தவறின்றித் தமிழ் எழுதுவோமே! பகுதி -9 இ : 'கள் ' போடலாமா? - வாழ்த்துகளா? வாழ்த்துக்களா ?

928 views
Skip to first unread message

Benjamin LE BEAU

unread,
Oct 28, 2011, 5:35:01 AM10/28/11
to tamil_...@googlegroups.com

தவறின்றித் தமிழ் எழுதுவோமே! 

பகுதி -9 இ   : 'கள் ' போடலாமா? - வாழ்த்துகளா? வாழ்த்துக்களா  ?
பேரா.பெஞ்சமின் லெபோ 

ஓங்கி ஒளிர வேண்டிய தீப ஒளித் திருநாள் மழையும் காற்றுமாய் வந்து போனது.
வாங்கிய வெடிகளை வெடிக்க இயலாமையால் சிறுவர் மனம வெந்து போனது.
ஆனாலும் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் நல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் 
உள்ளம் மகிழ்ந்து  சிந்து பாடியது. சிலர் வாழ்த்தில் 'வாத்தும்' வந்து சேர்ந்தது வேறு கதை
.
சென்ற பகுதியில், 
'நெடுங் காலமாகவே தொடர்ந்து வரும் சிக்கல் இரண்டு  உண்டு :
'கள்' -உம் போட்டு அதற்கு முன் ஒற்றும் போடலாமா என்னும் கேள்விதான் அது!
பாட்டுகள்? பாட்டுக்கள்?  வாழ்த்துகள்? வாழ்த்துக்கள்? தோப்புகள்? தோப்புக்கள்?' 
கூடவே கொசுறாக நாள்கள்? நாட்கள்? ஆள்கள்? ஆட்கள்?
கட்டுரையை 
முடித்துப் போடவில்லை என்றாலும் தொடர்வதற்கு
முடிச்சு போட்டாச்சு....' என எழுதி  இருந்தேன்.

இதோ அதன் தொடர்ச்சி!
வழக்கம் போல் நம் இணையதள பூதத்தைத் தட்டி எழுப்பிக் கேட்டேன்:
அது சொன்னது, 'எழுத்துகள் என எழுதுவோர் 110 000 பேர் ; ஆனால், 'க்'
(நல்லா  கவனிங்கோ, kick இல்ல) போட்டுக் 'கள்' சேர்ப்போர் ஐந்து மடங்கு அதிகம் -
அதாவது 534 000 பேர்!
ஆக,
தெரிந்தோ தெரியாமலோ, அதுவே  சரி என்று நினைத்தோ,  'க்' -ஓடு 'கள்' சேர்த்துப் புழங்குவோரே
அதிகம் பேர். இந்த 'ஒற்று' போட்டுக் 'கள்' சேர்க்கும் இவர்கள் மயக்கத்தைத் தீர்ப்போமே.

காட்டாக, 'வாழ்த்துக்கள்' என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம்.
இப்படி எழுதும்  சிலர் அதற்குத் துணையாக இலக்கணத்தை இழுத்து வருவது(ம்) உண்டு :
'எந்த ஒரு குற்றியலுகரத்துக்குப் பின்னும் ஒற்று மிக வேண்டும்'
(இலக்கணப் படிக் கூற வேண்டும் என்றால் நெடில் தொடர், ஆய்தத் தொடர், வன்தொடர், மென்தொடர்க்  குற்றியலுகரத்துக்குப் பின் ஒற்று மிகவேண்டும். நன்னூல் எழுத்ததிகாரம் குற்றுகர ஈற்றுச் சிறப்பு விதிகளைக் காண்க ;
குற்றியலுகரம் போலவே முற்றியலுகரம் ஒன்று உண்டு. இவை பற்றிப் பிறகு,  வாய்ப்புக்   கிடைத்தால் பேசலாம்.
இவை பற்றிச் சுவையான கதை வேண்டுமா? . உண்மையா  பொய்யா  எனத் தெரியாது :  
வேலை தேடிச் செல்லும் ஒருவரிடம் நேர்காணலில் கேள்வி கேட்க அதற்கு அவர் 'எனக்குத்  தெரியாது' என்று பதில் சொன்னால் என்ன நேரும்? ஆனால் அப்படிச் சொன்ன ஒருவரைப் பாராட்டிப் பணியிலும் சேர்த்துக்கொண்ட கதை இது. முந்திய  நூற்றாண்டில், சென்னைத் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் 
வீ .கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (என்னும் பரிதிமாற்  கலைஞர்). 
ஆசிரியர் வேலை தேடி வந்த இளைஞரிடம் அவர் கேட்ட கேள்வி :
 ''குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்துக்கும் எடுத்துக் காட்டு தருக''! 
வந்த இளைஞரிடமிருந்து பட்டெனப் பதில் வந்தது : ''எனக்குத் தெரியாது!''.

''அப்பா, நீயல்லோ தமிழறிஞன்!" என்று பாராட்டிய சாஸ்திரியார், இளைஞரை  உடனே பணியில் அமர்த்தி விட்டார். 
அந்த இளைஞர்? வேறு எவரும் இல்லை - வேதாச்சலம்தான். பின்னாளில் 'மறைமலை அடிகள்' எனப் பெயர் மாற்றிக்கொண்டவர். புதிருக்கு விடை : அவர் சொன்ன பதிலிலேயே உள்ளது :
'எனக்கு' எனபதில் உள்ள 'கு'-வில் இருக்கும் 'உ'கரம்  குற்றியலுகரம் ; 'தெரியாது' (என்னும் சொல்லில் உள்ள 'து' -வில் இருக்கும் 'உ'கரம் முற்றியலுகரம். 

கூடவே இன்னொரு பொடிச் செய்தி : இந்தக் குற்றியலுகரத்தின்   பலுக்கல் (ஒலிப்பு) மிக மிக  இனிமையானது.
இதன் இனிமை தவறாமல் பாடியவர் அமரர் சீர்காழி கோவிந்தராசன் அவர்கள். 
குறிப்பாகக் 'குமுதம்' என்ற திரை படத்தில் 'என்னை விட்டு ஓடிப் போக முடியுமா' என்னும் பாடல் வரும். 
சீர்காழி அவர்களும் சுசீலா அம்மாவும் மிக அழகாக, இனிமையாகப் பாடி இருப்பார்கள். அதில் ஒரு வரி :
'அன்னம் போல நடை நடந்து வந்து - என்
அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து ' .

இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், லிப்பில் குற்றியலுகரத்தின் அழகெல்லாம் பொங்கி வழியும்.
இப்பாட்டைத் தேடிக் கேளுங்கள் ; நான் சொல்வது புரியும். 
(இந்தக் காலத்திலும் பாடுகிறார்களே ழகர, ளகர, லகர ; 
ணகர, னகர, நகர ; ரகர, றகர வேறுபாடுகளே இல்லாமல் ...!).

சரி நம்ம 'தலைவலிக்கு'ப் போவோம். இந்த இலக்கண விதியைக் கைப்பிடித்து  அழைத்துவந்து காட்டி
'வாழ்த்து' என்னும் சொல்லில் உள்ள ஈற்று 'உகரம்' குற்றியலுகரம். எனவே அதற்குப் பின் ஒற்று மிக வேண்டும்.
ஆகவே 'வாழ்த்துக்கள்' என்பதே சரி என்பார் பலர். 
விவரம் தெரிந்தவர்களே சொல்லும்போது, 
அதற்குமேல்  விளக்கம் (அதற்கு   மேல்  விளக்கம்) எதற்கு  என நம்மில் பலரும் தலை ஆட்டி ஏற்றுக்கொண்டோம், இல்லையா? அவர்கள் கொண்டு வந்து நிறுத்தும் விதி மேல் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், 
அந்த விதி எந்த இடத்தில் செல்லும் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இங்கே கம்பனின் காவியத்தில் இருந்து ஒரு காட்சி : மறு நாள் முடி சூட இருக்கும் இராமனுக்கு, முன் நாள் இரவு மணிமகுடம் மறுக்கப்படுகிறது ; அன்றலர்ந்த  தாமரையாக அவன் முகம் மலர்ந்து இருந்தாலும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறான் இளவல் இலக்குவன். அவனை அமைதிப்படுத்தும் இராமன், 
"நதியின் பிழையன்று நறும்புனலின்மை...
................   .................   ....................   ..................   ...............
விதியின் பிழை நீஇதற் கென்னை வெகுண்ட" தென்றான்.
அண்ணனே சொன்னாலும் ஆறாத சினத்தோடும் மாறாத உளத்தோடும்
"விதிக்கும் விதியாகும் என் வில்தொழில் காண்டி' எனச் சீறுகிறான் சினமென்னும் குன்றேறி நின்ற இலக்குவன்.
அவனைப் போல,   இவர்கள் கொண்டு வந்து காட்டும் விதிக்கும் விதியாகும் விதி ஒன்று உள்ளது.
(ஏனோ தெரியவில்லை, இணையதளத்தில் எழுதிய  எவரும் இந்த விதியை எடுத்துக் காட்டவில்லை!)

புணர்ச்சி என்பதை  வரையறை செய்யும் நன்னூலார், 
மெய்யுயிர் முதலீறு ஆமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே. -  (நன்னூல் : 151).
என்கிறார்.

புணர்ச்சி என்பது எப்போது நிகழும், எங்குப் புணர்ச்சி விதிகள் செல்லும் என்பதைத்  தெள்ளத் தெளிவாகக் 
காட்டும் நூற்பா இது.

ஏற்கனவே என்  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, கட்டடம் கட்டுவோர் செங்கற்களை அடுக்கி இடையே இணைப்பியை (cement) அப்புவது போல, இரு சொற்களை இணைக்க அச் சொற்களுக்கு இடையில் எழுத்துகள் சில தோன்றலும் திரிதலும் கெடுதலும் புணர்ச்சி எனப் படும். இந்தப் புணர்ச்சி நிகழ இரண்டு சொற்கள் தேவை.
அதாவது இரண்டு சொற்கள் இருந்தால்தான்,  இந்தச் 
 சொற்களுக்கு இடையில்தான் புணர்ச்சி நிகழும். 
சொற்கள் என்றாலும் பதங்கள் என்றாலும் மொழிகள் என்றாலும் ஒரு பொருளனவே.. 
ஒரு சொல் நிலை மொழியாகவும்  அதனோடு சேர வரும் சொல் வருமொழியாகவும் விளங்கும். 
இவற்றை நிலை, வரு மொழிகள் என வினைத் தொகையாகச்  சொன்னார் நன்னூலார். 
இப்படி இரண்டு சொற்கள்   இருந்தால்தான், இணைகின்ற இடத்தில்தான் புணர்ச்சி விதிகள் செல்லுபடியாகும், காற்று இருந்தால்தான் ஒலி அதனூடே பயணம் செய்யமுடியும் என்பது போல.
அதனால்தான், 'புணர்ப்பே' என்று 
தேற்றேகாரம் போட்டு நன்னூல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். 
அப்படி இரண்டு சொற்கள் இல்லை என்றால் அது புணர்ச்சி ஆகாது ; புணர்ச்சி ஆகாது என்றால், 
அங்குப் புணர்ச்சி விதிகளுக்கு இடம் ஏது? 
இனி இந்த விளக்கத்தின் ஒளியில், 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைப் பிரித்து ஆய்ந்து பார்ப்போம்.

வாழ்த்துக்கள்>வாழ்த்து+க்+கள் 
இதில் வாழ்த்து - நிலை மொழி.
கள் - ? வரு மொழியா? இது சொல்லா? இல்லை!
முன்பே சொல்லி இருக்கிறேன் தமிழில் இரு வகைச்  சொற்களே உள்ளன :
அவை பெயர், வினைச் சொற்கள் என. இடை உரி என்பன பெயர்கள் என அழைக்கப் பட்டாலும் 
அவற்றுக்குத் தனிப் பொருள் இன்மையானும் அவை தனித்து இயங்காத்தன்மையானும் சொற்கள் 
எனக் கருதப்பட மாட்டா! 
அப்படி ஆயின், இந்தக் 'கள்'  எனபது? 

