இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தோற்றத்தினை டி.என்.ஏ ( DNA) பகுப்பாய்வின் உதவியுடன் வெளிப்படுத்தும்

7 views
Skip to first unread message

Sinnathurai Srivas

unread,
Apr 3, 2026, 10:12:13 AM (22 hours ago) Apr 3
to Tamil_Araichchi
சங்கதம் ( சமற்கிரதம்) உட்பட்ட இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தோற்றத்தினை டி.என்.ஏ ( DNA) பகுப்பாய்வின் உதவியுடன் வெளிப்படுத்தும் வகையில் இரு ஆய்வுக் கட்டுரைகள் 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளன. கார்வர்ட் மற்றும் கார்ட்விக் (Harvard University , Hartwick college) ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களே இந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின் படி இந்தோ- ஐரோப்பிய மொழிகள் யம்னா ( Yamnaya) பண்பாட்டுடன் தொடர்புடையது. இற்றைக்கு 5700 ஆண்டுகளுக்கு முன் ( பொ.ஆ மு. 3700= BCE 3700) ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் நடுப் பகுதிகளில் தோன்றி ( இன்றைய கங்கேரி, சுலோவாக்கியா போன்ற நாடுகள் இருக்குமிடம்) , யூரேசிய ஸ்டெப்பி , வோல்கா நதி ஊடாகப் பரவியது எனச் சொல்லப்படுகின்றது. உலகிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள், பானைப் பொருட்கள், மனித எச்சங்கள் என்பவற்றினைச் சான்றுகளாகக் கொண்டு இந்த ஆய்வுகள் தமது முடிவினைத் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் சங்கதம் ( சமற்கிரதம்) கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட மொழி, இந்தியாவில் தோன்றி உலகு எங்கும் பரவிய மொழி, சங்கதமே ஏனைய இந்திய ஐரோப்பிய மொழிகளின் தாய் மொழி, ஆரியர்கள் இந்திய மண்ணிலேயே தோன்றினர் எனப் பரப்பப்பட்ட பல பொய்களுக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.









CV Wigneswaran

unread,
Apr 3, 2026, 3:03:47 PM (17 hours ago) Apr 3
to tamil_a...@googlegroups.com
Why do you not use the three dots ahhanna in front of Harvard to make it Harvard?

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் ஆராய்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_araichc...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamil_araichchi/1742818461.238692.1775219502132%40mail.yahoo.com.

Sinnathurai Srivas

unread,
Apr 3, 2026, 5:43:02 PM (14 hours ago) Apr 3
to tamil_a...@googlegroups.com
1/ It is a forwarded message. 

2/ However, there is this research article of mine which brings out some facts about Tamil Ezuththu.

Tamil alphabet do not directly represent sound, but பிறப்பிடம்/PoA
All sounds generatable at a பிறாப்பிடம் are represented by the எழுத்து that represent that particular பிறப்பிடம்.

SS





Reply all
Reply to author
Forward
0 new messages