ரிதன்யா
அத்தை என்பாள்
சில நேரம் அக்காவும் சொல்லுவாள்
ஆனால் எப்போதுமே
தேனாண்டி தான்!
ஆம் அவள் அன்பின் முன்
நான் ஆண்டிதான்!<<<<
நெஞ்சைத்தொட்ட வரிகள்...தேனு...மிக அழகு...ஒரு பாப்பா இப்படியொரு பாசக்கவிதை வடிக்குதே....
குழந்தைகள் எப்போதும் சுகம்..அடடா! நம்மளை அப்படியே உரிச்சு வைச்சிருக்குதே!! குழந்தைகள் என்றாலே இப்படித்தான் போலும்:)))
<<<ஒரு வருடம் வாடாது என
வாங்கி வந்த குறிஞ்சிப் பூவிலும்
கொஞ்சம் கூட மறக்காத
ரிதன்யாவின் புன்னகை
மறக்கடிக்க முடியாத வாசம்
மதுரை மல்லிகையிலும் இல்லை!<<<<
வாசம் உங்கள் வசம்.
நிலவுடன் இரவில் பேசலாம்
ஆசையுடன் அழைத்தேன் 12 மணிக்கு
ஆண் குரல்(:P) தூங்கிட்டா என்றது
ஏக்கமாய் முடிந்து போன இரவில்
கனவில் கூட வந்து தேனாண்டி என்றாள்!>>>>
நல்லது நல்லது!! :) குழந்தைங்க கனவில் குழந்தைங்க தான் வரும்.
திடீரென செல் அழைக்க
எடுத்துப் பார்த்தேன் அண்ணா
தேனாண்டி இன்னிக்கு எனக்கு பர்த்டே
தேன் குரலா இல்லை கனவா
புரியும் போது பெருமையாய் இருந்தது
தேவதையுடன் பேசியிருக்கிறேன் நான் என!
பட்டு மிஸ்ஸிங் யூடா (கண்ணீர் திரை இனி எழுத முடியாது) <<<
துடைத்துவிட்டு எழுத வேண்டியதுதானே...இனிய வாழ்த்தை மருமகளும் ரசிப்பாளே!..எத்தனை எத்தனை இடர்கள் வந்துநம்மைச் சூழ்ந்திருந்தாலும் அத்தனையும்பறந்துபோகும் கொஞ்சும் மழலைமொழியில்நெஞ்சம் அள்ளிச்செல்லும் குழந்தைஉள்ளம் என்றும்!மாறா சிரிப்புடனே மறவாத்தமிழுடனே!வாழ்க வளர்க என்றும்!செல்லக்குட்டிக்கு இனிய வாழ்த்துகள்!
-நன்றிக்கா