சென்ற பகுதியில்,
'கள்' -இன் முதல் பயன்பாடு ஒருமையைப் பன்மையாக மாற்றுவது.
இப்படி வரும் 
 'கள்' என்னும் சொல் (பன்மை)  விகுதி.
ஒருமைச் சொல்லோடு  'கள்'  விகுதி  சேர்ப்பதால்  பன்மைச் சொல் விளையும் 
(காடு - காடுகள் ; செடி-செடிகள் ) 
இந்தக் கருத்தை நன்றாக மனத்துள் கொள்க ; அடுத்த கட்டுரையில் இதனை நினைவு கூர்தல் வேண்டும்.
என்று குறிப்பிட்டு இருந்தேன். இப்போது அதனை நினைவு கூர்க.

எனவே இந்தக் 'கள்' தனிச்சொல் இல்லை, ஒருமையைப் பன்மையாக்கப் பயன்படும் 'விகுதி'.
'வாழ்த்து' என்ற நிலை மொழியோடு 'கள்' என்னும் விகுதி தான் சேருகிறதே ஒழிய சேரும் வருமொழி ஏதும் இல்லை.
ஆகவே புணர்ச்சி இலக்கணம்  இங்குச்  செல்லாக் காசாகிவிடுகிறது. இந்தச் செல்லாக் காசை வைத்துக்கொண்டு 
செல்லும் செல்லும் எனச் சொல்லுபவர்களை என்ன செய்வது! 

'வாழ்த்து' (நிலை மொழி  - ஒருமை) + 'கள்' (பன்மை விகுதி) > வாழ்த்துகள்.
'வாழ்த்துகள்' என எழுதுவதே சரி, முறை என்று காட்டிவிட்டேன். 
இனியேனும் 'க்' போட்டுக் கள்ளைச் சேர்ப்பதை விட்டோழிப்போமா / விட்டோழிப்போமே!

'வாழ்த்துகள்' என எழுதுவதே சரி, முறை என்று   சொன்ன முதல் ஆள் நான்தான் என்று மார்தட்ட விடாமல் பலர்
 -ஹரி கிருஷ்ணன்,  மறைமலை இலக்குவனார் , புலவர் இரா கிருட்டிணன்,  இலவசக் கொத்தனார் ...போன்றோர்-  
எனக்கு முன்பே இது பற்றி இணையதளத்தில் எழுதி விட்டனர். அவர்களுக்கு என் நன்றி. ஆனாலும், 
என் பாணியில் நான் இதனை எடுத்துக் கூறி இருக்கிறேன். 
'செவி உள்ளவன் கேட்க்கக் கடவான்' என்பது போல் செவி உள்ளவர்கள் இதனைக் கேட்ப்பர்களா? இல்லை
செவிடன் காதில் ஊதிய சங்காகுமா? யானறியேன் பராபரமே!

சரி இங்கு இன்னொரு கேள்வி எழக் கூடும்.
'கள்' என்பது விகுதியாகப் பயன் பட்டால் அதனைச் சேர்க்கும் போது ஒற்று மிகாது.
ஆனால், அதற்குக்  குடிக்கின்ற மது என்றொரு பொருளும் உண்டே.
அப்போது அது விகுதியாக் அல்லாமல் தனிச் சொல்லாகவே ஆகுமே! அப்படி ஆனால்? 

இதற்கு இதோ விளக்கம் :
'கள்' எனபது  குடிப் பொருளை உணர்த்தினால், இரு பதங்கள் வருவதால் அங்கே புணர்ச்சி விதிகள் செயல்படும் ; 
ஒற்று மிகும். காட்டு :
தோப்பு + கள் > தோப்புக் கள் என வரும் 
இங்கே இவை புணர்ந்தாலும் இரு சொற்களையும் இடைவெளி விட்டே எழுதுவது  முறை . 
பொருள் மயக்கம் வராமல் இருக்கும் 
(மாட்டு+க்+கொட்டகை=மாட்டுக் கொட்டகை எனபது போல). 
தோப்புக் கள் என்றால் தோப்பில் இருந்து இறக்கப்பட்ட கள் என்று  பொருள் வரும்.
இக்கருத்தை அந்தக் காலத்துத் தமிழ்ப் பெரியார்கள் மயிலை சீனி வேங்கடசாமி, மே.வீ. வேணுகோபாலப்  பிள்ளை, மயிலை சிவமுத்து ... போன்றோர் கூறியுள்ளனர். 

'கள்' -இன் பெருமை இத்துடன் முடிகிறது என்று கூற இயலாது. 
ஏனெனில், பன்மை விகுதியாகவே 'கள்' வந்தாலும் சில இடங்களில் ஒற்று மிகுந்தே வரும் ; வரவேண்டும் . 
சில இடங்களில் ஒற்று மிகாது ; சில சமயம் 'ங்' என்னும் மெய்யெழுத்தோடு கூடி வரும்.
இவற்றைக் கவனத்தில் கொள்க. 
 
1 நிலை  மொழியின்  ஈற்றெழுத்து நெடிலாக வந்தால் அங்கே ஒற்று மிகுந்து வரும் : 
பூ+கள்>பூக்கள் ; ஈ+கள்> ஈக்கள்  ; பா+கள்>பாக்கள் ; ...
 
நிலை மொழியில் இரண்டு குற்றெழுத்துகள் வரின் அங்கும் ஒற்று மிகுத்து எழுதல் வேண்டும் :
பசு+கள்> பசுக்கள் ; கொசு+கள்> கொசுக்கள் ; கணு+கள்>கணுக்கள் 

 நிலை மொழியில் மூவெழுத்துகள் இடம் பெறின் அங்கே ஒற்று மிகாது   
கொலுசு+கள்> கொலுசுகள் . தராசு+கள்> தராசுகள் ; பழுது+கள்> பழுதுகள் ; வசவு+கள்>வசவுகள் 

நிலை மொழி 'வு'கரத்தில் முடியும் போது ஒற்று மிகாது 
ஆய்வு+கள்>ஆய்வுகள் ; சாய்வு+கள்>சாய்வுகள் ; சாவு+கள்>சாவுகள் ; 

 மூக்கொலியில் (nasal sound) முடியும் (-ம்) எல்லாச் சொற்களுடனும் 'கள்' சேரும் போது 'ங்' மிகுந்து வருவது  உண்டு :
மரம்+கள்>மரங்கள் ; பாவம்+கள்>பாவங்கள் ; பழம்+கள்>பழங்கள் ; ஏமம்+கள்>ஏமங்கள்.

