நினைத்து நான் சாத்தியபடுத்தியது நீங்கள்....
கல்யாணத்தை பண்ணிபார் வீட்டை கட்டிபார் என்று பழமொழி சொன்ன வாய்க்கு
சக்கரை போட வேண்டும்...எனக்கு கல்யாணத்தை பண்ணிய அனுபவம் 3 உண்டு
என்றாலும் இந்த வீடு மேட்டர் ரொம்பவும் புதுசு...
குடியிருக்கும் வீட்டை காலி செய்து கொடுங்கள் என்று தாழ்மையாக ஹவுஸ் ஓனர்வேண்டுகோள் வைக்கும் போது... முடியாது என்று நம்மால் சொல்ல
முடியாது...நான் இருக்கும் வளசரவாக்க வீட்டை இடித்து விட்டு அடுக்குமாடி
குடியிருப்பு கட்ட போகின்றார்களாம்....கட்ட வேண்டாம் என்று சொல்ல நாம் யார்..???அப்படித்தான் சொல்ல முடியுமா?
இதற்க்கு முன்னே 5 வருடங்களாக வீடு வாங்க முடியாவிட்டாலும், எந்த ஏரியாவில்
என்ன ரேட் போகின்றது என்று பிரி ஆட்ஸ் பேப்பராவது வாங்கி நானும் என்
மனைவியும் சில விளம்பரங்களை பார்த்து பெரு மூச்சு விட்டுக்கொண்டு
இருப்போம்...
ஏற்கனவே வீ்டு எனும் மாற்றத்தை சமாளிக்க வேண்டி பெரிய பொருள்கள் ஏதும்
இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தேன்...
அனால் திருமணத்துக்கு பின் ஒரு லாரியாக அத்யாவசிய பொருட்கள் அளவு
உயர்ந்து விட்டது... என்ன செய்ய???
லோன் கேட்டோம்... 13 லட்சம் கேட்டு அவன் கொடுத்தது12 அரைலட்சம்
மட்டுமே.. அதிலும் அது இது என்ற பிடித்தம் 25000 போக வந்த தொகை
இதுதான்... 1300000 லட்சம் கொடுக்கறேன்னு சொன்னவன் கையெழுத்து போடும்
போது 12 அரை லட்சம்தான் தரமுடியும்னு சொன்னான் என்றால் என்ன செய்ய
முடியும்....??
சொந்தகாரர்களிடம் நெருங்கிய நண்பர்களிடம் கேட்ட போது... 3 பைசா
வட்டியில் குறியாக இருந்தார்கள்.... ஏம்பா கடன் வாங்கும் போது 3 பைசா வட்டி எல்லாம் சாதாரணம்...
இந்த காலத்துல அது கெடைக்கறது என்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? என்று அட்வைஸ்
கொடுத்தார்கள்.... சிலருக்கு இப்போது உதவமுடியாத சூழல்.....வட்டியில்லாத
கடனாக யார் தருவார்கள்...
அதே இப்போது சொந்த வீடு வாங்க முயற்ச்சி எடுக்கவில்லை என்றால் அப்புறம்
வாய்ப்பே இல்லை.. அதன் பிறகு குழந்தை பிறந்து அதனை வளர்க்கும் போது வீடு
என்பது நினைத்து கூட பார்க்க முடியாத விஷயமாக இருக்கும்...
ஒரு கட்டத்தில் முடவன் கொம்பு தேனுக்கு ஆசைபட்ட கதையா இந்த வீடு வாங்கும் மேட்டர் இழுத்துக்கொண்டே போக பேசாமல் டிராப் செய்ய முடிவு எடுத்தும் விட்டேன்....
அதன் பிறகு 3 லிருந்து 4 லட்சம் வரை பெண்டிங்...கொடுக்கும் சொந்தங்கள் மாத்தி மாத்தி சொல்ல... ஒரு மாதிரி வெறுத்து போய்
ஒரு பதிவை எழுதி விட்டேன்.... சொந்த வீடு என்பது நடுத்தர மக்களின் கனவா
என்று....
பதிவை போட்டு கொஞ்ச நேரத்தில் நான் சுவாமிநாதன்...டைட்டல் பார்க் கிட்ட வேலை செய்யறேன்...என்கிட்ட 10,000 பணம்
இருக்கு நீங்கள் வீடு வாங்க இந்த சிறு தொகை உதவும் என்பதில் ஆரம்பித்து...
