முக்தி தரும் தலம் 2
கோயில் தனித்து இருந்தாலும் இதற்குரிய புராணம் சிறப்புக்குரியது. முக்தி நாத்க்கு ஒரு சிறப்பு உண்டு. இது விஷ்ணு தவம் செய்த இடம் மட்டுமல்ல. அவர் தவமிருந்து வரம் வாங்கி இடம் என்பத்தோடு. இங்குதான் சிவன் அவருக்கு சுதர்சன சக்கத்தை வரமாக வழங்கினார். கிருஷ்ணன் பல காலம் தவமிருந்து சக்கரம் பெற்ற இடமாதலால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு எல்லா வளமும், நலமும் கிடைக்கும், பாவங்களும் கஷ்டங்களும் நீங்கும் என்று கூறுகிறார்கள்
சிவன் கோயிலை கடந்து மேலேறும் வழியில் ஓடையாக ஓடுகிறது கலிகண்டை, முக்திநாத் அமைந்தும் இருக்கும் இடத்திற்கு அருகில்தான் கலிகண்டை நதி உற்பத்தி தொடங்கிறது. இங்கு ஓடையாக காட்சி தரும் கலிகண்ட நீரோட்டம் பின்னர் ஆறாக பெருகி முக்திநாத் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது. மெல்ல மெல்ல மேலேறி சென்றால் கண்ணுக்கு காட்சி தெரிகிறது முக்திநாத் கோயில். தாயின் மடியில் அமைந்திருக்கும் குழந்தை போல் இமய மலையின் மடியில் கோயில் அமைந்திருக்கிறது கோயில்.பக்கோடா பாணியில் மூன்று அடுக்கு கோபுரத்துடன் கருவறை அமைந்துள்ளது. உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்று தமிழகத்து பாணியும் கோபுரத்தில் பகோடா பாணியில் நேப்பாள பாணியிலும் உள்ளது. எங்கோ தூரத்தில் இருக்கும் தமிழர்களுக்கு இங்கும் வந்து வணங்க வேண்டிய இடம். வைணவ தலங்களில் பஞ்ச பூதமும் இணைந்திருப்பது முக்தி நாத்தில் மட்டும் தான் என்கிறது வைணவ புராணம் சொல்லும் செய்தி,
பூதங்கள் ஐந்தும் இருந்தாலும் குளிர் காற்றின் ஆட்சிதான் ஓங்கி நிற்கிறது. கோடை காலமான மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாத காலம்தான் இங்கு வருவதற்கு உகந்த காலம். மற்ற காலங்களில் இங்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆண்டின் நான்கு மாத காலம் மட்டுமே பெருமாள் தரிசிக்க கிடைக்கும். இமய மலையிலிருக்கும் கோயில் எல்லாமே வருடத்தில் ஒரு குறிபிட்ட காலத்தில் மட்டுமே திறந்து இருப்பார்கள். மற்ற கோயில்களை விட முக்திநாத கோயிலுக்கு செல்வது சிரமத்தோடு ஆபத்தான பயணமும் கூட. இங்கு இருக்கும் தீர்த்தங்களின் மகிமை இங்கு மட்டுமல்ல சீனாவிலும் பிரசித்தம். முக்தி நாத்
கோயிலுக்கு முன்னால் இருக்கின்ற இரு சின்ன நீர்த் தோக்கங்கள் இருக்கிறது. பார்வைக்கு இவைகள் தண்ணீர் தொட்டிகள் போல் இருக்கிறது. இவை சந்திர புஷ்கரணி, சூரிய புஷ்கரணி நீர் தலங்கள் கோயிலுக்கு வருவோர் இங்கு தவறாமல் நீராட வேண்டும் என்பது இங்குள்ள நியதிகளில் ஒன்று .வைணவத் தலங்களில் மிக முக்கியமான 108 ஆலயங்களில் இல்லாத ஒரு சிறப்பு முக்திநாத்துக்கு உண்டு.