இவ்வளவு விளக்கிய பின் 'கள்' -இன் மயக்கம் இந்நேரம் தெளிந்திருக்கவேண்டும்.
தெளியவில்லையானால் அது 'கள்'-இன் மயக்கம் இல்லை 'கோமா' மயக்கம் என்று அறிக.
அதிலிருந்து மீள்வது அரிது. 

'கள்'-ஐப் பற்றி இத்தனை  தூரம்/ நேரம்  சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா? என்னும் சிக்கலைக் காண 
அடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும்.
ஆகக் 'கள்' -இன் மகிமை இன்னும் தொடர்கிறது....

நன்றி : 'வல்லமை' http://www.vallamai.com/archives/9692/

Albert Fernando

unread,
Oct 28, 2011, 9:21:32 AM10/28/11
to tamil_...@googlegroups.com
தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்று தவறாது எழுதிவரும் அருமைக்
கட்டுரையை நம்மில் பலர் படித்து இன்புற்றுவருகிறோம்.
அண்ணனுக்கு நன்றி"கள்" பல!

இதோ அண்ணன் கேட்கச் சொன்ன பாடல் சீர்காழியின் சிலீர் உச்சரிப்பில்.....

படித்தும் கேட்டும் மகிழுங்"கள்"
நன்றிகளண்ணா.
மிக்க அன்புடன்,
ஆல்பர்ட்.

2011/10/28 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

தவறின்றித் தமிழ் எழுதுவோமே! 

பகுதி -9 இ   : 'கள் ' போடலாமா? - வாழ்த்துகளா? வாழ்த்துக்களா  ?
பேரா.பெஞ்சமின் லெபோ 


'கள்'-ஐப் பற்றி இத்தனை  தூரம்/ நேரம்  சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா? என்னும் சிக்கலைக் காண 
அடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும்.
ஆகக் 'கள்' -இன் மகிமை இன்னும் தொடர்கிறது....

நன்றி : 'வல்லமை' http://www.vallamai.com/archives/9692/

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en



--
“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” - பாரதிதாசன்
"Value has a value only if its value is valued"

Sivam Amuthasivam

unread,
Oct 28, 2011, 9:57:47 AM10/28/11
to tamil_...@googlegroups.com
வாழைப்பழத்தோலை உரிக்கும் வேலை கூட இல்லாமல்,
அல்பேர்ட் அவர்கள் பாடலின் இணைப்பையே தந்துவிட்டார்.

\\\இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், லிப்பில் குற்றியலுகரத்தின் அழகெல்லாம் பொங்கி வழியும்.//

 அதை நினைத்துக்கொண்டு அவதானித்துக் கேட்கும்போதுதான்
அந்த வித்தியாசமே புரிகிறது. மிக அருமை.
பாடல் முடிந்தபின்பும், ஒலித்துக்கொண்டே இருப்பதுபோல ஒரு பிரமை.

கதையோடு கதையாகச் சத்தமில்லாமல் ஒரு சொல் அதில் இடம்பெற்றுள்ளது.

\\\குறிப்பாகக் 'குமுதம்' என்ற திரை படத்தில் 'என்னை விட்டு ஓடிப் போக முடியுமா' என்னும் பாடல் வரும்.///

இந்தத் ‘ திரை படம் ‘ என்பது சரிதானா? அல்லது, தற்செயலானதா?

நட்புடன்
சிவம் அமுதசிவம்

---------------------------------------------------------------------------


 


2011/10/28 Albert Fernando <albe...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Oct 28, 2011, 12:13:02 PM10/28/11
to tamil_...@googlegroups.com
அன்புத் தம்பிக்கு
இனிய நல் வாழ்த்துகள்!
சந்தடி சாக்கில் 'கள்' -ஐக் கைவிடாது
'மகிழுங்கள்' என்று சொல்லிப் பாடலையும் கேட்கத் தந்த
தம்பிக்குப் பாராட்டுகள்.
அன்புடன்
அண்ணன் பெஞ்சமின்

2011/10/28 Albert Fernando <albe...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Oct 28, 2011, 12:19:41 PM10/28/11
to tamil_...@googlegroups.com
நலமிகு நண்பர்  சிவம் அமுதசிவம் அவர்களுக்கு!
வணக்கம்.
அங்கே வரவேண்டிய பகர  ஒற்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
என்று பாடிக்கொண்டிருக்கிறது எனச் சொல்ல மனம வரவில்லை.
நள்ளிரவில் தட்டச்சில் தட்டிதடுமாறிப் பாதி தூங்கி விழுந்ததின் விளைவுங்க!
தமிழ் தங்கும் நெஞ்சங்களே, என்றன்
பிழை பொறுத்தருள்வீர், அன்பர்களே!

அன்புடன்
பெஞ்சமின்



2011/10/28 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Thevan

unread,
Oct 28, 2011, 1:21:07 PM10/28/11
to tamil_...@googlegroups.com
கள்-க்கு விளக்கம் அளித்து வரும் பெருந்தகையே
நாங்கள் கேட்கும் காது கொண்டவராக கேட்டு வருகிறோம்.
பார்க்கும் கண்கள் கொண்டவராக படித்து வருகிறோம்.
இதனை இப்படியே தொடருவோம் என்று கூறி
ஒரு சந்தேகத்தை முன் வைக்கிறேன்.

நீங்கள் கட்டடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.

கட்டடம் - கட்டிடம் இதில் எது சரி?
கட்டு + இடம் = கட்டிடம்
கட்டப்பட்ட இடமான கட்டிடமே சரியானது என்று கருதுகிறேன்.
தயை கூர்ந்து விளக்கவும்.

