“சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்” நிகழ்வை முன்னிட்டு
"மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்"
30/08/2025 | 1pm to 5pm“சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்” நிகழ்வை முன்னிட்டு எதிர்வரும் 30/08/2025 (சனிக்கிழமை) தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஒருங்கிணைப்பில்,
ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் முப்படைகளாலும், ராணுவ ஒட்டுக்குழுக்களினாலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதத்துடன் கூடிய போராட்டம் 3000 நாட்களைத் தொட்டிருக்கும் இந்தவேளையில், “வடக்குக்கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம்” முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவு வழங்கவும், குறித்த அவலத்திற்கான சர்வதேச நீதி கோரியும் லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து பிருத்தானிய பாராளுமன்றம் வரைக்குமான நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திகதி : Saturday 30/08/2025
நேரம் : 1pm to 3pm
இடம் : In front of Sri Lankan High Commission
ஆர்ப்பாட்டப் பேரணி...
From : Sri Lankan High Commission to 10 Downing Street
Time : 3pm to 5pm
End : in front of 10 Downing Street, London, SW1A 2AA
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரித்தானியவாழ் எம் உறவுகள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டில் இயங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எல்லோரும் பெருந்திரளாகப் பங்கேற்று போராட்டத்தை வலுப்பெறச்செய்து சர்வதேசத்திற்கு எமது ஒற்றுமையையும், கோரிக்கையினையும் உறுதிபட உரக்கச் சொல்ல வாருங்கள் என்று உரிமையுடன் கூடிய அன்பாகக் கேட்டுநிற்கின்றோம்.
ஒழுங்கமைப்பு :
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு
Movement for Self-Determination of Tamil Eelam [MSDTE]
ad...@gmail.com www.msdte.orgSupported by :
Tamils for Labour
British Tamil Conservatives
British Tamil Liberal Democrats
And other Tamil Organisations
மேலதிக தொடர்புகளுக்கு
ஒருங்கிணைப்பாளர்கள் :
Coordinators:
Dr. Yogalingam -07404369106 ! Dr. Rajalingam - 07950 888047
Thavakumaran -07448 768132 ! Ragavan - 07799 374035
Mohamed - 07903 391169 ! Ashvika - 07727 357910
"தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்"
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"