மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --
வரும் வெள்ளிக்கிழமை (மே, 09) என் மூத்த மகள் ரிதன்யாவின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துக்களை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.
இந்த மெட்டு என்னிடமிருந்து உருவான போதே இதற்கான வரிகளும் சேர்ந்தே வந்தன. அதோடு சேர்ந்து ஒரு காட்சியும் (scene) கற்பனையாக உருவானது.
அந்தக் கற்பனை இதுதான்.
ஒரு பாடகர் பாடுவதற்காக மேடையில் நின்று கொண்டிருக்கிறார். கீழே இருக்கைகளில் குழந்தைகள் அமர்ந்து இருக்கின்றனர். அவர்கள் யாருமே பாடலை கேட்க, கவனிக்க விருப்பம் இல்லாதவர்கள் போல தங்களுக்குள் பேசி அரட்டை அடித்துக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
அந்த குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஒரு மெட்டை அந்தப் பாடகர் ரீங்காரமிடுகிறார் (humming). அந்த மெட்டைக் கேட்டு குழந்தைகள் சிரிக்க வேண்டும், கிண்டல் அடிக்க வேண்டும், மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே, நகைச்சுவையை உண்டாக்கும் குரலில் அந்த மெட்டை ரீங்காரமிடுகிறார் (humming). அவர் நினைத்தது போலவே, குழந்தைகள் அவர் பாடிய மெட்டைக் கேட்டு மகிழ்கின்றனர், கிண்டல் அடிக்கின்றனர். சிரிக்கின்றனர்.
அதன் பிறகு அந்தப் பாடலை பாடுகிறார். பாடல் முடியும் வரை குழந்தைகள் முழுவதும் கேட்டு மகிழ்கின்றனர்.
இது தான் எனக்கு கற்பனையில் கிடைத்த காட்சி.
நான் ஒரு இயக்குனராக இருந்திருந்தால், இதை ஒரு விழியமாகவே தயார் செய்து வெளியிட்டிருப்பேன். ஆனால், எனக்கான தொழில் (Profession) வேறு. சரியான பொருதாரச் சூழல், சரியான காலச்சூழல் அமையும் போது நான் நினைத்தபடி இந்தக் காட்சியை ஒரு சிறு விழியமாக வெளியிடுவேன்.
என் ஒவ்வொரு மெட்டுமே எந்த வித பாடல்களின் சாயலின்றி என்னிடமிருந்து உருவாகின்றன.
இந்த மெட்டுமே வித்தியாசமான மெட்டு தான்.
வரிகளுமே தமிழில் உள்ள எளிமையான, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்துத்தான் இந்தப் பாடலை நான் எழுதியிருக்கிறேன்.