௨௮-௧௦-௧௧ அன்று, Benjamin LE BEAU <benjami...@gmail.com> எழுதியது:


> நலமிகு நண்பர் சிவம் அமுதசிவம் அவர்களுக்கு!
> வணக்கம்.
> அங்கே வரவேண்டிய பகர ஒற்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
> என்று பாடிக்கொண்டிருக்கிறது எனச் சொல்ல மனம வரவில்லை.
> நள்ளிரவில் தட்டச்சில் தட்டிதடுமாறிப் பாதி தூங்கி விழுந்ததின் விளைவுங்க!
> தமிழ் தங்கும் நெஞ்சங்களே, என்றன்
> பிழை பொறுத்தருள்வீர், அன்பர்களே!
>
> அன்புடன்
> பெஞ்சமின்
>
>
>
> 2011/10/28 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>
>
>> வாழைப்பழத்தோலை உரிக்கும் வேலை கூட இல்லாமல்,
>> அல்பேர்ட் அவர்கள் பாடலின் இணைப்பையே தந்துவிட்டார்.
>>
>> \\\இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், ஒலிப்பில் குற்றியலுகரத்தின்
>> அழகெல்லாம் பொங்கி வழியும்.//
>>
>> அதை நினைத்துக்கொண்டு அவதானித்துக் கேட்கும்போதுதான்
>> அந்த வித்தியாசமே புரிகிறது. மிக அருமை.
>> பாடல் முடிந்தபின்பும், ஒலித்துக்கொண்டே இருப்பதுபோல ஒரு பிரமை.
>>
>> கதையோடு கதையாகச் சத்தமில்லாமல் ஒரு சொல் அதில் இடம்பெற்றுள்ளது.
>>

>> \\\குறிப்பாகக் 'குமுதம்' என்ற *திரை படத்தில்* 'என்னை விட்டு ஓடிப் போக


>> முடியுமா' என்னும் பாடல் வரும்.///
>>
>> இந்தத் ‘ திரை படம் ‘ என்பது சரிதானா? அல்லது, தற்செயலானதா?
>>
>> நட்புடன்
>> சிவம் அமுதசிவம்
>>

>> *
>> ---------------------------------------------------------------------------
>> *
>> *
>> *
>> *
>> *


>>
>>
>>
>> 2011/10/28 Albert Fernando <albe...@gmail.com>
>>
>>> தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்று தவறாது எழுதிவரும் அருமைக்
>>> கட்டுரையை நம்மில் பலர் படித்து இன்புற்றுவருகிறோம்.
>>> அண்ணனுக்கு நன்றி"கள்" பல!
>>>
>>> இதோ அண்ணன் கேட்கச் சொன்ன பாடல் சீர்காழியின் சிலீர் உச்சரிப்பில்.....
>>> http://www.raaga.com/player4/?id=232165&mode=100&rand=0.9802929137367755
>>>
>>> படித்தும் கேட்டும் மகிழுங்"கள்"
>>> நன்றிகளண்ணா.
>>> மிக்க அன்புடன்,
>>> ஆல்பர்ட்.
>>>
>>> 2011/10/28 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
>>>

>>>> *
>>>> தவறின்றித் தமிழ் எழுதுவோமே! *

>>>> 'அன்னம் போல நடை * நடந்து* * வந்து * - என்
>>>> *அருகமர்ந்து * நாணத்தோடு *குனிந்து ' .*
>>>> *
>>>> *


>>>> இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், ஒலிப்பில் குற்றியலுகரத்தின்

>>>> *அழகெல்லாம்
>>>> பொங்கி வழியும்.*
>>>> *இப்பாட்டைத் தேடிக் கேளுங்கள்* ; நான் சொல்வது புரியும்.


>>>> (இந்தக் காலத்திலும் பாடுகிறார்களே ழகர, ளகர, லகர ;
>>>> ணகர, னகர, நகர ; ரகர, றகர வேறுபாடுகளே இல்லாமல் ...!).
>>>>
>>>>
>>>>
>>>> 'கள்'-ஐப் பற்றி இத்தனை தூரம்/ நேரம் சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா?
>>>> என்னும் சிக்கலைக் காண
>>>> அடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும்.
>>>> ஆகக் 'கள்' -இன் மகிமை இன்னும் தொடர்கிறது....
>>>>
>>>> நன்றி : 'வல்லமை' http://www.vallamai.com/archives/9692/
>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google
>>>> Groups "tamil_ulagam" group.
>>>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send a blank email to
>>>> tamil_ulagam...@googlegroups.com
>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>>>
>>>
>>>
>>>
>>> --

>>> *“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்
>>> போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!”* - *பாரதிதாசன் *
>>> *"Value has a value only if its value is valued"*


>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google
>>> Groups "tamil_ulagam" group.
>>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send a blank email to
>>> tamil_ulagam...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google
>> Groups "tamil_ulagam" group.
>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>> To unsubscribe from this group, send a blank email to
>> tamil_ulagam...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>
>

> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en


--
அச்சம் மனிதனை ஒவ்வொரு நிலைகளிலும் ஆட்டிப் படைக்கிறது. அதுவே அவனது பல்வேறு
பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

*Regards,*
*Thevan, *
*Mumbai.
*

ap_the...@yahoo.co.in,
ap_th...@rediffmail.com,
apth...@gmail.com

http://perumalthevan.blogspot.com/

Govindan R

unread,
Oct 28, 2011, 1:36:28 PM10/28/11
to tamil_...@googlegroups.com
அன்புடையீர்
'கேட்க்கக் கடவான்'
'கேட்ப்பார்களா'
என்று அடுத்தடுத்து பிழைகள் வந்ததால் 
இவற்றிற்கு ஏதேனும் இலக்கண விளக்கம்
வரலாமோ என்று மயங்குகிறேன்.
அன்புடன் 
செம்மல்

Sivam Amuthasivam

unread,
Oct 28, 2011, 1:42:54 PM10/28/11
to tamil_...@googlegroups.com
நண்பர் தேவன் அவர்களே!

