t ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி - வித்யாசாகர்!

0 views
Skip to first unread message

எல்லைத் தமிழன்

unread,
Aug 21, 2011, 11:54:33 AM8/21/11
to tamilmantram
ன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி சட்டைப்பிடி
இல்லை - மனிதரென்று தன்னைச்
சொல்லிக் கொள்வதையேனும்
நிறுத்து;

தன் கண்முன்
தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு
மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் -

அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து
நம்மை மனிதரென்று சொல்ல
நாக்கூசவில்லையோ???

கண்முன் படம் படமாய்
பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து
அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த
குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?
அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???

மூடி இருந்த கண்கள்
இன்று திறந்தேனும் இருப்பது நன்று
என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்
அவிழ்த்து விடு உறவே;

என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற
என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை  - அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;

ஒருவரைக் கொன்றதால்
பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்
பலரைக் கொன்றவனை
ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை
ஏனென்று தட்டிகேள்;

தமிழன் எனில்
தண்ணீர் தெளித்து விடப் பட்டவனா?
கேள்வி கேட்க யாருமற்றவனா?
ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???
இல்லையென்று பறைசாற்று;

தெருவில் செல்கையில் ஒருவன்
இடித்துச் சென்றாலே கோபம் வரும்
இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?
காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???

என்ன செய்தோம் நாம்?
இனி என்ன செய்வோம் நாம்?
வாய்மூடி காணொளி பார்த்து
போஸ்டர் ஒட்டி
செய்தியில் பேசி
கூட்டம்போட்டு
கண்ணீர்விட்டழுது
யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி
காலத்தை கடத்திவிட்டு - வரலாற்றில் நம்மை
கோழையென்று எழுதிக் கொள்வோமா?

இறந்தவரையெல்லாம்
நஞ்சு எரித்து சுட்டவன்
இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்
ஒரு தீக்குரல் கொடுத்து -
தன் இருப்பினை ஒற்றுமையை
ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?

போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை
காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்
தோலுரிக்க வேண்டாமா?

உரிப்போம்
இனி உரிப்போமென சூளுரைப்போம்;

தமிழர் பற்றிய ஒரு அசட்டை
அவன் உயிரின் கடைசிப்
புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்
தீப்பந்தமேந்தி -
அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்
மீதெறிவோம்;

கையுடைந்து
காலுடைந்து
உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று
அலறிய மக்களின் காணொளிகளை
கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்;

நடந்தது தவறு
இத்தனை அப்பாவி மக்களைக்
கொன்றது பெருங்குற்றம்
போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு
படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்
காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்;

இத்தனை வருடம்
மறைமுகமாய் அழித்தான்,
இன்று வெளிப்படையாய் கொன்றான்
நாளை ?
நாளை என்று அவன் எண்ணுவதற்குள்
அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்
குத்துவோம்;

அவன் நாடு
அவன் ஆட்சி
எதுவாகவேனும் இருந்துப் போகட்டும், அங்கே
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
ஒன்று சேர்;
ஏனென்று கேள்;
எட்டி அவன் சட்டைப் பிடி;
எழுந்து நாலு அரை விடு;
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்;
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!

--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 21, 2011, 1:19:51 PM8/21/11
to tamil_...@googlegroups.com
அன்பு வித்யாசாகர் ஐயா,
தமிழினத்தின் கையறு நிலை பற்றி நாம் நிறைய எழுதுகிறோம்.ஆனால் ஏதாவது
செய்யவேண்டும்.நமக்குள் உணர்வுகலை ஏந்திக்கொள்வதோடு நில்லாமல் எந்த
தகவலும் இல்லாமல் ,ஒரு சமுதய சம்பந்தம் கொண்ட் வராக ஒரு பொருட்டாகக்கூட
எண்ணப்படாமல் வாழும் தமிழர்கலே பெருவாரி. என்மீது கோபப்படதீர்கள்.
பெருவாரியான மக்கள் தமிழர் என்ற ஒர்ரின கோப்புக்குள் வர
விருப்பமற்றவர்களாகவும் உள்ளனர்.சாதிகல் மூலம் தமிழர் ஒற்றுமை
சாதியமில்லை என்ற நிலைக்கு தள்ளியுள்லார்கள்.
நான் எதையும் மிகைப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு கற்பனை/கனவுக்கோட்டை.

தமிழகத்தின் கிராமங்கள் 16317.
நகராட்சிகள் 148

சுமார் 16500 தமிழ்த்தொண்டர்கள் ,கிராமட்ய்ஹ்திற்கு ஒருவராக வேலைசெய்வது
என்று பணி தொடங்கவேண்டும்.அரிச்சுவடி,ஆத்திச்சூடி அளவில் விவாதங்கள்
துவங்கப்படவேண்டும்.

148 நகராட்சியை நகராடிக்கு நூறுபேர் என்ற அளவில் பகுதிநேர வேலைக்கு
எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒவ்வோரு தமிழனையும் நேரில் சென்றடைய வேண்டும்.ஓராண்டு கடும்பணி
புரிந்தால் பிறகு நாம் பேசுவது அவர்களுக்கு புரியும்.நாம் உருவாக்கும்
கலைகளும் காவியங்களும் உணர்வு வெள்ளத்தினை கட்டவிழ்க்கும்.

