நித்திக்கு முன்பே??

347 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
May 7, 2012, 8:04:05 AM5/7/12
to piravakam, tamil_...@googlegroups.com, அன்புடன், முத்தமிழ்
நித்தியானந்தா சென்றதால் ஆதீனம் கறையுற்றது என கலகம் காண்கும் சைவநெறிச்சிமான்களே

இந்த ஆதீனத்தை உருவாக்கியவரே கற்பழிக்க அருள்தாரும் திருவுள்ளமே என்று
1800 வருடங்களுக்கு முன்பே கூறி இருக்கிறார்,

திரை மறைவில் எத்தனை "யுத்தம் செய்" காட்சிகள் நடந்ததோ காலம் தான் அவைக்கு சாட்சி
இதோ சம்பந்தன் பெண்களை கற்பழிக்க திறன்வேண்டி பாடிய பாடல்

"மண்ணகத்தில் பெண்ணகத் தெழிற் சாக்கிய பேயமண் தெண்ணற் கற்பழிக்கத் திருவுள்ளமே"

அதாவது இங்கு வாழும் சாக்கிய(பௌத்த) பெண்துறவிகளையும் அவர்கள்
வழிநடக்கும் பெண்களையும் இரக்கமின்றி பேய்போல கற்பழிக்க உத்தரவு
என்கிறார், உலகத்தில் உள்ள மனித குலம் அனைத்தும் பழிக்கும் அநாகரீக செயலை
அதிலும் இரக்கமின்றி பேய்போல் கற்பழியுங்கள் என்றும் அதற்கு இறைவன்
அருளும் வேண்டுகிறார் ஞானசம்பந்தர். உலகத்தில் எந்த நாட்டிலும் மனிதராக
பிறந்த எந்த ஒருவரும் இத்தகைய இழிச்செயலை புகழ்ந்து எழுதவில்லை, ஆனால்
நம் தமிழ் மொழி இந்த பாதக செயலை பாசுரமாக சுமந்து கொண்டிருக்கிறது.
மட்டையுடன் மட்டை தான் பரன் ஏறும் என்ற முதுமொழிக்கு 1800 வருடங்களுக்கு
பிறகு சான்று கிடைத்துள்ளது.

நித்தியானந்தம் நித்தியானந்தம்

--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Elangovan N

unread,
May 7, 2012, 10:53:42 AM5/7/12
to tamil_...@googlegroups.com
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 

1. தெண்ணர் teṇṇar : (page 2029)
தெண்ணர் teṇṇar

, perh. திண்-மை. Senseless or dense persons, fools; அறிவிலிகள். தேசனைப்புகழார் சிலர் தெண்ணர்கள் (தேவா. 1207, 1).


தெண்ணர் என்றால் வலிமையானவர் என்ற பொருளுண்டு.

கற்பு என்ற சொல்லைக் கண்டவுடன் பெண்ணின் கால் கவட்டியை மட்டுமே 
தேடுவது தற்காலப் பெருவழக்கம்.

ஆனால், கல் + பு என்பதுதான் கற்பு என்று சொல்லப்படுகிறது. 
காயகல்பம் = காயகற்பம்.

காயம் = உடல்; உடலைக் கல் போன்று திட்பமாக்குவதுதான் காயகற்பப் பயிற்சி.
அதுபோன்று மன உறுதியைச் சொல்வதுதான் கற்பு என்ற சொல். அது பெண்ணுக்கு மட்டும்
உரித்தது என்று ஆண்கள் கருதுவதாலேயே ஆண்களின் ஒழுக்கக்கேடு கண்டுகொள்ளப்படுவதில்லை. அதனாற்றான் பாரதியும் கற்பென்றால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று பாடவேண்டி வந்தது.

upholding dignity என்ற பொருளில் வரும் கற்பு என்பது ஆறிய கற்பு, சீறிய கற்பு
என்று இருவகைப்படும் என்று கூறப்படுகிறது. 

இதுவும்  மன உறுதியையும், தன்மானம், குரவத்தையுமே குறிக்கின்றது.
கற்பு என்பதற்கு நேர்மையான பொருளும் பல்வேறு பயன்பாடும் உண்டு.

முழுப்பாடலும் இஃது:
1....மண்ண  கத்திலும்  வானிலும்  எங்குமாந்        
2....திண்ண  கத்திரு  ஆலவா  யாயருள்        
3....பெண்ண  கத்தெழிற்  சாக்கியப்  பேயமண்        
4....தெண்ணர்  கற்பழிக்  கத்திரு  வுள்ளமே        
திருமுறை-3, 47,3


பெண்ணகத்து எழில் சாக்கியர், பேய் அமணர் என்பன இகழ்ச்சிக் குறிப்புகள்.
பெளத்தரையும், செயினரையும் நக்கலடித்தது.

நன்னெறிகளையும் சைவத்தையும் அழித்துக் கொண்டிருக்கிற
சமணரையும் பெளத்தரையும் வாதில் வென்று, ஒழித்துக் கட்ட எண்ணுகிறேன்.
அதற்குத் தேவையான வலிவை எனக்கு அருளுக என்று இறைவனிடம்
வேண்டுவதே இப்பாடலும் இப்பதிகமுழுவதும் உள்ள 11 பாடல்களிலும்
வேண்டப்பட்டிருக்கிறது. 

எல்லாப்பாடல்களிலும் வாது செய்து வெல்ல அருள்புரியவேண்டும்
என்று வேண்டுவதையும் இங்கே காண்க:

"தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே" என்றால்

என்னோடு வாது செய்யப்போகும் கடுமை/முரடு/திண்மை கொண்ட (தெண்ணர் = திண்ணர்)
செயின பௌத்தர்களின் கல் போன்ற உறுதிப்பாடு, என் வாதின் முன்னர் கரைந்து அழிந்து
போகவேண்டும் என்று வேண்டுவதாகும்.

1) எல்லாப்பாடல்களிலும் வாதில் வெல்ல அருள் வேண்டும் என்று வேண்டும் ஞானசம்பந்தர்
திடீரென்று சமண, பௌத்த பெண்களையெல்லாம் கற்பழிக்க அருள்புரி என்று வேண்டுவாரா
என்று கொஞ்சமேனும் யோசித்தால் போதும் - பொருள் புரிந்து விடும்.

2) காமம் என்றால் அன்பு என்பது பொருள்.
"காமம் செப்பாது கண்டது மொழிமோ" என்ற புகழ்பெற்ற குறுந்தொகை வரிக்கு
தற்காலத்தில் பெரிதும் வழக்கத்தில் இருக்கும் கலவியின்பம் என்ற பொருளையே
வைத்துப் படித்தால் " வண்டே, தும்பியின வண்டே, என்னோடு கலவி செய்ய வேண்டும்
என்று எண்ணாது உண்மையைச் சொல்" என்றே பொருள் வரும். இது எவ்வளவு பிழையோ
அவ்வளவு பிழை திருஞானசம்பந்தர் கற்பழிக்க அருள் புரிய வேண்டினார் என்பதுவும்.

நண்பர் சரவணன் எழுதிய கருத்தாயின் அவர் இதனை மீள்பார்வை செய்யவேண்டுகிறேன்.

அப்படியில்லையெனில், "யாரோ எந்தத் திராவிடப் பேரறிஞரின் மொழியோ" என்று திராவிடத்தின் அளக்கமுடியாத பேரறிவை எண்ணிச் சிரித்துவிட்டுப் போகிறேன் :-))))
திருஞானசம்பந்தரின் தமிழில் தூசியளவும் இல்லாத திராவிடத்தின் தமிழ் இப்படித்தான்
இருக்கும் என்பதில் எனக்கு ஏதும் ஐயமில்லை. திராவிடத்தின் தமிழ் அக்கிரசேனாதிபதியை "தலைவர்" என்று ஆக்கியதோடு சரி - அதற்கு மேல் பெரிய முட்டைதான் :-))))

அன்புடன்
நாக.இளங்கோவன்


2012/5/7 Saravana Rajendran <rajesa...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group,  send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

karuannam annam

unread,
May 7, 2012, 12:50:01 PM5/7/12
to tamil_...@googlegroups.com
பதிவைப் படித்த்வுடன் முழுப்பாடலையும் பொருளையும் தமிழ் vu தளத்தை பார்க்க வேண்டும் என எண்ணினேன். சிரமம் வைக்காமல் நண்பர் திரு நாக.இளங்கோவன் விளக்கம் கொடுத்துள்ளார். தவறைத் தக்க சமயத்தில் பரவாமல் தடுத்த நல்லெண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.
தமிழைக்காத்து அளித்த பெருமையுடையது திருமுறை.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 


Nakinam Sivam

unread,
May 8, 2012, 12:44:58 AM5/8/12
to tamil_ulagam
அய்யா நாக. இளங்கோவன் அவர்களுக்கு,

நீங்கள் கூறியுள்ளது போல

திருஞானசம்பந்தரின் தமிழில் தூசியளவும் இல்லாத திராவிடத்தின் தமிழ்
இப்படித்தான்
இருக்கும் என்பதில் எனக்கு ஏதும் ஐயமில்லை. திராவிடத்தின் தமிழ்
அக்கிரசேனாதிபதியை "தலைவர்" என்று ஆக்கியதோடு சரி - அதற்கு மேல் பெரிய

முட்டைதான் :-))))


"மண்ணகத்தில் பெண்ணகத் தெழிற் சாக்கிய பேயமண் தெண்ணற் கற்பழிக்கத்
திருவுள்ளமே"

இதன் பொருள்

மண்ணகத்தில் - உலகத்தில்

பெண்ணகத்தெழிற் - பெண்களின் மேல் கொள்கின்ற மோகத்தை போன்ற

சாக்கிய பேயமண் - சாக்கியம் என்னும் பேய் போன்ற அமணர்களின்

தெண்ணற கற்ப - தெண் எனப்படுவது இவ்விடத்தில் அறிவு அல்லது ஞானம்
எனப்படும். கற்பு எனப்படுவது இவ்விடத்தில் கற்றது எனப்பொருள்படும்.

அழிக்க தருவுள்ளமோ - அவர்களது அறிவென்னம் ஞானத்தை, அவர்கள் கற்றதை அழிக்க
தருவுளமோ என பாடுகிறார்.

முழுப்பொருள் -

உலகத்தில் பெண்களின் மேல் கொள்கின்ற மோகத்தை போன்று விளங்கும் சாக்கியம்
எனும் சூனியவாதம் கற்ற பேய் போன்ற அமணர்களின் அறிவினால் பெற்ற அவர்களின்
ஞானமான கல்வியினை அழித்து அவர்களுக்கு சிவஞானம் கிடைக்க அருள் தருவாய் என
இறைவனை வேண்டுகிறார்.

அதை விடுத்து அவர் பெண்களை கற்பழிக்க சொன்னார் எனச் சொல்வது சொல்பவரின்
அறியாமையையே காட்டுகிறது.

ஏட்டுக் கல்வியினால் இதை பெற முடியாது என்பதை பல முறை உணர்ந்துள்ளேன்.
இப்போது மீண்டும் ஒரு முறை.


--
அன்பு சகோதரன்
சிவம்

http://nakinam.blogspot.com

Saravana Rajendran

unread,
May 8, 2012, 1:49:42 AM5/8/12
to pira...@googlegroups.com, tamil_...@googlegroups.com, அன்புடன், முத்தமிழ், Maravanpulavu K. Sachithananthan
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
“பெண்ணிற் பெருந்தக்க யாவுளகற்பெனுந்
திண்மையுண் டாகப் பெறின்”
என்றார் வள்ளுவர். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பன பெண்ணியல்.
அவளிடமே அக்கற்பு என்னுந் திண்மை இருக்கமுடியும்.
அக்கம் பக்கத்துப் பெரியோர் ஒருத்தியை இவள் கற்புள்ளவள் என அவள் நடையால்
கருதி மதித்துப் புகழ்வர். அப்புகழ்தான் வள்ளுவர் சொன்ன ‘தகைசான்ற சொல்’
என்பது ஆனால் ‘இவளிடம் கற்பு இருப்பதை நான் காண்கிறேன்’ என யாராலுஞ்
சொல்ல முடியாது. அதாவது கற்புக்கு Eye-witness இல்லை என்பது. மனைவியின்
கற்புக் கணவனுக்குத் தோன்றாது. அன்புக்காவது புன்கணிர் பூசல் தரும்.
கற்புக்கு அதுதானுமில்லை. அதனால்
“பொய்யுடை யொருவன் சொல் வன்மையினால்
மெய்போலும்மே மெய்போலும்மே”
என்றபடி கற்பில்லாதவளும் தன்னைக் கற்புடையவள் போற்காட்டிச் சமூகத்தில்
மதிப்புப் பெறலாம்.
‘மெய்யுடை யொருவன் சொல்ல மாட்டாமையாற்
பொய் போலும்மே பொய்போ லும்மே’
என்றபடி கற்பரசி தன்னையிகழ்வார்முன் தன்கற்பைக் காட்டித்
தற்காத்துக்கொள்ள மாட்டாமல் பல சந்தர்ப்பங்களில் தவிப்பாள்.

சம்பந்தனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கற்பு பற்றி வள்ளுவன்
கூறியது, அவருக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியன் கற்பு பற்றி தெளிவாக
கூறியுள்ளார்.
"தனது தாயின் கற்பு பற்றி பொதுலில் சிலர் கூறியதை கேட்டு நானிக்குறுகிய மைந்தன்"

அப்படியே இங்கு மதிப்பிற்குறிய பெரியவர்கள் கூறியது போல் சம்பந்தன்
கற்பழிப்பு என்ற வார்த்தையை இங்கு மட்டும் பயன்படுத்தி இருந்தால்
பரவாயில்லை

(இப்படியும் இருக்கலாம் என்ற ஊகம் தான் பிற்காலத்தில் வந்தவர்கள் கூறியது).

ஆனால் சம்பந்தன் தனது பதிகங்களின் "கழுவில் ஏற்றுவேன்,
தலையையறுப்பேன், செக்கிலிடுவேன், வன்கொலை செய்வேன்" என பல இடங்களில்
கூறியுள்ளார்.

"கூடலால வாய்கோனை விடைகொண்டு வாடன் மேனி யமணரை வாட்டிட மாடக்கழிச் சம்பந்தன்".

அமணரை வெட்டி வதைத்துக்கொல்ல மதுரை ஆலவாய் இறைவனிடம் அனுமதியும் அருளும்
பெற்றுள்ள சம்பந்தன் நான் என்று கூறுகிறார்.

அமணர்களில் பெண் துறவிகள் இல்லை, ஆகையால் அமணர்களை கொலை செய்வேன்
என்கிறார். இதை சாதுர்யமாக ஒப்புக்கொள்கின்றனர். ஏன்?

ஐயா மயிலை சினிவாசனும், சிவசுப்பிரமணியன் இருவரும் தெளிவாக
கூறியுள்ளனர்.

அதாவது ஞானசம்பந்தரை காப்பாற்ற அதற்கு விளக்கம் எழுதியவர்கள் நிறைய
இடங்களில் மிகுந்த சிரமப்பட்டு சாமணியத்தில் முடிவு எட்டவிடாமல்,
ஊகத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கச் செய்திருக்கின்றனர்.

ஆகையால் தான் எளிமையாக புரியும் பாடல்களைக்கூட நீன்ட விளக்கம் கொடுந்து
நியாயப்படுத்த முனைந்திருக்கின்றனர். கண்ணுக்கு முன்பு நடந்த
காணைளிகலையே மதநம்பிக்கையீன் காரணமாக புறந்தள்ளு அவ்வகிங்க செயலை
செய்தவர்களை பாதுகாத்து ஆதீணபட்டமளித்து பெருமை படுத்துபவர்கள்
அக்காலத்தில் தங்கள் தலைமைமீது களங்கம் வராமல் இருக்க என்னமும்
செய்திருப்பார்கள். கொலை செய்வேன் கழுவிலேற்றுவேன் என்று சென்னவர்
கற்பழிப்பேன் என்று செல்லி இருக்கமாட்டார் என்று சொல்வதை நடுநிலையாளர்கள்
யாவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


On 5/7/12, Sankarkumar <ommur...@gmail.com> wrote:
>>
>> தொடர்ந்து இது போன்ற பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது
>> மிகவும்
>> அயர்ச்சியாக இருக்கிறது.
>>
>
> பின்னூட்டங்கள் அயர்ச்சி அளித்தது ஏனெனத் தெரிந்துகொள்ளலாமா, ஸ்வாதி?:)))
> மற்றபடி நீங்க சொன்னதில் மாற்றுக் கருத்தில்லை!:))
>
> --
> "தமிழ் பிரவாகம்"
> "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
>
> Pira...@googlegroups.com

Saravana Rajendran

unread,
May 8, 2012, 3:52:15 AM5/8/12
to pira...@googlegroups.com, tamil_...@googlegroups.com, அன்புடன், முத்தமிழ், Maravanpulavu K. Sachithananthan
சுவாதி அக்காவிற்கு வணக்கம்,

இங்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்ளை எங்கும் குறை கூறவில்லை,

கோவில் கருவரை களமிடும் பூசாரிகளையும, துறவாடை பூண்டு களவாடை புரியும
காமுகர்களையும் காணோலியில் கண்டபிறகும் கைகூப்பி பூசிக்கும்
மதநம்பிக்கையாளர்களை விட சிறந்த பகுத்தறிபவர்கள் என்று கூறுபவர்கள்
கூற்றில் உண்மையை காண்கிறேன்.

சைவ சமய பாசுரங்கள் தமிழ் அழகு இருக்கிறது

அரிதாரம் பூசி பசி தீர்க்க பரத்தையாகும் பெண்கூட அழகுதான் ஆனால் அவர்
குடும்பபெண்களாகார்.


தொல்காப்பிமும், திருக்குறளும், நன்னெறியும், ஐம்பெரும் காப்பியங்கள் இவைகள்

"மனைகூடி நல் விளக்கேற்றி மனவாளன் தகவனுக்கும், தமக்கைக்கும், நல்
அன்னையாகி, அத்தைக்கு என்றும் மாசில்லா மணி(மரு)மகளாகி சுற்றத்தோர் உவகை
பொங்க வாழ்த்தும் நல் இல்லாள் போன்றவை.

சைவ பதிகஙகள் சிறந்த இலக்கிய மென்று வைனவத்தார் கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்,
சைவசமய பற்றாளர்கள் வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.

"வெறுப்போடு சமணர் முண்டர், வீதியில் சாக் கியர்கள் நின்பால் பொறுப்பரிய
ங்கள் பேசில் போவ நோயதாகிக் குறிப்பெ னக கடையுமாகில் கூடுமேல், தலையை
யாங்கே அறுப்ப்தே கருமமாய் கண்டாய் அரங்கமா நகருளானே" இதை புரிந்து
கொள்ள தமிழ் 100% பாண்டித்யம் பெற்றவரை தேடிச்செல்ல அவசிமமில்லை என்று
என்னுகிறேன்

இது என்னுடைய பதிவே. தமிழில் சமண பௌத்தம் பற்றிய தேடலின் போது, நான்
சிறுவயதில் ரசித்த கழுவேற்று வைபவம் அன்று அகிம்சையை போதித்த
சமணர்களையும், அன்பை போதித்த பௌத்தர்களையும் கொலை செய்ததின் நினைவில்
கொணடாடுகிறார்கள். ஏன் என்றால் மீன்டும்அந்தமதங்களை பிறர்
பின்பற்றக்கூடாது என்பதற்காக கொண்டாடப்ப்டுகிறது. என்பதை நினைக்கும் போது
இப்படி கொடும்பாவம் புரிந்தவர்கள் தமிழை பயன்படுத்தி இருக்கிறார்கள் அதை
தெரிந்தும் புகழ்கிறவர்களை பார்த்து ஆச்சர்யமாய் இருக்கிறது.

சிவ அறிவொளியன்

unread,
May 8, 2012, 1:01:53 PM5/8/12
to tamil_...@googlegroups.com, piravakam, அன்புடன், முத்தமிழ்

தங்களை இரஜபக்செ அனுப்பி வைத்தானா? அல்லது நித்தி, ரஞ்சியை தங்களுக்கு அறிமுகம் செய்தான?


கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - உருக் காட்டு படலம்


பேர் உருவை ஒடுக்குமாறு அனுமனைச் சீதை வேண்டுதல்

வஞ்சிஅம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
'துஞ்சினர் அரக்கர்' என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
'அஞ்சினேன் இவ் உரு; அடக்குவாய்' என்றாள். 106

'முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழு இலது உலகு; இனி, குறுகுவாய்' என்றாள்,-
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள்

அரக்கர்கள் தூங்கி விட்டனர். விழித்திருப்பது சீதையும் அனுமனும் மட்டும்!

"தோள்களைத் தழுவினளாம்" என வருகிறது.  "சீதை அனுமனனின் தோள்களைத்
தழுவினாள் எனப்  பொருள் கொள்வீர்களா?  அல்லது "இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள்" எனப்  பொருள் கொள்வீர்களா?

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257

"கோயில் சுடுகாடு" என வருகிறது.  இதன் பொருள் என்ன?


மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.(மூன்றாம் திருமுறை,  47 திருவாலவாய், பாடல் எண் : 3)



இப் பூவுலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே ! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வாயாக.

குறிப்புரை :

எங்கும் ஆம் - எங்குமாய் நிறைந்து, திருவால வாயினில் வெளிப்பட்டருளிய பெருமானே என்பது முதலிரண்டடியின் கருத்து . அருள் - சொல்லி யருள்வீராக. எழில் இகழ்ச்சிக் குறிப்பு. திண்ணகத் திருவாலவாய் - பகைவரால் அழிக்கமுடியாத வலிய அரண்களையுடைய திருவாலவாய். தெண்ணர் - திண்ணர் என்பதன் மரூஉ. குண்டர் முதலிய பிற பெயர்களைப்போல்வது இது, சாக்கியப் பேய் அமண் - சாக்கியரோடு கூடிய பேய்போன்ற சமணர். கற்பு - கல்விநிலை ; அல்லது கல்போன்ற உறுதிப்பாடு. பெண்ணகத்துக்குச் சாக்கியர் கற்பு என்ற சொல் அமைப்பை நோக்குக. நாங்கள் பகைகளை ஒழிக்க எண்ணுவதுபோல அவர்களும் எண்ணலாமோ எனின், தானவிசேடத்தால் சைவத்துக்கு வாழ்வும் புறச் சமயத்துக்கு வீழ்வும் அளிக்கவல்ல தலம் என்பார் ; ` திண்ணகத் திருவாலவாய் ` என்றார். இடவிசேடம் இத்துணைத்து என்பதை ` முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்து ` எனவரும் சிலப்பதிகாரத்தால் அறிக.


Saravana Rajendran

unread,
May 8, 2012, 9:44:28 PM5/8/12
to tamil_...@googlegroups.com, piravakam, அன்புடன், முத்தமிழ்
முத்தமிழ் குழுமத்தில் பதிவு மூடப்பட்டதால் நான் தொடரவிரும்பவில்லை,
இருப்பினும் உங்கள் ராசபக்சே அனுப்பிய ஆள்? மற்றும் சைவநெறி செம்மான்
சிறிய பீடம், மாஹாஸ்ரீ சிற்றாதீனம் மான நித்தியானந்தாதீனத்தின்
பலநாரியில் (வெளிவந்த) ஓர் நாரியை அறிந்தவனும் அல்ல.

