கள் என்றால் கருப்பு. கள்ளழகர் என்றால் கருப்பு அழகர் என்று பொருள்.
அனைவரின் "வீட்டில் இருப்பவன்" என்ற வார்த்தை சுருங்கி வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு என்றானது.
மெட்டு அருமையாக வந்திருக்கிறது. பாடும்போது எழுந்து நின்று ஆடிக்கொண்டே பாடியது போன்ற ஒரு உணர்வு. எனக்குள்ளே இதற்கான பின்னணி இசையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் இசை தெரியாத, இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியாத இசையமைப்பாளர். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன். இசை என்ற மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன்.
என்னுடைய இரு பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திரு. கோபி என்னிடம் என் இசை பற்றி இப்படிப் பகிர்ந்து கொண்டார். "நாங்கள் இசையை கற்றுக் கொண்டோம். ஆனால், இசை உங்களுக்குள்ளேயே ஏற்கனவே இருக்கிறது." என்று.
எனக்குத் தோன்றும் இசையும் மெட்டும் பாட்டும் என்னை உறங்க விடவில்லை. நானே இசையை விட்டு அமைதியாக விலகி விட நினைத்தாலும் என்னுடைய இசையே என்னை இசைக் கருவிகள் வாசிக்க வைத்து பின்னணி இசை அமைக்கும் அளவிற்கு ஒரு முழுமை அடைந்த இசையமைப்பாளராக என்னை மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாற்றுக்கருத்து இல்லை.