’கட்டடம் - கட்டிடம் ’ 
இவற்றில் எதுசரியானது? எனும் ஒரு வெடிகுண்டைப்போட்டிருந்தீர்கள்.
 என்னைப்பொறுத்தவரை , ‘ கட்டடம்’ என்பதிலேயே பழக்கத்தில் வந்துவிட்டது.
எனினும், உங்கள் விளக்கம் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது,

இதேபோலத்தான் எனக்கும் நீண்டநாளாக ஒரு சந்தேகம்.

குற்றவாளி - சுற்றவாளி /  குற்றவாளி - சுத்தவாளி

இதில் எது சரியானது?

குற்றவாளி - குற்றம் செய்தவர்
சுற்றவாளி - என்ன செய்தார்? சுற்றம் செய்தாரா?

குற்றமற்றவர் - சுத்தமானவர்- சுத்தவாளி


இதில், சுத்தம் என்பது நல்லதமிழ்தானா என்பதிலும் எனக்கொரு சந்தேகமுண்டு.
ஏற்கெனவே, செம்மல் அவர்களின் சந்தேகமும், ‘ 'கேட்க்கக் கடவான்'
'கேட்ப்பார்களா' ‘ என்று வந்துவிட்டது.
பேராசிரியருக்குப் பழு அதிகமாகித்தான் போய்விட்டது.
எனினும்,சந்தேகங்களை மனதில் பூட்டிவைக்கக்கூடாது என்பதற்காகவே இங்கு உடைத்துவிடுகிறேன்.


நட்புடன்
சிவம் அமுதசிவம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2011/10/28 Thevan <apth...@gmail.com>

Govindan R

unread,
Oct 28, 2011, 1:54:13 PM10/28/11
to tamil_...@googlegroups.com
அன்புடையீர் 
சுத்தம் என்னும் சொல் தூய்மையான வடசொல்.
சந்தேகம் என்பதும் அத்தகையதே 
இவற்றை மனத்தில் (மனதில் அன்று) கொள்க 
பேராசிரியருக்குப் பளு மிகையாகிவிட்டது மெய்யே.
இது பழுது இல்லாத மெய்.
அன்புடன் 
செம்மல்.

2011/10/28 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Govindan R

unread,
Oct 28, 2011, 2:05:26 PM10/28/11
to tamil_...@googlegroups.com


2011/10/28 Govindan R <govind...@gmail.com>
அன்புடையீர் 
சுத்தம் என்னும் சொல் தூய்மையான வடசொல்.
சந்தேகம் என்பதும் அத்தகையதே 
இவற்றை மனத்தில் (மனதில் அன்று) கொள்க 
பேராசிரியருக்குப் பளு மிகையாகிவிட்டது மெய்யே.
இது பழுது இல்லாத மெய்.
அன்புடன் 
செம்மல்.

நண்பர் தேவன் நல்ல வினாவைத் தொடுத்துள்ளார்.
    பல நாள்களாக எனக்கும் இந்த ஐயம் இருந்தது,.
     கட்டடம் என்பது வீடு மாளிகை அலுவலகம் போன்றவற்றைக்
    குறிக்கும். கட்டிடம் என்பது கட்டுகிற இடத்தைக் குறிக்கும்.
     பேரா. நன்னன் தம் நூல் ஒன்றில் இதனை விளக்கி இருக்கிறார்.
      இனி பேரா.பெஞ்சமின் அவர்களின் விளக்கத்தை 
       எதிர்நோக்குவோம்.
      அன்புடன் 
       செம்மல்




 
 

 
2011/10/28 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Sivam Amuthasivam

unread,
Oct 28, 2011, 2:11:03 PM10/28/11
to tamil_...@googlegroups.com
நன்றி செம்மல் அவர்களே!

சுத்தம், சந்தேகம் எனும் சொற்களில் இருந்த சந்தேகம் - அல்ல! ஐயம் 
தீர்ந்துவிட்டது. நிச்சயமாக, இவை வடசொற்களின் தமிழ்வடிவங்கள்தான்.
இன்றிலிருந்து, தூய்மை, ஐயம் என்ற சொற்களையே பயன்படுத்துவேன்.

 சத்தமேயில்லாமல், ’ பளு - பழு’ 
  மனதில் - மனத்தில் எனும் 
புதுப்பிரச்சினையைக் கிளப்பிவிட்டீர்களே!

என்னைப்பொறுத்தவரை, ‘ பழு ‘ , ‘ மனதில் ‘  என்பவை பழக்கத்திலுள்ளவை.
ஆனாலும், அந்த ஒற்று மிகும் சொற்களைப் பார்க்கும்போதே என்னவோபோலுள்ளது.


நட்புடன்
சிவம் அமுதசிவம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2011/10/28 Govindan R <govind...@gmail.com>

Govindan R

unread,
Oct 28, 2011, 6:31:44 PM10/28/11
to tamil_...@googlegroups.com
நண்பர் சிவம் அமுத சிவம் அவர்கள் தம் மனத்தில்
உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தி உள்ளார்.
மனதில் என்று சொல்லும்போது இயல்பாக உள்ளது என்றும்  
"மனத்தில்" என்று சொல்லும்போது (பார்க்கும்போது?)
என்னவோபோல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எல்லாமே பழக்கத்தில் இயல்பாகிவிடும்.
மரம்+இல் =மரத்தில் 
மதம் +இல்  = மதத்தில் 
கரம்+இல் =  கரத்தில் 
திரு சிவம் அவர்கள் என்னிடம் மற்றொரு எண்ணத்தையும் 
தோன்ற உதவி உள்ளார்.
தமிழ்நாட்டில் "சோறு" என்னும் நல்ல தமிழ்ச்சொல்லைப் 
பயன்படுத்துவதில்" என்னவோபோல்" ஒரு வகையான
கூச்ச உணர்வு கொண்டுள்ளனர் நம் மக்கள்.
இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூற விரும்புகிறேன்.
என் பெயரனுக்கு உணவு ஊட்டும் வேளை.
என் மனைவி " உனக்கு என்ன வேணும் கீரை மம்முவேனுமா?'
என்று கேட்டார்.
"வேணாம் "
"காய் போட்டு தரட்டுமா?"
"வேணாம்"
"வேற என்னதான் வேணும்"
"சோறு" 
இது யார் சொன்னா?
தாத்தா"
இதைக்கேட்டதும் அகம் மகிழ்ந்து குதித்தோம்.
என் பெயரனுக்கு அகவை 27 மாதங்களே!
அமெரிக்காவில் பிறந்து வளர்கிற மழலை.
முன்னொருநாள் "குளம்பி (coffee)கசக்கும் என்று
சொன்னவனும் அவனே!
சித்திரமும் கைப்பழக்கம்  செந்தமிழும் நாப்பழக்கம்"
மொழிவதே மொழி! நல்லதமிழைப் பேசிப் பழகுவோம்!
 அன்புடன் 
செம்மல் 