உங்க நம்பர் கொடுக்க என்று சொல்லி சிங்கபூரில் இருந்து பெயர்வெளியிட
வேண்டாம் என்று கெட்டு கொண்ட நண்பர் ஒரு லட்சம் நான் கொடுக்கறேன்..
நீங்க திருப்பி தர வேணாம்.. எப்ப முடியுமோ அப்ப கொடுங்க? என்று சொல்லி
அவர் நெகிழ வைக்க.... அதை விட அந்த பணத்தை என் அக்கவுன்டிற்க்கு அனுப்பும்
வரை தினமும் தொடர்பில் இருந்து செய்த உதவியை எப்படி மறக்க மடியும்....
நேரடியா விஷயத்துக்கு வரேன்... என்னால ஒரு லட்சம் கொடுக்க முடியும் என்று
அமெரிக்காவில் இருந்து பதிவுலக நண்பர் ஒருவர் பெயர் வெளியிட வேண்டாம்
என்று சொல்ல..... எனக்கு லேசாக மயக்கம் வந்து கொண்டு இருந்தது...
அன்று
சாயந்திரமே பாஸ்டன் ஸ்ரீராம் தொடர்பு கொண்டு எப்படி என்னைக் கேட்காம
பதிவுல நீ எப்படி எழுதுவ???? 3 லட்சம்தானே நான் கொடுக்கறேன் என்று
சொல்லி கோபித்து கொண்டதாகட்டும்....இத்தனைக்கும் ஸ்ரீராம் வேறு ஒரு
புராஜக்ட்டிற்க்கு பணத்துக்கு அலைந்து கொண்டு இருக்கும் போது செய்த இந்த உதவி
இது....
உங்களுக்கு ஒன்னு தெரியுமா? 3லட்சம் மொத்தமா கையில பார்த்தது இப்போதுதான்....
அதே போல் ஹரிராஜகோபாலன் சான்பிரான்சிகொவில் இருக்கும் ஒரு
வாசக நண்பர்.... அவர் மயிவாடுதுறையில் இப்போதுதான் சொந்த வீடு கட்டி கூட
போனார்.... அவர் ஒரு மெயில் அனுப்பினார்... உனக்கு ஐம்பதாயிரம்
கொடுக்கறேன்.... அவ்வளவுதான் நம்பர் கொடுங்க நான் அனிப்பி வைக்கிறேன்
என்று சொல்லி நெகிழ வைத்து என் மீது அன்பு வைத்து இருக்கும் நண்பர்களிடம்
இருந்து வாங்க முடிவுசெய்தேன்....வட்டிக்கும் டைலோமாவாக இருந்த
நண்பர்களை ஒதிக்கிவிட்டு என்பதிவுல நண்பர்களிடம் வட்டியில்லாத கடனாக
பணத்தை வாங்க முடிவு செய்தேன்...வாங்கியும் விட்டேன்....
ஒன்று மட்டும் புரிந்து போனது....நான் தனி ஆள் இல்லை.... என் பதிவை
வாசிப்பவர்கள் என் வாழ்க்கையோடு பயணித்து வருகின்றார்கள் என்பது புரிந்து
போனது...நான் சிரித்தால் அவர்களும்.. நான் வருத்தபட்டால் அவர்களும்
வருத்தபடுகின்றார்கள் என்பதை என்னால் உணர முடிகின்றது...
என் மனைவியால்இன்னமும் நம்ப முடியவில்லை....இப்படி கூட ஆட்கள் இருப்பார்களா? உதவின்னுகேட்காம இருந்ததுக்கே இப்பபடி ஒரு உதவியா? என்று சொல்லி சொல்லி ஆத்துபோகின்றாள்..
இது போன்ற பல எதிர்பாராத நிகழ்வுகளை எல்லாம் பெற்று அடித்து பிடித்து வீடு
வாங்கி விட்டோம்...
இந்த ஜாக்கி நல்லவானா கெட்டவனா? அவன் பேக்ரவுண்ட் என்ன? எதுவும் தெரியாது.. பதிவின் மூலம் மட்டுமே தெரியும்... சட்டென பணம் கொடுக்க ஒரு மனது வேனும்... நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைத்த அந்த நேரில் சந்திக்காத அந்த நண்பர்கள் மனப்பூர்வமாய் செய்த உதவிகள் இப்போதும் என்னை நெகிழ வைத்துக்கொண்டு இருக்கின்றன... இந்த நண்பர்களிடம் வாங்கிய பணத்தை வெகு சீக்கிரத்தில் திருப்பி கொடுக்க எல்லா வல்ல பரம்பொருள் பலத்தையும்,உழைப்பின் மூலம் செல்வத்தையும் கொடுக்க...வெழ சீக்கிரத்தில் திருப்பிக்கொடுக்க இந்த நேரத்தில் வேண்டிக்கொள்கின்றேன்....
ஒரு 100 ரூபாய் கூட இப்போது முக்கியமாக படுவதால் எப்போ கிரகபிரவேசம் என்று யாராவது கேட்க.... யோவ் அப்படி சொல்லதையா? பால்காய்சி குடி போகின்றோம் என்று சொல்... என்று வடிவேல் போல் சொல்ல ஆரம்பிக்க.... நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைக்கலாம் என்று முடிவு செய்யது இருந்தேன்...
கல்யாணம்,சொந்தவீடு எல்லாம் வாழ்வில் ஒரு முறை நடக்கும் நிகழ்வுகள் செலவோடு செலவா... சிம்பிளா செஞ்சாலும் எல்லோரையும் அழைத்து ஆசிர்வாதம் வாங்கி கொள் என்று நண்பர் ஒருவர் சொல்ல... என் மனைவியும் அதனையே ஆமோதித்தாள்...இந்த 14ம் தேதி புது வீட்டிற்க்கு குடி போனாலும் போவேன் என்று எழுதியதற்க்கே எத்தனை வாழ்த்துக்கள்....எனக்கு இப்போது நெருங்கிய நண்பர் என்று சொல்ல யோசிக்க வேண்டியதாகி விட்டது.. எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான்....
வரும் 14ம் தேதி ஞாயிறு காலை 6லிருந்து 7,30க்குள் புதுமனை விழா செய்ய இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றேன்...

படத்தை கிளிக்கி பெரிதாக பார்த்துகொள்ளவும்.... ஒரு மணிநேரத்தில் மேட்டர் இல்லாமல் போய் அடித்த இரண்டு மணி நேரத்தில் வாங்கிய பத்தி்ரிக்கை இது....
வீட்டிற்க்கு பெயர் மகிழ்வகம் என்று வைத்து இருக்கின்றேன்.... பெயரை செலக்ட் செய்த எனது அத்தை மகன் தாமோதரனுக்கு என் நன்றியும், நமஸ்காரங்களும்....
இந்த பத்திரிக்கையை நேரில் வீட்டுக்கு வந்து கொடுத்தாக நினைத்து இதனையே அழைப்பாக ஏற்று...டீ, அதன் மேலேயே காபி..அப்புறம் ஜுஸ் எல்லாம் கலந்து குடித்த கலவையோடு பதிவர்களையும் வாசகர்களையும் வரவேற்க்கின்றேன்...
அடுக்குமாடி குடியிருப்பில் தரைதளம்...
விலாசம்...
சம்பந்தம் அடுக்குமாடி குடியிருப்பு
தரைதளம் இரண்டு
மேக்ஸ் ஒர்த் நகர்...பேஸ்.. 1
கொளப்பாக்கம்...
சென்னை 101..
கிண்டியில் இருந்து வரும் போது மியோட் ஆஸ்பிட்டல் சிக்னலில் லெப்ட் திரும்பினால் முதலில் மனப்பாக்கம்... அதன்பின் கொளப்பாக்கம்....நல்லரோடு... முகலிவாக்கம் வழியாகவும் வரலாம்....போருரில் பாய்கடை பஸ்ஸ்டாப்பில் இறங்கி ஒன்றரை கிலோமீட்டடரில் வீடு....
எத்தனை பேர் வரப்போகின்றார்கள்...எதுவும் தெரியாது....குறை ஏதும் இருந்தால் மன்னிக்கவேண்டுகின்றேன்...
அன்புடன்
நெகிழ்ச்சியுடன்
ஜாக்கிசேகர்