(வெருளி நோய்கள் 236 – 240 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 241 – 245
அன்னையர் நாள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அன்னையர் நாள் வெருளி.
தாய்மார்களைப் போற்றவும் சிறப்பிக்கவும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாளில் அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது.
00
தரநிலையில் ‘ஆ’ (B) பெறுவது குறித்த பேரச்சம் Beephobia
காண்க: தேனீ வெருளி – Beephobia (1)
00
ஆகத்து (August) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் ஆகத்து வெருளி.
ba என்னும் சீனச் சொல்லிற்கு எட்டு எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, qiyue எட்டாம் மாதமாகிய ஆகத்து மாதத்தைக் குறிக்கிறது.
00
ஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.
இங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி ஏற்பட்டது. பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது.
Anglo என்பது இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு. இங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது. தமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.
00
ஆசியா(Asia) தொடர்பான அனைத்திலும் அல்லது சிலவற்றில் காரணமற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொள்வதே ஆசிய வெருளி.
செருமானியரை மட்டுமே உயர்த்திய அடால்ஃபு இட்லரால் (Adolf Hitler) ஏற்படடதே ஆசிய வெருளி என்பர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 18 October 2015 அகரமுதல
அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே
அன்புரு வாம் தேவ தேவே!
“அன்பு என்னும் கைப்பிடிக்குள் அடங்கும் பெருமலையே! பெருமனையில் தங்கியிருந்தாலும் அன்பெனும் சிறு குடிலுக்குள் புகும் அரசே! அன்பாகிய வலைக்குள் அகப்படும் பெரும் பரம்பொருளே! அன்பெனும் கைக்குள் அடங்கும் அமுதே! அன்பாகிய சிறு குடத்திற்குள் அடங்கும் பெருங்கடலே! அன்பெனும் உயிரில் ஒளிரும் அறிவே! அன்பெனும் அணுவில் அமைந்த பேரொளியே! அன்பின் உருவமாகத் திகழும் தேவர்க்குத் தேவனே! ”
என வள்ளலார் இராமலிங்க அடிகள் அன்பிற்கு ஆட்படுபவன் இறைவன் என்கின்றார். அன்பே கடவுள் என வள்ளலார் வலியுறுத்துவது எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் பொருந்துவதுதானே!
கைப்பிடி, குடில், வலை, கரம், கடம், உயிர், அணு, ஆகியனவாக அன்பு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மலை, அரசு, பரம்பொருள், அமுது, கடல், அறிவு, ஒளி ஆகியனவாக இறைவன் உருவகிக்கப்படுகிறான். அன்பு சிறிய உருவங்களாக உருவகிக்கப்பட்டு, இறைவன் பேருருக்களாக உருவகிக்கப்பட்டுள்ளமையால் அன்பு சிறிய அளவாக இருந்தாலும் வலிமை வாய்ந்தது என்பதை வள்ளலார் உணர்த்துகிறார்.
கை, வினைகள் ஆற்றுவதற்குரிய கருவியாகப் பயன்படுகிறது. இதனடிப்படையில் ‘கர்’ என்னும் மூலச் சொல் கொண்டு பிறந்த கரம் என்பது தமிழ்ச்சொல்லே! ஆரியச் சொல்லன்று!
– இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015)