2011/10/28 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>
நன்றி செம்மல் அவர்ளே!

Benjamin LE BEAU

unread,
Oct 29, 2011, 6:20:55 AM10/29/11
to tamil_...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்
நண்பர் தேவன்,
'நீங்கள் கட்டடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.

கட்டடம் - கட்டிடம் இதில் எது சரி?
கட்டு + இடம் = கட்டிடம்
கட்டப்பட்ட இடமான கட்டிடமே சரியானது என்று கருதுகிறேன்.'
என எழுதி இருந்தார்.
இதற்கு விளக்கமாக ஒரு கட்டுரையே எழுதவேண்டும்.
எழுதுவேன் : 'அதுவா? இதுவா? எது சரி?' என்ற  தலைப்பில் .

நண்பர் வினாவுக்குச் சுருக்கமான பதில் :
1 'கட்டடம்' என்ற சொல்லே உலக வழக்கில் (எழுத்திலும் பேச்சிலும்) புழங்கி வருகிறது.
2  தமிழ் அறிஞர் கணிப்பொறிஞர் இராம கி ஐயா அவர்கள் கருத்து :
''கட்டடம் என்பது தொழிற்பெயர்; கட்டிடம் என்பது இடப்பெயர்; பொருளை மாறிப் பயன்படுத்தக் கூடாது. கட்டிடத்தின் மேல் கட்டடம் நிற்கிறது. அடம் என்பது அடுக்குதல் என்ற வினையில் கிளர்ந்த ஓர் ஈறு. கட்டுதல் என்பது சேர்த்தல்; கட்டி அடுக்குவது கட்டடம். குடில், குடிசை, மாளிகை, கோயில், அரண்மனை என எல்லாமே கட்டி அடுக்குவது தான்.".

கட்டடம் கட்டும்போதுதான் செங்கற்களை அடுக்கிவைத்துப் பூசுவார்கள்.
எனவேதான் 'கட்டடம் ' என்ற சொல்லைப்  பயன்படுத்தினேன்.
மேல் விவாதத்துக்கு வழி வகுக்கும் என எதிர்பார்த்தே அச் சொல்லைப் பெய்தேன்.
3 'கட்டிடம்'  என்ற சொல் ஒரு சில அண்மைக்கால அகரமுதலிகள் நீங்கலாகப் பல அகரமுதலிகளில் இடம் பெற வில்லை
4  '
கட்டிடம்'எனபதை இப்படிப் பிரிக்கலாம் :
கட்டும்+இடம் > கட்டுமிடம் ; இது திரிந்து கட்டிடம் ஆனது எனலாம்.
அல்லது
கட்டு +இடம்>  கட்டிடம் (கட் +ட்+(உ)+இடம் -( 'உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்' ; உகரம் ஓட இகரம் உயிரில் ஏற்றியது)>கட்டிடம் எனவும் கொள்ளலாம்.
எப்படி இருப்பினும் இதன் பொருள் இன்னும் கட்டப் படாமல் கட்டுவதற்காக  உள்ள இடம் என்பதுவே.
அதாவது ( வெற்று) மனை = plot. ஆகவே  'கட்டிடம் ' என்பது 'building' என்பதைக் குறிக்காது , 'plot' என்பதையே குறிக்கும்.
இது பற்றிக்  கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேலும், மனதில் (மனதில் தவறு  ; மனத்தில் சரி : ஏன், எப்படி என முன்பே என் கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்), பழு-பளு,... பற்றிய
சிவம் அமுதம் சிவம், செம்மல் இருவர்க்கும்    இடையில் எழுந்த உரையாடல்  கவனத்தைக்  கவர்ந்தது ;
அதற்கு நண்பர் செம்மல் சிறப்பாகப் பதில் கொடுத்து இருந்தார்.
'சோறு' என்ற நல்ல தமிழ்ச்  சொல் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.  நன்று , நன்று!
என் கட்டுரையில் விளக்கம் தருவது எழுத்துக்கும் சொல்லுக்கும்தான் : (அதாவது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் பற்றித்தான்)
சொல்லுக்கு உரிய பொருள் பற்றிப் பேசுவதை 'semantics' என மொழியியல் கூறும். அதனைத் தனியாகத்தான் அணுகவேண்டும்.
என் கட்டுரை  வரம்பில் அது வராது.    நம்மவர்கள் சாதி வெறியை மொழியிலும் புகுத்திவிட்டார்கள் என்பதற்குச் 'சோறு' , 'சாதம்' என்னும் பதங்களே நல்ல சான்று. பெண்களை அஃறிணையில்  அழைக்கலாமா என்ற கேள்வியும் இங்கு எழுந்தது. அது பேச்சு வழக்கு. இது பற்றியும் என் கட்டுரையில் பேச இயலாது.
வேண்டுமானால் தனியாக  எழுதலாம்.
பிற பின்னர்.
இப்போதே மணி நண்பகல் 12.00 மணி. பிற்பகல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள  வேண்டும்.
விடை பெறுகிறேன்.

அன்புடன்
பெஞ்சமின்





2011/10/29 Govindan R <govind...@gmail.com>

Thevan

unread,
Oct 29, 2011, 6:50:29 AM10/29/11
to tamil_...@googlegroups.com
ஐயா 
விளக்கத்திற்கு நன்றி. 

