கோவில் - கோயில் எது சரி?

371 views
Skip to first unread message

Krishnan S

unread,
Dec 29, 2013, 8:30:43 PM12/29/13
to tamil_ulagam, mint...@googlegroups.com
கோவில் - கோயில் எது சரி?

-- மலேசியா தினசரியான “ மலேசிய நண்பன்”  ஞாயிறு இதழில் “ நண்பன் மேடை“யில் வந்த
    கேள்வியும் பதிலும்....,

   கோவில் -  என்பது சரியா  ? கோயில் எனபது  சரியா ?

 --
என்பதற்கான  விடை காண்பதற்கு,  ‘’உடம்படுமெய்ப் புணர்ச்சி  என்னும் தமிழ் இலக்கணம் குறித்த தெளிவு அவசியம். ’’’’
  ஒரு சொல்லின் முன்பகுதியை  “ நிலைமொழி ”  என்றும், அதன் பின் பகுதியை “வருமொழி “ என்றும் சொல்வர்.  நிலை
மொழி ஈற்று என்பது அதன் கடைசி எழுத்தாகும். ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்றும், வருமொழி முதலும் இணைவதே
“ புணர்ச்சி  “ எனப்படும்

   ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் மட்டும் ஒன்றுடன் ஒன்று இணையாது.
இதற்கு, நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணைவதற்கு உடம்படு மெய் என்ப்படும்.
“ வ் “  மற்றும்  “ய் “ என்னும் மெய்கள் தேவை.
 
     இவ்விரு உயிர்களுக்கு உருவம் கொடுக்க உடம்பாக இருந்து செயல்படுவதால் இவ்விரு மெய்களும் உடம்படு மெய்
என்றானது.

      வகர உடம்படு மெய்   அ ,ஆ, உ, ஊ , ஓ என்னும் உயிரொலிகளுள் ஏதாவது ஒன்று நிலை மொழியின் கடைசியில்’
இருக்க, வருமொழி முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் எது வந்தாலும் வகர மெய் தோன்றும்.

     கோ+ இல் என்பது புணர்ச்சியில்...., கோ+வ்+இல் என வகர உடம்படுமெய்யைப்  (வ ) பெற்று கோவில் என்றாகும்.
  ( எ - கா )=  நா  (நாக்கு) + இல் என்பது புணர்ச்சியில் நாயில் என மாறாது. உடம்படு மெய்யான “ வ “ - வுடன் சேர்ந்து
  ( நா + வ் + இல் ) நாவில் என்றாகும்.    {எ.கா.}  மா+ இலை = மாவிலை, - திரு + ஆரூர் = திருவாரூர்.

   இருவகையாக எழுதும் சொற்களுள் { கோயில் - கோவில்}, சுருசுருப்பு = சுறுசுறுப்பு; யாறு = ஆறு ; எமன் - யமன்
    ஐயர் - அய்யர் ; பவளம் = பவழம் . இதுவும்  { கோயில் - கோவில்} ஒன்று என்றாலும், இலக்கண விதிப்படி இனி
 “ கோவில் ” என்றே எழுதி பழகலாமே .

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

unread,
Dec 30, 2013, 11:18:53 AM12/30/13
to tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com
பயனுள்ள பதிவு ஐயா. நன்றி.


2013/12/30 Krishnan S <krishna...@gmail.com>

--
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ulagam...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
௨/௨௧௮ (2/218), கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி - ௬௨௩௭௦௭ (623707),
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௯௭௰௬௬௪௬௭, ௮௭௫௪௯௬௨௰௬ (8971066467, 8754962106).
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
Reply all
Reply to author
Forward
0 new messages