காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா
இப்போது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே
நடக்கிறது. அந்தக் காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்று
இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன்
பூம்புகாருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத்திய
போது, அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக
அறிவித்தனர்.இப்போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து
அலங்காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில்
வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன்னால் ஆன பாலிகைகளால் நகரம்
அலங்கரிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க...
http://denald-news.blogspot.com/2012/01/blog-post.html