அன்பு கூகிள் நண்பர்களுக்கு,
தேனீயில் புதிதாக தமிழ் Podcasting இலவச சேவை
துவக்கியுள்ளோம்.
இதில் பங்குபெற நீங்கள் செய்யவேண்டியது இது தான்.
1. Microsoft Windows Media Encoder அல்லது அதைப்போல ஒலி பதிவு
செய்யும் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்
2. என்ன பேசப்போகிறோம் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கதை,
கட்டுரை, கவிதை, அரசியல், ஆன்மீகம் எதுவேண்டுமானாலும்.
3. அமைதியான சூழலில் பேசி பதிவு செய்யுங்கள்
4. பின்னி இசை சேர்க்க நினைத்தால் வார்த்தைகள் இல்லாத இசை
மட்டும் சேருங்கள்
5. 5 MB க்குள் இருந்தால் எனக்கு மின்னஞ்சலில்
அனுப்புங்கள்
6. அல்லது இலவச தரவேற்ற தளத்தில் உதாரணமாக Megaupload (www.megaupload.com)
ல் ஏற்றி எனக்கு அதன் தொடுப்பை அளியுங்கள்
7. உங்கள் பெயர், மின்னஞ்சல், தலைப்பு, பேச்சின் விவரம் இவற்றை
எழுதியனுப்புங்கள்
8. இவை இதேனீ தளத்தில் ஏற்றபட்டு பொதுமக்கள்
பார்வைக்கு-காதுகளுக்கு 7 நாட்கள் வரை வைக்கப்பட்டு இருக்கும்.
9. மற்றவர்கள் என்ன பேசியிருக்கிறார்கள் என்ற அறிய தளத்திற்கு
வருகை தாருங்கள். இல்லை உங்கள் RSS Reader's subscription http://podcast.etheni.com/feed.xml
சேர்த்தால் அதுவே உங்களுக்கு தகவல் தரும்
குறிப்பு - சபைக்கு உரிய மொழி கடைபிடிக்க கோரிக்கை. காராசாரமான
தலைப்பு இருந்தால் இன்னும் கவனம் தேவை.
இப்போதைக்கு சோதனை ஓட்டத்திற்கு ஒரு கோப்பை
வைத்திருக்கிறேன். நீங்களும் பேசி அனுப்பலாமே.
நன்றி,
அன்புடன்,
மோகன்