௨௯ அக்டோபர், ௨௦௧௧ ௩:௫௦ பிற்பகல் அன்று, Benjamin LE BEAU <benjami...@gmail.com> எழுதியது:
Regards,
Thevan, 
Mumbai.

Analai.Thiru

unread,
Oct 30, 2011, 9:53:08 AM10/30/11
to tamil_...@googlegroups.com
வணக்கம்


மிக விளக்கமான கட்டுரைக்கு  மிக்க நன்றி.


வாழ்த்துகள்


On 28/10/2011 5:35 AM, Benjamin LE BEAU wrote:
 
'செவி உள்ளவன் கேட்க்கக் கடவான்' என்பது போல் செவி உள்ளவர்கள் இதனைக் கேட்ப்பர்களா? இல்லை
செவிடன் காதில் ஊதிய சங்காகுமா? யானறியேன் பராபரமே!


?????

Benjamin LE BEAU

unread,
Oct 31, 2011, 12:43:15 AM10/31/11
to tamil_...@googlegroups.com
நன்றி ஐயா

அன்புடன்
பெஞ்சமின்

2011/10/30 Analai.Thiru <sel...@gmail.com>

--

Ilakkuvanar Thiruvalluvan

unread,
Oct 31, 2011, 7:52:14 PM10/31/11
to tamil_ulagam, thiru thoazhamai
கட்டிடம், கட்டடம் இரண்டும் பயன்படுத்தும் இடஙகளைப் பொருத்த அளவில் சரி.
கட்டடம் கட்டப்படுகின்ற இடம் கட்டிடம்(site). அங்கு எழுப்பப்பெறுவது
கட்டடம்(building). ஆனால், பெரும்பாலோர் கட்டடம் என்று எழுது அல்லது
சொல்ல வேண்டிய இடங்களில் கட்டிடம் என்றே தவறாகப் பயன்படுத்தி
வருகின்றனர்.வேறுபாடு உணர்ந்து சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்
காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


On Oct 28, 10:21 pm, Thevan <apthe...@gmail.com> wrote:
> கள்-க்கு விளக்கம் அளித்து வரும் பெருந்தகையே
> நாங்கள் கேட்கும் காது கொண்டவராக கேட்டு வருகிறோம்.
> பார்க்கும் கண்கள் கொண்டவராக படித்து வருகிறோம்.
> இதனை இப்படியே தொடருவோம் என்று கூறி
> ஒரு சந்தேகத்தை முன் வைக்கிறேன்.
>
> நீங்கள் கட்டடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.
>
> கட்டடம் - கட்டிடம் இதில் எது சரி?
> கட்டு + இடம் = கட்டிடம்
> கட்டப்பட்ட இடமான கட்டிடமே சரியானது என்று கருதுகிறேன்.
> தயை கூர்ந்து விளக்கவும்.
>

> ௨௮-௧௦-௧௧ அன்று, Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
>
>
> > நலமிகு நண்பர்  சிவம் அமுதசிவம் அவர்களுக்கு!
> > வணக்கம்.
> > அங்கே வரவேண்டிய பகர  ஒற்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
> > என்று பாடிக்கொண்டிருக்கிறது எனச் சொல்ல மனம வரவில்லை.
> > நள்ளிரவில் தட்டச்சில் தட்டிதடுமாறிப் பாதி தூங்கி விழுந்ததின் விளைவுங்க!
> > தமிழ் தங்கும் நெஞ்சங்களே, என்றன்
> > பிழை பொறுத்தருள்வீர், அன்பர்களே!
>
> > அன்புடன்
> > பெஞ்சமின்
>

> > 2011/10/28 Sivam Amuthasivam <amutham2...@googlemail.com>


>
> >> வாழைப்பழத்தோலை உரிக்கும் வேலை கூட இல்லாமல்,
> >> அல்பேர்ட் அவர்கள் பாடலின் இணைப்பையே தந்துவிட்டார்.
>
> >> \\\இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், ஒலிப்பில் குற்றியலுகரத்தின்
> >> அழகெல்லாம் பொங்கி வழியும்.//
>
> >>  அதை நினைத்துக்கொண்டு அவதானித்துக் கேட்கும்போதுதான்
> >> அந்த வித்தியாசமே புரிகிறது. மிக அருமை.
> >> பாடல் முடிந்தபின்பும், ஒலித்துக்கொண்டே இருப்பதுபோல ஒரு பிரமை.
>
> >> கதையோடு கதையாகச் சத்தமில்லாமல் ஒரு சொல் அதில் இடம்பெற்றுள்ளது.
>
> >> \\\குறிப்பாகக் 'குமுதம்' என்ற *திரை படத்தில்* 'என்னை விட்டு ஓடிப் போக
> >> முடியுமா' என்னும் பாடல் வரும்.///
>
> >> இந்தத் ‘ திரை படம் ‘ என்பது சரிதானா? அல்லது, தற்செயலானதா?
>
> >> நட்புடன்
> >> சிவம் அமுதசிவம்
>
> >> *
> >> ---------------------------------------------------------------------------
> >> *
> >> *
> >> *
> >> *
> >> *
>

> >> 2011/10/28 Albert Fernando <alber...@gmail.com>


>
> >>> தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்று தவறாது எழுதிவரும் அருமைக்
> >>> கட்டுரையை நம்மில் பலர் படித்து இன்புற்றுவருகிறோம்.
> >>> அண்ணனுக்கு நன்றி"கள்" பல!
>
> >>> இதோ அண்ணன் கேட்கச் சொன்ன பாடல் சீர்காழியின் சிலீர் உச்சரிப்பில்.....
> >>>http://www.raaga.com/player4/?id=232165&mode=100&rand=0.9802929137367755
>
> >>> படித்தும் கேட்டும் மகிழுங்"கள்"
> >>> நன்றிகளண்ணா.
> >>> மிக்க அன்புடன்,
> >>> ஆல்பர்ட்.
>

> >>> 2011/10/28 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com>

> ...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages