On Sep 14, 2:13 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> "தமிழாய்ந்த தமிழன்தான்
> தமிழ்நாட்டில் முதலமைச்சாய்
> வருதல் வேண்டும்
>
> தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
> தமிழ்நாட்டில் வாராது
> தடுத்தல் வேண்டும்"
>
> புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் கனவு அது.
>
> தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்.
>
நல்ல கட்டுரையைச் சுவைத்துப் படித்தேன்.
தமிழ்மணம் அண்ணாவை முதல்பக்கத்தில் காட்டுகிறது.
http://tamilmanam.net/
நா. கணேசன்
அன்பின் நண்.மணி,
அருமையான,ஆழமான சிந்தனையைத் தூண்டும்
கட்டுரை.
எத்தனை ஆண்டுகள்தான் இப்படிக் கனவிலேயே
காலம் தள்ளுவது. எந்தக் கனவும் நனவாகவில்லையே.
அய்யா மறைமலை அவர்கள் சலிப்பின் உச்சிக்கே
சென்றுவிட்டர்கள். காலம்தான் இதற்கு
விடைகாணவேண்டும்.
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
"தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டில் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்"புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் கனவு அது.
அறிஞர் அண்ணாவின் சிறுகதை
செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.
செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும் போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால். கரியனிடம்-அவனுடைய முதல் பையன் காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது குப்பிக்கு.
"குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது. ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும், உருண்டையாகவும் இருக்கும்-ரொம்ப ருசி-பழத்தைக் கண்ணாலே பார்த்தாக் கூடப் போதும்; பசியாறிப் போகும்" என்று குப்பியிடம் பெருமையாகப் பேசுவான் செங்கோடன்.
அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள்-அது மட்டுமா-பக்கத்துக் குடிசை-எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமையைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும்-அப்பா வாங்கிய புதிய மோட்டரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கி வந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேச முடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!
மூத்த பயல் கரியன், "செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்" என்று சொல்லுவான்.
"ஒண்ணுக்கூட எனக்குத் தரமாட்டாயாடா-நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும்-வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட்டும்"-என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்...
கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே "உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு" என்று குறும்பாகப் பேசுவாள்.
மூன்றவாது பையன் முத்து, "சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க ஆமா-பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்து விடுவாங்களோ, யாரு கண்டாங்க" என்று சொல்லுவான்-வெறும் வேடிக்கைக்காக அல்ல-திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.
செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை. உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான்-செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்துபோகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்!
குழந்தைகள், பிரியமாகச் சாப்பிடுவார்கள் செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது-கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான் செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடுபட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும், பட்சணமும், வாங்கித் தரக்கூடிய 'பணம்' எப்படிச் சேர முடியும்? கூலி, நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும்-குப்பியின் 'பாடு' குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப் பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்து விடுகிறது. இந்தச் 'செவ்வாழை' ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு!
இதிலே பங்கு பெற பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்து வரும் செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்ட பாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்று சந்தோஷம் செங்கோடனுக்கு.
இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துகள் அல்ல. புகைப்படலம் போல, அந்த எண்ணம் தோன்றும், மறையும்-செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.
கன்று வளர்ந்தது கள்ளங்கபடமின்றி. செங்கோடனுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.
"இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?" கரியன் கேட்பான் ஆவலுடன் செங்கோடனை.
"இரண்டு மாசமாகும்டா கண்ணு" என்று செங்கோடன் பதிலளிப்பான்.
செவ்வாழை குலை தள்ளிற்று-செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டு விட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையை பெருமையுடன்.
பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக் கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைர மாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்றமுற்ற செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும், சச்சரவும் பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமே 'அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று.
"எப்போது பழமாகும்?" என்று கேட்பாள் பெண்.
'எத்தனை நாளைக்கு மரத்திலேயே இருப்பது?' என்று கேட்பான் பையன்.
செங்கோடன், பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம-இடையே தரகர் இல்லை-முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும் முதலாளி இல்லை. உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது-அவர் எடுத்துக் கொண்டது போக மீதம் தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும்-அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.
இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்-பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது-பழம் தர வேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள் கரியனிடம்.
பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது-ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும்பகுதி.
இதோ, இந்தச் செவ்வாழை நம்மக் கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது-எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது-இதுபோல நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம்-பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறி விட்டது அவன் மனதில். குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று.
செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, 'ஐயரிடம்' சொல்லி விட்டார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, 'பட்டி' தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும் போது, 'பழம்' தேவை என்று தோன்றாமலிருக்குமா? 'இரண்டு சீப்பு வாழைப்பழம்' என்றார் பண்ணையார்.
"ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை-பச்சை நாடாத்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.
"சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்?-வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!" என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், "நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க-அதைக் கொண்டுகிட்டு வரலாம்" என்றான். "சரி" என்றார் பண்ணையார்.
செங்கோடனின் செவ்வாழைக் குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!
அதற்கு மரண ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்!
எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைக்காரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.
தெருவிலே, சுந்தரமும், செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று-நாக்குக் குழறிற்று-வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.
மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை-என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை-அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச்செய்த ஆசை-இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல்-எனும் எதைத்தான் சொல்ல முடியும்?
கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லி விட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக்குலை! அவருடைய அந்தஸ்துக்கு இது ஒரு பிரமாதமா!-என்று ஊர் ஏசுகிறது போல் அவன் கண்களுக்குத் தெரிகிறது.
'அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன்-மாடு மிதித்து விடாதபடி பாதுகாத்தேன்-செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டு போல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய்.
அப்பா! தங்கச்சிக்குக் கூட, 'உசிர்' அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு,இப்பொழுது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா, உன்னை கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!'-என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், 'குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?' என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர்!
எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான். 'அப்பா, குலையை வெட்டப் போறாரு-செவ்வாழைக்குலை' என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான்-உள்ளே கொண்டு வந்தான்-அரிவாளைக் கீழே போட்டான்-'குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்' என்று குதித்தன குழந்தைகள். கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். "கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன்-அழாதீங்க-இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்" என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்.
செங்கோடன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்கு வர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான்-அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப்பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்...!
அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல-ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு...? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான்-எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள்-எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கறை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!
நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்னநடை நடந்து அழகுமுத்துவிஜயா அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.
நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக் கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.
கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான்-அவன் விற்றான் கடைக்காரனுக்கு-அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! "பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா-போடா" என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே. செங்கோடன் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான் வாழை மரத்துண்டுடன்.
"ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?" என்று கேட்டான் கரியன்.
"இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட" என்றான் செங்கோடன்.
அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு!
பாடையைச் சுற்றி அழுகுரல்!
கரியனும், மற்றக் குழந்தைகளும் பின்பக்கம்.
கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். "எங்க வீட்டுச் செவ்வாழையடா" என்று.
"எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம்-மரத்தை வெட்டி 'பாடை'யிலே கட்டி விட்டோம்" என்றான் கரியன்.
BOX
"உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம்-பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறி விட்டது"
--
நன்றி,
தமிழண்ணா.
''அண்ணா, உலகளாவிய மனிதாபிமான சிந்தனை கொண்டவர். அந்தச் சிந்தனை தான் அவர்பால் எனக்கு ஈடுபாடு ஏற்பட காரணமாயிற்று. திராவிட இனத்தின் தனித்தன்மையை முதலில் அடையாளம் காட்டியவர் அண்ணா. தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி வடிவம் கொடுத்து சொல்லாட்சி புரிந்தவர் அவர்.
பிற இனங்களின் மொழி, கலை, தட்பவெப்பநிலை பற்றியும் அவர் அறிந்து வைத்திருந்தார். உலக ஞானம் அவரது உள்ளங்கையில் இருந்தது.'அண்ணா மனித குலத் தலைவர்' என அன்றைய முரசொலி பொங்கல் மலரில் நான் எழுதிய கட்டுரை பலருக்கும் அண்ணாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக −ருந்தது.
எட்டையபுரத்தையடுத்த ஒரு சிற்றூரில் பிறந்த நான் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அன்று 3 எம்.ஏ.பட்டங்கள் பெற்ற அண்ணா, தனக்கு இணையாக என்னை மதித்தது அவரது பெருந்தன்மை. அது எனக்கும் பெருமை.அண்ணா எழுதிய கட்டுரைகளை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அப்போது ஏற்பட்டது. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1939-ல் திருச்சியில் 'சிவலீலா' நாடகத்தில் சிறுவனாக நடித்தேன். அப்போது முனிசிபல் பப்ளிக் அரங்கில் அண்ணா பேசினார். எனக்கு அப்போது வயது 18. ஓரத்தில் இருந்தபடி அண்ணாவைப் பார்த்தேன். திருச்சி ஜங்ஷன் வரை அவரைப் பின் தொடர்ந்து சென்றும் சந்திக்க முடியவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பிறகு, 1940-ல் ஈரோட்டில் எங்கள் குழு நாடகம் போட்டது. அப்போது, அண்ணா, பெரியார் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.என் சட்டையில், பெரியார் 'பேட்ஜ்' தவிர, 'உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்' என்ற வாசனங்கள் அடங்கிய ஜீவாவின் பேட்ஜும் அணிந்திருந்தேன்.இது அண்ணாவுக்குப் பிடித்துவிட்டது. நீண்ட நேரம் என்னோடு பேசினார். பிறகு, பல நாட்கள் சாப்பிடாமலேயே பேசிக் கொண்டிருப்போம்.
ஒரு முறை அண்ணாவே மாட்டுவண்டியில் என்னைத் தேடி வந்து விட்டார். என் குரு அவ்வை சண்முகத்துக்கு ஒரே ஆச்சர்யம். மொத்த நாடகக் குழுவினரும் பரபரப்பாக இருந்தோம். அன்று இறுகிய எங்கள் நட்பு பின் நீண்ட காலம் தொடர்ந்தது.
கும்பகோணம் தி.மு.க. மாநாட்டில் என்னைப் பொதுக்குழு உறுப்பினராக அண்ணா அறிவித்தார். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் ஆகியோர் என்னைத் தொடர்ந்து கட்சியில் சேர்ந்தனர்.
'கலைத்தாய் எனக்களித்த முதல் புதல்வன் டி.வி. நாராயணசாமி. 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடகத்தை அவருக்காகவே எழுதினேன். அதில், தளபதி சந்திரமோகன் வேஷத்தில் நாராயணசாமியும், காசிவாசி காகபட்டர் வேஷத்தில் நானும் நடித்தோம். வெறும் கணேசனை 'சிவாஜி' கணேசனாக மாற்றியவர் அவர். எனக்கு பல சிக்கல்கள் தீர உதவி புரிந்தார். அவரது திருமலை நாயக்கர் வேஷம் அற்புதமானது. கொண்ட கொள்கைக்காக என்னிடம் வந்தவர். கே.ஆர். ராமசாமி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் ஆகியோரை இயக்கத்தின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்தவர் அவர். இவர்களை எல்லாம் அவ்வப்போது எனக்கு அறிமுகம் செய்து வைத்து, என்னிடம் கொண்டு வந்து சேர்த்த பெருமை நாராயணசாமியையே சேரும். அவர் என் நண்பர். நடிகமணி மட்டுமல்ல கொள்கை மணியும் கூட' என்று அண்ணாவே என்னைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.
அரசியல் நாகரிகம் தெரிந்த அண்ணா, பிற கட்சியினரை மதித்தவர் என்பது வரலாற்று உண்மை. நான் அண்ணாவின் தொண்டன், தோழன், நண்பன் எல்லாமே. பிறரிடம் பேச முடியாத பல விஷயங்களை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டதுண்டு.
அவருக்கு நிகர் அவரே. அவரைப் போன்ற தனித்தன்மை வாய்ந்த தலைவர் வேறு எவரும் இல்லை. 'வேலைக்காரி', 'ஓர் இரவு', 'நீதிதேவன் மயக்கம்' ஆகியவற்றில் நடித்திருக்கிறேன். அது எனக்கு மன நிறைவான விஷயம். அண்ணாவின் நண்பன் என்ற விஷயம் எனக்குப் பெருமிதம் தரக் கூடிய ஒன்று.
ஒரே இரவில் அண்ணா எழுதிய திரைப்பட வசனம்
ஏவி.எம். சென்னையில் ஸ்டூடியோ நடத்துவதற்கு இடம் பார்க்கிறார் என்று தெரிந்தவுடன் ஏவி.எம். மீது பெருமதிப்பு கொண்டிருந்த ஜெமினி எஸ்.எஸ். வாசன், ""நீங்கள் சென்னைக்கு வந்து ஸ்டூடியோ நடத்துவதாக இருந்தால் என் ஸ்டூடியோவையே தருகிறேன். எடுத்து நடத்துங்கள்'' என்றார். அதை அன்போடு மறுத்தார் ஏவி.எம்.
வடபழனியில் வாகினி ஸ்டூடியோவிற்கு அருகே பத்து ஏக்கர் காலியிடம் இருந்தது. ஒரு இஸ்லாமியருக்குச் சொந்தமான தோல் கிடங்கு இருந்த இடம் அது. அந்த பத்து ஏக்கர் இடத்தையும் முப்பத்தி ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கினார் ஏவி.எம்.
"வாழ்க்கை' திரைப்படத்தினை தெலுங்கிலும் தயாரித்து இயக்கினார் ஏவி.எம். "ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இதற்குப் பிறகு, படத்தை இயக்குகின்ற பொறுப்பிலிருந்து விலகி தயாரிப்பில் மட்டுமே முழு நேரம் கவனம் செலுத்தத் தொடங்கினார் அவர்.
"வாழ்க்கை' வெற்றியைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா எழுதி, கே.ஆர். ராசாமி நடித்து வந்த "ஓர் இரவு' நாடகத்தைத் திரைப்படமாக்க விரும்பி அண்ணாவை சந்தித்தார் ஏவி.எம். அண்ணா அவர்களிடம் ஏவி.எம். அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்களின் தந்தையான இராம. சுப்பையா அவர்கள். ஏவி.எம். அவர்களின் ஆசையை நிறைவேற்ற ஒப்புக் கொண்ட அறிஞர் அண்ணா "ஓர் இரவு' படத்துக்கான முழு கதை வசனத்தையும் ஒரே இரவில் எழுதிக் கொடுத்தார்.
Aringnar Anna on Name Change of Madras State to Tamil Nadu, May 1963
[Debate in Rajya Sabha in May 1963. DMK Founder Aringnar Anna ultimately changed the name of Madras State as Tamil Nadu and fulfilled the centuries old desire of the Tamil Nation on his becoming the Chief Minister of Tamil Nadu in 1967. In 1963 he spoke in Parliament on the question of renaming Tamil Nadu. Courtesy: Dravida Peravai]
Annadurai -
Mr. Vice Chairman, I am rarely in full agreement with my friend Mr.Bhupesh Gupta, but today I rise to support him whole-heartedly, fully and sincerely. The only weakness of the Bill is that it is a non-official one. I would have liked an official Bill to be brought forward for this very necessary and very simple thing that would have satisfied millions of Tamilians in Tamil Nadu.
Many arguments that were advanced against the Bill brought forward are perhaps more due to the colour of the mover rather than the arguments advanced for its support. One Honorable Member was saying that he was not moving a Bill, which the Madras State has asked him to move. I regret very much that sometimes it becomes necessary to explain some rudimentary principles.
The Madras Government will never ask a non-official Bill to be brought forward on its behalf. If the state government wants the Bill to be brought forward, there are the state representatives in this Assembly and they would have brought it forward, and therefore, to say that the Bill cannot be supported just because the Madras Government has not asked Mr.Gupta to bring the Bill shows that their only argument to fight against the Bill is that their party or their State Government has not instructed them to act in this way.
I can well understand the political tremor in their hearts, but that is no argument against this Bill. The arguments advanced by the sponsors of the Bill for renaming Madras as Tamil Nadu have not been answered by any one of the speakers who spoke about it.
Sheel Badra Yajee: I have answered it.
Anna: I cannot understand- I very rarely understand- your language and, therefore, I do not know whether there is logic or not but I would say that some of the arguments advanced were not proper. One Honorable Member was saying that there are Telugu knowing people in Tamil Nadu, Malayalam and Kanarese speaking people and, therefore, to name Madras as Tamil Nadu will create a sort of tremor in their hearts.
May I inform this House, through you, Sir, that all these arguments were advanced and shattered in my part of the country. All these arguments did not stand the onslaught of reason and logic. For the sake of informing this House I may inform you Sir, that on 24th February 1961 the Leader of the House in the state assembly stood up to say that he was accepting part of the non official resolution brought forward not by the DMK or any other political party which is considered to be inimical to Congress, but by a PSP [Praja Socialist Party]Member.
That PSP member brought forward a non official resolution for renaming Madras as Tamil Nadu and it was discussed many days and finally the then Finance Minister and the Leader of the House Mr.C.Subramaniam, stood up to say that he was accepting a part or the spirit of the resolution and added that thereafter all publications of the Madras government would appear in the name of Tamil Nadu Government.
It is in such a way that all publications in Tamil in the Tamil Nadu government are being printed and published. As a matter of fact, after making the historic declaration on the floor of the Madras assembly on 24 th February, the very next day the Finance Minister had to present his budget and in presenting the budget, the opening words of the Finance Minister were: " In consonance with the declaration made yesterday, I am now presenting to budget for Tamil Nadu."
Therefore all the arguments that Telugu speaking, the Malayalam speaking, and the Kanarese speaking people will be up against this change in name fall to ground because part of this has been accepted by the Government.
The part relating to the amendment of Constitution, the word Madras to be deleted and the word Tamil Nadu to be inserted was not accepted.
Therefore, even the Government much less by the Madras Congress leaders cannot accommodate the sentimental arguments advanced. Sir, I am really surprised to see how ill informed my Hon. friends are, those who advanced arguments against the Bill. One Hon. Member stated here that Kollegal is in Tamil Nadu. That Hon. Member unfortunately not present in the House at present. I may tell them and his friends may tell him, that Kollegal today is part of Mysore. It has been taken away from the composite State of Madras and after the formation of linguistic states, has gone to Mysore.
If my Hon. friend is so ill informed about Kollegal, I am not surprised at his arguments that nowhere in Tamil literature does the word Tamil Nadu occur. A politician who cannot understand that Kollegal does not form part of Tamil Nadu cannot be expected to be conversant with Tamil literature. For the edification of the House and for his own edification, I will point out the names of certain books wherein the word Tamil Nadu is to be found.
These are books written 1800 or 2000 years ago. I am reading the name in Tamil but the Hon. Member who made this allegation is a Tamilian Congressman and he can understand and the Hon. Deputy Minister who will be making the reply. She being also a Tamilian may tell him. The names of Paripaadal, Pathitrupathu and more popular names of Silapathigaram and Manimegalai.
These are all Tamil classics written more than 1000 years ago and in Paripaadal it is stated " Thandamizh veli Thamizh Naatu agamellam" which means Tamil Nadu that is surrounded by sweet Tamil on all three sides. In Pathitrupathu, a classic written about 1800 years it is stated "Imizh kadal veli Thamizhagam" meaning Tamil Nadu which has got sea as boundary.
In Silapathigaram it is stated "Then Thamizh nannadu" meaning good Tamil Nadu and in Manimegalai it is stated"Sambutheevinul Tamizhaga marungil " Tamil Nadu which is called Sambutheevu.
If my Hon. Members would like to have more popular illustrations I would like to refer them to the poems of Poet Kamban and Sekkilar both of whom have definitely used the word Tamil Nadu. It was only afterwards that there were three kingdoms, the Cheranadu, The Cholanadu and the Pandyanadu. Tamil Nadu is to be found in the classics of Tamil. It is not that there is poverty of ideas in the classics.
It only shows that my Hon. friend does not spend much thought or time over the Tamil classics. I may point out for the edification of this House that when the Congress government in Tamil Nadu purchased the Jaipur Palace at Ooty known as Aranmore Palace they immediately renamed the Palace as Thamizhagam.
I am pointing this out to say that the Congress there is trying to assuage our feelings, is trying to carry Tamil Nadu people along with them by saying they have renamed the Aranmore Palace as Thamizhagam, that they are publishing all the Tamil manifestos as Tamil Nadu Government publications, that only for international correspondence they want the name "Madras".
They are not prepared to amend the Constitution. If the arguments advanced by some of the Tamil Nadu Congress people were to be read by the Chief Minister of Madras, he would turn around and say "You too Brutus". All the arguments advanced for not renaming it falls flat on the ground because even the Congress Government there does not approve of these arguments.
Another particular issue was raised here that the Bill is being brought forward only as a publicity stunt of the Communist party. Why don't we appreciate the Communist Party for its sense of political expediency? Are not all political parties interested in getting political publicity? Is publicity a heinous crime? Why do you publish reports and books on Five-year plans? Is that not publicity done at public cost? Yet you accuse other political parties saying that this is publicity.
But let me tell this House through you, that even though you defeat the Bill, he has gained that publicity. You are not going to rob him anymore of that publicity. When he comes to Tamil Nadu he can conveniently face Tamilians and say, "I pleaded for you but it is the ruling party that let you down." Therefore you have unawares walked into Mr.Gupta's snare. I would have appreciated if the ruling party had approached Mr.Bhupesh Gupta and stated, "Do not bring in this non-official Bill, we ourselves are interested in it, we will bring it forward."
Then Mr.Santhanam pointed out that we have an uphill task in retaining Madras, we had to fight with so many people and we retained Madras. I can claim some amount of credit in that fight and when I was in the thick of that fight, I did not find Mr.Santhanam by my side.
Akbar Ali Khan: At the cost of Andhra
Anna: With the consent of the Andhras, I can say that. That is because the present government there is providing even today, in the border areas, measures for safeguarding Telugu culture and for imparting Telugu language. Therefore though Madras has been taken by Tamilians, we have no enmity with the Andhras.
But my friend Santhanam was saying that it was such an uphill task, retaining Madras that we would like to keep Madras. This is not a question of keeping Madras or giving it up. This is the question of keeping Madras in Tamilnadu and renaming the state as Tamil Nadu. Madras, after all is the capital city of Tamil Nadu, as Ahamadabad happens to be the capital city of Gujarat, as Chandigrah happens to be the capital city of Punjab.
If this logic of naming the state after the name of capital city is to be followed, Kerala should be renamed Trivandrum, Andhra is to renamed Hyderabad, Punjab is to be renamed Chandigarh and Gujarat to be renamed Ahamadabad.
Bhubesh Gupta: And Bengal should be renamed Calcutta.
Anna: My government, my Congress government in Madras is interested in bilingualism. That is because its head Government is interested to have two names for everything, India that is Bharat, Jana Gana Mana and Vandhe Madaram. They always want to keep two blocks.
Take something from here, take something from there. So the Madras government is having Tamil Nadu for the consumption of Tamilians and Madras for all India consumption.
It is a very awkward word "duplicity". And that is why my friend Mr.Bhupesh Gupta was saying that some of the congress people talk in one way there and talk in another way here. No Congress can face a Tamilian audience and say that the name Madras should be retained. I challenge it.
T.S.Pattabhiraman {Madras}: We have faced it during the agitation of Tamil Arasu Kazhagam and my friend knows it. What he is saying is complete travesty of facts.
Anna: I know how Pattabhiraman faces agitation. I wont say it. Let us not face each other as Congress and DMK. Let us face the Tamilian public on this single sanctified issue of renaming the state and if you carry along with you 51 percent of the people I am prepared to bow my head before you. This is not a party issue at all. The renaming of Madras as Tamil Nadu has been accepted by the Communist Party, by the DMK, by the PSP and you will be surprised, by the Madras branch of Swatantra Party too. Therefore all parties are one in this issue of renaming Madras as Tamil Nadu.
T.S.Pattabhiraman: None of them put it in their election manifesto.
Anna: I would present a copy of the DMK election manifesto to him tomorrow. I am sure Pattabhiraman knows Tamil. This issue has been an issue for more than 10 to 15 years. He was saying that only Tamil Arasu Kazhagam was fighting for it. It is true partially because it was only the Tamil Arasu Kazhagam that started an agitation for it, but all other political parties were immensely intimately interested in this issue.
They have printed it in their manifestos, in their political speeches and no District Conference of DMK took place without passing this resolution of renaming Madras as Tamil Nadu. Therefore it is not simply on the spur of the moment that I am pleading for it. My sorrow is that my friend Mr.Bhupesh Gupta had stolen the thunder from me by sponsoring this Bill. But for that, I would like to present before this House that this has been an issue all along in Tamil Nadu.
And they have not answered Mr.Bhupesh Gupta; What do you loose by renaming Madras as Tamil Nadu? Nobody has answered that.
N.M.Lingam [Madras] Anyway what do you gain by renaming it as Tamil Nadu?
Anna: What do I gain? What have you gained by renaming Parliament as Lok Sabha? What have you gained by renaming Council of States as Rajya Sabha? What have you gained by renaming President as Rastrapathi? Therefore I say what do you loose? This is important because if you were to loose something precious, we would not press for it. If you do not loose something fundamental, we will press for it.
The other point was raised, what do you gain? We gain satisfaction sentimentally; we gain satisfaction that an ancient name is inculcated in the hearts of millions and scores of millions of people. Is that not enough compensation for the small trouble of changing the name? Therefore all the arguments that have been advanced have been shattered.
They have advanced an apologetic argument saying that if the State government had come forward with this, we would have accepted this. And they are perfectly aware of the composition of the State legislature where the Congress party is in a majority. Would you ask the Congress member in Madras State legislature to vote for such a bill if it were to come there, without party whip? No
T.S.Pattabhiraman: Your party members could have brought forward a resolution in the House and changed the name. Why have you not done it for past seven or eight years?
Anna: I am coming to that. When we present such a bill to the Madras legislature, they say that if you want to rename, an amendment to the constitution is necessary and an amendment of the Constitution is possible only when you go to Parliament.
T.S.Pattabhiraman: I am saying a resolution, not a Bill. A resolution can be made.
Anna: I may say for the information of the Hon. Member that we pressed this point during the discussion on the non-official Bill of PSP. In fact we even staged a walk out. The DMK and Communist party joined together in the walk out. That is our numerical position there. When the non-official resolution was discussed in the Madras assembly we pressed for the constitutional amendment and the only explanation offered to us was that it was only possible at the level of Parliament. And when we come to Parliament we are asked to go back to the state legislature. We are asked to go to Parliament because you are entrenched in both places not because your logic is sound but simply because you are entrenched in both places.
G.Rajagopalan [Madras] We are entrenched because the people vote for us. It has been discussed even during elections. There had been fasts by certain members and one person even lost his life after fasting. Even after that we won elections. That shows the people still want as it is- not for the satisfaction of some politicians who want a slogan.
Anna: Madam Deputy Chairman, I am very glad that the discussion is becoming very interesting. But I may say for the information of the House that DMK has nothing to do with fasting. The fasting was undertaken by a non-party man, in fact a relative of the Chief minister of Madras Mr.Sankaralinga [Nadar}. And to say that in spite of fasting you have not changed shows how human you are. Therefore the question was discussed there. We were asked to go to Parliament. When we come to Parliament we are again sent back to legislature. In both places the answer is as my Hon. friend had stated, " The people had voted for us". Well that is a fact, a tragic fact, and a black fact that ought to be seen.
G.Rajagopalan: In spite of you tragedy is still there
T.S.Pattabhiraman: He says tragedy will be permanent. The tragedy of Congress getting a majority at every election will be a permanent feature and we are prepared to accommodate you.
Anna: Madam Deputy Chairman my friend was saying that this tragedy is going to be permanent. Woe to the country and to the people. That is all what I can say. But I would like to press this point that a Constitution amendment can be thought of and made only through Parliament. That is why we have approached The Parliament. If any amendment is brought forward on this or any suggestion is given that it should be circulated to gather public opinion, we take up that challenge. I do not ask you to take this as an election issue. Do not be afraid of that.
[Interruptions]
We are not making it an election issue. This is an issue to be taken to the people for getting their consent or otherwise. That is not going to affect your offices. Nobody thinks about that. You may remain there. This is not a question of analysis of our different parties. This is a question wherein a particular issue has to be referred to the public. Are you prepared for that? That is what we ask. You are not prepared for that and that is why I say
N.M.Anwar [Madras] Madam on a point of information I have got the highest respect and regard for my good friend Mr.annadurai. But will he kindly explain what there is in retaining the name Madras that has got such worldwide publicity? How is he going to meet that point of view? Where is the difficulty in retaining this worldwide name of Madras?
[Interruptions]
Anna: The only point in answer to the Hon. member Mr.Anwar is this. What we gain is our sentimental satisfaction and status of our ancient land. If in Madras we change the name of China Bazaar into Nethaji Subhas Chandra Road nothing is changed in the street but something is changed in our thinking, in our soul, in our fibre. That is why we are pressing for it. Not because we think that keeping Madras will be wrong.
N.M.Anwar: My question is not that. We agree that there is something good in calling it Tamil Nadu. But what is your allergy to Madras, which has got a worldwide publicity.
Anna: My allergy is if Madras is used as name of the state, you confuse the capital with the state. Madras is the name of the capital city. Tamil Nadu is the name that ought to be given to the state. There ought to be a distinction between the name of the state and its capital, and therefore, I whole-heartedly support the Bill brought forward and I would commend it to the House.
On 96th Birth Anniversary - R. Kannan, Heads Civil Affairs with the U.N. Peacekeeping Force in Cyprus, Courtesy Hindu, 15 September 2005
Today is the 96th birth anniversary of Anna. His sense of mission, his simplicity, compassion, and talents may seem outmoded. But so long as human values remain a worthy goal, his legacy will be relevant.
THE NIGHT of March 5, 1967, C.N. Annadurai, known better by his diminutive `Anna' or elder brother, remained sleepless. There was reason to be excited. He was to be sworn in Chief Minister of Madras State the next day. But it was not his Dravida Munnetra Kazhagam's flush of victory against the Congress Goliath that kept him in that state. Anna explained: "I was wide awake through the break of dawn. I visualised huts, the faces of those in search of food and those waiting in queues, with their legs aching, before ration shops. I kept wondering how I could remedy the situation. I could not fall asleep."
Anna opted for public life over a potential career to serve. Office, Anna soon realised, was also a sentence. Only 20 days into his new job, he wrote dolefully: "I am already tired of my new ministerial status filled with mirthless laughter, contacts devoid of context and insipid conversations." He wondered how Congressmen had spent 20 years in this state.
Let us be clear. Anna was neither antipathetic to power as an instrument nor averse to the Machiavellian machinations that politicking entailed. In fact, he parted company with his mentor E.V. Ramasamy (Periyar) in pursuit of power. He possessed great equanimity and a vision.
In his four decades of public life, Anna espoused social justice, regional autonomy, and the interests of Tamils and Tamil Nadu. As party leader, he felt secure unlike many others in similar positions. While nurturing talent and leadership within the party, he remained faithful to democratic precepts — staying clear of nominating an heir even when he was afflicted with a serious illness. In the end, the party witnessed an organic choice in the election of `Kalaignar' M. Karunanidhi.
The DMK was Anna's family. Partymen or thambis (younger brothers) found their Anna at once awesome and accessible. The thambis and their families began to internalise Anna's successes and defeats as their own, even as their elder brother instilled self-esteem and Tamil nationalist pride in them. Anna treated all thambis with equal affection although he showed great judgment and foresight in tapping their potential. He thus invited the genial `Navalar' V.R. Nedunchezian, an Annamalai University graduate, to take over from him as party general secretary. Early on, a multifaceted Mr. Karunanidhi attracted Anna's attention for his organisational and other abilities. Anna also skilfully utilised the services of the charismatic actor, `Makkal Thilagam' (the people's darling) M.G. Ramachandran.
To one hailing from a modest family background, a backward class scholarship brought a college education in Madras. Drawn to public service and the non-Brahmin ferment, Anna resigned his job as schoolteacher and spurned other offers and suggestions of employment. Anna's gifted oratory and élan in both Tamil and English marked him out quickly. Together with Periyar, he espoused rationalism, social justice, and an independent south India (Dravida Nadu). A more mellowed Anna, secular to the core, later described himself as a Hindu sans the sacred ash, a Christian minus the holy cross, and a Muslim without the prayer cap. He was also to give up the Dravida Nadu demand, although he had seen separation as a panacea and believed that Pakistan's emergence would have a domino effect.
Barely 40 years old, Anna had founded the DMK in 1949. The young leader beckoned `thazhntha Tamizhagam' (the fallen Tamil nation) to rise to its former splendour through his dazzling powers of oratory and writing. Anna's plays, Chandrodayam (Moonrise), Oar Iravu (One night) — Anna literally wrote it overnight — Velaikkari (Servant Maid), Sorgavasal (The entrance to paradise) and Needhi Devan Mayakkam (The Judge's dilemma), heralded a new era of social introspection and revolutionised an entertainment industry long captive to epics and legends. His script was no less scintillating.
The poet, Bharatidasan, and the nationalist journalist, Kalki Krishnamurthy, aptly called Anna Arignar (scholar) with the latter comparing him with playwright George Bernard Shaw. As Anna's genius enlisted actors N.S. Krishnan, K.R. Ramasamy, Sivaji V.C. Ganesan, D.V. Narayanasamy, S.S. Rajendran and M.G. Ramachandran in the party's service, the organisation grew in strength. It finally captured power in a span of just 18 years.
But how has Anna's legacy fared since? Institutionally, social justice — Anna's main plank — remains strong. The unanimous demand from political parties for legislation to undo the effects of the recent apex court judgment on affirmative action in self-financing colleges is a classic case. In practice, however, the sense of alienation of the Adi Dravidas (Dalits) in Tamil Nadu and also elsewhere appears to have accentuated. While the intermediary communities and individual Dalits have shown social mobility, a cross-section of them seems to feel excluded despite the Dravidian parties' casteless and social welfare moorings. The emergence of caste-based and exclusive Dalit organisations is testimony that Anna's vision of inclusiveness has not been fully realised. Some parties seem to have reacted by installing the depressed classes and women in senior positions. Institutional arrangements notwithstanding, it is time to de-emphasise caste-based politics and vigorously promote social reform.
Cooperation and opposition
Ironically, the proliferation of regional parties has achieved little in securing more power for the States. In Anna's native Tamil Nadu, the Congress remains permanently emaciated. The Dravidian parties, which between themselves have a two-thirds share of the popular vote, remain the largest players. Despite their long stint in power and their significant roles in coalition governments at the Centre, their influence is yet to fully translate into the State's gains. Anna's political philosophy of "opposition if necessary and cooperation where possible" is eminently worth recall.
In retrospect, Anna's Dravida Nadu demand might be interpreted as a carefully preserved negotiating position for regional autonomy leading to a more equitable distribution of power, wealth, and resources between the Centre and the States. Regretfully, however, the Sarkaria Commission recommendations on Centre-State relations continue to gather dust even as regional parties concentrate on power-sharing at the Centre. Compare this with Anna's disinterested response to Congress leader P. G. Karuthiruman — the latter wondered about Anna's reaction in the wake of speculation that his Government might face punitive action for excluding Hindi from government schools as part of the DMK's two-language formula. Anna's response was that he would tender his resignation and leave as happily as when he had taken office. Today education remains on the concurrent list (since its transfer in 1976 from the States' list, a post-Anna development). Is anyone seriously interested in getting it back to the State list?
Language was an important issue during Anna's time. Some might argue it remains crucial even today. It is important to note that Anna himself had an open mind on the question, asking only for a home-grown solution over a period of time. He wanted all `regional languages' to have the status of national languages. This is yet to become a reality.
Apart from practicalities, concerns about the quality of education, governance, and integration remain. It is surely a matter of satisfaction that civil servants who did their exams in the `regional languages' have proved just as able and committed as has anyone else. Anna would have treated the question of language as a personal one, leaving the choice in the individual's hands. Besides, globalisation and the Internet revolution seem to have taken the political sting out of the language issue.
Thirtysix years on, Anna appears ubiquitous in Tamil Nadu. His statues abound even as thousands of streets and hundreds of institutions and buildings proclaim his name, thanks to the efforts of those claiming his legacy. Yet Anna remains at best a symbol. His individual thambis and thangais (younger sisters) are a generally prosperous lot. The elder brother, however, might have found a large majority of them otherwise poor. Anna's sense of mission, his simplicity, compassion, and talents may look outmoded. But so long as human values remain a worthy goal, his legacy will be relevant — he cared not for those who could help themselves, but for those who needed help.
".
அது ஒரு காலம். தமிழ் நாட்டுக்கு மதராஸ் மாஹாணம் என்ற பெயர்தான் வேண்டும் என்று வலியுறுத்திய காலம். தமிழ்நாடு என்று பெயரை மாற்றினால் மதராஸ் மாஹாணத்தில் வாழும் தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள், மார்வாடிகள், ஏனையோர் எல்லாம் தாம் அந்நியர் என்று விரட்டப் படுவோமோ என்று அஞ்சுவார்கள் என்பதனால், பெயரை மாற்றக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி குதித்த காலம்.பம்பாய் ராஜதானி குஜராத், மஹாராஷ்ட்ரா மாஹாணங்களாகப் பிரிவதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, மதராஸ் ராஜதானி, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பிரிவது பொறுக்கவில்லை.மதராஸ் மாஹாணம் தமிழ்நாடு ஆனதையும், மதராஸ் பட்டணம் சென்னை மாநகர் ஆனதையும் கடுமையாய்க் கிண்டலடித்தவர்கள் இன்று பம்பாயை மும்பை என்கிறார்கள். மைசூர் மாஹாணத்தைக் கர்நாடகா என்கிறார்கள். பெங்களூரு, கொல்கொத்தா என்ற பெயர் மாற்றங்களெல்லாம் இவர்களுக்கு வெல்லமாய் இனிக்கின்றன.இன்னும்கூடச் சென்னை மாநகரை மெட்ராஸ் என்று மட்டுமே வீராப்பாய்ச் சொல்லுபவர்கள் ஐ.ஐ.டி. மெட்ராஸ்காரர்கள்.
|
அறிஞர் அண்ணா வெற்றி பெற்றார்
க. திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்
தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிப் புகழ்பாடாத அரசியல் இயக்கங்களோ தனிமனிதர்களோ இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயின.
அறிஞர் அண்ணா காங்கிரசில் இருந்ததில்லை. அவர் தம்மை நீதிக்கட்சிக்காரராகவும் சுயமரியாதை இயக்க வீரராகவும் வெளிப்படுத்திக் கொண்டார். அவர்க்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. தம்மை நெசவாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையும் பெருமிதமும் அடைந்தார். அதனால்தான் போலும் திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அவர் பொதுவாழ்க்கைக்கு அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியார் அவர்களை முதன்முதலில் சந்தித்தார்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் மாபெரும் பேச்சாளராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் திருப்பூர்ச் செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் தமது பேச்சை எழுதிவைத்துப் படித்தார். அறிஞர் அண்ணாவின் பொது வாழ்க்கை -அரசியல் வாழ்க்கை 1934இல் தொடங்கி 1969இன் தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை மாற்றிக்காட்டினார். 'போரில் பெரிது புரட்சி' என்பர். அத்தகைய புரட்சியைத் தமது நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் ஜனநாயகத்தின் மூலம் செய்துகாட்டியவர் அறிஞர் அண்ணா!
நீதிக்கட்சியின் கடைசிக் காலகட்டத்தில்தான் அறிஞர் அண்ணா அக்கட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். பெரியார் கட்சியின் தலைவர்; அறிஞர் அண்ணா நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர். எப்போது? கட்சி 1937 தேர்தலில் தோற்ற பிறகு! இக்கட்சி தோற்கும் என்று தெரிந்து அதன் தலைவர்களுள் பலர் காணாமல் போயிருந்தனர். ஒரு சிலர் காங்கிரசு கட்சிக்கு மாறியிருந்தனர். இன்னும் சிலர் காங்கிரசுடன் இரகசிய உறவு வைத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் அரசியல் துறவறம் பூண்டனர்.
பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தோற்றக் கட்சியைத் தூக்கிப் பிடிப்பானேன்?
இந்நிலை குறித்து அண்ணா, தி.மு.க. உருவானதற்குப் பிறகு 5-2-1956 தேதியிட்ட 'திராவிடநாடு' இதழில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
"நான், தம்பி! அப்போது ஜஸ்டிஸ் கட்சிக்குப் புகுத்தப்பட்ட புது இரத்தம் - இளவெட்டு - ஜஸ்டிஸ் கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்ற அளவிலே அங்குச் சீமான்களால் அனுமதிக்கப்பட்டு இருந்தேன்; அந்த நிலை கிடைத்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம் பிறந்ததுதான்."
"துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம்" இயற்கையாக உருவாயிற்று. அதற்குக் கொள்கை அடிப்படையும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது என்று அறிஞர் அண்ணாவின் கூற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆகவேதான் நீதிக்கட்சியில் அறிஞர் அண்ணா அமைப்புச் செயலாளராகவும், உதவிப் பொதுச் செயலாளராகவும் பின்னர் பொதுச் செயலாளராகவும் ஆனார். நீதிக்கட்சியில் அவர் பொறுப்பேற்றது முதல் அதனை மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார்.
அறிஞர் அண்ணா சென்னையிலுள்ள ஒய்எம்சிஏவிலும், காம்ரேட் லிட்டரரி பார்லிமெண்டரியிலும், சென்னைச் சுயமரியாதை சங்கத்திலும் அடிக்கடி பேசுவார். இவர் பேச்சைக் கேட்கப் பலர் வருவர். சென்னைச் சுயமரியாதைச் சங்கக் கூட்டம் தவிர்த்து மேலே உள்ள மற்ற இரண்டு அமைப்புகளிலும் இராஜாஜி, வழக்கறிஞர் வி. சி. கோபால் ரத்னம், டி.செங்கல்வராயன் போன்றோர் அடிக்கடி பங்கேற்பர். அக்கூட்டங்களில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு அறிஞர் அண்ணா உரையாற்றி இருக்கிறார்.
அறிஞர் அண்ணா மறைந்து அவர்க்கு இரங்கல் கூட்டம் சென்னைக் கடற்கரையில் நடைபெற்றது. அப்போது இராஜாஜி. "When I was PrimeMinister of Undivided Madras Mr. Annadurai was a smart and small orator denying the God and religion . . ." என்று பேச்சைத் தொடங்கினார். 1937ஆம் ஆண்டில் இராஜாஜிக்குக் கடவுளையும் மதத்தையும் எதிர்க்கிற ஒரு சிறிய, பேச்சாளராக அறிஞர் அண்ணா அறிமுகமாகி இருந்தார்.
புகழ்பெற்ற வழக்கறிஞர் வி.சி. கோபால் ரத்னம் (வி.சி. தேசிகாச்சாரியின் மகன்) பல வகையான புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உள்ளவர். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபாவின் அங்கத்தினர். நாடக, சிறுகதை எழுத்தாளர். நகைச்சுவையாகப் பேசக்கூடியவர். (ஆங்கிலத்தில் 5 அடிகள் கொண்ட நகைச்சுவையோடு கூடிய லிமரிக்கு வகைப் பாடல்களை மேடைகளில் கூறுவாராம்.) அத்தகைய பேச்சாளரான கோபால் ரத்னம் கலந்துகொண்ட நிகழ்வுகளில் அறிஞர் அண்ணா பேசியிருக்கிறார்.
செங்கல்வராயன் அவர்களோடு பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தொடக்கத்தில் - 1937இல் சில மேடைகளிலேயே பங்கேற்று இருந்த அண்ணா துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு "சென்னைத் தோழர் சி. என். அண்ணா துரை தலைமையில்" என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அம்மாநாட்டில் அண்ணா இந்தி மொழியின் தீமையைப் பற்றி - அது பள்ளிகளில் கட்டாயப் பாடம் ஆக்கப்படக் கூடாது என்பது பற்றிப் பேசினார். இப்பேச்சைக் கேட்டு மாபெரும் சுயமரியாதை இயக்கப் பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகர்சாமி மிகவும் வியந்து பாராட்டி இருக்கிறார். ஆக, அறிஞர் அண்ணாவின் தலைமை உரையும் சிறை வாழ்வும் சிறை சென்றதற்கான காரணமும் இந்தியாகத்தான் இருந்து இருக்கிறது.
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் (1944) செய்யப்பட்டுவிட்டது. திராவிடர் கழகத்தையே அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார் - அண்ணா. பெரியார்க்கு அதில் உடன்பாடு இல்லை. இதன் விரிவுதான் திமுக தோன்ற முழு முதற் காரணமாயிற்று.
பெரியாரோடு இராமநாதன் இருந்தார். அழகிரி இருந்தார். (குத்தூசி) குருசாமி இருந்தார். ஜீவா இருந்தார். கைவல்யம் இருந்தார். கி. ஆ. பெ. விசுவநாதம் இருந்தார். கே. எம். பாலசுப்பிரமணியம் இருந்தார். கோவை அய்யாமுத்து இருந்தார். பாரதிதாசன் இருந்தார். இப்படிப் பலர் இருந்தனர். அறிஞர்கள் அநேகர் அவரோடு தொடர்பு வைத்து இருந்தனர். அதில் சிலர் அவரது 'குடிஅரசு', 'விடுதலை' மற்றும் இதர ஏடுகளிலும் எழுதினர். இவர்கள் எல்லாம் பெரியாரின் இயக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முயன்றனரே தவிர வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அறிஞர் அண்ணா வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். இருந்தாலும் விடுதலையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகுதான் அவரது கருத்தின் 'பரிமாணம்' உலகுக்குத் தெரிந்தது.
'விடுதலை'யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய 'பாலபாரதி'யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய 'நவயுக'த்திலும் எழுதியிருந்தார். 'ஆனந்தவிகட'னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொணர அடிப்படையாய் அமைந்தன.
ஆங்கில உரைநடையைப் போல அவரது உரைநடை அமைந்து இருந்தது. எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு 'சங்கீத லயம்' இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணுகிறபோது அவர் பேச்சை முடித்து விடுவார்.
அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான 'திராவிடநாடு' இதழிலும், 'காஞ்சி' இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள 'தம்பிக்குக் கடிதம்' எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த மடல்களின் எண்ணிக்கை 290. இம்மடல்களிலிருந்து அவரது இயல்பை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அம்மடல்களில் அவர் தெரிவிக்கிறார். அடைப்பில் இருப்பது. அவர் எழுதிய தம்பிக்கு மடலின் கால வரிசைப்படுத்தப்பட்ட எண்கள்.
கேட்போர் மனம் குளிரப் பேசுவதில்லை (168); பொருத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் இல்லை (178); சுடு மொழி கூறும் பழக்கம் இல்லை (65); விரைவாக மன வேதனையை நீக்கிக் கொள்ளும் இயல்பு இல்லை (201); உருட்டி மிரட்டிப் பேசுவதில்லை (255); சொந்த விருப்பு வெறுப்பு அதிக அளவில் இல்லை (283); பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக்கொள்வதில்லை (86); சுறுசுறுப்புடன் ஓயாது உழைப்பது இல்லை (1); நாள், நேரம்/காலம் பற்றிய நினைவு இருப்பது இல்லை (182).
இப்படிப்பட்ட இயல்பைப் பெற்றிருந்ததை அவரே எழுதி உள்ளார்.
திரைப்படத் துறையில் 'வேலை தமக்கு ஒன்று (இருக்க) வேண்டும்' எனக் கருதி சென்றவர் அல்ல அண்ணா! 'திரைப்படத் தொடர்பு மூலமாக ஏதேனும் நல்லறிவுப் பிரச்சாரம் செய்ய வழி கிடைக்குமா' என்ற ஆவல் காரணமாகவே தாம் திரைப்படத் துறைக்குச் சென்றதாக அவரே குறிப்பிட்டு இருக்கிறார். நாடகம் மற்றும் திரைப்படத் துறைக்குத் திராவிட இயக்கத்தினருள் முதன் முதலில் அடியெடுத்துவைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தான்!
அறிஞர் அண்ணாவின் நாடகம் மற்றும் திரைப் படத்துறை நுழைவு மக்களை ஈர்க்கும் விதமாக அமைந்து இருந்தது. இத்துறையிலும் அவரைப் பின்பற்றி அநேகர் எழுதினர். சில பட அதிபர்களுக்கு அறிஞர் அண்ணா திரைக்கதையின் அமைப்பை திருத்தம் செய்து தந்து இருக்கிறார். அதற்காகத் தமது பெயரைத் திரைப்படத்தில் போட வேண்டியதில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டது உண்டு. உதயணன் கதையை ஒரு கம்பெனியார் 1945இல் திரைப்படம் ஆக்க முனைந்தபோது நடிகமணி டி. வி. நாராயணசாமியை கதாநாயகனாகப் போட்டால் கதை உரையாடல் அமைத்துத் தருகிறேன் என்று அண்ணா கேட்க, அதற்கு அந்நிறுவனத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணாவும் அதற்குக் கவலைப்படவில்லை. இது அண்ணாவுக்குக் கிடைத்த முதல் திரைப்பட வாய்ப்பு; இருந்தாலும் அதைப் பற்றி அவர் ஒன்றும் கவலைப்படவில்லை.
'தாய்க்குப் பின் தாரம்' படம் எடுப்பதற்கு முன் தேவர் காஞ்சிபுரம் சென்று அறிஞர் அண்ணாவிடம் திரைப்படம் எடுப்பதற்குக் கதை ஒன்று கேட்டார். அப்போது அவர், "என்னிடம் நாய், குதிரை, மாடு, புலி, சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கின்றன. இதை வைத்து ஒரு கதை இருந்தால் நல்லது" என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அண்ணா, "நான் எழுதியுள்ள கதைகள் என்று சில இருக்கின்றன. அவை தங்களுக்கு ஏற்றதா என்று பாருங்கள். நீங்கள் வைத்துள்ளவைகளுக்கு என்னால் எழுதித் தர முடியாது. என்னிடமுள்ளவைகளை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று கூறினார். தேவர் வெறுங்கையோடு சென்னைக்குத் திரும்பினார்.
அவர் ஈடுபாடு கொண்ட அத்தனை துறைகளிலும் அவரைப் பின்பற்றியவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். அதற்காகப் பெருமையும் பெருமிதமும் அடைந்தார்கள்.
அறிஞர் அண்ணா ஏதுமில்லாதவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர்களை அண்ணா 'தெருவோரத்து மக்கள்' என்று அடையாளங் காட்டினார். தம்மையும், கட்சிக்காரர்களையும் 'சாமான்யர்கள்' என்று மக்களிடையே அறிமுகப்படுத்திக்கொண்டார். உண்மையில் 'அவர்கள்' சாமான்யர்களே! தொண்டை மண்டலப் பகுதிகளில் (சென்னை, செங்கற்பட்டு, வடஆர்காடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி) வாழும் பாமரனின் பாதிப்பு அவரது உடை, உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் பேச்சுகளில் இருந்தன. இது சாதாரண மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அறிஞர் அண்ணாவின் மீது ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்குப் பிறந்தது.
திமுக தோற்றுவிக்கப்பட்டவுடன் அதனை அவர் உடனடியாகத் தேர்தலில் ஈடுபடுத்தவில்லை. கட்சியை - அமைப்பை அவர் வளர்த்தமுறை, அதற்கான சட்டத் திட்டங்கள் ஏற்படுத்தியது எல்லாம்தான் இன்றைய தினமும் அக்கட்சித் தாக்குப்பிடிப்பதற்குக் காரணமாகும். இப்போது திமுகவில் 13ஆவது முறையாக அமைப்புத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திமுகவில் சார்பு மன்றங்கள், துணை மன்றங்கள், படிப்பகங்கள் அதன் மேல் அமைப்புகளாக இயங்கிய ஊர்க்கிளை, உட்கிளை, வட்டக்கிளை, பேரூர்க்கிளை, நகரக்கிளை, பகுதிக்கிளை, மாவட்டம், தலைமை என அமைப்பு முறைகள்; தேர்தல்கள்; நிர்வாகிகளின் தேர்தல், ஒவ்வொரு அமைப்புக்கும் உட்குழுக்கள் என அமைக்கப்பட்ட விதம் சிறப்பானவை. கம்யூனிஸ்டுக் கட்சியைப் போல திமுகவுக்கு அறிஞர் அண்ணா 'தலைவர்' பொறுப்பை ஏற்படுத்தவில்லை. அங்கே பொதுச் செயலாளரே எல்லா அதிகாரமுடையவராக இருந்தார்.
திமுகவினர் பொதுக்கூட்டம் முதல் மாநாடுகள்வரை நடத்துவதற்கு அறிஞர் அண்ணா காரணமாக இருந்தார். காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுக் கட்சியினர் என அனைவரும் மாநாடுகள் நடத்தினர். என்றாலும் திமுகவினர் 'கலையம்சம்' உடைய மாநாடுகளை நடத்துவதற்கு அறிஞர் அண்ணாவே காரணம் என்றால், அது மிகையல்ல. பொதுவாக இருவர் சந்திப்பைக்கூட 'மாநாடு' என்று அழைக்கலாம். ஆனால், திமுகவினர் மாநாடு நடத்த தொடங்கியதற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டமுள்ள நிகழ்வினைத்தான் 'மாநாடு' என்று கூற வேண்டும் என்கிற புதுப்பொருள் நாட்டில் ஏற்படலாயிற்று.
முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937-38) 'தனிநாடு' கோரிக்கையை முன்நிறுத்தியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகின்றவர்களும் பேசுகிற நிலப்பகுதிகளும் ஒன்றாக இருந்ததால் முதலில் தனித் தமிழ்நாடு எனக் கோரப்பட்டு - பின்னர் அக்கோரிக்கையே 'திராவிட நாடு திராவிடருக்கே' எனும் தனிநாடு கோரிக்கையாக விரிவாக்கப்பட்டது. பெரியாரின் திராவிடர் கழகமும், அறிஞர் அண்ணாவின் திமுகவும் இத்தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தின.
அறிஞர் அண்ணாவின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே வளர்ச்சி பெறலாயிற்று. 1949இல் அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக உடனடியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 முதல் திமுக தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர். ஆளுங் காங்கிரஸ் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. திமுகவை ஒழிக்கப் பிரிவினைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
திமுகவைத் தடைசெய்துவிடுவார்கள் என்கிற பேச்சு தமிழகத்தில் மிகப் பலமாக உலா வந்தது. இத் தருணத்தில் அறிஞர் அண்ணா மக்கள் உரிமைக் கழகம் எனும் துணை அமைப்பை கே.நாராயணசாமி முதலியார் தலைமையில் தோற்றுவித்தார். இவ்வமைப்பை அண்ணா இறுதி வரை பயன்படுத்தவில்லை. தடைச்சட்டத்தை கழகம் அதன் சட்டத் திட்டத்தை திருத்திக்கொண்டதன் மூலம் பிரச்சினையை எதிர் கொண்டதால் அவ்வமைப்பை பயன்படுத்தவில்லை. இந்தத் தந்திரத்தை அண்ணா செய்யவில்லை என்றால் திமுகழகம் தடை செய்யப்பட்டு இருக்கும். தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுக இருந்திருக்காது.
கட்சியின் விதியை எப்படியெல்லாம் திருத்தினால் 'கழகத்தைக் காப்பாற்ற முடியும்' என்பதில் அண்ணா கருத்தாக இருந்தார். எம்.கே.நம்பியார் போன்ற வழக்கறிஞர்களோடு கலந்துரையாடி வர இரா.செழியனை அண்ணா அனுப்பிவைத்தார். மொத்தத்தில் கழகம் காப்பாற்றப்பட்டுவிட்டது.
அறிஞர் அண்ணாவின் தலைமையில் உள்ள கழகத்தை மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை அண்ணாவோ சாதுர்யமாக 'நாங்கள் பிரிவினையை கைவிட்டுவிட்டோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்றார்.
எந்தச் சூழ்நிலையிலும் அவரது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க அவர் தவறியதில்லை. பிரிவினைக் கொள்கையை அவர் கைவிட்டதற்குப் பிறகும் தமிழனின் தனித்தன்மையை அவர் நிலைநாட்டத் தவறியதே இல்லை.
"தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல் - உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை."
"தமிழ் என்ற தொன்மையானதொரு மொழிக்குச் சொந்தக்காரன் நான் என்பதை என்னால் மறக்க முடியாது. என்னுடைய முன்னோர்கள் எந்த மொழியில் பேசினார்களோ, என்னுடைய கவிஞர்கள் எந்த மொழியில் காவியங்களையும் தத்துவங்களையும் வழங்கினார்களோ; வற்றாத அறிவுச் சுரங்கங்களாக விளங்கிய இலக்கண, இலக்கியங்களை எந்த மொழியில் நாங்கள் பெற்றிருக்கிறோமோ, அந்தத் தமிழ் மொழி மைய அரசின் ஆட்சி மொழியாக ஆகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்."
மேலே உள்ள அவரது பேச்சிலிருந்து நாம் எடுத்துக் காட்டியுள்ள இரண்டு மேற்கோள்கள் அவரது கொள்கை உரத்தைக் காட்டுகின்றன.
திமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. அறிஞர் அண்ணா என்றால் 1966இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டியின்போது அந்த ஏடு வழங்கிய முன்னுரையில், "எங்கெங்கு எல்லாம் உலகப் பந்தில் தமிழர்ககள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டதுபோல 1962 தேர்தலுக்குப் பிறகு நிலைமை வளர்ந்து இருந்தது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்கு இழந்து வந்தது. ஒரு பக்கம் மத்திய அரசின் சட்டத்திலிருந்து திமுக மீண்டு எழுச்சியுற்ற நேரத்தில், மறுபக்கம் காமராசர் தமது கே-பிளான் மூலம் தமிழகக் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறியதையும் வரலாறு மறப்பதற்கில்லை.
இப்படித் திமுகவின் எழுச்சி - சாதாரண மக்களிடையே அவ்வமைப்புக்கு ஏற்பட்டிருந்த மரியாதை என மிக அதிகமாக இருந்தது. சென்னை மாநகரத்தின் அனைத்துக் குடிசைப் பகுதிகளிலும் திமுக கொடியில்லாத இடத்தைப் பார்க்க முடியாது. தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் சென்றால் தேநீர் விடுதிகள், அழகு நிலையங்கள், சலவையகங்கள் எல்லாம் திமுகவின் ஆதிக்கத்தில் இருந்தன. சாலையோரத்து மரங்களில் எல்லாம் தமிழ் மக்களின் இதயமாய்த் திமுக கொடி எங்கும் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது.
ஈ.வெகிசம்பத் அடிப்படைக் கொள்கை சம்பந்தமான பிரச்சினையைக் கிளப்பித் திமுகவிலிருந்து 1961 ஏப்ரலில் விலகினார். அப்போது வெளிவந்துகொண்டிருந்த 'மெயில்' ஏடு ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டது. அதில், திமுக என்கிற கொழுத்த மாடு இரண்டாகப் பிளக்கப்படுகிறது. முன் பகுதியைச் சம்பத் பிடித்துச் செல்கிறார். பின்பகுதியில் அம்மாடு போடும் சாணத்தை ஒரு கூடையில் ஏந்தி வருகிறார் - அண்ணா! 'மெயில்' அண்ணாவை அந்த அளவுக்குக் கேலிசெய்தது. ஆனால், சம்பத் எழுப்பிய பிரச்சினைகளுள் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அண்ணாவின் செல்லாக்குக்கு முன் அவை எடுபடவில்லை.
சம்பத் விலகலுக்குப் பின்னும் திமுகவில் அண்ணாவுக்கு எதிராகச் சிலர் சலசலப்புக் காட்டி வந்தனர். அவர்கள் தமிழ்வாணனின் 'கல்கண்டு' வார இதழின் மூலமாக அந்த எண்ணங்களை - அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டனர். அந்தக் 'கல்கண்டு' இதழ்களில் வெளியான தலைப்புகளைப் பாருங்கள். அடைப்பில் 'கல்கண்டு' இதழின் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவில் பிளவு (23.7.1964), அண்ணாவுக்கு அடுத்தவர் நாஞ்சில் மனோகரன் (15.10.1964), அண்ணா சொல்லியும் கேட்கவில்லை (3.9.1964), அண்ணா பெரியாராகிறார் (24.6.1965), எம்.ஜி.ஆரின் புகழ் அண்ணாவுக்கு இல்லை; எம்ஜிஆரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது (3.7.1965), அண்ணா யார்? எனும் தொடர் கட்டுரை (22.7.1965 இலிருந்து 15.10.1965 தேதியிட்ட 'கல்கண்டு' இதழ்கள்) என அண்ணாவுக்கு எதிராக கருத்துகள் வெளிவந்தன.
இப்படிப் பல நிகழ்வுகள் நடந்துகொண்டேயிருந்தன. இவையெல்லாம் அறிஞர் அண்ணாவின் செல்வாக்கைக் குறைக்கவே இல்லை. மாறாக அவை வளரவே துணை நின்றன. காங்கிரசுக்கு மாற்று திமுகதான் எனும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட 'மாஸ்டர் கிரிஸ்டியன்' எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட படிப்பார்வம் உள்ளவர். இப்புத்தகத்தினுடைய தமிழ் மொழி பெயர்ப்பை - 'புரட்சித்துறவி' எனும் தலைப்பிட்டு குமுதம் ஏடு - அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.
அந்த ஆர்வம் பொழுதுபோக்கு அல்ல. எந்த நிலையிலும் சிந்தனையை வளப்படுத்திக்கொள்ளுவது; மேலும் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது - இது அவரது இயல்பு; இவை எதற்காக? தமிழக மக்களுக்காக! `எனக்கென்று நீங்கள் கிடைத்தீர்கள்; உங்களுக்கென்று நான் கிடைத்தேன். யார் என்ன பேசினாலும் இந்தப் பிணைப்பை எவர் என்ன செய்ய முடியும்?' எனக் கூறிக் கழகத்தினரையும் தமிழர்களுள் அவரை விரும்புகின்றவர்களையும் பாசக் கயிற்றால் அவர் கட்டிப்பிணைத்தார்.
ஏதுமில்லாதவர்களை முன்னேற்றுவதும் தமது மொழி, இனத்திற்கு தனி அடையாளம் காண்பதுவே அவரது அரசியல் குறிக்கோளாக இருந்தது. தமது குறிக்கோளுக்குக் கட்சியையும், நாட்டையும் அங்குலம் அங்குலமாக அவர் நகர்த்தி வந்தார். இறுதியில் தமிழக ஆட்சியை மக்கள் அவரிடம் தந்தனர். மக்களின் அந்த முடிவை அவர் எதிர்பார்க்கவில்லை. திமுக வெற்றிச் செய்தி வானொலியில் அறிவிக்கத் தொடங்கினார்கள். 80 சட்டமன்ற உறுப்பினர்கள்வரை வெற்றி பெற்ற செய்தி வானொலியில் அறிவிக்கப்பட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தார். வெற்றிலை, சீவலை அடிக்கடிப் போட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 90 சட்டமன்ற உறுப்பினர்கள் வரை திமுக சார்பில் வெற்றிபெற்று அதற்கு மேலும் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்தபோது அவர் முகம் வாட்டமுறத் தொடங்கியது. மகிழ்ச்சிக்குப் பதிலாக வாட்டம். உடனடியாக - அவர் ஏனோ தனிமையை விரும்பினார். எல்லாரையும் போய் விடும்படி - கீழே சென்று இருக்கும்படி கோரினார். இப்படி ஏன் நடந்துகொண்டார்? யோசித்துப் பாருங்கள்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியின் எண்ணிக்கை 110ஐக் கடக்கிறபோது பிரபல நாளேட்டின் அதிபர் அண்ணாவால் தாங்க முடியாத ஆளுயர மாலையை அணிவிக்கச் செய்து அவர் காலில் விழுந்தார். அவரும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அண்ணாவோ அந்த இடத்தைவிட்டுச் சில அடிகள் உடனடியாக ஓடி நகர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட 'ஆபத்துகளிலிருந்து' இனி மீள முடியாது என அவர் உணர்ந்துகொண்டார்.
அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. 1937இல் நீதிக்கட்சி காங்கிரசால் வீழ்த்தப்பட்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். 1967இல் திமுக, அதே இராஜாஜியை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்திக் காட்டியது. ஆம்; அறிஞர் அண்ணா கணக்கை நேர்செய்தார். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக 23 மாதங்கள்தான் இருந்தார்.
அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்து காட்டினார்.
னீ தமிழ்நாடு எனத் தாயகத்திற்குப் பெயர் சூட்டினார்.
னீ இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்.
னீ சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் செய்தார்.
இவற்றில் முதன்மையானது நமது நாட்டிற்குச் சென்னை மாகாணம் - சென்னை ராஜ்ஜியம் - மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் 'தமிழ்நாடு' என அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்த சாதனை மிகுந்த 'உள்ளீடு' நிறைந்த சாதனையாகும். அறிஞர் அண்ணாவின் இச்சாதனையை ஆங்கிலக் கவிதை எழுதிய ஒருவர் 'ஜிலீமீ sஷீஸீ ஷ்லீஷீ ஸீணீனீமீபீ லீவீs னீஷீtலீமீக்ஷீ' என்று எழுதிச் சிறப்பித்தார்.
மகனுக்குத் தாய்தான் பெயர் சூட்டுவாள். ஆனால், இங்கோ தாய்க்கு மகன் பெயர் சூட்டிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது.
அறிஞர் அண்ணா 15.09.1909இல் பிறந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி (இரவு) 12-22 மணிக்கு மரணமடைந்தார்.
``ஐந்தடி இரண்டு அங்குலம் உயரம் இருக்கும். சம்புஷ்டியான சரீரம்; அறிவு தீட்சண்யத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி; ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய கண்கள்; ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு. மீசை சரியாகக்கூட அரும்பவில்லை'' என அறிஞர் அண்ணாவைத் தொடக்கக் கால மேடைகளில் பார்த்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணனாரின் வர்ணனை இது! ஆனால், அண்ணா 59 ஆண்டுகள் 4 மாதங்கள் 11 நாள்தான் உயிர் வாழ்ந்தார்.
திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக்க நினைத்த அண்ணா - இறுதியில் திமுகவைத் தோற்றுவித்து ஆட்சியில் அமரச் செய்தார். திமுக அமைச்சரவையைப் பெரியார்க்குக் காணிக்கையாக்கினார். திராவிட இயக்கத்தின் அரசியல் கல்வியைக் கற்றுத் தெளிந்து, விரிவாக்கி, நெறிப்படுத்தி அவற்றைச் சாதனையாக்கிக் காட்டுவதன் தொடக்கத்தை அறிஞர் அண்ணா அவர்களே முதன் முதலில் செய்தார்.
அறிஞர் அண்ணாவை இயற்கை 10, 15 ஆண்டுகள் உயிர் வாழ அனுமதித்து இருக்குமானால், தமிழ்நாட்டின் நிலை அவர் காலத்தில் மேலும் உயர்ந்திருக்கும். தமிழின மேம்பாட்டை உலகம் அவர் காலத்திலேயே அறிந்திருக்கும். அவர் மரணமடைந்த அன்று இரவு முதல் அவர் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வுவரையான காட்சிகள் எம் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பது அன்று உண்மையாயிற்று. அத்தகைய காட்சி - நிகழ்வு யார்க்கும் இனி அமையாது.
எல்லாத் தட்டு மக்களும் அறிஞர் அண்ணாவிடம் நிரம்ப எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் அவரது உயிரை இயற்கை தட்டிப் பறித்துச் சென்றுவிட்டது. தமிழகமே கண்ணீர் விட்டு அழுதது. ஏடுகள் தலையங்கங்கள் தீட்டின. கவிஞர்கள் இரங்கல் கவிதைகளை இயற்றினர். எல்லாவற்றிலும் ஏக்கமே தெரிந்தது. இதோ ஒரு கவிதையைப் பாருங்கள்.
மேகம் கருகருத்து
மின்னல் எழக்கண்டே
தாகம் தணியமழை
சாய்க்கும் என்று காத்திருந்தேன்;
நெஞ்சம் வறண்டதுவே,
தென்மேகம் தீய்ந்ததுவே!
இக்கவிதை சாலை இளந்திரையன் இயற்றியது. இப்படித்தான் ஒவ்வொருவரின் இரங்கற் கவிதையிலும் ஏக்கப் பெருமூச்சு எரிமூச்சாகி இருந்தது. எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி தெரிந்தன.
'எதனையும் நேர ஒழுங்குபடி செய்யாதவர், எதிலும் திட்டவட்டமான விரைந்து முடிவு எடுக்காதவர், சட்டத்திற்கு அஞ்சித் தமது அடிப்படைக் கொள்கையையே கைவிட்டவர்' - என அறிஞர் அண்ணாவின் அரசியல் எதிரிகள் அவரை விமர்சிப்பர். ஆனால், நிலைமை என்ன? அவரது அரசியல் நடவடிக்கைகளைச் சற்று ஆழமாகக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர் வெற்றியாளரா இல்லையா என்பது தெரியவரும்.
"தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல் - உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை."
அண்ணா ஒருமுறை வடநாட்டு பயணம் மேற்கொண்டார். அப்போது அஜந்தா, எல்லோரா போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற சித்திரக் கூடங்கள் நிறைந்த இடங்களைக் கண்டு களித்தார். அதுபற்றிக் கருத்துக் கூறுகையில் அவர், ''பேராசிரியர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' படிக்கும்பொழுது இந்த இடங்களைக் கண் முன்னால் பார்ப்பது போலவே இருந்தது. கல்கியின் கதைகளை நான் படித்தபொழுது அந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு. அதற்கான வாய்ப்பு இப்பொழுதுதான் வாய்த்தது. எனது ஆசையும் நிறைவேறிவிட்டது. ஏற்கெனவே ஏன் பார்க்காமல் போனோம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
இதற்கு முன் பார்த்திருந்தால் பேராசிரியர் கல்கியைப் போல சில சரித்திரக் கதைகளைப் படைத்திருக்கலாமே என்ற தாபமும் எனக்கு உண்டாகிறது''. இலக்கிய உள்ளமும் ரசனையும் எழுத்தாற்றலும் கொண்ட அவர் இதுநாள் வரை வாழ்க்கையில் எப்படியெல்லாமோ காலம் கழிந்துவிட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பயணத்தின்போது ஜெய்ப்பூர், ஆக்ரா எனப் பல இடங்களுக்குச் சென்றார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் அமைப்பு அவரது உள்ளத்தில் புதிய எண்ணத்தை உண்டாக்கியது. மொகலாய மன்னர்களைப் பற்றிச் சிறந்த நாடகங்களை உருவாக்க எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அந்த இரண்டு எண்ணங்களும் நிறைவேறாத ஆசைகளாகப் போய்விட்டன.
கலைவாணரை மிகவும் நேசித்த அண்ணா, அவர் இயக்கிய 'நல்ல தம்பி' படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு மகிழ்ச்சி அடைந்தார். நல்ல பல சீர்திருத்தக் கருத்துகளைத் திரைப்படத்தின் வாயிலாக மக்களிடம், எவர் மனமும் புண்படாமல் நகைச்சுவையோடு பரப்பிய அவருக்கு கலையுலகில் முக்கிய பங்குண்டு என்றார்.
பெரியவர்களை மதிக்கும் பண்பும், அவர்களுடைய கருத்துகளைக் கேட்டுக் கொள்ளும் மனப் பக்குவமும் அண்ணாவுக்கு இருந்தது. அதுபற்றிய ஒரு சம்பவம்:
சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆர்வ எழுச்சிக் கொண்ட விருதுநகர் தியாகியான சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரைக் காண அண்ணா சென்றபோது, அவர் 'நீங்களாவது என் ஆசையை நிறைவேற்றுங்கள், சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட ஆவன செய்யுங்கள்' என மனம் விட்டுப் பேசினார்.
அவரது இந்தக் கோரிக்கையை அண்ணா பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு, அதில் அக்கறை செலுத்துவதாகவும் கூறினார். 78 நாட்கள் உண்ணாவிரதமிருந்த தியாகி உயிர் துறக்கும் சமயம் மீண்டும் தனது மன ஆவலைக் கூறினார். அதற்கு அண்ணா பெருமுயற்சி செய்வதாக வாக்களித்த பிறகுதான் அவர் ஓளரவு மனஅமைதியோடு உயிர் துறந்தார். அவருக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றினார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும்.
மேலும் அவருக்கு எத்தனையோ அரசியல் பணிகள் இருந்து வந்தபோதும், கலை, இலக்கியம், பத்திரிகைக்கு எழுதுதல் ஆகியவைகளில் உற்சாகமாக ஈடுபட்டு வந்தார். மக்களிடையே பகுத்தறிவுக் கொள்கைகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லத் திரைப்படங்கள் சிறந்த சாதனம் என்று எண்ணிய அவர் அதிலும் கவனம் செலுத்தி வந்தார்.அவர் நாடகங்கள் மூலம் சிறந்த கருத்துகளை எடுத்துரைத்தார். அவரது திரைப்படங்களான 'ஓர் இரவு', 'வேலைக்காரி' ஆகியனயும் குறிப்பிடத்தக்கவை.
இசையில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் அகில உலக நாகஸ்வர இசைச் சக்ரவர்த்தியான திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வர இசை மிகவும் கவர்ந்த ஒன்று. அவருடைய இசை ஞானம் வெளிப்பட சென்னைக் கடற்கரையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பல இலட்ச மக்கள் அறிய செய்யவேண்டும் என்று சொன்னார். அத்துடன் கவிஞர் பாரதிதாசனுக்கு மணி விழா நடத்தியது போல இந்த நாகஸ்வர மேதைக்கும் ஒரு விழா நடத்தப்பட வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார். ரசனையுடன் மேதைகளைப் பாராட்டி கௌரவப்படுத்துவதிலும் சிறந்து விளங்கினார்.
அண்ணா சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். எந்தப் பொருள் பற்றியும் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சுவையோடு பேசுவார். அன்று அவர் பேசிய பேச்சு இன்றும் பலரிடையே நினைவில் இருப்பது உண்மையே. ஒருமுறை சென்னையில் கல்கி ஆசிரியர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அண்ணா ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு வியப்புக் கடலில் ஆழ்ந்து போன கல்கி, அவரை ஓர் அறிஞராகக் கண்டார். அப்போது சாதாரண அண்ணாதுரை அல்ல இவர். 'அறிஞர் அண்ணாதுரை' என்று அழைப்பதே பொருத்தம் என்றார். கூடியிருந்த மக்கள் அனைவரும் இதனை ஆமோதிப்பது போல கைதட்டி ஆரவாரம் செய்தனர். அன்றிலிருந்து அவர் அறிஞர் அண்ணா என்றே அழைக்கப்பட்டார்.
அமெரிக்க நாட்டின் பல்கலைக் கழகத்தில் பேச அழைத்திருப்பதைக் குறிப்பிட்டு, அப்போது புதுதில்லியில் தலைமை அமைச்சராகப் பதவி வகித்த மறைந்த பிரதமர் இந்திராகாந்திக்குக் கடிதம் எழுதினார். அதில் தான் என்ன பேசவேண்டும் என தெரிவித்தால் அதன்படி பேசுவதாக எழுதிக் கேட்டிருந்தார். இந்திராகாந்தி எழுதிய பதில் கடிதத்தில், தாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் எனப் பெருந்தன்மையோடு குறிப்பிட்டிருந்தார். அவரிடம் நிறைந்திருந்த அரசியல் பண்பும், கண்ணியமும்தான் அவரை இவ்வாறு எழுத வைத்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது பாரத சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கதாகும். அவர் அமெரிக்காவில் இந்தியாவின் பெருமைகளை இன்னொரு இமயம்போல் உயரும்படிப் பேசினார்.
அங்கு முதன்முறையாக சென்ற அவர் இத்தாலி நாடு சென்றார். அங்கு வாடிகன் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற போப்பாண்டவரைச் சந்தித்தார். இந்நிகழ்ச்சி வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்தது. போப்பாண்டவர்-அண்ணா சந்திப்பின் பயனாக கோவாவைச் சேர்ந்த விடுதலை இயக்க வீரருக்கு விடுதலை கிடைத்தது.
கோவா வீரரான ரானடேவை போர்ச்சுகீசிய அரசு சிறையில் அடைத்திருந்தது. அவரை விடுதலை செய்ய ஏற்பாடு செய்ய அண்ணா கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை மதித்து போப்பாண்டவர் அதற்கான முயற்சி செய்து விடுதலை பெற்றுத் தந்தார். இதனால் கோவா மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
அவரது ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் பிரச்னைகளும் எழுந்தன. அவற்றையும் அவர் சுலபமாகத் தீர்த்து வைத்தார். மாணவர்களின் மனப்போக்கு எதுவாக இருந்தாலும் அதில் உடனே கவனம் செலுத்துகிற, அக்கறை கொண்ட பண்பு பாராட்டத்தக்கது.
நட்பிற்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்ற பிறகும் தமது பழைய நண்பர்களை மறக்கவில்லை. எளிமையும் அடக்கமும் அவரது அணிகலன்களாகத் திகழ்ந்தன.
மலேசிய பயணத்தின்போது சிங்கப்பூர் முதல் அலோர்ஸ்டார் வரை பல இடங்களில் அரிய சொற்பொழிவுகள் ஆற்றினார். அவ்வாறு பேசும்போது, ''உங்களையும் என்னையும் இணைப்பது அரசியல் அல்ல, அது அரசியலுக்கும் அப்பாற்பட்டது. உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான தமிழே அந்த இணைப்பு'' என்றார்.
மதுரை மாநாட்டில் பேசும்போது, 'நல்ல நிலத்திற்கு அடையாளம் நல்ல விளைச்சலைத் தருவதுதான்', 'நல்ல விளக்கிற்கு அடையாளம் நல்ல ஒளியைத் தருவதுதான்' என மனதிற்கு வலிமை மிக்க கருத்துகளை தெரிவித்தார்.அறிவு வளர்ச்சி மன்றத்தின் சார்பாக கோகலே மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 'அச்சம்' என்ற தலைப்பில் அவர் பேசுவார் என அறிவித்திருந்தனர் மன்றத்தினர். அந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்று நண்பர் பொன்னம்பலனார் அச்சமின்றி கேட்டார். அவரது துணிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. நானும் அச்சமின்றி ஒப்புக் கொண்டேன். என் பேச்சைக் கேட்க நீங்களெல்லாம் கூடியிருப்பதால் அச்சமின்றி பேசத் தொடங்குகிறேன். வாழ்க்கையில் யாரும் அச்சத்தின் பிடியில் அகப்பட்டு விடக் கூடாது என நகைச்சுவையோடும், நல்ல பல சுவையோடும் நீண்ட நேரம் பேசினார்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் 'உலகத் தமிழ் மாநாடு' நடைபெற்றது. அதில் உலக பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். அவ்விழாவினை அப்போதைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் தொடக்கி வைத்துப் பேசும்போது, 'இணையற்ற காட்சிகளைக் கண்டேன்! மாட்சிகள் மிகுந்த மகத்தான விழா!' என்றார். அத்துடன் தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் பெருமையிலும் பெருமை என்று உலகத் தலைவர்கள் பலர் உற்சாக உரையாற்றியதையும், அண்ணாவின் ஆட்சித் திறன் பற்றியும் பாராட்டினார்.
இவ்வாறாகப் பல துறைகளிலும் சிறந்து, மேதைகளுள் ஒருவராகத் திகழ்ந்த அண்ணா இன்றும் நம்மிடையே அணையா தீபமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
நவீனன் எழுதிய 'அண்ணாவின் கதை' என்ற நூலிலிருந்து
பேராசிரியர். கோவிந்தசாமி இராசகோபால், (நவீன இந்திய மொழிகள் துறை )
தில்லிப் பல்கலைக்கழகம்
"அண்ணா! எம் இதய மன்னா!
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றாய்!
இதையும் தாங்க ஏதண்ணா எனக்கு இதயம்?
கடற்கரையில் காற்று வாங்கியது போதும் அண்ணா!
எழுந்து வா எங்கள் அண்ணா!
வரமாட்டாய்! வரமாட்டாய்!
இயற்கையின் சதிஎமக்குத் தெரியும் அண்ணா!
நீஇருக்கும் இடம்தேடி நான் வரும்வரையில்...
இரவலாக உன்இதயத்தைத் தந்திடு அண்ணா!
நான் வரும்போது கையோடு கொண்டுவந்து - அதை
உன் கால்மலரில் வைப்பேன் அண்ணா!"
என்று கலைஞர் அவர்கள் கையற்றுக் கலங்கிக் கண்ணீர் உகுத்து 40 ஆண்டுகள்
கழிந்து விட்டன. 1969-ஆம் ஆண்டு, பிப்ரவரி 3-ஆம் நாள், முதல்
இருபத்திரண்டாவது வினாடியின் போது, அகவை 59-இல் அகால மரணம் கண்டார்
பேரறிஞர் அண்ணா. அவர் பிறந்தது 1909, செப்டம்பர் 15. இன்று அவர்
வாழ்ந்திருந்தால்... வயதோ 99 ஆகி இருக்கும்; நூற்றாண்டுக்குள்
நுழைந்திருப்பார். அந்தோ! "சாவே உனக்குச் சாவு வந்து நேராதா?" என்று
எத்தனையோ கோடான கோடி தமிழர்கள், தம்பியர்கள் சபிக்க, பெரிதும் துடிக்க
அண்ணா இறந்தார் உடலால். ஆயின் இன்றும் இருக்கிறார்; என்றும் இருப்பார்
தமிழர் உள்ளத்தில், உணர்வினில். இது நிச்சயம்.
இன்று பட்டுக்குப் பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில், மிகவும் சாதாரணக்
குடும்பத்தில் சாமானியனாகப் பிறந்தவர் தான் அண்ணா. இருந்த போதும் சரி,
இறந்த போதும் சரி, சரித்திரம் படைத்த மாபெரும் சாதனையாளர்; மொத்தத்தில்
அவரும் ஒரு சகாப்தம், தந்தை பெரியாரைப் போல!. அவர்தம் இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொண்டோர்தம் எண்ணிக்கை பற்றிய தகவல், இன்றும் கூட நம்ப முடியாத
ஓர் உண்மைச் செய்தி. திடீரென நெஞ்சு கனத்தும், தாளாமல் தற்கொலை செய்து
கொண்டும், இரயிலில், பேருந்தில், பிற வாகனங்களில் வரும் போது வழியில்
விபத்தில் இறந்தும் உயிர்விட்டவர்கள் எத்தனையோ பேர்! இத்தனைக்கும் நாவலர்
நெடுஞ்செழியன் கைகாட்டுவது போல, "குள்ள உருவம்; குறும்புப் பார்வை;
விரிந்த நெற்றி; பரந்த மார்பு; கறைபடிந்த பற்கள்; கவலையில்லாத தோற்றம்;
நறுக்கப்பட்ட மீசை; நகை தவழும் முகம்; சீவாத தலை; சிறிதளவு வெளிவந்த
தொப்பை; செருப்பில்லாத கால்; பொருத்தமில்லாத உடைகள்; இடுப்பில் பொடி
மட்டை; கையில் வெற்றிலை-பாக்குப் பொட்டலம்; இந்தத் தோற்றத்தோடு அதோ
காட்சியளித்து நிற்கிறாரே அவர் தான் அண்ணா". ஆம் இது முற்றிலும் சரியே.
அவர் அரசியல் வானில் ஒரு சூரியன்; தமிழ்க் கலை உலகில், என்றும் மின்னும்
ஒரு நட்சத்திரம்; அறிவுலகப் பேரறிஞர்; தந்தை பெரியாரின் பாசறைத் தளபதி;
தமிழ்நாட்டு இங்கர்சால். தமிழகம் பெற்ற டொமஸ்தனீஸ், சாக்ரட்டீஸ்,
பெர்னாட்ஷா எல்லாம் அவரே என்பர் அறிஞர் சிலர். தமிழ், தமிழர், தமிழ்நாடு
எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் முதன்மை பெற்றுச் சிறக்கத் தம் உடல் -
பொருள் - ஆவி என்ற அத்தனையையும் அட்டி இன்றி வட்டித்தவர்களுள் அவர் ஒரு
தலைமாணாக்கர். தந்தை பெரியாருக்கும் நெடுஞ்செழியன், கருணாநிதி,
அன்பழகன், மதியழகன் உள்ளிட்ட தம்பியருக்கும் இடையில் இணைப்புப் பாலமாகச்
செயல்பட்ட தமையனார் அவரே. "தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இனம்,
தமிழ்நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு முதன்மைப்
பணியாற்றிய தலைவர் அண்ணா" என்று சோமசுந்தர பாரதியார் கூறுவார்.
திராவிட இயக்கத்தோடு இணைந்து இயக்க வளர்ச்சிக்கு ஏற்ற கருத்துப்பரப்புக்
கருவிகளாகவே அண்ணாவின் படைப்புகள் தோன்றியுள்ளன. 'தமிழ்நாட்டு மக்களின்
மன மாசுகளை அகற்ற வேண்டும்; மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும்;
மொழிப் பற்று, இனப் பற்று, நாட்டுப் பற்று, விடுதலை வேட்கை என்பன தமிழ்
மக்களிடையே வளர்ந்து செழிக்க வேண்டும். இதற்காக எத்தகைய எதிர்ப்புகளையும்
கண்டு அஞ்சாது, கொள்கைக்காக எதிர்த்திடும் ஆற்றல் பெற வேண்டும்'. இத்தகைய
எண்ணங்களோடு தான் அண்ணா தம் இலக்கியப் படைப்புப் பணியைச் செய்து வந்தார்.
அண்ணா பன்முகங்கள் கொண்டவர். ஈடும் இணையும் இல்லாப் பேச்சாளர்; தலை
சிறந்த பகுத்தறிவுச் சிந்தனாவாதி; கட்டுரை-கவிதை-சிறுகதை-புதினம் -
நாடகப் படைப்பாளி. திரைப்படக் கதாசிரியர்; அரசியல் வித்தகர்; கட்சித்
தலைவர்; ஒரு மாநில முதல்வர்.
"அண்ணா துரையெனும்
அண்ணல் தமிழ்நாட்டு
வண்ணான் அழுக்கெடுப்பில்!
வாய்மொழியில் பண்ணாவான்;
சிற்பன் எழுத்தோவியத்தில்!
செல்வரசு நாவாயின்
அற்புதம் சூழ் மாலுமி!"
என்று பாராட்டுவார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.
'கலை கலைக்காகவே' என்றில்லாமல், 'கலை வாழ்க்கைக்காகவே' என்ற சமூகச்
சிந்தனையோடு இலக்கியம் மற்றும் கலைப் பணி ஆற்றியவர் அண்ணா. இவர்
தந்தையார் பெயர் நடராசன்; தாயார் பெயர் பங்காரு அம்மாள். காஞ்சிபுரம்
பச்சையப்பன் பள்ளிக்கூடங்களும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியும் இவர்
பயிலிடங்கள். 1930-இல் இராணி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார் அவர்.
அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. எனினும், நான்கு பிள்ளைகளுக்கு
வளர்ப்புப் பெற்றோராக இருந்துள்ளனர்.
ஆரிய ஆதிக்கத்திற்கு ஊற்றாகவும், அதன் வளர்ச்சிக்கு வாயிலாகவும்
அமைந்திருக்கும் கடவுள்-மதம்-சாதிக் கோட்பாடுகளையும், அவற்றிற்கு இடமாக
அமைந்திருக்கும் மூட நம்பிக்கைகளையும், அம்மூட நம்பிக்கையை அரசியல்,
மதம், கடவுள், சாஸ்திரம், தருமம் என்ற பேரால் வளர்க்கும் பிராமணச்
சமுதாயத்தையும் ஒழிப்பது என்னும் கொள்கைகளின் மீதே தன்மான இயக்கம்
தோற்றுவிக்கப் பெற்றது என்பார் பெரியார். இதன் சிந்தனைத் தாக்கத்தில்,
கல்லூரிக் கல்வி நாட்களில், நீதிக்கட்சியின் பால் ஈர்க்கப் பட்டார்
அண்ணா; அதன் உறுப்பினர் ஆனார். பின்னர் அதன் செயற்குழு உறுப்பினராய்,
கொள்கைப் பரப்புக் குழு முன்னவராய் வினையாற்றினார். தமிழ்நாட்டுப்
பட்டிதொட்டி எங்கும் பயணம் மேற்கொண்ட அண்ணா, தம் கரகரப்பான கணீர் குரலால்
இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கட்டிப் போட்டார். மகுடிப் பாம்புகளாய்
மயங்கினர் மக்கள். இவருக்கு முன்னும் பின்னும், எந்தத் தமிழ்த் தலைவரும்
தம் பரந்துபட்ட அறிவால், எதுகை மோனை நிறைந்த அடுக்குமொழி மேடைப்பேச்சுத்
திறத்தால் தமிழ் மக்களை இவர் போல் வசீகரிக்கப் படுத்தியதில்லை.
நாட்டு விடுதலையைத் தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டை ஏகபோகமாக
ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இன்று வரை தலைதூக்க முடியாமல்
போனதிற்கு அண்ணாவே முழுமுதற் காரணம். 1940 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24-இல்
நடந்த திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டில் 'திராவிட நாடு பிரிவினை'த்
தீர்மானத்தை வழிமொழிந்தார். 1944-இல் நீதிக்கட்சியைத் 'திராவிடக் கழகமாக'
மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தவரும் அண்ணாவே தான். 1937-க்குப் பிறகு
மூதறிஞர் இராஜாஜி முதலமைச்சராக இருந்த போது இந்தியைத் தமிழ்நாட்டுப்
பள்ளிக் கூடங்களில் கட்டாயப் பாடமாக்கினார். தமிழ் மொழிப்பற்று மிக்க
தலைவர்கள், இளைஞர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர். இதில்
அண்ணாதுரை போராட்டக் குழுத் தளபதியாக முன்னின்று நடத்தினார்; பலமுறை
சிறையும் சென்றார். '1965-ஆம் ஆண்டு, சனவரி 26-ஆம் நாள் முதல்
இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி விளங்கும். ஆங்கிலம் துணை
ஆட்சிமொழியாக இருக்கும்' என்று மத்திய காங்கிரஸ் அரசு பிரகடனம் செய்தது.
இதைத் 'துக்க நாளாக' அறிவித்துத் தி.மு.க. பெரியதொரு போராட்டம்
நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் சிலர் இறந்தனர். அண்ணா கைது
செய்யப் பட்டார். துடிப்பு மிக்க இளைஞர்களின் ஏகோபித்த தலைவரானார்
அண்ணா.
கவிஞர்
ஏற்கனவே குறிப்பிட்டது போல, அண்ணா ஒரு பன்முக வித்தகர். கட்டுரை, கவிதை,
சிறுகதை, நாவல், நாடகம், சினிமா முதலான இலக்கியம் மற்றும் படைப்புக்
கலைகளில் வியக்கும் படியான படைப்புத் திறன் பெற்றிருந்தார்.
'சுயராஜ்யம்', 'சீறீடும் சிட்டு', 'சின்னான் சிந்து', 'தேம்புகிறேன்'
முதலான இவர்தம் கவிதைகள் மிகவும் குறிப்பிடத் தகுந்தன. 'வைதீக
எதிர்ப்பு', 'வர்ணாசிரமக் கொள்கை மறுப்பு', 'பொருளாதார வேறுபாடு
எதிர்ப்பு', 'விடுதலை உணர்வு' முதலியன இவர்தம் கவிதைகளின் உள்ளடக்கங்கள்
ஆகும்.
கால்ட்வெல், ஜி.யு.போப், ராபர்ட் டி நொபிலி முதலான மேனாட்டுக்
கிறித்துவப் பாதிரிமார்களால் தமிழின் பழம்பெருமை, சிறப்பு ஆகியன
வெகுவாகப் பரப்பப்பட்டிருந்த ' தமிழ் மறுமலர்ச்சி'க் காலகட்டத்தில்
பிறந்தவர் அண்ணா. தமிழின் மேன்மையை மேலும் எடுத்துச் சொல்லும் நல்லதொரு
பணியைத் திறம்படச் செய்ததில் அண்ணா வுக்குப் பெரும்பங்கு உண்டு எனலாம்.
புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பிச்சமூர்த்தி முதலான மணிக்கொடி
எழுத்தாளர்களின் தாக்கம் அண்ணாவின் சிறுகதைகளில் மிகுதியாக இருந்தது என
அறிஞர் ஒருவர் கருத்துரைப்பார். 89 சிறுகதைகளையும் 6 நாவல்களையும் 9
குறும்புதினங்களையும் அண்ணா எழுதியிருக்கிறார். 'ரங்கோன் ராதா',
'குமாஸ்தாவின் பெண்' 'பார்வதி பி.ஏ.', 'சந்திரோதயம்' ஆகியவை பரபரப்பாகப்
பேசப்பட்ட நாவல்களாகும்.
1949-ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி அன்று வெளியான 'செவ்வாழை' அண்ணாவின்
சிறுகதைகளில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு பண்ணையாரிடம்
வேலை பார்க்கின்ற கூலியாள் ஒருவன், தன் வீட்டில் ஆசை ஆசையாய்ச் செவ்வாழை
ஒன்றை வளர்க்கிறான். அவன் பிள்ளைகள் அது குலை தள்ளும் நாளுக்காக ஏங்கிக்
காத்திருக்கிறார்கள். இறுதியில், அது பண்ணையார் வீட்டு விசேஷத்திற்கு
அறுத்தெடுத்துக் கொண்டு செல்லப்படுகிறது. அந்தோ பாவம்! ஏழைப் பிள்ளைகள்!
இந்தக் குரூரமான எதார்த்தம் அண்ணாவின் எழுத்தோவியத்தில் எத்தனையோ பேரின்
இதயங்களைக் கண்ணீர் வடிக்கச் செய்தது.
நாடக உலகில்.....
சமுதாயச் சீர்திருத்தத்திற்குச் சிறுகதை, நாவல் என்ற இலக்கியக்
கலைவடிவங்களினும், நாடகம் மற்றும் திரைப்படங்களையே அண்ணா பெரிதும்
பிரச்சராகக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டார். பம்மல் சம்மந்த
முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், கிருஷ்ணசாமிப் பாவலர் போன்று தமிழ் நாடக
உலகில் ஒரு பெரிய பாதிப்பை அண்ணா ஏற்படுத்தினார் என அறிஞர்கள்
குறிப்பிடுவர். இவர்தம் பெரு நாடகங்கள் எட்டு. அவற்றுள் 'வேலைக்காரி',
'ஓர் இரவு', 'சந்திரோதயம்', 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்பவை
தமிழ் நாடக வரலாற்றில் சலசலப்பை, மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தனவாகும்.
அண்ணாவின் நாடகங்கள் படிக்கத் தகுந்தனவாய், நடிக்கத் தகுந்தனவாய்,
பார்க்கத் தகுந்தனவாய் ஒருசேர விளங்கின. சொல்லழகும் பொருளழகும் மிக்க
அண்ணாவின் நாடக-திரைப்பட உரையாடல்கள், மக்களை மந்திரம் போல் கட்டிப்
போட்டன. தமிழ்நாட்டில் குப்பனும் சுப்பனும் அரசியல் விழிப்புணர்ச்சி
பெற்றதில், ஒரு புரட்சியைத் தோற்றுவித்ததில் அண்ணாவின் நாடகங்களுக்கும்
திரைப்படங்களுக்கும் தனிப்பங்கு உண்டு. பொய்யும் புளுகும் நிறைந்த
புராணக் கதை உலகிலிருந்து தமிழ்மக்களை மீட்டெடுத்தவை அண்ணாவின் அரங்கக்
கலைப் படைப்புகளே ஆகும். இந்த ஊடகங்கள் வழி மட்டும் அன்றி, 'குடியரசு',
'விடுதலை', 'திராவிடநாடு' 'காஞ்சி' முதலான ஏடுகளில் கடிதங்கள்,
கட்டுரைகள் தீட்டியும் தமிழ் மக்களை உசுப்பினார் அண்ணா. இவர் சௌமியன்,
பரதன், சமதர்மன், நக்கீரன், குறிப்போன், வீரன், ஒற்றன், வீனஸ் என்ற
பல்வேறு புனைபெயர்களில் தம் எழுத்துப் பணியை ஆற்றியிருக்கிறார்.
கட்சியினருடனும் பொது மக்களுடனும் ஓர் உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக்
கொள்ள, அவர் எழுதிய 'தம்பிக்குக் கடிதம்' ஒரு வரலாற்றுப் புரட்சியைச்
சத்தமின்றி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. மொத்தத்தில்,
நீதிக்கட்சியின், சுயமரியாதை இயக்கத்தின், பின் இவ் இரண்டும் சங்கமமாக
1944-இல் உதித்த திராவிடக் கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் தமிழ்ப்
புத்தியில் நன்கு வேர்விட இவர்தம் எழுத்துகளே வினையாற்றி இருக்கின்றன.
இதை எவரும் மறுப்பதற்கில்லை.
முதல்வராக...
1967-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 6-ஆம் தேதி அண்ணா சென்னை மாகாணத்தின் முதல்
அமைச்சர் ஆனார். ஏப்ரல் 14-ஆம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு நாள் அன்று
'தமிழ் நாடு' எனச் சட்ட ரீதியாகப் பெயர் மாற்றம் செய்தார். இது தமிழ்க்
குடிமகன் ஒவ்வொருவனும் நெஞ்சில் நிறுத்த வேண்டிய அவர்தம் தலையாய தொண்டு.
இதுவே அன்றி, அரசு ஆவணங்களில் எல்லாம் தமிழ் தழைப்பதற்கு உரிய
நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் அண்ணாவே ஆவர். 1968-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்
10-ஆம் நாள் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்தினார்.
உலகெங்கும் பரவி வாழும் தமிழ் அறிஞர்களை ஒருங்கே கூட்டினார்; தமிழை
மேலும் வளர்த்து உயர்த்துவதற்கான அத்துணை முயற்சிகளையும் ஊக்கத்துடனும்
ஆக்கத்துடனும் மேற்கொண்டார். தமிழ்ச் சான்றோர் பலரின் சிலைகளைச் சென்னைக்
கடற்கரைச் சாலையோரம் நிறுவினார். பல பல்கலைக் கழகங்களில் திருக்குறள்
ஆராய்ச்சித் துறையைத் தொடங்கினார். 'ஒரு ரூபாய்க்கு ஒரு படியரிசித்
திட்டம்', 'இலவசக் கல்வித் திட்டம்', 'மதுவிலக்குத் திட்டம்', 'சிறு நில
உரிமையாளர்களுக்கு வரிவிலக்குத் திட்டம்' முதலான எண்ணற்ற சமூக நலத்
திட்டங்கள் அண்ணாவால் அமுல்படுத்தப் பட்டன. மத்திய வர்க்கமும்
வறுமைக்கோட்டுக்குக் கீழும் மேலும் வாழும் மற்ற பிற வர்க்கங்களும்
பெரிதும் பயனடைந்தன. பெரியார் விரும்பிய/செயல்படுத்திய 'சுயமரியாதைத்
திருமண முறை'யை 1967-ஆம் ஆண்டு, ஜூலை 17-இல் செல்லத்தக்கதாய் நடைமுறைக்கு
வரத் தகுதியுடையதாய்த் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் சட்ட மசோதா தாக்கல்
செய்தார் அண்ணா.
"நான் அறிந்த தலைவர் - தெரிந்த தலைவர் - பார்த்த தலைவர் இவர் ஒருவர்
தான்" என்று பெருமிதத்தோடு பெரியாரைக் குறிப்பிடுவார் அண்ணா. "எதையும்
தாங்கும் இதயம் வேண்டும்" என்பது அண்ணாவின் ஒரு தாரக மந்திரம். இது
அய்யாவுடன் பழகிப் பெற்ற அவர் அனுபவத்தின் வெளிப்பாடு. பின் ஏன் இவருக்கு
அவரோடு முரண்பாடு? வெளிப்படையான காரணங்கள் முக்கியமாக இரண்டு. முதலாவது,
இந்தியச் சுதந்தர நாளைத் 'துக்க நாளாக'ப் பெரியார் அனுஷ்டிக்கச் சொன்னது.
அண்ணா அதை ஏற்க மறுத்தது. "ஆகஸ்ட் 15 இந்தியா மீது இருந்த இழிவைத்
துடைக்கும் நாள். அது திராவிடருக்கும் திருநாள்; கொண்டாட வேண்டும்"
என்றார் அண்ணா. இரண்டாவது, 1949-ஆம் ஆண்டு, ஜூலை 09-இல் பெரியார்
மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது. இது அண்ணாவுக்குச் சிறிதும்
உடன்பாடில்லாத ஒரு நிகழ்வு. தன் எதிர்ப்பைக் காட்டமாக
வெளிப்படுத்தினார். கழகத்தை விட்டு வெளியேறினார். நெடுஞ்செழியன்,
கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்ட தம்பியர்கள் எண்ணற்றோர் உடன் வந்தனர். 1949-
ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' என்ற அரசியல்
கட்சியை நிறுவினார். எனினும், பெரியாரை மட்டுமே என்றைக்கும் தலைவராக
வரித்துக் கொண்ட அவர், தாம் தொடங்கிய கட்சிக்குத் தம்மையோ அன்றி வேறு
பிறரையோ தலைவராகக் கொள்ளவில்லை; நியமிக்கவில்லை. அந்தப் பதவி இறுதிவரை
காலியாகவே இருந்தது. பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் தான் அண்ணா
கட்சிப்பணி ஆற்றினார். இது ஒரு புது வரலாறு.
அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கருத்து முரண்பாடு உருவானதற்கு வேறு ஒரு
முக்கியக் காரணமும் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்க, காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தை அடக்க, 'எல்லோரும்
ஓர் நிறை' என்ற சமதர்ம சமூகத்தை நிர்மாணிக்க, சமூகச் சீர்திருத்த
இயக்கமான 'திராவிடர் கழகம்' ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்க வேண்டும்
என்று அண்ணா தம் தீர்க்கமான முடிவை 1949-க்கு முந்தைய கால கட்டத்தில்
தீவிரமாக முன்வைத்தார். பெரியார் இதைச் சற்றும் ஏற்கவில்லை. மாறாக
வன்மையாகக் கண்டித்தார். தாம் நிறுவிய சமூகச் சீர்திருத்த இயக்கம், ஓர்
அரசியல் கட்சியாக மாறினால், அதன் சீரிய நோக்கம் சிதைந்து விடும்;
பழிபாவங்களுக்குத் துணைபோக வேண்டியிருக்கும்; அதனால், பொது மக்களின்
ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எனவே, தன் இறுதிமூச்சு
உள்ளவரை அண்ணாவின் சித்தாந்தத்தை ஏற்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத்
தெரிவித்தார். இது அண்ணாவுக்கும், அவர் பின்னே அணிவகுத்து நின்ற
தம்பியர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது.
இதன் உச்சகட்ட செயல்பாடு தான் 1949-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ஆம்நாள்
அன்று 'திராவிட முன்னேற்றக் கழகம்' உதயமானது என்கின்றனர் அரசியல்
விற்பன்னர்கள். 'அரசியல் ஒரு சாக்கடை. அதில் நெளியும் புழுக்களே
அரசியல்வாதிகள்' என்ற அண்ணாவின் கூற்றையே இங்கு நினைவு கூர
வேண்டியிருப்பது துரதிருஷ்டமே. பெரியாரின் அனுமானம் ஏறக்குறையச் சரியாகவே
இருக்கிறது இவ் விஷயத்தில். அண்ணா எண்ணியதற்கு ஏற்பவே, ஆரிய ஆதிக்கமும்
காங்கிரஸ் கொட்டமும் ஒடுக்கப்பட்டுள்ளன; பல சீரிய சமூக நலத் திட்டங்கள்
நிறைவேற்றப் பட்டுள்ளன. உண்மையே. மறுப்பதற்கில்லை. இவற்றுக்கிடையே,
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களினும், பெரிதும் அதிகாரத்
துஷ்பிரயோகத்துக்கும் லஞ்ச லாவண்யக் குற்றச் சாட்டுக்கும் ஆளானவர்கள்
அண்ணாவின் கட்சியினராகவே இருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் தாரக மந்திரம், இன்று அவர்
வழித்தோன்றல்களின் நினைவில் இருப்பதாகவே தோன்றவில்லை. எப்போதோ
கூட்டங்களில் இது வழிமொழியப் படுகிறது வெறும் வார்த்தைகள் அளவில்.
அவ்வளவு தான். இது தான் எதார்த்தம். தமிழ்நாட்டு மக்களைக் கடந்த 40
ஆண்டுகளுக்கும் மேலாக, இவர்தம் கழகத்தினர்கள் ஏய்த்துப் பிழைக்கவும்
ஏமாற்றிச் செல்வச் செழிப்பில் திளைக்கவும் தடம் அமைத்துக் கொடுத்தவர்;
களம் அமைத்துத் தந்தவர் அண்ணாவே ஆவர். இதற்குத் தமிழ் மொழி, அவர்
முதற்கொண்டு திமுக, அதிமுக, மதிமுக கட்சினருக்கு இலகுவில் கைகொடுத்து
உதவிக் கொண்டடிருக்கிறது. மேடைகளும் நாடக-திரைப்பட அரங்குகளும்
இவர்களின் பேச்சு-எழுத்து 'வில்லாதி வில்லத் தனத்தை' வெளிப்படுத்தும்
களங்களாக வினையாற்றிக் கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் முளைவிட்ட
'தொலைக்காட்சிச் சானல்கள்' , இக் கட்சித் தலைவர்களின் சுய விளம்பரங்களை
எந்தவிதமான 'கூச்ச நாச்சமும்' இல்லாமல் கூவிக்கூவி விற்றுக்
கொண்டிருக்கின்றன.
"வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்று அண்ணா கூக்குரல்
எழுப்பினார். இது உண்மை தான். மத்திய அரசுடன் தேசிய நீரோட் டத்தில்
கலந்து நம் மாநில அரசு தற்போது வினையாற்றிக் கொண்டிருப்பதனால் தான்,
குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தமிழகம் முன்னேற்றம் கண்டிருக்கிறது.
தமிழர்கள் அடிப்படையில் 'ஹீரோ வொர்ஷிப்' (Hero worshippers)
கூட்டத்தினர்; சாகசங்களுக்கும் நாடகத் தன்மை நிறைந்த
பகட்டுத்தனத்துக்கும் எளிதில் மயங்கக் கூடிய உளப்பாங்கினர். இதைச்
சரியாகப் புரிந்து கொண்டு அரசியலில் காய் நகர்த்தியவர் தான் அண்ணா.
மேடையை 'நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்'. தம் கரகரப்பான குரலால்,
படோபகரமான பேச்சுமொழியால் எல்லோரையும் வசியப் படுத்தினார். அலங்காரம்
மிக்கத் தம் எழுத்தால், படிப்பறிவுக் கூட்டத்தைத் தம் பக்கம் இழுத்தார்.
வெற்றி இவர் பக்கம் ஆனது. 'கவர்ச்சி' மூலம் 'வெற்றிக்கனி'யைப் பறிக்க
முடியும் என்ற சூட்சுமம் அக் காலத்தில் இவருக்கு மட்டுமே
தெரிந்திருந்தது. 1967-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலின் போது 2 இலட்சம்
ரூபாய் தரத் தயாராக இருந்த எம்.ஜி.ஆரை, "தம்பி! 2 இலட்ச ரூபாய் வேண்டாம்;
உன் திருமுகத்தை ஒரு முறை தேர்தல் மேடைகளில் காட்டி வா. அது போதும். 20
இலட்சம் வாக்குகளை அள்ளிக் குவிக்கும் அது" என்றாராம். அவர் கணக்குப்
பொய்க்கவில்லை. திமுக அத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றது;
கோட்டையைக் கைப்பற்றியது; அரியணையில் அமர்ந்தது. இது வரலாறு.
ஆட்சி அதிகாரம் தரும் பலத்தை மற்றும் பணப் பிரயோகத்தை முதன்முதல்
சுவைக்கத் தொடங்கிய அண்ணா வழித்தோன்றல்கள் அதிகாரத் துஷ்பிரயோகம், லஞ்ச
லாவண்யங்கள் செய்யும் கூட்டத்தினராக, மக்கள் பொதுப் புத்தியில் பதிவாகி
உள்ளனர். காங்கிரஸ்காரர்கள் ஆண்டிருந்தால் அவர்கள் மட்டும் என்ன
பவித்திரக் கனவான்களாகவா இருந்திருப்பார்கள்? அதற்குச் சாத்தியமில்லை
என்பதே சரித்திரம். இது மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கே உரிய ஒரு பலவீன
உளப்பாங்கு. பல காலமாக, நிலக்கிழார்களாகவும் பணக்காரர்களாகவும் மேல்தட்டு
வர்க்கத்தினராகவும் இருந்த காங்கிரஸ் கட்சியினர், மேற்கூறிய அரசியல்
பிழைகளைச் செய்த போது, அவர்கள்தம் அட்டூழியங்கள் பூசி மறைக்கப்பட்டன
அல்லது காட்டமாக மறுக்கப்பட்டன எனலாம். இதுவே திமுக, அதிமுக, மதிமுக
பரம்பரையினர் என்கிற போது, அக் குற்றச்சாட்டுகள் பலமாக நம்பப் படுகின்றன
- உண்மை வேறாக இருக்கும் பட்சத்திலும்! இது துர்ப்பாக்கியமே!
எது எப்படி ஆயினும், புது வகையான ஓர் அரசியல் பரம்பரையைத்
தோற்றுவித்தவர் அண்ணாவே என்பதை மறுப்பதற்கில்லை. இப் பரம்பரையினர்,
தங்கள் பலத்தை நம்புவதை விடப் பொதுமக்களின் பலவீனத்தைத் தான் மிகுதியாக
அவதானிக்கிறார்கள். அதற்குத் தகவே திட்டமிடுகிறார்கள்;
வினையாற்றுகிறார்கள். இதன் பின்னணியில் தாம், பட்டிமண்டபப்
பேச்சாளர்களும் சினிமா நட்சத்திரங்களும் தமிழ் நாட்டில் 'சக்கைப் போடு
போட்டுக் கொண்டிருக்கிறார்கள்'. இவர்களுக்கு அரசியல்வாதிகளும்
'தொலைக்காட்சிச் சானல்'களும் பொது மக்களும் இரத்தினக் கம்பளம் விரித்துக்
கொண்டிருக்கிறார்கள். 'கெக்கெ பொக்கெ' என அனர்த்தமான விஷயங்களுக்கு
எல்லாம் அபத்தமாகச் சிரித்து வெட்டியாகப் பொழுதை வீணடித்துக்
கொண்டிருக்கிறார்கள். தமிழர் திருநாள் பொங்கலாக இருந்தாலும் சரி, தமிழ்
ஆண்டுப் பிறப்பு நாளாக இருந்தாலும் சரி, இந்தியத் திருநாள் தீபாவளியாக
இருந்தாலும் சரி, உலகத் தொழிலாளர் தினமாக இருந்தாலும் சரி, உலக மகளிர்
தினமாக இருந்தாலும் சரி, எந்த ஒரு விசேஷமான நாளிலும், தமிழ்த்
'தொலைக்காட்சி'ச் சானல்களில் எல்லாம், பட்டிமண்டபப் பேச்சாளர்களும்
சினிமா நட்சத்திரங்களும் தாம் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சமூகப் பண்பாட்டு அவலத்திற்குத் தமிழர் எல்லோரும் தார்மீகப்
பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கிறது; வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்கும் இடையே தான் நிலவுகிறது
போட்டி தமிழ்நாட்டில் இப்போது. காரணம் வெளிப்படை. ஏனெனில், இவ் இரு
கூட்டத்தினர் தாம் தமிழ்மக்களை மயக்க முடியும்; வாக்குகளை அள்ளிக்
குவிக்க முடியும். ஒரு திரைப்படம் சுமாராக ஓடி விட்டாலே, "வருங்கால
முதல்வர் கனவு" இன்றைய தமிழ் நடிகர்களில் பலருக்கு உடனே தொற்றிக்
கொள்கிறது. இதன் தொப்புள் கொடி அண்ணாவிலிருந்து தொடங்குகிறது என்பதே
உண்மை. 'அண்ணா தொடங்கித் தமிழகத்தை இன்றுவரை அரசியல்வாதிகள் ஆளவே இல்லை;
சினிமாக்காரர்கள் தாம் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்' என்பர். இடையில்,
பன்னீர்செல்வம் என்பவர் தமிழக முதல்வர் ஆனது ஓர் அரசியல் விபத்து; ஒரு
விதி விலக்கு. இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
"கடவுள் இல்லை; இல்லவே இல்லை. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்றார்
பெரியார். அவரின் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வெளிவந்த அண்ணாவோ திராவிட
முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பிறகு, 'ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!' என
மாற்றுக் குரலை ஒலிக்கத் தொடங்கினார். 'அரசியல் போட்டியில்
சாமர்த்தியமாகக் காய் நகர்த்தப் பெரியாரின் நாத்திக வாதம் ஒத்துவராது'
என்பதை அண்ணா தெளிவாக அறிந்திருந்தார். வாக்கு வங்கியைக் குறிவைத்தே தம்
கொள்கையை மாற்றிக் கொண்டார். இதில் வெற்றியும் பெற்றார். அவர்
கோயிலுக்குச் செல்லவில்லை; எந்தச் சாமியையும் கும்பிடவில்லை. ஆனால்
அவரின் வழித் தோன்றல்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதலானவர்களோ பகிரங்கமாகவே
தங்கள் கடவுள் பக்தியை வெளிப்படுத்திக் கொண்டார்கள். ஒரு காலத்தில்,
ஓங்கி உரத்துப் பேசப்பட்ட 'ஆரிய வைதிக எதிர்ப்பு', 'கடவுள் மறுப்பு'
முதலான இதன் கொள்கைகள் மெல்லக் கை விடப்பட்டன; காற்றில் பறந்தன. இன்று
இது பற்றிய ஓர்மை, கழக உடன்பிறப்புகளிடம் இருப்பதாகவே தெரியவில்லை.
அரசியல் தலைவர்கள்
'அதிகார மையத்தைத் தகர்ப்பது' என்பது அண்ணாவின் குறிக்கோள்களுள் ஒன்று.
'சாமானிய மனிதனின் குறைகள் உண்மையான அக்கறையுடன் பரிசீலிக்கப்பட
வேண்டும்; தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் தலைவர்கள் எட்டாக்
கனிகளாக இருக்கக் கூடாது; மக்களுள் மக்களாகப் புழங்க வேண்டும்' என்ற
சித்தாந்தத்துடன் அரசியலில் பிரவேசித்தார் அண்ணா. அவர் ஆண்ட காலத்தில்
இது நடைமுறைச் சாத்தியமாய் இருந்தது குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு.
பயபக்தி மேலோங்கத் தலைமையைக் கொண்டாடும், துதிபாடும் அடிவருடிக்
கூட்டத்தினர் (Sycophants) அவர் காலத்தில் அவ்வளவாக உருவாகவில்லை அல்லது
உருவாக்கப் படவில்லை. ஆனால் இன்றோ, 'ஆண்டை-அடிமைத் தனம்' கழகத்
தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நன்கு வேரூன்றி
இருக்கிறது. இதுவே அன்றிக் கறுப்புக் கண்ணாடி அணியும், சால்வை அணியும் /
அணிவிக்கும் புதுக் கலாச்சாரமும் இவர்தம் கழகத்தினராலே தான்
அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தன்மான இயக்கத்தினரான இவர் தம்பிகளிடமும்
தங்கைகளிடமும் தான் 'காலில் விழும் கலாச்சாரமும்' பட்டவர்த்தனமாக
அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் யாருக்கும் வெட்கமில்லை. இதற்கான
அடிப்படைக் காரணங்களுள் ஒன்று, அதிகாரம் ஓரிடத்திலேயே குவிந்திருப்பது.
'பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியில்
எல்லோரும் தலைவர்களே; தொண்டர்கள் இல்லை' என்பார்கள் வேடிக்கையாக.
திராவிடக் கட்சிகளிலோ நிலைமை தலைகீழ். 'தலைவர் தான் கட்சி. அவரே சர்வ
வல்லமை கொண்டவர்'. "இந்திரா தான் இந்தியா; இந்தியா தான் இந்திரா" என்று
எமர்ஜென்சிக் காலத்தில் பட்டவர்த்தனமாக அறைகூவப் பட்டது போலத் தான்
இதுவும். திராவிடக் கட்சித் தலைமை, தமக்கு அடுத்து வல்லமை கொண்ட ஒருவரை
வளரவிட்டது இல்லை. மாறாக அழித்திருக்கிறது என்பதே வரலாறு. இங்கே
தலைமைக்கு விசுவாசமாக இருந்தால், வேண்டியன பெறலாம். வீணாக ஆசைப்பட்டாலோ
அல்லது வில்லங்கம் செய்தாலோ முற்றாக ஒழிக்கப் படுவர். ஒரு தனிமனிதரின்
கட்டுக்குள்ளேயே கட்சி இயங்க வேண்டியுள்ளது. தலைமையின் சொந்தங்களே
வாரிசுகளாக முன்னிறுத்தப் படுகிறார்கள். இங்கே காங்கிரஸ் கட்சியினும்
மோசமான நிலைமை. இம் மாதிரியான எதிர்-பின் விளைவுகளுக்கு எல்லாம் அண்ணாவே
மூலக் காரணம் என்ற விமரிசனத்தை நாம் ஏற்க வேண்டி இருக்கிறது. இது
காலத்தின் கட்டாயம்.
தப்பித் தவறி ஒருவேளை, அண்ணா இன்று இருந்திருந்தால்... நிச்சயம் உள்ளம்
மிக நொந்து, தினமும் வேதனையில் வெந்து, அனலில் சிக்கிய புழுவாய்த்
துடித்துக் கொண்டிருப்பார். அதிர்ஷ்டசாலி அவர். புகழின் உச்சாணிக்
கொம்பில் இருந்த போதே, உலகோர் என்றைக்கும் மெச்சிப் பாராட்டக் காலமாகி
விட்டார். அது மட்டுமா? பிள்ளைப்பேறு இல்லாத குறை, ஒரு வரமாகவே அமைந்து
விட்டது அவருக்கு . அவர்தம் வளர்ப்புப் பிள்ளைகளில் யார் ஒருவரும்
அரசியலில் பிரவேசிக்க வில்லை அல்லது அண்ணாவின் தம்பிகள் அவர்களைப்
பிரவேசிக்க விடவில்லை என்றே சொல்லலாம்.
தமிழர் உள்ளத்தில்...
அரசியல் வானில் ஒரு சூரியன்; தமிழ்க் கலை உலகில், என்றும் மின்னும் ஒரு
நட்சத்திரம்; அறிவுலகப் பேரறிஞர்; தந்தை பெரியாரின் பாசறைத் தளபதி;
தமிழ்நாட்டு இங்கர்சால். தமிழகம் பெற்ற டொமஸ்தனீஸ், சாக்ரட்டீஸ்,
பெர்னாட்ஷா எல்லாம் அவரே என்பர் அறிஞர் சிலர். தமிழ், தமிழர், தமிழ்நாடு
எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் முதன்மை பெற்றுச் சிறக்கத் தம் உடல் -
பொருள் - ஆவி என்ற அத்தனையையும் அட்டி இன்றி வட்டித்தவர்களுள் அவர்!
அண்ணா இறந்தார் உடலால். ஆயின் இன்றும் இருக்கிறார்; என்றும் இருப்பார்
தமிழர் உள்ளத்தில், உணர்வினில். இது நிச்சயம்.
(இக்கட்டுரை ஆசிரியர்
பேராசிரியர். கோவிந்தசாமி இராசகோபால் அவர்களைப்பற்றிய
சிறு குறிப்பு)
பிறப்பு: 06.06.1960
ஊர்: திருத்தணி. தந்தை: கோவிந்தசாமி. தாய்: தனம்மாள்.
உடன்பிறந்தோர்: ஓர் அண்ணன்; இரண்டு தம்பியர்; ஒரு தங்கை.
விவசாயக் குடும்பம்.
திருமணம்: 25.01.1993; ஒரு மகன்; ஒரு மகள் உளர்
கல்வி: எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி. (தமிழ்)
திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ் முதுகலைத் தேர்வில் முதன்மை பெற்று
இரு தங்கப் பதக்கங்கள். பேராசிரியர் பொன்.செளரிராசன் அவர்கள் எனக்கு
வழிகாட்டி.முனைவர்பட்ட ஆய்வேடு: "அகநானூற்றில் முதல் கரு
உரிப்பொருள்கள் அமைப்பும் உணர்த்தப்பெறும் முறையும்"
நூல்கள்:
"காமன் கதைப்பாடல் - ஓர் ஆய்வு" (1986)
"Beyond Bhakti: Steps Ahead..." (2007)
வெளிவர இருக்கும் நூல்: "அகநானூறு: இந்தி எழுத்தொலி மற்றும் பொருள்
மொழிபெயர்ப்பு" (தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு)
(பொருள் மொழிபெயர்ப்பு: திருமதி வி.என்.சரஸ்வதி; என் பங்கு எழுத்தொலி
பெயர்ப்பு மட்டுமே).
ஆய்வுக்கட்டுரைகள்: 30க்கும் மேலாக.
பங்கேற்பு: நாட்டு மற்றும் பன்னாட்டு மாநாடுகள்/கருத்தரங்குகள்.
ஈடுபாடு: சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியம். வள்ளலார்
நெறி அன்பன்.
பணி: தமிழாசிரியர், தில்லிப் பல்கலைக் கழகம் (18.03.1987 முதல்
இன்றுவரை)
வாய்ப்பு: இலக்கியம் குறித்து 20க்கு மேலான வானொலிப் பேச்சுரைகள்
(தில்லி வானொலி நிலையம்)
சென்னைத் தொலைக்காட்சியில் உடனடிக் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் ஒரு
முறை பங்கேற்பு (Programme: Photo feature).
தமிழ்மீதும் தமிழர் நலம் மீதும் பற்றும் பிடிப்பும்.
ஒட்டுமொத்த மானுடம் தழைக்க நாட்டம்.
பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., மு.வ. புதுமைப்பித்தன்,
ஜெயகாந்தன் கவர்ந்த இலக்கியவாதிகள்.
பெரியார், காமராசர், அண்ணா நான் போற்றும் தமிழர் தலைவர்கள்.
செய்யப் பட்டார். துடிப்பு மிக்க இளைஞர்களின் ஏகோபித்த தலைவரானார்
அண்ணா.
கவிஞர்
அரசியல் வானில் ஒரு சூரியன்; தமிழ்க் கலை உலகில், என்றும் மின்னும் ஒரு
நட்சத்திரம்; அறிவுலகப் பேரறிஞர்; தந்தை பெரியாரின் பாசறைத் தளபதி;
தமிழ்நாட்டு இங்கர்சால். தமிழகம் பெற்ற டொமஸ்தனீஸ், சாக்ரட்டீஸ்,
பெர்னாட்ஷா எல்லாம் அவரே என்பர் அறிஞர் சிலர். தமிழ், தமிழர், தமிழ்நாடு
எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் முதன்மை பெற்றுச் சிறக்கத் தம் உடல் -
நூல்கள்:
--
-பரஞ்சோதி
அண்ணா,
இந்த மூன்றெழுத்து ஒரு குடும்பத்தின் மூத்த சகோதரனை குறிப்பதற்கு மட்டுமே
பயன்பட்ட உறவுச் சொல் 1939-க்கு முன்பு. பின்னர் தமிழக அரசியலில் ஒரு
உயிர்ப்புச் சக்தியாக மந்திரச் சொல்லாக மாறிவிட்ட பெருமைக்குரியதானது.
அரசியல்வாதிகளில் திறமை சாலிகளாகவும் அறிஞர்களாகவும் இருப்பவர்கள் ஒரு
சிலர். அவர்களில் மனிதாபிமானமிக்க தலைவராக, மக்கள் தொண்டராக உயர்ந்தவர்
பேரறிஞர் அண்ணா.
இவர் 1909-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் நாள் பட்டுத் தொழிலுக்கு
பெயர் போன காஞ்சி மாநகரத்தில் பிறந்தார். தந்தை நடராசன். தாயார் பங்காரு
அம்மாள். ஆரம்பக் கல்வியையும், உயர்நிலைப் படிப்பையும் காஞ்சியிலே
படித்தார். பின்னர் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள பச்சையப்பன்
கல்லூரியில் படித்தார். புத்திக் கூர்மையும், நினைவாற்றலும் நிரம்பவே
பெற்றிருந்தார். தன்னடக்கமும் பண் புடைமையும் பெற்று விளங்கினார். அறிவு
நூல்கள் பலவற்றை விரும்பி படித்தார்.
அண்ணாவை சீராட்டி பாராட்டி வளர்த்தவர் தொத்தா என்று அண்ணா அன்போடு அழைத்த
இராசமணி அம்மையார். அவரது விருப்பப்படியே தனது இருபத்தி ஒன்றாம் வயதில்
இராணி அம்மையாரை திருமணம் செய்தார். 1934-ம் ஆண்டு பி.ஏ. ஆனர்ஸ்
பட்டதாரியாக பச்சையப்பன் கல்லூரியை விட்டு வெளியே வந்த அண்ணா சுதந்திர
போராட்டத்திற்கு தளபதியாக, தலைவராக உயர்ந்தார்.
1935-ம் ஆண்டு திருப்பூரில் நடை பெற்ற சமூக சீர்திருத்த மாநாட்டில்
பெரியாரை சந்தித்து பேசினார். அண்ணாவின் தமிழ் பேச்சாற்றல், தன்னடக்கம்,
பணிவு பெரியாரை பெரிதும் கவர்ந்தது. அண்ணாவை தன்னுடைய வாரிசாக ஏற்றுக்
கொண் டார் பெரியார். அதோடு தான் நடத்தி வந்த குடியரசு இதழின் ஆசிரியராக
அண்ணாவை நியமனம் செய்தார். பகுத்தறிவு மணம் பரப்பும் கட்டுரைகள், கவிதை,
கேலிச் சித்திரங்களை தீட்டினார்.
பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இதன்
காரணமாக 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் நாள் திராவிட முன்னேற்ற
கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். 1938-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி
எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக சிறைக்குச் சென்றார்.
1956-ம் ஆண்டு திருச்சியில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தனது
கட்சி வருகிற பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்று
வாக்களித்து தீர்ப்பு கூறும்படியாக வந்திருந்த அனைவரையும் கேட்டுக்
கொண்டார். கூடியிருந்த மக்கள், 1957 பொதுத் தேர்தலில் கழகம் நேரடியாக
போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது நடைபெற்ற தேர்தலில்
அண்ணா காஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின், 1962 தேர்தலில் அண்ணா காஞ்சி தொகுதியில் தோல்வி அடைந்த போதிலும் 51
உறுப்பினர்களை பெற்று அவருடைய கட்சி பலம் வாய்ந்த எதிர்கட்சி ஆனது. அண்ணா
மாநிலங் களவை உறுப்பினர் ஆனார். அவரது பேச்சு அப்போதைய பிரதமர் முதல் பிற
கட்சித் தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தது. 1967-ம் ஆண்டு நடைபெற்ற
சட்டமன்ற தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்
அண்ணா. எல்லா கட்சி தலைவர் களையும் சந்தித்து அவர்களின் வாழ்த் தினை
பெற்றார். எளிமை, இனிமை, கனிவு, பாசம், மாற்றாரை மதிக்கும் மகத்தான
பண்பு, மனித நேயம் இவற்றை கொண்டு விளங்கினார்.
நெசவாளர்களின் துயரத்தை துடைக்க துணி மூட்டைகளை தானே தோளில் சுமந்து நிதி
சேர்த்தார். 1962-ம் ஆண்டு விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டார். அப்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு
ஜனவரி மாதம் 3-ம் நாள் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில்
நடத்தினார். வள்ளுவர், கண்ணகி, அவ்வையார், பாரதி, பாரதி தாசன், போப்,
வீரமாமுனிவர் போன் றோருக்கு சென்னை கடற்கரையில் சிலை அமைத்தார். யேல்
பல்கலைக்கழகம் வழங்கிய `சப் பெலோஷிப்' பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற
பெருமை பெற்றார். எழுத்திலும், பேச்சிலும், புலமை பெற்று விளங்கிய அண்ணா
திரைப்பட வரலாற்றிலும் திருப்புமுனைப் படைத் தார். இவரது கைவண்ணத்தில்
உருவான வேலைக்காரி, நல்லதம்பி, சொர்க்கவாசல் போன்ற சினிமா, வெறும்
படங்கள் இந்த சமூகத்துக்கு பாடமாக அமைந்தது.
1969 ஜனவரி 22 அண்ணாவின் உடல்நிலை மோசமடைந்தது. 25-ந் தேதி அடையாறு
புற்று நோய் கழகத்தில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். பிப்ரவரி
மாதம் 2-ம் நாள் நள்ளிரவில் அண்ணா தன்னுடைய இன்னுயிரை நீத்தார். பிப்ரவரி
4-ம் நாள் அண்ணாவின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து
கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்றைய இளையதலைமுறையினர்,வருங்காலச் சந்ததியினருக்கு
சிந்தையை சிலிர்க்கச் செய்து அறிவூட்டும் அமுதசுரபி அது!
அறிஞர் அண்ணா போல இளையதலைமுறைக்கும்,அண்ணாவை அறியாதோருக்கு
அறிமுகப்படுத்தும் வண்ணமாக பிரான்சுப் பெருமகனார்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ விடுக்கும் ஓர் உன்னதமடல் இது!
படித்து இன்புறுக! சுவைத்துப் பெற்ற இன்பத்தை பகிர்க பலருக்கு!
-
<>அறிஞர் அண்ணாவும் இளையதலைமுறையும்<>
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு.
வளமான வருங்காலம் வரும் வரும் என வளைய, வளைய வரும் இளைய தலைமுறையே!
வரும் உனக்கு வளமான காலம், அதற்குரிய தகுதிகளை நீ வளர்த்துக்கொண்டால்!
தமிழினத் தலைவர்களில் நலமான சிலரையாவது நீ தெரிந்துகொண்டால்,
அவர்களிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக்கொண்டால்!
அவர்கள் மீது பற்றுக்கொண்டால்! வா, வா வந்து பார்- அவர்களில்
ஒருவரை அறிமுகப் படுத்துகிறேன் உனக்கு. அவர்தாம் அறிஞர் அண்ணா!
நூற்றாண்டு விழா நாயகர்.
அண்ணாவைப் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் கூறுவார்கள்!
'அற்றம் மறைக்கும் பெருமை, சிறுமைதான் குற்றமே கூறிவிடும்"; என்பது
போல்,
தும்பையும் துரும்பையும் தூணாக்கித் தூற்றி இகழ்பவர்களும் உண்டு,
ஏற்றமிகு தோற்றம் இல்லை என்றாலும்
போற்றிப் புகழத் தக்க பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறப்பெடுக்கவில்லை
என்றாலும் பேச்சுத் திறத்தாலும்
பேசுந் திருநாட்டு அரசியலில் காட்டிய நேர்மை மறத்தாலும் அறிவுக் கூர்மை
உரத்தாலும் தனக்கெனத்
தனி இடம் பெற்றவர் என்று போற்றிக் கொண்டாடுபவர்களும் உண்டு.
வெண்ணிற ஒளியை முப்பட்டைக் கண்ணாடி வழிசெலுத்தும் போதுதான் அதன்
உள்ளிருக்கும் வண்ணங்கள்
புலப்படும். அது போல, பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் தலைவர் என்ற
முப்பட்டைகள் வழியாக அண்ணாதுரையை
அலசிப் பார்த்தால் அவர்க்கு உள்ளிருக்கும் சிறப்புகள் புலப்படும்.
புகழுக்கு உரியவர்தான் என்பதை அறிய முடியும்.
இளைஞர் படையே எழுந்து வா, அறிஞர் அண்ணா யார் எனப் பார்க்க வா!
அடடா, அண்ணாவை, அறிஞர் அண்ணாவை எண்ணுகின்ற போதே எண்ணமெல்லாம் இனிக்கும்,
அவராற்றிய தொண்டுகளை நினைத்தால் கண்ணெல்லாம் பனிக்கும்! அவற்றை எடுத்துக்
கூற
ஒரு நாள்தான் போதுமா? ஒரு நாவும்தான் போதுமா?
அறிஞர் பட்டம்
அறிஞர் என்ற பட்டம் அவருக்கு யார் கொடுத்தது? பல்கலைக் கழகம்
கொடுத்ததா?
பாமர மக்கள் தந்ததா?
சென்னை மெரினா கடற்கரையில் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்
கல்கி.
அதில் பலதலைப்புகளில் பல அறிஞர்கள் பேசுவதாக ஏற்பாடு. ஆனால்
பேச்சாளர்களில்
ஒருவர் கூடத் தலை காட்டவில்லை. கல்கிக்குக் கையும் ஆடவில்லை காலும்
ஓடவில்லை!
அச்சமயம் ஓர் இளைஞர் கல்கியை அணுகி அத்தனைத் தலைப்புகளிலும் தாமே
பேசுவதற்கு
அனுமதி கேட்டார். தயக்கத்தோடேயே இசைவளித்தார் கல்கி. அவ்வளவுதான் மடை
திறந்த வெள்ளம் போல்
வெளுத்துக்கட்டிவிட்டார் அந்த இளைஞர். அவர் வேறு யாருமில்லை,
அண்ணாதுரைதான்.
அப்போதே அவரைப் பாராட்டி 'வெறும் அண்ணாதுரை இல்லை,
இனி அறிஞர் அண்ணாதுரை" என்று பட்டம் வழங்கியவர் கல்கி. பெரும்
பேராசிரியரான உ.வே. சாமிநாதையருக்குத்
தமிழ்த் தாத்தா பட்டம் வழங்கியவர் அல்லவா கல்கி. அன்று அவரளித்த பட்டம்
இன்றுவரை அண்ணாவின்
பெயரோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
அண்ணா என்றதும் நம் மனக்கண் முனனால் வருவது அவருடைய பேச்சாற்றல்தான்.
'கேட்டர்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்" என்னும் வள்ளுவப் பெருந்தகையின் இலக்கணத்துக்கு
இலக்கியமாகத்
திகழ்ந்தவர் அண்ணாதுரை. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும்
அண்ணாவின் பேச்சும்
சொல் வீச்சும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.
இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரைகளைக் கேட்டு
மயங்காதவரே
இல்லை எனலாம். இ;ந்தியத் தலைமை அமைச்சராக இருந்த பண்டித சவகர்லால் நேரு
அவர்கள் அண்ணாவின் உரையை மிகவும் ரசித்துக் கேட்பாராம். பாராளுமன்ற
அவைத்தலைவர்
ஆங்கிலத்தில், 'Now I invite Mr C.N.Annadurai to deliver his maiden
speech" என அழைக்கிறார்.
பாராளுமன்றத்தில் முதன் முதலாக உரையற்ற எழுகிறார் அண்ணா.
கரகரத்த தன் குரலில்
'yes I'm going to deliver my maiden speech but it's not a maiden's
speech" என்று தொடங்க அவையில் உறுப்பினர்களின்
கைதட்டல் எங்கும் எதிரொலித்ததாம். முதல் உரை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே
இவ்வளவு
கைதட்டல் வாங்கிய அரசியல்வாதி அண்ணாதுரையாகத்தான் இருப்பார்.
ஒரு முறை, சில கல்லூரி மாணவர்கள்,; தொடர்ந்தாற் போல் 3 முறை 'because'
என்ற சொல் ஒரு வாக்கியத்தில
வருமாறு சொல்ல முடியுமா எனக்கேட்டார்களாம். அடுத்த நொடியே, அண்ணாவின்
பதில் வந்தததாம்
"No sentence ends with because, because, because is a conjunction!"
என்று.
தமிழகச் சட்டசபையில் அண்ணாதுரை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில்
அளித்துக்கொண்டிருக்கிறார்.
அவரைப் பற்றிக்கொண்ட புற்று நோய் முற்றி வரும் நிலை. அவர் வாழும் காலம்
குறுகி வருகிறது என்பதை
அவர் அறிவார். அப்போது காங்கிரஸ்; கட்சி உறுப்பினர் விநாயகம், தி.மு.க
ஆட்சியை மட்டம் தட்டிக் காரசாரமாகப்
பேசிக்கொண்டிருக்கிறார். "இனியும் உங்கள் ஆட்சி நீடிக்காது, முடிவுக்கு
வரப் போகிறது" என்ற கருத்துப் பட
ஆங்கிலத்தில் ' your days are numbered'" என்று கூறினார். உடனே அண்ணாதுரை
உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்.
அந்த வாக்கியம் தன்னைப் பற்றித் தன் உடல் நோய் பற்றி, தான் வாழுங்காலம்
முடிவுக்கு வரப்போவதைப் பற்றிக்
குத்திக்காட்டுவதாகப் பொருள் கொண்டுவிட்டார். அடுத்த கணமே, தழுதழுத்த
குரலில் 'my steps are measured" என்று
நிறுத்தி நிதானமாகக் கூற சட்டசபையே திகைத்து நின்றுவிட்டது.
திரு விநாயகம் சொன்னது, பைபிளில் இடம்பெறும் வசனம். அண்ணாதுரையின் பதிலோ
அவருடைய சொந்த வாக்கியம்.
தமிழ் மேடைகளில் முழங்கிய அண்ணாதுரையைத் தமிழகம் நன்கு அறியும். காது
கொடுத்து மட்டுமல்ல,
காசு கொடுத்தும் இவர் உரைகளைக் கேட்டவர்கள் தமிழக மக்கள். நவீனன் என்பவர்
எழுதிய அண்ணாவின்
கதை என்ற நூலில், 'அண்ணா சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். எந்தப்
பொருள் பற்றியும் எத்தனை மணி நேரம்
வேண்டுமானாலும் சுவையோடு பேசுவார். அன்று அவர் பேசின பேச்சு இன்றும்
பலரிடையே நினைவு இருப்பது
உண்மையே" என எழுதுவது உண்மையே!
பண்டிதர்கள் இடத்திலே பயந்து போய்ப் பதுங்கிக் கிடந்த பைந்தமிழை மீட்டுக்
கொண்டு வந்து பட்டிதொட்டிகளில்
புழங்க வைத்தவர் அண்ணாதுரையேதான். பட்டி தொட்டி என்ற சொற்றொடரே அண்ணா
படைத்ததுதான். அக்காலத்து
மெத்தப் படித்த மேதாவிகளின் மணிப் பிரவாளக் கொடு நடைக்கும் மறைமலை
அடிகளின் தனித் தமிழ்க் கெடுபிடி
நடைக்கும் முடிவு கட்டி இனிய எளிய தமிழ் நடையை மேடைக்கும் தமிழ் எழுத்து
ஓடைக்கும் அறிமுகப் படுத்தியவர்
தமிழ்த் தென்றல் திரு வி. கலியாண சுந்தரனார்.
அனல் கக்கிய அரசியல் மேடைகளில் தமிழ்ப் புனல் பாய்ச்சியவர் தோழர் ப.
சீவானந்தம்.
இவர்களை அடுத்து கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்
தருவாக, மேடையிலே
வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாகத் தமிழ்த் தென்றலைத் தவழச் செய்தவர்
அறிஞர் அண்ணாதுரையே!
இதனை எவரும் மறுக்கமுடியாது, மறக்கவும் முடியாது. கரகரத்த குரல்
எடுத்துத் 'தம்பி" என அழைத்து
அறிஞர் அண்ணா உரைக்கும் கருத்து கேட்பவர் நெஞ்சில் நின்று நிலைக்கும்
கல்வெட்டு.
மேடை தோறும் ஒலித்த அண்ணாவின் கரகரப்புக் குரல் மேடைத் தமிழுக்குத்
தனிப்பாதை வகுத்தது. அரிய
சொற்றொடர்களையும் சொல்லாட்சிகளையும் படைத்தளித்து ஆங்கிலத்தை
வளப்படுத்தியவர் ஷேக்ஸ்பியர்
என்பார்கள். அவரைப் போல அண்ணாதுரை படைத்தளித்து மேடையிலே பயன் படுத்திய
சொற்றொடர்கள்
இன்றும் நம்மிடையே வழங்கி வருகின்றனவே. 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணக்கும்" என்பதைத்தான்
மறக்க முடியுமா என்ன! 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" இன்றும் தி.மு.கவின்
விருது வாக்கியமாக விளங்குகிறதே!
அத்தை மகள்
மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதை எவ்வளவு நயமாகத் தெளிவு
படுத்தினார் தெரியுமா?
இதோ அந்தப் புகழ் பெற்ற வாக்கியம் : 'அரசியல் என்பது அத்தை மகள்.
பார்க்கலாம், பழகலாம் ஆனால் தொட்டு
விடமட்டும் கூடாது". இதில் உள்ள இலக்கிய நயமும் சுருக்கெனச் சொன்னாலும்
பொருத்தமாக உரைத்த திறமும்
அடடா இனிமையோ இனிமை!
அண்ணாதுரை அடிக்கடி பயன்படுத்திய வாக்கியம் ஒன்று உண்டு. கடவுள்
மறுப்புக்
கொள்கையைத் தன் இதயத்திலே ஏந்தியவர் பெரியார். அவரிடமிருந்து மாறு பட்டு
நின்ற அண்ணாதுரையோ,
கடவுள் இருப்புக் கொள்கையைக் குருதியிலே கொண்டவர். அதனால்தான்,
செல்லுகின்ற இடமெல்லாம்,
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொல்லுகின்ற பண்பு அவருக்கு இருந்தது.
இந்த வாக்கியம் எந்த அளவுக்குப் புகழ் பெற்றுவிட்டது என்றால், இதனைப்
படைத்தவர் அண்ணாதுரையே
என்று பாமர மக்கள் நம்பத் தொடங்கிவிட்டனர். இந்த நம்பிக்கை இன்றளவும்
தொடாந்து வருவதுதான் வேடிக்கை.
இதனை முதன் முதலாகச் சொன்னவர் திருமூலர் என்ற சித்தர் என்று சொன்னால்
சொல்பவர்களைப் பித்தர் என்று
சொல்பவர்களே அதிகம்.
இது போலவே அண்ணா அடிக்கடி பயன்படுத்திய இன்னொரு சொற்றொடர் :
"இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?"
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணி என்ற கவிதை நாடகத்தில் இடம்
பெறும் வீர வரி இது.
இந்தச் செய்தியும் பாமர மக்களுக்குத் தெரியாது. அண்ணா சொன்னதாகத்தான்
இன்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாவின் பொன் மொழிகளில் பெரும் புகழ் பெற்றதுதான் "எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்" என்பது.
இவருடைய கல்லறையில் இந்த வாக்கியத்தைத்தான் பொன்னெழுத்தகளால் பொறித்து
வைத்திருக்கிறார்கள்.
'படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்' என்ற மொழிக்குப்
பொருத்தமாக அமைந்தவர் பெரியார்.
அவரின் சீடரான அண்ணாதுரையும் இராமனுக்கு எதிராக, இராமாயணத்துக்கு
எதிராகக் கணை தொடுத்தவர்தாம்.
அண்ணாதுரை தமிழை இலாகவமாகக் கையாண்டாரே தவிர, தமிழைத் தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்தினாரே
தவிர முறையாகத் தமிழ் படித்தவர் அல்லர். ஆனாலும் அவர் கம்பனின்
காவியத்தைப் புரட்டிப் புரட்டிப் படித்திருந்தார்.
கம்பனில் கரை கண்டவர்களை விட அதிகமாகவே படித்திருந்தார். புதுச்சேரிக்
கவிஞர் பாவேந்தன்
பாரதிதாசன் பெரியாரின் சீடன்தான். ஆனால் அவர் கம்பனுக்கு எதிராகவோ,
கம்பனின் தமிழுக்கு எதிராகவோ
எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை. ஏனெனில் பாரதிதாசன் தமிழ்
படித்தவர், முறையாகத் தமிழ் படித்தவர்.
கம்பனின் காவியம் முழுக்க முழுக்கத் தமிழ்த் தேன் என உணர்ந்தவர்.
தென்காசித் தமிழறிஞர் டி. கே. சிதம்பரநாத
முதலியார் கம்பனில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர், கம்ப இராமாயணத்தில்; கரை
கண்டவர். கம்ப இராமாயணத்தின்
12 000 பாடல்களில் ஈராயிரம் பாடல்களை இடைச் செருகல் எனத்தள்ளி விட்டுப்
பத்தாயிரம் பாடல்களே கம்பன்
எழுதியவை என அவர் முழக்கமிட்டபோது எதிர்த்துக் குரல் கொடுத்தவர்
பாவேந்தர்தாம். ஈராயிரம் தமிழ்ப்
பாடல்களைப் புறந்தள்ளி விட இந்தப் புள்ளி யார் என எள்ளி
நகையாடியவர்தாம்.
ஆனால் அண்ணாதுரையின் நிலைப்பாடு இதற்கு நேர்மாறாக இருந்தது. கம்பனின்
இராமாயணம் ஆபாசக் குப்பை,
அபத்தக் களஞ்சியம் என மேடைதோறும் வாதிட்டவர் அண்ணாதுரை. கம்பனைத் தாக்கி
இவர் பேசிய மேடைப்
பேச்சுகள் 'கம்பரசம்" என்னும் பெயரில் வெளிவந்தது, புகழும் பெற்றது.
அக்காலத் தமிழக அரசு இந்நூலைத் தடை
செய்துவிட்டது.
இரு பெரும் தமிழ்ப் புலவர்கள்
இப்படி, நாவன்மை துணை நிற்கக் கம்னின் பாவன்மையை இழித்தும் பழித்தும்
பேசியவர் அண்ணாதுரை.
ஆனாலும் 'பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே"
என இவர் வாதங்களைத்
தள்ளிவிட முடியவில்லை. ஏனெனில், கம்பனின் மூலை முடுக்குகளில்
இருந்தெல்லாம் சான்றுகள் காட்டித் தம் வாதத்
திறமையால் வெற்றிக் கொடி நாட்டி விடுவார். இவருக்கு எதிராக வாதிட
வந்தார்கள் பெரும் தமிழ்ப் புலவர்கள்
இருவர். இருவருமே தமிழகமும் தமிழுலகும் நன்கறிந்தவர்கள்.
ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்
செந்தமிழ்க் கிள்ளை சேதுப்பிள்ளை
எனப் புகழப் பெற்ற டாக்டர் இரா. பி சேதுப்பிள்ளை. மற்றவர் நாவலர் எனப்
பெயர் வாங்கிய தலை சிறந்த
தமிழறிஞரும் வழக்கறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார்.
அண்ணாதுரையின் நாவன்மைக்கு முன்னால் நிற்கமுடியாமல் இருவரும்
திக்குமுக்காடிப் புறங்காட்டிப்
போக அவர்கள் இருவரையும் அண்ணா வென்றார், வெற்றி வீரராக நின்றார். அவரின்
நாவன்மைக்கும்
பேச்சாற்றலுக்கும் இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்தது.
அந்த மேடைப் போரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் காட்டுகிறேன். அண்ணாவின்
தந்திரமான வாதத் திறமையை
அது நன்கு விளக்கும். அகலிகைக் கதை அனைவரும் அறி;ந்த ஒன்றுதான். அகலிகை -
மான் விழியாள், தேன் மொழியாள்!
இளமையும் வளைவான உடல் வளமையும் உடையவள். அவள் கட்டிய கணவனோ காட்டில்
வாழும் தவமுனிவன்.
இனிய உருவமும் கனியனைய பருவமும் கொண்டு நின்றவளை மருவ மறந்தான் போலும்
அம்முனிவன்;.
வாடி நின்றவளைத் தேடிக் கண்டு கொள்கிறான் இந்திரன். அவள் நலன்களை
எல்லாம் கண்களால் உண்டு விடுகிறான்.
எந்த விதமான தந்திரம் செய்தாவது அவளைக் கூட வேண்டும் என்ற எண்;ணம்
இந்திரனுக்கு. வெறுமனே காத்திருந்தால்
வருமா வாய்ப்பு! ஒரு நாள், வாய்ப்பைத் தானே உருவாக்கிக்கொள்கிறான.;
விடிகாலை இன்னும் விடியாத முன்னம் - கோழி வடிவெடுத்துக் கூவுகிறான்.
இந்திரன் செய்த தந்திரத்தை உணராத
தவமுனிவனும் சந்தியா வந்தனம் செய்யப் புறப்பட்டுப் போகிறான். அவன்
அப்படிப் போக, இவன் இப்படிக் குடிலின்
உள்ளே, முனிவனின் உருவில் செல்கிறான். அரைத் தூக்கத்தில் இருந்த அகலிகையை
அவன் அள்ளி எடுக்க இருவரும்
பள்ளியுள் படுக்க... இந்திரனின் நெடுநாளைய வேணவா தீர்கிறது! மருவி
முடித்த பின் இருவரும் அருகருகே
இருக்கையில்தான் அகலிகை உணர்ந்தாளாம் வந்தவன் வாகான இன்பம் தந்தவன்
தன்னை மணந்த மணாளன்
இல்லை என்று. உணர்ந்த பின்னும் தக்கது அன்று என்று அவள் கருதவில்லையாம்.
இதனைக் கம்பன்
"புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலொடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்
தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா
முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்"
என எழுதுகிறான்.
சரச சல்லாபங்களை விளக்காமல், விரசம் சிறிதும் கலக்காமல் கன்னித்
தமிழெடுத்துக் கவனமாகத்
தான் கம்பன் எழுதிச்; செல்கிறான். ஆனால் அண்ணாதுரை தனக்கே உரிய
நாவன்மையைப்
பயன்படுத்துகிறார், உணர்ந்தனள் என்ற சொல்லுக்கு. சாமத்திலே வந்து காம
கீதம் பாடியவன் தன்
கணவன் அல்லன், தந்திரமாய்த் தன்னைக் கூடியவன் இந்திரன்தான் என்று
புரிந்துகொண்டாள் என்பது
அண்ணாவின் வாதம்.
வந்தவன் இந்திரன்தான் என்பது எப்படி அகலிகைக்குத் தெரியும்? ஏற்கனவே சில
முறையோ பல
முறையோ அகலிகையை அவன் தொட்டுப் புணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான்;
இப்போது
அவனை அவள் உணர்ந்துகொண்டாள் என்று வாதிடுவார். இந்த வாதத்
திறமைதான் அண்ணாதுரையின் மேடைப் பேச்சுக்கு வலிமை ஊட்டியது.
சிறந்த பேச்சாளர்களுக்கு எழுத வராது. சிறப்பான எழுத்தாளர்களுக்குப் பேச
வராது.
பேச்சிலும் எழுத்திலும் ஒரு சேர வல்லவர்களாக விளங்குபவர்கள் வெகு சிலரே.
அந்த வரிசையிலும் முன் நிற்பவர் அண்ணாதுரை. இவருடைய
மேடைப் பேச்சுகள் நூல்கள் வடிவிலும் வெளிவந்துள்ளன. அவை தவிர மொத்தம் 89
சிறுகதைகள்
இவர் எழுத்தாற்றலை உலகுக்கு உணர்த்திக்கொண்டுள்ளன. சமூக அவலங்களையும்
சமூகத்தில் உலவும்
ஏற்றத் தாழ்வுகளையும் அவற்றுக்கான காரணங்களையும் தம் சிறு கதைகளில்
தெள்ளத் தெளிவாகப்
புலப்படுத்தி இருக்கிறார்.
அவருடைய முதல் சிறு கதை வெளியான ஆண்டு 1934. ஆனந்த விகடனில் வெளிவந்தது.
தலைப்பு : கொக்கரக்கோ.
கடைசிச் சிறுகதைகளான 'உடையார் உள்ளம்", 'பொங்கல் பரிசு" 1966 ஆம் ஆண்டு
காஞ்சி
இதழில் வெளிவந்தன.
ஈரோட்டிலிருந்து வெளிவந்த விடுதலை பத்திரிகையில் துணை ஆசிரியராகப்
பணியாற்றிய
அண்ணாதுரை, 1939 முதல் இரண்டரை ஆண்டுகள் அதில் எழுதி வந்தார். பெரியார்
முன் வைத்த
'இந்தி எதிர்ப்பு', 'தமிழர் உரிமை", 'திராவிட நாடு கோரிக்கை"
முதலியவற்றுக்குத் தர்க்க ரீதியான
ஆதாரங்களைத் திரட்டித் தந்தவர் அவர். 1942 இல் காஞ்சி மாநகரில் 'திராவிட
நாடு' பத்திரிகையைத்
தொடங்கினார். அது முதல் அண்ணாவின் எழுத்தாற்றல் வலிவிலும் பொலிவிலும்
உரத்திலும்
திறத்திலும் பெரிதும் விரிவடைந்தது.
தென்னாட்டு பெர்னார்ட் ஷா
தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் மிகப் புகழ் வாய்ந்தவை. அரசியல்
கட்டுரைகளோடு சமூகச் சிந்தனைப்
போக்கான கட்டுரைகளும் இவர் வரைந்திருக்கிறார். ரோமாபுரி ராணிகள், ஆரிய
மாயை, தீ பரவட்டும்,
ஏ, தாழ்ந்த தமிழகமே, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்... போன்ற கட்டுரைகள்
பலவேறு துறைகளில்
இவர் உலவி வந்ததைக் காட்டி நிற்கும். கலிங்க ராணி, ரங்கோன் ராதா, பார்வதி
பி.ஏ, போன்ற புதினங்களும்
இவருடைய படைப்புகளே! கபோதி புரத்துக் காதல், கோமளத்தின் கோபம், சிங்களச்
சீமாட்டி... இவர் எழுதிய
குறும் புதினங்களில் சில. கவிதையையும் இவர் விட்டு வைக்கவில்லை.
தெரியுமோ! அண்ணாவின் கவிதைகள்
என்னும் தொகுப்பு 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வெளியிட்டவர்கள்
பூம்புகார் பிரசுரத்தார். அக்கால
விடுதலை ஏட்டில் இவர் எழுதிய புதுக்கவிதையைக் கேளுங்களேன் :
'வெள்ளி முளைக்குது வெண்தாடி அசையுது
வீணரின் விலாவெல்லாம் வேதனை மீறுது
வெள்ளையரும் அதிர வெடிவேடடுடக் கிளம்புது
வேதியக் கூட்டம் எல்லாம் வியத்தின்று விழிக்குது". திராவிட இயக்க
உணர்வைத் திறமையாகச்
செப்பும் புதுக்கவிதை. தமிழ்ப் பற்று, பகுத்தறிவு, சீர்திருத்தக்
கொள்கைகளை இவர் கவிதைகள் எதிரொலித்தன.
இவர் எழுதிய நாடகங்களும் பல உண்டு. இவர் நாடகங்களில் பொதிந்து கிடந்த
கருத்துக் கருவூலங்களை ரசித்த
கல்கி, இவரைத் தென்னாட்டு பெர்னார்ட் ஷா என வருணித்தார்.
சிவாஜி
சந்திரோதயம் என்ற நாடகத்தின் ஆசிரியர் மட்டும் அல்ல இவர், அதிலே நடடித்த
நடிகரும் கூட. இவர் நடித்த
ஒரே நாடகம் இதுதான். 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற இவருடைய
நாடகத்தில் சிவாஜியாகச் சிறப்பாக
நடித்தவர் விழுப்புரம் சி. கணேசன். இவருடைய நடிப்பைப் பெரிதும் பாராட்டிய
அண்ணா இவருக்குச் சிவாஜி
என்ற பட்டப் பெயர் சூட்டினார். அன்று முதல் அவர் சிவாஜி கணேசன் ஆனார்.
இன்றும் அப்பெயரே அவர்
புகழைப் பாடிக்கொண்டிருக்கிறது.
நாடக ஆசிரியராக மட்டும் நின்று விடாமல் திரைப்படக் கதாசிரியனாகவும் வசன
கர்த்தாவாகவும் அண்ணா
உரு மாறி இருக்கிறார். இவர் படைப்பில் உருவான ரங்கோன் ராதா, வேலைக்காரி,
ஓர் இரவு போன்ற படங்கள்
பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் மீது தனி
அன்பு கொண்ட அண்ணாதுரை
அவருக்காகவே நல்லதம்பி என்ற படத்துக்குக் கதை வசனம் எழுதிக் கொடுத்தார்.
அந்தப் படமும் வெற்றிப்
படமாகவே அமைந்தது. இப்படிப் பத்திரிகை, நாடகம், திரைப்படம்...போன்ற பல
துறைகளிலும் தலைசிறந்த
எழுத்தாளராக விளங்கியவர்தாம் அண்ணாதுரை.
இப்படி மூன்று துறைகளில் வெற்றிக் கொடி நாட்டிய அறிஞர் அண்ணா சிறந்த
இலட்சியவாதி கூட.
'அஞ்சா நெஞ்சு படைத்த இலட்சியவாதிகள்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்கக்
கூடிய ஒப்பற்ற செல்வங்கள.;
ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால் இந்த
செல்வங்களோ மக்களின்
இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்' என எழுதியவர் அண்ணா. தன்
பேச்சாலும் எழுத்தாலும்
இலட்சியங்களை, கொள்கைகளை எடுத்துச் சொன்னவர்தானே அண்ணாதுரை. அவர்
எழுதியது போலவே, இன்றும்
மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் அவர் நடமாடிக்கொண்டுதானே இருக்கிறார்.
இவருடைய எழுத்தாற்றலுக்கு எடுத்துக் காட்டான சில வரிகள் :
'வாழ்வாவது மாயமாம், இது மண்ணாவது திண்ணமாம்! இப்படியானால்,
மண்ணாகக் கூடிய இந்த வாழ்விலே வெள்ளி வாகனங்கள் ஏன்? வைரக் கிரீடங்கள்
ஏன்?
தங்கச் சங்கிலிகள் ஏன்? மாணிக்க மூக்குத்திகள் ஏன்? பரமன் ஆலயங்களில்
இவை
எல்லாம் அமைக்கப்பட்டிருப்பதேன்?"
'ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித்
தெள்ளேணம் கொட்டும்" மூடப் பழக்கத்தைச் சாட வரும் அண்ணாதுரை,
"தேளைத் தேவனென்றும் பாம்பைப் பரமனென்றும் நரியை நாதனென்றும்
புலியைப் புண்ணியா என்றும் பித்தரும் கூறாரே' என்பார்.
புலவர் குழந்தை படைத்தளித்த இராவண காவியம் என்ற புரட்சி நூலுக்கு
அண்ணாதுரை வழங்கிய ஆராய்ச்சி முன்னுரையின் கடைசிப் பகுதியில் அவர்
எழுத்தின் நடைச் சிறப்பை நன்கு உணரலாம் : 'இந்நூல், பழமைக்குப் பயணச்
சீட்டு
புதுமைக்கு நுழைவுச் சீட்டு, தன்மான இயக்கத்தார், தமிழ்ப் பகைவர்கள்,
காவியச் சுவை
அறியாதார், கலை உணர்வு இல்லாதார் என்ற அவ மொழியை இனி அடித்துத்
துரத்தும்
ஆற்றலாயுதம் தமிழ் மறுமலாச்சியின் தலைசிறந்த நறுமலர், நெடுநாள்
ஆராய்ச்சியும்
நுண்ணிய புலமையும் இனப் பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்.
தமிழின் புதுவாழ்வுக்கான போர் முரசு . காவிய உருவில் ஆரியத்தைப்
புகுத்திவிட்டோம்,
எனவே இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறைகூவல்,
தமிழருக்கு
உண்மையை உணருமாறு கூறும் ஓh அன்பழைப்பு. தமிழர் கால்கோள், விடுதலைக்
கீதம்."
இவ்வண்ணம் அண்ணாவின் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்பட்டது அவருடைய
நாநயம்,
அறிவுக் கூர்மை. அரசியலில் வெளிப்பட்டது அவருடைய நாணயம், நேர்மை.
பகுத்தறிவுப்
பகலவன் பெரியாரின் பாசறையிலே அரசியல் வகுப்புகளில் பாடம் கேட்ட அண்ணா
கருத்து வேறுபாடு எழுந்த போது பெரியாரை விட்டு விலகவும் தயங்கவில்லை!
பிரிந்து வந்தாலும் தன் கட்சிக்குத் தலைவர் பெரியார்தாம் எனப்
பறைசாற்றவும்
தயங்கவில்லை! 1967 -இல் தி.மு.கவுக்கு மகத்தான வெற்றி!; ஆட்சி அமைக்க
வருமாறு
அழைப்பு அண்ணாவுக்கு!
தம்பிகள் புடை சூழ அண்ணா ஓடுகிறார் ஆட்சிக் குடை பிடிக்க இல்லை,
கோட்டையில்
பதவியைப் பிடிக்க இல்லை! பெரியாரைத் தேடிப் போகிறார். நடந்த தேர்தலில்
சூடு பறக்கத்
தி.மு.கவைத் தாக்கியவர்தாம் பெரியார், போடாதீhகள் உங்கள் ஓட்டுகளை அந்தப்
புறம்
போக்குகளுக்கு என்று பொரிந்து தள்ளியவர்தாம். ஆனால் அண்ணாதுரை, அவரைத்
தேடி
அவரை நாடி அவரிடம் ஓடிச் செல்கிறார்: 'ஐயா, இந்த ஆட்சியே உங்களுக்குக்
காணிக்கை"
என்று அண்ணா கூறிய போது பெரியாரால் பேச முடியவில்லை. 'அண்ணா வந்து
பார்த்த
போது கூச்சத்தால் குறுகிப் போனேன்" என்று உணாச்சி ததும்ப உரைத்தார்
பெரியார்.
அங்கே, பாராளுமன்றக் கன்னிப் பேச்சின் முதல் வாக்கியத்திலேயே தன் நா
நயத்தைக்
காட்டிய அண்ணாதுரை, இங்கே தான் அரைவேக்காட்டு அரசியல் வாதி இல்லை என்பதை
அழகாக உணர்த்தித் தன் அரசியல் நாணயத்தை வெளிப்படுத்திவிட்டார். அது
மட்டுமா?
முன்னாள் முதல்வர்களான கர்ம வீரர், பெருந்தலைவர் காமராசர், அவருக்குப்
பின் தமிழகத்தை ஆண்ட பக்தவத்சலம் இருவரையும் சந்;தித்து ஆசீரும்
ஆலோசனைகளும் பெற்றார் அண்ணா.
இவர் முழு மூச்சொடு எதிர்த்த கம்பன் மட்டும் அப்போது, நேரிலே
வந்திருந்தால்,
'யாரொடும் பகைகொள்ளலன் என்ற போது போரொடுங்கும் புகழொடுங்காது" என்று
பாராட்டி இருப்பான். வானளந்த புகழை எல்லாம் தேனளந்த தமிழாலே தானளந்த
திருவள்ளுவர் வந்து பார்த்திருந்தால், 'பகையும் நட்பாக் கொண்டொழுகும்
தகைமையான்
கண் தங்கிற்று உலகம்" என்ற குறளின் விளக்கத்துக்கு அண்ணாவைக் காட்டி
இருப்பார்.
தேர்தலில் காமராசர் தோற்றுப் போனார், அதிலும் ஊர் பெயர் தெரியாத மாணவர்
சீனிவாசனிடம் எனக் கேள்விப்பட்டு அண்ணதுரை எக்காளமிட்டு
அக்களிக்கவில்லை!
'காமராசர் எல்லாம் தோற்கக் கூடாது ஐயா" எனக் கண் கலங்கினாராம.; அருகில்
இருந்த கவிஞர் கருணானந்தம் 'வென்றது நம் கட்சிதானே அண்ணா! "என்று
சொல்ல 'காமராசர் தோற்கக் கூடாதையா, நாட்டுக்காக உழைத்தவரை எப்படித்
தோற்கடிக்கலாம்? " என்று உள்ளத்தில் உணர்ச்சி பொங்க, வார்த்தைகளில்
வேதனை
தங்க வருத்தப்பட்டிருக்கிறார். இவர்தான் அரசியலில் புதுநெறி வகுத்த
அண்ணா.
கடமை
இவருடைய அரசியல் நேர்மைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள். 1965 இல் இந்தி
எதிர்ப்புக் கிளர்ச்சி கொழுந்து விட்டு எரிந்த நேரம். அண்ணாதுரை கைது
செய்யப்படுகிறார். காவல் துறை வண்டியிலே ஏற்றப் படும் போது அவருடைய மேல்
துண்டு கீழே விழுகிறது. அருகில் இருந்த காவல் துறை அதிகாரி; தன்
கைத்தடியால் அதனை எடுத்து அண்ணாதுரை மேல் வெகு அலட்சியமாக வீசுகிறார்.
காவல் நிலையத்திலும் அண்ணாவுக்கு, சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை
தரப்படவில்லை. ஆனாலும் அண்ணா கோபப் படவில்லை. காலம் மாறுகிறது. 1967 இல்
ஆட்சி அண்ணாவின் கைக்கு வருகிறது. அந்த அதிகாரியின் பதவி உயர்வுக்கான
கோப்பு அண்ணாவின் கையெழுத்துக்காக வைக்கப்படுகிறது. ஈராண்டுக்கு முன்
நடந்த நிகழ்ச்சியை உதவியாளர் நினைவு படுத்துகிறார். மெல்ல சிரித்த
அண்ணாதுரை, 'தனிப்பட்ட கோப தாபங்களை அதிகாரிகள் மீது காட்டக்கூடாது
அரசியல் வாதிகள், அது அழகல்ல" என்று சொல்லியபடியே, கோப்பில் கையெழுத்து
இடுகிறார் அண்ணா.
இது போலவே இன்னொரு நிகழ்ச்சி! சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதி அரசர்
பதவிக்குச் பரிந்துரைக்கப்பட்டவரின் கோப்பில் கையெழுத்து இடப் போகிறார்
அண்ணாதுரை. 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் அண்ணாவுக்கும் அவர்
சகாக்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கியவர் அந்த நீதியரசர் என்று
நினைவூட்டுகிறார்கள். 'நம் கடமையை நாம் செய்தோம். அவர் கடமையை அவர்
செய்தார். இப்படிப்பட்ட கடமை வீரர்கள்தாம் நாட்டுக்குத் தேவை! " என்று
சொல்லியபடியே தன் கையொப்பத்தை நாட்டினாராம் அண்ணா. 'இன்னா செய்தவர்க்கும்
இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு" என்ற கேட்கும் வள்ளுவருக்கு
விடை சொல்வது போல் அண்ணாவின் செயல் அமைந்திருந்தது.
கடமை, கண்ணியம,; கட்டுப்பாடு என்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணக்கும் என்றும்; சொன்னதோடு நில்லாமல் கடைப்பிடித்துக் காட்டியவர்
அண்ணாதுரை. அதனால்தான், 03.09.2008 தேதியிட்ட ஆனந்த விகடன் இவரை இப்படிப்
பாராட்டுகிறது : 'அண்ணாவுக்கு நூற்றாண்டு விழா தொடங்கும் நேரம். இன்றும்
அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்
மட்டும்தான் காரணமா? இல்லை! அவரிடமிருந்த அரசியல் நாகரிகமும்
பண்பாடும்தான் காரணம்."
அதிகாரிகள் செயல் பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது, கட்சி வேறு
ஆட்சி வேறு, எதிரணித் தலைவர்கள் எதிரிகள் அல்லர் என்ற நல்ல பல கொள்கைகள்
அண்ணாதுரையிடம் இருந்தன. இதனால்தான் போலும், 1957 இல் அரசியல் வானில்
பறக்கத் தொடங்கிய தி.மு.க அண்ணா தலைமையில் தம்பிகளின் அரு முயற்சியில்
1967 இல் - பத்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஆட்சிக் கட்டிலில் அமர
முடிந்தது. அண்ணா அன்று பதவியை விட்டு இறக்கி வைத்த காங்கிரஸ் கட்சி
இன்று வரை அரசுக் கட்டிலில் மறுபடி ஏற முடியாமலே அல்லல்
பட்டுக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 40 ஆண்டுகளாகவே தி.மு.கவும்
அ.தி.மு.கவும் அண்ணாவை முன்னிறுத்தியே அரசியல் செய்து வருவதை வீடும்
அறியும், நாடும் அறியும். இவை எல்லாம் அரசியலில் அண்ணா நாட்டிய வெற்றிக்
கொடிகள் அல்லவா!
மனித நேயம்
அண்ணாதுரையிடம் இருந்த நல்ல குணங்களில் ஒன்று அவருடைய மனித நேயம்.
சொற்பொழிவு ஆற்ற அவரை அமெரிக்கப் பல்கலைக்கழகம் அழைத்திருந்தது. அங்கே
செல்லும் முன் இத்தாலி சென்ற அண்ணா, வத்திக்கான் நகரில்
கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசரைச் சந்திக்கிறார். வந்த காரியம்
சொந்த காரியம் என எந்தக் காரியத்தையும் அவர் அங்குப் பேசவில்லை. மாறாக,
போர்ச்சுக்கீசிய சிறையில் அடைபட்டிருந்த கோவா விடுதலை வீரர் ரானடேவை
விடுவிக்க உதவுமாறு திருத்தந்தையிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் படியே
பாப்பரசர் தலையீட்டால் விடுதலை வீரர் விடுவிக்கப்பட்டார். இந்திய
நாட்டில் தனித்திராவிட நாடு கேட்டுக் குரல் எழுப்பிய அண்ணாதுரை, அமெரிக்க
நாட்டில் பேசும் போது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும்
விதமாகவோ, இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிராகவோ எதுவும்
பேசவில்லை. இவரது அரசியல் முதிர்ச்சிக்கு இதுவும் நல்லதோர் எடுத்துக்
காட்டு.
யேல் பல்கலை
யேல் பல்கலைக்கழகம் இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பெருமை
படுத்தியது. அப்பல்கலைக் கழகத்துக்கும் சென்னைக்கும் பெரிய தொடர்பு ஒன்று
உண்டு. சென்னையிலிருந்து அனுப்பப் பட்ட பொருளுதவியினால்
உருவாக்கபபட்டதுதான் அப்பல்கலைக்கழகம். அக்காலத்தில் யேல் பிரபு என்பவர்
சென்னை மாகாண ஆளுநராக இருந்தார். பின்னர் அவரை அமெரிக்க நாட்டுக்கு
அனுப்பி வைத்தது ஆங்கில அரசு. அங்கே பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்க
முனைந்த யேல் பிரபு நிதி உதவிக்காகச் சென்னை நண்பர்களை நாடினார்.
அவர்களின் உதவியோடு உருவாக்கப்பட்ட அப்பல்கலைக்கழகம் அவர் பெயரையே தாங்கி
நிற்கின்றது. அண்ணாதுரை அங்குப் பெற்ற அந்த அரிய பெருமையை இன்று வரை வேறு
எந்த அரசியல்வாதியும்; பெறவில்லை!
இப்படி ஆற்றல் மிக்க பேச்சாளராக, ஏற்றமிகு எழுத்தாளராகப் போற்றிப்
புகழப்படும் அரசியல் தலைவராகப் பெருமை பெற்ற அறிஞர் அண்ணாதுரைக்கே உரிய
பெருமைகள் சில உண்டு! முதலமைச்சர் பதவி ஏற்ற சில மாதங்களில், அகிலமே
வியக்கும் வண்ணம் உலகத் தமிழ் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை
அவரையே சாரும.; மெட்ராஸ் என்று வழங்கப் பட்டு வந்த தமிழகத்தைத்
தமிழ்நாடாகப் பெயர் மாற்றிய பெருமையும் அண்ணாதுரைக்கே! புதுச்சேரியில்
கனக சுப்புரத்தினமாகப் பிறந்து பாரதிதாசனாக மாறியவரைப் பாவேந்தனாகத்
தமிழகம் முழுக்க அறிமுகஞ் செய்தவர் அண்ணாதுரையே! மதுரையிலே மாபெரும் விழா
நடத்திப் பாவேந்தரை யானை மேலே அமர்த்தி ஊர்வலம் வரச் செய்து பண
முடிப்பும் வழங்கிப் பெருமை படுத்தியவரும் அவரே! பணபலமோ, படைபலமோ அரசியல்
பின்னணி பலமோ ஏதும் இல்லாமல் பேச்சு, எழுத்து, அரசியல் என்ற
மும்முனையிலும் வெற்றிக் கொடி நாட்டிய அறிஞர் அண்ணாவை இப்போது
அறிந்துகொண்ட இளைய தலைமுறையே! எழுந்து வா! தமிழர்களின் தானைத்
தலைவனிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொள். அவை வளமான வாழ்வுக்கு
வழிகாட்டும்.
கூடுவிட்டிங்கு ஆவிதான் போனபின்பு கூடுகின்ற கூட்டம்தான் ஒருவர்
புகழுக்கு அளவுகோல் என்றால், அதிலும் முதலிடம் பெறுபவர் அண்ணாதுரைதான்.
கின்னஸ் சாதனை
1969 ஆம் ஆண்டு பெப்ருவரித் திங்கள் 3 ஆம் தேதி அண்ணா புகழுடம்பு அடைந்த
போது, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தக் கூடி வந்த கூட்டம் என்ன! அண்ணா,
அண்ணா எனக் கதறியழுத தம்பிகளின் எண்ணிக்கைதான் என்ன! சொந்தத்தையே இழந்த
உணர்வோடு சோகத்தை இழைத்து ஒப்பாரி வைத்த தாய்க் குலங்கள் தாம் எத்தனை
எத்தனை! வரலாறு காணாத அளவுக்குக் கூட்டம் திரண்டது, அழுது புரண்டது.
சென்னை அண்ணா சாலை எங்கும் அலைஅலையாகத் தலைகள். இதனைக் கின்னஸ் தன்
சாதனைகள் நூலில் பதிந்துகொண்டது அண்ணாதுரைக்குக் கிடைத்த புகழ்ப்
பெருமைகளின் மணிமகுடம்.
எனவே, ஏற்றமிகு சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் உள்ள இளைஞர் கூட்டமே,
அறிஞர் அண்ணாவை எண்ணி எண்ணிப் பெருமை கொள்! 'பொது வாழ்வுக்காகத் தம்மை
அர்ப்பணித்த மாவீரர்கள் மறைந்து போய் விட்டார்கள். ஆனால் அவர்களது
பெயர்கள் உலகினர் நாவிலே நர்த்தனமாடுகிறது இன்றும்" என அவர் எழுதியதற்கு
ஏற்பவே, பொது வாழ்வில் ஈடுபட்டு, மூன்று துறைகளிலும் வெற்றிக் கொடிகள்
நாட்டிய அவர் பெயர் உண்மைத் தமிழர்களின் இதயங்களில் எல்லாம் உலா
வந்துகொண்டுதானிருக்கிறது. உன் இதயத்திலும் வலம் வரட்டும், உனக்கு
வெற்றிக் கனிகளைப் பெற்றுத் தரட்டும்.
வாழ்க அண்ணா பெயர் ! வளர்க அவர்தம் புகழ்!
நன்றி. வணக்கம் !
அண்ணா நினைவு நாளன்று உண்ணாவிரதம் மவுன விரதம்
1969 மார்ச் மாதம் அறிஞர் அண்ணா இறந்தார். அந்த நாளில் ஒவ்வொரு வருடமும்
காலை சக நண்பர்களுடன் அவருடைய சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து
மரியாதை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார். அன்று உண்ணாவிரதம் மவுன
விரதம் தனக்கு அரசியல் ஆசானாக இருந்த அண்ணா நினைவு நாளன்று மக்கள் திலகம்
எம்ஜிஆர் மட்டும் தான் மவுனமாக சாப்பிடாமல் இருப்பார். இப்போ
அப்படிப்பட்ட மகான் மறைந்த நாளன்று எவ்வளவோ பேர்கள் அன்று சாப்பிடாமல்
மவுனமாக இருக்கிறார்கள். -வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறில்
எம்.ஜி.ஆர். முத்து
கண்ணதாசனுக்கு மட்டுமே வந்த கலை
கவியரசர் கண்ணதாசன் கவிதைகள், திரைப் பாடல்கள் மட்டும் இலக்கிய
நயத்தோடு மிளிரவில்லை. அவரது உரைநடையும் இலக்கியச் சுவையும் மிகுந்ததாக
இருந்தது. பலதரப்பட்ட உரைநடைகளை அவர் கையாண்டார். சிவகங்கைச் சீமை, இல்லற
ஜோதி போன்ற படங்களுக்கு அவர் எழுதிய வசனம் இலக்கிய நடையில் அமைந்தது.
தி.மு.க.விலிருந்து விலகும் கட்டத்தில் 'போய் வருகிறேன்', 'முடிவின்
தொடக்கம்', 'பாவமன்னிப்பு' என்ற தலைப்புகளில் அவர் எழுதிய அரசியல்
கட்டுரைகள் விவிலிய நடையை வென்றன. விவிலியத் தமிழைப் புதுமையாகக்
கையாண்டு எல்லோரின் உள்ளங்களையும் தொட்டார்.
அதற்கு மறுப்பு எழுதச் சிலர் முற்பட்டபொழுது அறிஞர் அண்ணா அவர்களைத்
தடுத்துவிட்டார். 'இந்த மாதிரி முயற்சியும் பாணியும் உங்களில் யாருக்கும்
வராது. அது அவனுக்கு மட்டுமே ஆகிவந்த கலை' என்றாராம் அறிஞர் அண்ணா .
தென் செய்தியிலிருந்து....
"அண்ணாவின் வாழ்க்கைக் கதை உங்களை ஒரு வெற்றியாளராக்கும்"
கனவுகளை எப்படி நிஜமாக்குவது? போட்டியாளர்களை எப்படிச் சமாளிப்பது? எல்லா
தடைகளையும் தாண்டி எப்படி ஜெயிப்பது? அண்ணாவின் அற்புதமான வாழ்க்கை
உங்களுக்கு வழிகாட்டும்.
எந்த வித சிறப்பான பின்னணியும் இல்லாமல் அரசியலில் கால் பதித்து, தமிழகமே
வியக்குமாறு மகத்தான அளவில் வெற்றி பெற்றவர் அண்ணா.
அரசியலே வேண்டவே வேண்டாம் என்று பயந்து ஒதுங்கிய காலகட்டத்தில், இதுதான்
என் தளம், இங்கேதான் சாதிக்கப்போகிறேன் என்று சொல்லி அடித்து
ஜெயித்துக்காட்டியவர் அவர்.
பிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல், மக்களோடு
இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா. அதனால்தான்
அவருக்குப் பல லட்சக்கணக்கான தம்பிகள்.
அண்ணாவின் வாழ்க்கைக் கதை நிச்சயம் உங்களை ஒரு வெற்றியாளராக மாற்றி
அமைக்கும்.
-என். சொக்கன் எழுதிய அறிஞர் அண்ணா நூலிலிருந்து
அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன ஒரு வார்த்தைதான் இரட்டைக் குழல் துப்பாக்கி
என்பது. கட்சிகள் வேறு, அமைப்பு வேறு, ஆனால், நோக்கம் ஒன்று. நாங்கள்
அரசியலோடு கலந்து இந்தப் பணியைச் செய்வோம் என்று அறிஞர் அண்ணா சொன்னார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு. கழகத்தினுடைய கொள்கை களுக்கான வலிமை எதிலே
இருக்கிறது என்று அவர் கருதினார் என்றால், ஜனநாயக முறையை, ஜனநாயக
எண்ணத்தை, ஜனநாயக மனப்பான்மையை நாம் பின்பற்றுவதிலேதான் இருக்கிறது என்று
மனதாரக் கருதினார்.
அமைச்சர் பேராசிரியர்.க.அன்பழகன்
அண்ணா மோதிரம்
1959-ம் ஆண்டு முதன் முதலாக திராவிட முன்னேற்ற கழகம் சென்னை மாநகராட்சி
மன்றத்திலே போட்டியிடுகிறது. அப்படி போட்டியிடுகின்ற நேரத்தில் யார்,
யாரை எந்த வட்டத்தில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்துவது என்று
யோசிக்கப்பட்டு, அதற்காக ஒரு குழுவை அமைத்து அந்த குழுவுக்கு தலைவராக
என்னை நியமித்து நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் கழக தோழர்கள் அந்த
குழுவிலே உறுப்பினர்களாக அமைக்கப்பட்டு நாங்கள் எந்தெந்த வட்டத்தில் யார்
யார் நிற்பது என்பது குறித்து அண்ணா இடத்தில் எடுத்து சென்றோம்.
கிட்டத்தட்ட 40, 50 பேர் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணா
அதைப்பார்த்து "ஏனப்பா, 50 பேரா? கட்சியினுடைய பலம் அந்தளவுக்கு
இடமளிக்கிறதா? தாங்குமா? அதிகம் பேரை நிறுத்துவதற்கு அதிகம்
ஆசைப்படாதீர்கள்'' என்று அண்ணா சொன்ன போது நான் பிடிவாதமாக, "இல்லை
அண்ணா, நீங்கள் இந்த பட்டியலை ஏற்றுக் கொண்டால், 45 பேர் நிச்சயமாக
வெற்றி பெறுவோம்'' என்று குறிப்பிட்டேன். அண்ணா முடியாது என
மறுத்துவிட்டார். அண்ணாவிடம் வாதாடினேன், போராடினேன். "இல்லை, இல்லை
நீங்கள் இதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். நீங்கள் பாருங்கள் நாம் வெற்றி பெற
போகிறோம். மேயர் வெற்றியிலும் நாம்தான்'' முன் நிற்க போகிறோம் என்று
சொன்னேன். அப்போது அண்ணா சொன்னார் "எனக்கு பிடிக்கவில்லை. நீ சொல்வது
போல் 40 இடத்திற்கு மேல் வந்துவிட்டால், நான் உனக்கு ஒரு கணையாழி
அணிவிப்பேன். கடற்கரையில் கூட்டம் போட்டு அந்த கணையாழியை அணிவிப்பேன்''
என்று சொன்னார்.
இதன் பின்பு தேர்தல் நடந்தது. தி.மு.க. மேயர் பதவியை ஏற்கின்ற அளவுக்கு
வெற்றியை பெற்றோம். வெற்றி பெற்ற பிறகு கடற்கரையில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசும்போது அதுவரையிலே சட்டப்பையிலே ஒளித்து
வைத்திருந்த கணையாழியை எடுத்து "இங்கே மேயர் பதவிக்கு, உரியவகையிலே
வெற்றி பெற்றால் தம்பி கருணாநிதிக்கு கணையாழி அணிவிப்பதாக சொல்லி
இருந்தேன். கருணாநிதி வெற்றி பெற்றுவிட்டார். ஆகவே நான் எனது மனைவிக்கு
கூட நகை வாங்க நகை கடைக்கு இதுவரை சென்றதில்லை. தம்பி, கருணாநிதிக்காக
இந்த மோதிரத்தை வாங்க, பாண்டி பஜாருக்கு அலையாய் அலைந்து வாங்கி
வந்திருக்கிறேன்'' என்று சொல்லி கணையாழியை எனக்கு அணிவித்தார். நான்
அணிந்திருக்கிற கணையாழியின் வரலாறு இதுதான்.
முதலவர் கலைஞர் கருணாநிதி
' எலியை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிப்பீர்களா ?" '
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ' தமிழ்நாடு தமிழருக்கே ' என்ற கோஷம்
எழுப்பப் பட்டது. இந்தக் கோஷத்தின் ஆதர்சப் பேச்சாளராக விளங்கியவர்
பின்னாளில் ' அறிஞர் அண்ணா ' என்று அழைக்கப்பட்ட அண்ணாதுரை.
1940- இல் திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டிலும் தனிநாடு
கோரிக்கை வலியுறுத்தப் பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
திராவிட கலாச்சாரத்தையும் , திராவிட பாரம்பரியத்தையும் நிலைநிறுத்திக்
கொள்வதற்காகவே இக்கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்றும் விளக்கம்
கொடுக்கப்பட்டது. இந்த ஜஸ்டிஸ் கட்சியே பின்னர் 1944- இல் ஈ.வே.ரா.
பெரியாரின் தலைமையின் கீழ் திராவிடர் கழகமாக மாறியது. அண்ணாதுரை தவிர
திராவிட நாடு கோரிக்கைக்குத் தீவிரமாகக் குரல் கொடுத்தவர் ' திரு. வி.க.
' என்று அழைக்கப் பட்ட திரு வி. கல்யாணசுந்தரம். (இவர் ஒரு முன்னாள்
காங்கிரஸ்காரர்).
1949- ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து திராவிட
முன்னேற்றக் கழகத்தைத் துவக்கினார் அண்ணாதுரை. பிரிவுக்குக்
காரணமாயிருந்தது கொள்கை வேறுபாடுகள் அல்ல ; பெரியார் இரண்டாவது திருமணம்
செய்து கொண்டார் என்பதுதான். இப்படி ஒரு காரணத்திற்காக ஒரு கட்சியில்
பிளவு ஏற்பட்டு புதியதொரு கட்சி உதயமானது உலகிலேயே இதுதான் முதலும்
கடைசியும் எனலாம். ஆனால் , திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தாலும்
தி.மு.க. தனது தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கைவிடவில்லை. அண்ணாதுரை
தங்கள் தாய்க் கட்சியையும் , தி.மு. கழகத்தையும் ' இரட்டைக் குழல்
துப்பாக்கி ' என்றே அப்போது கூறி வந்தார்.
கொள்கை அடிப்படையில் பிரியாமல் தனிப்பட்ட கோபதாபங்களை முன்வைத்துப்
பிரிவது என்பதை திராவிட இயக்கத்தில் தொடங்கி வைத்தவர் அண்ணாதுரை என்று
சொல்லலாம்.
1950- ஆம் ஆண்டு தி.மு.க. மாணவர் அணி மாநாடு சென்னையில் நடந்தது. அதிலும்
தனித் தமிழ்நாடு கோரிக்கை முன்வைக்கப் பட்டது. பின்னர் 1951- இல்
தி.மு.க.வின் முதல் மாநில மாநாடு சென்னையில் நடந்தது. இந்த இரு
மாநாடுகளிலும் அண்ணாதுரை தனது தனித்துவமான கரகரப்புக் குரலில் ' திராவிட
நாடு ' என்று கோஷமிட்டதும் , அவர் முன்னே அமர்ந்திருக்கும் லட்சக்கணக்கான
தொண்டர்களும் ' திராவிடருக்கே ' என்று பதில் முழக்கமிடுவது வழக்கம்.
அக்காலகட்டத்தில் - அதாவது 50 களிலும் , 60 களிலும் தமிழ்நாட்டில்
மக்களின் உணர்ச்சி நரம்புகளைத் துடிதுடிக்கச் செய்து , அவர்களைக்
கிளர்ந்து எழச் செய்த முழக்கம் ' திராவிட நாடு திராவிடருக்கே! '
என்பதாகத்தான் இருந்தது. 1952, 1957, 1962- இல் நடந்த மூன்று பொதுத்
தேர்தல்களிலும் தி.மு.க. இந்த ஒரு கோஷத்தையே முன்வைத்துக் கொண்டிருந்தது.
செப்டம்பர் 22, 1962 அன்று சென்னையில் நடந்த திராவிட நாடு விடுதலை
விழாவில் நடந்த ஊர்வலத்தில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அன்று
மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதே ஆண்டு
அண்ணாதுரை பாராளுமன்றத்துக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கப் பட்ட போது
அங்கே நிகழ்த்திய முதல் உரையின் போதும் அவர் திராவிட நாடு கோரிக்கையை
முன் வைத்தார்.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளின் போது பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள்
சிறை சென்றார்கள். பல இளைஞர்கள் தீக்குளித்தார்கள். இப்படித்
தீக்குளித்து இறந்தவர்கள்: சின்னசாமி , முத்து , ரங்கனாதன் ,
சாரங்கபாணி , சிவலிங்கம் , வீரப்பன் முதலியோர். உலக வரலாற்றிலேயே
இப்படித் தங்கள் மொழிக்காகப் போராடி , உயிர் துறந்த இளைஞர்களின்
போராட்டம் இது ஒன்றுதான் என்று சொல்லலாம்.
60 களில் இந்தி மொழி இந்தியாவின் பொது மொழியாக ஆக்கப்பட்ட போது அதை
எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை ஓரம்
கட்டி தி.மு.க. வளர்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணங்கள்: அண்ணாதுரை ,
ஈ.வே.கி. சம்பத் , நெடுஞ்செழியன் , கருணாநிதி போன்ற தலைவர்களின் பேச்சு.
மணிக்கணக்கில் தங்கு தடையின்றி பேசி மக்களை மகுடிக்குக் கட்டுப் பட்ட
சர்ப்பத்தைப் போல் வசியம் செய்வது இவர்களுக்குக் கை வந்த கலை. இவர்களது
எதிரிகள் கூட இத்தலைவர்களின் பேச்சில் மயங்குவது வழக்கம். தமிழனுக்குச்
சோறு கூடத் தேவையில்லை ; பேச்சு போதும் என்பார்கள்.
அண்ணாதுரை தன் பேச்சினிடையே சிறுசிறு குட்டிக் கதைகளையும் சொல்லிச்
செல்வது வழக்கம்.
இந்தியைப் பொது மொழியாக வைப்பது பற்றி அவர் சொன்ன ஒரு புகழ் பெற்ற
குட்டிக் கதை: "ஒரு வீட்டில் ஒருவன் இரண்டு நாய்கள் வளர்த்தான். ஒரு
பெரிய நாய். ஒரு சிறிய நாய். அந்த நாய்கள் வெளியே சென்று வருவதற்காக
வீட்டு வாசலில் இரண்டு வாசல்களையும் அமைத்தான். பெரிய நாய்க்கு ஒரு பெரிய
வாசல். சிறிய நாய்க்கு ஒரு சிறிய வாசல். அந்தக் கதையாகத் தான் இருக்கிறது
இந்திய அரசின் இந்திக் கொள்கை. அந்தப் பெரிய வாசலின் வழியாகவே சிறிய
நாயும் சென்று வர முடியாதா என்ன ? பொது மொழியாக ஆங்கிலம் மட்டுமே
இருக்கட்டும்." இதேபோல் 1962- இல் அண்ணாதுரை கேட்டார்: "இந்திதான்
இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியானால் நாம் ஏன் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக
வைத்திருக்கிறோம் ? புலியை விட எலிதானே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில்
இருக்கிறது ? அப்படியானால் எலியை இந்தியாவின் தேசிய விலங்காக
அறிவிப்பீர்களா ?"
செங்கொடியும் தமிழக அரசியலும் என்ற தலைப்பில் எழுத்தாளர் சாருநிவேதிதா
பெரியார், அண்ணா, அம்பேத்கர் சந்திப்பு
1938 டிசம்பரில், சென்னையில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 14வது மாநாட்டில்
அப்போதைய தலைவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ''இன்று முதல் நீதிக் கட்சி
பெரியார் வசம் முழுமையாக ஒப்படைக் கப்படுகிறது. இக்கட்சிக்கு இனி அவரே
தலைவராகச் செயல் படுவார்'' என அறிவிக்க, தொண்டர்கள் எழுப்பிய கரவொலியால்
மாநாட்டின் பந்தல் கூரையே படபடத்தது. முன்னமே பெரியாரிடம் இதற்கு
ஒப்புதலும் பெற்றிருந்த பன்னீர்செல்வம், பெரியார் கைப்பட எழுதிய
எழுச்சிமிகு உரையை வாசித்து, கூட்டத் தினரை உணர்ச்சி அலைகளால்
கொந்தளிக்கச் செய்தார். எங்கோ கண்காணாத தொலை வில் சிறையில் இருக்கும் ஒரு
தலைவனுக்கு தமிழகத்தில் நடந்த இந்த மகத்தான மரியாதையைக் கேள்விப்பட்ட
தேசத் தலைவர்களின் பார்வை பெரியாரை நோக்கித் திரும்பி யது. அப்படிப்பட்ட
தலைவர் களில் ஒருவர்... டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். இந்திய அரசியல்
சாசனச் சட்டத்தை வடிவமைத்த பெருமைமிகு தலைவர். தென்னாட்டில் பெரியார்
என்றால், வடநாட்டில் அம்பேத்கர்.
அதுவரை இந்த இரண்டு சூரியன்களும் நேரில் சந்தித்ததில்லை. அதற்கான
வாய்ப்பு, முகம்மது அலி ஜின்னா மூலம் உருவானது. இந்தியாவில்
முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்கும் பொருட்டு, ஜின்னா தேநீர்
விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அழைப்பை ஏற்று,
மகாராஷ்டிராவுக்குப் புறப் பட்ட பெரியாரின் ரயில் பயணத் தில், அவருடன்
அறிஞர் அண்ணா வும் இருந்தார்.
மகாராஷ்டிராவில் பெரியாரைக் கண்டதும் அம்பேத்கர் கட்டிஅணைத்து
வரவேற்றார். காங்கிர ஸின் சனாதன தர்மத்துக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்
கொண்ட அந்தச் சந்திப்பு, வரலாற் றின் முக்கிய பதிவேடு. அடுத்தடுத்த
ஆண்டுகளில், பெரியாரும் அண்ணாவும் தொடர்ந்து வடநாடுகளுக்குப் பயணித்துப்
பல அதிர்வுகளை உரு வாக்கிவிட்டுத் தமிழகம் திரும்பினர்.
இங்கே தமிழகத்தில், திராவிடப் புயல் முழுவீச்சில் இருந்தது. கல்வி அறிவு
பெற்ற இடைநிலைச் சாதி மக்களின் முதல் தலைமுறைக்கு பெரியாரும் அண்ணாவும்
இதய நாயகர்களாக மாறினர்.
தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வந்த நீதிக் கட்சி, பெரியாரின் தலைமைக்குக்
கீழ் வந்த பிறகு, பல மாறுதல்களைச் சந்தித்தது. இந்த மாறுதல்களை நீதிக்
கட்சியில் இருந்த சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. பதவி, பணபலம், ஆட்சி,
அதிகாரம் எனத் தேர்தல் அரசியலால் பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த அந்தக்
கூட்டம், பெரியா ருக்கு எதிராகச் சதிகள் செய்யத் துவங்க, அதை முளையிலேயே
கிள்ளியெறியும் பொறுப்பை அண்ணாவிடம் ஒப்படைத்தார் பெரியார்.
1944, ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடந்த மாநாட்டில் அண்ணா வாசித்த
தீர்மானம் வரலாற்றை மாற்றி எழுதியது. 'இதுவரை, பணக்காரர்களுக் கெனவே
இயங்கி வந்த நீதிக் கட்சி, இனி 'திராவிடர் கழகம்' எனும் பெயரில் பாட்டாளி
மக்க ளுக்காகவும் ஏழை எளியவர்க ளுக்காகவும் மட்டுமே பாடுபடும்!' என அண்ணா
தனது எழுச்சி உரையை வாசித்தார்.
திருவாரூரில் முரசொலி எனும் சிற்றேட்டைத் துவக்கி, பெரி யாரின் கொள்கைகளை
எழுதி வந்த கருணாநிதி, அப்போது அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு இதழிலும்
தொடர்ந்து கதை, கவிதைகளை எழுதி அண்ணாவின் கவனத்தை ஈர்த் தார். தனது
இதழில் பணிபுரியும் பொருட்டு, ஈரோட்டுக்கு அண்ணாவால் வரவழைக்கப்பட் டார்.
பெரியாரின் கைகள் எப்படி அண்ணாவின் தோளில் வீழ்ந்ததோ, அப்படியே அண்ணா
வின் கைகளைக் கருணாநிதியின் தோள் தாங்கியது.
நன்றி விகடன்.
தொகுப்பு :தமிழண்ணா
சிலுவையும் சீடர்களும்!
ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம்
பாராளுமன்றத் தேர்தலில்
போட்டியிட்டு டெல்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப்
பேசினார். கழக உறுப்பினர்
ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து
பாராட்டினார்.
குறுக்கிட்ட சுப்ரமணியம் "இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல்
இருந்ததால் சரி" என்றார்.
"இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார்" என்று உடனே
எழுந்துக் கூறினார் அண்ணா!
அவையில் சிரிப்பொலி எழுந்தது.
'உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு
ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல' என்பதை
இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்கள்.
சம்பந்தி சண்டையா?
மற்றொரு முறை திரு.வினாயகம் எழுந்து "நான் கொடுத்த ஆன் புலிக்குட்டியை
மிருகக்காட்சி சாலையில்
சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண்
புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே!"
என்று புகார் கூறினார்.
உடனே அண்ணா அவர்கள் "சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக்
கொள்ளுங்கள்" என்று பதில் கூறினார்.
புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.
விலைவாசி
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக
வீற்றிருந்த சமயம், விலைவாசி குறைந்துள்ளது என்று அண்ணாவும்
உறுப்பினர்களும்
கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக -
"புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை?" என்று கேட்கிறார்.
அண்ணா அமைதியாக எழுந்து "அது புளியமரத்தின் சாதனை" என்கின்றார்
அவை சிரிப்பலையில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?
எதிர்கட்சியும் ஆளும் கட்சியும்
1957-க்கு முன்பு காமராசரும், காங்கிரசாரும் அண்ணாவையும்,
கழகத்தினரையும்,
"வெட்டவெளியில் பேசி என்ன பயன் - முடிந்தால் சட்டசபைக்கு வாருங்கள்"
என்றனர்.
அதன் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் 1957-குப் பின்) இடம்
பெற்ற போதும்,
1962-ல் 50 பேராகச் சென்ற பிறகும் காங்கிரசார் - அதன் அமைச்சர்கள்
"சரியான எதிர்கட்சியில்லை,
நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை" என்று குறை கூறி கழகத்தை
கேளியும்,
கிண்டலும் செய்தனர்.
அப்போது அண்ணா, "நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக்
கொண்டிருப்பதைப்
பார்த்தால் விரைவில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று
எண்ணுகிறேன்.
நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள்
என்பதால்
பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்" என்று தீர்க்கதரிசனத்துடன்
குறிப்பிட்டார்.
குறள் யாருக்காக?
அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமாக பதில் கூறும் தன்மைக்கும்
எடுத்துக்காட்டாக இதைப்போலவே ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.
யாருக்காக இந்தக் குறள்?
நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப்
பேருந்துகளிலெல்லாம்
திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா.
திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேளி
செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு
பதிலளித்தார்.
ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக்
கேட்டார்.
"பேருந்தில் 'யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல்லிழுக்குப்பட்டு'
என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா?
கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?"
இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று
எழுப்பப்பட்டக் கேள்வி இது!
'டிரைவர் . . . கண்டக்டருக்காக' என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக
வேண்டும்.
'பொதுமக்களுக்காக' என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.
இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல மிகவும்
நுணுக்கமானதுமாகும்.
"நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது" என்று
பதில் கூறினார்.
இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர
வைத்துவிட்டது.
இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல்
எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக
அமைந்திருந்தது.
திரும்பும் சொல்லம்பு!
ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம்
அவர்கள்
அண்ணாவைப் பார்த்து,
"யுவர் டேஸ் ஆர் நம்பர்ட்" (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று
கூறினார்.
அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து,
"மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட்" (என்னுடைய காலடிகளை அளந்து எடுத்து
வைக்கிறேன்) என்றார்.
இப்படி தன்னை நோக்கி வீசப்படுகின்ற கணையை, வீசியவர்களை நோக்கியே
உடனடியாகத் திருப்பி வீசுகின்ற சாமர்த்தியம் அண்ணாவிடம்
மிகுந்திருந்தது.
அண்ணாவை மடக்க எண்ணியோ வீழ்த்த வேண்டுமென்று யாரும் நினைத்து
சொல்லம்பை வீசுவோர் அந்த அம்பாலேயே துளைக்கப்பட்டு வீழ்ந்ததுதான் வரலாறு!
நாடாளுமன்றத்தில் அண்ணா!
ஒரு முறை மாநிலங்களவையில் அண்ணா ஆட்சிமொழிப் பிரச்சினை குறித்து
அழகுபட பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலர் குறுக்கிடுகின்றனர்.
உடனே அண்ணா நகைச்சுவைத் ததும்பக் கூறினார்.
"வெளிப்பார்வைக்குப் பலவீனமாகத் தோற்றமளித்த போதிலும்,
நமது தலைமை அமைச்சர் இரும்புக்கரம் படைத்தவர் என்பதும் எனக்குத்
தெரியும்.
இரும்புக்கரம் கொண்டு மண்டைகளைப் பிளக்கலாம். ஆனால் இதயங்களைக் கவர
முடியாது.
நமது தலைமையமைச்சருக்கு இரும்புக்கரமும், பொன் போன்ற இதயமும்
இருக்கின்றன என நான் நம்புகிறேன்.
பேராசிரியர் இரத்தினசாமி(சுதந்திரா தமிழ்நாடு): "கரம் தெரிகிறது
இதயம்
வெளிப்படையாகத் தெரிவதில்லை!"
அண்ணா: "மனிதனுடைய பெருந்தன்மையில் எனக்கு இன்னமும்
தன்னம்பிக்கை இருக்கிறது. அவருக்குப் பொன் இதயம் இருக்க வேண்டும்"
இரத்ணினசாமி: "இருக்கவேண்டும் . . . "
புபேஷ் குப்தா: "இருக்கவேண்டும்"
அண்ணா: "அதுமட்டுமல்ல, மொரார்ஜி தேசாயின் தங்கக் கட்டுப்பாட்டுக்கு
முற்பட்ட
பொன்னாக அது இருக்க வேண்டும்; 14 காரட் தங்கமாக அது இருக்கக் கூடாது."
பேரறிஞர் அண்ணா இதயங்களை தன் வயப்படுத்தும் இணையில்லாத பேச்சாளராக
விளங்கியதற்குக் காரணம் இப்போது புரிகிறதல்லவா?
நலமா?
உங்கள் கவிதை அருமை.
என் பதிவில் உங்கள் பெயரில் பதிந்துகொள்ளட்டுமா?
இளைய ஐடி தலைமுறை சிலபேருக்கு கூடுதலாகச்
செல்லும்.
நா. கணேசன்