வைணவ திருத்தலங்களில் பொருத்த மட்டிலும் ஆழ்வார்களால் அது மங்கலாசனம் செய்து ஆழ்வார்களால் தமிழில் பாடி பரவிய இடங்களை மங்கலாசனம் செய்யப்படும் என்பார்கள். எப்படி சைவர்கள் கல்வெட்டி உள்ள இடங்களில் நாயன்மார்கள் திருதலங்கள் உருவாக்கினார்கலோ, பல சிவதலங்களுக்கு சென்று பாடல் பாடினார்கலோ அது போல் ஆழ்வாரகளும் பெருமாள் இருக்கும் திருதேச இடங்களுக்கு எல்லாம் சென்று பாடல் பாடினார்கள். அது மாதிரி நோப்பளத்திலிருக்கும் முக்தி நாத்தும் ஒரு பாடல் பெற்ற இடமாக மங்கலாசனம் செய்யப்பட்ட இடமாக கூறுவார்கள், இந்த முக்திநாத் தமிழ் நாட்டிலிருந்து வெகு தொலைவில் இமலமலை அடிவாரத்தில் இருப்பதால் இந்த கோயிலுக்கு பெரிய ஆழ்வார் இங்கு வரமுடியாது ஆதாவது ஆழ்வார் எல்லாம் பெரிய ஆழ்வார் இங்கு வரமுடியாது. ஆனால், பெரிய ஆழ்வார் இந்த கோயிலை மனதில் கொண்டு அகக் கண்ணால் இந்த கோயிலைப் பார்த்தாராம், பார்த்துக்கொண்டே மங்கலாசானம் செய்தாராம்.. இது வைணவர்கள் சொல்லும் புராண கதையாகும். இதன் படி பார்த்தால் வைணவர்களுக்கு மற்ற தலங்களை விட மிகவும் விஷேசமானது எனலாம்.
முக்திநாத் கோவிலின் வெளி பிரகாரத்தில் கொட்டுகிறது தண்ணிர், காளை முக குழாய்கள் 108 அரை வடிவில் வைத்திருக்க…, நிற்காத குற்றாலமென கொட்டுகிறது தீர்த்தம். பார்வைக்கு இவை பனி நீர் என்றாலும் கூட முக்தி நாத்தை தேடி வருபவர்களுக்கு இவை புனிதத்திலும் புனிதமானவை. 108 திவ்விய திருப்பதிகளில் உள்ள தீர்தங்கள் எல்லாம் இங்கு ஒரே இடத்தில் பாய்வதாக சொல்கிறது கோயில் தலபுராணம். இங்கு வரும் பக்தர் பனி நீரின் குளிர்ச்சினையும் பாராது நீராடி புண்ணியம் கொள்கிறார்கள்.
இவர்கள் மட்டுமல்ல வெளி நாட்டினரும் கூட புனித நீரில் தலைக் காட்டி செல்கிறார்கள்.குழாய் நீருக்கு அருகில் உள்ளது ஒரு மரம். அந்த மரம் பக்தர்களுக்கு முக்தி மரம். ஆம்…! ஆலய தரிசனத்திற்கு வந்த இடத்தில் இறைவனின் பாதத்தில் கலந்து விட்டவர் இது ஒரு நினைவு இடம் கூட. முக்தி நாத்க்கு வரும் பயணம் யாத்திரை கடினமானது. அப்படி யாத்திரை வரும் பயணிகள் சிலர் பேர் இங்கு காலமாகி விடுகிறார்கள். அப்படி இறைவனின் பாத்தில் கலந்து விட்டோர்கள் பெயர்,புகைப்படத்தினை மரத்தில் வைக்கிறார்கள், ஒரு நினைவிடம் என்று கூட கூறலாம்.அப்படி செய்வதால் அவர்களின் ஆன்மா வைகுண்டம் அடைவதாக ஐதீகம். முக்திநாத் மலையேறும் எல்லோரின் கண்ணில் படுவது கற் குவியல். பார்வைக்கு விளையாட்டு சிறு பிள்ளைகள் கற்களை அடுக்கி வைப்பது போல் இருந்தாலும் அது புத்த மதத்தினரின் வேண்டுதலின் வடிவம். முத்திநாத் புத்த மதத்திரை பொருத்த வரை அவர்களுக்கு இது தாந்திரீக தலங்களில் ஒன்று. அவர்களின் நம்பிக்கை படி இது சூமிங் சயாஸ்த. அதாவது 100 புனித நீர் ஊற்று உள்ள இடம்.
ஆகாயதில் கூடு கட்டி அந்தரத்தில் நடமிடும் தகுதி சக்திகளில் உலவும் , உலகமும் இடமும் இதுதான். தகுதிகளை குளிர்விக்க புத்த மதத்தினர் இங்கு வரும் போதெல்லாம் இப்படி மலை கற்களை அடுக்கி வைக்கிறார்கள்.
[ எனது கயிலை பயணத்தின் போது கண்ட்து திபெத்தியர்கள் எங்காவது சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்தால் உடனே அவர்கள் அருகிலிருக்கும் கற்களை எடுத்து ஒன்றின் மீது ஒன்றாக வைத்து அடுக்குவார்கள் ] இந்துகளுக்கு எப்படி முக்கிய இடமோ அப்படியே புத்தர்களுக்கு இந்த இடம் முக்கியமான இடமாகும் புத்தர் அவதாரமான அலங்கிரி ஆலயம். இங்குதான் சகுனிகள்வாசம் செய்கிறார்கள்..புத்த மத்த்தின் நம்பிக்கை படி இங்கு வந்து கும்பிட்டாள் மாந்திர, தந்திரத்தால் ஏற்பட்ட எல்லா வினைகளும் தீரும் என்பது ஆலயத்தின் உள்ளே திரை முடிய கருவறையில் இருக்கிறார் மூலவரான முக்திநாத். செக்கத் தங்கத்தாலான திருமேனி விளக்கு ஒளியில் பளபளக்கிறது. உட்கார்ந்து இருக்கும் தவமேற்கும் கோலத்தில் இருக்கும் முக்திநாத்க்கு அருகில் பூ தேவியும்,
ஸ்ரீ தேவியும் இரு புறமும் நிற்கிறார்கள். காடுகளை எல்லாம் கடந்து, மலை ஏறி வந்த களைப்பெல்லாம் போக்கும் விதத்தில் இருக்கிறது பெருமாளின் தோற்றப் பொலிவு. இதைக் காணத்தான் தள்ளாத வயதிலும் தளராமல் வருகிறார்கள் பக்தர்கள். முக்தி நாதரை தரிசிக்கும் பாக்கியமே மட்டுமே இந்துகளுக்கு உண்டு. அவரை தொட்டு பூஜிக்கும் உரிமை புத்த மதத்தினருக்குதான் உண்டு. அதிலும் புத்த மத பெண் துறவி மட்டுமே முக்திநாதருக்கு பூஜை செய்ய முடியும். காலம் காலமாய் தொடரும் இந்த வழக்கத்திற்கு காரணம் சொல்கிறார் அங்கிருக்கும் துறவி பெண் “
“” முக்தி நாதக்கு ஆண்டவர்க்கு, .பெண்கள் தான் காலம் காலமாக பூசை செய்து வருகிறார்கள்.பனி காலத்தில் இங்கு குளிர் அதிகமாக இருக்கும். அதனால் இங்கு இருக்கும் ஆண்கள் வேலை தேடி, பிழைப்பு தேடி மற்ற இடங்களுக்கு போய் விடுவார்கள். பெண்கள்தான் வீட்டில் இருப்பார்கள், இதனால்தான் பெண்களுக்கு இந்த பூஜை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதிலும் புத்த பெண் துறவிகள் இங்கேயே தங்கி வாழ்நாள் முழுவதும் பூஜிக்க வேண்டும். இப்பொழுது நான் பூஜை செய்து வருகிறேன் எனது காலத்திற்கு பிறகு வேறு ஒருவர் இங்கு வருவார்கள். இதனை காட்மாண்டு புத்த மத மடாலாயங்கள்தான் முடிவு செய்யும்.””
முக்தி நாத் ஆலயத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதில்லை. ஆனால் ஆலயத்திற்கு வருவோர் தவறாது கடைப் பிடிக்கும் நியதி ஒன்று உண்டு. கோயிலில் தென் மேற்கு மூலையில் அணையாமல் எரியும் பெரு நெருப்பில் திரி இட்டு தீபங் களுக்கான எண்ணை இட்டு வேண்டுவது, வேறு எந்த வைணவ தலத்திலும் இல்லாத வழக்கம். இருப்பிடத்தாலும் வேண்டும் முறைகளாலும் முக்தி நாத் ஏனைய வைணவத் தலங்களிலிருந்து வேறு பட்டு நிற்கிறது. இதே போன்று இன்னொரு வைவண தலமுண்டு. அது நேப்பாளத்தில் இருக்கிறது. உச்சிமலை கோவில், பனி மலை தீரம், பளபளக்கும் தங்க சிலை பெருமாள், பெண் துறவிகள், பெண் பூசாரிகள் என்று வித்தியாசத்தினை இங்கு நாம் காண முடிகிறது, மன அமைதி தேடி செல்லும் பக்தர்களுக்கு, இயற்கையோடு கூடிய அமைதி இங்கு கிட்டலாம் தமிழ் நாட்டில் உள்ள பெருமாள் கோவில், இல்லாத விசேஷங்கள் சில வேறு வித பழக்க வழக்கங்களுடன் இருக்கும் முக்தி நாத இருப்பதை பக்தியாக எண்ணி போக்காரோ வந்தோம்
போக்காரோ முக்காண் மாவட்டத்தில் உள்ள தேவா ஏரி
கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் விரிந்து பரந்து கிடக்கும் நீர் பரப்பு.மெல்லிய நீரலைகளை கிழித்து விரையும் படகுகள். நேப்பாளம் நாட்டின் முக்காண் மாவட்டத்தில் உள்ள தேவ ஏரி. தேவ மலையின் அடிவாரத்தில் 45 எக்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது ஏரி. மலையிலிருந்து ஓடி வரும் தோப்பிய ஆற்றின் நீரோட்டத்தால் தேங்கி நீரே தேவாவின் நீர் ஆதாரம். ஏரியின் மையத்தில் உள்ள குட்டி தீவில் இருக்கிறது நேப்பாளத்தின் அரிய கோயில்களில் ஒன்றான ’’ டால் பாரிய ’’ ஆலயம். இங்கு அமைந்துள்ள கோயிலின் பெயர் ‘வாஹாகி’ [ வாஹாகரத்தின் பெண் பால வாஹாகி ] வாஹாகரம் என்பது பெருமாளை குறிப்பது,
வாஹாகரம் என்பது பன்றியின் உருவம். எடுத்து பூமியை அகழ்ந்து எடுத்த கோலத்திற்கு வாஹாகரம் என்று கூறுவதுண்டு. வாஹாகர பெருமாள் என்று சொல்வதுண்டு.இந்த அம்மன் வாஹாகியை தரிசிக்க ஏராளமானோர் படகின் மூலம் சென்று தரிக்கிறார்கள், கரையிலிருந்து கோயில் செல்ல படகை விட்டால் வேறு வழி கிடையாது. படகு பயணமும், சூழ்ந்திருக்கும் நீர் பரப்பும், நீரின் சலசலப்பும் ஏரியின் வனப்பும், எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியை, ஆனந்தத்தையும், அமைதியையும் கொண்டு வரும் சுகமான அனுபவம். ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் கோயில் சிறியது தான். காட்சிக்கு எளிமை என்றாலும் அருளாட்சியில் பெரிது. இது பக்தர்களின் நம்பிக்கை.
வாஹாகி என்பது மூர்க்கதின் அடையாளம். உக்கிரமே வடிவான வாஹாகியை நீருக்கு மத்தியில் வைத்திருப்பது வழிபடுவோர்க்கு நல்லது என நம்புவது ஐதீகம். இந்த வாஹாகி தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.. இங்கு வந்து வழிப்பட்டால் எல்லாமே நடக்கும் சிறக்கும் என்று நம்புகிறார்கள்.அம்மனை வழிப்பட்டோருக்கும் மட்டுமல்ல, காதல் வயப்பட்டோருக்கும் அருள் புரிகிறாள் என்கிறார்கள்.ஆகையால் இந்த பொக்கோரா சுற்று வட்டாத்தில் உள்ள காதலர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பதால் அன்பர்கள் படையெடுப்பதில் ஆச்சரியமில்லை எனலாம். காணிக்கை கொடுத்து வழிப்பட்டோருக்கும் மட்டுமல்ல காதல் வயப்பட்டோருக்கும் இந்த வாஹாகி அம்மன் கண்கண்ட தெய்வம்.
இயற்கையின் மடியிலிருக்கும் முக்தி நாத்தும்…, வாஹாகி கோயிலும் பக்தர்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் பரவப்படுத்துகிறது.
இயற்கையின் அழகில், அமைதியின் பிடியில், மடியில் , இறைவனின் அம்சம் உறைகிறது என்று மதங்களின் ஆன்றோர்களின் கூற்று. இந்த வகையில் நேப்பாளத்தின் முக்தி நாத்தும், வாஹாகி கோயிலும் தெய்வீக அமைதி குடிகொள்ள இயற்கையிடம் வரம் வாங்கி வந்துள்ளது. வாழ்வின் பயணத்தில், மனம் நோகும் நேரத்தில் இவை போன்ற ஊர் உல்லாச பயணம், ஆன்மீக தொலை தூரப் இடங்களுக்கு மேற்கொள்ளும் பயணம் மனதை இலகுவாக்கி வாழ்வை புதுத்தெம்போடு, பெலிவோடு இயங்க உதவும், வாழ்கையை தன்னம்பிகையோடு தொடர வழி வகுக்கும்
இடம் நாமெல்லாம் எளிய ஜீவன்கள். நமக்கு முறையிட, நம்பிக்கை தர ஒரு தெய்வம் வேண்டும். . நம்பிக்கை நமக்கு அமைதியான வாழ்வு தரும்கோயில் எல்லோருக்கும் வழிபடும் இடமாக உள்ளது. உலகம் முழுதிலும் பிராத்தனை செய்யும் இடமாக உள்ளது.ஒவ்வொரு முறையும் ஆண்டவனை நினைந்து கொள்ளும் இடமாக உள்ளது. அங்கு சென்று நம்மை இழக்கும் இடமாகவும், நம்மை அர்ப்பணித்துக் கொள்ளூம் இடமாகவும் உள்ளது. இம்மாதிரியான சிந்தனைகளும் எண்ணப் போக்கும் வழி முறையும் நம் மனதை செயல்களை அவ்வப்போது சுத்திகரித்துக்கொள்ளூம் இடமாகவும் இருந்து வருகிறது