தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றன. இவ்வாறு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து சேர்ந்த கலவை சேர்மம் எனப்பெறும்.

 அதே போல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட  தூய பொருள்கள் வீத அளவின்றிச் சேருவது கலவை.

 தனிமத்தின் மிக மிகச்சிறிய அலகுதான் அணு எனப்பெறுகிறது. அணுவானது முன்னணு(புரோட்டான்),  நள்ளணு(நியூட்ரான்),  மின்னணு( எலக்ட்ரான்) போன்ற நுண்ணிய அணுத்துகள்களாகப்பிரிக்கப்படக் கூடியது.

 இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (molecules) உண்டாக்குகின்றன.
 அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்காமல் தனித்த நிலையில் உள்ள அணுக்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட  தனிமங்கள் உள்ளன. இவை  ஓரணுத் தனிமங்கள் ஆகும்.
 இவற்றுள் ஒரே வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளை உடையது தனிமம்.

 வெவ்வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளைக் கொண்டது சேர்மம்.

 ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் உள்ள முன்னணுக்களின்(புரோட்டன்களின்) எண்ணிக்கையைக் குறிப்பது அணு எண் எனப்பெறும். தனிமங்களின் பெயர்கள் அணு எண்களின் வரிசைக்கு ஏற்பவும் அணுநிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர வரிசைப்படியும் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு நாம், அணு எண் நிரல்படி அட்டவணையைப் பார்ப்போம்.