பால பருவத்தில் சுற்றுலாவிற்கு தந்த பணத்தைதமுக்கம் மைதானத்தில்
அமைந்திருந்த போராளிகளின் நன்கொடை உண்டியில் போட்டு விட்டு இரண்டு
நாட்களாக மதுரை ரெயில் நிலையத்தில் சுற்றிக்கழித்தவன்,
மும்பையில் உள்ள இலங்கை கன்சுலேட்டில் தனியாளாக நின்று பதாகை
ஏந்தியதால் பன்னாட்டு நிறுவனத்தில் இருந்து பனி நீக்கப்பட்டவன்,
பக்கம் பக்கமாகஎழுதிவிட்டு உலர்பழம் தின்றுகொண்டு ஐ பி
எல்லும், மேற்கத்திய போப் இசையும் ரசிப்பவனல்ல, களமிரங்கி காண்பதை
எழுதுபவன், 1999-ல்இருந்து எழுதுகிறேன், வேண்டுமென்றால் என்னுடைய
மின்னஞ்சலின் பெயரை தேடுபடலத்தில் இட்டுப்பாருங்கள், யாஹூ
குழுமத்திலும்,கூகல் குழுமத்திலும் என்னுடைய பதிவுகளில் அநாவசியமான
பதிவுகள் எங்கே இருக்கிறதென்று, ஆங்காங்கே தட்டச்சுப்பிழை வேண்டுமென்றால்
காணலாம், ஆனால் சொல்லும் கருத்தை தெளிவுற சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
முயல்வேட்டைக்கு
செல்பவர் சிங்கவேட்டைக்கு தயாராக இருக்கவேண்டும் என்ற புறநாறூற்றுப்பாடலை
நானும் படித்திருக்கிறேன். நீங்கள்தந்த விளக்கம் ஊகம் தான் இதை யாரிடமும்
கேட்டுப்பாருங்கள், அவன் கொலை செய்வேன், கழுவேற்றுவேன், கழுத்தறுப்பேன்,
என்று பதிகத்தில் எழுதும் போது கற்பழிப்பேன் என்று எழுதிவில்லை என்று
வாதிடுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
இருந்திருந்தும் கம்பராமாயனத்தையா முன்வைக்கிறீர், வேறுஒரு இழையை
ஆரம்பியுங்கள், அந்த நாற்றத்தை தவிற்க்க முடியாதபட்சத்தில்
கிளரிப்பார்ப்போம், ------------------------------------------------
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய
இனத்தை மொழியைசிறிய காலக்கெடுவில் வாழும்மனிதரால் அழிக்க முடியாது, ஆனால்
சமயம் பற்றி! தமிழரின்சமயம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்,
கருனாடகத்தில் இருந்து உள் நுழையும் போது தருமபுரி, ஆந்திராவில் இருந்து
உள் நுழையும் போது அறக்கோணம், வாணியம்பாடி, வலங்கைபுறம் என்ற
விழுப்புரம், உள் வந்தால் அறந்தாங்கி, புத்தம் தம்மம் சங்கம் என்ற
பதத்திற்கொப்பிய புத்த பாளையம், தம்மபட்டி, சங்ககிரி, பஞ்சசீலம் கூறிய
சீலம் பெயர் மாறிய சேலம், போதிநாயகனூர் முதல் குமரி முனையில் உள்ள
புத்தன்சாவடிவரை மேலும் தமிழ் நாகரீகம் வாழ்ந்த இடம் என்று
ஆகழ்வாய்வாளர்கள் கூறும் ஆதி ஆச்சன் நல்லூர்(என்ற) ஆதிச்சநல்லூர்
திருச்சிராப்பள்ளி, ஆணைமலை,அமனகுன்று, அருகனூர், அறியலூர், திண்டுக்கல்,
தருமம் வழங்கும் பதமான கொடைஎன்ற பதத்தை கொண்ட கொடைக்கானல் அறஹத்துக்கள்
தங்கிய அறந்தாங்கி, என பல்லாயிரம் சமண பௌத்த ஊர்கள் சொல்லும் தமிழனின்
சமயம் எதுவென்று, ராமேச்சுவரமும், கிருட்டினகிரியும், சேதுபதிபதியின்
காலத்திலும் கிருஸ்னதேவராயன் காலத்திலும் வைக்கப்பட்ட பெயர்கள், ஆனால்
மேற்சொன்ன பெயர்கள் கிருத்துவிற்கு முன்பிலிருந்தே நீட்டித்திருக்கிறது.
ஆகையால் இங்கு அழிந்தது எதுஅழித்தது யார் என்று தெளிவு நடுநிலையாளர்களை
கேட்டால் விளக்குவார்கள்

பெரியவர் தான் சார்ந்தசமயத்தின் பால் வைத்த பற்றால் அனுப்பிய
ஆள், என்றும் சைவச்சீலரின் வைப்பு பற்றி கூறியதாலும்,

சகோதரியும் தனது சமயத்தின் பால் உள்ள பற்றால் இந்த ஒரு பதிவின் மூலம்
இனம் மொழி சமயம் அழிக்கிறதே என்ற விசனத்திற்காக முடிவுபட்ட(முத்தமிழ்
குழுமத்தில்) இந்த இழையில் பதிலை எழுதவேண்டிய நிலைக்கு ஆளக்கப்பட்டேன்,
புரிதலுக்கு நன்றி
சரவணா மும்பை

On 5/8/12, சிவ அறிவொளியன் <ariv...@gmail.com> wrote:
>
>
> *தங்களை இரஜபக்செ அனுப்பி வைத்தானா? அல்லது நித்தி, ரஞ்சியை தங்களுக்கு
> அறிமுகம் செய்தான?**
> *
>
> *
> *
>
> **கம்பர் இயற்றிய கம்பராமாயணம்

> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

சிவ அறிவொளியன்

unread,
May 9, 2012, 12:47:32 AM5/9/12
to tamil_...@googlegroups.com, piravakam, அன்புடன், முத்தமிழ்

//

                                                முயல்வேட்டைக்கு
செல்பவர் சிங்கவேட்டைக்கு தயாராக இருக்கவேண்டும் என்ற புறநாறூற்றுப்பாடலை
நானும் படித்திருக்கிறேன். நீங்கள்தந்த விளக்கம் ஊகம் தான் இதை யாரிடமும்
கேட்டுப்பாருங்கள், அவன் கொலை செய்வேன், கழுவேற்றுவேன், கழுத்தறுப்பேன்,
என்று பதிகத்தில் எழுதும் போது கற்பழிப்பேன் என்று எழுதிவில்லை என்று

வாதிடுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.//

அடியேன் கொடுத்த விளக்கங்கள் ஊகம் இல்லை.

திருமந்திரம் என்பது ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்து ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நாங்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி கூறுகிறது.
வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது.திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!


ஆக "அன்பே சிவம்" என்று கூறிய சமயத்தை வளர்க்க ஏழாம் நுற்றாண்டில் வந்த  திருஞானசம்பந்தர், "சைவம்" என்ற சொல்லுக்குக் கூடப் பொருள் தெரியாமலா "கொலை செய்வேன், கழுவேற்றுவேன், கழுத்தறுப்பேன்,"  என்று பதிகப் பாடல்களை பாடியிருப்பார்?  இதுவெல்லாம் புரியவில்லை என்றால் இந்தப் பாடலையாவது கேட்டு புரிந்து கொள்ளுங்கள்!

http://www.youtube.com/watch?v=Bk3I9Pjhh_E



"கொலை செய்வேன், கழுவேற்றுவேன், கழுத்தறுப்பேன்" என்று வெறும் வார்த்தைகளுக்குப் பொருள் கொண்டு உங்களைப் போன்ற நல்லவர்கள் சிவத்தை பற்றியும் சைவ சமையத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள தடை ஏற்படுத்திய கூட்டதினரின்  ஒரு பொய் என்பதை புரிந்து கொள்ளுங்கள் !  கேக்கறவன் கேனையாயிருந்த எருமை மாடு கூட  எராப்பிளான் ஓட்டுமாம்!

இறைவனை உங்கள் உடலுக்கு உள்ளேயே தேடச் சொல்லும் ஒரே சமயம், தமிழர்களின் சைவச் சமயம் மட்டுமே!. இந்த சைவச் சமயத்தின் உச்சமே வள்ளலார் காட்டிய "சமரச சுத்த சன்மார்க்கமாகும்"!!

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 2816

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.1818

சிவ அன்புடன்


சிவ அறிவொளியன்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


தனித்திரு, விழித்திரு, பசித்திரு

--
பன்னிரண்டாம் திருமுறை. 
 
திருச்சிற்றம்பலம்  
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்  
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்  
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி  
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் 		1776 
 
திருச்சிற்றம்பலம் 
 
 

Elangovan N

unread,
May 9, 2012, 12:54:17 AM5/9/12
to tamil_...@googlegroups.com, piravakam
// விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 2816

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.1818 
//

இந்தப்பாடல்கள்  ஒளிவீசும் விளக்குகள்.
எடுத்திட்டமைக்கு மிக்க நன்றி திரு.சிவ அறிவொளியன் அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்



2012/5/9 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

--

Elangovan N

unread,
May 9, 2012, 1:27:57 AM5/9/12
to tamil_...@googlegroups.com, piravakam
நண்பர் சரவணனின் ஞானசம்பந்தர் பற்றிய கருத்துகள் மிகவும் பிழையானவை.
அதனை வாதிடவேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவரே 
வருங்காலங்களில் புரிந்து கொள்ளக்கூடியவர்.

ஏனெனில் அவரின் கீழ்க்கண்ட வரியில் இருந்து, அவர் "தமிழர் சமயம் என்ன?" 
என்ற தேடலைச் செய்திருப்பது புரிகிறது. திராவிடத்தால் மழுங்கடிக்கப் பட்டிருக்கும் தமிழகத்திற்கு இது மிக அவசியமான ஒன்று.

//ஆனால் சமயம் பற்றி! தமிழரின்சமயம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள், //

இந்தத் தேடல் மேலும் மெருகுறும்போது, 
1) ஆசீவகம் என்று சொல்லப் படுகின்ற  தமிழர் மெய்யியலான அணுவியம், ஊழியல், வினை மறுப்பியமும்,
2) ஆதி சிவம் என்பதற்கும் ஆசீவகத்திற்கும் உள்ள தொடர்பும்,
3) செயின பெளத்த ஆரியச் சமயங்கள், தமிழனின் தொன்மையான ஆசீவக மெய்யியலை
எப்படியெல்லாம் இழிவு படுத்தி அழித்தன என்பதையும்
4) நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிற மணிமேகலையும் நீலகேசியும் எப்படி ஆசீவகத்தைக் கட்டழித்தன என்பதையும்
அறியும் போது, சரவணன் போன்ற தமிழர்கள், ஞானசம்பந்தர், செயின பௌத்தர்களை ஒரு பொருட்டாகக் கருதாதது ஏன் என்றும், செயின-பெளத்தர்கள் செய்த தமிழ்க்கேடுகள் என்ன என்றும் புரியும்.

நீலகேசியும் மணிமேகலையும்  தமிழர்களின் ஆதி மெய்யியலை ஏசி, இகழ்ந்து அதன் மேல்
தமது செயின பௌத்தத்தை நிலைநாட்டினது புரியும்.

"சமணம் தமிழுக்குத் தந்த கொடை" போன்ற அலங்காரமான தலைப்பிட்ட எழுத்துகளில் உள்ள போலிகள் உடைபடும்போது வைதீக-செயின-பௌத்த போராட்டம் பற்றியும் 
அவை எப்படித் தமிழரின் தொன்மையைக் காலி செய்தன என்பதும் புரியும்.

வைதீகம் மட்டும் ஆரியமல்ல, செயின  பௌத்தமும் ஆரியமே என்ற புரிதலை, காலி-திராவிட மேடைகள் தொடர்ந்து மழுங்கடித்து வருவது ஏன் என்று புரியும்.

அந்தப் புரிதல் ஏற்படும்போது "தமிழர் சமயம் என்ன?" என்ற தேடல் உடைய  சரவணன் போன்ற தமிழர்கள் தமிழ்நாட்டில் விளக்கேற்றி வைப்பர் என்று திடமாக நம்புகிறேன்.

ஆகவே நண்பர் சரவணனின் ஞானசம்பந்தர் பற்றிய கருத்துகளை மறுத்துக் கண்டிப்பதோடு, 
அவரின் தேடலை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். 

அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: நண்பர்களே, விரிவாக எழுதப் பொழுதில்லையாயினும், ஆசீவக மெய்யியல் பற்றிய மிக உயர்ந்த ஆய்வுக்காக, பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும், அவரின் ஆய்வை மிக உயர்வாகப் போற்றி மேலும் விளக்குகிற அறிஞர் குணாவுக்கும் தமிழகத்தின் வருங்காலம் மிகவும் கடமைப் பட்டிருக்கும் என்பதை மட்டும் இப்பொழுது சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.



2012/5/9 Saravana Rajendran <rajesa...@gmail.com>

Nakinam Sivam

unread,
May 9, 2012, 1:59:54 AM5/9/12
to tamil_ulagam
சகோதரர் சரவணன் ராசேந்திரனிடம் ஒரு கேள்வி ?

உங்களுடைய தமிழரின் சமயம் எது என்கிற தேடுதல் வரவேற்க கூடியதே.
இருப்பினும் உங்களுடைய முடிவு தவறானது என்பது உங்களுக்கு
புலப்படவில்லையா ?

1. புத்தர் தோன்றுவதற்கு முன்பு பௌத்தம் எனும் மதம் இருந்ததா ?

2, சமணத்தின் மகாவீரர் தோன்றவதற்கு முன்பு வரை சமணம் அனைவரிடமும்
சென்றிருந்ததா ?

3, இவ்விருவரும் தோன்றுவதற்கு முன்பு வரை தமிழர்கள் இல்லையா ?

4, அப்படி இவர்கள் தோன்றுவதற்கு முன்பு தமிழர்கள் இருந்தார்கள் என்றால்
அவர்கள் சமய நெறி எதையும் வைத்திருக்காமல் காட்டுமிராண்டிகளாக
இருந்தார்கள் என கூறுகிறீர்களா ?

புத்தர் தோன்றுவதற்கு முன்பும், மகாவீரர் தோன்றுவதற்கு முன்பும்
தமிழர்களின் சமயம் எது என நீங்கள் தேடுதலை வைத்தால் அது சைவ சமயம்தான்
என்பதனை உணர முடியும்.

அடுத்தது ஒருவர் சொல்லக்கூடிய வார்த்தையை அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை
புரிந்து கொள்வதில் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு நிகழ்கிறது. காரணம்
புரிதலில் உள்ள மாறுபாடு அல்லது பிழை.

உதாரணத்திற்கு
அக்காளை ஏறி பெருமானே என ஒரு புலவர் சிவபெருமானை பார்த்து பாடியுள்ளார்
அதற்காக சிவபெருமான அவரது அக்காவை புணர்ந்தார் என அர்த்தம் கொள்ளலாமா ?

அக்காளை - அந்த காளையின் மீது ஏறி அமர்ந்திருக்கும் பெருமானே எனதான்
பொருள் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து இல்லை அந்த புலவர் அக்காவைதான் புணர்ந்ததை பற்றி எழுதி
உள்ளார் என வாதம் செய்தால் உங்கள் புரிதலில் உள்ள குறைபாடே
வெளிப்படுகிறது.

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
May 9, 2012, 3:05:59 AM5/9/12
to pira...@googlegroups.com, tamil_...@googlegroups.com, அன்புடன், முத்தமிழ், Maravanpulavu K. Sachithananthan
நல்ல வாதுரை. இத்தயை வாதங்களும் உள்ளன. தனிப்பட்ட முறை யில் யாரை யும் தாக்காமல் பண்பாட்டை க் காக்ககும் நோக்கிலும் பாடல் வரிகளை ஆரா யும் நோக்கத்திலும் வாதுரைகள் தொடரலாமே.

2012/5/8 Saravana Rajendran <rajesa...@gmail.com>



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


Saravana Rajendran

unread,
May 9, 2012, 4:28:09 AM5/9/12
to tamil_...@googlegroups.com, pira...@googlegroups.com, அன்புடன், முத்தமிழ், Maravanpulavu K. Sachithananthan
பெரியோர்கள் களமிரங்கி பாக்களின் தெளிவு தேடி சம்பந்தனை காப்பாற்ற கம்பனை
எல்லாம் துணைக்கழைக்க இவ்விழையில் கர்த்தாவோ ஆதீனங்களின் அறையில் காமிரா
வைத்தால் அனைத்து வண்டவாளங்கள் வெளிவரும் என்று மும்பை சிவப்பு விளக்கு
மாமா பாணியில் பேதுவில் முழங்குகிறார்

> *அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும்


> பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும்
> மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே
> பொறுத்தருள்க.
>

> *அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


> / தமிழே விழி! தமிழா விழி!
> எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
>
> பின்வரும் பதிவுகளைக் காண்க:
>

> *www.ilakkuvanar.org

> http://semmozhichutar.com*


>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

N. Ganesan

unread,
May 9, 2012, 10:45:52 AM5/9/12
to tamil_ulagam
On May 9, 12:05 am, திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...@gmail.com>
wrote:

> நல்ல வாதுரை. இத்தயை வாதங்களும் உள்ளன. தனிப்பட்ட முறை யில் யாரை யும்
> தாக்காமல் பண்பாட்டை க் காக்ககும் நோக்கிலும் பாடல் வரிகளை ஆரா யும்
> நோக்கத்திலும் வாதுரைகள் தொடரலாமே.
>

நேற்றுப் படித்த ப்லாக் ஒன்று:
http://donashok.blogspot.com/2012/05/blog-post_07.html

சரவணன் சிந்தனைக்கு. கற்பு என்றால் வேதம், மறை - சங்க இலக்கியம்/
கற்பழிப்பு சமணர், பௌத்தர் நூல்களை அழிப்பா? அல்லது அந்நூற் கருத்துக்களை
அழிப்பா?

தமிழுக்குச் சமணர்கள் தொல்காப்பியர், வள்ளுவர் கொடைகள் பற்றி
எழுதியுள்ளேன்:
http://groups.google.com/group/tamil_ulagam/browse_frm/thread/1de743ab1a1d7a7a#

என் வடக்குவாசற் கட்டுரை - திருவள்ளுவர் திருநாளும்,
தொல்காப்பியர் திருநாளும் - பற்றி என்ன நினைக்கிறார் சரவணன்
என அறிய அவா.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/97f288d951b00fbb

நா. கணேசன்

> 2012/5/8 Saravana Rajendran <rajesarav...@gmail.com>

> > On 5/7/12, Sankarkumar <ommurug...@gmail.com> wrote:
>
> > >> தொடர்ந்து இது போன்ற  பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது
> > >> மிகவும்
> > >> அயர்ச்சியாக இருக்கிறது.
>
> > > பின்னூட்டங்கள் அயர்ச்சி அளித்தது ஏனெனத் தெரிந்துகொள்ளலாமா, ஸ்வாதி?:)))
> > > மற்றபடி நீங்க சொன்னதில் மாற்றுக் கருத்தில்லை!:))
>
> > > --
> > > "தமிழ் பிரவாகம்"
> > > "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
>
> > > Pira...@googlegroups.com
>
> > --
> > *Mumbailive <http://mumbailive.mobie.in>*
> > Find mumbai follow mumbai
> > TPI-Mumbai
> > 09819166850/9029512535
>
> > --
> > "தமிழ் பிரவாகம்"
> > "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
>
> > Pira...@googlegroups.com
>
> --

> *அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும்


> பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும்
> மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே
> பொறுத்தருள்க.
>

> *அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


> / தமிழே விழி! தமிழா விழி!
> எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
>
> பின்வரும் பதிவுகளைக் காண்க:
>

> *www.ilakkuvanar.org
> thiru2050.blogspot.com
> thiru-padaippugal.blogspot.comhttp://writeinthamizh.blogspot.com/http://literaturte.blogspot.com/...
>
> read more »

சிவ அறிவொளியன்

unread,
May 9, 2012, 12:05:34 PM5/9/12
to tamil_...@googlegroups.com
// அடுத்தது ஒருவர் சொல்லக்கூடிய வார்த்தையை அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை

புரிந்து கொள்வதில் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு நிகழ்கிறது. காரணம்
புரிதலில் உள்ள மாறுபாடு அல்லது பிழை.

உதாரணத்திற்கு
அக்காளை ஏறி பெருமானே என ஒரு புலவர் சிவபெருமானை பார்த்து பாடியுள்ளார்
அதற்காக சிவபெருமான அவரது அக்காவை புணர்ந்தார் என அர்த்தம் கொள்ளலாமா ?

அக்காளை - அந்த காளையின் மீது ஏறி அமர்ந்திருக்கும் பெருமானே எனதான்
பொருள் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து இல்லை அந்த புலவர் அக்காவைதான் புணர்ந்ததை பற்றி எழுதி
உள்ளார் என வாதம் செய்தால் உங்கள் புரிதலில் உள்ள குறைபாடே

வெளிப்படுகிறது.//


கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினாராம். 

சரவணன் இப் பாடல்களுக்கு பொருள் கொண்டால்,
பெண்களைச் சுமந்திருக்கும் காமப்பித்துப்பிடித்த ஈசன் தங்கையையும்,
அக்காவையும் கெடுத்துவிட்டார் என்று பொருள் கொள்வார்!

ஆனால் சரியான கருத்து இறைவனின் பெருமை கூறுவதாக இருக்கிறது. கடம்ப
வனத்திலே இருக்கும் ஈசனாகிய சிவபெருமான், தலையிலே கங்கையையும், தன்
உடலிலே பாதியாக உமாதேவியையும் சுமந்திருக்கின்ற பித்தர்,
எட்டுத்திசைகளுக்கும் மிக்க புகழ்பெற்ற தன் கையிலே அக்கினியை
வைத்துக்கொண்டிருப்பவர், காளைமாட்டினை வாகனமாகக் கொண்டு அதில்
ஏறிவருபவர். அவரைக் கண்டீர்களா பெண்களே! என்பதே பாடலின் உட்பொருளாக
உயர்ந்து நிற்கின்றது!

Gopalakrishnan (Gopi)

unread,
May 10, 2012, 2:16:24 AM5/10/12
to tamil_...@googlegroups.com
இந்த மடலிழையின் உட்கருத்தில் எனக்கு தனிப்பட்ட கருத்து உண்டு எந்த மதம் குறித்தும் எனது கருத்துக்களை  பொதுவில் விவாதிக்க விரும்பவில்லை.

ஆயினும் இந்த இழை தொடர்பான ஒன்றை இங்கே பகிர்கிறேன். இதே போல வார்த்தை விளையாட்டுக்களுடன் கூடிய ஒரு அம்மானைப் பாடலுக்கு கிருபானந்த வாரியார் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

http://variyar.blogspot.com/2006/05/blog-post_09.html

இனிமையுடன்,

கோபி

2012/5/9 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

--

Saravana Rajendran

unread,
May 10, 2012, 7:38:04 AM5/10/12
to tamil_...@googlegroups.com

சமண பௌத்த மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் தமிழகத்தில் காட்டுமிராண்டிகள் அல்ல, உலகிற்கு நாகரீகத்தை காட்டும்மிரர்கள்(mirror) தான் இருந்தார்கள். பழந்தமிழர் வழிபாடு என்பது சைவம் அல்ல (இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் இதை ஏற்றே ஆகவேண்டும்) தமிழர் நாகரீகம் என்பது அங்கிருந்து வந்தது அல்ல, எப்படி இன்று நம்மிடம் இந்து, கிருத்துவம், இசுலாம், மேலும் ஜைனம் என்ற சமணம் சாக்கியம் என்ற பவுத்தம் இருக்கிறதோ அதே போல் தான் அன்றும் சைவம், நடுகல்வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இதர இருந்தது,

 

இன்று பெரும்பான்மையாக இந்துமதம் இருப்பது போல் அன்று ஆசீவகம் இருந்தது,

 

            ஆசீவகத்தின் வழிபாட்டு முறை இன்றும் நாம் பின்பற்றுகிறோம், அதுதான் பொங்கல், பொங்கல் பற்றி கூறாத தமிழ் இலக்கியங்கள் இல்லை, ஆசிவகத்தின் தத்துவமே நன்றி கூறுதல் தான், கிருத்துவிற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆசீவகம் மெல்ல மெல்ல உருமாரத்துவங்கியது, அதாவது ஆசீவகத்தின் கோட்பாடுகளும் சமண சாக்கிய கோட்பாடுகளிலும் அதிக அளவு வேறுபாடு கிடையாது,

 

            மேலும் ஆசீவகம் கூறும் நல்லொழுக்கம் இல்லறம், பெரியோரை பேனுதல் சமண சாக்கியத்தில் இருந்தது, ஆசீவகம் வெகுசனமக்களின் தலைமுறை வழி காட்டுதலே, ஆசிவகத்திற்கு என்று மத குரு இல்லாத காரணத்தால் சமண பௌத்தங்கள் ஆசிவகத்தை ஒத்து இருப்பதும்,நெறிகளை வரிசைப்படுத்த சமண முனிகள், பௌத்த அரஹத்துக்கள் அவர்களின் நல்லோழுக்கங்கள், அகிம்சா, அன்பு குணங்கள் போன்றவை மக்களை மிகவும் கவர்ந்ததால் தென்னகத்தில் நுழைந்த மிகக்குறுகிய காலத்திலேயே தமிழர்களின் மனதில் வேறுன்றியது,

 

 

 

இதைத்தான் எம்பாட்டன் வள்ளுவன்

 

அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார்

என்றும் உரியர் பிறர்க்கு

 

            இதன் பயன் தான் நாம் அனைவரும் இன்றும் படிக்கும் நன்னேறிகள், வள்ளுவர் தந்த குறள், ஐம்பெருங்காப்பியங்கள் தொல்காப்பியங்கள் மூதுரைகள்,

 

            சங்க காலத்து ஔவை தான் உலகின் முதல் மொழிபெயர்ப்பாளர் தம்மபதத்தை பாலியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கடையேழு வள்ளர்கள் இன்றும் நம் நினைவில் வாழ காரணமாக இருந்ததும் இந்த சமண சாக்கிய மதங்கள் தான்,(வரலாறு எக்காரணம் கொண்டு எவ்வளவு அழகிய சிலையாக இருந்தாலும் அதில் சிறிய கறை இருந்தால் அதை ஏற்காது)

 

            எத்தனையோ மன்னர்களை பற்றி படித்திருக்கிறோம், ஆனால் வரலாறு ஏன் மூவரை மட்டும் சக்கரவர்த்தி என்று பதித்திருக்கிறது, பிறர் ஆயிரம் சொல்லிக்கொண்டு போகட்டும் அசோகனின் தன்னலமற்ற மக்கட் தொண்டு, அலக்சாண்டர் தான் மாவீரன் என்றாலும் பிறரையும் மதிக்கும் பேருங்குணம், அக்பரின் மதச்சார்பின்மை போன்ற குணங்கள் வரலாறு அவர்களை (The Great) சக்ரவர்த்தி என்று அழைக்கிறது.

 

அது போல் தான் காப்பியங்களும் எவ்வளவு அழகான தமிழ் விளையாடும் பாசுரங்களும் பதிகங்களும் மொழி அழகிற்காக கூவும் சேவலையே கோழியாக்கி வர்ணித்த ஆழ்வார்களின் பாடல்கள் நடையழகில் வார்த்தைகளிலேயே இளம்பெண்ணின் நடனத்தை காட்டிய கம்பராமாயணம் ஆனால் இவைகள் கடைச்சரக்கில் அழகாக வணக்கமிடும் ஆடையனிந்த பொம்மைகளே இவைகள் எக்காலத்திலும் வீட்டு பெண்களாகா,

 

 ஆனால் திருக்குறளும், நன்னெறிகளும், ஐம்பெருங்காப்பியங்களும் அப்படி அல்ல, அதனால் தான் தமிழ் இலக்கியம் என்று நினைத்தால் மணிமேகலை சீவகசிந்தாமனியும் குண்டலகேசியும், சிலப்பதிகாரமும், வ்ளையாபதி போன்றவை நினைவிற்கு வருகின்றன.

 

மணிமேகலையை எங்கிலும் ஆசிவகத்தை சாடவில்லை, அது வழிதவறிய முறைதவறிய வழிபாட்டையே சாடியது, அப்படியே மணிமேகலையை குறை கூறினால் என்றால் தன்னாலேயே திரிகுறளையும், நன்னேறியையும், தொல்காப்பியத்தையும் சாடவேண்டி இருக்கும், அதற்கு முன்வந்த அத்தனை நூலையும் குறை கூறவேண்டும் வேண்டி இருக்கும் ஏனென்றால் அவைகள் சைவத்தை முன்னிருந்த வில்லை,

                         

ஆழ்வார்களும் சைவபெரியாரும் சமண சாக்கியங்களை முடிந்தவரை சம்பந்தமே இல்லாமல் சாடி இருக்கின்றனர். இது ஒரு தீவிர மத காழ்ப்புணர்வு, அதாவது களப்பிரர்கள் காலம் முடிந்து சைவம் தழைத்த பிறகு இவை நடந்தவைகள், மாமிசம் உண்பவர்களை விட மாமிசம் உண்ணாதவர்கள் உடலில் துர்நாற்றம் அடிக்காது, இது குறித்து பல அறிவியல் சார்ந்த ஆய்வுகள் வந்துவிட்டன, மேலும் சாக்கியர்கள் தருமம் ஏந்தி பள்ளிகளுக்கு சென்று மற்றவர்களுடன் சேர்ந்தே உண்டு வந்தனர். எந்த ஒரு சாக்கிய துறவியும் தான் ஏற்ற பிச்சையை அங்கே உண்டு செல்ல மாட்டார். ஆனால் கீழுள்ள பாடலில் எந்த அளவிற்கு தூற்றமுடியுமே அந்த அளவிற்கு தூற்றி இருக்கின்றனர்.

 

 கையிலுண்டுழல் வருங்கமழ் துவராடையான்

மெய்யைப் போர்த்துழல்வாரு முரைப்பன் மெய்யல”,

 

உறிப்பிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்

நெறிப்பிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளமின் 

 

குண்டரைக் கூறையின்றித் திரியும்

சமண் சாக்கியரை பேய்

மிண்டரை கண்ட தன்மை

விரலாகிய தென்னை கொலோ

 

வைதீகத்தின் வழியொழு காதவக்

கைதம் முடிக் காரமணன் தேரரை

மறைவ் ழக்கமில் லாத பாவிகள்

முறிய வாது செய்த்திரு வுள்ளமே

 

அந்தனர் புரியு மருமறை

சிந்தை செய்யா தவர்கள்

 

வெந்தலாகிய சாக்கிய ரோடு

சமணர்கள்

   இந்த பாடல்களில் தெளிவாக பல இடங்களில் மிகுதியாகவே சாடி இருக்கிறார்கள். முதலில் தனது சமயம் உயர்வானது என்று அழுத்திபேசுதல்,பிறகு பிறமதங்களை தாழ்த்தி பேசுதல், அம்மதக்காரர்களை சாடிப்பேசுதல்,

 

இங்கு தான் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று

அதாவது முழுக்க முழுக்க சைவ சமயத்தவரின் கைகளில் அதிகாரம் சென்ற அந்த அதிகாரத்தை தீவிரமாக பயன்படுத்துதல்,

          

            சம்பந்தர் பற்றிய கதைகளில் சமணர்கள், சம்பந்தரின் நூல்களை எரிப்பதும், வைகையில் எறிவதும், அவரை கொலைசெய்ய முற்படுவது, இதர பல வாய்மொழிக்கதைகள் உண்டு,

கீழுள்ள எடுத்துக்காட்டை காண்பீர்,

 

இரண்டு உணவகத்தார் இருக்கிறார்கள், இரண்டு பேருமே தங்கள் உணவுதான் மிகச்சிறந்தது என்று சொல்கிறார்கள், நாளைடைவில் எதிர் உணவகத்தாரை எப்படியோ ஒழித்து விட்டார். இப்போது தனக்கு எதிர் உணவகத்தாரை பற்றி இவர் புகழ்வாரா? இகழ்வாரா? இவரிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் முன்னாள் இருந்த உணவகத்தார் பற்றி முழுக்க முழுக்க குறைதான் கூறுவாரே அன்றி முன்பு ஒருத்தர் இருந்தார் அவரது உணவகத்தில் இது சிறப்பாக இருக்கும் அது சிறப்பாக இருக்கும் என்று தன் வாயால் கூறுவாரோ?

 

 இது இயற்கையாகவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று

 

 

           

சமணமும் பௌத்தமும் ஆரிய மதம் என்ற கூற்றை ஏற்க முடியாது  மேலும் நாவலம் தீவு, இந்திர தேசம், நாகர்பூமி என்று கூறப்படும் இந்திய தீபகற்பத்தில் தான் இந்த புத்தனும் அருகனும் தோன்றினார்கள். ஹரப்பா முகன்சாதரா, போன்றவற்றை திராவிட நாகரீகம் என பேசுபவர்கள் அந்த பகுதியில் வந்த சமண பௌத்தங்களை ஆரியம் என்று கூறுவது விசித்திரமாக உள்ளது, மைய ஆசியாவில் இருந்து வந்தது தான் ஆரியம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம், அப்படி இருக்க சமணத்தையும் பௌத்ததையும் எப்படி ஆரியம் என்று கூறமுடியும்??

 

நாகர்கள் பூமி என்றால் அது தமிழர்கள்நிலம் என்று மத்திப்பிற்குறிய பெரியவர்கள் அறிந்தது தான்,

இன்று நாம் கானும் நகர்கோவில், நாகப்பட்டினம், நாக நெறி(நாங்குநேறி) நாகார்ச்சுனம், நாகபூர், இலங்கையில் உள்ள நாகதீவு( யாழ்பானம் அருகில் உள்ளது)போன்றவை அனைத்தும் தமிழர் கிருஸ்து முன்பு இந்தியா எங்கும் வாழ்ந்தனர், என்று அறியவருகிறது,



2012/5/10 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>



--
Mumbailive

Elangovan N

unread,
May 10, 2012, 8:48:12 AM5/10/12
to tamil_...@googlegroups.com
// மணிமேகலையை எங்கிலும் ஆசிவகத்தை சாடவில்லைஅது வழிதவறிய முறைதவறிய வழிபாட்டையே சாடியதுஅப்படியே மணிமேகலையை குறை கூறினால்என்றால் தன்னாலேயே திரிகுறளையும்நன்னேறியையும்தொல்காப்பியத்தையும் சாடவேண்டி இருக்கும்அதற்கு முன்வந்த அத்தனை நூலையும் குறை கூறவேண்டும்வேண்டி இருக்கும் ஏனென்றால் அவைகள் சைவத்தை முன்னிருந்த வில்லை, 
//

என்னவோ எழுதியிருக்காக :-))
ஆசீவகம் பற்றி ஏதேனும் வருகிறதே - அதுவே மகிழ்ச்சி. அதைவிட ஆசீவகத்தையும் ஆரியம்
என்று பட்டம் கட்டி விடாமல் இருந்ததற்காகவே இந்தக் கட்டுரையாளரைப்  பாராட்டவேண்டும்.

வைதீக ----  செ-பௌ  சமயங்களுக்கிடையான சண்டையைச் சொல்ல வேண்டுமானல்
ஓர் எடுத்துக்காட்டாக  தீம்கா-ஆதீம்கா சண்டையைச் சொல்லலாம். 
தீம்காவில் மனநிறைவில்லாவிடில் ஆதீம்காவே உலகைக் காக்க வந்த பரம்பொருளாகவும்,
ஆதீம்காவைப் பிடிக்கவில்லையெனில் தீம்காவையே உலகின் ஒப்பற்ற புரட்சிக்காரர்களாகவும் கருதி மாய்ந்து மாய்ந்து கட்சி கட்டுவார்கள்.

அதுபோலவே வைதீகத்தின் மேல் இருக்கிற கடுப்பில், வைதீகம் வந்த திசையில் இருந்தே
வந்த செயினத்தையும் பௌத்தத்தையும் தலையில் தூக்கி வைத்துக் கொள்வது 
தமிழர்களின் பண்பாடாக்கப் பட்டிருக்கிறது.  அதுக்குத் தோதாக சைவ, வைணவம் போன்ற தன் மண்ணில் தோன்றிய  நெறிகளையும் ஆரியம் என்று சொல்லித் தள்ளிவிட்டுவிடுவார்கள்.
இன்னும் கடுப்பு வந்தபோதெல்லாம், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் என்ற எல்லாவற்றையும் ஆரியம் என்று சொன்னவர்கள் உண்டு :-))

கணக்குப் போட்டுப் பார்த்தால் 
தீம்கா + ஆதீம்கா = வைதீகம் + செ'பௌ = 0 என்ற சூத்திரம் கிடைக்கும் :-)

வைதீகம் ஆகாததென்றால் தமிழன் அவனுடையது எது என்று தேடவேண்டும்.
அதைவிடுத்து - சமண-பௌத்தம்தான் என்னுடையது என்று தேங்கிக் கொண்டால்
தமிழன் "நாங்க அப்பவே அப்படி...." என்று சொல்வதெல்லாம் பீற்றல்தான் என்றாகும்.

உலகம் முழுதும் பல குமுகங்கள் உண்டு. ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு நெறியைக் கொண்டு இருக்கையில்  தமிழன் மட்டும் எங்க நெறி செயின நெறி, பௌத்த நெறி என்று கூறிக் கொண்டு
இருக்குமானால், "நமக்குக் கிடைத்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்" என்ற உரையாட்டையே
உலகம் கூறும். 

அன்புடன்
நாக.இளங்கோவன்


2012/5/10 Saravana Rajendran <rajesa...@gmail.com>

சமண பௌத்த மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் தமிழகத்தில் காட்டுமிராண்டிகள் அல்ல, உலகிற்கு நாகரீகத்தை காட்டும்மிரர்கள்(mirror) தான் இருந்தார்கள். பழந்தமிழர் வழிபாடு என்பது சைவம் அல்ல (இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் இதை ஏற்றே ஆகவேண்டும்) தமிழர் நாகரீகம் என்பது அங்கிருந்து வந்தது அல்ல, எப்படி இன்று நம்மிடம் இந்து, கிருத்துவம், இசுலாம், மேலும் ஜைனம் என்ற சமணம் சாக்கியம் என்ற பவுத்தம் இருக்கிறதோ அதே போல் தான் அன்றும் சைவம், நடுகல்வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இதர இருந்தது,எ

Nakinam Sivam

unread,
May 10, 2012, 10:12:29 AM5/10/12
to tamil_ulagam
சகோதரரே,

" இன்று பெரும்பான்மையாக இந்துமதம் இருப்பது போல் அன்று ஆசீவகம்
இருந்தது"

இந்த ஆசீவகம் என்பதன் உண்மை பொருள் அறிவீரோ ?

ஆ என்றால் பசு
சீவ என்றால் உயிர்
அகம் என்றால் வீடு

ஆக ஆசீவகம் என்பதன் பொருள் பசுவாகிய உயிர் கட்டுண்டு உள்ள இந்த தளையாகிய
பாசம்
அதன் உண்மை இருப்பிடமான இறை எனும் பதி

ஆக இது சைவத்தின் உயிர். தளை. இறை எனும் பதி பசு பாசம் என்பதேதான்
குறிக்கும் என்பதை அறிவீரோ ?

மேலும் சைவத்தின் உண்மையை நீங்கள் உணராத காரணத்தினால் தான்
தமிழரின் உண்மை சமயமான சைவத்தை குறை கூறுகிறீர்கள்.

ஒன்று தெரியுமா ?

சமணம் என்பதே சைவத் தேடுதலின் உச்சம்தான்.

மேலும் சமணம் சைவத்திலிருந்தே பிரிந்துள்ளது எனப்படுகிறது.

காரணம் இந்த சமணத்தை தோற்றுவித்தவராக ஆதி தீர்த்தங்கராக சொல்லப்படுபவர்
ரிடப தேவர்.
அவரே சைவ சமயம் சொல்லும் ரிடபம் எனும் நந்தி தேவர்.

சைவத்தின் உச்சம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல்.
அதுவே சமயத்தில் பின்பற்றப்பட்டது.
சைவம் எப்போதுமே வாழ்வின் நிலையாமையை உணர்த்திக்கொண்டே இருக்கும்.
ஆகவேதான் அதன் கடவுளான சிவபெருமான் சுடுகாடில் உறைபவராக காட்டப்பட்டார்.

பிற்காலத்தில் சைவ சமயம் மற்றம் சமண சமயம் இரண்டிலும் அதன்
கருத்தாக்கங்கள் வலுவிழந்து சடங்குகள் முக்கியத்துவம் பெற்றன. அந்த
சடங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டையே சைவ - சமண சண்டையாக உருவெடுத்தன.

எப்போதுமே எந்த சமயத்திற்குமே மற்றொரு சமயத்தின் மீது சண்டை தோன்ற
வாயப்பே இல்லை. அந்த சமயத்தில் பிற்காலத்தில் தோன்றிய சடங்குகளே சமயச்
சண்டைகளுக்கு காரணகர்த்தாவாக அமைந்துள்ளன.

இனியும் மதச் சண்டைகளுக்கு அதுவே காரணமாக அமையும்.

சிவ அறிவொளியன்

unread,
May 10, 2012, 11:55:25 AM5/10/12
to tamil_...@googlegroups.com


// சமண பௌத்த மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் தமிழகத்தில் காட்டுமிராண்டிகள் அல்ல, உலகிற்கு நாகரீகத்தை காட்டும்மிரர்கள்(mirror) தான் இருந்தார்கள். பழந்தமிழர் வழிபாடு என்பது சைவம் அல்ல //


 

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். சிவ வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும் காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான். எனவே சக்தியாகிய பெண் தெய்வங்களுடனும், தன் திருமேனிக்கு உரிய பெயர்களுடனும்
    சங்க இலக்கியங்களில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளான். வழிபாட்டில் அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தமை சங்க இலக்கியங்களில் தெரிகின்றது.

    மேலும் சிவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும் எட்டுத்தொகை நூல்கள் அவனுடைய திருமேனியைப் பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிடுகின்றன. அவற்றில்
    ஒருசிலவற்றைக் காண்போம். எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள்     சிவபெருமானைப்     பற்றியனவே     ஆகும். இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்ன மேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’ என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில்  கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.

    இவ்வாறு     உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. வானிடத்தில் பறந்து திரியும்
    இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும். இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

        மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
        மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
        பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்
                 - (பரி.5, 25-27)

    அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.

        தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
        மணிமிடற் றண்ணல்      - (பரி. 9, 6-7)

    ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்த செய்தியை,

        ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
                     - (கலி - 81)

        ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்
                     - (புற - 198)

    என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள் என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை அணிந்தவன் என்றும், உமையொரு பாகத்தவன் என்றும்
    குறிப்பிட்டு, அவ்வரலாறுகளையும் எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன.

        சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக் கருதப்பட்டது. அத்திருநாளில் சிவபெருமானுக்கு விழாக்கள் எடுத்தல் பற்றியும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன. அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக் கருதப்பட்டது. இதனைப் பரிபாடலின் 11ஆம் பாடல் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை நாளில்     சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி நடத்தினார்கள் என்ற செய்தி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

      
     சிவபெருமானின் ஒரு வடிவாக அமைந்த முருகனின் வழிபாட்டில் சிவ வழிபாட்டு முறைகள் பல காணப்படுகின்றன. வெறியாட்டு வழிபாடு நடத்தினால் காதலர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்பது சங்க இலக்கிய மரபாகத் தெரிகிறது.

        அகநானூறு 96ஆவது பாடலில் வேலன் வெறியாட்டு
    நிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டப் பெற்றுள்ளன. நற்றிணையின்
    34ஆம் பாட்டில்,

        கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
        வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
        கடவு ளாயினும் ஆக
        மடவை மன்ற வாழிய முருகே     (பா- 34)

    என்று முருகனுக்கு எடுக்கப் பெற்ற வெறியாடல் குறிக்கப் பெறுகிறது. முருக வழிபாடு இவ்வாறு கூறப்பெற்றாலும் சிவபெருமானின் மூத்த     பிள்ளையாகிய யானைமுகப்
    பிள்ளையாரின் வழிபாடுகள் சங்கச் செய்திகளில் இடம் பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிவனுக்குரிய பெண்  தெய்வமாகிய உமையவள், வீரத்திற்குரிய தெய்வமாகக் கருதப் பட்டுக் கொற்றவையாக வணங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.  பரிபாடலில் கொற்றவை பற்றிக் கூறப்பட்டுள்ள பாடலை அதற்குச் சான்றாகக் காட்டலாம்.

        இவ்வாறு எட்டுத் தொகை நூல்களில் சிவபெருமானைப்
    பற்றிய செய்திகளும் வழிபாட்டு முறைமைகளும் இடம்பெற்றுச்
    சிவவழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.

    பத்துப்பாட்டு நூல்களில் சிவ வழிபாடு

    பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய செய்திகளும், வழிபாட்டு முறைகளும் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதலாவது பாட்டான திருமுருகாற்றுப்படை சைவ சமய வழிபாட்டின்
    தொன்மையை எடுத்துக் காட்டும் பாடலாகும். சைவ சமய வழிபாட்டின் ஒரு பகுதியாக முருக வழிபாடு இருந்தமையை அப்பாடல் பெருமையாக எடுத்துக் காட்டுகிறது. முருகனின்
    வடிவம் பற்றியும், அவனுடைய கரங்கள் பற்றியும் கூறப்படுகின்  செய்திகள் தொல் பழங்காலத்தில் சைவ சமய வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற உருவ வழிபாட்டு முறையைக் கூறுவதாகும்.  மேலும் முருகன் இருக்கும் இடங்களாகப் படை வீடுகள் குறிக்கப் பெற்றிருப்பதும் சிறப்புடையதாகும். முருகன் குன்றுதோறும்     ஆடுகின்றவன்     என்பதை     நக்கீரர்
  திருமுருகாற்றுப்படையில், “குன்றுதோறாடலும் நின்றதன் பண்பே” என்று குறிப்பிடுகின்றார்.

        திருமுருகாற்றுப்படையில் மக்கள் ஒன்றுகூடி முருகனின் திருத்தலங்களில் செய்கின்ற     வழிபாட்டு     முறைகள் சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. முருகப் பெருமானுடைய
    வரலாறுகள் அதாவது மாமரமாய் நின்ற சூரனைத் தடிந்தது போன்றவை சிறப்பாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. எனவே தொல் பழங்காலத்தில் சிவ வழிபாடு என்று நினைக்கிற பொழுது பத்துப்பாட்டில் அமைந்த திருமுருகாற்றுப் படை சிறப்புப் பெறுவதை உணரலாம். அப்பாட்டின் மூலம் முருக வழிபாடாம் சிவ வழிபாட்டுத் தொன்மை எடுத்துக் கூறப்பெறுகிறது. மற்ற பாடல்களில் சிவ வழிபாட்டின் தொன்மைகள் பலவாறு காணப் பெறுகின்றன. எட்டுத்தொகைப் பகுதியில் கூறப்பட்டவை போன்று சிவபிரானின் புராணச் செய்திகள் இவற்றிலும் இடம் பெற்றுள்ளன.

        சிறுபாணாற்றுப்படையில்,     “ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த.... ஆர்வ நன்மொழி” (அடி97 - 99)
    என்று ஆலமர்ச் செல்வர் நிலை குறிக்கப் பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியில் சிவபெருமானுக்கு எடுக்கப்பெற்ற வேள்வி பற்றிய செய்தி, “நல்வேள்வித் துறைபோகிய” (760) என்றும்
    பாண்டிய நாட்டில் 7 நாட்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப் பெற்ற செய்தி,  கழுநீர் கொண்ட எழுநாள் அந்த ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே (427-428) என்றும்     குறிக்கப்பெறுகின்றன.     அதுபோலப் பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலையில் அவிர்சடை முனிவர் சிவபெருமானுக்குரிய வேள்வியை நடத்தினர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவனை வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக் கொண்டிருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,

        கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
        முக்கோல் அசைநிலை கடுப்ப     (36-37)

    என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிவ வழிபாட்டின தொன்மையைப் பத்துப்பாட்டில் இடம்பெற்ற பாடல்களும் வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம்.

    தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு

        ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ என்ற மரபுக்கேற்பச் சங்க இலக்கியங்கள் அல்லது முற்பட்ட இலக்கியங்கள் கொண்டு தொல்காப்பியம் என்ற பழந்தமிழ்
    இலக்கண நூல் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் தெய்வ வழிபாட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் காணப்பெறும் சிவவழிபாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம். அவ்விலக்கண நூல் கூறுகின்ற முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் என்ற மூன்று பொருள்களில் கருப்பொருளில் தெய்வம் இடம்பெற்றுள்ளது. தெய்வ நம்பிக்கையை அது காட்டுகிறது. அவ் இலக்கணநூல் நிலங்களை ஐவகையாகப் பிரித்து     அந்நிலங்களுக்குரிய     தெய்வங்களையும் குறிப்பிடுகிறது. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று தொடங்கும் சூத்திரத்தின் மூலம் அத்தெய்வங்கள் உணர்த்தப பெறுகின்றன. குறிஞ்சிக்குரிய தெய்வமாக முருகன் - செவ்வேள் என்று குறிக்கப் பெற்றுச் சைவ வழிபாடு இடம் பெறுகிறது. எனவே தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருந்தமை புலப்படுகிறது. மேலும் சமய வழிபாட்டின் கொள்கையான விதிக் (ஊழ்) கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தெரிய வருகிறது. “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” என்று தொடங்குகின்ற தொல்காப்பியச்    சூத்திரம்     இதற்க எடுத்துக்காட்டாகும். 'பால்வரை தெய்வம்' என்றும், 'வழிபடு  தெய்வம்' என்றும் தெய்வங்கள் அவ்விலக்கண நூலில்  குறிக்கப் பெறுகின்றன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகிய    விரிச்சி (குறி கேட்டல்), வெறியாட்டு எடுத்தல், கழங்குகளை    எறிந்து சகுனம் பார்த்தல் ஆகியவையும் அவ்விலக்கண நூலில்    கூறப்பட்டுள்ளன. அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு    சிறப்பிடம் பெற்றது என்பதைக் “கொடிநிலை, கந்தழி, வள்ளி
    என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே“    என்ற சூத்திரப்பகுதி வலியுறுத்தும். சமயக் கொள்கையாகிய    நிலையாமை     பற்றி     புறத்திணையில் காஞ்சித்திணை
    வலியுறுத்துகிறது. இவ்வாறு சமய வழிபாட்டின் தொன்மையையும்,    சைவ வழிபாட்டின் ஒரு பகுதியாகிய முருக வழிபாட்டின்    சிறப்பையும், சமய நம்பிக்கைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது எனலாம்.

    திருக்குறளில் சிவ வழிபாடு

        சங்க இலக்கியக் காலம் சார்ந்த திருக்குறளில் ஒரு    குறிப்பிட்ட கடவுள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை    என்றாலும் சமய நெறிமுறைகளும், தத்துவ உண்மைகளும் இடம்
    பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. “ஆதி பகவன்    முதற்றே உலகு” என்ற தொடர் கடவுள் உண்மையைப்
    புலப்படுத்தும். கடவுள் வாழ்த்தில் அமைந்த 10 பாடல்களும்    தெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும். “இருள்சேர் இருவினை”    (குறள் எண்.5) என்ற தொடர் வினைக் கொள்கையின் சிறப்பை    எடுத்துக் காட்டும். "பிறவிப் பெருங்கடல்" (10) என்பது மறுபிறப்பு உண்மையை வெளிப்படுத்தும் "எண்குணத்தான்" என்பது இறைவன் எண்ணற்ற - அளவில்லாத குணங்களை
    உடையவன் என்பதை உணர்த்தும். திருக்குறளில் “உலகு இயற்றியான்” (1062) என்ற தொடர உலகத்தைப் படைத்த முதல்வனாம் கடவுள் உண்டு என்பதை
    வலியுறுத்தும். கடவுளுக்குரிய சொல்லாகிய 'இறை' என்ற சொல் திருக்குறளில் கையாளப் பெற்றிருப்பது கடவுட் கொள்கையை
    நிலைநாட்டும். அதுபோலப் “பற்றுக பற்றற்றான் பற்றினை”    (350) என்ற தொடர் சிவ தத்துவ உணர்வை வெளிக்காட்டும்.    “மெய்யுணர்வு” (354) என்ற சொல் இறையுணர்ச்சி உடைய
    பெரியோரை நினைவுபடுத்தும்.

        “சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்” (359) என்ற தொடர்    சிவ தத்துவக் கொள்கையைத் தெளிவுற உணர்த்தும். ஆகூழ்,    போகூழ் என்ற தொடர்கள் (371) விதிக் கொள்கையை
    வலியுறுத்தும். “வகுத்தான் வகுத்த வகை” (377) என்ற தொடர்    இறைக் கொள்கையை வலியுறுத்தும். ஊழ் என்னும் அதிகாரம்    சிவ தத்துவக் கொள்கையை வலியுறுத்தும் அதிகாரமாகும்.

Elangovan N

unread,
May 10, 2012, 12:22:41 PM5/10/12
to tamil_...@googlegroups.com
"அருக சமயம் (செயின/சமண) வடக்கிருந்து வந்த சமயம். வட்டிக் கடன் வழியாகவும், நகை வணிகம் வழியாகவும், பிற வணிகங்கள் வழியாகவும், தமிழரசர்களையும் கிழார்களையும் கூட
தம் கொடும்பிடிக்குள் மடக்கிப் போட்டுக்கொண்ட வடக்கத்தியப் பெருவணிகருடன் சேர்ந்து 
வந்ததே அந்த அருக சமயத்தின் வலிமையாகும்.  புத்தமும் கூடச் சமயப்பரப்பல் வழியாய்
வடக்கத்திய வணிக வகுப்பையே நம்பி வந்தது. புத்தமும் அருகமும் தமிழகத்தின் அடிமட்ட
மக்களின் சமயநெறிகளாக என்றுமே இருந்ததில்லை. அரசர்களை வளைத்துப் போட்டுக் கொண்டு அரசவைகளில் முதலிடம் பெற முனைந்து நின்ற வணிக வகுப்பினது நலன்களை ஓம்பி வந்த மதங்களாகவே அவை இங்குக் கடைவிரித்தன. பொதுவாக, மேட்டுக்குடி மதங்களாகவே அவை இருந்தன."

அறிஞர் குணாவின் வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலில் இருந்து. பக்கம் 102 - *இரண்டாம் பதிப்பு*.

அன்புடன்
நாக.இளங்கோவன்



2012/5/10 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

சிவ அறிவொளியன்

unread,
May 11, 2012, 12:08:02 AM5/11/12
to tamil_...@googlegroups.com, pira...@googlegroups.com, அன்புடன், முத்தமிழ், Maravanpulavu K. Sachithananthan
//இந்த பாடல்களில் தெளிவாக பல இடங்களில் மிகுதியாகவே சாடி இருக்கிறார்கள். முதலில் தனது சமயம் உயர்வானது என்று அழுத்திபேசுதல்,பிறகு பிறமதங்களை தாழ்த்தி பேசுதல், அம்மதக்காரர்களை சாடிப்பேசுதல்,//

தமிழர்கள் கண்ட தமிழ்ச் சைவச் சமயமே அகச் சமயம்(உடலுக்கு உள்ளே  இறைவனைத்  தேடுவது ); உலகில் உள்ள மற்ற அனைத்துச் சமயங்களும் புறச் சமயங்களே!(உடலுக்கு வெளியே  இறைவனைத்  தேடுவது )

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’

என்பது திருமூலர் அருட்பாடல். உடலே கோயில் என்றார்.

"மெய் கண்ட சாத்திரம்" சுர, பர பக்கங்கள்  படித்ததுண்டா!? படித்தால் தமிழ்ச் சைவச் சமயம் எவ்வாறு மற்ற சமயங்களை விட உயர்ந்தது என்று புரியும்!!




// "கூடலால வாய்கோனை விடைகொண்டு வாடன் மேனி யமணரை வாட்டிட மாடக்கழிச் சம்பந்தன்".


அமணரை வெட்டி வதைத்துக்கொல்ல மதுரை ஆலவாய் இறைவனிடம் அனுமதியும் அருளும்
பெற்றுள்ள சம்பந்தன் நான் என்று கூறுகிறார்.//

கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு

வாடன் மேனி யமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.

நான்கு மாடங்கள் கூடும் திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி, உண்ணாநோன்புகளால் வாடிய உடலைஉடைய சமணர்களோடு வாது செய்து அவர்களைத் தோல்வியுறும்படி செய்ய இறைவரது இசைவும், அருளும் பெற்ற, மாடங்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கள் பாக்கியவான்களாவர்.


குறிப்புரை :
கூடல் ஆலவாய் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. நான்கு மாடங்கள் கூடுதலையுடைய ஆலவாய் எனினும் ஆம். விடை கொண்டு - வாதில் வென்றழிக்க உத்தரவு பெற்றுக் கொண்டு. வாடல் மேனி அமணர் - பட்டினி நோன்பிகள் ` உண்ணா நோன்பிதன்னொடும் சூளுற்று ` என்பது மணிமேகலை .


//பெரியோர்கள் களமிரங்கி பாக்களின் தெளிவு தேடி சம்பந்தனை காப்பாற்ற கம்பனை
எல்லாம் துணைக்கழைக்க//

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.- ஔவையார்

ஆக, திருக்குறளில் சொல்லப்பட்டக்  கருத்துக்களே மூவர் தமிழிலும் சொல்லப்பட்டுள்ளது!
வேதமும், சமஸ்கிருதமும், பௌத்தமும், சமணமும்  தமிழையும் தமிழர்கள் "சைவ சமயம்" என்று பெயர் இடாமல் வழிபட்டு வந்த சிவ வழிபாட்டையும் அழித்தபோது, அதனைக்   காத்தவர் திருஞானசம்பந்தர். இன்றும் அவரது பதிகங்கள் மூலம் எம் போன்ற பலர் வாழ்வை காப்பாற்றி வருபவர் திருஞானசம்பந்தர்!! அவரைக் காக்க கம்பனும் தேவையில்லை!!! நாயிற் கடையாய் கிடக்கும் அடியேனும் தேவை இல்லை!!!!
தமிழில் "இடம் சுட்டி பொருள் விளக்குக" கேள்விப்பட்டதுண்டா? தமிழில் இடத்தை வைத்துதான் பொருள் கொள்ள வேண்டுமே ஒழிய, வெறும் வார்த்தையை பொருள் கொள்ள முடியாது. அதனை விளக்கவே கம்பராமாயணம் உதவியது.

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இந்த இழையில்?

திருஞானசம்பந்தர் மூலம் சைவ சமயமே கற்பழித்தல், கொலை செய்தல் , கழுவேற்றுதல், கழுத்தறுத்தல் ஆகியனவற்றை போதிக்கிறது என்கின்றீர்களா? திருஞானசம்பந்தர் பாடல்களுக்குத் தவறாக தாங்கள் கொண்ட பொருள் வாதத்திற்கு சரி என்று கொண்டு,  நித்தியின் நியமனம் நியாயம் என்கின்றீர்களா?


சிவ அன்புடன்
சிவ அறிவொளியன்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

தனித்திரு, விழித்திரு, பசித்திரு

--

பன்னிரண்டாம் திருமுறை.
 
திருச்சிற்றம்பலம் 
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் 
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் 
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்         1776
 
திருச்சிற்றம்பலம்
 


சிவ அறிவொளியன்

unread,
May 11, 2012, 12:53:30 AM5/11/12
to tamil_...@googlegroups.com
//சமணம் என்பதே சைவத் தேடுதலின் உச்சம்தான்.

மேலும் சமணம் சைவத்திலிருந்தே பிரிந்துள்ளது எனப்படுகிறது.//

நிச்சயமாக சைவத் தேடுதலின் உச்சம் சமணம் இல்லை!
பிறவாமையே சைவத் தேடுதலின் உச்சம்!!
வள்ளலார் காட்டிய சன்மார்க்கம் சைவத் தேடுதலின் உச்சம்!!!


Nakinam Sivam

unread,
May 11, 2012, 6:42:33 AM5/11/12
to tamil_ulagam
அன்பு சகோதரரே,

நீங்கள் சொன்னதில் சன்மார்க்கம் எப்படி சைவத்தின் உச்சமோ
அதே போல சமணமும் சைவத்தின் கூறுகளை உள்ளடக்கியதே.

பிற உயிர்களிடத்து அன்பு செய்தல் என்பதும்
பிற உயிர்களிடத்து தீங்கு செய்யாதிருத்தல் என்பதும்
பிற உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தல் என்பதும்
இறை நிலையை அடைய வழி என சைவத்தின் நிலைப்பாடு.

அதே கொள்கையை கொண்டதுதான் சமணமும்.
அதில் இறை கொள்கை வேறுபடலாம்.
ஆனால் உலகில் முதலில் சீவகாருண்யம் போதித்தது சமணமே.

அதே போல சைவத்தில் நிர்வாண தீக்கை என்பது உண்டு.
அதுவே சமணத்தில் நிர்வாணம் ஆனது. பிற்காலத்தில்
அது சடங்காக மாற்றப்பட்டு நிர்வாண நிலை அம்மண நிலையாகி விட்டது.
அதுவே அம்மணம் எனும் சொல் மறுவி அமணர்கள் என்றும்
சமணர்கள் என்றும் உரு பெற்று விட்டது.

ஆக சமணத்தின் வேர் நிச்சயமாக சைவத்திலிருந்தே சென்றிருக்க வாய்ப்புள்ளது.
இறை கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் தேடுதலில் இரண்டும் ஒரே வழியையே
கொண்டுள்ளது ஆய்வு செய்தால் புலப்படும்.

சைவத்தில் உள்ள புராணங்களை விடுத்து சைவத்தின் உண்மை நிலையை நோக்கினால்
உலகின் அனைத்து சமயங்களிலும், மதங்களிலும் சைவத்தின் தாக்கம் ஏதாவது ஒரு
விதத்தில் இருக்கவே செய்யும் என்பதை உணரலாம்.

மேலும் சைவம் தமிழரின் தாய் சமயமாக இருப்பினும் அது வடபுலத்திலும்
பரவியிருந்தது.
அதன் தாக்கமே சமண, பௌத்த சமயங்கள் என்பது பொய்யுரையாகாது.

எப்போதுமே ஒரு சமயம் காலத்தை கடந்து நிற்க வேண்டுமானால் அது
பொதுமக்களுக்கு சுலபமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது வாழ
முடியும். ஆகவேதான் சாதாரணனும் கைகொள்ளக்கூடிய சடங்குகள் உண்மை
கருத்துக்களை மறைபொருளாக கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாராவது தேடுதல்
உள்ளவர் இதை அக ஆய்வு செய்தால் அவருக்கு புலப்படும் வகையில் ஒவ்வொரு
சமயத்திலும் சடங்குகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.

எவ்வளவு உயர்ந்த கருத்துக்களை கொண்டிருந்தாலும், வெறும் கருத்துக்களை
மட்டும் கொண்ட மதங்களோ, சமயங்களோ காலத்தின் ஓட்டத்திற்கு தாக்கு பிடிக்க
முடியாமல் அழிந்து படுகின்றன.

நிர்வாண நிலை காலத்தின் மாறுபாட்டால் சடங்காக மாறி அம்மணமாக மாறியது,
அப்படியும் அது கால ஓட்டத்தில் நிற்க வேண்டி அய்யா நாக இளங்கோவன் கூறியது
போல வணிகர்கள் தங்களுக்க தகுந்தாற்போல் சடங்குகளை புகுத்தி உயிரிறக்கம்
என்பதையும் சடங்காக மாற்றி விட்டார்கள்.
அந்த சமயம் எந்த உயர் காரணத்திற்காக தோன்றியதோ அது மறைந்து சடங்குகள்தான்
நிலை நிற்கின்றன. சைவ சமயத்திலும் இதே நிலைதான் உள்ளது.

சைவ சித்தாந்தத்தை எந்த சிவ ஆலயத்தில் போதிக்கிறார்கள்.

சரி சிவ ஆலயத்தில் இலிங்கம் வைத்திருக்கின்றார்களே,
அதன் உண்மை நிலை தெரியுமா ?

இலி + அங்கம் என்பதே இலிங்கம் என்றாயிற்று
இலி என்பதற்கு இல்லை என்பது பொருளாகும்
அங்கம் என்பதற்கு உருவம் என்பது பொருளாகும்
இலிங்கம் என்பதற்கு உருமற்றது எனபதே உண்மை பொருள்
எத்தனை பேருக்கு இதன் உண்மை புலப்படும்.

எனக்கு தெரிந்து படித்தவர்களே நிறையபேர் ஆண் குறியைதான் இலிங்கமாக
ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள் என்று புரியாமல் கூறுவதை
கேட்டிருக்கிறேன்.

சரி ஆலயம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா ?

ஆ என்றால் பசு எனும் உயிர்
அது இலயமாகக் கூடிய அதாவது அதன் மயக்கம் தீர்ந்து ஒடுக்கம் பெறுவதை
குறிப்பதற்கே ஆலயம் என பெயர் வைத்தார்கள் நம் சித்தர் பெருமக்கள்.

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்

சிவ அறிவொளியன்

unread,
May 11, 2012, 10:20:40 AM5/11/12
to tamil_...@googlegroups.com


//நீங்கள் சொன்னதில் சன்மார்க்கம் எப்படி சைவத்தின் உச்சமோ

அதே போல சமணமும் சைவத்தின் கூறுகளை உள்ளடக்கியதே.

பிற உயிர்களிடத்து அன்பு செய்தல் என்பதும்
பிற உயிர்களிடத்து தீங்கு செய்யாதிருத்தல் என்பதும்
பிற உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தல் என்பதும்
இறை நிலையை அடைய வழி என சைவத்தின் நிலைப்பாடு.

அதே கொள்கையை கொண்டதுதான் சமணமும்.
அதில் இறை கொள்கை வேறுபடலாம்.

ஆனால் உலகில் முதலில் சீவகாருண்யம் போதித்தது சமணமே.//


நிச்சயமாக சீவகாருண்யம் போதித்தது சமணம் இல்லை!?

என்உயி ரதற்குப் போல எவர்க்கும்ஒத் திருப்பன் என்று
தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல்
மன்உயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும்
அன்னதோர் வாய்மை ஆசீவகன்அம ணர்களிற் கூறும்.  - (சிவஞான சித்தியார்- பரபக்கம் - ஆசீவகன் மதம்)

தன்னுயிரை வருத்தச் சொல்லும் சமணம் எவ்வாறு சீவகாருண்யம் போதித்தது? தங்களால் விளக்க முடியுமா ஐயா?
பிற உயிர்களுக்கு சீவகாருண்யம் போதித்த சமணம் ஏன் தன்னுயிரை வருத்தச் சொன்னது?

ஆகவே  சீவகாருண்யம் போதித்தது சமணம் இல்லவே இல்லை!!

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை!
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
(ஆறுமுக சிவமே சுப்ரமணியன், கந்தன், கடம்பன், வேலன், முருகன், சரவணன்  எல்லாம்)
சித்தியாருக்கு மேல் நூல் இல்லை.

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம் 
தெய்வத்தின்மேல் தெய்வம்இல்லெனும் நான்மறைச்செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் 
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம்உயிர்த்துணையே

நிச்சயமாக சீவகாருண்யம் போதித்தது தமிழ்ச் சைவம் மட்டுமே!

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை


(அண்ணியிடம் சொல்லி தங்களை கண்காணிக்க வேண்டும் சமணப் பெண் யாரேனும் பக்கத்துக்கு வீ ட்டில் புதிதாக குடி வந்துள்ளார்களா என்று!)

சிவ அன்புடன்

சிவ அறிவொளியன்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி


தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


தனித்திரு, விழித்திரு, பசித்திரு

--

Saravana Rajendran

unread,
May 12, 2012, 5:45:45 AM5/12/12
to tamil_...@googlegroups.com, Dorai Raj, thanthaiperiyar, S.Prince ennares Periyar, மகிழ்நன், Albert Fernando, ilangkumaar, benjami...@gmail.com, Mohideen Jameel, jama...@gmail.com, jama...@yahoo.com, jamalm...@gmail.com

பழந்தமிழர் நாகரீகத்தை முழுக்க முழுக்க சைவமே என்று கூற்றை ஏற்றுக்கொள்ளாததற்கு மற்றோரு காரணம், ஒரு மரம் முளைக்க விதையில் இருந்து கொழுந்து, இலை, செடி, தண்டு, கிளை, மரம் என வந்த பிறகு தான் பழம் கொடுக்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டிற்குள் சமண பௌத்தம் தழைத்தது எப்படி ஆதி சைவம் என்று சொல்லும் சிவ வழிபாடு தீடீரென்று சிறுபான்மையானது எப்படி என்று புரியாத புதிராக இருக்கிறது. 

                         

கொஞ்சம் இஸ்லாத்திற்கு செல்வோம் நாம் பாடப்புத்தகத்தில் படித்தது முகமது நபிகள் கொண்டு வந்த மார்க்கம் இசுலாம் என்று ஆனால் உன்மை அதுவல்ல அவருக்கு முன்பு பல நபிகள் இருந்திருக்கிறார்கள்,

          

அது போல் தான் சமணமும், பௌத்தமும் இருக்கலாம். மஹாவீர தீர்த்தங்கள் இறுதி பிறப்பு என்று சொல்லுவார்கள், இது குறித்து சாரனாத்தில் உள்ள தீர்த்தங்கர ஆலயத்தில் எழுதப்பட்டுள்ளது. அதே போல் தாய்லாந்து பர்மா ,சிலோன் நாடுகள் கவுதம புத்தர் 8 பிறப்பு என்றும், சிலர் 13 பிறப்பு என்று இனி வரும் பிறப்பு தான் மைத்திரேயா என்றும் கூறுவர்.

      

 இங்கு தான் எனது கேள்வி 10-ம் நூற்றாண்டுகளில் நுழைந்த இசுலாம், 16-ம் நூற்றாண்டில் நுழைந்த கிருத்துவம் போன்றவை நீண்டகாலமாக ஏற்படுத்தாத பாதிப்பை 100-ஆண்டுகளுக்குள் எப்படி சமணமும் பௌத்தமும் தமிழர் கலாச்சாரத்தில் எழுச்சி பெற்று இருக்க முடியும், திருக்குறள் போன்ற பொதுமறை இதர காப்பியங்கள் இவை யாவும் சில நூற்றாண்டில் வடக்கில் இருந்து தோன்றிய மதங்களால் உருவானவையாக இருக்காது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம்(புத்தநகரம்) மற்றும் குமரியில் உள்ள புத்தநேந்தல்(புத்தன் ஏந்தல்) புத்தவழிபாடு இரண்டு ஊர்களின் வரலாற்றை படிக்கும் போது இந்த ஊர்களின்  பெயர்களும் கிமு 5-ம் நூற்றாண்டு அல்லது 4-ம் நூற்றாண்டில் தோன்றியதாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

அதாவது புத்த மதம் தமிழகத்தில் வந்த உடனே இந்த பெயர்கள் வந்து விட்டன. ஆச்சர்யமான ஒரு தகவல்.

 

 முத்துக்குழித்துறையில்(தூத்துக்குடி) உள்ள நாரைக்கிணறு என்னும் ஊர் உள்ளது கூந்தன்குளத்திற்கு செல்லும் பறவைகளில் நாரைவகைகள் இந்த ஊரில் இருக்கும் நாவல் தோப்பில் தங்கி கூடுகட்டி வாழும் மேலும் அந்த ஊரைசுற்றியும் பல கிராமங்களில் குளத்துப்பாசனம் ஆகையால் கோடையில் நாரைகள் அதிகம் இங்கு வரும் இந்த நாவல் தோப்பில் நன்னீர் கிணறு ஒன்று உண்டு, கிணற்றுக்கும் நாரைக்கும் தொடர்பு இல்லை, இருப்பினும் ஊரில் அடையாளத்திற்காக நாரைதோப்பு கிணறு என்று அழைப்பார்கள், பல நூற்றாண்டிற்கு பிறகு இந்த பெயர் நாரைக்கிணறு என்று நிலைத்தது(சவேரியார் நாரைக்கிணற்றை நார் என்று குறிப்பிட்டுள்ளார்-16-ன் நூற்றாண்டு) இப்படி ஒரு பெயர் நிலைக்க பல நூற்றாண்டுகள் ஆகிறது. அப்படி இருக்க புத்தமதம் வந்த சில ஆண்டுகளுக்குள் புத்தநகரம் புத்தநேந்தல் போன்ற பெயர் எப்படி வந்தது இருக்க முடியும்,

 

 புத்தரும் மஹாவீரரும் அந்த அந்த சமயத்தை உருவாக்கியவர் என்றாலும் அவருக்கு முன்பு வந்தவர்களில் சிலர் இதே பாணியில் அன்பு மற்றும் அகிம்சையை போதித்து உள்ளனர். இது குறித்து கம்பரும் கூறியிருக்கிறார். ரிடபதேவர் என்பவர் மகன் வழி வந்தது சமணம் என்றும் ஒரு பதிப்பில் படித்திருக்கிறேன்.

 

           இங்கு மும்பை சமூக ஆர்வலர் திரு துரைராஜ் அவர்களின் ஒருவர் கூறிய கருத்தை தருகிறேன் . இதுவும் அவரது கற்பனையே இது இப்படி ஏன் இருக்ககூடாது என்று என்னிடம் சொல்லியது(அக்காலத்தில் பல நூறு ஆண்டுகள் வாழும் திறமை உண்டு அனைவரும் அறிந்ததுதான், அதன் படி ஆதாம் ஏவாள் ஆப்ரிக்க கண்டத்தில் தங்களது சந்ததிகளை பெருக்கிய உடன், இடம்பெயர்ந்து இந்தியா வந்து இமயமலையில் தங்கினர், இங்கு இருந்து பல சந்திகளை உண்டாக்கிய பிறகு இருவரில் பிணக்கு ஏற்பட்டு சிவன் இமயத்திலேயே தங்கிவிட்டார்,

 

சக்தி தெற்கு நோக்கி தனது புதல்வர்களுடன் வந்து விட்டார். இன்றும் குமரி என்ற தென்முனை குமரி(குமரி என்பது பெண் பதம்) இமயமலையில் இருந்தவர் தனித்து இருக்கையில் வாழ்க்கையின் சுக துக்கங்கள் குறித்து சிந்தனையில் இருந்தவர், ஒவ்வோரு உயிரனத்திலும் புகுந்து அவைகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சுக துக்கங்களை கண்டறிந்து  புத்தராக பிறந்தார் மஹாவீராக பிறந்தார், கான்பூசியசாகவும், ஏசுவடிகளாவும்  நபிகள் நாயகமாகவும் பிறந்தார் என்பார் இதற்கு அவர் உதாரணம் தரும் போது ஆப்பூஸ்(மல்கோவா) மாம்பழத்தை உதாரணமாக தருவார், சுவையான மாம்பழத்தின் விதையில் இருந்து முளைக்கும் மாமரத்தின் அனைத்து பழங்களுமே சுவையாகத்தான் இருக்கும் என்பார்.

   சைவமும் வைனவமும் சமண பவுத்த வழிபாட்டு முறைகள் பலவற்றை தன்னுள் எடுத்துக்கொண்டது,  நந்தி போன்றவை சமணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அதே போல் ஆமை அவதாரம் பௌத்ததில் இருந்து எடுக்கப்பட்டது, ஆமைபற்றி பவுத்தம் ஒழுக்கம் குறித்த பதத்திலும் மழை பற்றிய இயற்கை காலக்கனிப்பானாகவும் பார்த்தது, (பார்க்க Battle of Red Cliffs (208-209 AD)

 மேலும் சம்பந்தர், அப்பர் சுந்தரர் போன்றோர் வாழ்வில் நடந்தாத கூறப்படுபவைகள் கதைக்கு வேண்டுமென்றால் வா வா என்று கூறலாமே ஒழிய நிசத்தில் தள்ளி நிற்கவேண்டி இருக்கிறது, ஏனெனில் 8-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் கடுமையான பஞ்சம் வந்த ஒரு பதிவு இருக்கிறதும் அது எந்த பகுதி என்று தெரியவில்லை. ஒரு சுந்தரருக்கு சம்பந்தருக்கு அப்பருக்கு பிலிம் காட்டிய சிவபெருமான் பெரும்பகுதி மக்கள் பஞ்சத்தால் அல்லரும் போது என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பும் போது நீ பெரியாரிஸ்டு என்று சப்பை காரணம் கூறி எஸ்கேப் ஆனவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

 மேலோட்டமாக  பழந்தமிழர் நாகரீகத்தை வேறும் சைவம் என்று கூறி சைவர்கள் வேண்டுமென்றால் உற்சாகப்படலாம், ஆனால் அதையும் மீறி ஒன்று அல்ல பல இருக்கிறது, மேலும் சிவவழிபாடு எங்களுடையது என்று டில்லியில் உள்ள லாலாக்களிடமும் வரனாசியில் உள்ள பண்டித்துகளிடமும் சொன்னால் கங்கையில் வாயை கழுவு, என்கிறார்கள், தமிழ் சிவன் அவ்வளவு சூத்திரனா அப்படி என்றால் அவர்கள் கொண்டாடும் சிவன் யார்?

             



2012/5/11 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
Reply all
Reply to author
Forward
0 new messages