(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): தொடர்ச்சி)
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010)
11.ஆந்திரா, பீகார், தில்லி (2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் இயங்க மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும் மொழியான சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்; தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கானல்நீராகப் போய்விட்டதே என்று கவலைப்படுவதைவிட நமக்கு வேறு வழியில்லை.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி)
வெருளி நோய் 504-508
எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.
கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம் எரிமீன் என்ற எளிய சொல்லையே பயன்படுத்தலாம்.
meteoro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் விண் பொருள் என்பதே. பின்னர் விண்ணிலிருந்து பூமியைத் தாக்கும் விண்கற்களைக் குறித்தது. எனவே இப்போதைய பொருள் விண்வீழ் கொள்ளி எனப்படும் எரிமீன் ஆகும்
00
எரிவளி மானி(Gasgauge) குறித்த வரம்பற்ற பேரச்சம் எரிவளி மானி வெருளி.
ஊர்தி ஓட்டிக்கொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்து விடுமோ என்ற பேரச்சம் எழுவதை இது குறிக்கிறது.
எரிவளி நிலைய வெருளியுடன்(aerostatiophobia) தொடர்புடையது.
00
எரிவாயு குழாய் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எரிவாயு குழாய் வெருளி.
காற்று எங்கும் பரந்து விரிந்து வாய்த்திருத்தலால் வாய்வு எனப்பட்டது. இதுவே சமக்கிருதத்தில் எங்கும் பரந்து இருப்பதைக் குறிக்க வியாபி என்றானது. வாய்வு, பின்னர் வாயு என்றும் அழைக்கப்பெற்றது. தமிழ் வாயு-வையும் சமக்கிருத வழிச்சொல்லாகத் தவறாகக் கருதுகிறோம்.
00
00
எலி அல்லது எலி வகைகள் குறித்த அச்சமே எலி வெருளி.
எலியினால் வரும் தொல்லைகள் குறித்தும் எலிக்காய்ச்சல் குறித்தும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எலி இல்லாவிட்டாலும்கூட எலிவந்து தொல்லை தரும் என அஞ்சுவோரும் உள்ளனர். சுண்டெலி வெருளி என்றும் சொல்லலாம்.
Muso என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சுண்டெலி.
souris என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் எலி.
எலி என்னும் பொருள் கொண்ட mur- என்னும் இலத்தீன் சொல்லை வேராகக் கொண்ட murine என்னும் சொல் எலி சார்ந்த அல்லது எலிக் குடும்பம் என்னும் பொருளில் கையாளப்படுகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 2/5
(வெருளி நோய்கள் 504-508 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 509-513
எலுமிச்சை(lemon) குறித்த அளவுகடந்த பேரச்சம் எலுமிச்சை வெருளி.
எலுமிச்சை எளியோரும் பயன்படுத்தக் கூடிய எல்லாக் காலத்திலும் கிடைக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த ஒன்றாகும். எனினும் எலுமிச்சைச்சாறு பற்சிப்பியைப்(tooth enamel) பாதிக்கும், பற் சிதைவு அடையும், நெஞ்சு எரிச்சல் வரும், வயிற்றுப் புண்ணை உண்டாக்கும், வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் என்றெல்லாம் பக்க விளைவுகளை எண்ணி, அளவோடு பயன்படுத்தும் எண்ணம் கொள்ளாமல் அஞ்சுவோர் உள்ளனர்.
00
எலுமிச்சைப் பானம்(lemonade)மீதான மிகையான பேரச்சம் எலுமிச்சைப் பான வெருளி.
எலுமிச்சை வெருளி உள்ளவர்களுக்கு எலுமிச்சம் பழப்பானம் குறித்தும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சங்கள் வருவது இயற்கையே. எலுமிச்சை வெருளிக்குக் கூறியவையே இதற்கும் பொருந்தும்.
00
பொம்மலாட்டப் புனைவுருவான எலுமோ (Elmo) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எலுமோ வெருளி.
எள் தெரு(Sesame Street) என்னும் புனைவுரு பாத்திரத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு பாத்திரம் என்மோ/எலுமோ(Elmo).இப்பாத்திரம் குறித்த பகுத்தறிவற்ற பேரச்சமே எலுமோ வெருளி. எலுமோ குறித்த கொடுங்கனவும் என்மோ வெருளிக்குக் காரணமாகும்.
00
எலும்புக் கூடுகள்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எலும்புக் கூடுகள் வெருளி.
பேய்க்கதைகளில் அல்லது பேய்ப்படங்களில் பேயாக எலும்புக்கூட்டு உருவத்தைக் காட்டுவது வழக்கமாக உள்ளது. இதனால், எலும்புக்கூட்டைப் பார்ப்பவர்களுக்குப் பேயைப் பார்த்ததாக் கருதித் தேவையற்ற அச்சம் வருகிறது. எலும்புக் கூட்டின்மூலம் எதிரிகள் அல்லது வேண்டாதவர்கள் செய்வினை செய்திருப்பார்கள் என்ற அச்சமும் கொள்கின்றனர்.
00
நாட்டுப்புறக் கதை உருவமான உயிர்த்தெழு நாள் முயல் (Easter Bunny/ Easter Rabbit/Easter Hare) பற்றிய பேரச்சம் எழு நாள் முயல் வெருளி.
முயல் வெருளி(leporiphobia) உள்ளவர்களுக்கு எழுநாள் முல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. ((lepus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முயல்.)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5