 தனிமத்தின் பெயர்களுள் பல இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிச் சொற்களாகும்.  கண்டறிந்த வல்லுநர்களின் பெயர்கள், கண்டறிந்த இடங்களின் பெயர்கள், பிற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் என்ற முறையில் பல பெயர்கள் அமைந்துள்ளன. இப் பெயர்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் உருவாக்கப்பட்டதே வேதியல் குறியீடு ஆகும்.  நாம் ஏன் இவற்றைத் தமிழில் குறிப்பிட வேண்டும் எனச் சிலர் வினவலாம். தமிழில் படித்தால்தான் நன்கு புரிந்து கொள்ளவும் உள்ளத்தில் பதிந்து  கொள்ளவும்  இயலும். தொடக்க நிலையில் தமிழிலும் பின்னர் அடைப்பிற்குள் உள்ள பன்னாட்டு முறையையும் தெரிந்து கொள்வதே நலமாகும்.
தனிமங்களின் அட்டவணை
அணு  எண்
தனிமம்
குறியீடு
அணுநிறை
1 நீர்வளி (Hydrogen)நீ (H) 1.00797
2 கதிர்வளி (Helium) க (He)4.0026
3 கல்லம் (Lithium)கல் (Li) 6.94
4 குருகம் (Beryllium)கு (Be) 9.0122
5 பழுப்பம் (Boron)ப (B) 10.811
6 கரிமம் (Carbon)கரி (C) 12.011
7 வெடிவளி (Nitrogen)வெ (N) 14.0677
8 உயிர்வளி (Oxygen) உ (O)15.994
9 பைம்மஞ்சள்வளி (Fluorine)பை (F) 18.9984
10 புத்தொளிரி (Neon)பு (Ne) 20.1797
11 வெடிமம் (Sodium)வெடி (Na) 22.9898
12 வெளிமம் (Magnesium)வெளி (Mg) 24.312
13 ஈயம் (Aluminium)ஈம் (Al) 26.98
14 கன்மம்  (Silicon )கன் (Si) 28.086
15 எரிமம் (Phosphorous)எ (P) 30.974
16 கந்தகம் (Sulfur)கக (S) 32.064
17 பாசிகம் (Chlorine)பா (Cl) 35.453
18 மடியன் (Argon )மடி (Ar ) 39.9
19 சாம்பரம் (Potassium )சா (K ) 40.1
20 சுதைமம் (Calcium)சு (Ca) 45.0
21 ‘காண்டிமம்’ (Scandium ) கா (Sc ) 44.956
22 கரும்பொன்மம் (Titanium )கரு (Ti) 47.9
23 வெண்ணாகம் (Vanadium )வெக(V ) 50.942
24 குருமம் (Chromium )குரு (Cr ) 51.996
25 மங்கனம் (Manganese )மங் (Mn ) 54.938
26 இரும்பு (iron)இரு (Fe ) 55.847
27 வண்ணிமம் (Cobalt)வண் (  Co) 58.933
28 வெள்ளையம் (Nickel )வெய (Ni i ) 58.91
23 செம்பு (Copper )செ (Cu ) 63.5
30 துத்தநாகம் (Zinc )து (Z n) 65.4
31 நரைமம் (Gallium )ந (Ga) 69.72
32 ‘செருமம்’ (Rubidium ) செரு (Rb) 72.59
33 சவ்வீரம் (Arsenic )ச (As) 74.9
34 மதிமம் (Selenium)நி (Se) 78.96
35 செந்நீர்மம் (Bromine)செநீ (Br) 79.904
36 மறைவளி (Krypton)மறை (Kr) 83.80
37 செவ்வரிமம்(Rubidium)செம் (Rb) 85.47
38 வெண்ணிமம்(Stronium)வெணி(Sr) 87.62
39 கருநரைமம்(Yttrium)கந (Y) 88.905
40 வண்மம்(Zirconium)வம(Zr) 91.22
41 அருமிமம்(Niobium)அரு (Nb) 92.906
42 முறிவெள்ளி(Molybdenum)மு(Mo) 95.94
43 செயற்கைத்தனிமம்(Technetium)செய(Te) 97.9072
44 சீர்பொன்(Ruthenium)சீர்(Ru) 101.07
45 திண்ணிமம்(Rhodium)திண்(Rh) 102.90550
46 பொன்னிமம்(Palladium)பொம்(Pd) 106.42
47 வெள்ளி(Silver)வெள்(Ag) 107.8682
48 வெண்ணீலிமம்(Cadmium)வெநீ(Cd) 112.44
49 நீலவரிமம்(Indium)நீவ(In) 114.8182
50 வெள்ளீயம்(Tin)வெஈ(Sn) 118.710
51 நொய்ம்மிமம்(Antimony)நொ(Sb) 121.760
52 ஒளிர்மம்(Tellurium)ஒ(Te) 127.60
53 கருமயிலம்(Iodine)கம(I) 126.90447
54 அயலிமம்(Xenon)அய (Xe) 131.30
55 நீலநீறிமம்(Cesium)நீநீ(Cs) 132.90543
56 மங்கிமம்(Barium)ம(Ba) 137.327
57 ஊக்கிமம்(Lanthanum)ஊ(La) 138.9055
58 நெகிழிமம்(Cerium)நெ(Ce) 140.115
59 வெண்மஞ்சை(Praseodymium)வெம(Pr) 140.90765
60 புதுமஞ்சை(Neodymium)புமNd) 144.24
61 கதிர்மம்(Promethium)கம்(Pm) 144.9127
62 வெண்நரைமம்(Samarium)வெந(Sm) 150.35
63 ‘ஐரோப்பிமம்’ (Europium) ஐ(Eu) 151.965
64 காந்தனிமம்(Gadolinium)காம் (Gd) 157.25
65 விளர்மம்(Terbium)விள(Tb) 158.92534
66 உறிமம்(Dysprosium)உறி(Dy) 162.50
67 ‘ஓல்மிமம்’(Holmium) ஓ(Ho) 164.93032
68 ‘எர்பிமம்’ (Erbium) எர்(Er) 167.26
69 வடமம்(Thulium)வ(Tm 168.93421
70 எட்டர்பிமம்’(Ytterbium) எம் (Yb) 173.04
71 மஞ்சிமம்(Lutetium)மம் (Lu) 174.967
72 ‘ஆஃப்னிமம்’(Hafnium) ஆஃப்(Hf) 178.49
73 வெம்மம்(Tantalum)வெம்(Ta) 180.9479
74 மின்னிழைமம்(Tungsten)மி(W) 183.84
75 அரிமம்(Rhenium)அரி(Re) 186.207
76 விஞ்சிமம்(Osmium)விம்(Os) 190.2
77 உறுதிமம்(Iridium)உறு(Ir) 192.217
78 வன்பொன்(Platinum)வ.பொ.(Pt) 195.08
79 தங்கம்(Gold)த(Au) 196.95654
80 இதள்(Mercury)இத(Hg) 200.59
81 சாம்பிமம்(Thallium)சாம்(Ti) 204.3833
82 காரீயம்(Lead)காரீ(Pb) 207.2
83 நிமிளை(Bismuth)நிமி(Bi) 208.98037
84 மஞ்சளம்(Polonium)மள்(Po) 208.9824
85 நொறுங்கிமம்(Astatine)நொறு(At) 209.9871
86 கதிரம்(Radon)கர(Rn) 222.0176
87 ‘விரெஞ்சிமம்’(Francium) விரெ(Fr) 223.0197
88 கதிரிமம்(Radium)கதி(Ra) 226.0254
89 கதிர்வினைமம்(Actinium)கவி(Ac) 227.0278
90 சுடரிமம்(Thorium)சுட(Th) 232.0381
91 புறக்கதிரம்(Protactinium)புற(Pa) 231.0388
92 விண்ணிமம்(Uranium)விண்(U) 238.0289
93 சேண்மிமம்(Neptunium)சேண்(Np) 237.0482
94 சேணாமம்(Plutonium)சேய்(Pu) 244.0642
95 ‘அமரிக்கம்’(Americium) அமெ(Am) 243.0614
96 ‘கியூரிமம்’(Curium) கியூ(Cm) 247.0703
97 ‘பெரிக்ளிமம்’(Berkelium) பெரி(Bk) 247.0703
98 ‘கலிபோரிமம்’(Californium) கலி(Cf) 251.0796
99 ‘ஐன்சுதீனம்’(Einsteinium) ஐன்(Es) 252.083
100 வெரிமம்’(Fermium) வெர்(Fm) 257.0951
101 ‘மெந்தலீமம்’ (Mendelivium) மெம் (Md) 258.10
102 நோபிளம்’(Nobelium) நோ(No) 259.1009
103 ‘இலாரன்சம்’(Lawrencium) இலா(Lr) 262.11
104 ‘உருத்தரம்’(Rutherfordium) உரு(Rf) 261

 தனிமங்களின் தன்மை, நிறம், கண்டறியப்பட்ட இடம்,   மிகுதியாய்க் கிடைக்கும் இடம், அறிஞர் பெயர் முதலியவற்றின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டவாறே தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனினும் ஒற்றை மேற்கோளுக்குள் சாய்வெழுத்துகளில் அடங்கியவை பன்னாட்டு முறையிலேயே அளிக்கப்பட்டுள்ளன. இவை நம்நாட்டில் கிடைக்கக்கூடிய இடங்களில் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. பிற அறிவியல் தமிழ் அகராதிகளில் உள்ளவற்றை விடமிகுதியாகத் தமிழில் குறிக்கப்பெற்றுள்ளன. நண்பர் ஒருவர் புதுச்சேரியில் அறிஞர் ஒருவர் தனிமங்களைத் தமிழில் குறிப்பிட்டுள்ளாரே. பார்க்கவிலலையா?  புதியன ஏன்? என்றார். அக்கையேடு கிடைக்கவில்லை. எனினும் பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில் உள்ள பட்டியலைப் பார்த்தேன். இப்பட்டியல்தான் தனி நூல் வடிவம் பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன். இவ்வட்டவணைக்கும் பல்கலைக்கழக அட்டவணைக்கும் ஒரு பகுதி ஒற்றுமை உள்ளது. ஆனால், தமிழில் குறிக்க இயலாதபொழுது அறிவியல் பெயர்களை அயல்மொழி என உணரும் வண்ணமே குறிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் எனத் தவறாக உணரும் வண்ணம் குறிக்கக் கூடாது. பல்கலைக்கழக அட்டவணை அவ்வாறுதான் உள்ளது. சான்றாக அலுமினியம் என்பது அளமியம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள் நல்ல தமிழ்ப்பெயர் என நம்பும் மாயை உள்ளது, உண்மையில் அலுமினியத்திலுள்ள முதல் நான்கு எழுத்துகள் (ALUM)அளம்; என ஒலிப்பிக்கப்பட்டு அளம் + இயம் =  அளமியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் அப்பட்டியலில் நாற்பதுக்கும் மேற்பட்ட தனிமங்கள் பெயர்கள்  தமிழ் வடிவ ஒலி பெயர்ப்பில் குறிக்கப் பட்டுள்ளன. எனவே அவை செம்மையை எதிர்நோக்கிய இடைக்கால ஏற்பாடாகத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம்.  மேலும் கடோலின் என்னும் அறிஞர் பெயர் சுட்டப்பெற்ற ‘கடோலின்’ என்பதைக்  god - கடவுள் எனக் கொண்டு கடவுளியம் எனக் கூறியுள்ளதும் பொருந்தாது. எனவே பிற தமிழ் வடிவம் கண்டு குழம்ப வேண்டா.

இங்கே 104 தனிமங்கள்குறிக்கப்பெற்றுள்ளன. இப்பொழுது 118   தனிமங்களைக் கண்டறிந்துள்ளனர். எஞ்சியன  குறித்துப்பிறிதோர் சமயம் காணலாம்.




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


DAVID SAGAYARAJ

unread,
Sep 22, 2012, 10:54:17 AM9/22/12
to tamil_...@googlegroups.com
அருமை ஐயா அருமை... இது மாணவர்களையும் ஆசிரியர்களையும் சென்றடைய வேண்டும்.

அன்புடன்
இளங்குமரன்

 


From: திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>
To: thiru thoazhamai <thiru-th...@googlegroups.com>
Sent: Saturday, 22 September 2012 4:59 AM
Subject: [தமிழ் உலகம்] தனிமங்கள்(Chemical Elements)

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en


திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 22, 2012, 9:05:38 PM9/22/12
to vall...@googlegroups.com, thiru thoazhamai
உண்மை தான்.நன்றி. கோன் என்பது தலைவன், இடையன், முதலானவற்றை க் குறிக்கும். கோண்  வளைவையும் குறிக்கும்
கோண் வரும் இடம்,
கம்ப இராமாயண 6312 ஆம் பாடல்  (இரணியவதைப்படல 124 ஆம் பாடல்)

        சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச்

சதக் கூறு இட்ட

     கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ;

இந் நின்ற

         தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ;

இத் தன்மை

      காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக்

                                                                                                கனகன் சொன்னான்.


என்பது முழுப்பாடல்

அணு பிளக்க இயலாதது என்கின்றனர்.  ஓர் தன்மை எணு என்பதன் மூலம் அந்த உண்மையும் குறிக்கப்பட்டுள்ளது.
பிளக்க இயலா அணுவின் 100 இல் 1 பங்கின் பெயர் கோண் என்பதன் மூலம்

அணுவை ப்பிரிக்க முடி யும் என்று பின்னர் கண்டுள்ளனர் நம் முன்னைத் தமிழர்கள்.
பிற நாட்டறிஞர்கள் இன்னும் பழைய உண்மையைத்தான் நம்பிக் கொண்டுள்ளனர்.

நாம் நாம் கண்டறிந்த உண்மையை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வில்லை. ஆனால் அயல் நாட்டவர் சொன்ன பின்னர் முன்பே சொல்லி யிருக்குமே என நமக்குள் முழங்குவோம்.




























2012/9/22 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/9/22 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>
அணுவின்  நூற்றில் ஒரு பங்கிற்குத்தான் கோன் என்று பெயர்.

கோண் என்று பெயர்.

சாணிலும் உளன் ஒருதன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணிலும் உளன்......

--
அன்புடன்,
ஹரிகி.

--
 
 

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 23, 2012, 5:54:06 PM9/23/12
to tamil...@googlegroups.com, thiru thoazhamai, arr.val...@gmail.com, natpu.in, நட்புடன் கதிர், ad...@tamil247.com, vaanav...@gmail.com, anb...@googlegroups.com, atema...@yahoo.co.in, elanth...@googlegroups.com, kee...@googlegroups.com, meen...@gmail.com, msmuthu...@yahoo.co.in, mswat...@gmail.com, muduvai...@gmail.com, mutht...@googlegroups.com, ne...@tamilthai.com, paris...@paristamil.com, pira...@googlegroups.com, pollac...@gmail.com, puduvai...@googlegroups.com, sivalingam...@gmail.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, thamizh...@googlegroups.com, valaiya...@gmail.com, theyva-...@googlegroups.com, tamila...@googlegroups.com, vall...@googlegroups.com, enn...@gmail.com, knva...@gmail.com, thir...@yahoo.co.in, thiruvelan.i, Thiruvelan Ilakkuvan, Ilakkuvanar Maraimalai, Ilakkuvanar Maraimalai, Ambalavanan I., balaji V, mathiyazhaghi ilakkuvanar, manimekalai ambalavanan, nithiy...@gmail.com
  1. The semantic (meaning) part is also the radical of the character. It refers to the element's usual state at room temperature and standard pressure. There are only four radicals used for elements: 釒/钅 (jīn "gold") for solid metals, 石 (shí "stone") for solid non-metals, 水/氵 (shuǐ "water") for liquids, and 气 ( "air") for gases.
  2. The phonetic (sound) part represents the character's pronunciation and is a partial transliteration of the element. For each element character, this is a unique phonetic component. Since there are over 100 elements already discovered, there are over 100 different phonetic components used in naming the elements.
Examples of characters derived from European pronunciations
Semantic Phonetic Element Source
金 + = 鋰 () lithium
金 + jiǎ = 鉀 (jiǎ) kalium, Latin name for potassium
金 + nèi = 鈉 (nà)* natrium, Latin name for sodium
金 + or = 銻 (tì)* antimony
金 + niè = 鎳 (niè) nickel
金 + = 鎘 () cadmium
金 + = 鎢(wù)* Wolfram, the discoverers' name for tungsten
金 + = 鉍 () bismuth
金 + yóu = 鈾 (yóu) uranium
金 + = 鋁 () aluminium
石 + diǎn = 碘 (diǎn) iodine
气 + hài = 氦 (hài) helium
气 + = 氟 () fluorine
气 + nǎi = 氖 (nǎi) neon
*where the derived pronunciation differs (in tone or in sound)

The "water" radical (水) is rarely used, since only two elements (bromine and mercury) are truly liquid at standard room temperature and pressure (see List of elements by melting point). Both of their characters are not based on the European pronunciation of the elements' names. Bromine (溴), the only liquid nonmetal at room temperature, is explained in the following section. Mercury (汞), now grouped with the heavy metals, was long classified as a kind of fluid in ancient China.

Meaning-based characters

A few characters, though, are not created using the above "semantic-phonetic" design, but are "semantic-semantic", that is, both of its parts indicate meanings. One part refers to the element's usual state (like the semantic-phonetic characters). However, the second part indicates some additional property or function of the element. Such elements are:

Semantic Semantic Element English Note
金 + 白 (white) = 鉑 platinum See note ¥
氵 + 臭 (stinky) = 溴 xiù bromine odorous (brómos in Greek also means "stench")
气 + 羊, short for 養 (to nourish/foster) = 氧 yǎng oxygen A continuous supply of oxygenated air nourishes almost all animals
气 + 巠, short for 輕 (light-weight) = 氫 qīng hydrogen the lightest of all elements
气 + 彔, short for 綠 (green) = 氯 chlorine greenish yellow in color
气 + 炎, short for 淡 (diluted) = 氮 dàn nitrogen "dilutes" breathable air
石 + 粦, short for 燐 (glow) = 磷 lín phosphorus emits a faint glow in the dark

http://en.wikipedia.org/wiki/Chemical_elements_in_East_Asian_languages

அன்புடை யீர்
சீனாவில் ஆங்கிலக் குறியீடுகளைப் பயன்படுத்துவதில்லை.  சப்பானில் அவர்கள் மொ ழியில் குறிப்பிட்டுள்ளதை மேலே அளித்துள்ளேன்.

பிற மொழிகளில் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என நான் பார்த்த பொழுது சில நாடுகளில் அவர்கள் மொழி வடிவில் குறியீடடுகளை க் குறித்துள்ளதையும் பார்த்த‌ேன்.
சொல் ஒரு மொழியிலும் அதன் சுருக்க்க் குறியீடு வே று மொழியிலும் இருப்பதால் அதனால் பயனில்லை.

இயலும்! இயன்றதை ஆற்றுவோம் ! என முயன்றால் தடை எதுவும் இல்லை. நம் உள்ளம்தான் தடையாக இருக்கக் கூடாது.

பிறர் எவ்வாறிருப்பினும் நாம் முன் எடுத்துக்காட்டாக இருப்பதிலும் தவறில்லை.




2012/9/23 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


23 செப்டம்பர், 2012 9:25 am அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:

உலகம் முழுவதும் தனிமங்களைக் குறிக்க ரோமன் எழுத்துக்களே பயன்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக நாம் பயன்படுத்திய 10 தனிமங்களைத் தவிர, மற்றவற்றிக்கு தமிழ்ப் பெயர் இடுவது நிலைத்து நிற்காது. 

அந்த பத்துமே நிற்காது

நம்ம ஆசைக்கு இட்டு அழகு பார்க்குறோம்.



வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Sep 24, 2012, 1:27:55 AM9/24/12
to tamil...@googlegroups.com, thiru thoazhamai, arr.val...@gmail.com, natpu.in, நட்புடன் கதிர், ad...@tamil247.com, vaanav...@gmail.com, anb...@googlegroups.com, atema...@yahoo.co.in, elanth...@googlegroups.com, kee...@googlegroups.com, meen...@gmail.com, msmuthu...@yahoo.co.in, mswat...@gmail.com, muduvai...@gmail.com, mutht...@googlegroups.com, ne...@tamilthai.com, paris...@paristamil.com, pira...@googlegroups.com, pollac...@gmail.com, puduvai...@googlegroups.com, sivalingam...@gmail.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, thamizh...@googlegroups.com, valaiya...@gmail.com, theyva-...@googlegroups.com, tamila...@googlegroups.com, vall...@googlegroups.com, enn...@gmail.com, knva...@gmail.com, thir...@yahoo.co.in, thiruvelan.i, Thiruvelan Ilakkuvan, Ilakkuvanar Maraimalai, Ilakkuvanar Maraimalai, Ambalavanan I., balaji V, mathiyazhaghi ilakkuvanar, manimekalai ambalavanan, nithiy...@gmail.com
அன்புள்ள திருவள்ளுவர் இலக்குவனார்,

உங்கள் முயற்சியையும் உணர்ச்சியையும் மிகவும் பாராட்டுகின்றேன்.
நானும் ஒத்த உணர்வினன், ஆனால் சற்று வேறுபடுகின்றேன்.

கிண்டி பொறியியற்கல்லூரில் படித்த நாட்களில்,
முனைவர் நக்கீரன், பேராசிரியர் பொன்னவைக்கோ ஆகியோர் உடன் உழைக்க
1971 இலேயே எல்லாத் தனிமங்களுக்கும் தமிழில் பெயர் வழங்கினோம்
(பொறியியற் தமிழ் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்). அவற்றில் பல
நீங்கள் தந்திருக்கும் பெயர்களில் இருந்து சற்று வேறுபடுவன. ஆனால் பல்வேறு
காரணங்களுக்காக ஆங்கிலப் பெயர்களையும், இலத்தீன்/உரோமன் எழுத்துக் குறியீடுகளையும்
சீர்தரமாகக் கொள்வது  இப்பொழுது நமக்கு மிகவும் தேவை. தமிழில் முடியாது என்பதல்ல
கருத்து, ஆனால் தேவை இல்லை என்பது பலருடைய கருத்து
ஏறத்தாழ 60 மில்லியன் வேதியியல் சேர்மங்கள் `CAS` என்னும் பதிவகத்திலே
உள்ளன (பார்க்கவும்: http://ta.wikipedia.org/s/8wd. )
அவற்றின் வாய்பாடு, பண்புகள் வேதியியல் வினையுரும் பண்புகள் இப்படிப்
பலவும் ஆற்றொழுக்காக பதிவு செய்திருக்கின்றார்கள். நாம் ஒரு சில ஆயிரம்
வேதிப்பொருள்களே பெரும்பாலும் பயன்படுத்தினாலும், இப்போதைக்கு
ஆங்கிலப்பெயர்களைத் தமிழில் வழங்கும் முறைமை கொண்டு வழங்குவது நல்லது.
எல்லாத் தனிமங்களுக்கும், ஏன் 60 மில்லியன் சேர்மங்களுக்கும் அழகாகவும்
சீராகவும், நன்கு பொருள் விளங்குமாறும் தமிழில் கட்டாயம் வழங்க முடியும்.
மறுக்கவில்லை.
ஆனால் அப்படி வழங்குவது இப்பொழுது நன்மை பயக்குமா என்று
எண்ணிப்பார்க்கவேண்டும்.
நாம் 1,2,3 போன்ற எண்களைப் பயன்படுத்துவது போல, பை ( π ) போன்ற கணிதக்
குறியீடுகள் கிரேக்கமொழி எழுத்துகள் முதலியவற்றைப் பயன்படுத்துவது போல
வேதியியற்  குறியீடுகளையும் எடுத்தாள்வது நல்லது.
சீர்தரம் செய்யப்பட்ட தமிழ்ப்பெயர்களை
சில இடங்களில் குறித்து வைக்கலாம். ஆனால் பொதுப்பயன்பாட்டுக்கு
ஐதரோ-குளோரிக்குக் காடி, ஐதரசன், நைதரசன் (நைட்ரசன்), பாசுபரசு, சிலிக்கான் என்பது
போல குறிப்பிட்டு வருவதே நல்லது.

தங்கம் வெள்ளி, இரும்பு, செப்பு, ஈயம், வெள்ளீயம், முதலிய ஒரு 10-12 தனிமங்களுக்குத் தமிழில்
வாங்கலாம் (வேதியியற்குறியீடு ஆங்கிலத்தில் உள்ளது போலவே Au, Ag, Fe, Cu, Pb, Sn எனக்குறிப்பது
தேவை. இக்குறியீடுகள் ஆங்கிலச் சொல்லுக்கும் பொருத்தம் இல்லாமல் இருப்பதையும் நோக்குங்கள்).

நாம் ஆக்க வேண்டியன, அமைக்க வேண்டியன, தொகுக்க வேண்டியன மிக அதிகமாக இருக்கும்
இவ்வேளையில், சிலவற்றில் நாம் விரைந்து இணக்கம் கண்டு மேலே நகருவது நல்லது என்பது
என் கருத்து.

அன்புடன்
செல்வா

2012/9/23 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 24, 2012, 9:26:05 AM9/24/12
to vall...@googlegroups.com
சப்பானிலும்  இரங்கானா, கதகானா என 2  வகை  சப்பானிய மொழிகள் உள்ளன.

சப்பானியர்கள் குறியீடுகளை அவர்கள் மொழியில் குறித்துள்ளனர்.


 அடைப்பிற்குள் ஆங்கிலத்தைக் குறிப்பிடுகையிலும்
ஆண்ட்டிமோனியத்திற்கு டி என்றும்
அலுமினியத்திற்கு லு  என்றும்
ஐயோடினுக்கு டியான் என்றும்
இவை போல் குறியீடுகளுக்கு உ ரோமன் வடிவ  ஆங்கிலத்தின் முதல் எழுத்ததைக் குறிக்காமல்

தங்கள் வசதிக கேற்பவே குறித்துள்ளனர்.

நாமும் நம்  மொ ழியில்  புரிந்து கொண்டு அயல் மொழியில் அறிந்து கொள்வதில் தவறு இல்லை.

நேரம வாய்க்கும் பொழுது இது பற்றிய விளக்கக் கட்டுரை அளிக்க உள்ளேன்.


2012/9/24 ஆமாச்சு <ama...@amachu.net>
On Monday 24 September 2012 02:44 PM, திருவள்ளுவன் இலக்குவனார் wrote:
ஆங்கிலக் குறியீடுகளுக்கும் தடை விதித்துள்ள சீனாவில் எவ்வாறு குறிக்கின்றார்கள் என்றும்


சீனாவில் ரெண்டு சீன மொழி இருக்கு.

http://en.wikipedia.org/wiki/Simplified_Chinese
http://en.wikipedia.org/wiki/Traditional_Chinese

ஆக இன்றைய சீனர்களில் பெரும்பாலோர் அறிந்து வைத்திருப்பது சீனந்தானான்னா சினங்கொள்ளக்கூடாது.

--

ஆமாச்சு

--


Reply all
Reply to author
Forward
0 new messages