பெருவாரியான தமிழன் அறியாமை, பண்பாடு,சாதி என பெரும் அடிமைத்தளையில் உழல்கின்றான.
அந்த் அடிமைத் தளையறுக்க நாம் செயல்படவேண்டும்.
அன்புடன்
அரசு

21-8-11 அன்று, எல்லைத் தமிழன் <matha...@gmail.com> எழுதியது:
> *ஒ*ன்று சேர்

> *வித்யாசாகர்*
> ------------------------------------------------------------------------
> *வலைதளம்: www.vidhyasaagar.com/about/*
> *தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
> விலாசம்: *11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை


> மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51

> *இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!*


>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en


--
கோ.திருநாவுக்கரசு
உழவன் விடுதலை உலகின் விடுதலை
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522

Elangovan N

unread,
Aug 21, 2011, 1:24:55 PM8/21/11
to tamil_...@googlegroups.com


2011/8/21 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>


பெருவாரியான மக்கள்  தமிழர் என்ற ஒர்ரின கோப்புக்குள் வர
விருப்பமற்றவர்களாகவும் உள்ளனர்.


100% உண்மை. 

அன்புடன்
நாக.இளங்கோவன்

வித்யாசாகர்

unread,
Aug 25, 2011, 2:48:23 AM8/25/11
to tamil_ulagam
அன்பு வணக்கம்,

மிக அறிவுப் பூர்வமான சிந்தனை வழங்கியுள்ளீர்கள். உங்களை எண்ணி மகிழ்வேன்
அன்றி கோபம் கொள்வதெப்படி ஐயா.., இத்தகு பொறிகளைத் தட்டிவிடும்
நற்சிந்தனைகளை நம் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டுத் தானே என்
இம்மாதிரியான படைப்புக்களிற்கான நோக்கமே. எனினும், தங்களின் சிந்தனைகளை
முன் கொண்டுசென்று' பின்னதை முன்னின்று செய்வது யாரென்று கேட்கும்'
கேள்விகளுக்கு அப்பால் நின்று, யான் செய்வேனென செய்ய இயன்றுவிடாத
நிலையில் வெறும் கண்ணீரையும் கோபத்தையும் ஆதங்கத்தையும்
எழுத்துக்களாக்கும் ஒரு சொற்ப மனிதனாகவே நானிருக்கிறேன். உண்மையில்
நீங்களும் இச்சமூகமுமே என் மீது அந்த கோபத்தைக் கொள்ள நீதி பெற்றவர்கள்.

எனினும், இவ்விடம் (குவைத்) இருந்தும் எங்களாலான விழிப்புணர்வையும்
ஆக்கப்பூர்வமான பல செயல்களையும் எழுத்து மூலவும் இன்னபிற யுத்தியாகவும்
செய்தே வருகிறோம். பின்பும், இந்த உங்களின் இக்கருத்தை இன்னும் நம்மை
தொடர்ந்து படிப்போரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் என் வலையிலும் பதிந்து
வைக்கிறேன்.

தவிர, நீங்கள் சொல்லும் ஒவ்வோர் இடத்திற்கு ஒவ்வொருவர் எனும் வகையில் ஒரு
தீ பரவும் காடுபோலின்று தமிழகம் முழுக்க இதற்கான ஆக்கப் பூர்வ செயல்கள்
பரவித்தான் வருகிறது என்றாலும், அதை மேலும் துரிதமாக இலகுவாக நகர்த்தும்
பொருட்டும், இதுகாறும், இன்னும் வேறென்ன செய்யலாமெனும் புத்தியரிக்கும்
உணர்வோடும், உங்களின் இக்கருத்தினை பலர்முன் வைக்க ஆவன செய்யும்
எண்ணத்தோடு விடைகொள்ளும் முன், இன்னொரு உணர்வும் உள்ளெழுகிறது, 'அப்படி
ஒரு ஒற்றுமை, உடனே ஒன்று கூடி ஒரு தலைமைக்குள் இயங்கும் பக்குவம்
நம்மிடம் இருந்திருக்குமானால், அல்லது இருக்குமானால், நாம் இப்படியொரு
நிலைக்கு தள்ளப் பட்டிருப்போமா? என்பதும் யோசிக்கத் தக்கது.

எனினும் இயலாததை விட்டுவிட்டு இயன்றதை நம்பிக்கையோடும் ஒற்றுமை
உணர்வோடும் இனியேனும் செய்ய முயல்வோம். தங்களின் கருத்திற்கும்,
திரு.இளங்கோவன் அவர்களின் ஆமோதிப்பிற்கும், தமிழுலகம் குழுமத்திற்கும்
என் மிகுந்த நன்றிகளும் வணக்கமும்!

வித்யாசாகர்

On Aug 21, 8:19 pm, Govindasamy Thirunavukkarasu

> 21-8-11 அன்று, எல்லைத் தமிழன் <mathan....@gmail.com> எழுதியது:

> ...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages